OVOV 19
OVOV 19
எந்த நொடியும் அந்த 200 மேற்பட்ட தோட்டாக்கள் ப்ரீத்தியின் உயிரை குடிக்கும் நிலை இருப்பதை கண்ட அர்ஜுன்னால் எப்படி அமைதியாய் இருக்க முடியும் ? மரணத்தின் விளிம்பில் உள்ளது அவன் உயிரில்,ஒவ்வொரு அணுவில் கலந்து விட்டவள் ஆயிற்றே.
மிக அருகில் பார்த்ததது இல்லை,அருகில் சென்று முகம் நோக்கி பேசியது இல்லை,தன் காதலை அவளிடம் சொன்னது கூட இல்லை என்பது எல்லாம் அவன் நினைவில் இல்லை. அந்த நொடி அவன் மூச்சு,பேச்சு,செயல் எல்லாம் நிறைந்து இருந்தது அவனுடைய ப்ரீத்தி ,ப்ரீத்தி ,ப்ரீத்தி மட்டுமே.
ஜன்னல் தாண்டி குதித்து ப்ரீதியிடம் ஓட முயன்ற அர்ஜுனை தரையோடு தரையாய் போட்டு அழுத்தினார்கள் சரண்,தீப்அமர்.
“Mainū chaḍō/என்னை விடுங்கள்.Prītī ḵẖatarē vica hai/ப்ரீத்தி ஆபத்தில் இருக்கிறாள்.Mērē kōla usa nū bacā’uṇā hai/அவளை போய் காப்பாத்தணும்.”என்று அர்ஜுனின் கர்ஜனை அந்த ஸ்டேஷன் முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்தது.
அந்த கொலையாளி ப்ரீத்தி பக்கம் தான் திரும்பி கொண்டு இருந்தான் என்றாலும்,முழு பார்வை அவள் புறம் திரும்புவதற்குள் அர்ஜுன் குரல் அவனை எட்டி இருந்தது.
ஜன்னல் வழியே வெளியே குதிக்க முயன்ற அர்ஜுன் பக்கம் அவன் முழு கவனம் திரும்பியது.அங்கு இருந்த போலீஸ் உடையும் அவன் கவனத்தை முழுதாய் அந்த பக்கம் திருப்ப போதுமானதாய் இருந்தது.
அவன் துப்பாக்கி மீண்டும் வெடிக்க ஆரம்பித்தது – அர்ஜுன் இருந்த அறை நோக்கி. ப்ரீத்தி உயிரை குடிக்க அவள் புறம் திரும்பி கொண்டு இருந்த அந்த மெஷின் கன்,ஒரே செகண்டில் அர்ஜுன் இருந்த அறை பக்கம் திரும்பி,எரிமலையின் சீற்றத்தோடு எந்த உயிரையாவது பறித்து விட முடியுமா என்ற வெறியோடு, மின்னல் வேகத்தில் அந்த அறையையே சல்லடை சல்லடையாய் துளைக்க ஆரம்பித்தது.
அந்த அறையில் இருந்த அனைவரும் சாஷ்டாங்கமாய் தரையில் படுத்து விட ,உயிர் சேதம் எதுவும் இல்லை என்றாலும் ,தலைக்கு மேலே பறந்து சென்ற புல்லட் இடைவெளி வெகு குறைவே.
துப்பாக்கி வெடிக்க ஆரம்பித்ததும் தரையோடு தரையாய் படுத்து விட்டது அர்ஜுன் அண்ட் கோ மட்டும் இல்லை ப்ரீத்தியும் தான். கமாண்டோஸ் விழுந்து கிடந்த இடத்தில் இருந்த எஸ்டி டீ பூத் மறைவு ப்ரீத்திக்கு தேவையான மறைவை கொடுத்தது.தவிர ஏற்கனவே தோட்டா பட்டு இறந்து கிடந்த பயணிகளின் உடல் இருக்க ,பிரேதத்தின் அருகில் அப்படியே படுத்து விட்டாள் ப்ரீத்தி.
இறந்த உடலில் இருந்து வெளியேறிய ரத்தம் அவள் முகம்,உடல் ,ஆடை என்று முழுவதும் படிந்தாலும், போன உயிரை நினைத்து கண்களில் கண்ணீர் பெருகினாலும், இறந்த உடலின் அருகே இருக்கும் நிலை மனதை பிழிந்தாலும், துடித்து கொண்டு இருக்கும் வீரர்களுக்காக அனைத்தையும் தாங்கி கொண்டாள் ப்ரீத்தி என்று தான் சொல்ல வேண்டுமோ!
எந்த சூழ்நிலை வந்தாலும் மனதில் உறுதி இருந்தால், அனைத்தையும் தாங்கி கடந்து விடலாம் என்பதற்கு அந்த நொடி ப்ரீத்தி தான் உதாரணம்.பிள்ளை பேறு என்ற மஹாப்பெரும் வலியை தாங்கி, மறுஜென்மம் எடுத்து பிழைக்கும் பெண் இனத்திற்கு இருக்கும் மனஉறுதியின் முன் வேறு எதுவுமே பெரிது இல்லை.
எப்படி அஞ்சனை மைந்தன், தன் பலத்தினை பற்றி அறியாமல் இருந்தாரோ அதை போலவே தான் பெண் இனம்.ஆனால் சூழ்நிலை வரும் போது இவர்கள் எடுக்கும் விஸ்வரூபம் அலாதியானது.
ப்ரேததோடு பிரேதமாய்,சுருண்டு படுத்து,தலைக்கு மேல் தோட்டா பறக்க வாழ்வா சாவா என்ற அந்த நொடியிலும் தளராத மனம் ஒன்றே துணையாக இருந்த ப்ரீத்தியை காக்க,
“ரஞ்சித் !ப்ரீத்தி இஸ் ட்ரையிங் டு RESCUE கமண்டர்ஸ்(preethi is trying to rescue commandos) .டூ சம்திங்(DO SOMETHING). டிஸ்ட்ராக்ட் தி கன்மேன் (DISTRACT THE GUN MAN )”என்றார் வீரேந்தர் ரஞ்சித்திடம்.
“இடியட் …இடியட் …டாம் இடியட்”என்று ரஞ்சித் கத்திய கத்து இங்கே வாக்கி டாகியில் ஒலித்தது.
அடுத்த நொடி ரஞ்சித் ஏதோ சைகை காட்ட அவன் கமாண்டோஸ், வேண்டும் என்றே குறி தவறி சுட ஆரம்பித்தார்கள் .
வீரர்கள் தோட்டாக்கள் தன்னை நோக்கி வருவதை கண்ட அந்த கொலையாளியின் கவனம் அர்ஜுன்,ப்ரீத்தி பக்கம் இருந்து இருந்து சுட்டு கொண்டு இருந்த வீரர்கள் மேல் திரும்பியது.
மூன்று பிள்ளைகள் கேடையமாக முன்னால் நிற்கும் போது வீரர்கள் நேரிடையாக சுட மாட்டார்கள் என்பது அவன் அறிந்தே இருந்தான் என்றாலும் தலைக்கு மேல் பறக்கும் புல்லட் அவன் கவனத்தை திசை திருப்ப போதுமானதாய் இருந்தது .
சுட்டவாறே அவன் பின்னால் நகர்ந்து, ப்ரீத்தி அவன் கண் பார்வை படும் இடத்தில்/line of sight டில் இருந்து முற்றிலும் விலக, தலையை மெல்ல உயர்த்தி பார்த்த ப்ரீத்தி,அந்த கொலையாளி அங்கே இல்லை என்பதை கண்ட உடன் அடுத்த நொடி மீண்டும் தவழ்ந்தவாறே அடிபட்ட வீரர்களை நோக்கி சென்றாள்.
தோட்டா பாய்ந்து வலியில் துடித்து கொண்டு இருந்த அந்த வேளையிலும் அருகில் யாரோ வரும் அரவம் கேட்டு விழிப்படைந்த அந்த வீரர் தன் துப்பாக்கியை ப்ரீத்தி நோக்கி நீட்ட ,அதை ஒரு கையால் தடுத்து ,தள்ளி விட்ட ப்ரீத்தி
“ஐம் ஹியர் டு ஹெல்ப் யு(I am here to help you sir.dont move) ” என்றாள்.
ப்ரீத்தி பேச்சை கேட்டு அவர் துப்பாக்கியை கீழ் இறக்கி விட, அவர் காயத்தை சோதித்த ப்ரீத்தி,ரெண்டு புல்லட் அவர் காலில் பாய்ந்து இருப்பதை கண்டு முட்டி போட்டு நிமிர்ந்தவள், தான் அணிந்து இருந்த ஜீன்ஸ் பாண்ட்டில் இருந்த பெல்ட் எடுத்து அவர் காலில் turnequet மாதிரி இழுத்து கட்டி ரத்த பெருக்கை நிறுத்தினாள்.
அடுத்த கமாண்டோ ஒரு பெண் என்பதையும், இடுப்பில் குண்டு பாய்ந்து இருந்தாலும்,அது அதிக அளவு உள்ளே அதிகமாய் பாயவில்லை என்பதையும், அதிக ரத்த சேதாரம் அவருக்கு இல்லை என்பதையும் கண்டாள்.
சுற்றும் முற்றும் பார்த்தவள்,அந்த கொலையாளி அருகே இல்லை என்பதையும் அவனின் சைட் ஆப் போகஸ் எனப்படும் பார்வையின் வட்டத்திற்குள் தான் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு,
“லெட்ஸ் மூவ்/lets move.”என்றவள் முதலில் குண்டு அடிபட்ட வீரரை இழுக்க பார்க்க, அவரின் எடை,போட்டு இருந்த புல்லட் ப்ரூப் உடை எடை அவளால் அவரை இழுக்க முடியவில்லை.
கால் வழுக்கி பல முறை அவளே கீழே சரிந்து அமர்ந்தாள். இன்னொருத்தரின் உதவி இல்லாமல் இவர்களை அந்த இடத்தை விட்டு அப்புற படுத்த முடியாது என்று புரிந்தாலும்,தன்னால் முயன்றதை செய்ய அவள் சற்றும் யோசிக்கவில்லை .
அறையில் இருந்து நடப்பதை பார்த்து கொண்டு இருந்த மற்றவர்களால் எந்த உதவியும் செய்ய முடியாமல் கையை பிசைந்து நின்றனர். ப்ரீத்தியின் பாதுகாப்பிற்காக அந்த அறையில் இருந்தே வீரேந்தரும்,சரணும் துப்பாக்கி ஏந்தி நின்றனர்.அந்த கொலைகாரன் மீண்டும் ப்ரீத்தி பக்கம் வந்தால் ,பிள்ளை கேடயமாக இருந்தாலும் இல்லா விட்டாலும் அவனை சுட்டு விடும் முடிவோடு அவர்கள் இருந்தனர்.
ப்ரீத்தி படும் கஷ்டத்தை பார்த்த அடிபட்ட வீரர்களில் ஒருவனான வித்யூத்,”லெட் மீ யூஸ் மை ஹாண்ட்ஸ்.” என்றவன் கையில் ஏந்தி இருந்த துப்பாக்கியினை தோளில் மாட்டி கொண்டான்.
இடுப்பில் அடிபட்டு இருந்த இன்னொரு வீரனின் துப்பாக்கி கொலையாளி வரும் திசையை நோக்கி நீண்டு இருந்தது இவர்களுக்கு காவலாய்.
கைகளால் ஊன்றி ,அடிபடாத கால் கொண்டு வித்யூத் தரையை உந்தி தள்ள,ப்ரீத்தி இழுக்க என்று அவனை ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு பின்புறம் சுவர் மறைவுக்கு இழுத்து சென்றாள். அடுத்து இடுப்பில் குண்டு அடிபட்டவர் ஒரு புறமாய் திரும்பி இரு கால்களாலும் ஊன்றி, ஊன்றி முன்னேற அவரை இழுத்து வருவது சுலபமாய் இருந்தது ப்ரீத்திக்கு.
அப்பொழுதும் அந்த வீராங்கனையின் துப்பாக்கி ப்ரீத்திக்கு காவலாய் மற்றொரு புறம் நீண்டே இருந்தது.தன்னை காப்பாற்ற வந்த பெண்ணை காக்க அந்த நிலையிலும் தயாராய் இருந்த அந்த பெண்ணின் வீரம்,துணிவு வீரம் ப்ரீத்திக்கு மட்டும் அல்ல அங்கு நடப்பதை பார்த்து கொண்டு இருந்த அனைவர்க்கும் ஒரு கர்வத்தை,பெருமிதத்தை உருவாக்கியது என்றால் மிகையல்ல.
ஒரு புறம் நாட்டினையே உள் இருந்து அரிக்கும் கரையான்கள்.இது போன்ற வீர்களின் வீரத்தாலும்,இவர்களின் குடும்பங்கள் செய்யும் தியாகத்தாலும் தான் இந்திய திருநாடு இன்னும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று நினைத்த ப்ரீத்தியின் கண்கள் தூரத்தில் பட்டொளி வீசி பறந்து கொண்டு இருந்த மூவர்ண கொடியை கண்டதும் ஒளிர்ந்தது.எத்தனை உன்னதமான தேசம் இது .
வீரர்கள் இருவரையும் சுவற்றின் மறைவுக்கு ப்ரீத்தி இழுத்து சென்று,அவள் தலை மறைந்த பிறகு தான் பிடித்து இருந்த மூச்சினை வெளியிட்டான் அர்ஜுன் .
கால் மடிந்து கீழே கை ஊன்றி அமர்ந்த அர்ஜுன் கண்களில் வெளிப்பட்ட கண்ணீரின் பளபளப்பு எந்த அளவிற்கு ப்ரீத்தியின் உயிர்காக்க இங்கு இவன் தவித்தான் என்பதை சொல்லாமல் சொல்லியது. அதிர்ந்து துடிக்கும் தன் இதயத்தை பிடித்து கொண்டவன், வேக வேகமாய் மூச்சு எடுத்து தன்னை சமாளிப்பதற்கு அவனுக்கு சிறிது நேரம் தேவை பட்டது. அவன் நிலை உணர்ந்து வீரேந்தர்,சரண் ,அமர்நாத் அவன் தோளை தட்டி கொடுத்தனர்.
தன்னை சமாளித்து கொண்ட அர்ஜுனோ,அவனுக்கு ஆறுதல் சொன்ன மற்றவர்களோ அறியவில்லை இனிமேல் தான் ப்ரீத்தி நிஜ ஆபத்தில் சிக்க போகிறாள் என்ற உண்மை. மீண்டும் இன்னொரு துப்பாக்கி அப்பொழுதே அவளை நோக்கி திரும்பி ,அவள் உயிரை எடுக்க போகும் தோட்டாவை உமிழ போவது மட்டும் தெரிந்து இருந்தால் என்ன செய்து இருப்பான்?
அதே சமயம் தோட்டா பாய்ந்த வீரர்களை சோதித்த ப்ரீத்தி, மேலும் கசியும் ரத்த பெருக்கை நிறுத்த துணியோ,கயிறோ கண்டிப்பாக தேவை என்பதை உணர்ந்த ப்ரீத்தி “வெயிட் ஹியர்.”என்றவள் மீண்டும் ஜன்னல் வழியே ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் குதித்து, அங்கு இருந்த பஸ்ட் எயிட் box, தன் ட்ராவல் பாக்கில் இருந்து தன்னுடைய ரெண்டு,மூன்று துப்பட்டா எடுத்து வெளியே அவர்களிடம் நீட்டினாள்.
சுவரில் சாய்ந்து இருந்த வீரர்கள் இருவரும்,கையை மட்டும் உயர்த்தி அந்த பொருட்களை அவளிடம் இருந்து வாங்கி கொண்டனர்.மீண்டும் எகிறி குதிக்க அவர்கள் முயன்ற சமயம் முன்புறம் கதவு வெகு வேகமாய் திறந்து கொள்ள,
“தே ஆர் ஹியர் “என்று வீரர்களிடம் சொன்ன ப்ரீத்தி, சட்டென்று அறைக்குள் ஜன்னல் அருகே இருந்த டேபிள் அடியில் மறைந்தாள் ப்ரீத்தி.
கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்தது அந்த சொர்ணக்காவும் ,கொலைக்காரனும் மூன்று பிள்ளைகளும் தான்.அறையின் வாயிலை பார்த்தவாறே சுட்டு கொண்டு உள்ளே வந்த அவர்கள் கவனம் அறைக்குள் திரும்புவதற்குள் அங்கு இருந்த டேபிள் அடியில் மறைந்தாள் ப்ரீத்தி. தான் மூச்சு விடும் சப்தம் கூட வெளியே கேட்டு விட கூடாது என்று வாயினையும்,மூக்கினையும் கை கொண்டு மூடியவாறு டேபிள்லோடு டேபிள் போல் அமர்ந்தாள்.
அதே சமயம்,
இடம் -பதிண்டா அரசு மருத்துவமனை
அந்த அரசாங்க மருத்துவமனையும் நாட்டின் மற்ற அனைத்து அரசாங்க மருத்துவமனைகள் எந்த நிலையில் இருக்குமோ அப்படி இல்லாமல் ,அதிசய பொருளை பார்ப்பது போல் பார்க்க வைத்தது என்றால் மிகையல்ல.
அழுது வடியும் விளக்குகள்,தண்ணீர் தேங்கிய சுற்றுப்புறம்,கொசுக்களும்,ஈக்களும் உற்பத்தி ஆகும் இடம், டாக்டர் ,நர்ஸ் பார்க்க என்று நீண்ட நெடிய கியூ,மனிதர்கள் உள்ளே நுழைய கூட தரம் இல்லாத கட்டிடங்கள்,எப்போ கூரை மேலே விழுமோ,எப்போ எது ஷார்ட் சர்கியூட் ஆகுமோ என்று மரண பயம் என்று எதுவுமே அங்கு இல்லை என்பது தான் விந்தையிலும் விந்தை .
மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு நிகராக இருந்தது அந்த மருத்துவமனையின் நிர்வாகம்,சுற்றுப்புறம்,பேஷண்ட் கேர்.அதற்கு காரணம் இளம் வயதிலியே அந்த அரசாங்க மருத்துவமனையின் நிர்வாகத்தை எடுத்து கொண்ட டாக்டர் யோஜித்.
அரசாங்க மருத்துவமனையிலும் தரமான மருத்துவம், சுற்றுப்புறம்,நோயாளிகள் சேவையை 5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு தர முடியும் என்று நிரூபித்தவன் அவன்.
ஹாஸ்பிடலுக்கு தேவை என்றால் சொந்தமாய் கடன் வாங்கி, வீட்டினை அடமானம் வைத்து கூட செலவு செய்ய யோஜித் தயங்கியதே இல்லை.”சேவை மன்னன் “என்று பஞ்சாப் முதல் அமைச்சர் கையால் பல முறை விருது பெற்றவன்.
அந்த பதிண்டா அரசு மருத்துவமனையின் ICU வாயிலில் ஹாஸ்பிடல் நெடி,அந்த அட்மாஸ்பியர் பிடிக்காமல் எரிச்சலுடன் கூண்டில் அடைபட்ட புலியாய் உலவி கொண்டு இருந்தான் அமன்ஜீத்.
“விமானத்திலும் executive டிக்கெட்,ரயிலிலும் முதல் வகுப்பு ac கோச் புக் செய்து இருந்தாலும் இந்த பெண்ணிற்கு ஏன் உடல் நலம் இல்லாமல் போனது? ஒருவேளை கிளம்பும் போதே உடல் நலம் இல்லையா என்ன?”என்றார் தன்வி யோசனையுடன்.
தாயின் பேச்சை கேட்ட அமன்ஜீத் அதிர்ந்து நின்றான்.அவன் புக் செய்தது எகானமி கிளாஸ்,மூன்றாம் ac கோச்.வேலைக்கு வருபவளுக்கு எதற்கு இத்தனை செலவு தான் செய்ய வேண்டும் என்று நினைத்து இப்படி புக் செய்த தன் அறிவினை தானே நொந்து கொள்ள தான் அவனால் முடிந்தது.ஒருவேளை தன்னால் தான் அந்த பெண் இப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் அவனை தடுமாற வைத்தது.
அவன் மனசாட்சி அவனை கூறு போட்டு,லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி கொண்டு இருக்க,அதில் நொந்து போனவனை காக்க என்று ICU விட்டு வெளியே வந்த டாக்டர் யோஜித்,”சாரி அமன்.அவங்க கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்காங்க.”என்றான்.]
சம்மட்டியால் பலமான அடி ஒன்று இதயத்தில் விழுந்தது போல் உறைந்து நின்றான் அமன்ஜீத்.
“என்னடா ஆச்சு?”என்றான் அமன்- வாயில் காத்து மட்டும் தான் வெளிவந்தது.
“எவ்வளவு நாளாய் அவங்களுக்கு இந்த பழக்கம் இருக்கு ?’என்றான் யோஜித்.
“எந்த பழக்கம்?”என்றார் தன்வி
“போதை மருந்து எடுத்து கொள்வது தான்.எடுத்து கொண்ட போதை மருந்து ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கு.அவங்க அடிக்டா என்ன?”என்றான் யோஜித்.
பதில் சொல்ல முடியாமல்,என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் உறைந்து நின்றார்கள் தாயும் மகனும். மின்னாமல் முழங்காமல் தங்கள் தலையில் விழுந்த அந்த இடியை எப்படி எதிர் கொள்வது என்று அமனுக்கும்,தன்விக்கும் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டுமோ!
வெறும் வைரல் பிவேர் என்று அவர்கள் நினைத்து இருக்க, போதை மருந்தால் மரணத்தின் விளிம்பு என்பதை எப்படி முயன்றும் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
‘தன் மகனுக்கு இப்படி ஒருத்தியையா பார்த்தோம்’என்று தன்வி நினைக்க
‘யாப்பா மீ எஸ்கேப் .என்னால் எதுவும் இல்லை ‘ என்று தான் அமன்ஜீத் மனம் நிம்மதி அடைந்தது.
அங்கே அந்த ப்ரீத்தி போதை மருந்து கும்பலிடம் மாட்டி இருக்க, இங்கே இந்த ப்ரீத்தி போதை மருந்தால் மரணத்தின் விளிம்பில் .
எந்த உயிர் போக போகிறது?
அதே சமயம்
இடம் -பதிண்டா ரயில் நிலையம்
“வாட் கம் அகைன்.”என்று வீரேந்தர் திகைப்பில் கத்த என்னவோ ஏதோ என்று பதறி எழுந்தான் அர்ஜுன்.
“ஷூட்டர்ஸ் என்டெர்டெட் ஸ்டேஷன் மாஸ்ட்டர் ரூம்.ப்ரீத்தி, காஜல் அண்ட் ஹேர் டூ கிட்ஸ் இன்சைட் (shooters entered station master room .preethi ,kajal and her two kids are inside )”என்றது ரஞ்சித் குரல் வேதனையை உள் அடக்கி.
“ஸ்டாப் ஆல் ஷூட்டிங்ஸ் அட் ஒன்ஸ் (stop all shootings at once)” என்று டென்ஷன் ஏறி கத்தினார் வீரேந்தர்.
அவர் உத்தரவின் பெயரில் ரஞ்சித் ஆணை இட எல்லா துப்பாக்கிகளும் மௌனத்தை கடை பிடித்தன.
“எனி சைட்டிங்ஸ்?அந்த இருவரில் யாராவது கண் பார்வைக்கு தெரியும் வண்ணம் இருந்தால் டேக் தேம் டவுன்.”என்றான் ரஞ்சித்.
“நோ clear சைட் சார்.வி ஆர் blind.உள்ளே என்ன நடக்குதுன்னு பார்க்க முடியவில்லை.”என்றது sniper குழு.
இதய துடிப்பே நின்று விட்டது போல் தவிக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.
அவர்கள் அறியாதது காஜலையும்குழந்தைகளையும் ப்ரீத்தி ஏற்கனவே பாதுகாப்பாய் பத்திரப்படுத்தியது.ஆபத்தில் அந்த நொடி சிக்கி இருப்பது ப்ரீத்தி மட்டுமே.அவளுக்கும்,அந்த கொலையாளிகள் இருவருக்கும் நடுவே இருந்தது ஒரு டேபிள் மட்டுமே என்ற உண்மை.
கதவை மூடி சாத்திய அவன்,அங்கு இருந்த நாற்காலி ஒன்றினை கதவிற்கு முட்டு கொடுத்து நிறுத்தினான்.
அந்த சொர்ணாக்கா உள்ளே நுழைந்ததும் அந்த மூன்று பிள்ளைகளை கீழே தள்ளி விட்டு,”வாயை மூடிட்டு உட்காருங்க தப்பிக்க நினைசீங்க.”என்றவர் ஒரு பிள்ளையின் நெற்றியில் பிஸ்டல் வைத்து அழுத்தியவர்,
“போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.என்னை பத்தி தெரியும் தானே.”என்றார் உறுமலாய்.
அவர் தள்ளி விட்டதும் ,மூன்று பிள்ளைகள் சென்று விழுந்த இடம் ப்ரீத்தி மறைந்து இருந்த டேபிள்ளுக்கு அருகே. சொர்ணாக்கா அந்த புறம் சென்றதும்,பருந்திடம் சிக்கிய புறாக்கள் போல் உடல் பயத்தில் வெடவெடவென உதறி கொண்டு இருந்த அந்த பிள்ளைகளின் முகத்தை பார்க்கவே மிக கொடுமையாக இருந்தது.
பூவை விட மென்மையான,கண்ணுக்குள் வைத்து பொத்தி பாதுகாக்க வேண்டிய அந்த பிள்ளைகள் அங்கு நரகத்தில் மாட்டி துடித்து கொண்டு ,லட்சக்கணக்கான ஹியூமன் டிராபிக் ஆன பிள்ளைகள் போல் தங்களை ரட்சிக்க யாரவது வர மாட்டார்களா என்று மனதிற்குள் ஊமையை கதறி கொண்டு இருந்தனர்.
போதை மருந்து விற்கும் வயதா அது? இல்லை சதை வெறி பிடித்த,வக்கிரம் நிறைந்த மனித மிருங்கங்கள் வேட்டையாடும் பொருளா?
கண் முன் நடக்கும் அவலங்கள் கோடி உண்டு.கண்டும் காணாதது போல்,நமக்கு எதற்கு வம்பு என்று விலகி செல்லும் சில பல நல்உள்ளங்கள் மட்டும் மனது வைத்தால் சிலவற்றையாவது தடுக்க முடியும் தான்.
“அக்கா!”மூவரில் ஒரு குழந்தை சொர்ணகாவை அழைத்தது.
“வாயை மூடிட்டு இருக்க மாட்டே.”என்று கொதித்த சொர்ணாக்கா ஓங்கி அந்த பிள்ளையை அறைந்ததில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது.
“இல்ல அக்கா ….”என்று அந்த குழந்தை மீண்டும் ஆரம்பிக்க, அந்த பிள்ளையின் முடியை கொத்தாய் பிடித்த அவன் ,”ஸுப் கரோ சைத்தான் “என்றவன் கன்னம் கன்னமாய் அறைந்து தள்ள,அந்த பிள்ளையின் துடிப்பு,கதறல் எதற்குமே அவன் செவி சாய்க்கவில்லை.
அந்த பிஞ்சு அவன் அடி தாங்காமல் மயங்கி விழுந்தது.
மற்ற இரு பிள்ளைகளும் அந்த குழந்தையின் கையை பிடித்து கொண்டு முகம் வெளிறி போய் அமர்ந்து இருந்தனர்.
“வாயை மூடிட்டு இருக்கனும்.இல்லைனா அது தான் கெதி.”என்று சொர்ணாக்கா மிரட்ட
“இல்லைக்கா …எனக்கு காலில் அடி அக்கா.நீங்க …உங்க கையில் அது என்னை கடிச்சிடுச்சு. என் காலில் அடி அக்கா.ரொம்ப வலிக்குது.தூக்கம் தூக்கமாய் வருதுக்கா.”என்று பாய்ந்து இருந்தது புல்லட் என்று கூட உணராமல்,ரத்தம் பெருகி வழிவதை கூட எப்படி நிறுத்துவது என்று தெரியாமல், தனக்கு வருவது தூக்கம் இல்லை உதிர பெருக்கால் ஏற்பட்ட மயக்கம் என்று கூட தெரியாமல் சுட்டவளிடமே வலிக்குது என்று அழுதது அந்த வளர்ந்த குழந்தை.
போலீஸ்சை சுட போன சமயத்தில் சொர்ணாக்காவின் துப்பாக்கி அந்த பிள்ளையின் காலினை பதம் பார்த்து இருந்தது.இவள் காலில் அடி என்ற சொல்ல வந்து தான் இன்னொரு பிள்ளை அடி வாங்கி மயங்கியது.
“செத்துட மாட்டே.அப்படியே நீ செத்தாலும் இந்த நாடு உனக்காக அழ போகுதா என்ன …போத்திட்டு உட்காரு.” என்றார் சொர்ணாக்கா.
“நீ என் மேல் படுத்துக்கப்பா உனக்கு தூக்கம் வருதுன்னா.”என்ற இன்னொரு பெண் குண்டு அடிபட்டவளை தன் தோளில் தாங்கி கொள்ள,இன்னொரு பிள்ளையின் கண் சொருக ஆரம்பித்தது.
சிறு பெண் என்பதால் அளவுக்கு அதிகமான உதிர பெருக்கை தாங்க முடியாமல் மயக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது அந்த குழந்தை.உடன் இருந்த மற்றொரு பிள்ளைக்கும் இதை பற்றி எல்லாம் தெரியாததால்,தன் தோழி தூக்கத்தை நோக்கி போகவில்லை,மரணத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறாள் என்ற உண்மை தெரியாமல் அவளை தட்டி கொடுக்க ஆரம்பித்தது.
அவள் கையை பிடித்து கொண்டு அமர்ந்த இன்னொரு பெண் சுற்றும்,முற்றும் பார்க்க அவள் பார்வையில் பட்டாள் டேபிளுக்கு அடியில் இருந்து கையால் வாய் மூடி அங்கு நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் மௌன கண்ணீர் வடித்து கொண்டு இருந்த ப்ரீத்தி.
அந்த பெண் தன்னை கண்டு கொண்டால் என்பதையும்,திகைப்பில் அவள் விழிகள் விரிவதையும் கண்ட ப்ரீத்தி ,அந்த மிருகங்கள் நிற்கும் இடத்திற்கும் ,தான் இருக்கும் டேபிள்ளுக்கும் மாறி மாறி பார்வை திருப்பி பார்ப்பதையும் கண்டவள் ,தன் உதட்டின் மேல் ஒரு விரல் வைத்து ,தலையை ‘சொல்லாதே’ என்பது போல் சைகை காட்ட ,சரி என்று தலையை மட்டும் ஆட்டிய அந்த குழந்தை அந்த நிலையிலும் அவளை பார்த்து புன்னகைத்தது .
போதை மருந்துகளுக்கும் ,ரத்த வெள்ளத்திற்கும்,தோட்டாக்களுகும் மத்தியில் ஒரு புன்னகை பூ.
பயணம் தொடரும் …