NN 13

சிவா விடமிருந்து தப்பி ஓடிவந்த கௌதம் பிரேக் அடித்து பெண்கள் முன் நிற்க.

” என்ன அண்ணா ? இப்படி மூச்சு வாங்க ஓடி வரீங்க ” என்று காயத்ரி கேட்க

” காயத்ரி விஷயம் தெரியுமா அந்த சுதாகரன் இங்க வந்தான் , வந்து …” என்று கௌதம் பேசும் பொழுதே சிவா அவன் வாயைப் பொத்தி ” ஒன்னும் இல்லை..லூசு ஏதோ உளறுறான் ” என்று சமாளிக்க

காயத்ரி விடுவதாக இல்லை ” ஒழுங்கா வாயிலிருந்து கையை எடுங்க சிவா. அவர் என்ன சொல்லவரான்னு கேக்கணும் ”

அவன் அசந்த நேரம் கௌதம் அவன் வாயைப் பொத்தி இருந்த சிவாவின் உள்ளங்கையை நக்க

“சீ…சீ ஏன்டா கையை நக்கினே ? லூசே! யக் * சடாரென்று கையை எடுத்த சிவா கையை கைக்குட்டையில் துடைக்க. அந்த நேரத்தைப் பயன்படுத்தி கௌதம்

” சிவா சுதாகரன் பொண்ணு தாரிக்கா சிவாவை லவ் பண்றாளாம். இவன் அவளுக்குச் சம்மதம் சொல்லிவிட்டான். சோ சிவா அவளைக் கல்யாணம் பண்ணிக்க போறானாம் .” என்று மூச்சுவிடாமல் கோள் மூட்ட

” டேய் ! ” என்று முகம் வெளிறி சிவா அலற

உதயாவோ வாயைப் பொத்திக்கொண்டாள் அத்திசியாய்.

காயத்ரியோ மிக அமைதியாய் இருக்க. சிவாவிற்கு ஒன்றுமே புரியாமல் சமாதானம் சொல்ல வாய் எடுக்க ” வெரி குட் எப்போ தேதி பிக்ஸ் பண்ணி இருக்கீங்க ? என்ன திட்டம் ? சொன்னீங்கன்னா நானும் அதுக்கு ஏத்த மாதிரி நடந்துப்பேன் ” என்று முடிக்க

சிவா அவளை இருக்க அணைத்துக் கொண்டான் ” ரொம்ப பயந்துட்டேன் காயு ! நீ என்னைத் தப்பா நினைச் சுடுவியோன்னு ! ஐ லவ் யு காயத்ரி ! ” என்று உணர்ச்சிவச பட

” லவ் யு டூ சிவா ! “ முகமெல்லாம் மலரச் சொன்னவள் “ ஆனால் இப்படி மொக்கையா ப்ரொபோஸ் பண்ணுவீங்கன்னு நினைக்கலை ! ” என்று அலுத்துக்கொண்டாள்.

” ஆஹா உணர்ச்சி பொங்கி சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோம்மா அப்புறமா ரொமான்டிக்கா ப்ரொபோஸ் பண்றேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா செல்லாம் ” என்று அவளைச் சமாதான படுத்த

” எண்ணமா நீ இப்படி சாச்சுப்புட்டே ? நான் எதோ அவனுக்கு நல்லா நாலு உதை கிடைக்கும்னு நெனச்சேன் இப்படி கவுத்துட்டியே காயு. போ! ” கௌதம் வெறுத்தே விட்டான்.

” அடச்சே நானும் ஒருநிமிஷம் பயந்தே போய்ட்டேன். நல்ல வேளை எல்லாம் ட்ராமா வா? ” என்று உதாயாவும் ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

” காயு ! எப்படி நீ என்னை நம்பினே ? ஸ்டில் எனக்கு புரியல டா ! ” என்று சிவா கேள்வி கேட்க

“ ஒரு நிமிஷம் எனக்கும் அதிர்ச்சிதான். ஆனால் பாருங்க அவ உங்களை லவ் பண்றதா அண்ணா சொன்ன அப்புறம் என் கவலை பறந்தோடி போச்சு.” என்றாள்.

“ அதுக்கு நீ நியாயமா அதிர்ச்சிதான் ஆகணும்”.’ ஏண்டி கவலை படல ? ‘ என்ற தொனியில் சிவா கேட்க

“ பின்ன உங்களை லவ் பண்ண என்னை விட்டா எந்த லூசு இருக்காம் ? போங்க பாஸ் உங்களுக்கு அவ்ளோ ஸீன் இல்லை ! “ அசால்ட்டாக அவள் சொல்ல , சிவா கீழுதட்டைப் பிதுக்கி அழுவது போல் செய்து

” அப்போது என் மேல் நம்பிக்கை இருந்து சொல்லலை ? உன்னை நம்பி ஆர்வ கோளாறுல ப்ரொபோஸ்லாம் பண்ணேனே! செல்லாது செல்லாது ! ” என்று சிவா வம்பிழுக்க

” அதெல்லாம் முடியாது லவ் யு சொன்னது சொன்னது தான் வெவ் வெவ் வே ! ” என்று அழகு காட்டி விட்டு அறைக்குச் சென்று விட்டாள் காயத்ரி.

” டேய் சூப்பர் டா ! அவ நெஜம்மா உன்னை நம்பறா ஆனால் உன்னை வெறுப்பேற்ற இப்படி சொல்லரா டா ! இருந்தாலும் மொக்கை ப்ரோபோசல் மச்சி ” கௌதம் அலுத்துக் கொள்ள

“தெரியும்டா அவ என்னை எவளோ நம்புறான்னு , இன்றுவரை எங்க உறவை நான் மறைத்ததற்கு விளக்கம் கேட்கலை, நானா சொல்லுறேன்னு சொன்ன ஒரு வார்த்தைக் காக பொறுமையா இருக்கா ! ” என்று சிவா முகம் மலர்ந்தான்.

” கௌதம் ! நாம அந்த சுதாகர் நம்பும் படியா நடந்துக்கணும் , அப்புறம் நேரம் பார்த்து அவனை பிடிக்கணும் ! பிளான் பண்ணி பண்ணனும் ! என்று வடிவேலு ஸ்டைலில் சொல்லி முடித்தான்

” செஞ்சுருவோம்! ” என்று கௌதமும் சேர்ந்து கொண்டான்.
“ஆனா ஒன்னு உறுத்துது டா. எப்படி அவன் இவளோ சீக்கிரம் நம்ம வீடு தேடி வந்தான் ? அதுவும் நாம ஊருக்குப்போய் வந்த உடனே ? ஒரு வேலை அவனுக்கு எதானா தெரிந்து இருக்குமோ ? “

“ எனக்கும் அதே சந்தேகம் . எங்கேந்து திடீரென்று வந்தான் அதுவும் சம்மந்தம் பேச ? நெஜமாவே நான் என்ன அவளோ அழகாடா ? பார்த்த உடனே அவ என் அழகில் மயங்க ? “
அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்க .

“ஹஹஹஹ இதான்டா இந்த நூற்றாண்டுடைய சிறந்த ஜோக் .போ போ போய் வேலையை பார் . ஆனால் யோசி மச்சான் , அவன் ஏன் இப்போது வந்தான் என்னவா இருக்கும் ? “ கௌதம் விடாமல் நினைவூட்டினான்.

“ மச்சானா ? “ சிவா புருவம் சுருக்க

“என் தங்கையை ப்ரொபோஸ் செஞ்சிருக்கே அப்போ நீ எனக்கு மச்சான் தானே ? “ கௌதம் கண்ணடித்தான் .

“கௌதம் எனக்கு ஒரு டவுட் டா . அவன் விந்திவிந்தி நடக்குறன்னு காயு சொன்னாலே இவன் சாதாரணமா நடக்குறானே” சிவா கேட்க

“தெரியல டா . ஷூல உயரம் சரி செய்து இருக்கலாம் . இல்லை அறுவை சிகிச்சைசெய்திருக்கலாம் . கண்டுபிடிப்போம். நீ நிம்மதியா தூங்கு டா . கல்யாண மாப்ளே ! “ கௌதம் சொல்ல

“போடா டேய் ! “ சிரித்துக்கொண்டே உறங்கச் சென்றான் சிவா.

மறுநாளே யார் யார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டனர்.

” காயு நீ பொறுமையா இருக்கணும் அவர்கள் என்ன உன்னை வெறுப்பேற்றினாலும் பொறுமை பொறுமை ஆனால் நான் உன்னை அப்படி விடமாட்டேன் ஒரு லெவல் தாண்டினா நான் பாத்துக்குறேன் இல்ல கௌதம் இருக்கான் மனசில் வச்சிக்கோ

உதயா நீ தாரிக்கா கிட்ட ரொம்ப பேச்சு வச்சுக்க வேண்டாம் ! நீ உன் தோழிக்கு சப்போர்ட் பண்ணுறதாவே இருக்கட்டும். ஆனால் நேர எதிர்ப்பை காட்டாதே

கௌதமும் விருப்பம் இல்லாதது போலவே நடந்துப்பான் ! அப்போ தான் அப்பனையும் பொன்னையும் ஆசை தீர வறுத்து எடுக்க முடியும். நான் அவ மேல இண்டெர்ஸ்ட் இருக்கிற மாறித்தான் காட்டிக்க போறேன் . ஆனால் எல்லாமே ஒரு லெவல் வரைதான் மீறினா வச்சு செஞ்சுருவோம் ” . என்று முடித்தான் சிவா.

“ஆமாம் நீங்க ஒரு லெவல் மீறி அவகிட்ட வழிஞ்சா வச்சுசெய்யத்தான் போறோம் . என்ன அண்ணா நான் சொல்றது ? “ காயத்ரி கௌதமை துணைக்கழைத்து சிவாவை மிரட்ட .

“வாவ் ! நல்லது மா நல்லது , இருக்கிற வேலைக்கு நிஜமா லவ் பண்ற உன்னை ஒழுங்கா கவனிக்கவே நேரம் இல்லையாம் இதுல அந்த மைதா மாவை வேற… போடி போ “ என்று சலித்துக்கொண்டான் சிவா.

“அப்போ நேரம் இருந்தா ? “ காயத்ரிமுடிக்காமல் முறைத்துக்கொண்டு நிற்க .

“அவன் அப்படி வழிகிற மாதிரி இருந்தால் நான் இவனை வச்சு செஞ்சுடறேன் நீ விடு மா “ கௌதம் வாக்களித்தான்.

“நீ ஒருத்தன் போறும்டா எனக்கு “ சிரித்துக்கொண்டே சிவா சொல்ல . பின் நண்பர்கள் இருவரும் அலுவலகம் புறப்பட்டனர்.

அன்று மாலையே தாரிக்கா சிவாவைப் பார்க்க அவன் அலுவலகத்திற்கு வந்தாள் ” ஹாய் டார்லிங் ! நீங்க நேற்று ஓகே சொல்லுவீங்கன்னு நினைக்கலை. ஐ ஏம் வெரி ஹாப்பி டார்லிங் ! ” என்று சொன்னபடியே அவனிடம் நெருங்க சிவாவோ அவசரமாக இரண்டடி பின்னாடி சென்றான்.

“என்ன ஆச்சு சிவா ? ” என்று அவள் அவனைச் சந்தேகமாய் பார்க்க.

” சாரி !இதெல்லாம் எனக்குப் பழக்கம் இல்லை ! நம்ம நாட்டு கலாச்சாரப்படி கல்யாணம் ஆகும் வரை தொட்டுப் பழகுகிறது எல்லாம் இல்லை ! டோன்ட் மிஸ்டேக் மீ ! ” என்றான் முகத்தில் புன்னகை மாறாமல் .

” வாட்! நீங்க இவளோ மாடர்ன் அப்படியும் இந்த கலாச்சாரம் அது இதுன்னு என்ன பேச்சு சிவா ? ” என்று அவள் சற்று ஏளனமாகச் சொல்ல

‘லூசு கூமுட்டை பிடிக்காத பொண்ண எப்படி தொட்டு பேச முடியும்? போடி அறிவு கெட்ட மைதா மாவு ‘ என்று மனதில் நினைத்தவன் ” சாரி ! தாரிக்கா , புருஞ்சுக்கோ டியர்’ என்று மயக்கும் ஹஸ்கி வாய்ஸில் பேச தாரிகாவால் அவனை மறுக்க முடியவில்லை , மயங்கித்தான் போனாள்.

“இப்போ எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு என்ன விஷயமா வந்தேன்னு சொன்ன நல்லா இருக்கும் “ என்று அவன் கேட்க , “உங்க கூட டேட்டிங் போலாம்னு வந்தேன் , எப்போது பிரீ ஆவீங்க ? ” என்று அவள் கேட்கவும் கௌதம் உள்ளே வரவும் சரியாக இருந்தது

“ஹலோ மிஸ்டர் மேனர்ஸ் இல்லை , இப்படியா கதவைத் தட்டாமல் வருவீங்க ? ” என்று அவள் பொரிய.

“மேடம் ! வார்த்தை வார்த்தை ! “ கௌதம் முகம் கோவத்தில் ஒரு கணம் சிவந்து அமைதியானது பின்பு கேலியான குரலில் “ உங்களுக்குத் தெரியாதோ ? நானும் இந்த நிறுவனத்தின் சம பங்கு தாரர் புரியலை ? ஈகுவல் பார்ட்னர் சோ என் ஆபீஸ்குள்ள வர நான் அனுமதி கேட்க வேண்டியது இல்லை , நீங்கதான் என் அனுமதி வாங்கணும் , இது என் கேபின் நீங்க ரொமான்ஸ் பண்ற பூங்கா இல்லை சோ வில்ல யு ப்ளீஸ் ” என்று கௌதம் கதவை நோக்கி கையை காட்ட.

சிவாவோ சிரிப்பை அடக்க முடியாமல் திணற . அவள் அவனை நோக்கித் திரும்பும்பொழுது பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவன் , ” கௌதம் என்ன இது ? தாரிக்கா யார் ? ” என்று சிவா முடிக்கும் முன்பே

” யாரு ? இல்ல யாரு ? சென்னைக்கு ராணியா ? இல்ல இந்த கம்பெனி முதலாளியா ? யாரு ? ” என்று கௌதம் எகிற

” கட்டிக்க போற பொண்ணு டா ” என்று சிவா அப்பாவியாய் சொல்ல

” அப்போ வேற எங்கயான கட்டிவை டா ! ஐயோ நம்ம ஆபீஸ் ல மாட்டுத் தொழுவம் இல்லையே ! ” என்று கௌதமும் முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொள்ள.

சிரிப்பை அடக்கமுடியாமல் எதையோ கிழ போட்டுத் தேடுவதுபோல் மேஜையின் பின் குனிந்த சிவா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க.

” திஸ் ஐஸ் டூ மச் மிஸ்டர் கௌதம் ! நான் வரேன் சிவா எனக்கு டேட்டிங் மூட் போச்சு ! ” என்று தாரிக்கா கடுப்பாகிப் போக

” சாரி மிஸ் நான் சும்மா என் நண்பர்களைக் கிண்டல் செய்வது போல ….நீங்க என் உயிர்த்தோழனுக்கு மனைவி ஆனால் எனக்கும் தோழி மாதிரி தானே அதான் அந்த உரிமையில் ரொம்ப கிண்டல்செஞ்சுட்டேன். சாரி சாரி ” என்று வருந்துவது போல் நடிக்க

எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியாமல் தாரிக்காவோ ” சரி சரி இனி இந்த கிண்டலோ விளையாட்டோ ஒரு லிமிட்ல வச்சுக்கோங்க . சரியா ? பிரெண்ட்ஸ் ? ” என்று கௌதமை நோக்கி கையை நீட்ட.

” பிரெண்ட்ஸ் ! ” என்று கௌதம் கையை கொடுக்க

” சார் மீட்டிங்க்கு நேரம் ஆச்சி “ என்று அவர்கள் காரியதரிசி உள்ளே வந்தார்.

“சரி டார்லிங் சி யு லேட்டர் ! ” என்று தாரிக்கா சென்று விட்டாள்

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட நண்பர்களோ சிரிப்பை அடக்கமுடியாமல் சிறிது தாமதமாகவே மீட்டிங்கிற்கு சென்றனர்

இரவு உணவின் பொழுது இந்த கூத்தை கேட்ட காயத்ரியும் உதயாவுமோ விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

“நல்லா இருக்கே இன்னும் நாம் யாருமே அவங்க அவங்க ஆளு கூட டேட்டிங்ன்னு எங்கயும் போகலை , இதுல இவளுக்கு ஒரே நாளில் டேட்டிங் போகணுமா , வரட்டும் வச்சுக்கறேன் ! ” என்று உதயா பொரிந்து தள்ள

” விடு உதயா உங்கண்ணன் கூட டேட்டிங் போறதுக்கு பேசாம போர்த்திண்டு படுத்து தூங்கலாம் ! மொக்க பார்ட்டின்னு தெரியாம பாவம் கூப்டு இருப்பா. ஒரு நாள் டேட்டிங் போகட்டும் அப்புறம் கல்யாணமே வேணாம்னு ஓடிட மாட்டா ! ” என்று காயத்ரி சிவாவை வம்பிழுக்க

” ஹேய் நான் என்ன மொக்க பார்ட்டியா ? எல்லாம் என் நேரம் நானா வந்து ப்ரொபோஸ் பண்ணேன் பாரு எனக்கு வேணும் ” என்று சிவா சினுங்க

” அவ சொல்றதுல என்ன தப்பு நண்பா ? நீ ப்ரொபோஸ் பண்ணவே கிட்ட தட்ட நாலு வருஷம் எடுத்துக்கிட்ட ஆளு டா டேய் “ என்று அவன் பங்கிற்கு கௌதம் மேலும் அவனை வெறுப்பேற்றினான்

” இடியட் ! எனக்கு இவமேல காதல் வரப்போ அவளுக்கு 15 இல்ல 16 வயசுதான் டா இருக்கும் லூசே ! சின்ன பொண்ணுகிட்ட போயா லவ்வ சொல்ல முடியும் ? ஐயோ பூச்சாண்டின்னு ஓடி போயிருக்க மாட்டாளா ? ” என்று சிவா தன்னை நியாய படுத்த முயலும் பொழுது

” வெயிட் வெயிட் ! என்னது 15 வயசுலிருந்தா ? என்ன சொல்றீங்க ? ” என்று காயத்ரி இடை மரித்தாள்

” ஆகா ! உனக்கு இன்னும் அந்த கதை தெரியாதுல நான் சொல்றேன் , சிவாவும் நானும் ஒருநாள் மூர்த்தி அங்கிளை பார்க்க உங்க வீட்டுக்கு வந்தோமா.

வீட்டுக்குள்ள நுழையும் பொழுதே உள்ள ஒரே டமால் டுமீல் தான் , உங்கப்பா உச்சஸ்தாயில உன்னை கொஞ்சிகிட்டு இருந்தார்.

அன்று

“பொம்பளை பொண்ணு மாதிரியா இருக்கே , ஆம்பளை பசங்களே பரவால்ல போல இருக்கு. உங்கம்மா எப்படி அடக்க ஒடுக்கமா இருப்பா தெரியுமா ? நீ என்ன ரௌடியா ? எதுக்கு அந்த பையன போட்டு அப்படி அடிச்சுருக்கே ? உங்க பிரின்ஸிபால் என்னை வர சொல்லி இருக்கார் . நான் எங்கயும் வரமாட்டேன் ! டி சி கொடுத்துக்கோங்கன்னு சொல்ல போறேன் . அந்த குழந்தை பயத்துல ஸ்கூலுக்கே வரமாட்டேன்னு சொல்லுறானாம் ! போய் மரியாதையா மன்னிப்பு கேளு ! இனிமே அவன் பக்கமே தலைவைக்க மாட்டேன்னு சொல்லிட்டு வா ! ” என்று மூர்த்தி கடு கடுக்க

காயத்ரியோ ” குழைந்தாயா ? யாரு அவனா ? அவன் என்ன பண்ணான் தெரியுமா ? தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்டே ! ”

” அப்படி என்ன பண்ணினான் சொல்லு . அப்படி என்ன பெரிய குத்தம் பண்ணினான் ” என்று அவர் மேலும் கடுபேற

” அவன் நான் போம்போது வரும்போது எல்லாம் தயிர் சாதம்னு கிண்டல் பன்றான் பா ! நேத்து விளையாடும் பொழுது கிழ விழுந்து அடிபட்டது , அவன் ஓடி வந்து பாத்துட்டு உரக்க கத்தினான் ” என் உனக்கு அடிபட்டா ரத்தம் வருமா ? நான் நீ எப்போவும் தயிர் சாதம் சாப்பிடறதால தயிரா கொட்டும்ன்னு நெனச்சேன் ! சார் பாருங்க தயிர்சாதம் கிழ விழுந்துடுத்துன்னு” கிரௌண்ட் பூரா அதிரும் படி கத்தினான் ! அதான் கோவத்துல நல்ல நாலு போடு போட்டேன் ! ” என்று காயத்ரி காற்றில் அறைவது போல் கைவீசி கூற

” கோவம்னா வாய்ல பேசு அதெல்ல கை ஓக்குற பழக்கம் ? ” என்று மூர்த்தியும் விடாமல் கோவமாய் எகிற

” கையாலதான் அடிச்சுருப்பேன் ! அவன் உயரத்துக்கு கன்னம் எட்டாது அதான் கையில் இருந்து ஷட்டில் பேட்டால் லைட்டா தட்டினேன் ! ” என்று அவள் அப்பாவியாய் கூற

” லாயிட்டா தட்டினியா ? ஹே பிசாசு கன்னி போயிருக்குனு அவன் அப்பா என்னை பொரிச்சு தள்ளிட்டார் ! மரியாதையா சாரி சொல்லு இல்லை பிச்சுடுவேன் பிச்சு ” என்று அவன் எகிற .

“உனக்கு சமைக்க தெரியாம வெறும் தயிர் சாதம் தானே தாரே அதுனாலதான் இதெல்லாம். இதுக்கு மூல காரணமே நீதான் “ இப்பொழுது அவள் அவரரையே சாட.

“உன்ன..”

” ஐயோ போறும் போறும் , இப்போ என்ன சொல்ல வரீங்க ? ” காயத்ரி மேலும் தன் வீர சாகசங்கள் வெளிப்படாமல் இருக்க இடைமறித்தாள்

“வேறென்ன ? இதெல்லாம் கேட்டு அங்கேயே நின்னுட்டோம். எனக்கோ உன் பராக்கிரமத்தை பார்த்து பயமா வந்தது “என்ன இந்த பொண்ணு நெஜமாவே பிசாசோனு” இவன் கிட்ட சொன்னேன் , இந்த சிவா லூசோ ” செல்ல குட்டி பிசாசு டா ! ” என்று ஈ னு இளிச்சான்.

நாங்க உங்கவீட்டுக்குள்ள நுழைஞ்ச நேரம் , பனைமரம் மாதிரி ரெண்டு ஆம்பளைங்க நிக்குறோம் அதை கொஞ்சம் கூட மதிக்கமா நீ பாட்டுக்கு கொஞ்சம் தள்ளுங்கன்னு எங்களை ஏறெடுத்து பார்க்காம கோவமா வெளில போயிட்டே.

அன்னிக்கு பிடிச்ச பைத்தியம் தான் சிவாக்கு ! உனக்கு டெட்டி பொம்மை அனுப்பினது , நீ பிளஸ் 2 வுல ஸ்கூல்ல முதல் மாணவியா வந்தப்போ ஸ்கூட்டி வாங்கி கொடுத்தது , நீ சி ஏ படிக்க மாட்டேன்னு விஸ்காம் படிக்கணும்னு சண்டை போட்டப்போ உங்கப்பா கிட்ட சிபாரிசு பண்ணி ஒத்துக்க வச்சது , உங்கப்பாக்கு அப்புறம் வாங்கில பணம் போட்டு உனக்கு மாசம் மாசம் செலவுக்கு வரும்படியா பண்ணி வச்சது எல்லாம் சார் தான் ! எல்லாம் இந்த குட்டி பிசாசு காக ” என்று மூச்சு வாங்க கௌதம் முடித்தான்

சிவாவோ ஆர்வமாய் காயத்ரியை பார்த்து கொண்டு இருந்தான் ‘ என்ன சொல்ல போறாளோ ? அத்தான்னு கட்டி பிடிப்பாளோ ? ‘என்று ஏக்கமாய் பார்க்க

” அடப்பாவி ! படிக்கிற பெண்ணையா சைட் அடிச்சே ? நான் பிசாசா ? ” என்று அவளோ சிவாவிடம் சண்டைக்கு வந்தாள்

” பிசாசு இல்லை மா , குட்டி பிசாசு , இன்னும் சொல்ல போன என் செல்ல குட்டி பிசாசு ! ” என்று சிவா அவளை திருத்த

” ஐயோ ! தாங்கல ! உன்னை ! ” ன்னு அவ அடிப்பது போல் அவனை நெருங்க

தலைக்கு மேலே வெள்ளம் போனா ஜான் என்ன முழம் என்ன என்பதுபோல் அவள் அடிக்க வசதியாய் குனிந்து கொண்டான் சிவா , அவளோ அவனை அடிக்காமல் இருக்க அணைத்து கொண்டாள்.

” லவ் யு சிவா ! சோ சுவீட் ! நான் இதெல்லாம் எதிர்பார்க்கவே இல்ல ! நான் ரொம்ப லக்கி , உங்களுக்கு என்னை இவ்ளோ பிடிக்குமா ? ” என்று அவன் காதில் கேட்க

” இன்னும் இன்னும் ரொம்ப பிடிக்கும் , நீ சின்ன பொண்ணுன்றது நால பொறுமையா இருக்க வேண்டி இருந்தது ! இனி பொறுக்க வேண்டாம் பாரு அதான் எதோ கரணம் காட்டி இங்க கூட்டிண்டு வந்தேன் ! ” என்றான் பெருமையாய்

” அடேய் ! அதெல்லாம் பொய் மா . நீ காலேஜ் முடிக்குற வரை இவன் உன்கிட்ட பேச கூட தயாரா இல்லை. நான் தான் உதயாவோட பர்த்டே பார்ட்டிக்கு உன்ன கூப்பிட வச்சு அவனை உன் கூட பேச வச்சேன் .

இன்னும் சொல்ல போன கூல் ட்ரிங்க்ஸ்ல *** கலந்து உங்க ரெண்டு பேரையும் அந்த ஹாலிடே ஹொவ்ஸ்ல விட்டேன். உதயாவும் எனக்கு துணையா இருந்தா. என்னமோ இவனே எல்லாம் பண்ண மாதிரி பெருமை படறான்.

ஸ்கூட்டி வாங்கித்தான்னு இவன் சொன்னான் ஆனா அதை செலக்ட் பண்ணி ரெண்டே நாளில் உனக்கு சேரும் படியா செஞ்சது நான் ! ” என்று கௌதம் தன் பராக்கிரமத்தை பறை சாற்ற

” அட அல்பயே ! ” என்று சிவா அவனை பார்த்து சிரித்தான் ” சரி டா எல்லாம் நீதான் செஞ்சே நான் வெறும் லவ் மட்டும்தான் செஞ்சேன். அம்மா காயத்ரி கௌதம் சார் இல்லாட்டி ஒன்னுமே இல்லை. நாம அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவோம் வா ” என்று அவளை இழுத்து கொண்டு கௌதம் காலில் விழா போக

” ஐயோ என்னடா ! மரியாதையை மனசுல இருந்த போதும் டா ! ” என்று அவன் பெருந்தன்மையாய் கூற

” அடி ! படவா ! நீ என்னோட சின்னவன் மனசுல இருக்கட்டும் ! ” என்று சிவா பொய்யாய் கோபம் கொள்ள
” டேய் ! நீ கொஞ்சம் முன்னாடி பொறந்துட்டே அதுக்கு இந்த அலப்பறை தேவையா ? ” என்று கௌதமும் வீம்பு செய்ய

அந்த வீடு சிரிப்பலையில் மூழ்கியது . சந்தோஷமாய் நாட்கள் உருண்டோட , பெண்களுக்கு கல்லூரி விடுமுறை முடிந்து வகுப்புகள் துவங்கி ஒரு மதம் முடிந்து விட்டது .

உதாயா திருமணத்திற்கு இரண்டு மாதமே இருக்கும் நிலையில் ஒரு நாள் , அவர்கள் வீட்டிற்கு மறுபடி சுதாகரன் வந்தான் ” மாப்பிள்ளை! கிணத்துல கல்லு போட்ட மாதிரியே இருக்கீங்களே ! சீகரியம் நிச்சயம் செஞ்சு கல்யாண தேதியை குறிச்சுட்டா நல்லா இருக்கும். நான் என் பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறமா அமெரிக்காக்கு திரும்ப போயிடலாம்னு நினைக்குறேன்! ” என்று அவன் பீடிகை போட

” சாரி கொஞ்சம் வேலைல பிஸியா இருந்துட்டோம் , உதயா திருமணமும் நெருங்கறது அதான் பத்திரிக்கை அடிக்குறது மண்டபம் பிக்ஸ் பன்னுறதுன்னு நேரம் ஓடிட்டே இருக்கு ! நீங்க எப்போ சொல்லுறீங்களோ அப்போவே நிச்சயம் வச்சுக்கலாம். ஆனா என் கல்யாணம் உதயா கல்யாணத்துக்கு அப்புறம் தான். சரியா மா..மா.. ?” என்று மா மா விற்கு அழுத்தம் குடுத்து சிவா சொல்ல சுதாகரனோ அனந்தமானார்.

“சரி மாப்பிள்ளை. அந்த காயத்ரி பொண்ணு இன்னும் இங்கயே இருக்க போல இருக்கே.” என்று அவர் இழுக்க

” உதயா கல்யாணம் முடியாரவரை தான் காயத்ரி இந்த வீட்டு கெஸ்ட் அப்புறமா இல்லை ” என்று உரக்க சொன்னவன் ‘அதுக்கு அப்புறம் அவ என் மனைவி இந்த வீதி எஜமானி ! ‘ என்று மனதுக்குள் வாக்கியத்தை முடித்தான் .

” சந்தோஷம் மாப்பிள்ளை! வர பதினாறாம் தேதி நாள் நல்லா இருக்கு அன்னிக்கே நிச்சயம் வச்சுக்கலாமா? அதை கேட்டுட்டு போகத்தான் வந்தேன். ” என்று அவர் சொல்ல

” தாராளமா நான் அதற்கான ஏற்பாட்டை பண்ணிடுறேன் . நிச்சயம் மாப்பிளை வீட்டார் செய்வது தானே முறை. ” என்று அவன் உற்சாகம் காட்ட

மிகவும் மனம் குளிர்ந்து சுதாகரன் அங்கிருந்து சென்றார்.

திரையரங்கில் பேய் படம் ஒன்றில் கௌதமும் உத்யாவும் காயத்ரியும் மூழ்கி இருக்க. கௌதமின் அலைபேசி ஓயாமல் அலறியது. கடுப்பாய் அரங்கை விட்டு வெளியே வந்தவன்

” எஸ் கௌதம் ஹியர் ! ” என்று சிடு சிடுக்க ” டேய் ! ஒழுங்கு மரியாதையா உன் பங்குககளை என் பொண்ணு தாரிக்கா பேருக்கு மாற்றி கொடுத்திட்டு ஊற விட்டு ஓடிடு. வேணும்னா பெரும் தொகைய உனக்கு தரேன். இல்லனா உன் தங்கை கல்யாணம் அவ்ளோதான் ! உங்க ரெண்டு பேரையும் தீர்த்து கட்டிடுவேன் ஜாக்கிரதை ! இதை பத்தி மாப்பிள்ளை கிட்ட வாய திறந்தே இப்போ உள்ள சினிமா பாக்குற உன் தங்கை நாளை காலேஜ் லிருந்து வீடு வந்து சேர மாட்டா சொல்லிட்டேன்! ” என்று மறுமுனையில் எச்சரிக்கை செய்து வைத்தான் சுதாகரன்.

” பிளாடி ஹெல் ! இவன் யாரு என்னை மிரட்ட ! மவனே இருடி உனக்கு இருக்கு ! ” என்று மனதில் பொறுமியவன் ஒன்றும் அறியாதது போல் மீண்டும் உள்ளே சென்று திரைப்படத்தில் மூழ்கினான் .