OVOV 22

ரஞ்சித்  மேலும் ப்ரீத்தியை பற்றி பேசுவதற்குள், ரஞ்சித் வாக்கி டாக்கியில் அவன் கிளம்பி விட்டானா என்று கேள்வி வர, ஒரு தலை அசைப்புடன் வெகு வேகமாய் கிளம்பி விட்டான்.

பதிண்டா ரயில் நிலையத்தின் வாயிலை ரஞ்சித்  நெருங்கிய அவன் முகம், மீண்டும் ‘கமாண்டோஸ் மாஸ்க்’ பின் மறைக்கபட்டு இருந்தது.அங்கு காத்து இருந்த அவர்களின் ரெனால்ட் ஷெர்பா/RENAULT SHERPA  என்ற ARMOURED/கவச ராணுவ வாகனத்தில் ஏறி கொள்ள அவனை சுமந்த அந்த வண்டி வெகு வேகமாய், ஒரு வயல் வெளியில் நிறுத்த பட்டு இருந்த ஹெலிகாப்டர் நோக்கி சென்றது.

அந்த Sherpa வண்டியின் அமைப்பு,கம்பீரம் பார்ப்பவர்களின் மனதில் ஒரு பயத்தையும், மதிப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது

“அவர்களுக்கு எப்படி இருக்கு?”என்றான் ரஞ்சித் தன் அருகே இருந்த சக வீரர் ஒருவரிடம்.

“பதிண்டா ராணுவ தள ஹாஸ்பிடல்லுக்கு கொண்டு போய்ட்டாங்க.நத்திங் டு ஒர்ரி…புல்லட் ரிமூவ் செய்தாச்சு…”என்றார் அவர் முகமூடிக்கு பின் இருந்து.

“குட் …முழு ரெஸ்ட்ல இருக்கட்டும்….மை ஆர்டர்ன்னு சொல்லிடுங்க.இல்லைன்னா ரெண்டு பேரும் முன்றாவது நாளே ,”ரிப்போர்டிங் பார் டூட்டி” என்று வந்து நிற்பாங்க.எனக்கு அவங்க ஹெல்த் பத்தி ஹவுர்லி அப்டேட் வந்துட்டே இருக்கனும்.”என்றான் ரஞ்சித் .

“YES SIR…அந்த லேடிக்கு டிரீட்மென்ட் ஹாஸ்பிடல் ஆரம்பமாகி விட்டதாம்.கொஞ்சம் கிரிட்டிகள் என்று தான் சொல்ராங்க.”என்றார் அவர்.

“சரண் சார் கிட்டே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்து இருக்கேன்.நம்ம டீம் ஆட்கள் அங்கே உடல் நலம் இல்லைன்னு சேரட்டும்.”என்றான் ரஞ்சித்.

“அட்டாக் நடக்கும் என்று எக்ஸ்பெக்ட் செய்யறீங்களா?நாம தான் ‘ஆல் டெட்’ என்று அறிக்கை கொடுத்துட்டோமே “என்றார் அவர்.

“சொல்ல தெரியலை…பட் இது மத்த கேஸ் மாதிரி சுலபமாய் இருக்காதுன்னு தோணுது…பல வருடமாய் ஒரு மாநிலமே போதை புதை குழியாய் மாறியது மட்டும் இல்லாமல், இதனால் இந்தியாவின் எவ்ரி நூக் அண்ட் கார்னெர்(every nook and corner) பாதிக்க பட்டு வருகிறது…இது இன்னும் எவ்வளவு ஆழம் போகுமோ தெரியலை.”என்றான் ரஞ்சித்.

“ஒரு மணி நேரம் முன்பு சென்னை டீம் ஹெட் அஸ்வத் போன் செய்து இருந்தார்.சென்னைக்கு பஞ்சாப்பில் இருந்து வந்த கண்டைனர் ஒன்று வருவதாய் தகவல் வந்து இருக்கு .மடக்கி  சோதனை செய்ததில் உள்ளே புது கம்ப்யூட்டர்ஸ் நிறைய இருந்திருக்கு. அந்த கம்ப்யூட்டருக்குள் போதை மருந்து ஏறக்குறைய 500கிலோ.

உலக அரங்கில் பல பில்லியன் கணக்கில் மதிப்பு.அது மட்டும் தமிழ்நாட்டிற்குள் வந்து இருந்தால் ஏற்கனவே சாராய ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் மாநிலம் போதை தலைநகரமாய் மாறி இருக்கும்.”என்றார் அவர் .

“யார் துப்பு கொடுத்தது?”என்றான் ரஞ்சித் யோசனையுடன்.

“பதிண்டாவில் இருந்து தான் கால் வந்து இருக்கு.எஸ்டிடி பூத் கால்.”என்றார் அவர்.

(யார் பார்த்தா வேலை இது ?துப்பு கொடுத்தது அர்ஜுன்னா இல்லை அமன்ஜீதா? இல்லை மூன்றாவது ஆள் ஒருவனா?)  

ரஞ்சித்  இறங்கி ஹெலிகாப்டர் நோக்கி செல்ல, அந்த கவச வண்டியில் இருந்த மற்றவர்கள் பதிண்டாவில் செயல் பட்டு வரும் அவர்களின் ‘SAFE ஹவுஸ்’ நோக்கி  கிளம்பினார்கள்.

அதே சமயம் பதிண்டா ரயில் நிலையம் போரென்சிக்/forensic ஆட்கள்  அலசி ஆராய்ந்து , தடயங்களை சேகரித்து கொண்டு இருந்தனர்.

குண்டடி பட்டு இறந்த பொது மக்களின் ஐவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டு இருக்க, அவர்கள் பற்றிய தகவல் அறிந்து அவர்கள் குடும்பங்களிடம் விவரம் சொல்ல போலீஸ் கான்ஸ்டபிள் விரைந்தனர்.

அங்கு நடப்பவையை மேற்பார்வை இட்ட வீரேந்தர்,”நியூஸ் என்ன கொடுத்து இருக்கே சரண்?”என்றார் வீரேந்தர்.

“ரஞ்சித் சொன்னது போல் முகமூடி கொள்ளை கும்பல் ரயில் நிலையத்தில் பயங்கரம். பணம் நகைக்காக பயணிகளை சுட்ட கொடூரம். ரயில்வே போலீஸ் சுட்டு ஐந்து முகமூடி கொள்ளையர்கள் மரணம்.”என்று ஒப்பித்தான் சரண்.

“குட்…டீன் யாரு யோஜித் தானே….அவன் கிட்டே சொல்லி அந்த மூன்று பெண்களுக்கும், உயிரோடு பிடித்த அந்த லேடிக்கும்  ‘டெத் செர்டிபிகேட்’ வாங்கிடு. ‘டெத் அட் ஸ்பாட்’ என்று மீடியா கிட்டே சொல்ல சொல்லிடு. இவங்க நால்வர் உயிரோடு இருக்கும் நியூஸ் நம்மை தாண்டி வேறு யாருக்கும் தெரிய கூடாது…அந்த பிள்ளைகளை யார் விசாரிக்கறாங்க?”என்றார் வீரேந்தர்.

“ரஞ்சித் டீம்மில் இருக்கும் சூசன்,நம்ம டீம் நூர் மேடம் சார்.” என்றான் சரண்.

அந்த பசங்க தமிழில் நல்லா பேசுதுங்க.இங்கிலிஷ் கொஞ்சம் கொஞ்சம் வருது.சூசன்,நூர் மேடம் ரெண்டு பேருக்கும் சவுத் இந்திய மொழிகள் அனைத்தும் அத்துப்படி.அவங்க அப்ரோச் கொஞ்சம் சாப்டா இருக்கும்.பிள்ளைங்க ஏற்கனவே பயங்கர ஷாக்கில் இருக்காங்க…”என்றான் சரண் .

“அவங்களுக்கு எதுவும் ….”என்று இழுத்தார் வீரேந்தர் .

எத்தனையோ கொடுமைகளை அவர் துறையில் கடந்து வந்து இருந்தாலும்,சில விஷயங்கள் அவரையும் தடுமாற தான் வைத்தது.

சரண் பெருமூச்சை வெளியிட்டு தலையை அசைக்க,தன் நெஞ்சில் கை வைத்து கண்ணை மூடிய வீரேந்தர் மனம் நொந்தவராய், “ஹே பிரபு ….அந்த குழந்தைகளுக்கு நடந்த கொடுமையை கடந்து வர தேவையான மன தைரியத்தை கொடு…கவுன்செல்லிங்க்கு ஏற்பாடு செய்துடு சரண்….”என்று கண் கலங்க சொன்னவர்,அடுத்த நொடி கண்கள் கோபத்தை தத்து எடுக்க,

“ஐ வாண்ட் தட் xxxxxx  அலைவ் ….அவனை …..”என்று தன் கை முஷ்டி இறுக அவர் கூறிய தோரணையே சொல்லாமல் சொன்னது அவர் சொல்ல வருவதை .

“அந்த  பெண் மிருகம் ….உயிரோடு இருக்கா இல்லை போய் தொலைஞ்சதா ?”?”என்றார் வீரேந்தர் சொர்ணக்காவை பற்றி

“போதை மருந்து ஹெவி டோஸ் இன்ஹெல்/சுவாசித்து இருக்காங்க. லிட்டில் பிட் கிரிட்டிகள்… பட் ரஞ்சித் டீம் ஹாஸ்பிடல் போகும் போதே NARCAN ஒரு டோஸ் கொடுத்து இருக்காங்க. டாக்டர் யோஜித் டிரீட்மென்ட் ஸ்டார்ட் செய்துட்டாராம்.”என்றான் சரண்.

“ஹாஸ்பிடலில் எதற்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்துடு.”என்றார் வீரேந்தர்.

“ரஞ்சித் கூட அதை தான் சொன்னார். உள்ளே யாரை காவல் காக்கிறோம் என்று வெளியே நிற்கும் போலீஸ்க்கு கூட சொல்ல வேண்டாம் என்றும், அட்மிட் பார்மில் வேறு பெயர் நிரப்பியும், சூசைட் கேஸ் என்றும் குறிக்க சொல்லி இருக்கார்.

அதே ஹாஸ்ப்பிட்டலில் ‘ மலேரியா டிரீட்மென்ட்’ என்ற பெயரில் இரு டீம் மெம்பெர்ஸ் இருப்பார்களாம். யோஜித் கிட்டே பேசிட்டேன்.முழு கோ ஆபரேஷன் உண்டுன்னு சொல்லிட்டார்    “என்றான் சரண்.

இன்ஸ்ட்ருக்ஷன் கொடுத்த ரஞ்சித்தோ,அதை நிறைவேற்றிய சரண்,வீரேந்தரோ,பாதுகாப்பிற்க்கு போகும் அவன் ஆட்களோ அறியாத ஒன்று அன்று இரவு ஒரு உயிர் பறிக்க பட போவதை… அந்த உயிர் போவதற்கு ப்ரீத்தி குற்றவாளி ஆக்க படலாம் என்பதை.

“குட் ப்ரெசென்ஸ் ஆப் மைண்ட் தான்….நர்ஸ்க்கும் வார்னிங் கொடுத்துடு சரண். வாயை திறந்தால் நார்க்கோடிக்ஸ் வழக்கில் உள்ளே தூக்கி 7 வருஷம் போடுவோம் என்று சொல்லிடு. நான் பெயில்அபெல் /non bailable செக்ஷன் என்பதை  கொஞ்சம் நீயே போய் ஒன்றிற்கு ரெண்டு முறை சொல்லிடு.ஒருவேளை பணம் வாங்கி கொண்டு இருந்தாலும் உளவு சொல்ல தயங்கணும்.  “என்றார் வீரேந்தர்.

“அவன் மொபைல் டிரேஸ் செய்தாகி விட்டதா?”என்றார் வீரேந்தர்.

“ரஞ்சித் டீம் அதை பார்த்து கொள்வதாய் சொன்னார்கள்.” என்றான் சரண்.

“ரஞ்சித் டீம் பெயர் எங்குமே வெளிவர கூடாது சரண். எது செய்தாலும் நாம் செய்வதாய் தான் இருக்கணும். அவங்க நிழலில் இருந்தே இதை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் பெயர்,புகைப்படம் எதுவும் வெளியே வர கூடாது என்பதில் அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க . ரஞ்சித் முகம் மட்டும் தான் நமக்கு தெரியும். நம்ம ஆபீஸ் cctv பூட்டேஜ்ஜில் அவன் படம் இருக்கான்னு அப்போ அப்போ செக் செய்து டெலீட் செய்துடு

அர்ஜுன் ப்ரீத்தியுடன் ஹாஸ்பிடல் கிளம்பட்டும். அவ பெயர் எங்கும் எதிலும் இன்வோல்வ் ஆகவே கூடாது. நம்ம டீம் கிட்டே சொல்லி பாசெஞ்சேர் நேம் எல்லாம் வெப்சைட்டில் இருந்து கூட எடுத்துட சொல்லு. காஜல் வீட்டுக்கு போய்ட்டாளா ?”என்றார் வீரேந்தர்.

“இப்போ தான் வீட்டில் ட்ராப் செய்து விட்டு திரும்புவதாய் லேடி கான்ஸ்டபிள் இன்போர்ம் செய்தாங்க.வெளியே இதை எல்லாம் சொல்ல வேண்டாம் என்று இன்போர்ம் கொடுத்துட்டேன்.” என்றான் சரண்.

அதற்குள் ப்ரீத்தியை கைகளில் ஏந்தியவாறு வெளி வந்தான் அர்ஜுன்.

“அர்ஜுன் ! நீ உடனே கிளம்பு …..ப்ரீத்திக்கு இன்னொரு  இன்னொரு டோஸ் மருந்து கொடுக்க வேண்டி வரும்.  நம்ம வீட்டுக்கும் தகவல் கொடுத்துடு. நைட் ஸ்டே செய்யணும் என்றால் யாராவது ஒரு பெண் தேவை படும்.”என்றார் வீரேந்தர்.

ப்ரீத்தி கை கால்கள் உதறி கொண்டு இருக்க, நிற்க முடியாமல் துவண்டவளை தன் கரத்தில் ஏந்தி இருந்தான் அர்ஜுன். அவன் கழுத்தில் இரு கைகளையும் கோர்த்து கொண்டு அவன் நெஞ்சில் தலை சாய்த்த கொண்டாள் ப்ரீத்தி.

தலைவலி மிக அதிகமாய் இருக்க,கண்களை திறந்து வைப்பதே மிகவும் சிரமமாய்  இருக்க, கண்களை திறப்பதும் மூடுவதுமாய் இருந்த ப்ரீத்தி, அந்த ரயில் நிலையத்தின் நிலைமையை பார்த்தவள் முகம் வேதனையில் சுருங்கியது.

வாயில் வரை அவளை அர்ஜுன் இரு கைகளில் ஏந்தி கொண்டு செல்ல,”வெயிட் …வெயிட்” என்று முனகினாள் ப்ரீத்தி.

“Kī hō’i’ā? Kī tuhānū saṭa lagī hai/என்ன ஆச்சு .எங்கேயாவது  வலிக்குதா?என்னமா செய்யுது?  “என்றான் அர்ஜுன் பதற்றத்துடன்.

அவன் தவிப்பு,துடிப்பை புரியாமல் பார்த்த ப்ரீத்தி,”போலீஸ் …..வாண்ட் போலீஸ்.”என்றாள்.

“Bā’ada vica unhāṁ nāla gala karō/பிறகு அவர்களுடன் பேசலாம்.முதலில் ஹாஸ்பிடல் போகலாம்.”என்றான் அர்ஜுன்

“நோ ….நோ …ஹாஸ்பிடல்…டாக் டு போலீஸ்.”என்று மீண்டும் சொல்ல, தீப் தன் அண்ணனையும்,பெரியப்பாவையும் அழைத்தவாறே ஓடினான்.

அவன் பின்னால் ஓடி வந்த வீரேந்தர்,சரண் இருவரும் ப்ரீத்தியின் முகம் பார்க்க,”drugs ….போதை மருந்து ….drugs பரண் மேல் இருக்கு.”என்று தமிழில் சொல்ல, அவர்களுக்கு புரியாமல் விழிக்க, அவள் கன்னம் தட்டி ,

“அண்ணி ஸ்பீக்  அப்  இன் இங்கிலீஸ் அண்ணி.”என்றான் தீப்.

“ட்ரக்ஸ் இன் தி பாத்ரூம் ராப்ட்/பாத்ரூம் பரண் மேல் போதை மருந்து பை இருக்கிறது.”என்று ப்ரீத்தி மயக்கத்தை மீறி சொல்ல, அடுத்த நொடி சரண் ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு ஓடி,  அங்கு  பரண் மேல் போடபட்டு இருந்த பையை எடுத்து வந்தான்.

திறந்து பார்க்க பல கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கேக், வாழைப்பழம்,புத்தகத்தில், சாக்லேட், மாவு , சப்பாத்தி உள்ளே இருந்து அவர்களை பார்த்து சிரித்தது.

அதை கண்டு அர்ஜுனும் மற்றவர்களும் திகைத்து நிற்க, அர்ஜுன் நெஞ்சில் தலை வைத்தவாறு அதை கண்ட ப்ரீத்தி,

“ரெண்டு ,மூன்று நாட்கள் கழித்து இதை எடுக்க அவர்கள் ஆட்கள் வருவார்கள்…இல்லை என்றால் ஸ்டேஷன் மாஸ்டர்ரை கூரியர் ஆக்குவார்கள்.

“ஆஃபீசர் கில்டு இன் ஹோட்டல்/அதிகாரி ஒருவர் ஒரு ஹோட்டலில் கொல்ல பட்டு இருக்கார்.

தி கேர்ள் கில்டு ஹிம் ஆல்சோ மார்டர்ட் ஆன் ரோடு பை லாரி/அதிகாரியை கொன்ற பெண்ணையும் ரோடுடில் லாரி வைத்து கொன்று விட்டார்கள்.

இட்ஸ் நோட் ராபெரி /அது கொள்ளையால் ஏற்பட்ட மரணம் இல்லை.

lot ஆப் மர்டர் சேஞ்சுடு டு அச்சிடேன்ட் /நிறைய மரணங்கள் அச்சிடேன்ட் என்று மாற்ற பட்டு இருக்கு.

சீமா,தன்ராஜ்,பர்வீன்,டிசோசா ஹி கில்டு …”என்று கோர்வை இல்லாமல் சொன்னவள் மயக்கத்தில் ஆழ  அவள் சொன்ன விஷயம் ரஞ்சித்க்கு தெரிவிக்க பட்டது.

எவை எல்லாம் பணத்தால்,அதிகார துஷ்ப்ரயோகத்தால் ‘ஆக்ஸிடென்ட்/விபத்து ‘ என்று பலவருடங்களாக மாற்ற பட்டு வந்ததோ அவை எல்லாவற்றையும் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டாள் ப்ரீத்தி.

இவள் சொன்னதே ஆறு கொலைகள் …வெளியே தெரியாமல் இன்னும் எத்தனையோ.

இவள் சொன்ன வழக்குகள் அனைத்தையும் ரஞ்சித் டீம், வீரேந்தர் டீம் அலச ஆரம்பித்தனர். அம்ரிஸ்டர் போலீஸ் தலைமையகமே இதில் அதிர்ந்தது. வெளியே தெரியாமல் அனைத்து வழக்கு ரிப்போர்ட்களும் ரஞ்சித் டீம் கை பற்றியது.

கைகளில் மயங்கி விழுந்தவளை அர்ஜுன் தூக்கி கொண்டு ஓட ,தீப் காரினை ஸ்டார்ட் செய்ய, அர்ஜுன் ப்ரீத்தியை மடியில் வைத்தவாறு பின்னால் ஏறினான்.

“பேபோ….பியாரி ….Apaṇī’āṁ akhāṁ khōlō/கண்ணை திறந்து பாரு….Mainū isa tar’hāṁ nā ḍarā’ō/இப்படி என்னை பயமுறுத்தாதே….தீப் ஜல்தி ….”என்று கத்த, தீப் கையில் கார் பறந்தது

‘பியாரி/அன்பே …..டார்லிங் ….பேபி … உனக்கு ஒன்றும் இல்லை…உனக்கு எதுவும் ஆகவும் விட மாட்டேன்.  “என்ற அவன் அவன் ஜபமும் நிற்கவே இல்லை.

“ஸ்பீடா போ”என்ற அவன் கோபத்திற்கு ஆளாகி நொந்து நூடுல்ஸ் ஆகி கொண்டு இருந்தான் தீப்.

அர்ஜுனின் துடிப்பு,பதற்றம் ,ப்ரீத்திக்கு ஏதாவது ஆகி விட போகிறது என்ற  பயம் தீப்பிற்கு புரிந்தே தான் இருந்தது என்றாலும் இந்திய ரோட்டில் அதற்கு மேல் எத்தனை வேகம் தான் சென்று விட முடியும்?

அடுத்த பதினைந்து நிமிடத்தில் அரசாங்க மருத்துவமனையை அடைந்தது அவர்கள் கார். அதுவரை தன் மடியில் அணைத்தவாறு வைத்து இருந்த ப்ரீத்தியை அர்ஜுன் கீழே விடவே இல்லை.

அமர்நாத், வீரேந்தர் ஏற்கனவே யோஜித்துக்கு அழைத்து இருக்க, அவன் தன் டாக்டர் டீம் உடன் ஸ்ட்ரெச்சர் வைத்து கொண்டு ஹாஸ்பிடல் வாயிலில் நின்றான்.

அர்ஜுன் ப்ரீத்தியை தூக்கி  வந்து அதில் படுக்க வைத்தவன்,எப்படி அவளுக்கு “ஓவர் டோஸ் “ஆனது என்று சொல்லி

“narcan ஒரு டோஸ் முப்பது நிமிடத்திற்கு முன் போட்டாங்க .நாலு தடவை வாந்தி எடுத்துட்டா. ஹெவி ஸ்வீட்டிங் . நான்கு பாட்டில் தண்ணீர் குடித்து இருக்கா.”என்று அவள் கையை பிடித்தவாறே ஓடியவன், யோஜித்துக்கு சொல்ல அடுத்த கட்ட டிரீட்மென்ட் ப்ரீத்திக்கு அங்கு ஆரம்பமானது.

அறை வாயிலில் நிற்க வைக்க பட்ட அர்ஜுன் கண்ணில் வழியும் கண்ணீரை துடைக்க மறைந்தவனாய் உள்ளே அவளுக்கு கொடுக்க படும் டிரீட்மென்ட்டை வெளியில் இருந்து தன் உயிர் துடிக்க பார்த்து கொண்டு இருந்தான்.

யோஜித்  வெளியே வரும் வரை அவன் உதடுகளில் பிராத்தனை நிற்கவேயில்லை. இருபது  நிமிடம் கழித்து யோஜித் கதவை திறந்து கொண்டு வெளியே வர, உயிரை கையில் பிடித்து கொண்டு அவனை நோக்கி சென்றான் அர்ஜுன் .

“நத்திங் டு வொரி …ஷி இஸ் பைன்.தூங்கிட்டு இருக்காங்க .. விழிப்பதும் மயங்குவதுமாய் இருக்காங்க ….ட்ரக்ஸ் சைடு எபெக்ட் இன்னும் இருக்கு….இன்னும் ரெண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு கூட்டி போய்டலாம். அதிக அளவு ட்ரக் உள்ளே போகலை.சோ உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை.”என்றான்

அவனை கட்டி பிடித்து கொண்ட அர்ஜுன், “தேங்க்ஸ் டா …தேங்க்ஸ் சோ மச்” என்று கட்டி பிடித்து கண்ணீர் வடிக்க

டாக்டர் யோஜித் -அர்ஜுன்,அமன் இருவருக்குமே உயிர் தோழன்.மற்ற எல்லாவற்றிலும் அடித்து கொண்டாலும் யோஜித் இருவருக்குமே ரொம்ப ஸ்பெஷல்.

“என்னடா இது சின்ன குழந்தை போல்…”என்று அவனை தட்டி கொடுத்தான் யோஜித்.

அமர்நாத் அதற்குள் வீரேந்தர்,சரணை அழைத்து விவரம் சொல்லி விட, அதை அவர்கள் ராணுவ ஹெலிகாப்டரில் சண்டிகர் நோக்கி பறந்து கொண்டு இருந்த ரஞ்சித்துக்கு சொல்ல ,அது வரை நெஞ்சை அழுத்திய பாறாங்கல் போன்ற போன்ற உணர்வு விலகி விட ஆழ்ந்த பெருமூச்சு விட்டான் ரஞ்சித்.

சண்டிகரில் அவன் வந்த ஹெலிகாப்டர் தரை இறங்கி இருக்க,அடுத்த பதினைந்து நிமிடத்தில்  பஞ்சாப் முதலமைச்சர் முன் சலூட் அடித்து நின்றான் ரஞ்சித்.

அமர்நாத் வீட்டிற்கு அழைத்து நடந்த விஷயத்தை சொல்ல ,ஒட்டுமொத்த மொத்த குடும்பம் பதறி கொண்டு கிளம்பியது.

ப்ரீத்தி ஜஸ்மிந்தேர் சேர்க்கப்பட்டு இருந்த அதே தளத்தில் தான் ப்ரீத்தி ஜெகன்நாதனும்  சேர்க்க பட்டு இருக்க, விஷயம் கேள்வி பட்ட அமன்ஜீத் நெற்றி சுருங்கியது. ரயில்வே ஸ்டேஷன் போதை மருந்து பிடிப்பு பற்றி அங்கு இருந்த தீப் அவனிடம் சொல்ல, அவனுள் இம்சையான உணர்வு.

ரௌண்ட்ஸில் இருந்த யோஜித்தை பிடித்தவன்,”யோஜித்! ஜெஸ்ஸி எப்படி drug எடுத்து இருக்கா?  inhalation /மூக்கினால் உறிஞ்சியா  இல்லை இன்ஜெக்ஷன்னா/ஊசி மூலமாகவா?”என்றான் பதைப்புடன்.

“அது தான் புதிரா இருக்கு அமன். நீ  சொன்ன ரெண்டு வழியிலுமே இல்லை. பொதுவாய் போதை மருந்து பயன் படுத்துபவர்கள்- ஒன்று அதை மூக்கினால் உறிஞ்சியோ இல்லை ஊசி மூலமாகவோ, இல்லை என்றால் மாத்திரையாகவோ தான் பயன்படுத்துவார்கள்.

சாப்பிட்ட உணவில் சேர்த்து எல்லாம் சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஜெஸ்ஸி அதை  உணவில் சாப்பிட்டு இருக்கிறாள். லாப் டெஸ்ட் அவள் சாப்பிட உணவில் இருப்பதாய் சொல்லுது. சம்திங் நாட் ஆட் அப்.(something not add up)”என்றான் யோஜித்.

“இப்போ எப்படி இருக்கா?”என்றான் அமன்ஜீத் நெற்றியை தேய்த்தவாறு.

“டிரீட்மென்ட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. ஷி இஸ் அவுட் ஆப் டேஞ்சர்.ஷி இஸ் அவேய்க் நௌ .போய் பாருங்க .”என்றான் யோஜித்.

நான்கு மணி நேரமாய் பயங்கர டென்ஷன்னில் நின்று இருந்த அமன்ஜீத் அங்கு இருந்த சுவரில் சாய்ந்து தன்னை ஆசுவாச படுத்தி கொண்டான்.

தீப் அதற்குள் விஷயத்தை அர்ஜுனிடம் சொல்லி இருக்க, அமன்ஜீத்தை  நெருங்கிய arjun,”என்ன ஆச்சு அமன்?”என்றான்.

“தெரியலை அர்ஜுன். அம்மாவின் தோழி இந்த பொண்ணு. என் கிட்டே வேலை செய்ய தான் வந்து இருக்கா.நான் தான் இவளை பிக் அப் செய்ய ஸ்டேஷன் வந்தேன். வரும் போதே முழு தள்ளாட்டம்.

மயங்கி விழுந்தவளை இங்கே சேர்த்தால் யோஜித் ,”எத்தனை நாளா இவ ட்ரக் அடிக்ட் ?”என்று கேட்கிறான். சீரியஸ் கண்டிஷன்.  நான்கு மணி நேரம் பயங்கர டென்ஷன். இப்போ தான்   கண் விழித்து இருக்கா என்று யோஜித் சொல்லிட்டு போனான். தீப் ஏதோ சொல்றான்.”என்றான் அமன்

ப்ரீத்தி  தனக்கு பார்த்து இருக்கும் மணமகள் என்றும்,அவள் தங்கள் வீட்டில் தங்க வந்து இருப்பதாகவும்,   ட்ரெயின்னில் வரும் போது போதை மருந்து கடத்தல் பற்றி தகவல் கொடுத்தது ஆரம்பித்து, அவளை இங்கே சேர்த்து இருப்பது வரை அர்ஜுன் மீண்டும் சொல்லி முடிக்க,அமன்ஜீத் விழிகள் விரிந்தன .

“ஐயன் லேடி தான் போல் இருக்கே …ராணி மாய் பாகோ ,ராணி சதா கவுர் ,ராணி ஜிந்த் கவுர் ,பீபீ சாஹிப் கவுர் போன்ற பெண் போராளிகளுக்கு இணையாய் செயல் பட்டு இருக்காங்க. எனக்கு என்ன என்று போகாமல் ரொம்ப நிதானமாய்,யோசித்த செயல் பட்ட விதம் மார்வெல்லோஸ்.”என்று உணர்ந்து பாராட்ட அர்ஜுன் முகம் ப்ரீத்தி பற்றிய பெருமையில் மிளிர்ந்தது.

(ஐயோ ஆத்தி… ப்ரீத்தி அமன் மனதில் வேற நங்கூரம் போட்டுட்டாளே, ப்ரீத்தி 5 ஸ்டார் ,ஜெஸ்ஸி 0)

அதற்குள் நர்ஸ் வந்து,”உள்ளே செல்லலாம்.”என்று சொல்ல அமன் முகம் கோபத்தில் சிவந்தது.

உள்ளே கோபத்தோடு  நுழைந்தவனின் பின்னால் அர்ஜுன்,அமர்நாத்,தீப்,அமன் அம்மா தன்வி அவன் பின்னாலேயே நுழைய,உள்ளே வந்த அவர்களில் ஒருவனை கண்ட அவள் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தது.

(யாரை கோல்டன் பிஷ் லுக்கு விடுது? அர்ஜூனையா அமன்ஜீத்தையா?)

முகம் புன்னகையை தத்து எடுக்க ஜெஸ்ஸி ஏதோ சொல்வதற்குள் அவளை அறைந்து இருந்தான் அமன்ஜீத்.

“அமன்!”பலரின் குரல் அங்கு திகைப்போடு எதிரொலிக்க,அர்ஜுன் ,அமர்நாத் அவனை இழுத்து பிடித்தார்கள்.

“சே …நீயெல்லாம் ஒரு பொண்ணா ….பொண்ணுன்னா யாரு தெரியுமா ..மத்தவங்க உயிரை காக்க  தன் உயிரையும் பணயம் வைத்து அடுத்த அறையில் படுத்து இருக்காங்களே அவங்க.

நீயெல்லாம் எதுக்கு உயிர் வாழறே…உயிரின் மதிப்பு தெரியுமா உனக்கு? பணம் இருந்தால் எப்படி வேண்டும் என்றாலும் வாழலாமா? இந்த வயசில் அப்படி என்ன போதை மருந்து வேண்டி கிடக்கு உனக்கு ? …”என்று அந்த அறையே அதிரும் வகையில் கத்த, மூச்சு விடவும் மறந்தவளாய் கன்னத்தை கையில் பிடித்து கொண்டு மிரள மிரள அமன்ஜீத் கண்டு விழித்தாள் ப்ரீத்தி ஜெஸ்மிந்தேர்.

அவள் ஏதோ சொல்ல வர,கை காட்டி நிறுத்திய அமன்ஜீத்,”உடல் சரியானதும் இங்கே ட்ரக் ரிஹாப் இருக்கு. அதில் சேர்ந்து குணமாகும் வழியை பாரு. இல்லை உன்னை நானே கொன்னுடுவேன்.”என்று கர்ஜித்தான்.

“ஜெஸ்ஸி  இஸ் நாட்  ட்ரக் அடிக்ட்.” என்ற குரல் அந்த அறையில் ஆங்கிலத்தில் எதிரொலிக்க ,அதிர்ந்து திரும்பியவர்கள், அங்கு வாயிலில் தள்ளாடி கொண்டு ப்ரீத்தி நிற்பதை கண்டனர்.

அர்ஜுன் அடுத்த நொடி அவளை தாங்கி இருந்தான்.

“ப்ரீத்தி இங்கே என்ன செய்யறே?”என்றாள் ஜெஸ்ஸி திகைப்புடன்

“அண்ணி இங்கே என்ன செய்யறீங்க? வாங்க வந்து படுங்க.”என்று தீப் ஆங்கிலத்தில் அவளிடம் சொல்ல ,கை காட்டி நிறுத்திய ப்ரீத்தி ,

“சாரி டாக்டர் …சொல்ல சொல்ல கேட்காம எழுந்து வந்துட்டாங்க …எவ்வளவோ தடுத்து பார்த்தேன் …கேட்கலை …”என்று மென்று விழுங்கிய நர்ஸ் யோஜித் கோபத்தை நினைத்து பயத்தில் தந்தி அடித்தார்.

இவர்கள் கெஞ்சல்,தவிப்பு எதையும் கண்டு கொள்ளாத ப்ரீத்தி, தான் எதற்கு அந்த அறைக்கு அந்த மயக்க நிலையிலும் வந்தோமோ அதை சொல்லாமல் போக போவதில்லை என்று வைராக்கியத்துடன் நின்றாள்.அவளை தாங்கி பிடிப்பதை தவிர அர்ஜூனால் அப்போதைக்கு வேறு எதையும் செய்ய முடியவில்லை.

“ஜெஸ்ஸி  ட்ரக் அடிக்ட் இல்லை… சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி கொண்டு இருப்பவள்… அவங்க ப்ரோக்ராம் எல்லாம் அட்டென்ட் செய்து இருக்கேன். போதை பொருள் ஏதுவாய்  இருந்தாலும் அதை எதிர்த்து எங்களுடன் நிற்பவள் அவள்.

ஏதோ தப்பு நடந்து இருக்கு..டாக்டர் யோஜித் உங்களை பத்தி பேசி கொண்டு இருந்ததை கேட்டேன்.நீங்களா இருக்குமோன்னு டவுட் பட்டு தான் பார்க்க வந்தேன்.   ஷி இஸ் நாட்  ட்ரக் அடிக்ட் “என்றவள் தள்ளாட அவளை கைகளில் ஏந்தி கொண்டான் அர்ஜுன்.

“உங்களுக்கு இவளை தெரியுமா?”என்றான் அமன்ஜீத்.

அர்ஜுன் கைகளில் இருந்தவளின் அழகு அவனை திகைக்க வைத்து இருந்தது.

‘மச்சம் தான் டா உனக்கு ….உனக்கு மட்டும் எல்லாம் எப்படி தான் அமையுதோ.’என்று மனதிற்குள் புலம்பினான் அமன்ஜீத்.

அவன் கண்கள் இமைப்பதும் தவறு என்று விழி விரித்து ப்ரீத்தி ஜெகன்நாதனையே  பார்த்து கொண்டு இருந்தது.  அந்த ஹாஸ்பிடல் கோலத்திலும் அவளின் அழகு சற்றும் குறையவில்லை என்றே அமன்ஜீத்திற்கு  தோன்றியது

“ரொம்ப பழக்கம் இல்லை… பட் அவங்க நடத்தும் “ஹெல்ப்”என்ற தொண்டு நிறுவனத்தில் ஒர்க் செய்து இருக்கேன். ..அது போதை மறுவாழ்வு மையம். ..எட்டு வருஷமாய் ஜெஸ்ஸி தான் நடத்திட்டு இருக்காங்க.”என்றாள் ப்ரீத்தி.

“மேடம்.டோன்ட் ஸ்ட்ரைன் யுவர்ஸெல்ப்.வாங்க யு நீட் ரெஸ்ட்.”என்றான் யோஜித்.

அர்ஜுன் அவளை கரங்களில் அள்ளி கொண்டு அவள் படுக்கையில் விட,புன்னகையுடன் கண் மூடியவளின் தலையை கோதி கொடுத்த அர்ஜுன்,அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அதே சமயம் அங்கு ஜெஸ்ஸி அறையில் நின்ற ஒருவன் முகம் நொடியில் கொலைவெறியில் இருந்து மிக சாதாரணமாய் மாறியதை யாரும் கவனிக்கவில்லை.அவன் கையில் இருந்த ஊசி ஒன்றினை தன் ஆடைக்குள் மறைத்தவன் அங்கு இருந்து விரைவாய் அகன்றான்.

(இவன் எவண்டா ? இவன் எதுக்கு ஜெஸ்ஸியை டார்கெட் செய்து கொலை செய்ய ட்ரை செய்யறான் ?)

“அப்போ நீ ட்ரக் அடிக்ட் இல்லையா?” என்றான் அமன்ஜீத் தன் தலையை கையால் அழுத்தியவாறு  தன் தடுமாற்றத்தை மறைத்தவாறு

தன் தலை அசைத்து அதை ஆமோதித்தித்தவள், ஒரு கையால் அவனை அருகே அழைக்க, கிட்டே சென்றவன் அடுத்த நொடி ரெண்டு அடி தள்ளாட்டத்துடன் பின் வைத்தான்.ஜெஸ்ஸி அவனை ஓங்கி அறைந்து இருந்தாள் .

“அந்த கருமத்தை எடுத்து தான் தமிழ்நாட்டில் என் அண்ணன் அவன் தோழர்கள் என்று ஐந்து பேர் இறந்தானுங்க…பள்ளி ,கல்லுரி அருகே சாக்லேட் விற்பது போல் விற்று கொண்டு இருக்கானுங்க.பிஞ்சு குழந்தைங்க தாங்க சாப்பிடுவது போதை மருந்து என்பது அறியாமலே விஷத்தை -இனிப்பு என்று வாங்கி செத்து இருக்குங்க.

விஷயம் வெளியே தெரியாமல் மறைக்க பட்டு இருக்கு ….அதை எதிர்த்து போராடிட்டு இருக்கேன் …என்னை பார்த்து ட்ரக் அடிக்ட் என்றா சொல்றே ….மனுசனா நீ?

நான் ட்ரக் அடிக்ட் கிடையாது.நான் அமிர்ஸ்டர் ரயில்வே நிலையத்தில் “வைட் பிஜியன் /வெள்ளை புறா “என்ற கடையில் தயிர் சாதம், சப்பாத்தி குருமா  வாங்கி மட்டும் தான் சாப்பிட்டேன்.வேறு எதையும் இன்று காலையில் இருந்து சாப்பிடலை.”என்றாள் ஜெஸ்ஸி ஆங்கிலத்தில் -பொரிந்தாள் என்று சொன்னால் சரியாய் இருக்குமோ.

அமன்ஜீத் தன் கன்னத்தை பிடித்தவனாய் பிரமை பிடித்தவன் மாதிரி ஜெஸ்ஸியையே பார்த்து கொண்டு நின்றான்.

‘யப்பா என்ன அனல் அடிக்குது ….எரிமலைக்கு cloning மாதிரி செம்ம ஹாட்….ஸ்பைசி சில்லி.’என்று மனதிற்குள் சொல்லி கொண்டவன் அவளை இமைக்காமல் பார்த்து வைத்தான்.

(அடேய் …யாரையாவது ஒருத்தியை பாருடா …எல்லோரையும் இப்படி பார்த்து வைத்தால் ஒரு முடிவுக்கு நாங்க வர வேண்டாமா?)  

“அமன்…ரயில் நிலையத்தில் போதை மருந்தினை கேக், வாழைப்பழம், சப்பாத்தியில் வைத்து தான் கடத்தறாங்க.ஒரு வேளை போதை மருந்தை சப்பாத்தியில் கலந்து விற்கிறாங்களோ என்னவோ…எதற்கும் இதை வீரேந்தர்,சரண் கிட்டே சொல்வது தான் சரி என்று படுது.”என்றார் அமர்நாத்.

அடுத்த நொடி வீரேந்தருக்கு தகவல் சொல்ல பட,அதை ரஞ்சித் டீம்மிற்கு அவர் சொல்ல,அமிர்ஸ்டரில் இருந்த அவனின் இன்னொரு டீம் அந்த கடையை சுற்றி வளைத்து, அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த ஐவரை கைது செய்தது.

உள்ளே தள்ளி அவர்கள் விசாரித்த முறையில் பஞ்சாப் முழுக்க அது மாதிரி முக்கிய இடத்தில்,பள்ளி,கல்லுரி அருகே செயல் பட்டு வந்த பல ‘பாஸ்ட் பூட் /துரித உணவகங்க ளில்  ரெய்டு  அரங்கேறி பல கிலோ போதை மருந்துகள் பிடிப்பட்டன.

இவை எல்லாம் மிக சாதாரண துரித உணவகங்கள் தான்.ஆனால் இவர்கள் வாடிக்கையாளர்கள் வெள்ளை டோக்கன் கொடுத்தால் “ஸ்பெஷல் உணவு “இவர்களுக்கு கொடுக்க படும்…அதாவது  போதை மருந்து கலந்த தயிர் சாதம்.

அந்த கடையில் ‘தயிர் சாதம்/curd rice’  என்பது code word என்பதை அறியாத ஜெஸ்ஸி பயணம் செல்வதால் சப்பாத்தி,குருமாவுடன்,தயிர் சாதம் ஆர்டர் கொடுத்து இருந்தாள்

அதாவது அந்த கடையில் போதை மருந்தினை வாங்கும் ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டுமே அங்கு தயிர் சாதம் விற்பது தெரியும்.உடல் நலத்தை கருத்தில் கொண்டு ஜெஸ்ஸி கொடுத்த ஆர்டர் அவள் உயிருக்கே எமனாய் வந்து விட்டது.

ஜெஸ்ஸி போர்டில் இல்லாத உணவினை ஏதோ ஒரு நினைவில் ஆர்டர் கொடுக்க, அவள் ரெகுலர் கஸ்டமர் என்று நினைத்து   கேஷியர் ‘வெள்ளை டோக்கன்’ கொடுத்து விட,அவளுக்கு போதை மருந்து கலந்து இருந்த உணவு பொருள் வழங்கபட்டு இருந்தது.

அதை உண்ட ஜெஸ்ஸி “ஓவெர்டோஸ்” நிலைக்கு சென்று விட்டாள்.நல்லவேளையாக தக்க சமயத்தில் கொடுக்க பட்ட டிரீட்மென்ட் அவள் உயிரை காப்பாற்றி.விட்டது.

இப்படியும் போதை மருந்து விற்பனை ஆகி இருக்கிறது என்ற விவரம் தெரிய வர, பஞ்சாப் முழுதும் வெவ்வேறு இடங்களில் அது மாதிரி செயல் பட்டு வந்த துரித உணவகங்கள் பல ரெய்டு நடந்து ஆட்கள் பிடிக்க பட,ஒவ்வொருவராய் தங்களின் டீலர் பக்கம் கை காட்ட ,இது மாதிரி விற்பனை செய்யும் காபோஸ் மெயின் டீலர்களில் ஒருவன் பிடிபட்டான்.

அதே சமயம் ப்ரீத்தி சொல்லி இருந்த ஆக்ஸிடென்ட் மரணங்கள் பற்றிய கேஸ் பைலை மீண்டும் தூசு துடைத்து எடுக்க பட்டது. எத்தனை கேஸ் ‘ஆக்ஸிடென்டல் டெத்’ என்று ஐந்து வருடமாய்  மூட பட்டு இருந்ததோ அவை மொத்தமும் மீண்டும்  ரஞ்சித் -சரண் தலைமையில் ஒரு டீம் அமைக்க பட்டு நோண்ட பட்டது.

ஆக மொத்தம் ரெண்டு ப்ரீதியினாலும் அந்த ‘காபோஸ்’ என்ற போதை மருந்து கூட்டத்தின் தலைவனுக்கு அந்த நாள் நரகமாகி போனது என்னவோ உண்மை.

அடி பயங்கர அடி.அவனை கோட்டையை யாருமே அசைத்தது இல்லை என்னும் போது சாதாரண பெண்கள் இருவரால் அவன் சாம்ராஜ்யமே ஆட ஆரம்பித்து இருந்தது.

ஒரு பொண்ணு நினைச்சா

இந்த  பூமிக்கும் வானுக்கும்  பாலங்கள் கட்டி முடிப்பாள் ……முடிப்பாள் .

பாசம் வந்துட்டால் …இவ பந்தி விரிப்பாள்

கோபம் வந்துட்டால் …இவ தண்ணீ தெளிப்பாள்

சித்தம் புதுசு …ரத்தம் புதுசு …அர்த்தம் புதுசு

ஆளும் புதுசு ….ஆணுக்கு பூ முடிப்பாள் .

பொம்பளை  சிரிச்சதாலே

பாரத போரும் தொடங்க …

பொம்பளை அழுததாலே

எரிஞ்சு போச்சு இலங்கை …

இன்பமும் துன்பமும் பெண்ணில் ஆரம்பமே

பெண்ணே உலகில் பாதி

பிரிஞ்சால் தெரியும் சேதி

நிலவும் நானே ….வெயிலும் நானே

பூவும் நானே …புயலும் நானே

நான் ஒரு கால விதி

ஆஹா பெண்குலம் வாழ்க

நாம் பதியும் காலடி  வாழ்க

பெண்ணின் பெயரை சொல்லி கொண்டு

பெண்ணின் கூந்தல் எண்ணி கொண்டு

சோலையில் பூ மலர்க

பெண்மையின் பெருமையை உணராமல்,பெண்மையின் ஆன்ம சக்தி பற்றி தெரியாமல்  அவர்களை போதை பொருளாய்,பணம் ஈட்டுவதற்கு மட்டுமே ஒரு வழியாய் கண்ட ‘அவன்’   அறியவில்லை ஒரு பெண்ணின் கையால் தான் தனக்கு மரணம் என்பதை.

அது வெறும் ‘ட்ரைலர்’ என்பதோ ,சாமானிய பெண் ஒருத்தி இனிமேல் தான் மெயின் படம் ஓட்ட போகிறாள் என்றோ அவன் அறிந்து இருந்தால் அங்கேயே அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருக்கும்.

ப்ரீத்தி ஜெகன்தான் மெக்ஸிகோவில் இருந்து வந்த அவன் போதை மருந்து ஷிப்மென்ட்டை ட்ரெயினில் பிடித்து கொடுத்து இருக்க, ப்ரீத்தி ஜெஸ்மிந்தேர் அது விற்பனை ஆகும் இடங்களில் ஒன்றான “துரித உணவகங்களை’ மூட வழி செய்து இருந்தாள் .

இவர்கள் இருவரையும் தாண்டி ஒருவன் பஞ்சாபில் அமன்ஜீத் கோடௌனில் இருந்து கிளப்பிய லாரியினை தமிழ்நாட்டில் பிடிக்க காரணமாய் இருந்தான்.அவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிய வந்தது ,அவன் யார் என்பது புரியாத புதிரே.

ஆக மொத்தம் இந்த மூவரால் “காபோஸ்”க்கு அன்றைய நாள் நல்ல நாள் இல்லமால் போனது என்னவோ உண்மை.

உணவு தரக்கட்டுப்பாட்டு ஆட்கள்,வீரேந்தர்,சரண் ,ரஞ்சித் டீம் ஸ்டேஷனரி ஷாப்,துரித உணவகம்,பெட்டி கடை என்று ஒன்றினையும் விட வில்லை.ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு இருபது பேர் கொண்ட டீம் என 50 குழு  ,ரெண்டே மணி நேரத்தில் உருவாக்கபட்டு  பஞ்சாப் அன்று அல்லோலகல்லோல பட்டது.

இந்திய நாட்டின் மிக உயரிய துணிச்சல்,மற்றும் சேவைக்கான  விருதுகளான -தி பாரத் அவார்ட்/bharat award, சஞ்சய் சோப்ரா விருதுகள்/sanjay chopra award,கீதா சோப்ரா விருதுகள்/geetha chopra award ,பப்பு கைதானி விருதுகள் /papu gaidani award,அசோகா சக்ரா/asoka chakra ,கீர்த்தி சக்ரா,keerthi chakra,ஷவுர்யா சக்ரா/shuarya chakra  போன்ற துணிச்சல் விருதுகள் ஆண்டு தோறும்,இந்திய திருநாட்டில்  பெறுபவர்கள் எல்லோரும் பொதுமக்களே.

ஆனால் சாதாரண குடிமகனை வெற்றி திருமகனாய்/திருமகளாய்  மாற்றுவதும் அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவே.

‘யாருக்கு என்ன நடந்தால் என்ன”என்று இவர்கள் போகாததே இவர்களை நிஜ வாழ்க்கை “சூப்பர் ஹீரோஸ் “ஆக்கி இருப்பது.

மனித நேயம் மிக பெரிய ஆயுதம்.

அந்த ஆயுதத்தை கையில் கொண்டு சாதாரண மக்களான இவர்கள்,மனத்துணிவு ஒன்றே வழிகாட்டியாய் அசாதாரண சூழ்நிலையில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மற்றவர்கள் உயிரை காக்க  தயங்கியதே இல்லை

பயம் என்ற அரக்கனை கடந்து விட்டால், உயிர் போகும் அந்த கடைசி நொடி வரை மனதிடத்துடன் போராடி விடலாம் என்பதே இவர்கள் வாழ்க்கை நமக்கு கற்று கொடுக்கும் மிக உன்னத பாடம்.

பிறருக்காக கண்ணீரும்
பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்.

கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா?

கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா?

கெடுப்பவன் மனிதனா எடுப்பவன் மனிதனா

கொடுப்பவன் எவனடா அவனே மனிதன்…

மனிதன் மனிதன்…

என்ற பாடல் வரிகளுக்கு உதாரணமாய் அங்கு இருந்தார்கள் ப்ரீத்தி ஜெகன்நாதனும்,ப்ரீத்தி ஜெஸ்மிந்தரும்  .

பயணம் தொடரும் …

error: Content is protected !!