‘சிறுமி காப்பாற்றப்படுவாளா?’ என்பது தான், அந்த லைவ் கவரேஜ் பார்த்து கொண்டு இருந்தவர்களின் மன கேள்வியாய் இருந்தது.
இது ஒருபுறம் என்றால், விவாதம் என்ற பெயரில் ஒவ்வொரு டிவி சேனலும் பத்து பேரை அழைத்து வந்து, ‘யார் மீது குற்றம்??’ என்று விவாதம் செய்து கொண்டு இருந்தனர்.
(வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க. மைக் மோகன் மாதிரி மைக்கை பிடிச்சா விடவே மாட்டானுங்களே!….. )
சமூக வலைத்தளம் காசே வாங்காமல், ‘ஓவர் டைம்’ செய்து கொண்டு இருந்தது.
அதில் சிலர் அந்த சிறுமியையும்,அவள் பெற்றோரையும் பற்றி கமெண்ட் பக்கம் பக்கமாய் போட்டு கொண்டு இருந்தனர்.
‘தன் பிள்ளை இப்படி நடப்பதை கூட கவனிக்காமல் அப்படி என்ன வேலை?’
‘ எந்த லட்சணத்தில் குடும்பம் நடத்துகிறார்கள்?’
‘படிக்கும் பெண் செய்யும் செயலா இது?’
‘என் பிள்ளை இப்படி என்று தெரிந்தால் கொன்று விட்டு தான் மறுவேலை’
என்று இன்னும் கீழ்த்தரமான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பதிவாகியது.
சிலர் ‘போலீஸ் துறை செயல்படவில்லை’
‘நாங்க ஆட்சியில் இருந்தால் ஆப்கானிஸ்தானில் ஒரு கஞ்சா செடி கூட வளரவிடாமல் செய்வோம். ’ என்று நடக்க சாத்தியமே இல்லாததை எல்லாம் அள்ளி விட்டு கொண்டு இருந்தார்கள்.
(உள்ளூரில் ஓணான் பிடிக்க வழியில்லை!…. வெளியூரில் டைனோசர் பிடிக்க போறாங்க)
‘யாரை கேட்டு ப்ரீத்தி,அர்ஜுன் ஓடும் காரில் சரியான மருத்துவ அறிவு இல்லாமல் எதன் அடிப்படையில் இதை செய்கிறார்கள்?’
‘அந்த சிறுமியின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா?’
‘இவர்களை சிறையில் தள்ளலாமா?’
‘ஒரு உயர் அதிகாரியான வீரேந்தர் இதை எப்படி அனுமதித்தார்?’.... என்று உயிரை காக்க போராடி கொண்டு இருந்தவர்களின் மேலேயே திருப்பினார்கள்.
இது தான் நாலு பேர் நாலு விதமாய் பேசுவது என்பது போல் இருக்கிறது.
ஒன்றும் இல்லா வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தார் போல் அன்றைய பொழுதுபோக்கு அந்த சிறுமியின் உயிர் ஆகி போனது.
மீடியா ஒரு பக்கம், சமூக வலைத்தளம் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒரு பக்கம், இது போதாது என்று அந்த நொடியில் கிடைக்கும் பேருக்கும் புகழுக்கும் என்று பல்வேறு வல்லுறுகள் அங்கே வட்டம் அடித்து கொண்டு இருந்தது.
கோயில்களின் கர்ப்பகிரகத்தில்,சர்ச்களில்,மசூதிகளில்,அங்கு செல்ல முடியாத சமயத்தில் இல்லங்களில் உள்ள பூஜை அறையில் அல்லது நமக்குள் உள்ள இறைவனிடம் வைக்க வேண்டிய பிராத்தனையை,அவனிடம் அடைய வேண்டிய முழு சரணாகதியை சமூக வலைத்தளத்தில் வைத்து கொண்டு இருந்தது சமூகம்.
# pray for yashvi….
#save yashvi… #yashvi support group.’ என்று ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.
வித விதமான மத பிராத்தனைகள், வெவ்வேறு முக பாவனை, தான தர்மம், யாகம், ஜபம் என்று செல்பீகளாகப் பதிவேற்றம் செய்யப்பட்டது.
உண்மையான, ஆத்மார்த்தமான பிராத்தனை என்பது பின்னால் சென்று லைக், கமெண்ட்டிற்காக அங்கே போலி அனுதாபிகள் களையாக முளைத்தார்கள் என்றால் மிகையல்ல.
கடவுளுக்கும்,பிராத்தனைக்கும்,நமக்கும் இடையே எதற்கு ஒரு விட்னெஸ்?
எதற்கு ஒரு substitute?
உண்மையான பக்தி கடவுளின் திருவடியை விட்டு அகலாது.பிராத்தனை,பக்தி என்பது தன்னுள் புதைந்து அவனை தேடும் தேடல்.
அதை எங்கு வேண்டும் என்றாலும் தேடலாம் என்பது அறிவீனம்.
எது எது எங்கே இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது என்று அறிந்தாலும் அந்த நொடியில் கிடைக்கும் பேருக்கும், புகழுக்கும் ஈடு தான் ஏது?
இந்த கூத்து ஒரு புறம் என்றால், A -Z காரில் அந்த சிறுமியை காக்க போராடி கொண்டு இருந்தவர்களின் வாழ்க்கை, TRP ரேட்டிங்காக அலசப்பட்டது –
‘LKGயில் இவர்கள் என்ன சாப்பிட்டார்கள்!….’ என்பதை கூட விட்டுவைக்கவில்லை.
(விளங்கிடும்!….)
திலீப் வெகு விவரமானவனாய், ரஞ்சித் ஓடி வந்தவன் மேல் மோதாமல் இருக்க பிரேக் போடும் போதே, தன் காமெராவை இயக்க ஆரம்பித்து விட்டான்
.ஒரு நியூஸ் சேனலின் உரிமையாளன் என்றால் சும்மாவா?
எப்பொழுதும் அலெர்ட்ஆக இருப்பது ரிப்போர்ட்டர்ஸ் கூட தானே.
(நல்லா வருவே தம்பி நீயி!….)
ப்ரீத்தி, “டேய் ரஞ்சித்! …. பிடிடா அந்த நாயை” என்று ஊரே அதிரும் வண்ணம் கத்தியதில் இருந்து, ஆதி முதல் அந்த கார் பதிண்டா சென்று கொண்டு இருக்கும் அந்த கணம் வரை எல்லாமே, நேரலையாக ஒளிபரப்பு ஆகி கொண்டு இருந்தது.
இதுவே பார்ப்பவர் மனதை பிசைந்தது என்றால்,திலீப் கொடுத்த ரன்னிங் காமெண்டரி வேறு இதயத்தை பிளந்து கொண்டு இருந்தது.
சில பல ரிபோர்ட்டோர் மாதிரி ரோபோட் நியூஸ் வாசிப்பது போல் சொல்லாமல், ஏற்ற இறக்கத்துடன்,முக பாவனையுடன் திலீப் அதை தொகுத்த விதம்,நியூஸ் பார்த்து கொண்டு இருப்பவர்களை அந்த இடத்தில் தாங்களும் இருப்பது போல் ஒரு பிரமையை உண்டாக்கி கொண்டு இருந்தது.
‘அந்த இடத்தில் இருந்தவங்க சொன்னது தான்.நாற்பது பேருக்கும் குறையாமல் நின்றும்,பட்ட பகலில் இப்படி ஒரு கொடூரன் இருப்பது யார் கண்ணுக்கும் தெரியவில்லை.
சமூகம் எதை நோக்கி செல்கிறது?
இதுவே ப்ரீத்தி மட்டும் பார்த்து இருக்கவில்லை என்றால்,துணிந்து அவனை துரத்தி சென்று இருக்கவில்லை என்றால்!… யோசித்து பாருங்கள்.இந்த நிலை நாளை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் வரலாம்.
அவங்க ஸ்கூலுக்குள் ஓடியது முதல், இதோ இந்த நொடி வரை கிட்டத்தட்ட 40 நிமிடமாய் நேரலை கொடுத்துட்டு இருக்கோம். கிளாக் ஒர்க் மாதிரி எவ்வளவு கோ-ஆர்டினேஷன் உடன் அர்ஜுன்,அமன் அவங்களை மணக்க போகும் ரெண்டு பெண்களும், அந்த சிறுமியின் உயிரை காக்க போராடிட்டு இருக்காங்க பாருங்க.
ஒருத்தர் ரத்தம் கொடுத்ததும், இன்னொருத்தர் அந்த இடத்திற்கு வருகிறார்.அவர் போன உடன் எகிறி குதித்து இன்னொருவர் வருகிறார்.
நன்றாய் பாருங்க அர்ஜுன்,ஜெஸ்ஸி பிடித்து இருப்பது ‘ரேடியால் அர்டேரி’.
அதை அவங்க 30 நிமிடத்திற்கும் மேலாக தங்கள் கட்டை விறல் கொண்டு அழுத்தி பிடித்து வராங்க. அப்படி வருவது எளிது அல்ல.
‘பிடிச்சிட்டு தானே வராங்க!….’ என்று சுலபமாய் நினைத்தால், உங்க வீட்டில் 30 நிமிடம் ஆடாமல், அசையாமல் உங்கள் மாணிக்கட்டையே பிடித்தது அமர்ந்து பாருங்க.
விரல் மரத்து போய் விடும். புஜம் வலிக்க ஆரம்பித்து விடும்.இவர்கள் கொஞ்சம் அசைந்தாலோ ரத்த பெருக்கு அதிகமாகி விடும்… தொடர்ந்து இவர்களுடன் செல்வோம்.’ என்று திலீப், அங்கு ஒரு மெகா படத்தையே ஒட்டி காண்பித்து கொண்டு இருந்தான்.
இந்த ரிலே பார்த்து அதிர்ந்தது பல வீடுகள்.
அதில் மிருதுளா, அர்ஜுன் குடும்பம், குருதேவ், தன்வி, ஜெஸ்ஸி குடும்பம், மதுரா, விஜய்,சூர்யா,ராஜேஸ்வரி,சுஷாந்த் என்று பலர் அடக்கம்.
ரெண்டு விமான டிக்கெட்டுகள் பஞ்சாபிற்கு தமிழ்நாட்டில் இருந்து புக் அந்த நொடியே செய்ய பட்டது.
ஒன்று மிருதுளா,இன்னொன்று சுஷாந்த்.
(அடப்பாவி இவனா!…. இவன் எதுக்கு மீண்டும் ப்ரீத்தியை தேடி வரான்?)
******************************************************************************************
இவர்கள் குழந்தையை காக்க சென்று கொண்டு இருக்கும் அதே சமயம் சண்டிகரில் ஒரு வீடு, மிகுந்த பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.
தெருவில் பாதியை அடைத்து அந்த பங்களா கட்ட பட்டு இருக்க,அந்த தெருவை தன் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தனர் z + பாதுகாப்பு படை.
இந்தியாவில்பல்வேறு நிலை பாதுகாப்பு VVIP, VIP, அரசியல்வாதிகள், நடிகர்கள்,ஸ்போர்ட்ஸ் ஆட்களுக்கு வழங்கபடும்.
இவை SPG ,Z +,Z ,Y,X என்று ஆபத்தை பொறுத்து IB எனப்படும் INTELLIGENCE BUREAUவால் நியமிக்க பட்டு இருக்கும்.
ப்ரைம் மினிஸ்டருக்கு வழங்கப்படும் SPG (SPECIAL PROTECTION குரூப் ) அடுத்த இடத்தில் இருப்பது Z + பாதுகாப்பு.
Z + பாதுகாப்பு எனப்படுவது 55 பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு இருக்கும்.இதில் 10 NSG கமாண்டோஸ் அடக்கம்.கையில் MP5 துப்பாக்கிகள் இருக்கும்.
அந்த பங்களாவிற்குள் நுழையும் எந்த பொருட்களும் ஒன்றிற்கு நான்கு முறை சோதிக்க படும்.பரிசு பொருட்களுக்கு அனுமதி இல்லை.வாயிலுக்கு முன் மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டு இருக்கும்.
அதை கடந்தால் இரு காவலர்கள் மேஜை போட்டு அதில் லேப்டாப் வைத்து அமர்ந்து இருப்பார்கள். நாம் வந்த காரணத்தை கேட்டு,அதன் அடிப்படையில் உள்ளே இருப்பவரை சந்திக்கும் தேதி, நேரம்,பாஸ் வழங்கப்படும்.அதி முக்கியமானவர்களுக்கு தினமும் வருவதற்கான பாஸ் கொடுக்க பட்டு இருக்கும்.
அது பஞ்சாப் முதல் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீடு.
அதற்கு தான் இத்தனை பாதுகாப்பு. அவரை சந்திக்க வரும் பொது மக்கள்,கட்சி தொண்டர்கள்,மற்ற மினிஸ்டர்,MLA,VIPகளுக்கு தான் இத்தனை கட்டுப்பாடு.
பாகிஸ்தான் அருகே இருக்கும் மாநிலம்.
இன்டர்நேஷனல் எல்லை கோடுக்கு அருகில் உள்ள மாநிலத்தின் முதல் அமைச்சர் என்பதாலும், இன்டெலிஜென்ஸ் bureauவிற்கு கிடைத்த ‘threat assessment/ஆபத்து நிலவர”அறிக்கையின் படியும் இந்த ஏற்பாடு.
தர்மாவை காண தொண்டர்கள்,vip,பொது மக்கள் கீழ் தளத்தில் காத்து இருக்க, அப்படி காத்து இருப்பவர்களின் நிலைக்கு ஏற்ப வாயிலில் அமர வைக்கப்படுவதோ, அந்த வீட்டில் இருந்த அலுவலகத்தில் அமர வைக்கப்படுவதோ, வீட்டிற்குள் நுழைய அனுமதிப்பதோ நடந்து கொண்டு இருந்தது.
வந்த அனைவர்க்கும் பாரபட்சம் பாராமல் உண்ண உணவு,குடிக்க காபி,டீ,ஜூஸ் கொடுத்து கொண்டு இருந்தனர் பணியாட்கள்.
அந்த பங்களாவின் கீழ் தள அறையில் தன்னை சந்திக்க வந்த பெண்களுடன் உரையாடி கொண்டு இருந்தார் முதல் அமைச்சர் மனைவி கஷ்வி தர்மேந்திர பிரதான்.
இவர்களை கடந்து ரெண்டாம் தளத்திற்கு சென்றால் அங்கு ஒரு அறையில் பஞ்சாப் முதல் அமைச்சரும்,அவர் நெருங்கிய உயிர் தோழர் மத்திய அமைச்சர் குருதேவ் சில மாதங்களில் வர போகும் தேர்தலை பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர்.
மஹாபாரத அர்ஜுனுக்கு கண்ணன் வழிகாட்டி மாதிரி தர்மாவிற்கு குருதேவ்,வீரேந்தர்,சரண் ,திலீப் தந்தை புஷ்கர் வழிகாட்டிகள்.
INNER CABINET.
எப்பொழுது எதை அரசியலில் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் குருக்கள்
இவர்களின் உதவியால் ரெண்டாவது தலைமுறையாய் தர்மாவின் குடும்பம் பஞ்சாப் அரசியலில் அனைத்து தடைகளையும் தாண்டி, மாபெரும் கட்சியாய் யாராலும் அசைக்க முடியாத தலைமையை நிறுவி, தொடர்ந்து எட்டாவது முறையாக அவர் கட்சி ஆட்சி அமைத்து வருகிறது.
சந்திரகுப்த மௌரியருக்கு ஒரு சாணக்கியன் என்றால், தர்மாவிற்கு இத்தனை சாணக்கியன்கள்.
அதுவும் எத்தனை நேர்த்தியாய் ஆட்கள் நியமிக்க பட்டு இருக்கிறார்கள்.
மத்திய அரசாங்கத்தோடு நல் உறவில் இருக்க குருதேவ்,போலீஸ் துறையில் வீரேந்தர், மீடியாவில் திலீப் தந்தை புஷ்கர் என்று எது எல்லாம் ஒரு கட்சி ஆட்சி அமைக்க முக்கியமோ, அதில் எல்லாம் தர்மாவின் தோழர்கள் இடம் பெற்று இருந்தார்கள்.
“ஆனாலும் இப்போ வர வர மக்கள் அனைவரும் கதாசிரியர்கள் ஆகிட்டாங்க டா தர்மா. என்னமா screenplay எழுதறாங்க தெரியுமா?”என்றார் குரு.
“என்னடா சொல்றே?”என்றார் தர்மா அசப்பில் பஞ்சாப் நடிகர் தர்மேந்திராவை போல் இருந்தார்.
இந்திய ராணுவத்தில் மேஜர்ஆக இருந்தவர்.தந்தை இறந்த உடன் அரசியலில் இறங்கியவர்.
“ஆமாடா …இப்போ கார்ப்பரேஷன் தேர்தல் நடந்தது இல்லை.அதில் சில தில்லு முள்ளு வேலைகள் நடந்ததே!….” என்றார் குரு.
“ஆமா அதனால் தான் அதை நிறுத்தினோம்.”என்றார் தர்மா.
“ஆமா அது சாதாரண தேர்தல்.என்னவோ ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தேர்தல் போலவும், அது நின்றதால் கார்கில் யுத்தம் தெருக்களில் நடப்பது போலவும்,பல பஸ்கள் எரிந்தது போலவும்,ஒட்டுமொத்த பஞ்சாப் பற்றி எறிவது போலவும் சமூக வலைதளத்தில் என்னமாய் நியூஸ்,மீம்ஸ் எல்லாம் போட்டுட்டு இருக்காங்க.
செம்ம மாஸ் கதை. இதோ பாரேன்.”என்ற குருதேவ் தன் போன் காட்ட, அதை கண்டு வாய் விட்டு நகைத்தார் தர்மா.
“ஒரு நல்லது செய்தால் கூட, அது எதற்கு என்று புரிந்து கொள்ளாமல், நாட்டையே அழித்தாலும் அதற்கான ஆதாரம் லட்சக்கணக்கில் இருந்தாலும், அவனுங்க பதவிக்கு வர தான் இவங்க எல்லாம் துணை போவாங்க.
என்ன ஒரு சுயநலம் பார்த்தாயா?
ஒருத்தர் ஒன்றை சொல்கிறார் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே என்று ஒருவர் கூடவா கேட்க மாட்டாங்க?ஊரே அப்படியே பற்றி கொண்டு எரியுதாமா?அதற்கான போட்டோ,வீடியோ கேளு.out ofthe box thinking கிடையாது என்பது இது தான்.”என்றார் தர்மா கடுப்புடன்.
“மார்பிங் செய்து கூட போடுவாங்கடா.இவங்களுக்கு நீ பதவியில் இருக்க கூடாது.எத்தனை பேரை உயிரோடு எரிச்சாலும், போதை மருந்து,மது,எல்லாம் இவனுங்க கண்ட்ரோல் என்றாலும் எவனும் இதை பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டானுங்க.
சவத்தை வைத்து அரசியல் பேசும் நாய்ங்க இதுங்க எல்லாம்.பணத்தை வாங்கிட்டு இந்த வேலை செய்வதற்கு தெருவில் பிச்சை எடுக்கலாம்.நீயும் வாய் மூடிட்டு இருக்கேடா.மறுப்பு போஸ்ட்,இன்டெர்வியூ ஏதாவது கொடுத்தால் தானே
‘நீ பேசறியா பேசிக்கோ…அது எதுவும் என்னை பாதிக்காது.நான் என் வேலையை செய்து கொண்டே போவேன்’என்று உன் மௌன பாஷை எல்லாம் புரிந்து கொள்ளும் அறிவு இவங்களுக்கு இருந்தால் இப்படி எல்லாம் ஏன் போடுறாங்க.” என்றார் குருதேவ் கடுப்புடன்.
“என்னபா தன்வி பூரி கடையில அடிச்சாங்களா என்ன?… இவ்வளவு ஹாட்டா இருக்கே இன்னைக்கு?”என்றார் தர்மா புன்னகையுடன்.
“அடேய்!… நானே இதை எல்லாம் பார்த்துட்டு கடுப்பில் இருக்கேன்.இப்போ தான் காமெடி செஞ்சிட்டு இருக்கே!…..”என்றார் குரு.
“விடுடா… பொய் வெகு வேகமாய் பரவலாம். ஆனால் சத்தியத்தின் முன் அது நிலைத்து நிற்காது.உண்மை என்பது அந்த சூரியனை போன்றது.மேகங்கள் மறைக்கலாம் ஆனால் அதுவே நிரந்தரம் இல்லை.உண்மை மக்கள் அறியும் நாள் வரும்.
ஆனால் அதற்கு நாம் களை பறிக்க வேண்டி வரும்.சில பல அதிகாரிகள்,சமூக ஆர்வலர்கள் என்று பெயர் செய்து கொண்டு மக்களை ஏமாற்றும் புல்லுருவிகள் முகத்திரை கிழிக்க வேண்டும்.செய்வோம்.“என்றார் தர்மா.
இவர்கள் இங்கே பஞ்சாப் அரசியலை பற்றி பேசி கொண்டு இருக்க,வெளியே நின்றவர்கள் தங்கள் போனில் அந்த லைவ் ரிலே பார்த்து,பதற அந்த விஷயம் இவர்களை வந்து அடைந்தது.
அவர்கள் செயலாளர்கள் விஷயத்தை சொல்லி ,டிவி ஆன் செய்ய நேரலையை பார்த்த இருவருக்கும் மிகுந்த அதிர்ச்சி.
“ஹே பகவான்!…. என்னடா உலகம் அழிய போகுதா என்ன?… உன் மகனும் அர்ஜுனும் சேர்ந்து இதில் இறங்கி இருக்கானுங்க.” என்று தர்மேந்திரா கிண்டல் அடிக்க வாய் விட்டு சிரித்தார் குருதேவ்.
“அவனுங்க அப்படி தான்.சண்டை வந்த லவர் மாதிரி சேரவும் மாட்டார்கள், பிரியவும் மாட்டார்கள். இதுங்களோட டாம் அண்ட் ஜெர்ரி சண்டையை தீர்த்தே எனக்கு வயசாகிடும் போல் இருக்கு. “என்றார் குருதேவ் புன்னகையுடன்.
“ஆமா நீ மட்டும் என்ன,வீரேந்தர்,யதுவீர் கூட அப்படி தான் நடக்கிறே!….இத்தனை வயசான உனக்கே, இன்னும் ஈகோ இருக்கும் போது அவனுங்க இள ரத்தம் சூடு அதிகமாய் தான் இருக்கும்.”என்றார் தர்மா.
குருதேவ் அசடு வழிய,வாய் விட்டு நகைத்தார் தர்மா.
அவர்களின் சிரிப்பு உறைந்து போனது அங்கு ஒளிபரப்பான நியூஸ்களை பார்த்து.பல்வேறு நியூஸ் சேனல் விவாதம் கேட்டு நொந்து போனார்கள் இருவரும் என்றால் கூட மிகையல்ல.
“மனுடசங்களாடா இவங்க?… அங்கே உயிர் துடிப்பதை இதை வைத்து அரசியல் செய்யாமல் விட மாட்டானுகளே!….. ஒரு உயிரின் மதிப்பு தெரியாத xxxx.”என்று ஆத்திரத்தில் பொரிந்தார் தர்மேந்திரா.
“வாஸ்தவம் தான் தர்மா…அந்த சிறுமி சாகனும் என்று கூட விட்டால் வேண்டி கொள்வாங்க. அப்போ தானே இவனுங்க சொல்லும் பொய்யையும் நம்பி, ஜால்ரா தட்ட சிலர் கிடைப்பார்கள்.
மிலிட்டரி,போலீஸ் என்று நாமளும் எல்லா விதத்திலும் தான் இதை முற்றிலும் ஒழிக்க போராடி வருகிறோம்.காப்பவனை விட கள்வன் பெரிதாய், விதவிதமாய் யோசிக்கும் போது இந்த கொடுமை நடக்க தானே செய்யும்.“என்றார் குருதேவ்.
“இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் இன்னும் மோசமாய் இருக்கேடா.நம்ம பார்ட்டியிலும், எதிர்கட்சியிலும் நிறைய பேர் இதில் ஈடுபட்டு இருக்காங்களே!… நம்ம இவனுகளை மோப்பம் பிடிச்சுட்டோம் என்று தெரிந்தால் நம்மை போட்டு தள்ளிட்டு சிம்பதி ஒட்டு வாங்கி ஜெயிச்சுடுவாங்க.“என்றார் தர்மேந்திரா.
“ஆணி வேரை அழித்தால் மொத்த மரமும் சாய்ந்துட போகுது தர்மா.அந்த காபோஸ் கைப்பாவை தானே இவனுங்க.அவனை போட்டு தள்ளிட்டோம் என்றால், இவனுங்க அடங்கிடுவானுங்க. இவங்க சொத்து முழுவதையும் பிரீஸ் செய்துடலாம். எங்கே அடித்தால் எப்படி விழுவானுங்க என்று தெரியாதா என்ன?”என்றார் குருதேவ்.
“நமக்கு மக்கள் முக்கியம் குரு.அவங்களுக்காக என் அப்பா உருவாக்கிய கட்சி இது. மக்கள் அவங்க தாண்டா என் குழந்தைங்க.அவங்களை தினமும் இது மாதிரி கொத்து கொத்தாய் பலி கொடுத்துட்டு இருக்கேன்.நான் இந்த பதவியில் இருக்கவே தகுதி இல்லாதவன் குரு.”என்றார் தர்மா கண்களில் கண்ணீர் வழிய.
பிள்ளை செல்வம் இல்லாத பஞ்சாப் முதல் அமைச்சருக்கு அவர் மாநில மக்கள் தான் பிள்ளைகள்.அவர் ஒருவர் மட்டும் நல்லவராய் இருந்தால் போதாது.
அவர் உடன் இருப்பவர்கள்,அவருக்கு கீழே வேலை செய்பவர்கள் என்று பலர் குறுக்கு வழியில் சென்று கொண்டு இருக்கும் போது தலைமை மட்டும் ஒழுக்கமாய் இருந்து என்ன பயன்?
ஓட்டை குடத்தில் ஊற்றப்படும் நீர் போன்றது அவர் சேவைகள்.எதுவும் மக்களை சென்று ஒழுங்காய் சேர்ந்தது இல்லை.
அந்த ஓட்டையை அடைக்க, அவரை மற்றவர்கள் விட்டதில்லை.தாங்கள் நன்மை அடைய ஓட்டையை பெருசாக்கினார்களே ஒழிய,இதனால் பாதிக்கப்படும் மக்களை பற்றி அவர்கள் பெருசாய் எண்ணவில்லை.
‘நானும் என் குடும்பமும் நல்லா இருக்க …பத்து பேர் செத்தால் தான் என்ன’என்ற சில அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள், காவல் துறை,பொது மக்கள் இருக்கும் வரை இவரை போன்றவர்கள் கைகள் கட்டப்பட்ட கைதியே.
“அப்படியே அறைஞ்சேன்னு வைச்சிக்கோ…நீ இருக்கும் போதே இப்படி ஆடுறானுங்க. நீயும் விலகிட்டால்… இன்னும் குட்டிச்சுவர் ஆக்கிட்டு தான் விடுவானுங்க.
பஞ்சாப் இன்னொரு மெக்ஸிகோ மாதிரி போதை மருந்தின் சாம்ராஜ்யம் ஆக்கிட்டு ,சொந்த பர்சனல் ராணுவம் எல்லாம் உள்ளே கொண்டு வந்து தெருவில் ரத்த ஆறு ஓட வைக்காமல் விட மாட்டாங்க தர்மா.
வீரேந்தர்,ரஞ்சித்,நான் எல்லோரும் உன் பின்னால் தானே இருக்கோம்.ப்ரைம் மினிஸ்டர் கூட நீ என்றால் அத்தனை மரியாதையை வைத்து இருக்கார். உளறாதேடா.நான் போய் அங்கே என்ன நிலவரம் என்று தகவல் சொல்றேன்.” என்று கிளம்பினார் குரு.
வீட்டின் வாசலுக்கு வந்தவரை எதிர் கொண்டார் தர்மேந்திராவின் மனைவி.
“என்ன அண்ணா!…. என்ன சொல்றார் உங்க தோழர்.”‘என்றார்
“தத்து பித்துன்னு உளறிட்டு இருக்கான். ‘பதவியை விட்டு விலகறேன்!….’ என்று புதுசாய் ஆரம்பித்து இருக்கான் பைத்தியக்காரன்.”என்றார் குருதேவ்.
“இது கொஞ்ச நாளாவே போய்ட்டு தான் இருக்கு அண்ணா. அவங்க அப்பா ஆரம்பிச்ச கட்சியில் இப்படி ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே அவரை உலுக்கி விட்டது.
எல்லோரும் புத்தனின் மறுஅவதாரம் என்று நினைத்து கொண்டு இருப்பவர் ஆயிற்றே!….. அதான் இந்த துரோகத்தை அவரால் தாங்க முடியவில்லை. லஞ்சம். ஊழல், பெண்கள், போதைன்னு இந்த கட்சியில் நிறைய பேர் ஈடுபட்டு இருக்காங்க அண்ணா… கட்சியை கலைக்க போறேன்,பதவி விலக போறேன் என்று சொல்லிட்டு இருக்கார்.சரியாய் தூங்குவதும் இல்லை.
தயவு செய்து நீங்க முதல் அமைச்சர் பதவியை ஏத்துக்கோங்கோ அண்ணா. இப்படியே போனால் இவர் உயிர் தங்காது போல் இருக்கு.
மைல்டு அட்டாக் வேற வந்துடுச்சு.வெளியே சொல்லாமல் டிரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கோம்.”என்றார் கண் கலங்கியவாறு.
“என்ன பெஹன் சொல்றே.ஹார்ட் அட்டாக்கா!… தர்மாவுக்கா?… எனக்கு ஒரு தகவலும் இல்லை. வீரேந்தருக்கு கூட தெரியாது போல் இருக்கே!….”என்றார் குருதேவ் நெஞ்சில் கை வைத்து.
“யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம் என்று இவர் தான் அண்ணா சொல்லிட்டார்.உங்க மனசு எல்லாம் கஷ்ட பட கூடாதாம்.அவருக்கு ஒன்று என்றால் நீங்க எல்லோரும் துடித்து போவீங்க என்று…அவர் பேச்சை என்னால் மீற முடியலை அண்ணா.”என்றார் அவர் கண்கள் கலங்க.
“இப்போ எப்படி இருக்கு.ஒன்றும் ஆபத்து இல்லை தானே?”என்றார் குரு கலங்கிய கண்களுடன்.
“உடலில் நோய் இல்லை அண்ணா.மன நோய் இவரை பிடிச்சிட்டு இருக்கு.ஹெவி ஸ்ட்ரெஸ்.நீங்க பதவி ஏத்துக்கோங்கோ அண்ணா.”என்றார் அவர்.
“அவனுக்கு ஒண்ணும் ஆகாது.நாங்க இருக்கோம்…நாங்க பார்த்துக்கறோம். அவனை எங்காவது ரிலாக்ஸ் செய்ய கூட்டி போமா.இங்கேயே இருந்தால் தினம் தினம் இந்த அரசியல் என்னும் சாக்கடை, நம்பிக்கை தூரோகங்கள் அவனை கொன்று விடும். வரம்பு மீறி போய்ட்டு தான் இருக்கு.எல்லாத்தையும் தடுக்க முயற்சிக்கிறோம்.”என்றார் குரு.
“அண்ணா!…. நீங்க என்றால் கட்சியில் பெரும் மதிப்பு உண்டு. மக்களும் உங்களை கொண்டாடிட்டு இருக்காங்க. ‘அடுத்த முதல்வர்!….’ என்று உங்களை தான் கூப்பிடுறாங்க.ப்ளீஸ் அண்ணா!… பதவி ஏத்துக்கோங்கோ.”என்றார் கரம் கூப்பி.
“பெஹன்!… அவனுக்காக தான் இந்த பதவியில் இருக்கேன்.அவனே அரசியல் விட்டு நீங்கினால், நானும் நீங்கி விடுவேன். என்னை கம்பெல் செய்யாதே மா!. தர்மா பதவியில் இருந்தால் மட்டுமே, நானும் அரசியலில் இருப்பேன்.”என்றார் குருதேவ்.
‘இந்த காலத்தில் இப்படியும் ஒரு நட்பா?’ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை கஷ்வியால்.
“அவரும் இதையே தான் சொன்னார் அண்ணா. நான் இருக்கும் வரை தான் குரு, வீரேந்தர் எல்லாம் பதவியில் இருப்பாங்க என்று. அவர் சொன்ன போது நான் அதை நம்பவேயில்லை தான். இப்போ தான் புரியுது உங்களை எல்லாம் அவர் எந்த அளவிற்கு புரிந்து வைத்து இருக்கிறார் என்று.”என்றார் கஷ்வி.
“கலங்காதே மா. அவனுக்கு வழி ஏதாவது கிடைக்கும்.மாத்தி யோசிப்பான்.இந்த மாநில மக்களை, இந்த நிலையில் விட்டு எல்லாம் பதவி விலக மாட்டான்.நல்லதே நடக்கும்.வரேன் மா.” என்றவர் விடை பெற்று வெளியே வர அவர் வாயில் மைக் சொருக பட்டது.
“சார்!… இந்த அரசு போதை மருந்து சாம்ராஜ்யத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க தவறி விட்டது என்பதை இந்த பள்ளி நிகழ்வு மூலம் சொல்லலாமா?” என்றார்கள் முதல்வரை பேட்டி எடுக்க காத்து இருந்தவர்கள்.
“இந்த அரசை தவிர வேறு யாரும் போதை மருந்துக்கு எதிராக செயல் பட்டதில்லை. இந்த வருடத்தில் மட்டும் எத்தனை முறை ரெய்டு,எத்தனை கிலோ போதை மருந்து கைப்பற்ற பட்டு இருக்கு என்பதை நார்க்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் பதிவுகள் சொல்லி விடும்.
பஞ்சாப் முழுக்க துரித உணவக ரெய்டு எல்லாம் இந்த அரசு செய்தது தான்.தவிர ஸ்பெஷல் ஆன்டி நார்க்கோடிக்ஸ் டீம்கள் இந்த மாநிலத்தில் அங்கங்கே deploy செய்து இருக்கோம். இரும்பு கரம் கொண்டே இந்த அரசாங்கம் போதையை எதிர்க்கிறது.
உங்கள் மீதி கேள்விகளுக்கு முதல் அமைச்சர் பதில் சொன்னால் தான் சரியாய் இருக்கும். இப்போ அந்த குழந்தையை பார்க்க நான் பதிண்டா கிளம்பிட்டு இருக்கேன்.உங்கள் பேட்டிக்கு நன்றி.”என்றவர் அந்த ரிப்போர்ட்டர்கள் வெள்ளத்தில் நீந்தி கரை ஏறி பதிண்டா நோக்க்கி விரைந்தார்.
அதே சமயம் தர்மா தன் செயலாளருடன் பேசி மீடியா இன்டெர்வியூக்கு ஏற்பாடு செய்து,இந்த செயலுக்கான கண்டனத்தையும்,தன் ஆட்சி இதை இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்றும் பேட்டி கொடுத்தார்.
நார்க்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் ரெய்டு எத்தனை முறை சென்று இருக்கிறார்கள்,எவ்வளவு கிலோ பறிமுதல் செய்ய பட்டு இருக்கிறது என்பதை எல்லாம், விம் சபீனா போட்டு விளக்கி கூறினார்.
“சார்!…. எங்களுக்கு உறுதியான தகவல் கிடைத்து இருக்கு. இன்று பள்ளி சிறுமியை காக்க காரில் போராடி கொண்டு இருக்கும் மிஸ் ப்ரீத்தி, mr அர்ஜுன் தான் பதிண்டா ரயில் நிலையத்தில் போதை மருந்து பிடிபட காரணம் என்பது உண்மையா ?
அங்கு நடந்தது நார்க்கோடிக்ஸ் ஸ்ட்ரிங் ஆபரேஷன் தான் என்றும், அந்த ட்ரைனில் வந்து கொண்டு இருந்த மிஸ்.ப்ரீத்தி கொடுத்த தகவலின் படி தான் அங்கே மிலிட்டரி ஆபரேஷன் நடந்தது என்ற நியூஸ் கிடைத்து இருக்கு.இது உண்மையா சார்.”என்றார் இன்னொருவர்.
அது உண்மை தான் என்று ஒற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை தர்மாவிற்கு.
“யெஸ் மிஸ் ப்ரீத்தி கொடுத்த தகவலின் படி தான் ட்ரைனில் கடத்தப்பட்ட போதை மருந்தினை பிடித்தோம். அது ஆர்மி ஆபரேஷன் என்பதால் இதற்கு மேல் அதை பற்றி தெளிவாய் வேறு எதையும் சொல்ல முடியாது.”என்றார் தர்மேந்திரா.
“அப்போ ரெண்டு முறை இதில் ஈடுபட்ட சாமானிய மக்கள்-அர்ஜுன்,ப்ரீத்தி தங்கள் உயிரையும் பணயம் வைத்ததற்கு, அவர்களை இந்த அரசாங்கம் கௌரவிக்குமா?”என்ற கேள்வி வந்தது தல்வார் பத்திரிகை நிருபரிடம்.
தன் மொபைலில் வந்த மெசேஜ் பார்த்த பிறகு இந்த கேள்வியை அவர் கேட்டார்.
“நிச்சயம் இந்த துணிச்சல் பாராட்ட பட வேண்டிய ஒன்று. குழந்தை நலமுடன் மீண்டு வர என் பிராத்தனைகள்.நிச்சயம் இந்த மாநிலம் போதையின் பிடியில் இருந்து மீட்க படும்.
ஜெய் ஹிந்” என்றவர் பேட்டியை முடித்து கொண்டு தன் அலுவலகத்திற்கு கிளம்பினார்.
***********************************************************************************
இன்னொரு இடத்தில் இது எல்லாவற்றையும் பார்த்து கொண்டு இருந்த ஒருவன் அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவன் மீது தன் கோப விழிகளை செலுத்த அவன் நடுங்க ஆரம்பித்தான்.
“எப்படி நடந்தது இது?… நான் சொன்ன டைம் விட இவ்வளவு லேட் ஆகும் போதே நினைத்தேன். ஏதோ சரியில்லை என்று… “ என்றான்
அவன் -காபோஸ்.
பஞ்சாப் போதை மருந்து சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.
“அந்த பொண்ணு ப்ரீத்தி வேலை சார்.
நம்ம xxx அந்த சிறுமி கிட்டே நேரம் காலம் பார்க்காமல், எக்கு தப்பாய் பள்ளிக்கு அருகவே நடத்துட்டான்.தவிர வேறு சில கல்லூரி பெண்களையும் அந்த காருக்குள் வைத்து …அதான் இவ்வளவு லேட். அதனால் தான் மாட்டிட்டான்.”என்றான் அவன் நடுக்கத்துடன்.
“டாமிட் …xxx ,xxx “என்று பச்சை பச்சை வார்த்தைகள் வெளிவந்தன அவன் வாயில் இருந்து.
“மருந்தை கொடுத்துட்டு வாங்காடா என்றால் படுக்க ஆசைப்பட்டு இப்படி மாட்டிட்டு இருக்கீங்களேடா!…. அவனுங்க மாட்டும் வரை நீ என்ன xxx?”என்றான் காபோஸ் கோபத்துடன்.
“சார்!… நீங்க தான் சார் நான் பின்னால் இவங்களை தொடர்ந்து வேவு பார்க்க வேண்டும்.பொருள் கை மாறுதான்னு மட்டும் பார்க்கணும்..எது நடந்தாலும் உங்க கிட்டே சொல்லணும்,நடப்பதில் தலை இட கூடாது.ஏதாவது பிரச்சனை என்றால் அங்கிருந்து யாருக்கும் சந்தேகம் வராமல் கிளம்பிடனும் என்று சொல்லி இருக்கீங்க.” என்றான் அவன்-ப்ரீத்தி,அர்ஜுன் இருந்த ஸ்பாட்டில்,போதை மருந்து விற்பவர்களை வேவு பார்க்க காபோஸ் நியமித்து இருந்த ஆள்.
“போன் செய்து என்ன செய்வது என்று கேட்க மாட்டியா?மாட்டி இருக்கும் பொருளின் மதிப்பு என்ன என்று தெரியுமா?அந்த காரின் சீட்டுக்கு அடியில், காரின் பல பகுதிகளில், டயருக்குள் எல்லாம் எவ்வளவு இருக்குன்னு தெரியுமா? பைத்தியக்காரா. ஒரு போன் செய்ய மாட்டியா?”என்றான் காபோஸ்.
“சிக்னல் கிடை …” என்று முழுவதும் அவன் சொல்லி முடிப்பதற்குள் காபோஸ் சைலென்சர் பொருத்தப்பட்டு இருந்த துப்பாக்கி, அவனை சைலன்ட் ஆக்கி விட்டு இருந்தது.
டிவி பார்க்க பார்க்க அவன் கோபம் எல்லையை கடக்க அங்கு இருந்த சிலரை அடித்து நொறுக்கினான் காபோஸ்.
அப்பொழுதும் அவன் கோபம் அடங்கவில்லை.
தொடர்ந்து பல மாதமாய் அவன் பொருட்கள் எல்லாம் இப்படியே பிடிபட்டு கொண்டு இருந்தது.
ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் போதை மருந்து ஒழிப்பு கமாண்டோஸ், இன்னொரு பக்கம் ப்ரீத்தி,அர்ஜுன், இன்னொரு பக்கம் முகமே தெரியாத விஜிலாண்டி ஒருவன் என்று அவனை சுற்றி அடித்து கொண்டு இருந்தனர்.
இவனை நம்பி பொருளை அனுப்பும் ஆப்கான், பாகிஸ்தான், மெக்ஸிகோ போதை குழு ஆட்கள் என்ன இதை எல்லாம் சும்மா தூக்கி கொடுத்து விடுவார்களா என்ன?எல்லாம் பல கோடி மதிப்பிலான பொருட்கள்.ஏற்கனவே இதற்கான பணம் எங்கே என்று அழைப்பு மேல் அழைப்பு வந்து கொண்டு இருந்தது.
இவன் பொருள் விற்றால் தான் அதை உற்பத்தி செய்து, சப்ளை செய்யும் நாடுகளின் போதை மருந்து குழுக்களுக்கு இவன் பணம் கொடுக்க முடியும்.
இவன் பணம் கொடுத்தால் தான் அந்த குழுக்கள் உற்பத்தி செய்ய முடியும்.
பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதம் வாங்க,நாடுகளில் கலவரம் செய்ய பணம் கொடுக்க முடியும்.
அப்படி கொடுத்தால் தான், மதம் என்ற முகமூடி அணிந்து, ‘பணம் என்ற கடவுளை வணங்கும் இவர்கள், ஒரு நாட்டை அழிக்க முடியும்.
நடிகர்களுக்கும்,படம் எடுப்பதற்கும் பைனான்ஸ் ,சமூக சேவை செய்வது என்ற போர்வை, ரியல் எஸ்டேட் என்ற அரக்கன், அரசியல் கட்சி வளர்ச்சி நிதி, மீடியாக்களை பின் இருந்து இயக்குவது,பள்ளி கல்லுரி திறந்து தங்கள் போதனைகளை போதித்து மக்களை மாக்கள் ஆக்குவது.
’வள்ளல், தலைவன்,கலங்கரை விளக்கம்’ என்று பூஸ்ட் செய்து நடிகர்களை அரசியலில் குதிக்க வைப்பது,அந்ததந்த துறையில் லஞ்சம் கொடுத்து தன் ஆட்களை அரசாங்க பதவியில் நிறுத்துவது எல்லாவற்றிலும் இன்வெஸ்ட் செய்து கருப்பை வெள்ளையாகி அதை லீகல் ஆக சில விஷயங்களுக்கு பயன்படுத்துவது—இது பண சுழற்சி.
பல பில்லியன் டாலோர் கருப்பு வெள்ளை பணங்கள் போதை மருந்து, ஹியூமன் ட்ராபிக்கிங்,மெடிக்கல்,education மாபியா,ப்ரோனோக்ராபி என்று எல்லாவற்றிலும் கை மாறி என்று ஆராய ஆரம்பித்தால் தலை சுற்றி போகும் குற்றங்கள் இவை.
சமூக வலைத்தளத்தில் ஒரு அரசாங்கத்தை,ஆட்சியை பற்றி கமெண்ட் அடிக்க,இந்த நாட்டிற்கே செல்லாதீர்கள் என்று ப்ரைன் வாஷ் செய்ய,நாட்டினையே மிக கேவலமான வார்த்தைகளால் குறிப்பிட்டு பேச,மத கலவரம்,ஜாதி கலவரம் உண்டாக்க, ஒன்றும் இல்லாததை ஊதி ஊதி பெருசாக்க வேண்டும் என்றால் சமூக வலைத்தளம் கொந்தளிக்க வேண்டும் என்றால் இதை செய்ய பணம் வேண்டும்.
அந்த பணம் வர இந்த போதை மருந்துகள் விற்க பட வேண்டும்.
மாட்டி கொண்டால் இதை எல்லாமே எப்படி செய்ய முடியும்?
சர்வதேச அளவில் நடைபெறும் இந்த பண பரிவர்த்தனையை எதிர்த்து நின்று இருப்பது சாமானிய பெண் இருவர் .
பல விஷயங்கள் -ஹியூமன் டிராஃபிக் தொடங்கி,போதை மருந்து,கருப்பு பணம், ப்ரோனோக்ராபி, தீவிரவாதம்,கலவரம், பொய் பரப்புதல் என்று எல்லாமே வரவேண்டிய பணம் வராமல் அன்றைய தினம் “UNDERWORLD”, “PARALLAL ECONOMY” ஸ்தம்பித்து போக இவர்கள் காரணமாய் இருந்தார்கள் .
இடியாப்பத்தை விட மிக சிக்கலானது இது போன்ற பண சுழற்சி.
பெண்ணின் கையால் தன் சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டு கொண்டு இருப்பதை அவனால் தாங்கவே முடியவில்லை.
பணத்திற்கு விலை போன ஒரு கறுப்பாடு ‘ரயில் நிலைய போதை மருந்து பிடிப்புக்கு’ காரணம் ப்ரீத்தி, ஜெஸ்ஸி, அர்ஜுன்,அமன் என்பதை போட்டு கொடுத்து இருந்தது.
இன்று உலகமே அதற்கு விட்னெஸ்.
டிவியில் ப்ரீத்தி முகம் பார்த்து விட்டு “ப்ரீத்தி!… அர்ஜுன்! ….”என்று அவன் கத்திய கத்தல் அந்த அறையையே கிடுகிடுக்க வைத்தது.
அதே பதிந்தாவின் ஒரு வீட்டில் லேப்டாப் முன் அமர்ந்து இருந்தான் ஒருவன்.
தாடி என்னும் புதருக்குள் அவன் முகம் மறைந்து இருக்க அவன் யார் என்றே அடையாளம் காண முடியவில்லை.
அவன் போன் விடாமல் அடிக்க ஆரம்பித்தது.
“யெஸ்.”என்றான் இவன்.
“நான் தான் காபோஸ். என் கூட்டத்தில் ஒற்று சொல்ல ஒரு காக்கி சட்டை இருக்கு. அது யார் என்று உன் ஆட்களை விட்டு கண்டு பிடித்து ஒழித்து கட்ட சொல்லு.
இன்னும் ஒன்று இன்று இரவுக்குள் அர்ஜுன் வீட்டில் யாருமே உயிரோடு இருக்க கூடாது.முக்கியமாய் ப்ரீத்தி.
அவங்க தலை போலீஸ் HEADQUARTERS வாசலில் தொங்கணும்.என்னை எதிர்ப்பவன் ஒருத்தனும் உயிரோடு இருக்க கூடாது.”என்றான் அவன் எதிர் முனையில் இருந்து.
“இதை என் தலைமை ஏற்காது.ஏற்க்கனவே உனக்கு கொடுத்த பொருளுக்கு பணம் வரவில்லை.அதற்கு வார்னிங் கொடுக்க தான் உன் ஆட்கள் ரெண்டு பேரை பினிஷ் செய்ய சொன்னாங்க.அதற்கே பணம் கொடுக்காமல் இன்னும் இதை செய்,அதை செய் என்றால்?”என்றான் அவன் இரக்கமே இல்லாமல்.
“பொருள் தொடர்ச்சியாக மாட்டி கொண்டு இருப்பதே இவங்களால் தான்.தயவு செய்து இதை செய்.இவங்களை கொன்று விட்டால் என்னை எதிர்க்க வேறு எவனும் துணிய மாட்டான்.”என்றான் காபோஸ்.
பஞ்சாபில் செயல் பட்டு வந்த தீவிரவாத குழுவின் ஸ்லீப்பர் செல் அது.
காபோஸ் போதை தொழிலில் இந்த தீவிரவாத குழுக்களும் பங்கு உண்டு.இந்திய நாட்டின் வேறு ஒரு எல்லை பகுதியில் செயல் படும் ஒரு குழுவின் கிளை இது.
“கேட்டுட்டு சொல்றேன்.அவங்க நோ என்று சொல்லிட்டா உனக்கு உதவ முடியாது.இது நான் மட்டும் எடுக்கும் முடிவு இல்லை.தலைமை ஒகே சொல்லணும்.
ஒகே சொன்னால் நாளை காலை அவங்க செத்துட்டாங்க என்ற நியூஸ் வரும்.நடுவே எதற்கும் அழைக்காதே.போன் டிஸ்போஸ் செய்துடு.”என்றான் அவன் விழிகள் சிவந்து.
தனக்கு அழைப்பு வந்த போனை அருகில் இருந்த ட்ரம்மில் தூக்கி போட்டான்.போட்ட வேகத்தில் அதற்கு உள் இருந்து வெளியே தொளித்தது ஆசிட்/அமிலம்.
அவன் கண்கள் அந்த அறையில் அடுக்கி வைக்க பட்டு இருந்த பெட்டிகளின் மேல் வலம் வந்தது.அவற்றில் வெடிகுண்டு,ராக்கெட் லாஞ்சர்,மெஷின் கன் என்று ஒரு ராணுவ கிடங்கே அங்கு இருந்தது.
அவற்றின் மீது பார்வை ஒட்டியவன் விழிகள் மெஷின் கன்களில் மீது பதிய அவன் விழிகள் பளபளக்க ஆரம்பித்தது விபரீதமாக.
அவன் பார்க்க நிஜ அரக்கன் மாதிரியே இருந்தான்.
இரக்கம்,கருணை,மனித நேயம் இது எல்லாம் அவன் அகராதியிலேயே கிடையாது.கொன்று விட்டு அதன் பிறகு கேள்வி கேட்கும் குழுவின் தளபதி அவன்.
அவன் குறி அர்ஜுன் குடும்பத்தின் மீது -குறிப்பாய் ப்ரீத்தி.
************************************************************************************
அதே சமயம் எதிர் கட்சி தலைவர் எண்ணையில் இட்ட அப்பளம் போல் குதித்து கொண்டு இருந்தார் மீடியா முன்பு.
‘தார்மீக பொறுப்பேற்று தர்மேந்திரா பதவி விலக வேண்டும்.அதுவரை உண்ணாவிரதம்,பந்த்’என்று புகுந்து விளையாடி கொண்டு இருந்தார்.
இதை வைத்து தானே அடுத்த முறை ஆட்சியை பிடிக்க முடியும்.லட்டு மாதிரியான சந்தர்ப்பம்.விடுவாரா?
அவர் குதித்து கொண்டு இருக்க,அவரின் போன் ஒலித்தது.
எடுத்து பேசியவர் எதிர்முனை என்ன சொன்னதோ பொட்டி பம்பாய் அடங்கி,360* அபௌட் டர்ன் அடித்தார்.
‘முதல் அமைச்சர் எது செய்தாலும், நாங்கள் துணை இருப்போம்.’என்று முகம் வெளிறி சொன்னவர் அடுத்த நொடி அங்கு இருந்து அகன்றார்.
பேயை பார்த்தது போன்ற ஓட்டம்.இல்லை பேயுடன் பேசியது போன்ற ஓட்டம்.
பேய் தான் அவரை அழைத்து இருந்தது.
காபோஸ் என்ற பேய்.
“உயிர் மேல் ஆசை இல்லையா?”முதல் கேள்வியே அனல் தெறித்தது.
“சார்!…சார்!…. “என்று எதிர் கட்சி தலைவர் தந்தி அடிக்க
“யாரை கேட்டு இப்போ நீ இந்த பேட்டி கொடுத்தே?…. நான் கொடுக்க சொன்னேனா?”என்றான் காபோஸ் எரிமலையை உள் அடக்கிய கோபத்துடன்.
“அது சார் …இப்போ தான் மக்களுக்கு இந்த ஆட்சி மீது வெறுப்பு கிளப்ப முடியும். அதான்.”என்றார் கட்சி தலைவர்.
“ரொம்ப யோசிக்கறியே!.இப்படி யோசிக்கிறவங்க எனக்கு பயன் கிடையாதே!…..” என்றான் காபோஸ் .
“சார்! …சார்! …” என்று திணறினார் அவர்.
“எந்த XXXXX XXX இதை எல்லாம் செய்தே? பைத்தியக்காரா!… எனக்கு தெரியாதா எது எப்போ செய்யணும் என்று?… சிக்கி இருப்பபவனின் போனில் உன் மகன் நம்பர் இருக்கு ,உன் கட்சி ஆட்களின் நம்பர் எல்லாம் இருக்கு.அது தெரியுமா உனக்கு?
வெண்ணை திரண்டு வரும் வேளையில் மொத்த பானையையும் உடைக்க முயலும் உன்னை என்ன செய்தால் தகும்?…. எத்தனை வருடமாய் பின்னால் இருந்து இந்த அரசியல் சதுரங்கத்தை ஆடி கொண்டு இருக்கிறேன் தெரியுமாடா நாயே உனக்கு ?
இதை வைத்து அரசியல் செய்ய எனக்கு தெரியாதா?…. தர்மா எனக்கு வேண்டும். அவன் கட்சியின் மீது மக்களுக்கு உள்ள மதிப்பு வேண்டும். அதை வைத்து வரும் தேர்தலில் நான் பல கணக்குகளை போட்டு வைத்தால், நீ பெரிய XXX “என்று பச்சை,நீலம் என்று பல வண்ணங்களில் சென்சார் வார்த்தைகள் வந்து விழுந்தன.
“ரயில்வே ஸ்டேஷனில் வைத்து ஒரு பெண்ணை போட்டோமே எதுக்கு தெரியுமா உன் மகன் செய்த XXXX வெளியே வர கூடாது என்று. உன் மகனை களி திங்க அனுப்பலாமா?”என்றான் காபோஸ் கோபத்துடன்.
அதற்கு மேல் வாயை அவர் திறப்பார்?
காபோஸ் ரத்தத்தை தாறுமாறாக கொதிக்க வைத்து அவனை நோயாளி ஆக்கி கொண்டு இருந்த ப்ரீத்தி,அர்ஜுன்,ஜெஸ்ஸி, அமன் அங்கு ஒரு உயிரை காக்க போராடி கொண்டு இருந்தார்கள்.
அர்ஜுன் கை துவளும் போது எல்லாம் ப்ரீத்தி அவன் கையை பிடித்து தேவையான அழுத்தத்தை கொடுத்து கொண்டு இருந்தாள்.
ஜெஸ்ஸி பக்கம் நடு இருக்கையில் யார் இருக்கிறார்க்ளோ அவர்கள் பின்புறம் பார்த்தார் போல் அமர்ந்து அவள் கைக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்து கொண்டு இருந்தார்கள்.
அதற்கு மேல் இவர்களை சோதிக்காமல் யோஜித் ஆம்புலன்ஸ் உடன் வந்து விட,யாஷ்வி அதற்குள் மாற்றப்பட்டாள்.உடன் அர்ஜுன்,ஜெஸ்ஸி,ப்ரீத்தி செல்ல மற்றவர்கள் அங்கேயே நின்று விட்டார்கள்.
காரினை தீப் இடம் கொடுத்த ரஞ்சித் தில்சர் குழுவின் பைக் ஒன்றை எடுத்து கொண்டு பதிண்டா போலீஸ் தலைமையகத்தை நோக்கி சென்றான்.
அங்கு மாட்டியிருந்த அந்த அரக்கர்களை விசாரிக்க.
சரண் இன்னொரு பைக்கில் ஏறி கொண்டு அந்த பள்ளியை நோக்கி சென்றான் வீரேந்தரருக்கு உதவ.
தீப், அமர்நாத், அமன்ஜீத் காரோடு முன்னே சென்ற ஆம்புலன்ஸ் தொடர்ந்து பதிண்டா அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தார்கள்.
பயணம் தொடரும்…