OVOV 31

OVOV 31

2019 Ford Endeavour launch price Rs 28.2 L for 4x2 MT, Rs 33 L for 4x4 AT

அர்ஜுனின் ford endeavour 7 சீட்டெர் suv-special utility vehicle வகையை சார்ந்தது.முன்னே இரு இருக்கை.நடுவே மூவர் அமரும் இருக்கை.அதன் பின் இருவர் அமரும் வைகையில் மொத்தம் 7 சீட் உள்ள கார்.

அர்ஜுன் மிகவும் விவரமானவனாக கடைசி இருக்கைகளை மடித்து விட்டு இருந்தான்.அதன் இடத்தை திருமண வீட்டிற்கு கொடுக்க வேண்டிய சீர் வரிசைகள்,பரிசு பொருட்கள் எல்லாம் நிரப்பபட்டு இருந்தது.

ஒரு பிறந்த நாளுக்கே பத்து பரிசுகளை கொண்டு வரும் பஞ்சாபிகள், திருமணம் என்றால் கேட்கவும் வேண்டுமா?அதுவும் மிகவும் தெரிந்தவர் வீட்டு நிகழ்ச்சி என்றால் கடைகளில் எத்தனை விதமான திருமண பரிசுகள் கிடைக்குமோ அதில் பாதியாவது வாங்கி கொடுப்பார்கள்.

இவன் ரெடி ஆகி வருவதற்குள் ராஷ்மி வீட்டு வேலையாட்களை கொண்டு இவற்றை எல்லாம் ஏற்றி இருந்தது அர்ஜுனுக்கு மிகவும் வசதியாகி போனது.

சோ ப்ரீத்தி கடைசி சீட்டில் அமர முடியாமல் செய்தாகி விட்டது.

நடு இருக்கையில் தீப்,அமர்நாத் ஏறி அமர்ந்து அந்த மூன்று பேர் சீட்டினை ரெண்டு பேர் முழுவதுமாய் ஆக்ரமித்து இருந்தனர். ப்ரீத்தி வந்தது தெரிந்தும் இருவரும் அவளை கவனிக்காதது போல், நகரவே மாட்டோம் என்று ஆணி அடித்தார் போல் அமர்ந்து இருந்தனர்.

நடு இருக்கையும் போயிந்தே.இட்ஸ் கான்.

இவர்களின் திட்டம் தெரியாமல்,கூட்டு களவாணிகள் என்ற விவரம் அறியாமல்,தான் எங்கே அமர்வது என்று புரியாமல் காரினுள் எட்டி எட்டி பார்த்து கொண்டு தயங்கி நின்றாள் ப்ரீத்தி.

“வீர்ஜி பக்கத்துல உட்காருங்க பர்ஜாயீ.” என்றான் தீப் கார் ஜன்னல் வழியே எட்டி பார்த்து.

‘அய்யோ!… இவன் அருகே நானா?…இவன் ஆகர்சனத்தில் சிக்கியவர்கள் மீளவே முடியாதே.

‘அர்ஜுன் ஈர்ப்பு சக்தி/ARJUN’S GRAVITATIONAL FORCE’ என்ற ஒன்றை, ‘புவி ஈர்ப்பு சக்திக்கு’ போட்டியை உருவாக்கி, astronomy ஆராய்ச்சிகளுக்கே சவால் விட்டு கொண்டு இருக்கிறானே’ என்று ஒரு பக்கம் விழித்தலும்,கரும்பு திங்க கசக்குமா என்ன என்று குத்தாட்டம் போட்டு கொண்டு இருந்தது ப்ரீத்தியின் மனம்.

பல்வரிசை அழகாய் தெரிய, அவளுக்கு மட்டுமேயான அவனின் பிரத்தியோக சிரிப்பு  ஒன்று உதடுகளில் உருவாக, கண்களில் காதல் லட்சம், கோடி சூரிய ஒளியை மிளிர வைக்க, தன் இருக்கையில் இருந்து சரிந்த அர்ஜுன், தன் அருகே அவள் அமர கதவை திறந்து விட்டு புன்னகைத்தான்.

அவனின் அந்த வசீகர புன்னகையில் மூச்சடைக்க நின்றாள் அந்த பாவை.

‘இன்றைக்கு நம்ம கொஞ்சம் இல்லை ரொம்பவே தான் உஷாராய் இருக்கணும் .ஸ்டெடி ப்ரீத்தி செல்லம்.’என்று மனதிற்குள் சொல்லி கொண்டே அர்ஜுன் அருகே இருந்த இருக்கையில் ஏறி அமர்ந்தாள் ப்ரீத்தி.

அர்ஜுன் முகத்தில் மந்தகாச புன்முறுவல் ஒன்று தோன்றி நிலை கொண்டு விட, தன் அருகே அவள் அமர வேண்டும் என்று தான் போட்ட திட்டம் நிறைவேறியதை கண்டு அவன் மனம் ஒரு குத்தாட்டமே போட்டது.

ப்ரீத்தி பின் இருக்கையில் அமர்ந்து விட்டால் இவன் எப்படி பேசுவது,பழகுவது,அவளை இன்ச் பை இன்ச்சாக எப்படி ரசிப்பது ,அதி முக்கியமாய் சைட் அடிப்பது,ஜொள் அருவி பொழிவது?

அர்ஜுன்   சீட் பெல்ட் அணிந்து கொண்டு, அவளுக்கும் கை காட்ட பிரீத்தியும் சீட் பெல்ட் அணிந்து கொண்டாள்.

‘சே சீட் பெல்ட் அணிய தெரியாமல் இருந்து இருக்கலாமோ? இந்த அப்பாவை யாரு இப்போ கார் வாங்கவில்லை என்று அழுதது?

சீட் பெல்ட் அணிய தெரியாமல் இருந்து இருந்தாலாவது இப்படி அப்படி என்று சீட் பெல்ட் அணிவிக்கும் சாக்கில் ஏதாவது ரொமான்ஸ் நடந்து இருக்கும்.நல்ல சான்ஸ் மிஸ் ஆகிடுச்சே ‘என்று ப்ரீத்தி மனம் புலம்ப அவள் மூளை,’இது தேறவே தேறாது ‘என்று முடிவுக்கே வந்து விட்டது.

(இது எங்கோ கேட்ட டயலாக் ஆச்சே ….அஜித்,சிம்ரன் ,மௌத் ஆர்கன்…)

‘சே! சீட் பெல்ட் அணிய தெரியாமல் இருந்து இருக்க கூடாதா?’  -அவன்

(என்னமா யோசனை எல்லாம் வருது… கார் சீட் பெல்ட்டை கூட விட்டு வைக்க மாட்டாங்க போல் இருக்கே. இதுங்க அக்கப்போருக்கு ஒரு அளவு இல்லையா மை லார்ட்.

இல்லையே அப்பவும் ரொமான்ஸ் நடக்குமே

என்னது  சீட் பெல்ட் அணிந்த பிறகும் ரொமான்ஸ்  நடக்குமா ?)

காரை கிளப்பாமல் அர்ஜுன் காலம் தாழ்த்த, என்ன என்ற ப்ரீத்தியின் கண்களில் இருந்த கேள்விக்கு,”செக்…பெல்ட்…’என்று அர்ஜுன் அவள் பக்கம் சரிய, ப்ரீத்திக்கு சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணமே மறந்து தான் போனது.

நெருங்கினால் சுவாசிக்க மறந்து போக  வைக்கும் வித்தை அந்த கள்வனுக்கு கை வந்த கலையாய் இருந்தது.

‘பாவி!…பாவி!…செக் செய்யும் லட்சணத்தை பாரு …traffic police கூட இப்படி விழுந்து விழுந்து செக் செய்ய மாட்டாங்க.

செக் செய்வதற்கு புது ட்ரெண்ட் உருவாக்கிடுவான் போல் இருக்கே!…

அடேய்!… நகர்ந்து போ டா… அரை இன்ச் ஸ்கேல் நெருக்கத்தில் அப்படி என்னத்தை செக் செய்யறே!…’ என்று இருக்கையில் ப்ரீத்தி அதிகமாய் புதைய, அவளை வதைக்கிறோம் என்று தெரிந்தே arjun “செக்”என்ற பெயரில் அவள் முகத்தை, தேகத்தை கண்களால்  செக் செய்து கொண்டு இருந்தான்.

அரை இன்ச் இடைவெளியில் ஒரு சோதனை.அவன் எதை சோதனை செய்து கொண்டு இருந்தான் என்று அர்ஜுனுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் எல்லா பாலிலும் சிக்ஸர்.

(நீ நடத்து ராஜா நடத்து …உன் காட்டுல மழை )

இருவரில் ஒருவர்  துளி நகர்ந்தால் கூட அவளின் இதழ் அவன் கன்னத்திலும்,அவன் தேகம் அவள் மேலும் படிந்து விடும் நிலையில் வைத்து, அப்படி ஒரு சின்சியர் சோதனை அது.

(இனி கார் சீட் பெல்ட் பார்க்கும் போது எல்லாம் இதுங்க ரெண்டு தானே நியாபகத்திற்கு வரும் )

ஒரு கை ப்ரீத்தி அமர்ந்து இருந்த சீட்டின் மேல் இருக்க, இன்னொரு கை அவள் அணிந்து இருந்த சீட் பெல்ட் மேல் இருக்க,ஏறக்குறைய பட்டும் படாமல்,தொட்டும் தொடாமல் ப்ரீத்தியை இருக்கையோடு சேர்த்து அணைத்த நிலை.

“வாழ்க …கார் முன்னிருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்த அரசாங்கம்…நமக்கு என்னமா யூஸ் ஆகுது?…எவ்வளவு அருகே இருந்து இவளை பார்க்க முடியுது?

இனிமேல் வீட்டுக்கு பின்னால் இருக்கும் வயலுக்கு போக கூட கார் தான்.பழைய மாடல் அம்பாசடர் கார் என்றால் இன்னும் நெருங்குவது சுலபமாய் இருந்து இருக்கும்.

கார் உருவாக்கிய அதிமேதாவிகளுக்கு லவர் இல்லையோ? எவன்யா முன் சீட் ரெண்டையும் பிரிக்க சொன்னது?ஒரு அவசரத்திற்கு உபயோகபடுதா பாரு.எவ்வளவு எக்கி செல்ல வேண்டி இருக்கு ?

(உன் கவலை உனக்கு )

இனிமேலாவது என்னை மாதிரி காதலனை கான்சிடெர் செய்து சீட் அமைப்பை மாத்துங்கப்பா கார் கம்பெனிகாரங்களா. இல்லையென்றால் உங்கள் மேல் வழக்கு தான் தொடர போறேன்.’என்று புலம்பி கொண்டு இருந்தது அர்ஜுன் மனம்.

(சுத்தம் …முத்தி போச்சு ஹனி …அடுத்த சேது ரெடி செஞ்சுட்டியா?) 

‘ஹே குரு!…  இவ பெண் இனம் தானா?  …இல்லை  இவள் கிரேக்க புராணங்களில் சொல்ல பட்டு இருக்கும் “sirens “என்ற காரிகைகளின்  ராணியோ?

Pirates Of The Caribbean Brea Berrett Wallpapers Brea Berrett Photo Shared By Galen | Fans Share Images

இல்லை காதல் தேவதை என்றும், aphrodite என்றும்,வீனஸ் என்றும் அழைக்கப்படும் உலக இன்பங்கள் அனைத்திற்கும் ஊற்றா?

8 Unique Venus Goddess of Love. ideas | goddess of love, goddess, venus

கடவுள்களுக்கே கடவுளான ஹீரா இவள் தானோ?

Hera's class. | Smite Amino

இல்லை “nymphs” என்று  அண்ட சராசரத்தையும் ஆட்டிப்படைக்கும்  தேவதை பெண்களின் சக்கரவர்த்தினி இவள் மட்டும் தானோ

Nymphs (Fairy) Greek Mythology | Deities, Protectors of Youth

பல சாம்ராஜ்யங்களை இளவரசர்களை பித்து பிடிக்க வைத்த மெசபடோமியாவின்  பெண் கடவுள்,கடற்கன்னி  Atargatis இவளோ?

Tutorial At Home

அடுத்தவர்களுக்கு ஒன்று என்றால் எதை பற்றியும் சிந்திக்காமல் போராடும் இவள் “போர் கடவுள் Athena” தானோ?

Pin on Leg ideas

இவளை எதில் செய்து இருப்பாங்க.

யப்பா! …ரோஸ் கலரில் என்னமா இருக்கா?

கன்னம் வெண்ணையில் செய்தது மாதிரி என்னமா ஷைன் ஆகுது. தொட்டா  இவளே உருகி விடுவாளோ!…

என்ன மென்மை!  …என்ன பெண்மை!

கண்ணா இது?…நிச்சயம் பிளாக் ஹோல் தான்..இதுல விழுந்தவன் சத்தியமா மீள முடியாது.என்ன ஒரு கண்ணு …ஆளை அப்படியே கொல்லுதே!….

கண்ணுக்கு தெரியும் ஆடை மறைக்காத இடங்களே இப்படி லட்சம் வோட்ஸ் கரண்ட் செலுத்தி மனதை ஒருவழி ஆக்கிவிடுகிறது என்றால்,பிரம்மன் படைத்த கண்ணுக்கு தெரியாத பிற காவியங்கள் என்ன செய்யும்?’ என்று ப்ரீத்தியின் அழகில் அங்கு ஒருவன் பித்தாகி கொண்டு இருந்தான்.

‘வேண்டும் என்றே வதைக்கிறான்.பின்னாடி தம்பி,மாமா இருக்காங்கா…வீட்டின் முன் கார் நிக்குது.காருக்கு வெளியே குடும்பமே டாடா காட்டிட்டு நிக்குது…சார் இப்போ தான் ரொமான்ஸ் செய்யறார்…ஆனாலும் இவனுக்கு இருக்கும் கொழுப்பு,திமிரு வேற யாருக்கும் இல்லை…’என்றது ப்ரீத்தியின் மனம்.

‘இப்போ நீ என்ன சொல்ல வரே டியர் …சுத்தி இத்தனை பேர் இருக்காங்க என்பது தான் இப்போ உனக்கு முக்கியமான பிரச்சனையா செல்லம்? சுத்தி யாரும் இல்லைன்னா அப்போ இது உனக்கு ஒகே என்பாயா?’என்றது மூளை.

‘அதெல்லாம் நீ ஏன் சொல்ற?… அதெல்லாம் நீ சொல்ல  கூடாது ..’என்று மனம் கண்ணுக்குள் நிலவு விஜய் மாதிரி மூளையை கடித்து குதற,ப்ரீத்தி மூளையோ அமைதியாகி போனது -நமக்கு எதுக்கு இந்த வம்பு என்று.

‘இவனை பாரேன்- என்னமாய் இருக்கான்.பல கதைகள், புராணங்களில் வரும் கனவு நாயகன்கள், mythical ஹீரோஸ்களின் பிரதிபிம்பம் இவன் தானோ?

ரயில்வே ஸ்டேஷனில் என் பெயரை சொல்லி கொண்டு அந்த ஆபத்திலும் எனக்காக ஓடி வந்த இவன் வீரம்  மெசோபேடாமியாவின்  கில்கமெஷ் இவன் தானோ என்று தோன்ற வைக்கிறது.

Sayings from Mesopotamia Whoever falls in the battlefield is Blessing . King Gilgamesh.' (Ancient Legacy Keepers) | Comics, King gilgamesh, Character inspiration

இவன் பரந்து  விரிந்த இவன் தோள்கள் scandenavia நாட்டின் beowoulf  இவன் தானோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறதே.

மக்களுக்காக வாரி வாரி கொடுப்பதில் கர்ணன் இவன் தானோ.

ஜீயஸ் கடவுள் போன்ற ஆண்மை கொண்டவன்.

God of War - Birth and Death of ZEUS Cutscenes (God of War Story of ZEUS) 4K Ultra HD - YouTube

கண்கள் இருக்கும் இடத்தில் காதல் என்ற நெருப்பை வைத்து கொண்டு கன்னியர்கள் மனதை கொள்ளை கொள்ளும் கோபியர்களின் கண்ணன் இவன் தான்’என்று  அவள் மனம் அர்ஜுனை “பிளாங் length/plank length  என்ற உலகத்தின் மிக சிறிய அளவுகோல் கொண்டு, கண்களால் அவனை அளந்து முழுவதுமாய் ரசித்து கொண்டு இருந்தாள்.

(அணுவாய் அணுவாய் ரசிப்பது கேள்வி பட்டு இருக்கேன் -புது அளவை plank length-உங்க லொள்ளு தாங்க முடியலை சாமி)

“சீட் பெல்ட் எல்லாம் சரியாய் தான் இருக்கு …டைம் ஆகுது …”என்று ஆங்கிலத்தில் ப்ரீத்தி அர்ஜுன் கண்களை பார்ப்பதை தவிர்த்து எங்கோ பார்த்தவாறு கூற,நமுட்டு சிரிப்புடன் அவளை உற்று பார்த்த அர்ஜுன்,

“கார் சீட் …செக் ..”என்றான்.

‘தோ டா புது கார்…இதுல கார் சீட் சரியாய் இருக்கான்னு சார்வால் செக் செய்யறாங்களாம்…அடுத்து என்ன செக் செய்ய போறான் தலையில் ஹெல்மெட் இல்லை என்றா?’என்று  மூளை கேட்க,

‘ஹெல்மெட் கூட செக் செய்யலாம் தான்…தப்பில்லை ‘என்று ப்ரீத்தி மனம் சிணுங்க,

‘என்னது கார்ல போறதுக்கு ஹெல்மெட்டா? …அதுக்கு ஒரு செக்கிங்கா?…ஆமா அவனுக்கு எதுவும் தெரியாது பாரு. உட்கார்ந்து “சைட் அடிப்பது எப்படி” என்று கிளாஸ் எடு.”என்று கடுப்பாகி போனது மூளை.

‘இப்போ எதுக்கு நொய் நொய்ன்னு வந்து இம்ஸை செய்துட்டு இருக்கே?இவன் குறும்பை,திருட்டுத்தனத்தை ரசிக்க விடு….சோதனை  நல்லா தான் செய்யறான்…முன் ஜென்மத்தில்  ஆராய்ச்சியாளனாக இருந்து இருப்பானோ’

ஆராய்ச்சியாளர்களுக்கே சவால் விடும் வண்ணம் சீட் பெல்ட், கார் சீட் சோதனை நடத்திய அர்ஜுன்,அவளை வதைத்தது போதும் என்ற பெரிய மனதுடன்,கள்ள சிரிப்புடன் நகர்ந்தான்.

அவன் நகர்ந்த உடன் தான் மூச்சே வெளிவந்தது ப்ரீத்தியிடம் இருந்து.

‘திருட்டு பையா!…செய்யறது எல்லாம் செஞ்சிட்டு முகத்தை பாரு அமுல் பேபி,பச்சை மண்ணு ரேஞ்சுக்கு வச்சிட்டு,இந்த பூனையும் பால் குடிக்குமான்னு உட்கார்ந்து இருக்கான்…

விரல் நுனி கூட படவில்லை ஆனால் அதற்கே ஹார்ட் பீட் தாறுமாறாக எகிற வைக்கிறான்…’என்று ப்ரீத்தி கோபத்துடன் முறைப்பது போல் பாவனை செய்தாலும்,  அவள் கண்கள்  வழக்கம் போல் அர்ஜுனுக்கு சொல்ல வேண்டியதை சொல்லி கொண்டு இருக்க,மௌன சிரிப்பில் அவன் உடல் குலுங்கியது.

தலையை கோதி கொண்டே ஒற்றை புருவம் ஏற்றி இறக்க,ப்ரீத்தி உதடு கடித்து முகத்தை திருப்பி கொண்டாள் இல்லையென்றால் முகத்தில் விரியும் புன்னகையை அவன் பார்த்து விடுவானே.

‘ஆமா இவங்க முகத்தை திருப்பி கொண்டால் மட்டும் எங்களுக்கு தெரியாதாகும்’ என்ற பாவனை அர்ஜுன் முகத்தில்.

இது எதையும் பார்க்காமல்,தன் போன் அதி முக்கியம் என்று அதில் தலையை கொடுத்து இருந்தான் தீப்.

அமர்நாத் அப்படி இருப்பாரா?

“தீப்! …டேய் தீப்! …”என்று ஒற்றை விரல் கொண்டு அவனை சுரண்டினார்.

முன் ஜென்மத்தில் எலியாய் இருந்து இருப்பாரோ? இவர் சுரண்டும் சுரண்டலில் என்  சட்டை கிழியாமல் இருந்தால் சரி தான்…ஷப்பா! என்ன வேகம் என்ன வேகம்.’என்று மனதிற்குள் நினைத்து கொண்ட தீப்.

“என்ன மாமா?” ‘என்றான் தீப் தன் போனை விட்டு கண்ணை எடுக்காமல்.

“இப்போ உங்க அண்ணன் என்னடா செய்தான்?”

“இப்போ அது எதுக்கு உங்களுக்கு?”

ஒரு பெரிய மனுஷன் உட்கார்ந்து இருக்கேன் என்ற துளி கூட இல்லாமல்…”

“பெரிய மனுஷன் என்றால் இதை எல்லாம் கண்டுக்க கூடாது.”

“அப்படின்னு யாரு சொன்னது?”

“காதும் ஹோகயா வா மாம்ஸ் ..இப்போ தானே நான் சொன்னேன்.”என்றான் தீப் சிரியாமல்.

பல்லை நறநறவென கடித்த அமர்நாத்,”டேய் …காருக்குள் உட்கார்ந்து அரை மணி நேரம் ஆச்சு.”

“எவ்வளவு மணி நேரம் ஆனாலும் வீர்ஜி தன் வேலையை முடித்தால் தான் வண்டியை எடுப்பார்.”

“உங்க வீர்ஜி அப்படி என்ன வேலையை உயிரை கொடுத்து செய்துட்டு இருக்கார்?”

“சீட் பெல்ட் அண்ணிக்கு சரியாய் இருக்கான்னு செக் செய்தார்.” என்றான்  தீப் நமுட்டு சிரிப்புடன்.

“அவன் …உங்க அண்ணன் …இத்தனை நேரம் சீட் பெல்ட் செக் செய்தான்?”என்றார் அமர்நாத் கடுப்புடன்.

“கார் சீட் அதன் இடத்தில் சரியாய் பிக்ஸ் ஆகி இருக்கான்னு கூட தான் பார்த்து இருப்பார்.”என்றான் தீப் சற்றும் அலட்டி கொள்ளாமல்.

“என்னது …புது கார் சீட்டை உங்க அண்ணன் செக் செய்தானா?  போரட் கம்பெனிகாரன்  கேட்டா நொந்துடுவான்.”என்றார் அமர்நாத் அந்த முழு பூசணிக்காய் மறைக்கும் தீப் முயற்சியை கண்டு.

“இப்போ என்ன உங்களுக்கு பிரச்சனை?…நீங்க வேண்டும் என்றால் உங்க சாலிங்க,சோராஜிக்கு சீட் பெல்ட் செக் செய்யுங்க யாரு வேண்டாம் என்றது?

ஸ்பெஷல் பெர்மிஸ்ஸின், “பர்கிதா “மாசி கிட்டே இருந்து நான் வாங்கி தரேன் …இதோ ஒரு கால் …”என்றும் தீப் போனை நோண்ட அமர்நாத் கை எடுத்து கும்பிட்டார்.

“இனிமேல் அண்ணா என்ன செய்யறாங்க என்று கேட்பீங்க ?”

“உங்க அண்ணா எல்லை பாதுகாப்பு பணியில் அதி தீவிரமாய் இருக்கார் போதுமா?… யார் கேட்டாலும் கையில் அடித்தே சத்தியம் செய்யறேன் …ஆளை விடு. “என்றார் அமர்நாத்.

“இதை முதலிலேயே செய்து இருக்கலாம் தானே….வெளியே பாருங்க …நீங்க ரொம்ப லவ் செய்யும் இளமையான ஜாமினா இருக்கு….”என்று நமுட்டு சிரிப்புடன் தீப் சொல்ல,அதன் பிறகு வாயை திறக்க அமர்நாத்துக்கு என்ன பைத்தியமா?

ராஷ்மி  காரின் முன் வந்து நிற்க,தன் தாயின் முகத்தை பார்த்தவாறே காரை கிளப்பிய அர்ஜுன் அவருக்கு தலை அசைத்தான்.

அந்த குடும்பத்தினர் யார் வெளியே செல்வதாய் இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஒரு பெண் யாராவது ,வெளியே கிளம்புவர்களின் முன் நிற்பார்கள்.அவர்கள் முகத்தை பார்த்த பிறகே வீட்டினர் வெளியே செல்வார்கள்.

இங்கே சுமங்கலி,கணவனை இழந்தவர் என்ற பாகுபடு எல்லாம் கிடையாது. அனைத்து பெண்களும் சக்தி,மாத வைஷ்ணவி தேவியின் சொரூபம்.வீட்டு பெண்களின் முகத்தை பார்த்து விட்டு வெளியே கிளம்பினால் தான் எந்த வேலையும் செய்வார்கள் அர்ஜுன் குடும்பத்தினர்.

அதே போல்  ஆண்கள்  மட்டுமே பெண்கள்  காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவார்கள்.பெண்களை தேவியின் சொரூபமாய் காண்பதால்,வம்சம் தழைக்க வித்திடும் அமுத கலசம் பெண்கள் என்பதால் அவர்கள் யார் காலில் விழுவதையும் எந்த பஞ்சாபியும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

கார் அந்த வீட்டின் கேட் தாண்டி செல்ல, கார் கண்ணை விட்டு மறையும் வரை நண்டு,சிண்டுகளின் டாடா, உற்சாக கூச்சல் அடங்கவே இல்லை. வீடு ஆட்களும் கார் கண்ணை விட்டு மறையும் வரை அங்கேயே நின்று வழி அனுப்பவும் தயங்கவேயில்லை

வீட்டிற்கு வந்தவர்கள் வாயிற்கதவை தாண்டிய உடன் கதவை மூடும் பழக்கம் எல்லாம் பஞ்சாபிகளுக்கு இல்லை போல் இருக்கு.

வந்தவர்கள் கிளம்பும் போது அவர்களுடன் சேர்ந்தே வந்து, அவர்கள் கண்ணை விட்டு மறையும் வரை  டாடா காட்டி அவர்களை  ‘நீங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள்’ என்று உணர வைக்கும் அந்த மனம் உயர்ந்தது தான்.

கார் வீட்டை தாண்டியதும் காரை  ஓட்டி கொண்டு இருந்த அர்ஜுன்,   மியூசிக் பிளேயர் ஆன் செய்ய,அதுவோ

அன்பே உன் கண்கள்

சுழல் என்கிறேன்
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பேரை படகெங்கிறேன்
அதை சொல்லிதானே

கரையை சேர்கிறேன்
உன் கொலுசின் ஓசை கேட்க

தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால்

கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
உன்னை தீவு போல காத்து

நிக்க கடலாக மாறுவேன்

என்று தமிழில் பாட வியப்பின் வெளிப்பாடாக ப்ரீத்தியின் புருவங்கள் உயர்ந்தன.

அவள் வியப்பை கண்ட தீப் அவள் புறம் குனிந்து, “பர்ஜாயீ!… உங்களுக்கு பிடிக்கும் என்று அண்ணா நைட் முழுக்க டைம் ஸ்பென்ட் செய்து இந்த பாட்டை எல்லாம் பென் டிரைவ்வில் ஸ்டோர் செய்து இருக்கார்.

கிட்ட தட்ட ஆயிரம் பாடல்களுக்கும் மேல்…எல்லாமே உங்களுக்கு பிடித்த மியூசிக் மாஸ்ட்ரோ,லெஜெண்ட் ராஜா சார் என்பவரின்  மியூசிக்…உங்க முகநூல் பேஜ்  பார்த்து நான் தான் சொன்னேன்.”என்றான்.

தனக்காக அர்ஜுன் பார்த்து, பார்த்து ஒவ்வொன்றையும் செய்வது மனதிற்குள் மழை சாரலாய் இறங்கினாலும் வெளியே அதை காட்டி கொள்ளாத ப்ரீத்தி,

“இப்படி எல்லாம் செய்தால் பொண்ணுங்க இம்ப்ரெஸ் ஆகிடுவாங்கன்னு உங்க அண்ணனுக்கு யார் சொன்னதுங்க  தீப்?” என்றவள் கண்கள் குறும்புடன் ஒளிர்ந்தது.

(கெத்தை மெய்ண்டெய்ன் செய்யணும் என்று ஆசிரம பக்தை ஒருத்தங்க  உபதேசம் செய்து இருக்கார்.)

தீப் அதை சங்கடத்துடன் மொழி பெயர்க்க, அதை கேட்ட அர்ஜுன் கண்களில் ஒரு ஒளி பரவ,வாய் மூடி புன்னகைத்த அவன் கண்களே சொல்லாமல் சொல்லியது ‘உன்னை நான் அறிவேன்’என்பதை.

அது இன்பமான காதல் கண்ணாமூச்சி.

காதலில் உள்ளவர்கள் மட்டுமே உணரும் ரம்யமான  பரிபாஷை.

இதழ்கள் ஒன்றை பேசுவதும், கண்கள் வேறு ஒன்றை உணர்த்துவதுமாய் ஆடும் நாடகம் அல்லவா இது?

மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத, இரு இதயங்கள் மட்டுமே பேசும் ரகசிய மொழி.

அந்த ரகசிய,அந்தரங்க மொழி கண்களால் பேசியவாறு   சுகமாய் தொலைந்து கொண்டு இருந்தது இரு இதயங்கள் விழிகளின் வழியே

அர்ஜுன் தன் தலையை கோதி கொண்டே ப்ரீத்தியை பார்த்தவாறு பஞ்சாபியில் ஏதோ சொல்ல அதை மொழி பெயர்த்தான்  தீப்.

“இது உங்களை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று செய்ததில்லை…நீங்க ‘பீல் அட் ஹோம்’ என்று உணர வைக்க ஏதோ என்னால் முடிந்தது.

மொழி என்பது தாய் போன்றது.

எப்படி ஒரு அன்னை,நம் நிழல் நம்முடன் இத்தனை வருடம் உடன் இருக்கிறதோ அதை போல் மொழியும் நம் உடன் இருப்பது.

புரியாத பாஷை பேசும் மாநிலம், புது மனிதர்கள்….நீங்க lonelyயாக பீல் செயய கூடாது இல்லை அதனால் தான் .

இசைக்கு எல்லா கவலைகளையும் போக்கும் சக்தி உண்டு. பயணங்களின்  போது அதை விட சிறந்த துணை வேறு யார் இருக்க முடியும் ?

இதை எல்லாம் செய்தால் பெண்கள் இம்ப்ரெஸ் ஆகி விடுவார்கள் என்று சின்னத்தனமாய் நினைக்கும் அளவிற்கா இன்று உள்ள பெண்கள் இருக்கிறார்கள்?

சினிமா,கதைகளில்  தான் ஒரு உதவி செய்த உடன், ஆபத்தில் காப்பாற்றிய உடன்  பெண்கள் இம்ப்ரெஸ் ஆவது போல் கொண்டு வந்து பெண்கள் என்றால் இது தான் என்று stereotyping செட் செய்வார்கள்.நிஜத்தில் வீர தீர பராக்கிரமங்களை செய்பவர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் மட்டும் தான்.

கூகிள் உதவி நாடினால், அதுவே பாடல்களை கொடுத்து விட போகிறது. இந்த பாடல்களுக்கு அர்த்தம், இவை சரியான பாடல்களா என்று கூட எனக்கு  தெரியாது.இப்படி பாடல்களை எடுப்பது எல்லாம் நீங்களே கூட செய்து விட கூடியது தான்.உங்க மொபைலில் கூட இந்த பாடல்கள் இருக்கலாம்.பட் ஏதோ செய்யணும் என்று தோன்றியது…செய்தேன்   …இட்ஸ் நத்திங் “

அர்ஜுன் விளக்கம் ப்ரீத்தியை அசைத்து பார்த்தது.

இது எந்தமாதிரியான அன்பு?

இது தான் அர்ஜுன். பெண்மையை சிறு சிறு செயலிலும் போற்றும் உன்னத மனிதன்.

‘”இம்ப்ரெஸ் செய்ய  இதை எல்லாம் செய்யவில்லை, செய்யவில்லை என்று சொல்லி சொல்லியே இம்ப்ரெஸ் செய்துட்டு இருக்கியே திருடா…

உன்னை என்ன தான் செய்வது?

வேலைக்கு என்று வந்த இடத்தில், உன்னை காதலிக்கும் வேலை செய்ய வைத்து விடுவாய் போல் இருக்கே!…

டேய்!… அப்படி பார்க்காதே.மனசை ஏதோ செய்யுது.”என்று ப்ரீத்தி தமிழில் வாய் விட்டு முனக, அவள் சொல்வது புரியாமல் விழித்தான் அர்ஜுன்.

Maiṁ tuhānū samajha nahīṁ sakadā/நீங்க என்ன சொல்றீங்க என்று புரியலை.”என்று அர்ஜுன் சொல்ல அதை தீப் மொழி பெயர்க்க

“உனக்கு புரிய கூடாது என்று தானே தமிழில் பேசறேன்.என் மொழி உனக்கு புரியாதது எனக்கு எவ்வளவு வசதியாய் இருக்கு தெரியுமா? மனதில் நினைப்பதை எல்லாம் வெளியில் சொல்லி விட பெண்ணால் முடியாது.

ஆனால், எனக்கு உன் முன் அதுமாதிரி தடை எதுவும் இல்லையே. உனக்கு தான் நான் சொல்வதே புரிய போவதில்லையே! “என்று சொன்னவள் காரில் இருந்தவர்கள் முழிப்பதை பார்த்து, ”நத்திங்“ என்று ஆங்கிலத்தில் சொன்னாள் .

(புள்ள ரொம்ப விவரமானதா தான் இருக்கு …சோ அர்ஜுனை “சேது” ஆக்கியே ஆவது என்று முடிவு செய்துட்டே …நடத்துமா நடத்து… )

புரிந்தும் புரியாத ஒரு பாவனை அர்ஜுன் முகத்தில் வந்து போக, அந்த போர்ட் endeavour அவன் கைகளில் சிறுத்தையாய் சீறி பாய்ந்தது.

எந்த குரங்கு தனமும் செய்யாமல்,கியர் மாற்றுகிறேன்,பிரேக் போடுகிறேன் என்று காரை படுத்தி எடுக்காமல்,மிக லாவகமாய் ஓட்டும் அவன் திறமை கண்டு ப்ரீத்தியின் முகம் அவள் ரசிப்பை காட்டியது.

அர்ஜுன் எதை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, ஒரு கிரேஸ்,ஒரு மெஜஸ்டிக் வைபரேஷன்  இருப்பதை ப்ரீத்தியின் கண்கள் எப்பொழுதோ கண்டு கொண்டது.

கன்னி பொண்ணா

நெனச்சு கார தொடணும்

கட்டினவன் விரல் தான் மேல படனும்

கண்டவங்க எடுத்தா

கெட்டு போயிடும்

அக்கு அக்கா அழகு விட்டு போயிடும்

தெரிஞ்சவந்தான்  ஓட்டிடன்னும்

திறமையெல்லாம்  அவன் காட்டனும்

ஓர் இடத்தில உருவாகி,

வேற  இடத்தில விலை போகும்
கார்களை போல் பெண் இனமும்,

கொண்டவனை போய் சேரும்

வேகம் கொண்டாட

காரும் பெண்போல தேகம் சூடாகுமே!…’ என்று கார் பிளேயர் பாட,அர்ஜுனின் கார் டிரைவிங்க்கு பொருந்தி தான் போனது.

‘ப்ரீத்தி செல்லம்!.. .அர்ஜுனையே பார்த்துட்டு இருந்தே அது நம்ம ஹார்ட்டுக்கு நல்லதில்லையே பேபி.இவன் அநியாயத்திற்கு லவ் செய்யும் விதமாய் இருக்கான்.சோ ஸ்வீட்,சோ மேன்லி,சோ loveable ,சோ கிரேட் கள்வன். ஹார்ட் கொள்ளை போவது உறுதி.

சோ கொஞ்சம் இப்படி சைட் அடிப்பதையும்,நயாகரா பால்ஸ் மாதிரி அர்ஜுனை பார்த்து ஜொள் விடுவதையும் கொஞ்சம் குறைச்சுக்கோ…’என்று மூளை எச்சரிக்கை விடுக்க,முயன்று தன் கண்களை காருக்கு வெளியே செலுத்தினாள் ப்ரீத்தி.

பஞ்சாப் சுற்றுப்புறம் சொல்லவும் வேண்டுமா? மனதை  நச்சுன்னு கவ்வி பிடித்தது.பார்க்க பார்க்க தெவிட்டாத இயற்கை எழில் அவை.

Rainy weather in Punjab, beautiful nature scenery! - YouTube

மெலிதான சிறு தூறல்,பனியால் மூடி இருந்த வயல் வெளிகள், மேக கூட்டத்திற்குள் கண்ணாமூச்சி ஆடி கொண்டு இருந்த சூரியன், வயல் வெளிகளில் மெலிதாய் கேட்ட நாட்டுப்புற பாடல்கள்,   பச்சை,மஞ்சள் என்று ஆடை பூண்டு இருந்த வயல் வெளிகள்,பூந்தோட்டங்கள் என்று இயற்கை பெண்ணவள் தன் வனப்பை எல்லாம் ஓர் தேர்ந்த ஓவியனின் திறமை போல் வெளிப்படுத்தி கொண்டு இருந்தாள்.

முத்து பரல்களை சிதற விட்டது போன்று சலசலவென தண்ணீர்  ஓடும் கால்வாய்கள் பார்க்க, பார்க்க தெவிட்டவில்லை ப்ரீத்திக்கு.

ப்ரீத்தி ஆவலுடன் வெளியே பார்ப்பதை கண்ட அர்ஜுன்,AC ஆப் செய்து விட்டு ஜன்னல்களை திறந்து விட்டான்.எந்தெந்த இடங்கள் பார்க்க பார்க்க ஒரு வித பரவச நிலையை மனதில் பொங்க செய்யுமோ அங்கெல்லாம் அர்ஜுன் கார் ப்ரீதிக்காக நின்றது.

கால்வாய்களில் ஓடி கொண்டு இருந்த தண்ணீர் மீது மோதி மேல் எழுந்த பனி காற்று உடலில் பட்டு இதை விடவா வேறு வேறு சுகம் இருக்க முடியும் என்று சவால் விட்டது என்றால் மிகையல்ல.

Golewali Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime

வயல் வெளிகளுக்கு காவல் போல் ரோட்டின் ரெண்டு புறமும் காவலர்கள் போல் உயர்ந்து ஓங்கி நின்ற மரங்களின் குளிர்ச்சி, அதன் நிழல் ஒரு கவிதையே படைத்து இருந்தது.

Rainy weather!!!With a little rainbow!!Just beautiful!!! — Steemit

கிராமம் தாண்டி கிராமம் என எங்கும் பசுமை.சின்ன சின்ன அழகான கிராமத்து வீடுகள்.கை காட்டி குதூகலிக்கும் குழந்தைகள் என்று அந்த பயணம் ஒரு நிறைவை கொடுத்தது ப்ரீத்திக்கு.

Punjab village road | Eucalyptus trees on Tanda To Dholwaha … | Flickr

“எப்படி இந்த அளவிற்கு ரோடு முழுவதும் பசுமையா இருக்கு?” என்றாள் தன் வியப்பை மறைக்க முடியாமல்.

“அண்ணா நடத்தும் பள்ளி, கல்லுரி மாணவர்களின் முயற்சி இது அண்ணி.இங்கு உள்ள பள்ளி,கல்லுரி மாணவர்கள் ஒவ்வொரு ஸ்டாண்டர்ட்,டிபார்ட்மெண்டிற்கு வாரத்தில் ஒரு நாள்  கட்டாய விடுமுறை உண்டு. அந்த நாளில் இவர்களை ஒவ்வொரு  கிராமமாய் அழைத்து செல்வோம்.

ரோடு ஓரங்களில் மரங்கள் நட்டு,அதை பராமரிக்கும் பணி  இவர்களுடையது. வாரத்திற்கு ஏழு நாளும் நிச்சயம் ஏதாவது ஒரு வகுப்பு மாணவர்கள் ஏதாவது ஒரு கிராமத்தில் இருப்பது போல் ஏற்பாடு.செடியை நட்டோம் அத்தோடு வேலை முடிந்தது என்ற வழக்கமே கிடையாது.

விவசாயத்தில் விருப்பம் என்றால் அதற்கும் விடுமுறை அளிக்க படும்.apprentice மாதிரி ஒரு விவசாயிடம் பணி செய்யலாம். அதற்கு stripend உண்டு.

அவர்கள் விளைவிப்பதை அவர்களே விற்று,வரும் பணத்தை வங்கி அக்கௌன்ட் ஓபன் செய்து கொடுத்து இருக்கோம்.அதில் போட்டு வைக்கலாம்.” என்றான் தீப்.

“அது மட்டும் இல்லை ப்ரீத்தி. அர்ஜுன் பள்ளிகளில் விடுமுறை நாட்களின் ஹோம்ஒர்க், ப்ராஜெக்ட் என்ன தெரியுமா? விடுமுறை நாட்களில் பிள்ளைகள் கட்டாயம்  தங்கள் தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா,மாமா என்று உறவுகளுடன் தங்கி அதை பற்றி வகுப்பில் வந்து சொல்ல வேண்டும்.

சென்ற ஊர்கள்,பழகிய சொந்தங்களுடன் எடுத்த போட்டோ கொண்டு வந்து காட்ட வேண்டும்.அப்படி சொந்தம் இல்லாதவர்கள் அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்கோ, அனாதை இல்லங்கள்/orphanage, மாற்று திறனாளிகள் இல்லத்திற்கும்  சென்று அவர்களுடன் பழகி, அவர்களுக்கு உதவ வேண்டும்.

ஒரு திருமணம், நல்லது கெட்டதிற்கு கூட லீவு என்ற ஒன்றை எடுக்காமல், 100% அட்டெண்டென்ஸ் என்ற பைத்தியக்காரத்தனம் எல்லாம் இங்கு இல்லை.

பெற்றோர் அப்படி செய்தால் அதற்கு பைன் உண்டு. பிள்ளைகளை பிள்ளைகளாய் வளர விடாமல் செய்யும் எதற்கும் இங்கு அனுமதி இல்லை. ஒருமணி நேரம் விளையாட்டுக்கு என்று மாலை வேளைகளில் பள்ளி செயல் படும்.

எல்லா வகுப்பு பிள்ளைகளும் ஒன்றாய் விளையாடும் போது அவர்களிடையே ஒற்றுமை,விட்டு கொடுக்கும் மனப்பான்மை, பெரிய பிள்ளைகள் சிறியவர்களிடமும்,சிறியவர்கள் பெரிய பிள்ளைகளிடமும் பழகும் போது அங்கே அன்பு,மரியாதை தானாக வந்து விடுகிறது.”என்றார் அமர்நாத்.

“பேச்சுக்கு இது எல்லாம் சரியாய் இருக்கும். ஆனால் அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள்?”என்றாள் ப்ரீத்தி.

ப்ராஜெக்ட் என்ற பெயரில் பெற்றோர் செய்வதும்,கடையில் வாங்கி அதை கொடுத்து அனுப்புவதும்,என்ன எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமல்  எரிச்சலுடன் பிள்ளைகள் செய்யும்  எந்த வேலையும் எதற்கும் பயன் படப்போவதில்லை ப்ரீத்தி.பிள்ளைகள் ஒன்றாய் இருக்கும் போது புரிந்து கொள்வதற்கும்,பெற்றோர்,கடை பொருட்களுக்கும் வித்தியாசம் இல்லையா?

அதற்கு இது எவ்வளவோ மேல் தானே.என்ன ஆசிரியர்கள், பள்ளிகள் இதை செய்ய முன் வந்து நேரம் ஒதுக்க வேண்டும். இப்படி அழைத்து செல்லும் போது பிள்ளைகளின் பாதுகாப்பு, உணவு, கழிப்பிடம் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டி வரும்.

காலாண்டு,அரையாண்டு பரிச்சைகளின் போது பத்து மார்க் காகிதத்திற்கு கொடுப்பதற்கு பதில் உறவுகளுடன் பழக விடலாம்.43 பக்கத்திற்கு  ஒரே ஒரு சப்ஜெக்ட் ஹோம் ஒர்க் என்றால் மத்த பாடங்களை கணக்கு செய்து பார்த்தால் நமக்கே தலை சுத்தி போகும் போது பிள்ளைகளின் கதி.

பிள்ளைகள் அழகான பூ போன்றவர்கள்.அதை கசக்கி எரிந்து விட்டு,சமுதாயம் இப்படி ஆகி போச்சே என்று புலம்பி என்ன பயன் ?இப்படி குழந்தைகள் உரிமை பற்றி அறியாமல் படிப்பு,ப்ராஜெக்ட் என்ற பெயரில் செய்ய படும் கொடுமைகளை எதிர்த்து போராடி வருகிறோம். “என்ற அர்ஜுன் பேச்சில் இருந்த நியாயம் ப்ரீத்திக்கு சரியாக தான் பட்டது.

“இது எல்லாம் என்னுடைய எண்ணம் மட்டும் இல்லை,மனநல மருத்துவர்கள்,out of box thinking கான்செப்ட் மேதைகள் ,ஜப்பான் கல்வியாளர் குழு  சொல்வது தான். ஜப்பான் பள்ளிகளுக்கு நானும்,அம்மாவும் தீப்பும் நேரில் சென்று பார்த்தோம்.அங்கு குழந்தைகளின் ‘பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட்டிற்கு ‘தான் முதல் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது.

மெஷின் மாதிரி,ரோபோட் மாதிரி நம்ம பிள்ளைகளை மார்க் மைண்டெட் ஆக நாம வளர்த்தாலும் “quality learning, ஹுமானிட்டி/தரமான கல்வி,மனிதநேயம் அதில் இல்லை.

காலத்திற்கு ஏற்றார் போல் கல்வி கோட்பாடுகளை மாற்றி தான் ஆக வேண்டும். இன்னும் ஆங்கிலேயன் கொண்டு வந்த குமாஸ்தாகளை உருவாக்கும் கல்வியை கொண்டு எதையும் சாதிக்க போவதில்லை.

ஜப்பான் கல்வி முறைகளை கருத்தில் கொண்டு ,நம் நாட்டிற்கு தேவையானது போல் மாற்றி,குழந்தைகளை குழந்தைகளாக, மற்ற உயிர்களையும்,இயற்கையையும் மதிக்கும் உண்மையான மனிதர்களாக உருவாக துணை நிற்கிறோம்.

பஞ்சாப் எடுகேஷன் போர்டுக்கும், பஞ்சாப் உயர்நீதி மன்றத்திற்கு இதை பற்றி எழுதி இருக்கோம். மற்ற பள்ளிகளிலும் இதை நடைமுறைபடுத்த பேசி வருகிறோம். “என்ற அர்ஜுன் பேச்சை மொழி பெயர்த்தான் தீப்.

இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமான ஒன்று குடும்பம், உறவு இவற்றின் முக்கியத்துவத்தை,பாசத்தை அறிவது மட்டும் தானே.கோடி கோடியாய் பணம் ஓடி ஓடி உழைத்து சேர்த்து,அங்கே அன்பு,பாசம் இல்லாமல் போனால் யாருக்கு தான் லாபம்?

நல்லதிற்கும்,கெட்டத்திற்கும் நாலு சொந்த பந்தம், உற்றம், சுற்றம், நட்பு வராமல் இருப்பதா வாழ்க்கை?நேரம் இன்மையால்,சுலபமானதாய் இருப்பதால் இப்பொழுது எல்லாம் வண்டி தான்.

கடைசி யாத்திரைக்கு நாலு பேர் தோள் கொடுக்க கூட வழியில்லாமல், பெற்றோர்,மனைவி,கணவன்,உற்றம்,சுற்றம் இறப்பிற்கு கூட வராமல் ‘வீடியோ எடுத்து அனுப்பு’ என்ற ட்ரெண்ட் தான் பெருகி வருகிறது.இவர்கள் மரணிக்கும் போது?

இப்படி ஒரு குடும்ப வாழ்வு அறியாமல் வளர்வது தானே பல சமுதாய  சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணமாய்  அமைந்து விடுகிறது.

ஒரு பக்கம் பணம், இன்னொரு பக்கம் வேலை பளுவில் இல்லவே இல்லாத ‘அப்சென்ட் பெற்றோர்கள்/absent parents’, இன்னொரு புறம் சமூக வலைத்தளம் மூலம் படுக்கை அறைக்கே வந்து மூளை சலவை செய்யும் புல்லுருவிகள்  என்று சரியான பாசம், அன்பு, கவனிப்பு, வழிகாட்டுதல் இல்லாமல் இன்று தடுமாறும் இளைய சமுதாயம் ‘நாளைய பெற்றோர்’ என்று வரும் போது  அவர்கள் வளர்ப்பில் சமூகம் எங்கு செல்லும்?

இந்த குடும்ப உறவில் வளர்ந்த குழந்தைகள் அந்தரங்கத்தை புனிதமானதாக,அந்தரங்கமானதாய் கண்டார்கள்.காதல் என்பது இலைமறை காய்மறையாக,ஒருவனுக்கு ஒருத்தி என்ற பிணைப்பில்,மனதோடு வைக்க படும் பொக்கிஷமாய்,போற்றி பாதுகாக்க வேண்டிய ஒன்றாய், கடைசி மூச்சு உள்ளவரை பிரிக்க முடியாத ஒன்றாய் இருந்தது.

இங்கு காதல் என்பது ஒரு ஆணோ,பெண்ணோ மற்றவரின் மேல் வைக்கும் நம்பிக்கையாய் பார்க்க பட்டது.ஒருவன் ஒருத்தி தவறும் போது அதை தடுக்க குடும்பம் உள்ளே வந்தது.

இன்றோ சமூக வலைத்தளங்களில், முகநூல்,வாட்ஸாப்ப் குழுக்களில்  ஆபாசம், வரைமுறை தாண்டி  சென்று கொண்டு இருக்க,அந்தரங்கம் எல்லாம் கடைவிரிக்க படுகிறது.

பர்சனல் பர்சனல்லாக இருக்கும் வரை தான் மரியாதை.ஒரு சின்ன வார்த்தை,பகிர்தல் நம் மேல் தவறான அபிப்ராயத்தை கொண்டு வந்து விடும்.

ஒருத்தர் பற்ற வைக்கும் வதந்தி என்ற தீ- காட்டு தீ போல் மளமளவென்று பரவி விடும் என்று அறிந்தும் அந்தரங்கத்தை கடை விரிக்கும் மக்கள்,முக்கியமாக பெண்கள் தங்களுக்கு தாங்களே புதைகுழியை தயார் செய்து அதில் இறங்கி விடுகிறார்கள்.

சொந்த ரத்த உறவுகளே நமக்கு எதிராக மாறும்போது எந்த குழுவிலும்,எந்த வலை தளத்திலும் யாரும் நம்ப தகுந்தவர்கள் இல்லை என்பது உணராத மக்கள் அடையும் அவமானம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

அர்ஜுன் தன் கிராமத்தில்  கொண்டு வந்த இந்த வழி கல்வி  பல சமூக அவலங்கள்  நடக்காமல் தடுக்கும்’  என்று தோன்றியது ப்ரீத்திக்கு.

சமூக அவலங்களை தடுத்தது போலவும் இருக்கும், அடுத்த தலைமுறை தங்கள் பூமியை, உயிரினும் மேலான விவசாயத்தை காப்பாற்றியது போலவும் இருக்கும்.செயின் ரியாக்ஷன் மாதிரி ஒரு குடும்பத்தின் பொறுப்பற்ற தன்மையால் இன்னொரு குடும்பம் அழிவதும் தடுத்தது போல் இருக்கும்.

‘சும்மா கலக்குறியே ராஜா…வந்தோமா பிறந்தோமோ…போய் சேர்ந்தோமா என்று இல்லாமல் இன்னொருவரின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் உன்னை சந்திக்க தானோ  இங்கே நான் வந்தது…வாழ்வில் காரணம் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை தான் போல் இருக்கு.’என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள் ப்ரீத்தி.

மனதிற்கு பிடித்தவர்கள் அருகில் அமர்ந்து இருக்க அந்த பயணம்,”பையா” படம் போல் நீண்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை ப்ரீத்தியால்.

‘இந்த திருமணத்தை கொல்கத்தாவில் வைத்து இருந்தால் எவ்வளவு  நன்றாய் இருந்து இருக்கும்….. பஞ்சாப் டு கொல்கத்தா ஒரு லாங் டிரைவ் மிஸ்ஸு. இயற்கையோடு, இளையராஜா இசையோடு, ஆணழகனாய் ஒருவன் அருகில் இருந்தால்!…எத்தனை நாள் இந்த பயணம் தொடர்ந்தாலும் கசக்கவா போகிறது?’என்று ப்ரீத்தியின் மனம் சிணுங்கியது.

அவளிடம் இருந்து அவளே அறியாமல் பெருமூச்சு ஒன்று வெளிவர, அதை கண்ட அர்ஜுன் மெல்லிய குரலில்,”பூச்சி இருக்கா?”என்றதும் அதிர்ந்த ப்ரீத்தி,

‘அடப்பாவி!… புது வண்டின்னு நம்பி ஏறுனது தப்பா போச்சே!….கிராமத்து ஷெட்டுல நிறுத்தி இருந்த வண்டி … வயலில் இருந்து எந்த பூச்சி போட்டு ஏறுச்சோ… இவனுங்க பாம்பையே பூச்சின்னு தானே சொல்லுவாங்க….

ஐயோ!… ஆத்தி எந்த பூச்சியா?’ என்று பதறிய ப்ரீத்தி தன் இருக்கையில் அசைந்து நெளிந்து , சுற்றும் முற்றும் கண்களை கொண்டு தேடினால் அர்ஜுன் சொன்ன பூச்சியை தேடும் விதமாக

“பட்டு பூச்சி இருக்கா ?”என்றான் அர்ஜுன் மீண்டும்

‘பட்டு பூச்சியா!…அதுக்கு நான் எங்க போவேன்?… ஒருவேளை திருமணத்திற்கு கிபிட் கொடுக்க என்று பட்டு புடவை பத்தி கேக்கிறாரோ? softyக்கு சாரீ பற்றி எல்லாம் தெரியும்.நமக்கு வாங்கி கொடுத்தா கட்டிக்க மட்டும் தானே தெரியும்?   ‘என்று ப்ரீத்தி பேய் விழி விழிக்க தலையை உலுக்கி கொண்ட அர்ஜுன்

“லைக் ….யு ….லைக் …சாங்? ….”என்று mp3 பிளேயர் கை காட்டி, “பட்டு பூச்சி இருக்கா?”என்றான்

அர்ஜுன் எந்த பூச்சியை பற்றியும் கேட்கவில்லை, அவன் தமிழ் பேச முயன்று இருக்கிறான்.

அவன் ‘பாட்டு பிடித்து இருக்கா?’என்பதை தான் ‘பட்டு பூச்சி இருக்கா?’ என்ற அழகில் கேட்டு இருக்கிறான் என்று புரிந்து போனது ப்ரீத்திக்கு.

“பாட்டு மட்டும் இல்லை இந்த பாடல்களோடு உன்னுடன் செல்லும் இந்த பயணமும், உன் முகத்தை பார்த்து கொண்டு இருக்கும் இந்த தருணங்களும், மொழியே புரியவில்லை என்றாலும் நாம் பேசாமல் பேசும் இந்த நொடிகளுக்கு சேர்ந்தே தான் பிடித்து இருக்கிறது…”என்ற ப்ரீத்தி அர்ஜுன் விழிக்க,”தேங்க்ஸ் பார் தி சாங்ஸ்…லவ் இட் …”என்றாள்.

(why மா why ….அந்த புள்ளையையும் பிடித்து இருக்குன்னு சொன்னா எந்த பக்கம் குறைஞ்சிடுவே? லவர் பாயை தவிக்க விடாதே பேபி)  

அழகான புன்னகை அர்ஜுன் முகத்தில் உதயமாக, தலை அசைத்து ப்ரீத்தியின் நன்றியை ஏற்றவன் அவளை பார்த்து கொண்டே அந்த காரை ஒட்டி கொண்டு இருந்தான்.

அமர்நாத்தும், தீப்பும் இவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களுக்குளே பேசி கொண்டு வர,கண்டும் காணாமல் ,பார்த்தும் பார்க்காமல் முன்னே ஒரு கண்ணாமூச்சி ஆட பட்டு கொண்டு இருந்தது.

தன் அண்ணன்,அண்ணியின் அந்த மௌன மொழியை,கண் பார்வையை ரசித்து கொண்டு இருந்த தீப் தோளில் தட்டினார் அமர்நாத்.

‘என்ன மாமா?”என்றான் தீப்

“எதுக்கும் நான் நம்ம யோஜித்துக்கு ஒரு கால் போடட்டுமா?” என்றார் .

“எதுக்கு மாமா?”என்றான் தீப்

“இல்லை ஒரு safetyக்கு தான்…உங்க அண்ணன் விடும் ஜொள்ளில் ஏற்க்கனவே கார் படகு மாதிரி மிதக்குது…இதுல ரோடு மேல் கண்ணை வைக்காம அந்த பொண்ணு மேல் கண்ணை வச்சிட்டு ஓட்டிட்டு இருக்கான்…

ஒழுங்கா ஒட்டினாலே இந்த ரோடுங்க,டிராபிக் இருக்கும் நிலையில் அச்சிடேன்ட் ஆகும்…. இதுல உங்க அண்ணா கண்ணுல அப்படியே காதல் பொங்கி வழியுது …இதுல கண்ணு தெரியுமான்னு ஒரு டவுட் அதான் ….”என்று அமர்நாத் இழுக்க அவரை முறைத்தான் தீப்.

“அண்ணா காதுல மட்டும் நீங்க சொன்னது விழட்டும் … உங்களை வச்சி செய்வார்.”என்றான் தீப்.

“அட போடா …அதுக்கு முதலில் ஒழுங்காய் வீடு போய் சேரணும்….இவன் வண்டி ஓட்டும் அழகை பார்த்தால் receptionனுக்கோ,வீட்டிற்கோ போவோமான்னு டவுட் கமிங்.வாட் டு டூ?”என்றார் அமர்நாத்.

“நீங்க ஒண்ணுத்தையும் செய்யவே வேண்டாம்….அமைதியா வாங்க அது போதும்.இத்தனை வருஷம் கழிச்சி அண்ணாவோட wavelenght ஏற்றார் போல்,அவரை போலவே திங்க் செய்யும் ஒரு பெண்ணை கொண்டு வந்து இருக்கீங்க…

அவங்க பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கட்டும்.நடுவே புகுந்து எதையும் சொதப்பி வைக்காதீங்க…உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும்.”என்றான் தீப்

அமர்நாத் பயத்தையோ, தீப் கடுப்பையோ அவர்களுக்குள் நடந்த அந்த சண்டையை  கண்டு கொள்ளும் நிலையிலா இருந்தார்கள் முன்னே இருந்த இருவர்?

இவர்கள் தங்கள் உலகில் சஞ்சரித்து கொண்டு இருக்க,அமர்நாத்  சட்டென்று,”Arajuna kāra rōkō/அர்ஜுன் காரை நிறுத்து.”என்று அலறினார்.

பயணம் தொடரும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!