mtn 3

mtn 3

தாரிகா கோபத்துடன் தன் தந்தையை எதிர்பார்த்து தன் ரூமில் காத்திருந்தாள்.காரணம் இன்று நடந்த நிகழ்வுகள்!

தந்தை உள்ளே நுழைந்தவுடன் தன் முகத்தைத் திருப்பியவள் ஒன்றும் பேசவில்லை.”கோபமா தங்கம்?” என்ற தந்தையின் கேள்விக்கு பதிலில்லை.”அப்பா எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான பண்ணுவேன்.இவ்வளவு வருசத்துல அப்பா உனக்கு ஏதாச்சும் பிடிக்காதது பண்ணிருக்கேனா?இந்த ஒரு விஷயத்துல அப்பா சொல்லறத கேட்க மாட்டிய?” என்று மிகவும் சோகமான குரலில் கேட்க “ப்பா…” என்று  திரும்பியவள்

“நீங்க இப்ப எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறதுக்கு காரணம் அந்த சிட்பெட்ல நடந்த விஷயம் நால தான?” என்று கேட்க அவள் கேள்வியில் அவர் சற்று தடுமாறிவிட்டார்.

பரந்தாமனிடமிருந்து பதில் வராததால் தாருவே தொடர்ந்தாள்”அப்ப நீங்க என்ன நம்பல..” என்ற உடைந்த குரலில் கேட்க “அப்படி எல்லாம் இல்லை டா” என்றவர் சொல்லும் முன் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது.

“அச்சோ என்ன டா இது?இதுக்கு எல்லாம் போய் அழுதுட்டு?” என்றவர் மகளின் கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தார்.”அப்பாக்கு உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லை.பட் இந்த உலகத்து மேல தான் நம்பிக்கை இல்லை.நீ அந்த பையன்கிட்ட பிரின்ட்லியா தான் பழகிருப்ப.பட் எல்லாரும் இந்த உலகத்துல நல்லவங்க இல்லை தங்கம்” என்றவர் விளக்க

“உங்களுக்கு என் மேல உண்மையிலேயே நம்பிக்கை இருந்திருந்தா என்கிட்ட இதைப்பத்தி டைரக்ட்டா கேட்டுருப்பிங்க.பட் நீங்க இதைபத்தி ஒண்ணுமே என்கிட்ட பேசாம எனக்கு மாப்பிள்ளை பாத்துட்டிங்க” என்றவள் தந்தையை குற்றம் சாட்ட

“நீ என்கிட்ட சொல்லனும்னு நினைச்சிருந்தா நான் கேட்டப்பவே சொல்லிருப்பே.பட் நீ சொல்லல.சோ அப்பா கிட்ட சொல்ல வேண்டாம் நினைக்கிறியோன்னு நினைச்சுதான் அப்பா இத பத்தி உங்கிட்ட கேட்கல” என்றவர் தன் நிலையை விளக்க

“உங்ககிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லப் ப்பா…அன்னைக்கு தாத்தா பாட்டி எல்லாம் வந்திருந்தது நால அப்புறம் சொல்லிக்கலாம் நினைச்ச.அப்புறம் நாம ஊருக்கு வந்துட்டோம்…உங்ககிட்ட தனியா பேசுற சான்ஸ் எனக்கு கிடைக்கவேயில்லை” என்றவள் ஆதங்கத்துடன் சொல்ல

அவள் தலையை கோதிவிட்டவர் “பாராவயில்லை விடு.இந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்று கேட்க “அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு சொல்லற” என்றவள் அன்றைய நாளின் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

“எக்ஸாம் முடுச்சுட்டு நான் பிரிண்ட்ஸ் கூட மூவி போனேன்.அப்புறம் அப்படியே ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னு ஐபாகோ போனோம்.அங்கே ஏற்கனவே விக்னேஷ் இருந்தான்.என் பிரிண்ட்ஸ் ‘அவன் உங்கிட்ட தனியா பேசனும் சொன்னான்” சொன்னங்க

 

.விக்னேஷ் என்னோட காலேஜ் மேட்.நான் போகமாட்ட சொன்னேன்.பட் அவங்க தான் கம்பெல் பண்ணி அனுப்பினாங்க.அவன் நான் உன்ன லவ் பண்றன்னு சொன்னான்.பட் நான் முடியாது சொல்லறதுக்கு முன்னாடி நிறைய டைலாக்ஸ் பேசி நாளைக்கு  உன்னோட பதில் சொல்லு சொன்னான்.

 

நானும் அவன பாக்க ரொம்ப பாவமா இருந்தது நால நாளைக்கு சொல்லறேன் சொன்ன.அடுத்த நாள் எப்படி இருந்தாலும் அவன்கிட்ட நோ தான் சொல்லிருப்ப” என்றவள் சொல்ல தன் பெண்ணை நினைத்து பெருமைப்பட்டார் பரந்தாமன்.

 

தன் நண்பர் ஒருவர் தங்கள் பெண் ஒரு பையனுடன் தனியாக ஐஸ்கிரீம் பார்லரில் அமர்ந்து அரைமணி நேரமாக பேசிக் கொண்டிருந்தாள்  என்று சொல்ல பரந்தாமனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.காரணம் தாருவிற்கு ஆண் நண்பர்கள் இல்லை.

 

அதுவும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்ல அவருக்கு என்னமோ போல் ஆகிவிட்டது.தன் பெண்ணின் மேல் நம்பிக்கை இருந்தாலும் இப்படி ஒருவர் சொல்ல ‘அவளோட பிரண்ட்டா இருக்கும்’ என்று அவரிடம் சொல்லிவிட்டார்.

 

மகளிடம் இதைப் பற்றி கேட்க அவள் மழுப்பிச் சென்றதும் தான் அவருக்கு பயம் எழுந்தது.பிறந்தது முதல் எதையும் மறைக்காத மகள் ஒரு பையனுடன் தனியாக வெளியே இருந்ததைப் பற்றி தான் கேட்டதும் கூட சொல்லவில்லை என்பதை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

 

என்ன தான் மிகவும் செல்லமாக வளர்த்தாலும் திருமண விஷயத்தில் அவர் காட்டும் மாப்பிள்ளையைத் தான் தன் பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.அதனால் தான் இந்த ஏற்பாடு.

“சரி விடு இதைப்பத்தி இனி பேச வேண்டாம்.மாப்பிள்ளை பிடிச்சுருக்கா இல்லையா? சொல்லு” என்றவர் கேட்க கீழே குனிந்து மௌனமாக தலையசைத்தாள்.”உண்மையாவே மாப்பிளையை பிடிச்சுருக்கா டா?இல்லை அப்பா சொல்றதுக்காக ஓகே சொல்லறியா?”என்று சந்தேகமாகக் கேட்க முகத்தில் வெட்கப்புன்னகையுடன் தலையசைத்தாள்.

நடந்தது இதுதான்!

நீலிபாளையம் சென்றவர்கள் அடுத்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த ஊர்க் காவல் தெய்வம் மருதகாளியம்மன் கோவிலில் சங்கல்ப்ப பூஜை இருந்ததால் அங்கு சென்றார்கள். ஊர் மொத்தமும் கோவிலில் கூடி இருக்க பூஜை சிறப்பாக நடை பெற்றது.

 

நம் நாயகிக்கு தான் கடவுள் நம்பிக்கை பெரியதாக இல்லையே.அதனால் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுடன் அவளும் விளையாடிக் கொண்டிருந்தாள்.அதில் ஒரு குழந்தை தத்தித் தத்தி நடந்து அவளை மிகவும் கவர அக்குழந்தையை கையில் எடுத்தவள் அதை மேலே தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அக்குழந்தையின் அம்மா சந்தியா தாருவிடம் பேச ஆரம்பித்தார்.”எந்த ஊர் மா?” என்று கேட்க “பெங்களூர் அக்கா” என்றவள் மீண்டும் அவளே தொடர்ந்தாள் “இங்க எங்க பாட்டி வீட்டுக்கு வந்திருக்க” என்றாள்.

 

“ஓ!உங்க பாட்டி பேரு என்ன?” என்று கேட்டுவிட்டு “ஓ கரட்டு தோட்டத்து வீட்டுப் பொண்ண.உங்க அக்கா தாமரையும் நானும் பிரிண்ட்ஸ்!” என்றவர் பின்பு பொதுப் படியான விஷயங்களை அவளுடன் பேசிக் கொண்டிருந்தார்.

 

இவர்கள் இருவரும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்ததை இரு ஜோடிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்ததை இருவரும் அறியவில்லை.பின்பு பூஜை முடிந்தவுடன் எல்லோரும் வெளியே வர தன் குடும்பத்தினரிடம் சந்தியாவை அறிமுகம் செய்து வைத்தாள் தாரு.

 

சந்தியாவை ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததால் அனைவரும் அவளுடன் பேசிவிட்டு பின்பு பிரசாதம் வாங்கச் சென்றனர்.பிரசாதம் சாப்பிட்டு முடித்தவுடன் சந்தியா தாருவை கண்டிப்பாக தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்தாள்.

 

சந்தியாவை அழைக்க வந்த அவளின் தம்பி அனைவரிடமும் நலம் விசாரித்துவிட்டுச் சென்றான்.சந்தியாவின் தம்பியை தாருவிற்கு பார்த்தவுடன் பிடித்துவிட்டது

 

.ஆறு அடி உயரம்,மாநிறம்,கூர்மையான மூக்கு,நன்றாக மசில்ஸ் பில்ட் பண்ணிய உடம்பு,அடர்த்தியான கருகரு முடி என்று இருந்தவனை நன்றாக சைட் அடித்துக் கொண்டிருந்தாள்..அதை விட அவன் பேசும் பொழுதும் சிரிக்கும் பொழுதும் கன்னத்தில் விழுந்த குழி அவளை மிகவும் கவர்ந்தது.

 

அவன் அணிந்திருந்த  வெள்ளை வேட்டி சாம்பல் நிற சட்டை அவன் கம்பீரத்தை எடுத்துக் காட்டியது..ஆனால் அவன் அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.பெரியோர்களுடன் பேசியவன் பின்பு தன் அக்காவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

 

’சாக்லேட் பாய்’ என்று மனதிற்குள் நினைத்தவள் ‘என்ன எல்லாரும் பிரியன் பிரியன்னு கூப்படறாங்க?என்ன பேரா இருக்கும்’என்று மனதில் யோசித்துக்கொண்டிருந்தாள்.

 

அன்று இரவு தூங்கும் முன்பு கூட அவனின் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே தூங்கிப் போனாள்.அடுத்த நாள் காலை எழும் போதே மனம் மிகவும் உற்சாகமாக இருப்பது போல் இருந்தது.ஏன் என்று யோசித்துக்கொண்டே இருந்தவளுக்கு ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் விடை கிடைத்தது.

 

ப்ரியனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்ததால் இரவு தாருவின் கனவில் அவன் வந்தான்.ஆனால் கனவில் நடந்த விஷயங்கள் எல்லாம் மறந்து விட அவன் வந்தது மட்டுமே நினைவு இருந்தது.

 

இரண்டு நாட்கள் கழித்து,

செல்லமுத்து தாத்தாவிற்கு ஊர்த் தலைவர் முத்துசாமியிடம் இருந்து போன் வர எடுத்துப் பேசியவரின் முகம் புன்னகையால் நிறைந்திருந்தது.’ஆத்தா என் பேத்திக்கு நல்ல வழி காட்டி’ என்று மருதகாளி அம்மனிடம் வேண்டியவர் பின்பு தன் மனைவி மருமகனிடம் விஷயத்தை சொன்னார்.

முத்துசாமி தன் மகன் கவிப்ரியனுக்கு தாரிகவை பெண் கேட்டிருந்தார்.கவிப்ரியனின் ஜாதகத்தை அவர்களிடம் கொடுப்பதாகவும்  ஜோசியரிடம் சென்று பார்த்துவிட்டு பொருத்தம் இருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றும் சொல்லி இருந்தார்.

 

கவிப்ரியனைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.நல்ல அருமையான பையன்.அவர்கள் குடும்பமும் நல்ல பண்பான குடும்பம் என்பதால் இந்த சம்மந்தம் அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர்.மேலும் பேத்தியும் தங்கள் அருகிலையே இருப்பாள் என்ற சந்தோசம் வேறு.

 

அடுத்த நாள் ஜோசியரை சென்று பார்க்க அவர் இவர்கள் இருவருக்கும் ஒன்பது பொருத்தம் இருக்கிறது என்றும் கல்யாணம் செய்து வைத்தால் அமோகமாக வாழ்வார்கள் என்றும் கூற இரு வீட்டுப் பெரியவர்களுக்கும் மிகுந்த சந்தோசம்.

அன்றைக்கே தாரிகாவை அழைத்துக் கொண்டு கோவில்பாளையம் சென்றவர்கள் மற்றவர்களிடம் விஷயத்தைக் கூறினர்.காரணம் அடுத்த நாளே நல்ல நாளாக இருந்ததினால் மாப்பிள்ளை வீட்டிலிருந்து  பெண் பார்க்க வருவதாகக் கூறியிருந்தனர்.தாரிகவை தவிர அனைவருக்கும் விஷயம் தெரிந்ததால் எல்லோரும் உற்சாகமாக இருந்தனர்.

 

“என்ன எல்லாரோட பேஸுளையும் 1௦௦௦ வாட்ஸ் பல்பு எரியுது?” என்றவள் கேட்க “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே” என்று கூறி சமாளித்தவர்கள் பின்பு அவள் முன் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.பெண்கள் மூவரும் பலகாரம் செய்ய தாரிகாவும் கார்த்திக்கும் அதை சாப்பிடும் வேலையை நன்றாகச் செய்து கொண்டிருந்தனர்.

 

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே தாரிகவை விசாலாட்சி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று எழுப்ப அவள் எழுந்து கொள்ளாமல் அடம்பிடித்தால்.சௌந்தரம் பாட்டி வந்து ஒரு அதட்டல் போட வேறு வழியில்லாமல் எழுந்தவள் குளிக்கச் சென்றாள்.

 

குளித்து முடித்து வந்தவளிடம் “நான் உனக்கு புடவை கட்டி விடற” என்று ருக்குமணி பெரியம்மா சொல்ல அவரிடம் அடம்பிடிக்காமல் புடவை கட்டிக்கொண்டாள்..

 

தாரிகவிற்கு தன்னை அலங்கரித்துக்கொள்வது மிகவும் பிடிக்கும் என்பதால் பார்த்து பார்த்து அலங்காரம் செய்து கொண்டாள்.தங்க நகைகள் தான் அணிய வேண்டும் என்ற பாட்டியின் கட்டளையால் தங்க நகைகளை போட்டுக்கொண்டாள்.

 

தங்க நிற மாங்காய் போட்ட குங்கும நிறச் சேலைகட்டி கழுத்தில் மாங்காமாலை அணிந்து காதில் அதற்கு ஏற்றார்போல் ஜிமிக்கு அணிந்திருந்தவளின் அழகு பார்ப்போரை கவர்ந்திழுத்தது.கார்த்திக் அவளைப் பார்த்து “இப்ப தான் டி பொண்ணு மாறி பார்க்க லட்சணமா இருக்க” என்று கேலி செய்து அவளிடம் இரண்டு அடிகளை வாங்கிக் கொண்டான்.

ஆறரை மணிக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துவிட அதுவரை தாருவிற்கு தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றே தெரியாது.தெரிந்தவுடன் தன் தந்தை இப்படி தன்னிடம் சொல்லாமல் மாப்பிள்ளை வீட்டினரை வரச்செய்தது மனதில் வலியைக் கொடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்துவிட்டாள்.கோபம்,பதற்றம் எல்லாம் சேர்ந்து அவளை மரத்துப் போகச் செய்திருந்தது.

 

வந்தவர்களை வரவேற்று அமரச் செயதவர்கள் சிறிது நேரம் தங்கள் குடும்பத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.சந்தியா “நான் போய் தாருவ பார்க்கட்டுமா?” என்று விசாலாட்சியிடம் கேட்க “இதுக்கு எல்லாம டா கேட்ப அந்த ரூம்ல இருக்க போய் பாரு போ” என்று சொல்ல அவளும் தலையசைத்து விட்டு தாருவைப் பார்க்க உள்ளே சென்றால்.

 

சந்தியா உள்ளே வந்து “தாரு” என்று அழைக்க சுயநினைவுக்கு வந்தவள் “அக்கா!நீங்க எங்க இங்க?” என்று ஆச்சர்யமாகக் கேட்க “என் தம்பிக்கு பொண்ணு பார்க்க நான் இல்லாமையா?” என்று கண்ணடித்துக் கேட்க தாரு ஆச்சர்யத்தில் கண்ணை விரித்தாள்.  

 

அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.அந்த சாக்லேட் பாய் தன்னை பெண் பார்க்க வந்திருக்கிறானா என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டவள் வெளியே முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டாள்.

 

“என்ன வெக்கமா?” என்று சந்தியா கேலி செய்ய அதற்குள் சர்மிளா உள்ளே வந்தாள்.முத்துசாமி சரசம்மாள் தம்பதியினர்க்கு மூன்று மக்கட் செல்வங்கள்.சந்தியா,சர்மிளா,கவிப்ரியன்.சர்மிளாவை தாருவிற்கு சந்தியா அறிமுகம் செய்து வைக்க அதற்குள் சௌந்திரம் பாட்டி பெண்ணை அழைத்து வர சொல்கிறார்கள் என்று சொல்ல சந்தியாவும் சர்மிளாவும் தாருவை அழைத்துக் கொண்டு சென்றனர்.

 

கவிரிகா வருவார்கள்…

 

error: Content is protected !!