Ninaivellaam neeyo 3

Ninaivellaam neeyo 3

கல்லூரியிலிருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த விஷ்ணுவின் கண்ணில் தென்பட்டாள் தேன்மொழி.

வலக்கையின் சுட்டுவிரலால் முன்முடியை காதிற்கு பின் ஒதுக்கி நடந்து சென்றாள்.

ஐ நம்ப ஆளு, என எண்ணியபடி வண்டியை அவள் முன்பு சடன்பிரேக் இட்டு நிறுத்தியதில், அதிர்ந்து இரண்டடி பின்சென்றாள்.

கருப்பும் சிவப்பும் கலந்த காட்டன் புடவை அவள் வெண்நிறத்திற்கு மேலும் அழகு சேர்க்க, வளைந்த புருவத்தின் மத்தியில் சிறிய கருப்பு நிற பொட்டும் அதற்கு மேலே சிறிய பட்டை சந்தனமும், மையிட்ட விழிகள் அதிர்ந்ததில் மேலும் விரிந்திருக்க, கூரான நாசியில் சிவப்பு நிற மூக்குத்தியும், சிவந்த உதடுகளும், சிறிய கழுத்தில் மெல்லிய நீண்ட செயினில் இசை சிம்பிலின் (🎼) மத்தியில் M என கற்கள் பதிக்கப்பட்ட டாலரும், வலக்கையில் மெல்லிய பிரேஸ்லைட்டும், இடக்கையில் ரோஸ்(ம)தங்க நிறம் கலந்த கடிகாரமும், வலது தோள்பட்டையில் இடைவரை தொங்கும் பையும், இடைவரை நீண்ட கற்றைமுடியை சென்டர் க்ளிபில் அடக்கியிருக்க, காலில் படிந்த(Flate)செருப்புடன் இருந்தவளை விஷ்ணு அச்சிறிய நேரத்திலும் ரசிக்க தவரவில்லை.

( செருப்பெல்லாமா ரசிப்ப🤔)

ஏய், கருப்பு புடவையில தலவிரி கோலமா யார் கிட்ட நீதி கேட்க போகிறாய் , மார்டன் கண்ணகி என்றான்.

அதுவா , என் காதல் கணவராக போகிறவனை, கொன்றவனை பார்த்து நீதி கேட்க போறேன்.

அடி பாதகத்தி, உன் காதல் கணவனாக போகிறவன், உன் முன்னாடி தானே இருக்கேன். என்றான் அதிர்ந்த குரலில்

ஹலோ, இன்னொரு முறை காதல், கணவன்னு சொன்ன, மாமா பையனுகூட பார்க்க மாட்ட, தாத்தா கிட்ட சொல்லிடுவ அப்புறம் வீட்ல சாப்பிடுற தண்டசோறும் கட்டு தா. என்றாள் கோப குரலில்.

ஹ.ஹா.. மேடம்கு விஷயம் தெரியாதுல, சார் இப்ப கல்லூரி பேராசிரியர்.என்றான் காலரை தூக்கியபடி.

சாருக்கு , மில்லுக்கு போவ கஷ்டம், இதுல தல கல்லூரி பேராசிரியராம். பொண்ணுங்க பின்னாடி சுத்தரவனுக்கு பொண்ணுங்க இருக்கற இடதா பிடிக்கும் பின்ன மிஷின் இருக்கற இடமா பிடிக்கும்.வேல கூட உனக்கு ஏத்தா மாதிரிதா புடுச்சிருக்க.என நக்கல் பொதிந்த குரலில் கூறினாள்.

ஏய் அசிங்கமா பேசின வாய்லயே போடுவேன்.பொண்ணுங்க பின்னாடி எல்லாம் சுத்தமாட்ட. உன் பின்னாடிமட்டும் தா.என்றான் சிரித்தபடி.

ஆமா இப்ப எங்க போற?

காலேஜ்கு…என்றாள்.

காலேஜிக்கு ஏ இப்ப போற? காலையில என்ன பண்ண?

அத உன் கிட்ட சொல்லனும்னு அவசியம் எனகில்ல. என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

சொல்லாம உன்ன நகரவிடற எண்ணமும் எனக்கில்ல.என்றான் புருவத்தை உயர்த்திய படி.

அது காலையில துருவுக்கு வேலகிடச்சதால கோவிலுக்கு போன அதானால ஆஃப்டே(off day leave) லீவ்.அதா இப்ப போறேன். என்றாள் எங்கோ பார்த்தபடி.

சரி உன் வண்டி என்னாச்சி?

அதுவா, வரவழியில  பஞ்சர் மெக்கானிக் ஷெட்ல ஆளில்ல அதா வண்டிய கடையிலே விட்டுட்டு நடந்து போற.

சரி வந்து வண்டில ஏறு, நானே காலேஜ்ல விட்டுறேன்.என்றான் வண்டியை திருப்பிக் கொண்டு.

அதுக்கு வேற ஆளப்பாரு, உன் வண்டில எப்பவும் ஏற மாட்டேன்.என கூறிவிட்டு

வேகமாக நடந்து சென்றாள்.பாவம் அவள் அறியவில்லை, அவள் வாழ்க்கையே அவனுடன் தான் செல்ல போகிறதென்று.

 

விஷ்ணு _ தேன்மொழி

வீட்டில் அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க. விஷ்ணு,

தாத்தா  பாட்டி அப்பா அம்மா அண்ணா ருத்ரா உங்க எல்லார் கிட்டயும் ஒண்ணு சொல்லனும் என்றான் மெல்லிய குரலில்.

அங்கிருந்த ஹரிணி, எதுக்கிப்ப அட்டணென்ஸ் எடுக்கற , நீ என்ன சொல்லப் போற தாத்தா, என்னால நாளைக்கு மில்லுக்கு போகமுடியாது எனக்கு கொஞ்சம் டைம் வேணும் அதான சொல்லப்போற, என்றபடி இட்டலியை வாய்குள் அடைத்தாள்.

ஹரிணியை முரைத்து விட்டு, தாத்தா எனக்கு *** கல்லூரில பேராசிரியரா வேல கிடச்சியிருக்கு.நாளையில இருந்து வேலைக்கு  வர சொன்னாங்க , நீங்க என்ன சொல்ரிங்க? என்றான் தயங்கியபடி.

ஹரிணிக்கு விஷ்ணு சொன்னதைக் கேட்டு புரையேற.அருகில் இருந்த கவிதா பொறுமையா சாப்பிடுடி, என

தலையை தட்டியபடி தண்ணீரை கொடுத்தார்.

உனக்கெல்லாம் யாரு வேல கொடுத்தாங்களோ? நீயே ஒரு தண்டசோறு உன்கிட்ட படிக்கபோற பசங்களோட நிலைமை என்னமோ? கையை உயர்த்தி மேலே பார்த்தாள்.

அங்கிருந்த உமையாள், ஹரிணி அண்ணனு மரியாத கொடுத்து பேசு.மாமா, என் மகனுக்கு புடிச்ச வேலய அவ பாக்கட்டுமே,பாடம் சொல்லி கொடுக்கறவங்க கடவுளுக்கு சமமானவங்க. என விஷ்ணுவின் தலையை வருடினார்.

விருதாசலம், விஷ்ணுவை பார்த்து நீ என்ன வேலைக்கு வேணுனாலும் போ ஆனா வாரத்துக்கு ஒரு முறை மில்லுபக்கம் போய் என்ன வேல நடக்குதுனு பார் . நம்ப தொழில நம்பதா பாக்கனும்.என்றபடி சாப்பிட முனைந்தார்.

அங்கு நடந்த அனைத்தையும் கேட்டு அமைதியாக அமர்ந்திருந்த ருத்ராவின் மனதில், அவனுடைய நினைவுகளையே ஏற்கமுடையாத என்னால் அவனுடன் சேர்ந்து எவ்வாறு தொழில் தொடங்குவது என்ற எண்ணத்திலே சரியாக சாப்பிடாமல் அறைக்கு சென்றுவிட்டாள்.

தாத்தாவின் சம்மதத்தால், மூன்று தாய்மார்களும் விஷ்ணுவிற்கு இனிப்பு ஊட்டி மகிழ. அதனை ஏளனபார்வையுடன் கடந்து சென்றாள் ஹரிணி.

ருத்ரா ஆதவ் வாழ்வின் அடுத்தகட்டத்தை பார்க்க காத்திருப்போம்.

ஹாய் பிரண்ஸ் , படிச்சிட்டு அப்படியே போகாம நிறை குறைகளை சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்க….

நீ(யே)யா?…..

error: Content is protected !!