Oh Papa Lali 13

Oh Papa Lali 13

அத்தியாயம் 13

ஜீரோங் பெர்ட் பார்க் 5000 வகை பறவைகளை தன்னகத்தே கொண்ட ஒரு சரணாலயம். அழகான வண்ணமயமான பறவைகளைப் பார்ப்பதோடு, அவை எழுப்பும் கீச் கீச் ஒலியைக் கேட்பதோடு இயற்கையை ரசிக்கவும் செய்யலாம்.

மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை வளாகத்தில் தலையை இரு கைகளாலும் தாங்கியப்படி ஓய்ந்துப் போய் அமர்ந்திருந்தான் சூர்யவர்மன். அறையின் உள்ளே நெற்றிக் காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ப்ளட் ப்ரஷர் அதிகமாகி இருக்க வான்மதியை ஆப்சர்வேஷனில் வைத்திருந்தார்கள்.

அவன் அருகே ஆள் அமரும் அரவம் கேட்க நிமிர்ந்துப் பார்த்தான் சூர்யா. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தார் சோமன் பாபு.

“என்னாச்சு சூர்யா?”

சொன்னான், அன்று நடந்தது எல்லாவற்றையும் சொன்னான்.

பெருமூச்சொன்றை விட்டவர்,

“நான் அப்பவே சொன்னேன்! என் மக கூட வாழறது ஈசியில்லன்னு. ஷீ காண்ட் பீ அ பெர்பெக்ட் வைப். ஜஸ்ட் லைக் ஹேர் மம்” என சொன்னார்.

“என்ன சொல்லறீங்க?”

“மை வைப், வானுவோட அம்மா வெண்மதிக்கு ஓசிடி இருந்துச்சு! ஒப்செசிவ் கம்பல்சிவ் டிசோர்டர். வானு மாதிரியே ரொம்ப அழகா இருப்பா! நான் லவ் பண்ணி தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன் அவள. ஆரம்பத்துல அவளோட பிஹேவியர் எனக்கு பெருசா தெரியல சூர்யா! காதல் கண்ண மறைச்சிருச்சு! போக போக”

பார்வை ஓரிடத்தில் நிலை குத்தி நிற்க, பழைய வாழ்க்கையை அசைப்போடுபவர் போல அமைதியாக இருந்தார். பின் தோளைக் குலுக்கிக் கொண்டு, மீண்டும் பேச ஆரம்பித்தார் சோமன்.

“அத்தனை வேலைக்காரங்க இருப்பாங்க! ஆனா அவளுக்குத் திருப்தி இருக்காது! மோப் போடுவா, போடுவா போட்டுக்கிட்டே இருப்பா! வீட்டுல அவ அடுக்கி வச்ச ஒரு பொருள் இடம் மாறி இருக்கக் கூடாது! அதை அவளால ஏத்துக்க முடியாது. திரும்ப அத பழைய படியே அடுக்கி வச்சதும் தான் நிம்மதி வரும். அடிக்கடி கைய சோப் போட்டுக் கழுவிட்டே இருப்பா. ஏண்டி இப்படின்னா, ஜேர்ம்ஸ் இருக்கும், அதான் கழுவிட்டே இருக்கனும்னு சொல்லுவா! அவ வரைக்கும் இதெல்லாம் இருந்துட்டா பரவாயில்ல சூர்யா. ஆனா என்னையும் அதுக்குள்ள இழுக்கப் பார்த்தா! நான் போடற சட்டையில இருந்து, என் தலைமுடி வரைக்கும் அவளோட கண்ட்ரோல்ல இருக்கனும்னு ஒரு வெறியே அவகிட்ட இருந்துச்சு. ஈசியா டிப்ரெஸ்ட் ஆகிருவா. சட்டுன்னு அழுகை, கோபம்னு என்னை பாடாய் படுத்தி வச்சா. வெக்கத்த விட்டு சொல்லறேன் சூர்யா! இண்டிமேட் டைம்ல கூட திடிர்னு என்னைத் தள்ளி விட்டுட்டு வாசக் கதவு பூட்டி இருக்கானு பார்க்கப் போயிடுவா! இதெல்லாம் ஏன் உன் கிட்ட சொல்லறேன்னா, வான்மதி இன்ஹெரிட்டட் திஸ் டிசோர்டர் ப்ரோம் ஹேர் மதர். ஜெனட்டிக்கல்லி இது வானுக்கும் வந்துருச்சு சூர்யா.”

அப்பொழுது எல்லாம் புரிய ஆரம்பித்தது சூர்யாவுக்கு. ஆரம்பத்தில் இருந்து அவள் பேசும் போது புரியாதது எல்லாம் இப்பொழுது விளங்கியது. சம்பல் பட்ட சட்டையைக் காண சகிக்காது புது சட்டை வாங்கிக் கொடுத்தது, சட்டையில் பட்டன் இல்லையென மேசேஜ் செய்தது, ஷூ மேட்சிங்காக இல்லை என சொன்னது, நேரில் சந்தித்தப் போது கரண்டியை அடுக்கி வைத்தது, அக்கா வீட்டில் நடந்துக் கொண்ட விதம் என ஒவ்வொன்றும் நினைவடுக்கில் முட்டி மோதியது.

“அதான் அன்னிக்கே எல்லாம் சொன்னாளான்னு கேட்டேன்! என்னையும் எதையும் சொல்ல கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிகிட்டா! என்னை மீறி சொல்ல வந்தப்போ கூட கண்ணாலயே கெஞ்சி என்னை நிறுத்திட்டா. நான் அவள தனியா விட்டுட்டேன்னு சொல்லிருப்பாளே?”

ஆமென இவன் தலையாட்டினான்.

“அவளேதான் பிரிஞ்சுப் போனா சூர்யா! நான் தனியா இருக்கேன்பா! என்னை யாரும் பேபிசிட் பண்ண தேவையில்ல. இந்த டிசோர்டரா நானான்னு பார்த்துடறேன்னு பிடிவாதம் பிடிச்சு வீட்ட விட்டு வெளிய போனா! என்னால முடிஞ்ச அளவு வேலைக்காரங்கள வச்சி அவள பார்த்துக்கிட்டேன். வானுக்கு அவ அம்மா மாதிரி ஆகிட கூடாதுன்னு பயம் இருக்கு. அவ அம்மா ஒரு கட்டத்துல தன்னோட பிரச்சனையைப் புரிஞ்சுகிட்டு என் கிட்ட டிவோர்ஸ் கேட்டா! எவ்வளவோ மறுத்தேன். ஆனா அவ கண்டிஷன காட்டி டிவோர்ஸ் வாங்கிட்டா! நான் தான் நர்சிங் ஹோம்ல சேர்த்து விட்டேன். ரொம்ப டிப்ரெஸ்ட் ஆகி ரெண்டு வருஷத்துக்கு முன்ன தற்கொலை செஞ்சுகிட்டா! அதுல இருந்து வானுக்கு ரொம்ப பயம். ஒழுங்கா மெடிசன் எடுத்துப்பா, ட்ரீட்மெண்ட் போறா, எக்சர்சைஸ் செய்யறா! ஆனாலும் இது ஒரு வகையான மனநோய் சூர்யா! முழுசா குணமாகாது. ஷீ காண்ட் ஹேல்ப் இட்.”

“புரியுது”

“சூர்யா! ஒன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும் ஷீ லவ் யூ சோ மச்! அது ஏன் எதனாலன்னு எனக்குத் தெரியல. பட் ரொம்ப டீப்பா உன்னை நேசிக்கிறான்னு மட்டும் தெரியும். உன் கிட்ட இதெல்லாம் அவ மறைச்சதே எங்க நீ அவள வேணாம்னு சொல்லிடுவியோன்னு பயத்தினால தான் இருக்கு. ஐ ஹோப் யூ வோண்ட் லெட் ஹெர் டவுன். என் மகள விட்டுறாதே சூர்யா!” கடைசி வார்த்தை சொல்லும் போது அவருக்குக் குரல் கம்மி விட்டது.

அவர் கைப்பிடித்து தட்டிக் கொடுத்தான் சூர்யா.

“எனக்கு உங்க மகதான் மனைவி அங்கிள்! இன்னிக்கும், என்னிக்கும்”

அவன் பதிலில் அவர் முகம் மெல்ல மலர்ந்தது.

நர்ஸ் வந்து வான்மதி விழித்து விட்டதாக சொல்ல, முதலில் சோமன் போய் பார்த்து விட்டு வந்தார். அதன் பிறகே இவன் உள்ளே போனான்.

பாவமாக இவன் முகத்தையே ஏறிட்டுப் பார்த்திருந்தாள் வான்மதி.

அருகில் நெருங்கி அவள் கரம் பற்றிக் கொண்டான் சூர்யா.

“வர்மன்!”

“என்னடாம்மா”

“நான் பைத்தியம் இல்ல வர்மன்”

“தெரியும்மா தெரியும்! உன்னை அந்த மாதிரி சொன்ன நான் தான் பைத்தியக்காரன்” என கதறியவன் அவள் முகம் முழுக்க முத்தமிட்டான்.

“என்னை மன்னிச்சிடும்மா! மன்னிச்சிடு”

அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்,

“என்னோட டிசோர்டர மறைச்சு உங்கள கல்யாணம் செஞ்சதுக்கு நீங்கதான் என்னை மன்னிக்கனும் வர்மன். ப்ளிஸ், என்னை மன்னிச்சிருங்க” என அவளும் அழுதாள்.

மெல்ல தேம்பியவாறே,

“நான் லோ ப்ரஷர்ல கீழ விழுந்து அடிப்பட்டுச்சுன்னு சொன்னேனே, அது பொய் வர்மன். அது என்னோட தற்கொலை முயற்சி! கை நரம்பை வெட்டிக்கிட்டு இதே ஹாஸ்பிட்டல்ல தான் வந்துப் படுத்திருந்தேன்.” என சொன்னாள்.

அவளை இன்னும் இறுக அணைத்துக் கொண்டான் வர்மன்.

“என்னோட பிஹேவியர் பார்த்து எனக்கு ஸ்கூல்லயும் ப்ரேண்ட்ஸ் இல்ல! வேலைக்குப் போன இடத்துலயும் என்னால தாக்குப் பிடிக்க முடியலை. அப்பா இன்னொருத்தி கூட இருக்காருன்னு அவர் மேல உள்ள கோபத்துல அவரையும் கிட்ட சேர்க்கல. மொத்ததுல தனிமை, தனிமை, தனிமைதான். இதுல இருந்து வெளிய வரனும்னு போராடினேன். மூளை சொல்லும் எல்லாத்தையும் வரிசையா அடுக்கி வைன்னு! நான் அது சொல்லறத கேட்க கூடாதுன்னு போராடுவேன் வர்மன். ஆனா முடியாது. அத செஞ்சாதான் எனக்குள்ள நிம்மதி வர மாதிரி இருக்கும். இந்த மாதிரி இருக்கனும்னு நானா கேட்கல வர்மன். அப்படி படைச்சிட்டான் ஆண்டவன். எனக்கு மட்டும் ஆசையா இப்படி இருக்க!”

“எனக்கு புரியுதுடா குட்டி! இதுல உன் தப்பு எதுவும் இல்லடாம்மா”

“அம்மா இறந்த டைம் தான் நான் ரொம்ப உடைஞ்டசிப் போயிட்டேன். நானும் இப்படி சூசைட் பண்ணிப்பேனோன்னு பயம் வந்துடுச்சு. ஒரு கட்டத்துல யாரும் இல்லாம இருந்து மட்டும் என்ன இருக்குன்னும் தோணிருச்சு. அதான் அந்த சூசைட் அட்டெம்ப்ட். லேடிஸ் கேன்சர் சர்வைவர் பத்தி ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கனீங்களே ஞாபகம் இருக்கா வர்மன்?”

“ஆமா போன வருஷம் டெலிகாஸ்ட் ஆச்சு”

“யெஸ்! அந்த டைம்ல ஹாஸ்பிட்டல்ல இருந்த நான் நிகழ்ச்சியப் பார்த்தேன். முதல்ல ஏனோ தானோன்னு பார்த்த நான், உங்களோட படைப்புல அப்படியே ஆழ்ந்து போயிட்டேன். நீங்க சொன்னீங்க ‘வாழ பிடிக்காம சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சிலர் உயிர போக்கிக்க நினைக்கறாங்க! ஆனா இந்த கேன்சர் சர்வைவர்ஸ் கடவுள் குடுத்த வாழ்க்கைய எமன் வந்து பறிச்சுக்க நினைச்சாலும், நான் இன்னும் வாழ்வேன், வாழ்க்கைய துளி துளியா ரசிச்சு வாழ்வேன்னு போராடி சாதிச்சு நிக்கிறாங்க. இந்த பெண்மணிகளுக்காக இதோ,

“இடைவரும் பலவிதத் தடைகளை

தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்

இலக்கியம் பெண்மைக்கு

இலக்கணம் நீயேன யாரும் போற்ற வேண்டும்” என அவள் படிக்க, இவன் தொடர்ந்து,

“மனதில் உறுதி வேண்டும்

வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

உணர்ச்சி என்பது வேண்டும்

ஒளிப்படைத்த பார்வை வேண்டும்

ஞானதீபம் ஏற்ற வேண்டும்” என பாடி முடித்தான்.

“ஆமா, ஆமா வர்மன். இப்படியே தான் பாடனீங்க! நீங்க பாடனதயும் பேசனதயும் கேட்டதுல எனக்குள்ள அப்படி ஒரு உற்சாகம். எத்தனை பேரு தனக்கு இன்னும் ஒரு நாள் எக்ஸ்ட்ராவா வாழறதுக்கு கடவுள் குடுக்கா மாட்டாரான்னு ஏங்கறாங்க! அப்படி இருக்க எதிர்த்துப் போராடாம எதுக்கு செத்துப் போகனும்னு தோணுச்சு. அதோட இன்னொரு எண்ணம் வேற”

“என்னடாம்மா?”

“டீவில நீங்க பேசறத கேட்கறப்பவே எனக்கு இப்படி ஃபீல் ஆகுதே, நீங்க என் கூடவே வாழ்நாள் பூரா இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு ஆசை! ஐ மீன் பேராசை. அதுக்கு அப்புறம் உங்கள தேட ஆரம்பிச்சேன். உங்க நிகழ்ச்சி எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணி வாங்கனேன். உங்கள பின் தொடர்ந்தேன். நேருல பேச தயக்கம், பயம். அதான் பேஸ்புக்ல வந்தேன். நீங்க ரொம்ப தயங்கனீங்க என் கிட்டப் பழக, அதான் நேர்ல பார்க்க வந்தேன். அவ்ளோ நெர்வசா இருந்தேன், நீங்க பேசியே சிரிக்க வச்சிட்டீங்க. அப்பவே அங்கயே உங்கள விட்டுட கூடாதுன்னு தோணுச்சு. அதான் சட்டுன்னு ப்ரோபோஸ் பண்ணிட்டேன் வர்மன். நீங்க அடிக்கடி என்னை ஏஞ்சல்னு கூப்புடுவீங்க! ஆனா நெஜமாலுமே நீங்கதான் என்னோட ஏஞ்சல். வர்மன் மை ஏஞ்சல்”

“எனக்கு புரியாதது எல்லாம் இப்போத்தான் புரியுதுடா!”

“வர்மன்!”

“சொல்லும்மா”

“எனக்கு ஓசிடி இருக்குன்னு என்னை வெறுத்துட மாட்டீங்களே?”

“கண்டிப்பா இல்லம்மா! நானும் சாதாரண மனுசன் தான். சம் டைம்ஸ் இரிடேட் ஆகும், கோபம் வரும். ஆனா என் ஸ்கைமூன நான் சத்தியமா வெறுத்துட மாட்டேன். பேசனது எல்லாம் போதும்! இப்போ தூங்கும்மா”

“தூக்கம் வரல வர்மன்”

“பாடவா”

“என் பாட்டு பாடுங்க”

“சரி பாடறேன்! நான் அத்தனைப் பாட்டு பாடி இருக்க, இது மட்டும் ஏன் ரொம்ப பிடிக்குது உனக்கு?”

“இந்த பாட்ட நீங்க ரொம்பவே அனுபவிச்சுப் பாடியிருப்பீங்க அந்த நிகழ்ச்சியில. தொடைகளில் தாங்கியேன்னு நீங்க பாடறப்போ உங்க தொடையில ஒரு குழந்தையா, எல்லா கவலையும் மறந்து படுத்துக்க மாட்டோமான்னு தோணும் வர்மன். யுவர் வொய்ஸ் மெஸ்மரைஸ்ட் மீ! உங்க கூட வாழ்ந்த இந்த சில மாசத்துல யூ மெஸ்மரைஸ் மீ! உங்க குரலுல மயங்கி உங்கள சுத்தி வந்தவ, இப்போ உங்க மேல மயங்கிப் போய் கிடக்கறேன் வர்மன்”

“மயக்க மருந்தே

மயங்கிப் போகும்

பேரழகி உன்னைக் கண்டால்!!!

அடியேன் நிலைமை

எம்மாத்திரம்” னு கவிதை படிக்கற நிலைமயில என்னை வச்சிட்டு நான் உன்னை மயக்கிட்டேன்னு பீலா விடறியா!” என கேட்டவன், காயம் பட்ட அவள் நெற்றியை வருடியவறே உதட்டில் மென்மையாய் ஒரு முத்தம் வைத்தான். மருந்தின் வீரியத்தில் அவள் கண்கள் சொறுக, அவள் கேட்டப் பாடலை இன்னும் அனுபவித்துப் பாடினான் சூர்யவர்மன்.

பாடுவான்….

error: Content is protected !!