OVOV-11

OVOV-11

ஊரு விட்டு ஊரு வந்து –11

 

ஏர்போர்ட் உள்ளே “கோல்டன் ட்ராவல்/golden travel ” கவுண்டர் லைன்னில் நின்ற ப்ரீத்தி அவள், முறை வந்ததும், “ஹாய் குட் ஈவ்னிங்…மை நேம் இஸ் ப்ரீத்தி.ஐ ஹாவ் ரிசர்வேஷன் இன் spicejet நம்பர் 767.ஐம் ஹியர் டு கலெக்ட் மை டிக்கெட்ஸ்.“என்றாள்.

“வெயிட் எ மினிட் மேடம்…லெட் மீ செக்….”என்ற ட்ராவல் ஊழிய பெண் கம்ப்யூட்டர் செக் செய்து விட்டு,“சோ சாரி மேடம்.தொழில் நுட்ப கோளாறு காரணமாய் இந்த விமானம் நிறுத்த பட்டு உள்ளது மேடம்.உங்களுக்கு மாற்று ஏற்பாடாக ஏர் இந்தியா AI -453 விமானத்தில் இடம் பதிவு செய்ய பட்டு உள்ளது.இன்னும்1 மணி நேரத்தில் விமானம் கிளம்பும்.நீங்க செக் இன் செய்துடுங்க. தாமதத்திற்கு வருந்துகிறோம் மேடம்.கனெக்ட்டிங் விமானம் டெல்லியில் இருந்து அமிர்ஸ்டார்ருக்கு காலை ஐந்து மணிக்கு  கிளம்பும்.”என்றாள்அந்த ட்ராவல் ஏஜென்ட் .

“அம்ரிஸ்டர் டு பதிண்டா கனெக்ட்டிங் பிளைட் சீட் இருக்கா மேடம்?” என்றாள் ப்ரீத்தி .

“லெட் மீ செக் மேடம்…நேரிடையான பதிண்டா விமானத்தில் இடம் கிடைக்கவில்லை மேடம் .ரொம்ப சாரி.உங்களுக்கு அம்ரிஸ்டரில் இருந்து பதிண்டா செல்ல ரயில் டிக்கெட் எடுத்து தரவா?” என்றார் அந்த ஊழியர்.

“யெஸ் ப்ளீஸ்.“என்று தன் சம்மதத்தை ப்ரீத்தி தெரிவிக்க,

“மேடம் ட்ரெயின் நம்பர் Jammu– tawi-bathinda express, 2.30க்கு அம்ரிஸ்டர் ஜங்ஷன்னில் இருந்து நாளை கிளம்பும். இரவு 8மணிக்கு பதிண்டா சென்று அடையும்.ட்ராவல் டைம் 6 மணி நேரம்.இதோமேடம் உங்கள் ஏர் டிக்கெட்,ட்ரெயின் டிக்கெட்.சிரமத்திற்கு மன்னிக்கவும் மேடம்.”என்றார் அவர்.

கடைசி நிமிட மாற்றம் என்பதால் பயணிகள் டென்ஷன் ஆகி அவரிடம் கத்தி விட்டே சென்றனர் .பாவம் பதில் சொல்லி சொல்லி ,மன்னிப்பு கேட்டு அந்த பெண் நொந்து போய் இருந்தார் .

“நோ ப்ரோப்லேம்.இட் ஹப்பென்ஸ்”என்றவள் போர்டிங் பாஸ்,டிக்கெட் எடுத்து கொண்டு,கிளம்பியவள் பின்னால் கேட்ட சத்தத்தில் திரும்பினாள்.அங்கேஅந்தட்ராவல்ஸ் ஊழியருடன் சண்டையில் இருந்தான் ஒருவன்.

 

ஹோட்டலில் சர்வேர் ஆர்டர் எடுக்க, உணவு பரிமாற ,சினிமா அரங்கில் பாப்கார்ன் கொடுக்க ,துணிக்கடையில்  துணி கொடுக்க ,பில் போட ,பெட்ரோல் பங்கில் என எந்த இடத்தில்  சிறிது நேரம் தாமதம் ஆனால் கூட பொங்கும் சில சிங்கங்களின் பிரதிநிதி போல் இருக்கிறது அவன் .

“என் கொள்ளு தாத்தா யாரு தெரியுமா ?”

“என் 10வது கட்ட மாமா யாரு தெரியுமா “‘

“கூப்பிடு உங்க மேனேஜர்ரை ”

“என் பேக் கிரௌண்ட்  தெரியுமா?”

என்று ஒரு மணி நேரத்திற்க்கு பேசும் இவர்களை கண்டால் நம் காதில்லேயே ரத்தம் வருகிறது என்றால்,இவர்களின் ஈகோவிற்கு பலியாகும் ஊழியர்களின் நிலைமை,அந்தோ பரிதாபம்.இவங்க செய்யும் ரவுஸில் நமக்கே டென்ஷன் ஏறிடும்.கடைசியில் பார்த்தா “கண்ணம்மாபேட்டை கிரௌண்ட்”கூட இவங்க பின்னால் இருக்காது. அது மாதிரி தான் அவன் அங்கே கத்தி கொண்டு இருந்தான் .

பொறுத்து பார்த்த ப்ரீத்தி,குரங்கு டான்ஸ் ஆடி கொண்டு இருந்த அவன் அருகே சென்று,அவன் தோளை தொட‘வால்,வால்’என்று கத்தி கொண்டு இருந்த அவன் திரும்பினான்.தன்னைஅழைத்தது ஒரு அழகான பெண் என்பதை கண்டு, லிட்டர் கணக்கில் ஜொல் மழை பொழிய ஆரம்பித்தான். .

“ஹாய் பாஸ்…நீங்க நாசாவில் வேலை செய்யறீங்களா?”என்றாள் ப்ரீத்தி .

“நோ பார்பி.”என்றான் அவன் .

“உங்க வீட்டில் யாராவது சீரியஸ் சா இருக்காங்களா ?இல்லை யார் உயிரையாவது காப்பாத்த போறீங்களா?”

“நோ”

“ஏதாவது ராணுவத்தில் secret மிஷன் செய்ய போறீங்களா?”

“நோ”

“உங்க மனைவி பிரசவ நேரமா?”

“நோ.. நோ.ஐயம் எலிஜிபிள் பேச்சிலர் யு நோ.யு நோ ஐ எர்ன் இன் மில்லியன்ஸ்.என் ரேஞ்சுக்கு நீ ஒகே.ஐ லைக் யு .ஷால் வி marry பியூட்டி?”என்றான் அவன் .

“ப்ச்ஹ் எனக்கும் ஆசை தான் பாஸ்.ஆனா பாருங்க அல்பாயுசில் புட்டுக்க போகும் உங்களை எதுக்கு சார் நான் மேரேஜ் செய்யணும்?” என்றாள் ப்ரீத்தி முகத்தை சோகமாய் வைத்து கொண்டு.

“வாட்…”என்று அலறியே விட்டான் அவன் .

“பின்ன என்ன சார்.ஒண்ணும் இல்லாத விசயத்திற்கு இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க.டென்ஷன் ஆனா ரத்தம் கொதிக்கும்,ஹார்ட் செயல் இழக்கும்,பாராலிஸிஸ் வரும்,மூளையில் உள்ள குட்டி ரத்த நாளங்கள் வெடிக்கும்,கோமா,டெத்ன்னு சீக்கிரம் போய் சேர்ந்துடுவீங்க …உங்களை நம்பி எப்படி சார் நான் கழுத்தை நீட்ட முடியும்? நீங்க நாசாவில் ராக்கெட்டை நானோசெகண்ட் கணக்கில் விட போவது இல்லை.வீட்டில் யாருக்கும் சீரியஸ் இல்லை.யாரையும் காப்பாத்த போவதும் இல்லை.ராணுவத்திலும் இல்லை.உங்க மனைவிக்கு பிரசவ நேரமும் இல்லை.தவிர்க்க முடியாத காரணத்தில் தாமதம் ஆகிறது. இவ்வளவு கோபம்,கத்தல் தேவையா பாஸ்?”என்றாள் ப்ரீத்தி

அவள் சொன்னதில் அலண்டு போய் நின்றான் அந்த ஆள்.

“பாஸ் “பைனல் டெஸ்டினேஷன்/FINAL DESTINATION” இங்கிலிஷ் மூவி பார்த்து இருக்கீங்களா?அதுல நல்லா இருக்கற விமானமே எப்படி அப்பளம் மாதிரி நொறுங்கி,வெடித்து சிதறுது,அதில் உள்ளவங்கஎப்படி, எப்படி எல்லாம் சாகறாங்க என்று அக்கு வேறு ஆணி வேறாய் புட்டு புட்டு வைப்பாங்க. நல்ல விமானத்திற்கே அந்த நிலைமை.இதுல ஏதோ கோளாறு என்று தானே வேற விமானத்தில் நேரம் சற்று அதிகம் ஆனாலும் மாத்தி தராங்க! அதுக்கு ஏன் பாஸ் இவ்வளவு டென்ஷன்? படத்தில் பார்த்ததை நிஜத்தில் அனுபவிக்க உங்களுக்கு வேண்டும் என்றால் விருப்பம் இருக்கலாம்.எனக்கு இல்லை”என்றவளின் பேச்சினை கேட்டு அந்த லைன்னில் நின்ற அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

அதுவரை அவர்களும் வாய்க்குள் முனகி கொண்டு,பொங்கி கொண்டு இருந்தவர்கள் தான்.சண்டை போட தங்கள் டர்ன்க்கு காத்து இருந்தவர்கள் தான் அவர்களும் .கூட்டத்தில் தான் நமக்கு வீரம் எக்குத்தப்பாய் எகிறுமே!

“சோ நல்ல விமானம் புக் செய்து தராங்க.நம்மால் மாத்த முடியாததை அப்படியே accept செய்யுங்க நண்பா. அவங்களும் மனிதர்கள் தான். அவங்க வேலையை அவங்க பார்க்கிறாங்க .நீங்க எந்த ஊருக்கு வேண்டும் என்றாலும் ராஜாவாய் இருங்க.எவ்வளவு பெரிய பெத்த படிப்பு படித்து இருந்தாலும்,பாங்கில் பில்லியன் கணக்கில் பணம் இருந்தாலும் சக மனிதரை மனிதராய் மதித்தால் தான் நீங்க மனிதர்.ஒரு மணி நேர தாமதம் பெருசா, உங்க உயிர் பெருசா  என்று யோசிச்சுக்கோங்கோ பாஸ் .80 வயதில் உங்க வருங்கால மனைவியுடன் நான்காம் தேனிலவு செல்ல வாழ்த்துக்கள்.”என்றவள் அங்கு இருந்தவர்கள் அதிர்ந்து நிற்க,ட்ராவல்ஸ் ஊழிய பெண்ணை பார்த்து கண் அடித்து விட்டு கிளம்பினாள் .

வந்த சிரிப்பை அடக்க அந்த பெண் மிகவும் போராடி கொண்டு இருந்தாள்.

“மேடம் !நீங்க சொன்ன விமானத்தில் டிக்கெட் புக் பண்ணிடுங்க .”என்ற அந்த “பந்தா பார்ட்டியின் “குரல் மெலிந்து ஒலித்தது.அவனுடையது மட்டும் அல்ல அந்த லைன்னில் நின்று புலம்பி கொண்டு கொதித்து கொண்டு இருந்த அனைவரின் குரலும் தான் .

(விமானம் நல்ல படியாய் லேண்ட் ஆகும் வரை யாராவது வாயை திறப்பாங்க …நோ சான்ஸ் .”பைனல் டெஸ்டினேஷன்/Final Destination ” பேரை கேட்டவுடன் சும்மா அதிருது இல்லே )

லக்கேஜ் செக் இன் செய்து விட்டு, ஒரு மணி நேரம் கழித்து  ஏர் இந்தியா விமானத்தில் ஏறினாள் ப்ரீத்தி பலரின் வாழ்க்கை பாதையை மாற்ற

வாயிலை நின்ற ஹேர்ஹோஸ்டஸ் இவள் போர்டிங் பாஸ் பார்த்து விட்டு,”வெல்கம் மேடம்…திஸ் சைடு…”என்று பிசினஸ் கிளாஸ் அழைத்து போக,ப்ரீத்தி குழம்பி விட்டாள்.

“மேடம்…ஐ திங்க் ஏதோ மிஸ்டேக் நடந்து இருக்கு…..இது என் சீட் தானா….?”என்றாள் ப்ரீத்தி திகைப்புடன்.

“யெஸ் மேடம்…ரப்தார்  பாட்டியா  இன்க்(raftaar bhatiya incorporation)  புக் செய்து இருக்காங்க மேடம்.பஸ்சேன்ஜ்ர் நேம் ப்ரீத்தி,டேக் யுவர் சீட் மேடம்.”என்ற விமான பணிப்பெண் அவளுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதே சமயம் விமானத்தில் ஏறி வந்த ஒரு பெண் தன் போர்டிங் பாஸ் காமிக்க அவளுக்கு எகானமி கிளாஸ் சீட் கட்டப்பட்டது.

(ஹே இது அந்த நீச்சல் குளத்தில் ஸ்விம் செய்த கோல்டன் பிஷ் தானே .இந்த பொண்ணு இங்கே என்ன செய்யுது ?)

“மேடம் ஐ திங்க் ஏதோ மிஸ்டேக் நடந்து இருக்கிறது.ப்ளீஸ் verify இது என் சீட் தானா என்று.”என்றாள் அவள்.

“யெஸ் மேடம். ரப்தார்  பாட்டியா ஆர்க்(raftaar bhatiya organization)  உங்களுக்கு புக் செய்து இருக்காங்க.பஸ்சேன்ஜ்ர் நேம் ப்ரீத்தி.உங்க நேம் ப்ரீத்தி தானே ?’என்றாள் ஹேர்ஹோஸ்டஸ்.

“யெஸ்..ஐம் ப்ரீத்தி ஜஸ்மிந்தர் /jasmindher  நவ்ராஜ் /navraj

khatri.”என்றாள் இந்த ப்ரீத்தி

(அப்போ பிசினெஸ் கிளாஸ்சில் இருக்கும் அந்த ப்ரீத்தி ஜெகன்நாதன் யாரு???இந்த ப்ரீத்தி ஜஸ்மிந்தேர் நவ்ராஜ் கத்ரி யாரு ? இதில் யாரு அர்ஜுனுக்கு ஏற்பாடு செய்த பெண் ?கவுத்துட்டியே ஹனி.)

இம்சை அரசன் 23 புலிகேசி படத்தில் மைதானத்தில் சண்டை நடக்கும் இரு பிரிவினருக்கு இடையே.எதற்கு என்று கேட்டால் சொல்வார்கள்.”நாகபதனி /நாகப்பதனி “—ஒரு எக்ஸ்ட்ரா “ப்”புக்கு அவ்வளவூ அக்க போர் நடக்கும் ,இங்கும் இதே தான்.

தமிழில் சொல்லி பார்த்தால் இரு பெண்களின் பெயரும் “ப்ரீத்தி” என்று தான் வரும்.அதுவே ஆங்கிலத்தில் ப்ரீத்தி ஜெகநாதன் -preethi jaganathan என்றும் எகானமி கிளாஸ் ப்ரீத்தி —preeti Jasmindher என்றும் வரும்.

இங்கு இரு பெண்களுக்கும் டிக்கெட் புக் செய்தவர்கள் முழு பெயரை கொடுக்காமல் வெறும் ப்ரீத்தி என்று மட்டுமே கொடுத்து இருந்தார்கள். இருவரின் இனிஷியலும் கூட ஒன்று. தவிர இவர்களின் மொபைல்லுக்கு வந்த புக்கிங் idயூம் மாற்றி அனுப்பி வைக்க பட்டு இருந்தது.புக்கிங் போதே நேர்ந்த குழப்பம்.குழப்பியது அமர்நாத் இடம் வேலை செய்யும் அறிவாளிகள்.

ரெண்டு நாட்களுக்கு முன்பு

“சட் ஸ்ரீ அகாலஜி.நான் அமர்நாத் அமிர்தசரஸில் இருந்து பேசறேன்.எப்படி இருக்கீங்க?”என்றது அழைப்பு.

“வணக்கம்அமர்நாத்.நான் நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டில் பாபி எல்லாம் நலமா ?’என்றார் ஹர்பிர் —ப்ரீத்தி , ஜெகன்நாதனின் பிஸ்நெஸ்  பார்ட்னர்.

“கடவுள் அருளில் எல்லாம் நலம்.ஒன்றும் இல்லை ஜீ.என் மருமகன் இருவருக்கு பெண் பார்க்கும் பொறுப்பை அவங்க குடும்பம் என்னிடம் தான் ஒப்படைத்து உள்ளனர்.அர்ஜுன், அமன் கேள்வி பட்டு இருப்பீங்களே.அதான் உங்க மகளை ஒருவருக்கு கேட்கலாம் என்று.”என்றார் அமர்நாத்.

“ரெண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகி விட்டதே அமர்நாத் .இன்விடேஷன் அனுப்பினேன் .நீங்க தான் வரலை “என்றார் ஹர்பிர்.

“ஒகே ஜி.வாழ்த்துக்கள்.உங்களுக்கு தெரிந்த பெண் நம்ம அமனுக்கு இருந்தால்  சொல்லுங்களேன். ஜாதி,மதம்,ஏழை, பணக்காரன் என்ற எதுவும் பார்க்கவில்லை.பெண் குணவதியாக இருக்கணும்.  ஏற்கனவே ரொம்பபட்டு இருக்கும் குடும்பம்.ஜெசிக்கா மேட்டர் தான் உங்களுக்கே தெரியுமே! ரொம்ப நல்ல குடும்பம்.அமன் கூட ரொம்ப நல்ல பையன்.அவன் குணத்திற்கு ஏற்றார் போல் ஒரு பெண் இருந்தால் சொல்லுங்க ஜி.”என்று  அமர்நாத் கேட்க,ஹர்பிர் யோசிக்கும் போது “மே ஐ கம் இன் அங்கிள்.”என்றவாறு உள்ளே வந்தாள் நம்ம ஹீரோயின் ப்ரீத்தி ஜெகன்நாதன்.

அவளை கண்டதும் கண்கள் மின்ன,”இருக்கு. ஒரு நல்ல பெண் இருக்கு.அமனுக்கு ஏத்த ஜோடி.எனக்கு ஒரு பையன் இருந்து இருந்தால் நிச்சயம் அவளுக்கு தான் மணமுடித்து இருப்பேன் என்றால் பார்த்துக்கோ.ஒரு நிமிஷம்.”என்றவர்,ப்ரீதியிடம் வேலையை சொல்லி வெளியே அனுப்பி விட்டு,ப்ரீத்தி பற்றி அமர்நாத்திடம் சொல்லி,”நீங்க பொண்ணு பாரு என்று சொல்றீங்க ஜி.ஆனால் அமன் தான் இப்போதைக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்றானே! பொண்ணு விஷயம்.நாளைக்கு அவ மனுசுல ஆசை வளர்த்துட்டு பிறகு அமன் வேண்டாம் என்று சொன்னால்,என்ன செய்வது ஜி ?’என்றார் ஹர்பிர்.

சற்று நேரம் யோசித்த அமர்நாத்,”அவன் கம்பனிக்கு மேனேஜர் தேடும் பொறுப்பும் என்னுடையது தான்.இன்னும் அதற்கான விளம்பரம் நான் கொடுக்கலை.இதற்கு  அந்த பெண்ணை அனுபங்களேன். சுஷாந்த் பிரச்சனை முடியும் வரை பொண்ணு இங்கே இருக்கட்டும் .வேலைக்கு வேலையும் ஆச்சு.அமன் கண்ணில் பெண்ணை காட்டியது போலே ஆனது.”என்றார் அமர்நாத்.

“அவ்வளவூ தூரம்.மூன்று வருடம்அவ குடும்பம் ஒத்துக்குமா என்று தெரியலை.பாதுகாப்பு.”என்று இழுத்தார் ஹர்பிர் அவரும் பெண்களை பெற்றவர் ஆயிற்றே.

“ஜெஸ்ஸிகா பெஹன் இடம் பேசறேன்.சொந்த மகள் போல் வீட்டில் வைத்து அவரே பார்த்துப்பார்.”என்றஅமர்நாத்  ஜெஸ்ஸிகாவிற்கு கான்பிரென்ஸ் அழைப்பு விடுக்க,அவருக்கும் இந்த ஐடியா பிடித்து விட,பெண்ணை பத்திரமாய் பார்த்து கொள்வதாக, அவர் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறை.

அவர்களிடம் பேசி விட்டு, ஹர்பிர் ப்ரீதியிடமும் ,மிருதுளாவிடமும் வேலை விஷயம் பற்றி மட்டுமே சொன்னார் .நாளை அமனுக்கோ ,ப்ரீதிக்கோ பிடிக்காமல் போய் விட்டால் ,எதுவும் உறுதியான பிறகு சொல்லி கொள்ளலாம் என்று திருமண தகவலை சொல்லாமல் மறைத்தார் ஹர்பிர் .ஜெஸ்ஸிகாவிடமும் அவர் அதையே கேட்டு கொள்ள ,அவருக்கும் அது சரி என்று தோன்றியது .

ப்ரீதியிடம் இந்த காண்ட்ராக்ட் வேலை,அதில் உள்ள சவால்கள் அவளுக்கு பிடித்து விட, ஏற்கனவே அவள் ஹர்பிர் உடன் சேர்ந்து செய்யும் வேலையும் இதே தான் என்பதால்  இந்த வேலையை விரும்பி ஏற்றாள் . சுஷாந்த் விட்டு வெகு தூரம் செல்வது என்றால் வேண்டாம் என்றா சொல்ல போகிறாள்?

”துஷ்டனை கண்டால் தூர விலகு” -இதோ பிளையிட் ஏறி விட்டாள்.இப்படி தான் நம்ம  ப்ரீத்தி ஜெகநாதன் -அமன்ஜீத் ரப்தார் பாட்டியாவின் மேனேஜர் என்ற பதவி ஏற்க பதிண்டா செல்வது.

அதே சமயம் ப்ரீத்தி ஜஸ்மிந்தர் சம்மந்தம் தெரிய வர,இரு பெண்களுக்கும் டிக்கெட் எடுக்கும் படி தன் வேலையாட்களுக்கு சொல்லி விட்டு அமர்நாத் வெளியே சென்று விட்டார்.

ரெண்டு பெண்களின் முழு பெயர் இல்லாமல் வெறும் “ப்ரீத்தி “என்ற பெயர் ஆங்கிலத்தில் ஒரு “h “என்ற வார்த்தை மட்டுமே அதிகமாய் இருக்க,டிக்கெட் புக் செய்தவனுக்கு என்ன பிரச்சனையோ -சம்பளம் கொடுக்கவில்லையோ,இல்லை வீட்டில் மனைவி பூரிக்கட்டையால் அடித்த்த வெறுப்பில் இருந்தானோ என்னவோ,ப்ரீத்தி ஜஸ்மிந்தர் டிக்கெட்டுக்கு ப்ரீத்தி ஜெகனின் போன் நம்பர் காண்டாக்ட் டீடைல்ஸ் நிரப்பி விட்டான்.இந்த ப்ரீத்தியின் டிக்கெட் ஜஸ்மிந்தர்ருக்கு சென்றது.

இப்படி தான் பிசினஸ் கிளாஸ்சில் செல்ல வேண்டிய Preeti jasmindher எகானமி வகுப்பிலும்,எகானமி வகுப்பில் செல்ல வேண்டிய ப்ரீத்தி jaganathan பிசினஸ் வகுப்பிலும் மாறி பயணம் செய்தார்கள்.

டிக்கெட் புக் செய்தது வேறு “ரப்தார் அண்ட் கோ “மற்றும் ரப்தார் அண்ட் இன்க் “என்று இருக்க அது வேறு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இனிமேல் ப்ரீத்தி ஜஸ்மிந்தர்ரை —ஜெஸ்ஸி என்று கூப்பிடுவோம்.நம்ம ஹீரோயின் தான் ப்ரீத்தி.

(ஏற்கனவே பெயர் குழப்பம் ஏற்பட்டு டிக்கெட் மாறி போச்சு.இன்னும் என்னவெல்லாம் மாற போகிறதோ..எதற்கும் கொஞ்சம் உஷாராய் இருப்போம்.)

ஜெஸ்ஸி செம கோபத்தில் இருக்க,ப்ரீத்தி வாழ்க்கையை பிசினஸ் வகுப்பில் அனுபவித்து கொண்டு இருந்தாள். தனி கேபின், படுக்கை வசதி , டிவி ,சிறிய பிரிட்ஜ் என்று சகல வசதிகள் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருந்தது .

அங்கு தான் காஜல் ப்ரீத்திக்கு அறிமுகம் ஆனாள்.

 

பயணம் தொடரும்

 

 

 

 

 

error: Content is protected !!