OVOV 41
OVOV 41
“வாட் …ஹவுஸ் அர்ரெஸ்ட் டா?”என்று பல குரல்கள் அங்கு திகைப்புடன் ஒலிக்க,அவர்கள் பார்வை ப்ரீத்தி,ரஞ்சித் மேல் மாறி மாறி படிந்தது.
“ஓஹ் …வீட்டில் அர்ரெஸ்ட் செய்து வைத்தா தான் அது ஹவுஸ் அர்ரெஸ்ட்…இது ஹோட்டல் இல்ல… இங்கே எங்களை அடைத்து வைத்தா அதை ஹோட்டல் அர்ரெஸ்ட்னா சொல்வாங்க? ….எனி ஐடியா சிங்கம்?” என்றாள் ப்ரீத்தி.
“இப்போ இங்கே இந்த கடி ரொம்ப தேவை பாரு….நண்டு வரப்பில் ஓடுவது போல் உன் வாய் மட்டும் அடங்கவே அடங்காது தானே….வாயை திறந்தே ,லத்தியை வாய்க்குள் சொருகிடுவேன்…அடங்குடீ…”என்றான் ரஞ்சித் அவள் தலையில் கொட்டியவாறு.
“ஓஹ் ஆஃபீஸ்ர்….அப்படியே பயந்துட்டோம்…டேய் சிங்க பையா ஓவர் பில்ட் அப் வேணாம் கண்ணா…நீ ராகவானா இரு, சத்ய தேவ்வா இரு….இங்கே வந்து உன் லந்தை காட்டாதே…. பிரிஞ்சிஜூதா நைனா.” என்று தலை சாய்த்து, கீழ் உதட்டினை பற்களால் கடித்து, முகத்தில் புன்னகையுடன், புருவத்தை உயர்த்தி ப்ரீத்தி பதில் சொன்ன விதமே நெஞ்சை அள்ளியது.
‘அதானே….பீரங்கியே எதிரில் வந்தாலும் இவ தான் அசையாமல் நிற்கும் டைப் ஆச்சே.சாதாரண நாளிலே என்னை மதிக்க மாட்டா…சப்பாணி மாதிரி ‘நான் தான் போலீஸ்,நான் தான் போலீஸுன்னு’ சொல்ல வச்சி சுத்தலில் விடுவா.
இன்னைக்கு இவ அமைதியாய் வரும் போதே உஷார் ஆகி இருக்கணும்.சாதாரண நாளிலேயே முப்பது விதமாய் யோசிப்பா…இப்போ கேட்கவும் வேண்டுமா?’என்று தனக்குள் புலம்புவதை தவிர ரஞ்சித்துக்கு வேறு வழியை ப்ரீத்தி விட்டு வைக்கவில்லை.
“என்ன சிங்கம் லட்சார்ச்சணை எல்லாம் ரொம்ப பலமாய் இருக்கு.” என்று ப்ரீத்தி அதற்கும் நக்கல் அடிக்க, ‘ஒருவேளை நமக்குள் பேசுவதாய் நினைத்து வாய் விட்டே உளறிட்டோமோ’ என்று ரஞ்சித்தை ஒரு கணம் குழப்பி, அவன் குழப்பத்தை பார்த்து அதற்கும் ஒரு நக்கல் பார்வை பார்த்து வைத்தாள்.
“அதானே ஊர்ல உலகத்துல இருக்கிற எல்லோரும் என் கிட்டே பயப்படுவான். ஆனா என்னைய ஒரு வழி ஆக்கும் ராட்சசி தோஸ்தா வந்து சேர்ந்திருக்கு பாரு.எல்லாம் என் தலையெழுத்து.தீவிரவாதியின் துப்பாக்கியை கூட பேஸ் பண்ணிடலாம்…உன் வாய் இருக்கே …சான்சே இல்லை தெய்வமே…” என்றான் ரஞ்சித் கடுப்புடன்.
“யுவர் ஆனர்….நாயாலு,தர்மாலு, ஈபிக்காலு, இந்த எல்லா ஆலுவிலும் உன் லா வரவே வராது சிங்கம்….எனக்கு உன் ஸ்கிரிப்ட் ஓரளவிற்கு புரிந்து போச்சு …பாரு தங்களை சுற்றி என்ன நடக்குதுன்னே புரியாமல் திகைச்சி போய் நிக்கறாங்க. என்ன செய்யறே…முதலில் இங்கே என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆகு.
ஓவர் டென்ஷன் ஆனா ஏற்கனவே நட் போல்ட் லூசா இருக்கும் உன் மேல் மாடி மொத்தமாய் கழன்று விழுந்துடும்….நீங்களும் உட்காருங்க….என்ன ஏதுன்னு இந்த சிங்கம் வாயில் இருந்து தெரிந்து கொள்வதற்குள் நமக்கு வயசு ஆகிடும்.இவன் ‘செட் அப்’ வேற பார்த்தால் ஏதோ ஹோஸ்டேஜ் படம் பார்த்தா பீல் தான் வருது.
நான் கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்லு.ஓகேவா?” என்ற ப்ரீத்தியின் பேச்சை கேட்டு ரஞ்சித் அவள் தலையில் குட்டியவாறு அவள் அருகே அமர்ந்து அவள் கைகளை தன் கையோடு கோர்த்து கொண்டான்.
அந்த நெருக்கத்தை பார்த்து அர்ஜுன் வயிற்றில் பல எரிமலைகள் குமுற தொடங்கி இருந்தது.அந்த அளவிற்கு பொசசிவ்ன்ஸ் அவனை போட்டு அலைக்கழித்தது.
“கேளுடி…என் கெளுத்தி…என்ன இந்த மண்டையில் துள்ளுது?” என்றான் ரஞ்சித்.
‘அடேய் இவன் வேற நேரம் காலம் பார்க்காம எப்போ பார்த்தாலும்,’எரிமலை எப்படி பொறுக்கும்?’ என்று லுக்க்கு விட்டுட்டு,பற்களை என்னவோ கிரைண்டர் ரேஞ்சுக்கு வைத்து அரைக்கிறான்.இப்போ எதுக்கு ஷோல்டர் எல்லாம் விறைத்து,’ஹல்க்’ ரேஞ்சுக்கு புசுபுசுன்னு நிக்கறான்?’ என்று அர்ஜுன் நின்ற விதத்தை கண்டு ப்ரீத்தி தன் புருவத்தை கேள்வி குறியாக உயர்த்த,தன் உணர்வுகளை உள்ளே அடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அர்ஜுன்.
அவன் கையை பிடித்து இழுத்து சோபாவில் அமர வைத்தாள் ஜெஸ்ஸி.அர்ஜுனின் மறுபுறம் தீப் அமர்ந்தான். ப்ரீத்தி,ரஞ்சித் உரையாடல் தமிழில் இருக்க, அதை பஞ்சாபிக்கு ட்ரான்ஸ்லேட் செய்து கொண்டிருந்தாள் ஜெஸ்ஸி.
ஜெஸ்ஸிக்கும் ஏதோ சரியில்லை என்று புரிந்தாலும்,ப்ரீத்தி ‘ஹவுஸ் அர்ரெஸ்ட்’ என்று சொன்ன பிறகே அந்த ஹோட்டல் ஏற்பாடுகளை பார்த்து, தாங்கள் அறியாத ஏதோ ப்ரீத்திக்கு ஏதோ புரிந்து இருக்கிறது என்பது விளங்கியது.
ரஞ்சித் பயங்கர டென்ஷனில் இருப்பதை பார்த்து விட்டு, அவனை ரிலாக்ஸ் செய்ய தான் ப்ரீத்தி அவனை நக்கல் அடித்து கொண்டிருக்கிறாள் என்பதும் ஜெஸ்ஸிக்கு விளங்கி போனது.இருவரின் வாய் மொழியை மட்டும் இல்லை, உடல் மொழியையும் கவனிக்க ஆரம்பித்து விட்டு இருந்தாள் ஜெஸ்ஸி.
ஒருவரின் மைக்ரோ எஸ்க்ஸ்ப்ரசன்,உடல் மொழி சொல்லும் அவர்கள் மனநிலையை, அவர்களின் மனவோட்டத்தை. வெளியே சிரித்து பேசுவது போல் இருந்தாலும் ப்ரீத்தி, ரஞ்சித் கண்களை அந்த சிரிப்பு எட்டவில்லை என்பதையும், அந்த சூழ்நிலை வெகு சீரியஸ் என்பதும் புரிந்து போனது ஜெஸ்ஸிக்கு.
“இப்போ எதுக்கு கமாண்டோ பட ஆர்னோல்ட் மாதிரி இத்தனை துப்பாக்கி தூக்கிட்டு அலைஞ்சிட்டு இருக்கே? எதுக்கு அர்ஜுன் காரின் முன்னும் பின்னும் இத்தனை பாதுக்காப்பு வண்டிகள் ‘பைலட் கார்கள்’ போல் பின் நம்மை பின் தொடர்ந்தது?
எதுக்கு இந்த தளம் முழுவதையும் உன் டிபார்ட்மென்ட் தங்கள் கண்ட்ரோலில் எடுத்து இருக்காங்க?அப்போ அங்கே அந்த ஹாஸ்பிடலில் நீங்க டிஸ்ஆர்ம் செய்த ஐந்து பாம் அர்ஜுன் குடும்பத்தை கொல்ல வைக்கபட்டதா?” என்றாள் ப்ரீத்தி.
அவள் கேள்வி அங்கிருந்தவர்களுக்கு புது நியூஸ் என்பதால்,”வாட் பாம்மா?” என்று பல குரல் திகைப்புடன் ஒலித்தது.
“கவனிச்சியா?”என்றான் ரஞ்சித்.
“ஹ்ம்ம் அதையும் பார்த்தேன்…எப்படி விருது இல்லை என்றதும் கரெக்டாய் அந்த டைம் பார்த்து, திலீப் ராஷ்மி ஆன்ட்டி உடல் நிலை பற்றி நியூஸ் சொல்லி, மக்கள் கவனத்தை முழுதாய் திசை திருப்பியதையும் கண்டேன்.
ஏதோ ஆபத்து இருக்க போய் தான் அத்தனை போலீஸ் ஆட்களை சரண் அண்ணா எங்களுக்கு காவலாய் அனுப்பி, ஹாஸ்பிடல் பின் வழியாக அழைத்து வந்தததையும் பார்த்தேன்.
கை விலங்கோடு அமரர் ஊர்தியில் உன் ஆட்கள் ஐந்து பேருடன் ஒரு வார்ட் பாய் ஏறியதையும், அவர்கள் கையில் ஐந்து பாக் இருந்ததையும் பார்த்தேன்.
தவிர அர்ஜுன் கார் நம்பர் மாற்ற பட்டு இருப்பதையும், அதே நம்பரில் மூன்று கார்கள் அர்ஜுன் காருக்கு பாதுகாப்பாய் இடைவெளி விட்டு தொடர்ந்து வந்ததையும் பார்த்தேன். அதே மேக் அண்ட் மாடல். காரில் சன் ஷேட் ஒட்டப்பட்டு இருப்பதையும் தான்.
உள்ளே யார் இருக்கிறார்கள் என்று வெளியில் இருந்து பார்க்கும் யாருக்கும் தெரிய கூடாது என்று இன்னும் சொல்ல போனால் ஹாஸ்பிடலில் இருக்கும் நாங்கள் இன்னும் யாஷ்வியுடன் இருப்பதை போன்ற பிரமை உருவாக்கவும்,மொத்தமாய் எங்களை மறைக்க முயன்று இருக்கிறாய்.
என் கெஸ் கரெக்ட் என்றால் ராஷ்மி ஆன்டியின் உடல் நலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை தான் இல்லையா?ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த பொய்யை பரப்பி விட்டு இருக்கீங்க…என் கெஸ் சரியா?”என்றாள் ப்ரீத்தி.
“இந்த அளவிற்கு எல்லாம் நீ புத்திசாலியாய் இருந்தால் இந்த மாமனுக்கு ரொம்ப பிரச்சனை ஆச்சே பேபி.” என்ற ரஞ்சித் ப்ரீத்தியை கடுப்பேற்றும் விதமாக,
“வருங்கால பொண்டாட்டி மூளைக்காரியா இருந்தா வேலைக்கு ஆகாது என்று ‘சிலுக்கானந்த ஸ்வாமிகள்’ சொல்லியிருக்காங்க….” என்றான்.
“யாரு நீ எனக்கு மாமன்?”என்றாள் ப்ரீத்தி அவனை மிக கேவலமான லுக் ஒன்றை விட்டு.
“எஸ்ஸு…மீ யுவர் ஒன்லி மாமா…ஸ்வீட் மாமா …செல்ல மாமா …’
‘மாமாவுக்கு குடும்மா குடும்மா… அடீ ஒண்ணே ஒண்ணு… இந்த மாமன் போல வருமா வருமா கண்ணே கண்ணு…” என்று பாடி வைக்க ப்ரீத்தி டென்ஷன் ஆனாளோ இல்லையோ, ஜெஸ்ஸி என்ற மொழிபெயர்ப்பாளர் அங்கே நடப்பதை புட்டு புட்டு வைக்க அர்ஜுன் ‘துடிக்குது புஜம்’ என்று குமுறி கொண்டு இருந்தவனை ஒரு பக்கம் அமர்நாத், இன்னொரு பக்கம் தீப் முயன்று அடக்கி கொண்டு இருந்தனர்.
“போண்டா டீ வாங்கி சாப்பிட கூட வக்கு இல்லாதவன் எல்லாம் பொண்டாட்டிக்கு ஆசை பட கூடாது மாமோய்…
என்ற மாமா எப்பவுமே விஜய கருணாகரன் மச்சான்தேன் … அவரு நடை என்ன….என்ன என்ன …ஸ்டைல் என்ன .அந்த ஸ்மைல் என்ன …கொத்தவரங்காய்க்கு பேண்ட் ஷர்ட் போட்ட மாதிரி இருக்கும் நீயெல்லாம் என் மாமா என்றால் உலகமே அழிஞ்சுடும்.” என்றாள் ப்ரீத்தி இல்லாத தூசியை தன் உடையில் இருந்து தட்டுவதை போல் ஆக்ஷன் செய்து.
“அடியேய் யாரை பார்த்துடீ கொத்தவரங்காய் என்று சொல்றே? இந்த மாமன் கையை இப்படி வளைச்சி தம் பிடிச்சா அதில் ஒன்பது குமரி பொண்ணுங்க ஊசல் ஆடலாம் தெரியுமா?” என்றான் ரஞ்சித்.
“ஆமா இவரு பெரிய ‘முதல் மரியாதை’ பட சிவாஜி கணேசன்,அப்படியே இளந்தாரி கல்லை ராதா செஞ்சி தரும் மீன் குழம்பை சாப்பிட்டு, கல்லை தூக்குவது போல் தூக்கிடுவார்…போடா போடா வேலை இருந்தா பாரு ..சும்மா காமெடி செஞ்சிட்டு இருக்கான்.”என்றாள் ப்ரீத்தி தன் நகத்தின் நுனியை பார்த்து கொண்டு.
“அந்த டைரக்டருக்கு கல்லு தாண்டீ கிடைச்சுது …இதுவே மாமா களம் இறங்கி இருந்தேன்னு வச்சிக்கோ ராதாவையே தூக்கிட்டு இருப்பேன். பொண்ணை தூக்கினாலாவது ‘தம்தன தம்தன’ என்று பாக் கிரௌண்ட் மியூசிக் வரும்…. கல்லை தூக்கி என்னடி செய்யறது?” என்றான் ரஞ்சித்.
தலையில் அடித்து கொண்ட ப்ரீத்தி,”உன்னை எல்லாம் திருத்த முடியாது …”என்றாள்
“ஏன் டீ நீ என்ன டீச்சர்ரா?”என்றான் ரஞ்சித் யோசைனையுடன்.
“ஏன்…”என்று உஷாராக ப்ரீத்தி கேள்வி வந்தது.
“இல்லை என்னை திருத்த முடியாது என்கிறாயே ..நான் என்ன அன்சார் சீட்டா?…நீ டீச்சரா வந்தா மாமா அன்சார் ஷீட்டா வரேன் …வசதி எப்படி?” என்றான் ரஞ்சித்.
ப்ரீத்தி பற்களை நறநறவென கடிக்கும் சப்தம் வர, “கோபக்கார கிளியே …”என்று ரஞ்சித் ராகம் இழுக்க, “ஸ்டாப் இட்”என்ற குரல் அறையில் எதிர் ஒலித்தது.
“எவ அவ”என்று ப்ரீத்தியும்,ரஞ்சித்தும் கோரஸாக சொல்லி அந்த ஸ்டாப் இட் சொல்லியது அவ இல்லை ‘அவன்’ என்பதையும்,அந்த அவன் அர்ஜுன் என்பதையும், அவன் முகம் கோபத்தால் ‘செக்கச்சிவந்த வானமாய்’ இருப்பதையும் கண்டனர்.
“கொஞ்சம் ஓவர்ரா தான் போய்ட்டோமே?’என்றான் ரஞ்சித் வடிவேலு வாய்ஸில்.
“கொஞ்சம் இல்லை ஓவர் ரோ ஓவர் …பய புள்ள அங்கே அம்மாவுக்கு என்ன ஆச்சோன்னு பொங்கிட்டு இருக்கு… எப்படி எல்லாம் காமெடி செய்துட்டு இருந்தா உன்னை மடியில் தூக்கி வச்சி கொஞ்சுவரா என்ன?” என்றாள் ப்ரீத்தி
“உன்னை கொஞ்ச முடியவில்லையே என்ற காண்டு தான் போலிருக்கு …விட்டா இங்கே ஒரு DANGAL படம் ஒட்டி காண்பிப்பான் போலிருக்கே சர்தார்ஜி. இவன் கர்ளா கட்டை கையால் அடி வாங்க எல்லாம் நம் உடம்பில் தெம்பு இல்லை “என்ற ரஞ்சித்,”யெஸ் அர்ஜுன்…வாட் கேன் ஐ டூ பார் யு?”என்றான் மிக நிதானமாய்.
யாரின் நண்பன் அவன் என்று அந்த நேரம் நிரூபித்தான் ரஞ்சித்.
‘இது வரை செய்தது போதாதா உனக்கு?இன்னும் வேற செய்யணுமா என்ன…முதலில் அவ பக்கத்தில் இருந்து எழுந்து தொலைடா எருமை’ என்று அர்ஜுன் மைண்ட் வாய்ஸில் ரஞ்சித்தை தாளித்து எடுத்து,”where இஸ் மை மாம்?” என்றான்
எதையும் பேசாத ரஞ்சித் அவர்களை தாண்டி சென்று,அந்த ஹாலின் மூலையில் இருந்த இன்னொரு அறை கதவை திறந்து உள்ளே எட்டி பார்த்து தலை அசைத்து நகரத்து வழி விட்டான். .
அந்த அறையில் இருந்து ராஷ்மி,யதுவீர்,தாத்தா உபிந்தர் பாட்டியா, அர்ஜுன் அத்தை விர்து, டாக்டர் யோஜித், திலீப்,அவன் தந்தை,அமர்நாத் மனைவி,பிள்ளைகள், டாலி என்று ஒரு மினி கிராமமே பக்கத்து அறையில் இருந்து வெளி வந்தது.
பதறியபடி அர்ஜுனும்,அர்ஜூனுடன் இருந்தவர்களும் அவர்களை சுழுந்து கொண்டு நலம் விசாரிக்க,ராஷ்மிக்கு ஒன்றும் இல்லை என்பதை கண்ட உடன் “ரப்ஜிக்கு” நன்றி உரைத்து அவரை கட்டி கொண்டு கலங்கி நின்றார்கள்..
கோபம் வெடிக்க,”ஏண்டா இப்படி செய்தே…அம்மாவுக்கு என்னவோ ஏதோன்னு எப்படி துடிச்சு போனோம் தெரியுமா? எதுக்கு டா இப்படி செய்தே?” என்றான் அர்ஜுன் ரஞ்சித் சட்டையை கொத்தாக பிடித்து, பிடித்தவன் அவன் போலீஸ் அதிகாரி என்பதையும் மறந்து கையை ஓங்கி இருந்தான்.
அர்ஜுன் கரம் ரஞ்சித் கன்னத்தில் படுவதற்குள் அதை தடுத்து நிறுத்தி அர்ஜுன் கையை தன் கையால் பிடித்து கொண்ட ப்ரீத்தி,
“ரிலாக்ஸ் அர்ஜுன்…ரஞ்சித் செய்யும் எதற்கும் நிச்சயம் காரணம் இருக்கும்.. நாங்க மோசமாய் அடிச்சுப்போம்… திட்டி கொள்வோம். ஆனால் என் உயிர் என்று வரும் போது உலகில் நான் நம்பும் ஆட்களில் ரஞ்சித்துக்கு அதி முக்கிய இடம் உண்டு.
சென்னையில் இருந்து கடத்தப்பட்ட 300 பெண்களை உயிரோடு மீட்டவர் ரஞ்சித்.போலீஸ் என்றால் இப்படி என்று ஒரு உயர்ந்த ஸ்டாண்டர்ட் உங்க பெரியப்பா,அண்ணா செட் செய்தது போல் பலருக்கு idol ரஞ்சித்…
இந்த இளம் வயதில் இத்தனை பெரிய பதவியில் இருக்கிறான் என்றால் அதன் பின் இருப்பது அவன் திறமை, அவன் அனுபவம், அவன் கையாண்ட மிஷன். அவன் சட்டை மேலிருந்து முதலில் கையை எடுங்க அர்ஜுன்.
ரஞ்சித் அப்படி செய்திருக்கவில்லை என்றால் இந்நேரம் உங்கள் வீடு சுடுகாடாய் ஆகி இருக்கும்.அது நடக்காமல் தடுக்க, சில பல பொய்கள், மாயை, ஒரு இல்லுசன் ரஞ்சித் உருவாக்க வேண்டிய நிர்பந்தம்…சரி தானே ரஞ்சித்?” என்றாள் ப்ரீத்தி .
ப்ரீத்தியின் பேச்சை தீப் மொழிபெயர்க்க அர்ஜுன் கைகள் ரஞ்சித் சட்டையில் இருந்து தானாய் இறங்கியது.”வாட் டூ யு மீன் பை தட் ?” என்றான் அர்ஜுன்.
“கூல் அர்ஜுன்…ரிலாக்ஸ்…ஒகே…ப்ரீத்தி சொல்வது தான் சரி…உங்க ஒட்டுமொத்த குடும்பமும் பஞ்சாப் போதை மருந்து சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டு இருக்கும், ‘காபோஸ்’ என்பவனின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்தது. உங்க வீட்டில் கேமரா பிக்ஸ் செய்து உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும்,வீரேந்தர் அங்கிள், சரண் அண்ணா நடவடிக்கையையும் கவனித்து கொண்டு இருந்தான் காபோஸ்.
இனி நீங்கள் யாரும் உயிரோடு இருக்க கூடாது என்று உன் ஒட்டுமொத்த குடும்பத்தை இன்று முடிக்க, துப்பாக்கி ஏந்திய 5-6 தீவிரவாதிகளை உன் வீட்டின் அருகே நிறுத்தி இருந்தான்.
ரத்த சேதாரம்,உயிர் இழப்பு இல்லாமல் உன் குடும்பத்தை வெளியேற்ற எங்களுக்கு இது தான் வழியாக தெரிந்தது.”என்றான் ரஞ்சித்.
“சொல்லிட்டு செய்திருக்கலாம் இல்லை…”என்றான் அர்ஜுன்.
“சொல்லிட்டு செய்தால் நம் முகத்தில் இன்று ஒளிபரப்பான அந்த ரியாக்ஷன்,பயம், பதட்டம்,தவிப்பு வந்திருக்காதே. நிஜ உணர்விற்கும், போலியாய் நடிப்பதற்கும் வித்தியாசம் தெரியும்…அதானே ரஞ்சித்.” என்றாள் ப்ரீத்தி.
“அதே தான் பேபி…”என்றான் ரஞ்சித் ப்ரீத்தியின் தோள் மேல் கையை போட்டு கொண்டு.
“ஆமா இவங்க நாலு பேர் மட்டும் இருக்காங்க …மத்தவங்க எங்கே?”என்றான் தீப்.
“அதானே மத்தவங்க எங்கே?” என்றான் அர்ஜுன்.
டாலியும் தன் தந்தை ரணீத் பற்றி விசாரிக்க,அவளை அணைத்து கொண்டார் பர்கிதா,அமர்நாத் மனைவி.
“மனசை தேத்திக்கோ டாலி…உங்க அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடலில் கோமாவில் இருக்கார்.”என்றார் பர்கிதா கண்ணீருடன்.
“வாட்…என்ன ஆச்சு?ஏதோ ஒரு சொந்தத்தின் திருமணத்திற்கு தானே சென்றார்.எப்படி ?”என்றாள் டாலி.
“உங்க டாடி போன திருமணம் பர்கிதா ஆன்ட்டி சென்ற அதே திருமணத்திற்கு தான்.பர்கிதா ஆன்ட்டி மட்டும் இல்லையென்றால் இன்னைக்கு உங்க அப்பா உயிரோடு இருந்திருக்க மாட்டார்.அவங்க தான் அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து அவங்க ரத்தத்தை கொடுத்து ஆபரேஷன் நடக்க காரணமாய் இருந்தது.முதல் அட்டெம்ப்ட் அவரை கொல்ல முயன்று இருக்காங்க.இப்போ அவர் எங்க கண்காணிப்பில் தான் இருக்கார். என்றான் ரஞ்சித்.
“உடனே என் அப்பாவை பார்க்க போகணும்…”என்றாள் டாலி.
“சாரி மிஸ் டாலி…உங்க உயிர்க்கும்,உங்க அப்பா உயிர்க்கும் கூட ஆபத்து இருக்கு. எங்களால் உங்களை வெளியே அனுப்ப முடியாது. உங்க அப்பா கண் விழித்த போது அவரிடம் இதை பற்றி சொல்லிட்டோம்.அவருக்கும் உங்க பாதுக்காப்பு தான் முக்கியம் என்று சொல்லிட்டார். ப்ளீஸ் கோ ஆபரேட் வித் அஸ்” என்றதும் கண்ணீருடன் பக்கத்து அறைக்கு ஓடி விட்டாள் டாலி.
அவளை பின் தொடர்ந்து சென்றார் பர்கிதா.மற்றவர்கள் ரணீத் உடல் நிலையை பற்றி விசாரிக்க,ரஞ்சித் தலையை குலுக்கினான்.
“ரொம்ப கிரிட்டிகள் ஸ்டேஜ் சார்.வழக்கம் போல் லாரி வைத்து இடித்து தள்ளி இருக்காங்க. பிழைப்பது கஷ்டம் என்று டாக்டர்கள் சொல்லிட்டாங்க.” என்றான் ரஞ்சித்.
“அவன் ஈ எறும்புக்கு கூட கெட்டது நினைக்கத்தவன் ஆச்சே.எதனால் இப்படி?”என்றார் யதுவீர்.
“அவருடைய சேவை நிறுவனத்தை காபோஸ் தன் TERROR பைனான்ஸ் வேலைக்கு பயன்படுத்துவதை கண்டுபிடித்து வீரேந்தர் அங்கிள் கிட்டே கம்பளைண்ட் கொடுத்த குற்றத்திற்காக இந்த தண்டனை.
பணம் எங்கு போகிறது என்று ட்ராக் செய்து கொண்டு இருக்கிறார்.ஏறக்குறைய காபோஸ் யார் என்று கண்டுபிடித்து விட்டதாக எங்களிடம் போனில் பேசி கொண்டே எங்கள் அலுவலகத்திற்கு தான் வந்து கொண்டிருந்தார்.லாரி வச்சி அடிச்சி தூக்கிட்டாங்க.அவர் கண் விழித்தால் தான் ஏதாவது கிளு கிடைக்கும்.
இவங்க நாலு பேரும் நாங்க எவ்வளவு சொல்லியும் இங்கிருந்து போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க. மத்தவங்களுக்கு பாதுக்காப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம். அதான் இங்கே ஹோட்டல் மேல் தளம் பராமரிப்பு பணி என்று சொல்லி இவங்களை இங்கே தங்க வச்சிட்டேன்.
மத்தவங்க எங்கே,என்ன என்ற தகவல் உங்க வீரேந்தர் அங்கிலுக்கு மட்டுமே தெரியும்.வேறு யாரிடமும் அவர் பகிர தயாராய் இல்லை.இப்போதைக்கு உங்கள் பேமிலி ஆல் சேப் அர்ஜுன்…”என்றான் ரஞ்சித்.
“யார் இந்த காபோஸ்?…அவனுக்கும் எங்களுக்கும் அப்படி என்ன தொடர்பு?அவன் எதுக்கு எங்களை டார்கெட் செய்யணும்? “என்றான் அர்ஜுன்.
“சொல்றேன்..வீரேந்தர் அங்கிள் வந்துடட்டும்.அவர் மட்டும் இல்லை இன்னும் இருவர் வரணும்.வெயிட் செய்யுங்க. ராஷ்மி ஆன்ட்டி உங்க மகனை பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்து இருக்கேன்.ஒரு டீ ப்ளீஸ்.” என்றான் ரஞ்சித்.
அவர் ஏற்கனவே டீ தயார் செய்து வைத்து இருக்க, அதனுடன் சாப்பிட சுட சுட சமோசா,தொட்டு கொள்ள புதினா சட்னி,பிரட் பகோடா,குர் பாரா எல்லாம் எடுத்து வைத்தார்.
“ஹ்ம்ம் யம்மி …டேஸ்டி…” என்று சப்பு கொட்டி ரஞ்சித் சாப்பிட மற்றவர்கள் தங்களை சுத்தம் செய்து கொண்டு வந்தனர்.
ஹோச்பிடலிலேயே யஷ்வியின் ரத்தம் பட்டு கரை ஆகி இருந்த உடைகளை களைந்து விட்டு,சரண் கொடுத்த உடைகளை அணிந்து இருந்தார்கள் என்றாலும்,இங்கே ஒரு குளியல் போட்டு ஒவ்வொருவரும் தங்களை சுத்தம் செய்து கொண்டனர்.தேவையான இவர்கள் உடைகள் அங்கே தயாராய் இருந்தது.
அது ஹோட்டல் என்பதாலும்,executive suite என்பதால் அந்த அறைகளிலேயே சமையல் செய்ய முடியும் என்பதால், தேவையான பொருட்களை ரஞ்சித் ஆட்கள் கொண்டு வந்து குவித்து இருக்க,உணவு தயாரிப்பது ராஷ்மிக்கு எளிதாய் இருந்தது.
இவர்கள் தங்களை தூய்மை செய்து கொண்டு வந்து,ராஷ்மி படைத்த விருந்தினை சாப்பிட்டு முடிக்கும் வேளையில் கதவை திறந்து கொண்டு வீரேந்தர் உள்ளே வர,அவரின் பின்னால் அமன்ஜீத் அப்பா குருதேவ், அம்மா தன்வி உள்ளே வந்தார்கள்.
“இவங்க என்ன செய்யறாங்க?”என்று கடுப்புடன் வந்தது யதுவீர் கேள்வி வெகு காட்டமாக.
“காரணமாய் தான் வந்திருக்காங்க யதுவீர்.ரிலாக்ஸ்.”என்றார் வீரேந்தர்.
“எப்படி அண்ணா ரிலாக்ஸ்சாய் இவர்களுடன் இருக்க முடியும்? இவர்களால் தான் நம் தங்கை செத்தது.இவங்க முகத்தை பார்க்க கூட நான் விரும்பவில்லை… இவங்க இருக்கும் இடத்தில் இருப்பது கூட பாவம். இவங்க கூட இருப்பதற்கு அங்கே அந்த துப்பாக்கியால் சுடப்பட்டே செத்து இருக்கலாம்.”என்ற யதுவீரின் குரலில் அத்தனை கோபம்.
யதுவீர் கோபமாய் கிளம்ப, அவர் கை பிடித்து நிறுத்தினான் ரஞ்சித்.
“அங்கிள்…ப்ளீஸ் …கொஞ்சம் உட்காருங்க அங்கிள்…உங்க தங்கை சாக குரு அங்கிள் காரணம் இல்லை.உங்க தங்கை மரணமும் ஆக்ஸிடென்ட் இல்லை…கொலை.கொன்றது குரு அங்கிள் இல்லை… காபோஸ்.” என்றான் ரஞ்சித்.
“ரப்ஜி ….ஹே குதா …குரு..”என்று பல குரல்கள் ஒலித்தது திகைப்புடன்.
“என்ன சொன்னே …என் தங்கை மரணம் கொலையா? அவளை எங்கள் வீடு புகுந்து ஒருவன் கொன்றிருக்கிறானா? அண்ணா இதை பற்றி உனக்கு தெரியுமா ?” என்றார் யதுவீர் ரஞ்சித் சட்டையை பிடித்து கேள்வி கேட்டு, பின் தன் அண்ணனை திரும்பி பார்த்து.
தங்கள் வீட்டினருக்கு ஒன்று என்றால் உலகத்தையே எதிர்க்க கூட தயங்காதவர்கள் அர்ஜுன் குடும்பத்தினர். அந்த அளவிற்கு பாசம்,அன்பு, குடும்பத்திற்கு மரியாதை கொடுப்பவர்கள் அவர்கள்.தங்கைக்கு ஒன்று என்றால் முதல் ஆளாய் நிற்கும் வீரேந்தர் அமைதியாய் நிற்பது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மிக பெரிய ஷாக் என்று தான் சொல்ல வேண்டும்.
வீரேந்தர் அமைதியாய் இல்லை என்றும்,திலீப் விஷயத்தை சொன்னதில் இருந்து அவர்களை விட ஆயிரம் மடங்கு உள்ளுகுள் துடித்து கொண்டிருக்கிறார் அந்த தந்தை என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
“இன்னைக்கு காலையில் தான் தெரியும்.உட்கார் யதுவீர்…இந்த விஷயம் ரொம்ப சீரியஸ்.எல்லோருக்கும் ஆரம்பம் முதல் எல்லாவற்றையும் சொன்னால் தான் புரியும். நம்ம குடும்பத்தை மட்டும் இல்லை இன்று தன்வியை போட்டு தள்ள முயன்றதும் காபோஸ் என்பவன்.” என்றார் வீரேந்தர்.
“வாட் …எங்க அம்மாவை கொல்ல ட்ரை செய்தார்களா?வாட்ஸ் கோயிங் ஆன்? யார் இந்த காபோஸ்? “என்றான் அமன்ஜீத் தன் தாயை அணைத்தபடி.
“அவன் தான் மெக்ஸிகோவில் உன் தாத்தா மேஜர் அர்ஜானும் இன்னும் சில அதிகாரிகள் குடும்பமும் கூண்டோடு அழிக்கப்பட காரணம்.” என்றார் வீரேந்தர்.
“வாட்…என் தாத்தா ஆர்மி மேஜர்ரா?…அவரையும் என் மம்மி குடும்பத்தையும் ஒரு போதை மருந்து கும்பல் கொன்று விட்டதா?மாம் இதை எல்லாம் ஏன் நீங்க சொல்லலை?ஏதோ சொத்து தகராறு..உங்க டாடி ரெண்டாம் திருமணம் செய்துட்டார் அதனால் தான் குடும்பத்தை பிரிந்த்து வந்ததாய் தானே சொன்னீங்க?” என்றான் அமன்ஜீத்.
“என் அப்பா அம்மாவை டைவர்ஸ் செய்யாமலே ஒரு சிறு பெண்ணுடன் லிவ் இன்னில் இருந்தார்.சோ அவரின் அந்த துரோகம் எனக்கு பிடிக்கலை.படிக்கச் இந்தியா வந்துட்டேன். வந்து ஏழு வருடதிற்கு மேல் அவருடன் டச்சில் இல்லை நான்.
அவர் ஆர்மி மேஜர்.நார்க்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்பெஷல் கமாண்டோ.எனக்கு அவர் குடும்ப பெயரை சுமக்க விருப்பம் இல்லை,என் அம்மா சைட் பெயரை தான் பயன்படுத்த ஆரம்பித்தேன்.ஏதோ ஒரு குழு அவரையும் குடும்பத்தையும் போட்டு தள்ளிட்டாங்க என்று கேள்வி பட்டேன்.என்னை அங்கே வர வேண்டாம் நிலைமை சரியில்லை என்று அவருடைய உயர் அதிகாரிகள் சொல்லிட்டாங்க…
உங்க அப்பாவும் அதையே தான் சொன்னார்.சோ அதன் பிறகு நான் மெக்ஸிகோ பக்கமே சென்றது இல்லை. அப்போ தான் அர்ஜுன் அத்தை இறந்த ஆறு மாதம் கடந்து இருந்த சமயம்.நான் உயிரோடு இருப்பது தெரிந்தால் பிரச்சனை ஆகும் என்று தெரிந்து என்னை அவசர அவசரமாய் உன் அப்பா மணந்து கொண்டார்”என்றார் தன்வி.
“இதில் என் அத்தை எப்படி இன்வோல்வ் ஆகி இருக்காங்க?”என்றான் அர்ஜுன் ஏதோ கிரைம் கதை படிப்பது இல்லை பார்ப்பதை போன்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியாதவனாய்.
“மெக்ஸிகோ போதை மருந்து பிடிக்கும் அதிகாரிகள் யார் என்ற தகவல் யாருக்கும் தெரியாத அளவிற்கு மிக ரகசியமாய் பாதுகாக்க பட்டு இருக்கும்.அதை தெரிந்து கொண்டு தகவல் சொல்லி, மேஜர் அர்ஜான் கொல்ல காரணமாய் இருந்தவன் காபோஸ்.அதுக்கு கோடி கணக்கில் அவன் பெற்று கொண்டதாய் கேள்வி.
இவன் எதிர் பார்த்தது போல் அந்த கொலையில் “ஸுல்பா” என்ற பெண் மட்டும் தப்பி இருக்கிறார்.காபோஸ் யார், அவன் அமைப்பு எப்படி பட்டது என்ற முழு விவரம் அறிந்தவர் அவர் ஒருவர் தான். அவரை உங்க அத்தை தான் காப்பாற்றி இருக்கிறார்கள். எப்படி என்றெல்லாம் தெரியாது. ஸுல்பா இருக்கும் இடம் பற்றி கேட்டு அவர்களை டார்ச்சர் செய்து தான் கொன்றிருக்கிறான் காபோஸ்.”என்றான் ரஞ்சித்.
“சோ நம்ம தங்கை உயிரோடு இருந்திருந்தால் குரு தன்வியை மணந்தே இருக்க மாட்டார்.அவருடன் ஏற்பட்ட சண்டையால் நம் தங்கை இறக்கவில்லை.இன்னொரு பெண்ணின் உயிரை காக்க தன் உயிரை கொடுத்து இருக்கிறாள் அப்படி தானே?”என்றார் யதுவீர் கண்களில் கண்ணீர் வழிய.
வெகு நேரம் அங்கு மௌனம் நிலவியது.வாய் மூடி குலுங்கி அழுதார் குருதேவ்.தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று இன்னொரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய தன் முதல் மனைவியின் தியாகம் அவரை அசைத்து தான் விட்டது.
வீரேந்தரும்,யதுவீரும் அவரை அணைத்து கொள்ள அங்கு எல்லா கண்களும் கண்ணீர் வடித்து கொண்டு இருந்தது ஒரு வீர பெண்மணியின் நினைவால்.
“சத்தியமாய் சொல்றேன் யதுவீர்…அவ சந்தேக பட்டது போல் எல்லாம் எனக்கும் தன்விக்கும் affair எல்லாம் இல்லை. தன்வி என்னுடன் படித்த என் தோழி.அவ்வளவு தான். எங்க நடப்பை தவறான காணோட்டத்தில் புரிந்து கொண்டு தான் அத்தனை சண்டையும் வந்தது.பேசி புரிய வைக்காதது என் தவறு தான்.
உன் தங்கை மட்டும் உயிரோடு இருந்தால் நிச்சயம் தன்வியை நான் மணந்தே இருக்க மாட்டேன்.தன்வியும் தன்னால் என் குடும்பத்தில் பிரச்சனை என்றதும் விலகி செல்வதாக தான் இருந்தது.அதற்குள் என்னென்னவோ ஆகி போச்சு.அமன் முறையான திருமணம் முடிந்த பிறகு பிறந்தவன் தான்.தன்வி ஒரு ஆக்ஸிடெண்டில் மாட்டியதால் குறை பிரசவம் ஆகி போச்சு.”என்றார் குரு.
“இப்படி சொல்வதன் மூலம் என் அம்மாவிற்கு எவ்வளவு இன்சல்ட் செய்யறீங்க தெரியுமா டாட்? இத்தனை வருஷம் உங்க கூட வாழ்ந்த எங்க அம்மாவின் வாழ்க்கைக்கு என்ன தான் அர்த்தம்.ஸ்டில் நீங்க இன்னும் உங்க முதல் மனைவியின் மேல் தான் உயிராய் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு நானும் என் அம்மாவும் எதுக்கு?” என்றான் அமன்ஜீத் கோபமாக.
இத்தனை வருடம் தன்வி கண்களில் இருக்கும் காதலுக்கு குருதேவ் காட்டும் மரியாதை இது தானா?
“அமன்…”என்று உயர்ந்த தன்வியின் குரல்,”அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு?இதில் எனக்கு என்ன இன்சல்ட் இருக்க முடியும்?உன் டாடி அவர் முதல் மனைவியை எந்த அளவிற்கு காதலிச்சார் என்பது எனக்கு தெரியும். குடும்பம் என்றால் ஆயிரம் சண்டை சச்சரவு வர தான் செய்யும்.அவங்க உயிரோடு இருந்திருந்தால் உன் டாடி என்னை மணந்து இருக்க மாட்டார்.
நிச்சயம் டைவோர்ஸ் ஆகி இருந்தாலும் அவங்க நினைவாக மட்டுமே வாழ்ந்து இருப்பார்…இது காதல் அமன்ஜீத்…இங்கு லாஜிக் எல்லாம் உதவாது…அவர் கடந்த காலமும் சேர்ந்தது தான் உன் டாடி..என்னால் அவரை முழுமையாக ஏற்று கொள்ள முடிகிறது. அந்த முழுமையில் அவர் வன்சினி மேல் கொண்டு இருக்கும் காதலும் அடக்கம்.
எல்லா காதலும் திருமணத்தில் முடிவது இல்லை தான்.அப்படி திருமணத்தில் முடிந்த காதல் எல்லாம் கடைசி வரை துணை வந்தது இல்லை தான்.ஆனால் அதற்காக காதலே இல்லை என்று சொல்லி விட முடியுமா என்ன? எல்லோருக்கும் முதல் காதல் என்பது இருக்கும். அது ஒரு நம்பிக்கை.சில சமயங்களில் அது பொய்த்து போகலாம்.அதற்காக காதலே பொய் என்று சொல்லி விட முடியாது.
அவர் எண்ணங்களில் ஒரு மூலையில் அந்த முதல் காதல் என்றுமே இருந்து கொண்டு தான் இருக்கும்.உன் அப்பாவுக்கு காதல் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது உன் பெரியம்மா தான்.அது அவரின் வசந்தகாலம். ஸ்வீட் மெமரிஸ்…எனக்கே அதில் எந்த பிரச்னையும் இல்லாத போது இதை பெரிய இஸ்ஸு ஆக்காதே…போதும் இது வரை இந்த ரெண்டு குடும்பமும் என்னால் பிரிந்து இருந்தது.”என்றார் தன்வி
பயணம் தொடரும்…