mu-28(2)

mu-28(2)

சிலந்திவலை

சூர்யாவிற்கு அப்போதுதான் அன்று காரில் ஈஷ்வர்தேவ் சொன்னது நினைவுக்கு வந்தது. அதுவும் தான் எந்தக் காரியத்தை எடுத்தாலும் செய்து முடித்திடுவேன் என்று அவன் தீர்க்கமாய் உரைத்தது நினைவுக்கு வந்தது. அவன் சொன்னது போலவே செய்துவிட்டான் என எண்ணம் தோன்ற அப்போது ஈஷ்வர்தேவ் இன்னும் மரியாதைக்குரியவனாய் அவளுக்கு மாறினான். 

அவன் செய்தது சாதாரணமான உதவியில்லை என எண்ணியவள் அவனுக்கு உடனடியாக நன்றியுரைக்க எண்ணி தன் கைப்பேசியிலிருந்து அவனுக்கு அழைக்க எதிர்புறத்தில் அந்த நொடிக்காகவே காத்திருந்தவன் போல், ” ஆர் யூ ஹேப்பி நவ்?” என்று வினவினான்.

சூர்யாவால் பதில் பேச முடியாமல் தடுமாற அவனே மீண்டும், “சந்தோஷத்தில பேச்சு வரலயா?” என்று கேட்டான்.

சூர்யா சமாளித்துக் கொண்டு, “ம்ம்ம்… உண்மையிலேயே பேச்சு வரலதான்… ஆனா உங்களால எப்படி ஈஷ்வர்?!” என்று அவள் கேட்க,

எப்படி… என்ன… அதெல்லாம் நாட் அ மேட்டர்… நீ ஆசைபட்டது நடந்திடுச்சா… தட்ஸ் த் மேட்டர்” என்றான்.

நீங்க செஞ்சது ரொம்ப பெரிய விஷயம்… ஜஸ்ட் வார்ட்ஸால நான் நினைச்சதெல்லாம் சொல்ல முடியாது… அம்மாவும் சிஸ்டரும் ரொம்ப ரொம்ப ஹாப்பி… ஆனா நான் உங்ககிட்ட இப்போதைக்கு சொல்ல ஒரு வார்த்தைதான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் இடையில் நிறுத்தி, “தேங்க்ஸ்ன்னு சொல்லப் போறியா?” என்று கேட்டான்.

ம்ம்ம்”

போஃன்ல தேங்க்ஸ் சொல்லி சிம்பிளா முடிச்சிடலாம்னு பார்க்கிறியா?” என்று அவன் அழுத்தமாய் கேட்க,

அப்படி இல்ல… இப்ப உடனே சொல்லணும் போல தோணுச்சு… அதான் ஃபோன்ல”

ஃபோன்ல எதுவும் சொல்றதா இருந்தா நீ சொல்லவே வேண்டாம்” என்று அவன் கோபமாய் உரைக்க,

சரி, நாளைக்கு நேர்ல வந்து?” என்று சொல்லும் போதே அவன்,

இல்ல… இன்னைக்கே… இப்பவே…”என்றான்.

சூர்யா குழப்பத்தோடு அமைதியாகிட ஈஷ்வர் மீண்டும் “முடியாதா ?” என்று கேட்டான்.

முடியாதுன்னு இல்ல”

தென் வாட்… ?”

ம்ம்ம்… இல்ல இப்போ டைம்” என்று அவள் இழுக்க,

வரமுடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிடு… காரணம் சொல்லாதே… ஐ டோன்ட் லைக் தட்” என்று அவன் படபடவென உரைக்க அவள் மனம் ஒருபுறம் தயங்கினாலும் மறுபுறம் அவன் இத்தனைப் பெரிய உதவி செய்திருக்கும் போது ஏனோ அவன் அழைப்பை தவிர்க்க மனம் வரவில்லை.

 நான் வர்றேன்…” என்றாள்.

தட்ஸ் குட்… “

மஹாலிபுரம் கெஸ்ட் ஹவுஸ்லயா”

ம்ம்ம்… எஸ்… பட் யூஷ்வலா டிரஸ் பண்ணிட்டு வர வேண்டாம்… பார்ட்டி பஃங்க்ஷன்ஸுக்கு வர மாதிரி வா… பெட்டர் சாரியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்… “

அவள் புரியாமல், “ஏன்… ஏதாச்சும் பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கீங்களா?!” என்று கேட்க,

நீ நேர்ல வா… அப்போ உனக்குப் புரியும்…” என்று சொல்ல,

பார்ட்டினாஅப்பாவையும் அழைச்சிட்டு வர்றவா?!” என்று கேட்டாள்.

நோ… நீ மட்டும்தான்” என்று அவன் அழுத்தமாய் உரைக்க ஏதோ அந்த வார்த்தை அவளைப் பதட்டமடைய செய்ய அவள் பதில் பேசாமல் மௌனமானாள்.

“………”

என்னாச்சு சூர்யா… வருவ இல்ல”

ம்ம்ம்… “

” ஐம் வெயிட்டிங்… கம் சூன்” என்றான்.

சூர்யா தான் இத்தனை நாள் வரை அங்கே தனியேதான் சென்று வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று ஏன் மனம் பதட்டமுறச் செய்கிறது என யோசித்தவள் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் அவனை சந்திக்கப் புறப்பட்டாள்.

**********

அர்ஜுன் வீட்டிற்கு வந்ததிலிருந்து தன் அம்மாவிடம் விடாமல் குறுக்கு விசாரணை நடத்திக் கொண்டிருந்தான். சுகந்தியும் ஏதேதோ சொல்லித் தப்பிக் கொள்ளவே முயற்சி செய்ய அவன் விடுவதாக இல்லை.

மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைதான் தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான். 

சூர்யாவுக்கும் அபிமன்யுவுக்கும்…  எங்களுக்கு நிச்சயம் பண்ண அதே தேதியிலயே ஃபிக்ஸ் பண்ண சொன்னா… ஏன் செய்யக் கூடாதுன்னு ஏதேதோ காரணம் சொல்லி மழுப்புறீங்க?”என்றான்.

, “நான் வேண்டாம்னு சொன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு அர்ஜுன்… புரிஞ்சுக்கோ” என்று அவர் கெஞ்சலாக உரைக்க,

என்ன காரணம்… எனக்கு இப்பவே  தெரிஞ்சாகணும்?” என்று அவன் பிடிவாதமாய் கேட்டான்.

“காரணம் எல்லாம் கேட்காதே… அவங்க இரண்டு பேரும் சேரக் கூடாது… அதுக்கு நான் ஒத்துக்கவும் மாட்டேன்… இதோட இந்த விஷயத்தைப் பத்தி பேசாதே” என்று  தீர்க்கமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவர் அகல பார்க்க,

அர்ஜுன் தன் குரலை உயர்த்தி, “சரி  நான் பேசல… அப்படியே என் முடிவையும் கேட்டுட்டுப் போங்க… அபி சூர்யா கல்யாணத்தைப் பத்தி பேசி முடிக்காம…  நான் ரம்யாவைக் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்” என்றான்.

டே அர்ஜுன்” என்று சுகந்தி அதிர்ச்சியானார்.

அர்ஜுன் மேலும், “என் காதல் எனக்கு எவ்வளவு முக்கியமோ… அத விட என் தம்பியோட விருப்பம் எனக்கு ரொம்ப முக்கியம்…” என்றான்.

சுகந்தியும் மகனை நோக்கிக் குரலை உயர்த்தி, “அப்போ உனக்கு உன் தம்பியோட உயிர் முக்கியமில்லயா?” என்று கேட்டார்.

அந்த கேள்வி அர்ஜுனை அதிர்ச்சியில் உறைய வைக்க, “என்ன சொல்றீங்கமா?” என்றான்.

சுகந்தி தன் மனவேதனையால் பெருகியக் கண்ணீரைத் துடைத்தபடி,

சூர்யாவைப் பார்த்ததுமே நான் அந்த பொண்ணைதான் அபிமன்யுவிற்கும் பேசி முடிக்கணும்னு நினைச்சேன்… ஆனா என்னை என்னடா பண்ண சொல்ற?… விதி அவங்க இரண்டு பேரும் சேரக் கூடாதுன்னு இருக்கு” என்று சொல்லி மௌனகிட அர்ஜுன் ஒன்றும் புரியாமல் நின்றான்.

சுகந்தியே மேலும், “ரம்யாவுக்கும் உனக்கும் பொருத்தம் பார்க்கும் போதே  சூர்யாவிற்கும் அபிக்கும் சேர்த்துதான் பொருத்தம் பார்த்தேன்… ஆனா துரதிஷ்டவசமா அவங்க இரண்டு பேரோட ஜாதக அமைப்புப்படி….. கல்யாணம் பண்ணாலும் சேர்ந்து   வாழவே முடியாதாம்… இதெல்லாம் மீறி இவங்க கல்யாணம் நடந்ததுன்னா அபிமன்யுவோட உயிரே போற அபாயம் வரும்னு சொல்லிட்டாங்க… அதுக்கப்புறமும் எப்படி?!” என்று கேட்டபடி அவள் கண்ணீர் வடிக்க,

அர்ஜுன் அவர் வார்த்தைகளைக் கேட்டு நம்பிக்கையற்றவனாய், “ஜாதக ஜோசியம்னு நீங்க பாட்டுக்கு தேவையில்லாததை எல்லாம் நம்பிக்கிட்டு அவங்க காதலை பிரிச்சிராதீங்க” என்று கோபம் கொண்டான்.

“நானும் அதெல்லாம் பொய்யாய் இருந்திடக் கூடாதான்னுதான் நினைக்கிறேன்… ஆனா அப்படி எல்லாமே பொய்யுன்னு உதாசீனப்படுத்தவும் என்னால முடியலடா… உங்க தாத்தாவும் என்கிட்ட அபிக்கு  இருபத்தைந்து வயசுக்கு மேல  ஒரு கண்டம் இருக்குன்னு சொல்லி இருக்காரு… உயிர் போய் உயிர் வர அளவுக்கு ஆபத்து வருமாம்… ஒவ்வொரு நாளும் அவனுக்கு என்ன வருமோ ஏது வருமோன்னு உன் தம்பியை நினைச்சு நினைச்சு நானே மடியில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன்… இதுல இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வேற,

நான் நிம்மதியில்லாம தவிக்கணுமா… வேண்டாம் அர்ஜுன்… அபிமன்யுவிற்கு சூர்யா மேல விருப்பம் இருந்தா நீதான் அவன்கிட்ட பேசிப் புரிய வைக்கணும்… எந்த காரணத்தைக் கொண்டும் அவங்க இரண்டு பேரும் சேரவே கூடாது… இதை அவங்க இரண்டு பேரோட நல்லதுக்காகதான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு சுகந்தி அதற்குமேல் அங்கு நிற்காமல் விரைவாக வெளியேறினாள். 

அர்ஜுன் தன் அம்மா சொன்னதெல்லாம் எந்தளவுக்கு உண்மை இருக்கும் என யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் அபிமன்யு தன் மனசை நிச்சயம் இந்த காரணங்களுக்காக எல்லாம் மாற்றிக் கொள்ளவும் மாட்டான். 

சூர்யாவை எதற்காகவும் விட்டுக் கொடுக்கவும் மாட்டான் எனும் போது இவர்கள் இருவரின் காதல் கைக்கூட என்னென்ன இடையூறுகள் நேரிடுமோ என அச்சமுற்றான்.

அதே சமயத்தில் சூர்யாவும் இப்போது அத்தகைய இடையூறை தேடித் தானே வலிய சென்று கொண்டிருந்தாள். ஈஷ்வர் ஃபோனில் பேசிய விதம் எங்கேயோ அவள் மனதில் ஒருவித எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது. இருப்பினும் அவள் நடக்கவே சாத்தியமில்லை என நம்பிக்கையற்றிருந்த அவள் பெற்றோரை இணைத்து வைத்ததினால் ஏற்பட்ட நன்றி உணர்வு அந்த எச்சரிக்கை உணர்வை அலட்சியப்படுத்தியது.

மஹாலிபரம் கெஸ்ட் ஹவுஸிற்குள் சூர்யா நுழையும் போது வானில் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கபூமியை காரிருள் சூழக் காத்திருந்தது. 

அவள் எதிர்பார்த்ததுப் போல் எந்த விழாவும் அங்கே நடைபெறப் போவதற்கான அறிகுறி இல்லாததைக் கவனித்தாள். 

பின்னே எதற்கு அவன் தன்னை புடவையில் வரவேண்டியும்அதுவும் பார்ட்டிக்கு வருவது போலவும் வரச் சொன்னான் என சிந்தித்தபடியே ஈஷ்வர் எங்கே என அந்த வீட்டினுள் நுழைந்த மாத்திரத்தில் வேலையாளிடம் வினவ அவன் மேலே தன் அறையிலிருப்பதாகப் பதிலளித்தான்.

சூர்யா யோசனைகுறியோடு மூடியிருந்த அந்த அறைக்கதவைத் தயக்கத்தோடு  தட்ட ஈஷ்வரின் குரல் கம்பீர தொனியில், “கம்மின் சூர்யா” என்று ஒலித்தது. 

அவளும் கதவைத் திறக்க அந்த அறையைப் பார்த்தபடி பிரமித்து நின்றாள். அவளின் பார்வை அதிசயத்தபடி அந்த அறையின் முழுவதும் சிறு வண்ண விளக்குகளின் தோரணங்களால் ஜொலித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். 

அந்த விசலாமான அறையில் இருந்த வட்ட மேஜையில் சிவப்பு ரோஜா பூங்கொத்தும் மெழுகவர்த்திகள் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருக்க இவையெல்லாம் எதற்காக என கேள்விகளோடு அவள் பார்த்துக் கொண்டிருக்கஅதே சமயம் ஈஷ்வரைப் பற்றி சிந்தித்தவள் அவன் புறம் திரும்ப அவனோ வசீகரமான புன்னகையோடு வாசலில் நின்றிருப்பவளை,

“வெல்கம் சூர்யா” என்றழைத்தான். 

கொஞ்சம் தயக்கத்தோடே அவள் உள்ளே நுழைய அந்த வண்ண விளக்குகளின் பிரதிபலிப்பு சூர்யாவின் முகத்தில் வீசி இன்னும் அழகாய் அவள் முகத்தை மின்னச் செய்து கொண்டிருந்தது. அவளோ அந்த அறையின் அலங்கரிப்பை ரசித்தபடியே மூழ்கியிருக்க அவன் விழிகளோ இமைக்காமல் அவளிடமே நிலைத்திருந்தது.

சூர்யா அவன் முகத்தைக் கூட பாராமல் ரொம்ப ஸ்பெஷல் கெஸ்ட் யாரையாச்சும் இன்வைட் பண்ணிருக்கீங்களா?” என்று கேட்டு விட்டு அவனை நோக்க அவனும் புன்னகையோடு, “ம்ம்ம்” என்று தலையசைத்தான்.

ஈஷ்வருமே இயல்பிலிருந்து மாறுப்பட்டு அதீத கம்பீரத்தோடு வெள்ளை நிற ஷர்ட் அணிந்து கொண்டிருந்தபடி நின்றிருந்தான். 

அவன் இயல்பாகவே எல்லோரையும் ஒரே பார்வையாலேயே வசப்படுத்துபவன் எனினும் இன்று அவனின் தோற்றத்தின் கம்பீரமும் மிடுக்கும் நொடிப் பொழுதில் எதிரே நிற்பவரை வீழ்த்தும் வல்லமை கொண்டதாகவே இருந்தது. சூர்யாவும் அவனைக் கண்ட நொடி அத்தகைய காந்த சக்தியை உணர்ந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

அவளோ அந்த அறையின் அலங்கரிப்புக்கானக் காரணத்தை யூகித்தபடி  “கண்டிப்பா இது அஃப்பிஷயல் மீட்டிங் கிடையாது… இல்லையா ஈஷ்வர்… ஏதோ பர்ஸனல் மீட்டிங் ரைட்” என்று கேட்க அதற்கு, “ம்ம்ம்… எஸ்” என்றான்.

மீண்டும் அவள் ஆர்வ மிகுதியால், “ஓ… அதனால்தான் நீங்க என்கிட்ட சொல்லலியோ?!… பட் யார் அந்த பர்ஸ்ன்ல் கெஸ்ட்?” என்று கேட்டவளைப் பார்த்து புன்னகை புரிந்தானே ஒழிய அவன் பதிலுரைக்கவில்லை.

சூர்யா அவன் பதில் சொல்லாத போதும் விடாமல் அவனை நோக்கி, “ம்ம்ம்… ரொம்ப பர்ஸனலோ… நான் கேட்டிருக்கக் கூடாதோ?” என்று அவளே வினவிவிட்டு மீண்டும் அவனைப் பதில் பேசவிடாமல்,

 “அப்படி பர்ஸனல் மீட்டிங்கா இருந்தா என்னை ஏன் இப்ப உடனே வான்னு கூப்பிட்டீங்க… ?” என்று கேட்டாள்.

இப்படி அவள் ஓயாமல் கேள்விக் கணைகளைத் தொடுத்தபடி இருக்க அவனோ அதனை ரசித்தாலும் கொஞ்சம் கோபம் கொண்டவன் போல்,

“வந்ததிலிருந்து நானும் பார்த்துட்டிருக்கேன்… நீ என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டிட்டிருக்க…  நீ எனக்கு பாஸா இல்ல நான் உனக்கு பாஸா?!”என்றான்.

அவனின் கோபத்தைக் கண்டு மௌனமாகிய போதும் யாராக இருக்கும் என அவள் யோசனையில் ஆழ்ந்துவிட அவனும் மெல்ல தான் நினைத்ததை சொல்ல எத்தனிக்க சூர்யா மீண்டும் அவனை நோக்கி,

சாரி…நான் இங்கே ஏன் வந்தேங்கிறதை மறந்திட்டு தேவையில்லாம பேசிட்டிருக்கேன்… ” என்று உரைக்க அவள் தன்னை பேசவே விடாமாட்டங்கிறாளே என ஒருபக்கம் கோபம் எழுந்தாலும் அவன் மௌனம் காத்தான்.

சூர்யா புன்னகை ததும்ப, “தேங்க்யூ தேங்க் யூ சோ மச் ஈஷ்வர்… நான் எக்ஸ்ப்பெக்ட் பண்ணவே இல்லை… திடீர்னு அப்பா வந்து எல்லோரையும் சர்ப்பரைஸ் பண்ணிட்டார்… அக்காவும் அம்மாவும் அவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க… இந்த நாள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்… அதுக்கு நீங்கதான் காரணம் ஈஷ்வர்… ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்…” என்று நெகிழ்ந்தபடி உரைக்க,

தேங்க்ஸ் ஒகே… ஆனா நம்ம டீலிங்” என்று கேட்டு அவளை ஈஷ்வர் கூர்மையாய் பார்க்க,

டீலிங்கா… என்ன டீலிங்?”என்றாள்.

நான் என்ன கேட்டாலும் செய்றேன்னு சொன்னியே… மறந்திட்டியா சூர்யா?”

சூர்யா கொஞ்சம் யோசித்துவிட்டு,”ம்ம்ம்… ரைட்… சொன்னேன்ல… ஒகே டன்… நம்ம டீலிங்படி… நீங்க என்ன கேட்டாலும்…  நான் கண்டிப்பா செய்றேன்… பட் எனக்கு பாஸிபிளான விஷயமா கேளுங்க” என்றாள்.

அவள் அத்தனை சந்தோஷமான மனநிலையில் இருப்பதால்  இதை விட சரியான சந்தர்ப்பம் வாய்த்திராது என்று எண்ணமிட்டபடி இருக்க, அந்த இடமே மௌனத்தால் சூழ்ந்து கொண்டது. சூர்யாவிற்கோ அவன் எதைக்கேட்க இப்படி யோசிக்கிறான் என்ற சிந்தனை தோன்றியது.

ஆனாலும் அவளை வேறொரு எண்ணமும் ஆட்கொள்ள அவள் மீண்டும் அவனை நோக்கி, “ஒகே… அந்த கெஸ்ட் எப்போ வருவாங்க ?”என்று கேட்க,

“உனக்கு இப்போ அந்த கெஸ்ட்டை பார்க்கணும்… அப்படிதானே?” என்றான்.

சூர்யா ஆர்வமாய், “ம்ம்ம் எஸ்” என்று தலையசைக்க ஈஷ்வர்,  “என்னோட வா” என்று அழைக்க  அவளும் யோசனையோடு அவனோடு  சென்றாள்.

அவனோ அந்த அறையின் படுக்கையின் நேரெதிராய் இருக்கும் கண்ணாடியின் முன் வந்து நிறுத்தி அவள் பிம்பத்தையேக் காண்பித்து,

 “நீதான் எனக்கான…  என்னோட ஸ்பெஷல் கெஸ்ட்?” என்று  உரைக்க சூர்யா அதிர்ச்சியோடு, “நானா… என்ன விளையாடுறீங்களா?” என்று கேட்ட  நொடி “நோ ஐம் சீரியஸ்” என்றான்.

அவனின் பதிலால்அவள் முகத்திலிருந்த துடுக்குத்தனம் மறைந்து அவள் அதிர்ந்தபடி எதுவும் பேசாமல்  மௌனமாய் நிற்க ஈஷ்வர் அவள் பின்னோடு நின்றபடி,

 “உன் கோபம் உன் திமிரு உன் அகம்பாவம்… இதெல்லாமே என்னை கோபப்படுத்தின அதே நேரத்தில… என்னை ரொம்பவும் இம்பிரஸ் பண்ணிடுச்சு… நீ கோபப்பட்ட மாதிரி யாரும் உரிமையா என்கிட்ட கோபப்பட்டதும் இல்ல… ஐ லவ்ட் யுவர் ஆட்டிட்யூட்… நான் உன்கிட்ட கேட்க நினைச்சது ஒரே விஷயம்தான்… ஜஸ்ட் மேரி மீ” என்றான்.

சூர்யா அதிர்ந்தபடி அவன் புறம் திரும்ப அப்போதுதான் ஈஷ்வர்தேவ்வை வேறொரு பரிமாணத்தில் பார்த்தாள் என்று சொல்ல வேண்டும். அவன் பார்வை தன் மீது லயித்திருப்பதை உணர்ந்தவள் எரிச்சலோடு, “அப்போ நீங்க என்கிட்ட கேட்கணும்னு நினைச்சது இதானா?” என்று கேட்க, “ம்ம்ம்” என்று தலையசைத்து ஆமோதித்தான்.

இப்படி ஒரு எண்ணத்தை அவன் மனதில் வைத்துக் கொண்டுதான் தன்னிடம் பழகினான் என்பதை தான் எப்படி யூகிக்காமல் போனோம் என்று சூர்யா சிந்தித்தவள் அவனிடம்,

 “உண்மையிலேயே நீங்க எனக்கு செஞ்சது பெரிய உதவிதான்… பட் இப்போ நீங்க கேட்கறது… சாரி ஈஷ்வர்… சத்தியமா அது மட்டும் என்னால முடியாது” என்றாள்.

முடியாதா…” என்று கேட்டு சிரித்தவன் அவளை நோக்கி கர்வமாய், “மிஸஸ். ஈஷ்வர்தேவ்ங்கிற அந்த ஒரு அங்கீகாரத்திற்காக எத்தனைப் பேர் தவம் கிடக்கறாங்க தெரியுமா… அப்படி ஒரு மதிப்பை நான் உனக்குத் தரேன்னு சொல்றேன்… நீ முடியாதுங்குற” என்றான்.

அவன் பேச்சிலிருந்த அதிகாரத் தொனி சூர்யாவைக் கோபப்படுத்த அவள் ஏளனமாக,  “தவம் கிடக்கிறவங்க எல்லோரையும் விட்டுவிட்டு போயும் போயும் உங்களுக்கு அசிஸ்டென்ட்டா இருக்குற நான் எதுக்கு… நீங்க எனக்கு பாஸுங்கிற எண்ணத்தைத் தவிர வேறெந்த மாதிரி தாட்டும் எனக்கில்ல ஈஷ்வர்… உங்க ஸ்டேட்டஸுக்கு ஈக்வலா யாரையாச்சும் பாருங்க” என்றாள்.

எனக்கு சரிசமமான ஸ்டேட்டஸ் இருக்கிறப் பொண்ணைத்தான் நான் செலக்ட் பண்ணனும்னா… அதை நான் எப்பவோ செஞ்சிருப்பேன்… ஆனா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறப் பொண்ணு என் மனசுக்குப் பிடிச்சவளா இருக்கணும்னு நினைக்கிறேன்…” என்றான்.

உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் வர்றதுக்கு நான் காரணமா இருந்தா… அதுக்கு சாரி… பட் நீங்க நினைக்குறது எப்பவும் நடக்காது” என்றவள் அவனைத் தவிர்த்துவிட்டு செல்லப் பார்க்க அவன் அவளை வழிமறித்து,

நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்… இந்த ஈஷ்வர்தேவ் எதையாவது நடத்தணும்னு நினைச்சிட்டா அதை நடத்தியே தீருவேன்” என்றான்.

நீங்களும் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க… எனக்கு விருப்பமில்லாத விஷயத்தை யாருக்காகவும் எதுக்காகவும நான் செய்ய மாட்டேன்… உங்க விருப்பத்தை நீங்க என் மேல திணிக்கப் பார்க்காதீங்க… அதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்… நீங்க பெட்டர் உங்க மனசை மாத்திக்கோங்க… நான் கிளம்பறேன்” என்று சொல்லலிவிட்டுப் புறப்படப் போனவளின் கரத்தை அவன் இறுக்கமாய் பிடித்துக் கொள்ள சூர்யா அவனை முறைத்தபடி,

கையை விடுங்க ஈஷ்வர்… நீங்க பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப டீஸன்ட்டா நடந்துப்பீங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்… அப்படிதான்னு நான் இப்ப வரைக்கும் நம்பறேன்… அந்த எண்ணத்தை நீங்களே உடைச்சிராதீங்க” என்றாள்.

யூ ஆர் ரைட்… நான் மத்த எல்லா பொண்ணுங்க கிட்டயும் அப்படிதான்… பட் நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டார்லிங்” என்றான்.

அவனின் அந்தத் தோரணையும் நடவடிக்கையும் அவளைக் கலவரப்படுத்த, “வேண்டாம் ஈஷ்வர்… இப்படி எல்லாம் பேசாதீங்க… எனக்கு சுத்தமா பிடிக்காது… என் கையை முதல்ல விடுங்க… நான் போகணும்”  என்று தவிப்புற்றாள்.

நீ இப்படி என்னை விட்டு விலகிப் போறது கூடதான் எனக்குப்  பிடிக்கல… புரிஞ்சுக்கோ சூர்யா… உனக்காக நான் தவிக்கிற தவிப்பு இன்னைக்கு நேத்தில்ல… உன்னோட இந்த முகம் என்னைத் தூங்கவிடாம வேலை செய்ய விடாம டார்ச்சர் பண்ணுது…நீ எனக்கு வேணும்” என்றான்.

இப்படி எல்லாம் என்கிட்ட பேசாதீங்க ஈஷ்வர்… நான் மிஸ்டர். அபிமன்யுவை லவ் பண்றேன்… அவரைதான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றாள்.

ஈஷ்வர் அதிர்ச்சியோடு அவளின் கரத்தை இன்னும் இறுக்கமாய் பற்ற அவள் வலியோடு,”விடுங்க ஈஷ்வர்” என்று முகத்தைச் சுருக்கினாள்.

ஈஷ்வர் அவள் வலியைப் பொருட்படுத்தாமல், “அவன் எல்லாம் என் கால்தூசி பெறுவானா… போயும் போயும் அவனைப் போய் நீ” என்று கேட்க, 

ஸ்டாப் இட் ஈஷ்வர்… மைன்ட் யுவர் வர்ட்ஸ்… அபிமன்யு பத்தி பேசெல்லாம் உங்களுக்குத் தகுதியே கிடையாது… அவரோட கேரக்டர் முன்னாடி நீங்கெல்லாம் நத்திங்… நல்லா கேட்டுக்கோங்க… அபிதான் என்னோட லவ்… அபிதான் என்னோட லைஃப்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஈஷ்வர் கோபத்தோடு  அவள் கழுத்தை நெருக்கியபடி சுவற்றோரத்தில் தள்ளி,

உனக்கு அவன் அவ்வளவு முக்கியமா” என்று கேட்டான்.

அவனின் இரும்புக்கரம் அவள் கழுத்தை இறுகிய போதும் சூர்யா தெளிவோடு,  “என் உயிரை விட எனக்கு அபிதான் முக்கியம்” என்று சொன்ன நொடி ஈஷ்வரின் கோபம் அதிகரித்தது. 

ஆனால் அவளை கொல்லவோ காயப்படுத்தவோ மனம் வராமல் தன் கரத்தை அவன் விடுவிக்க அவளோ பெருமூச்சுவிட்டு அவனிடமிருந்து நகரப்பார்த்தவளை மீண்டும் தன் இரு கரங்களால் சிறைபிடித்தான்.

சூர்யா கோபத்தோடு, “ஈஷ்வர் வழி விடு” என்றாள்.

முடியாது… அதுவும் நீ அந்த அபிமன்யுவை இந்தளவுக்கு விரும்பறேன்னு சொன்னப் பிறகு சும்மா உன்னை அனுப்ப மனசு வரல” என்றான்.

சூர்யா அலட்சியமான பார்வையோடு, “என்னடா பண்ணுவ…” என்று கோபமாய் கேட்க,

டாவா… மேடமுக்கு ரொம்பதான் கோபம் வருது… சரி போகட்டும்… நீ என் டார்லிங்ல…  ஸோ செல்லமா கூப்பிட்டுக்கோ… பரவாயில்ல… பட் ஒரே ஒரு ஹெல்ப்… அதை மட்டும் செஞ்சுட்டுப் போ” என்று சொல்ல சூர்யா குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள்.

அவனோ கல்மிஷமாய் புன்னகைத்து, “உன்  லிப்ஸ் என்னை மேக்னட் மாதிரி இழுக்குதுடி… ஜஸ்ட் அ கிஸ் டார்லிங்…” என்றான்.

சூர்யா அவனின் மோசமான எண்ணத்தை அறிந்த நொடி நெருப்பில் சிக்குண்டவள் போல் தவித்தபடி  அவனைத் தள்ளிவிட முயற்சித்தாள். ஆனால் அவனின் தேகம் கொஞ்சமும் அசைந்து கொள்ளாமல் அவளை நெருங்க,

“ஏ நோ… ஐ வில் கில் யூ” என்று அவள் விலகிப் போக எத்தனிக்க, “இனிமேதான் நீ என்னை கொல்லனுமாடி…” என்று அவன் அலட்சிய தொனியில் புன்னகைத்து சொல்லிக் கொண்டே மேலும் மேலும் அவளிடம் நெருக்கமாய் வந்தான்.

சிலந்தியின் வலையில் தானே சென்று சிக்குண்டப் பூச்சியாய் அவள் இப்போது வழியின்றித் தவிக்க அந்த சிலந்தி நீண்ட காத்திருப்பின் பின் கிட்டிய அந்த இரையை அத்தனை சீக்கிரத்தில் தப்பிச் செல்ல விட்டுவிடுமா என்ன?

error: Content is protected !!