OVOV 49

OVOV 49

(சாட்சிகளின் பாதுகாப்பு திட்டம்/witness protection scheme, 2018 அச்சுறுத்தல் மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் சாட்சிகளின் பாதுகாப்பை வழங்குகிறது.

இதில் சாட்சிகளின் பாதுகாப்பு / மாற்றம், அவர்கள் இடமாற்றம், சாட்சிகளின் இல்லத்தில் பாதுகாப்பு சாதனங்களை நிறுவுதல், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீதிமன்ற அறைகளின் பயன்பாடு, சாட்சியின் இடமாற்றம் மற்றும் பாதுகாப்பு,மாற்று ஐடென்டிட்டி/ அடையாளம்  போன்றவை அடங்கும்.திட்டத்தின் செலவுகளைச் சமாளிக்க ஒரு மாநில சாட்சி பாதுகாப்பு நிதியை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த நிதி மாநில / UT அரசாங்கத்தின் கீழ் திணைக்களம் / உள்துறை அமைச்சகத்தால் இயக்கப்படும்.)

ஐந்து மாதங்களுக்கு பிறகு

ப்ரீத்தி சுடப்பட்டு மரணம் அடைந்து, அர்ஜுன் பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்று, போதை மருந்து கூட்டத்திற்கு எதிராக தன் யுத்தத்தை ஆரம்பித்து ஐந்து மாதங்கள் கடந்து இருக்க, பல ஆயிரம் மைல் தொலைவில் ஒருவன் கற்பாறை ஒன்றின் மேல் படுத்து இருந்தான்.

ஆகாயம் மேலே, பாதாளம் கீழே,ஆனந்த உலகம் நடுவிலே’ என்று அவன் அருகே இருந்த ரேடியோ பாடி கொண்டு இருந்தது.

‘ஆகாயம் மேலே இருக்கு.பாதாளம் கீழே இருக்கு…ஆனந்த உலகத்தை தான் காணோம்.’என்று பெருமூச்சு விட்டவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.அவன் கண்களில் வழிந்த கண்ணீர் கோடாய் இறங்கி, அவன் அருகில் இருந்த புகைப்படம் ஒன்றை நனைத்து கொண்டு இருந்தது.

அவன் கண்ணீரை மட்டும் நிழலாய் அந்த புகைப்படத்தில் இருக்கும் அவன் மனைவியும்,ரெண்டு பிள்ளைகளும்  நேரில் பார்த்து இருந்தார்கள் துடித்தே போய் இருப்பார்கள்.

தாடி,மீசை என்று பரதேசி போலிருந்தான் அவன். தன்னை பார்த்து கொள்வதில் கவனம் இல்லை என்பது அவன் இருந்த கோலத்தில் இருந்தே தெரிந்தது.உலகை துறந்த முனிவன் போல் அவன் இருந்த இடமும் மலைகளுக்கு நடுவே,நட்ட நடு காட்டில் ஒரு ஏரியின் அருகே தான் இருந்தது.

பல கிலோமீட்டருக்கு சுற்றிலும் ஆள் நடமாட்டம் என்ற ஒன்றே இல்லாத அனாதரமான சூழலில் தனியொருவனாக தடம் மாறி போன தன் வாழ்க்கையை நினைத்து நினைத்து அழுது கொண்டு இருந்தான் அவன்.

அந்த ஊரில் மட்டுமல்ல அந்த நாட்டில் கூட அவன் யார் என்று யாருக்குமே தெரியாது.பார்ப்பவர் கூட ஏதோ பிச்சைக்காரன் ,மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று விலகி தான் செல்வார்கள். அவனும் அதே கோலத்தில் தான் இருந்தான்.ஒரு வகையில் அது அவனுக்கு பாதுக்காப்பு என்று கூட சொல்லலாம்.

ஆனால் அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் இல்லை.இவனால் இதயம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சொல்லி மாளாது. ஒரு காலத்தில் உலகம் முழுவதும் அவனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர் என்றால் மிகையல்ல. அவன் உடையை வைத்து அவன் பிச்சைக்காரன் என்று முடிவுக்கு வந்தால் அவன் பிச்சைக்காரனும் இல்லை. தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலை உலகை சேர்ந்தவன்.

1945ஆம் ஆண்டு, ‘ஏவிஎம்’ என்ற பெயரில் ஏ.வி.மெய்யப்பா செட்டியார்,1935 ஆம் ஆண்டு ரங்கசாமி நாயுடு ஆரம்பித்த, ‘சென்ட்ரல் ஸ்டுடியோஸ்’,1940 எஸ்.எஸ் வாசன் தொடங்கிய, ‘ஜெமினி ஸ்டுடியோஸ்’,1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, ‘பக்ஷிராஜா ஸ்டுடியோஸ்’, மாடர்ன்  தியேட்டர்ஸ், விஜயவாஹினி போன்ற சகாப்தம் படைத்த சினிமா ஸ்டூடியோ ,திரைப்பட பைனான்ஸ் கம்பெனிகளுக்கு சமமான பேரும் புகழும், வெற்றிகளும் கண்டது இவன் குடும்ப ஸ்டூடியோ, திரைப்பட தயாரிப்பு நிறுவனமான,’லைட்டனிங் ஹார்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்.’

கிட்டத்தட்ட தென் இந்திய முன்னணி நடிகர்கள் அனைவரும் குறைந்தபட்சம் இருபது படங்களிலாவது இந்த நிறுவன பேனரில் நடித்து இருப்பார்கள். அனைத்துமே சில்வர் ஜூபிலி படங்கள்.

இவனும்  சிறு வயது முதல் சினிமா துறையில் இருப்பவன்.  நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவன்.

4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை பெற்றவன்.சிறந்த பிறமொழிப் படத்திற்கான,அகாதமி விருதிற்கு/ஆஸ்கார் அவார்ட்ஸ்  இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள் அதிகமானவற்றிலும் நடித்தவன்,இயக்கி இருப்பவன்.

முப்பத்தைந்து வயதிற்குள் சிகரங்களை தொட்டவன்.

‘யுகங்களின் நாயகன்’,’குளோபல் ஸ்டார்’, ‘ஸ்டன்னிங் ஸ்டார்’, என்று பல பட்ட பெயர்களால் இந்தியாவில் அறியப்படும் நடிகன், ‘ஸ்ரீகிருஷ்ணா’ தான் அவன். பெண்களின் செல்ல க்ரஷ்/CRUSH, இந்த க்ரிஷ்.

KAMAL WITH BEARD க்கான பட முடிவு

வெற்றி தேவதை நிரந்தரமாக இவனிடம் தங்கி விட்டதாய் கூட பேச்சு உண்டு.இவன் நடித்தாலோ,இவன் படம் டைரக்ட் செய்தாலோ அது நிச்சயம் அந்த படம் நூறு நாட்களையும் தாண்டி ஓடும்.புகழின் உச்சத்தில்,வெற்றி திருமகனாய் ஜொலித்தவன்.

நடிகர் ராமராஜன் போல நாற்பது,ஐம்பது  படங்கள் இவன் கைவசம் எப்போதுமே உண்டு.எப்படி 19850களில் 2000ஆம் ஆண்டு வரை ராமராஜன் அவர்களின்  கால் ஷீட் முழுவதாய் புக் ஆகியிருந்ததாக சொல்லப்பட்டதோ, அதே போல் இவன் கால் ஷீட் கூட 2030 வரை கூட முழுதாய் புக் ஆகி தான் இருந்தது.

1984லில்  ‘மைக் மோகன்’ ஒரே ஆண்டில் இருபத்தியொரு  படத்தில் நடித்து ரிலீஸ் ஆகி, அதில் பல நூறு நாட்களை கடந்ததே  சாதனையாக இருந்தது.அதை முறியடித்தவன்  ‘ஸ்ரீ கிருஷ்ணா’

அழகான காதல் மனைவி ஐஸ்வர்யா.காதலுக்கு பரிசாய் ஆண் ஒன்று,பெண் குழந்தை ஒன்று என்று ஏணிப்படிகளில் ஏறி கொண்டிருந்தவனுக்கு பிடித்தது ஏழரை மும்பை நண்பன் ஒருவனால்.

” கிருஷ்ணா!…படம் ஒன்று நீ டைரக்ட் செய்யணும்.பட்ஜெட் பத்தி கவலையே இல்லை.எத்தனை கோடி வேண்டும் என்றாலும் தயாரிப்பாளர் கொடுக்க தயாராய் இருக்கார். முந்நூறு,நானூறு   கோடி ஆனாலும் கவலை யே இல்லை.”என்று அவன் வரும் போதே மனதிற்கு ஏதோ சரியாய் தான் படவில்லை.

நெருங்கிய நண்பன் என்பதால் அவனுக்காக என்று கதையை கூட கேட்காமல் அக்ரீமெண்ட் சைன் போட்டது தான் கிருஷ்ணா செய்த முதல் தவறு. தயாரிப்பாளார் கொடுத்த ஸ்கிரிப்ட்டில் முதலில் கதையே இல்லை என்பது முதல் ஷாக்.

நடிகை,நடிகையரின் காஸ்டியூம் செலவு மட்டும் சில பல கோடிகள் என்று பில் காட்டப்பட்டது அடுத்த ஷாக்.ஒரு பாடலுக்கு இருபத்தி ஐந்து லொகேஷன் ஷூட் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது அடுத்த ஷாக்.இப்படி அடுக்கடுக்காய் ஷாக் கொடுத்தது அந்த படம்.

கிருஷ்ணாவின் உழைப்பு,சில மாற்றங்கள் மட்டும் செய்யவில்லை என்றால் படம் ஓடியே இருக்காது.இந்திய திரைப்பட உலகமே திகைத்து தான் போனது.இப்படி ஒரு டப்பா படத்தை எடுத்தது கிருஷ்ணா என்பதை யாராலும் நம்பவே முடியவில்லை.

அதன் பிறகு தொடர்ச்சியாக பத்து படங்கள்.எல்லாமே பத்தும் குப்புற கவிழ்ந்து அடித்து படுத்து கொண்டது.படத்தை பார்த்த மக்கள் தியேட்டரை எல்லாம் அடித்து நொறுக்கி அது மிக பெரிய பிரச்சனை ஆகி போனது.அது வரை புகழின் உச்சியில் இருந்தவனுக்கு அடி,பலத்த அடி.

‘படைப்பாளிகள்,ரெண்டு மூன்று வெற்றிகளுக்கு பிறகு தான் என்னவோ கடவுள் என்ற கர்வம் வந்து விடும்.அதே கர்வம் தான் கிருஷ்ணாவுக்கு.

‘அவனுக்கு பெரிய இவன் என்று நினைப்பு’

‘இதெல்லாம் ஒரு படமா…த்தூ ‘

‘ஓவர் ரா ஆடினான் இல்லை…அதான்’

ஒரு காலத்தில் தோளில் தாங்கிய ரசிக பட்டாளம்  அவனை குப்பையை  கேவலமாய் பார்க்க.ஆரம்பித்தது.

‘ கிருஷ்ணா சினிமா சகாப்தம் முடிந்தது.’  என்று கொட்டை எழுத்துக்களில் பிரசுரமானது.

ஆனால் வெளி உலகம் அறியாத உண்மை ஒன்று உண்டு.அந்த மஹாபெரும் நடிகன், இயக்குனர் அந்த படங்களை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தப்பட்டு இருந்தான்.இன்னும் சொல்ல போனால் அவன் குடும்பமே துப்பாக்கி முனையில் குறி வைக்கப்பட்டு இருக்க, இவன் அந்த பத்து படங்களையும் எடுத்தே ஆக வேண்டிய நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தான் என்ற உண்மை யாரும் அறியாமல் போனது.

முதலில் படங்களில் ஆரம்பித்தது பின்னர் இவன் ஸ்டூடியோ, கோடௌன் எல்லாம் பல போதை மருந்து,ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள், வெடுகுண்டுகள் பதுக்கி வைக்கும் இடமாய் மாற குடும்பத்தை பாதுகாப்பாய் மறைத்து விட்டு,இவனும் கஜகஸ்தான் என்னும் நாட்டில் அல்மாட்டி என்ற நகரத்திலிருந்து வெகு தூரம் தள்ளி, Ile-Alatau தேசிய பூங்காவில் ஓடும்  Issyk ஏரியின் அருகே ஆறு மாதமாய் மறைந்து வாழ்கிறான்.

‘இந்த மீளா நரகத்தில் இருந்து எப்பொழுது,எப்படி  மீள போகிறோம்?’ என்று லட்சம் முறையாக யோசித்தும் பதில் கிடைக்காமல் போகவே பெருமூச்சு அவனிடம் இருந்து வெளிவந்தது.

“பெருமூச்சு விட்டுட்டு ஆகாயம் மேலேன்னு பாட்டு கேட்டுட்டு படுத்துட்டு இருந்தால் எல்லாம் சரியாகிடுமா மிஸ்டர் கிருஷ்ணா?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவன்,அவன் அருகே நின்றிருந்த பெண்ணை கண்டு திகைத்தான்.

“யார் நீ?” என்ற கிருஷ்ணாவின் குரலில் பயம் வெளிப்படை யாகவே தெரிந்தது.

‘ஒருவேளை மறைந்திருக்கும் இடத்தை ‘அவன்’ கண்டு பிடித்து விட்டானா என்ன?’என்ற நினைவே மரணபயத்தை கிருஷ்ணாவிற்கு ஏற்படுத்தியது.

“ரிலாக்ஸ்  கிருஷ்ணா!.நீங்க நினைக்கும் ஆள் நான் இல்லை.லெட் மீ இன்ட்ரோ மைஸெல்ப்.என் பெயர் ஜெஸ்மிந்தர். ஜெஸ்ஸினும் கூப்பிடலாம்.  சென்னையில் உங்க மனைவி ஐஸ்வர்யா,’அக்னி தாரகைகள்’ என்ற எங்கள் குழுவில் தான் இருக்காங்க.”என்றாள். ஜெஸ்ஸி புன்னகையுடன்.

“எஸ் ….ஐ ரிமெம்பெர்…நீங்க என் வீட்டுக்கு கூட வந்து இருக்கீங்க. உங்களை என் படத்தில் ஹீரோயினாக நடிக்க கூட கேட்டேன் இல்லை.”என்றான் கிருஷ்ணா, ஜெஸ்ஸியை நினைவு கூர்ந்தவனாய்.

“அதே ஆள் தான் ப்ரோ.பாவம் தமிழ் மக்கள் கண்ணு.பிழைச்சி போகட்டும்.நடிப்பு என்ற பெயரில் பலர் வந்து மக்களை ஒரு வழி ஆக்கிட்டு இருக்காங்க.இதில் நானும் களத்தில் இறங்கினால் உலகம் தாங்காது என்று சொன்ன அதே ஆள் தான்.”என்றாள் ஜெஸ்ஸி புன்னகையுடன்.

“நீ இங்கே என்ன செய்யரே?”என்றான் கிருஷ்ணா திகைப்புடன்.

“கொஞ்சம் காபோஸ் பத்தி பேசலாமா ப்ரோ?’என்று ஜெஸ்ஸி சொன்னது தான் தாமதம் தன் கோட் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து ஜெஸ்ஸியை குறி வைத்து நீட்டினான் கிருஷ்ணா.

“ப்ரோ!…சில்…ரிலாக்ஸ்.காபோஸ் பத்தி பேசலாமா என்று தான் கேட்டேன். நான் காபோஸ் ஆள் என்று சொல்லவே இல்லை. நீங்களும் அவனால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர் தான் போல் இருக்கு.லிஸ்ட் லட்சத்தை தாண்டும் போல் இருக்கே.” என்றவளின் பேச்சை கேட்டு கிருஷ்ணா திருதிருவென விழித்தான்.

“துப்பாக்கியை கீழே இறக்குங்கப்பா.இங்கே இருக்கும் குளிரில் உடம்பே நடுங்குது.கை நடுங்கி ட்ரிக்கரை அழுத்தி வைக்க போறீங்க.புருஷன் கூட டூயட் எல்லாம் பாடணும்யா நான் இன்னும்.”என்றவள் அவன் முகத்தில் இன்னும் நம்பாத தன்மை இருக்க,

“அப்போ இன்ட்ரோவில் இருந்து இந்த சொன்னால் தான் புரியும் உங்களுக்கு போல் இருக்கு.” என்றவள், ‘ஊரு விட்டு ஊரு வந்து’ அவளோடு சேர்ந்து பலரின் வாழ்வும் எப்படி எல்லாம் அடியோடு காபோஸ் என்பவனால் மாறி போனது என்பதை ஆதியில் இருந்து ஆரம்பித்து அங்கே அந்த நொடி கிருஷ்ணா முன்னால் அவளை நிறுத்தியிருப்பது வரை சொல்லி முடித்தாள்.

ஜெஸ்ஸி தன் கதையை சொல்லி முடிக்க, திகைப்பில், ஸ்தம்பிப்பில் திறந்த கிருஷ்ணாவின் வாய் மூடவேயில்லை. ஜெஸ்ஸி சொல்லி முடித்த பின் பல வினாடிகள் அங்கு பலத்த மௌனம் நிலவியது.

“சோ இது தான் எங்க ஹிஸ்டடி.எங்க சொந்த கதை,சோக கதை ப்ரோ.இப்போவது அந்த துப்பாக்கியை கொஞ்சம் உள்ளே வையுங்க.” என்றாள் ஜெஸ்ஸி.

“ஆமா நான் இங்கே இருப்பது உனக்கு எப்படி தெரியும்?” என்றான் கிருஷ்ணா.

“சோ நான் சொன்ன கதையில் அர்ஜுன் என்று சொன்னேன் இல்லையா, இப்போதைக்கு அவன் தான் பஞ்சாப் முதலமைச்சர். அவனை போட்டு தள்ள துப்பாக்கியை எடுத்தவன் மொபைல் கையில் சிக்கியது.அவன் மொபைல் குறியாக்கம்/encrypted செய்யப்பட்டுஇருந்தது.

சைபர் துறை மூலம் அதை ஹாக் செய்தால்,உங்க பெயர் தான் அடிக்கடி குறிப்பிட பட்டு இருந்தது.சோ புகழின் உச்சத்தில், மக்களின் நாயகனாய் இருந்த நீங்கள் எப்படி காபோஸ்சின் வளையத்திற்குள் வந்தீர்கள் என்று சொல்லுங்கள்.நீங்க தற்கொலை செய்து கொண்டதாய் கூட நியூஸ் வெளிவந்துட்டு இருக்கு.இப்படி மறைந்து,ஒளிந்து காட்டிற்குள் நாடோடியாய் வாழ என்ன காரணம்?”என்றாள் ஜெஸ்ஸி.

பெருமூச்சு விட்டவன்,துப்பாக்கியை மீண்டும் கோட் பாக்கெட்டில் வைத்து விட்டு மீண்டும் தான் படுத்திருந்த பாறையிலேயே அமர்ந்தான்.

“ஹவாலா,நிழல் உலகம்/UNDERWORLD,கருப்பு பணம், தீவிரவாதம் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது ஜெஸ்ஸி.”என்றான் கிருஷ்ணா.

“கேள்வி பட்டு இருக்கேன்.ஆனால் கலை உலகத்திற்கும் கருப்பு பணத்திற்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்.?” என்றாள் ஜெஸ்ஸி.

“உலகத்தையே அதிர செய்த 2011ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு செய்தி  திரைப்படத் துறைக்கு , பாதாள உலக/UNDERWORLD இணைப்புகளைப் பற்றியும், இந்தியாவில்‘ கறுப்புப் பணம் ’ அங்கு எப்படி வெள்ளையாக்க படுகிறது என்பதை சொன்னதை நீ படிக்கவில்லையா என்ன?”என்றான் கிருஷ்ணா.

“ஹ்ம்ம் படிச்சேன். குண்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தங்களது மோசமான லாபத்தை/ill-gotten gains,  வெள்ளைப் பணமாக மாற்றுகிறது என்று படித்து இருக்கேன். ஆனால் இது எப்படி நடக்கிறது?”என்றாள் ஜெஸ்ஸி சந்தேகமாய்.

“சினிமா ஒரு மாய உலகம்.கனவு தொழிற்சாலை, பொழுதுபோக்கு என்று நினைக்கும் அந்த துறைக்கு வேறு முகம் இருக்கிறது ஜெஸ்ஸி. கருப்பு பக்கங்கள்.வெளியே தெரியாத பல கேவலங்கள் எல்லாம் அங்கே சர்வ சாதாரணம்.

கலைதுறைக்கும் ஹவாலாவுக்கும்,கணக்கில் வராத பணத்திற்கும் தொடர்பு உண்டு ஜெஸ்ஸி. 2012 ஆம் ஆண்டில், செய்தி வலைத்தளமான கோப்ராபோஸ்டின்/COBRAPOST ஒரு ஸ்டிங் ஆபரேஷன் முன்னணி தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் கேமராவில் ஹவாலா பற்றி ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது உண்மை.

ஒரு படம் ஸ்டுடியோக்கள், விநியோகஸ்தர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் நடிகர்,நடிகையர்,துணை நடிகர்கள் என்ற   சிக்கலான பல நெட்ஒர்க்,பல பாகங்கள் ஒன்றாய் செயல்படும் வெகு சிக்கலான அமைப்பு மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இது ஒரு நடிகர்,நடிகையின் மதிப்பு,ஸ்டார் VALUE  புகழைச் சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமாக சம்பாதித்த நிதியைக்/ill-gotten funds குவிக்கும் செயல்முறை உற்பத்தியில்/PRODUCTIONனில்  தொடங்குகிறது.

போலி பெயர்களில் கடன்கள் என்ற போர்வையில் தயாரிப்பாளர் தற்காலிகமாக கணக்கிடப்படாத நிதிகள் உண்டு.அனைத்து போலி வரவுகளும் ஹவாலா உள்ளீடுகளும்,  ‘போலி பற்றுகள்/bogus debits  மற்றும் உண்மையான செலவுகளால் ஈடுசெய்யப்படுகின்றன.படம் ஓடினாலும் ஓடா விட்டாலும் கருப்பு பணம் ஹவாலா சேனல் மூலம் டாக்ஸ் கட்டுவதன் மூலம் வெள்ளையாக்கபடுகிறது.

நாட்டை பணியிலும் மழையிலும் காக்கும் வீரனுக்கும் அவன் குடும்பத்திற்கும் கிடைக்காத அளவு சம்பளம்,மதிப்பு எல்லாம் பல லட்சம் உழைப்பாளர்களின் தோளில் நின்று,’நானும் நடிகன்’ என்று சொல்பவனுக்கு தானே கிடைக்கிறது. எதற்கு நடிகர்களுக்கு எல்லாம் கோடி கணக்கில் பணம் சம்பளம்  கொடுக்கபடுகிறது என்று மக்கள் ஏன் கேள்வியே எழுப்புவதில்லை ஜெஸ்ஸி?

சாப்பாடு போடும் விவசாயி,உயிரை,நாட்டை காக்கும் போர் வீரன், உயிரை காக்கும் மருத்துவன்,கற்று கொடுக்கும் ஆசிரியர் யாருக்கும் கோடிகளில் சம்பளம் இல்லாத போது,’கனவு தொழிற்சாலை’,ஜஸ்ட் இல்லுசன் இதற்கு எதற்கு அவ்வளவு பணம் கொட்டி கொடுக்கப் படுகிறது. உலகம் முழுக்க இதே கதை தான்.

ஏனென்றால் இதன் பின்னணி முகம் வேறு மாதிரியானது. கணக்கில் வராத பல பில்லியன் கணக்கான பணம் வெளிநாட்டு வங்கிகளிலும், டிரைவர்,சமையல் காரர்கள்,ஆடிட்டர் போன்றோரிடம் அசையும், அசையா சொத்துக்களாய் குவிந்து இருக்கிறது.”என்றான் கிருஷ்ணா.

“இதில் இவ்வளவு இருக்கா?இதில் நீங்க எப்படி மாட்டினீங்க?” என்றாள் ஜெஸ்ஸி.

“எல்லாம் அந்த கேவலமான முதல் படம் எடுத்தேன் இல்லை. அப்போது பிடித்தது இந்த ஏழரை. அதன் பட தயாரிப்பாளர் என்று மும்பை நண்பன் ஒருவன் அறிமுகம் செய்தான்.பார்க்க அமுல் பேபி மாதிரி முகத்தை வைத்திருந்த அவன் தான் போதை மருந்து சாம்ராஜ்ய தலைவன் என்றோ, தீவிரவாத கும்பளுடன் தொடர்பு கொண்டவன் என்பதோ எனக்கு தெரியாது.

தெரிந்த போது எல்லாம் கை மீறி போய் விட்டது.முதலில் அவன் போதை மருந்து விற்று அதில் வந்த பணத்தை,சினிமா எடுக்க, கடன் என்று போலி ரசீதுகள் மூலம் வெள்ளை ஆக்கி கொண்டு இருந்தான்.கணக்கில் வராத அந்த ILLEGAL பணம் அரசாங்கத்திற்கு வரி கட்டி,போலி கணக்கு காண்பித்து வெள்ளையாக்கி கொண்டான்.

பெயர் மட்டும் தான் பத்து பைனான்ஸ் கம்பெனி என்று இருக்கும். ஆனால் அது எல்லாமே, ‘கோஸ்ட் பைனான்ஸ்’ ‘ஷெல்/shell கம்பெனி.’ எப்படி சிப்பி ஓட்டில் உள்ளே நத்தையோ, முத்தோ இருக்காதோ அதே போல் இந்த கம்பெனிகள் எல்லாம் பேப்பரில் மட்டுமே இருக்கும்.

இவர்களுக்கு ஆபீஸ் முகவரி,அலுவலகம்,வேலையாட்கள் ஏன் இன்னும் சொல்லப்போனால் இந்த பெயர் பலகை தங்கிய ஒரு சென்ட் இடம் கூட இருக்காது.எவ்வளவோ கோடி உள்ளே வருது,கை மாறுது,வெளியே போகுதுன்னு இதுக்கே எனக்கு தலை சுத்தி போச்சு.

அடுத்து என் படம் எடுக்கும் செட் எல்லா இடத்திலும் ஒரு அறையில் இவனுங்க தமிழ்நாட்டில் விற்கும் போதை மருந்தினை அடுக்கி வைக்கும் கோடௌனாக பயன்படுத்தி கொண்டானுங்க. கேட்டால் அது சப்பாத்தி மாவாம்.போதை மருந்துக்கும் சப்பாத்தி மாவுக்கும் கூடவா எனக்கு வித்தியாசம் தெரியாது.அடுத்த கட்டமாய் ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் அங்கே பதுக்கி வைத்தார்கள்.

தமிழ்நாட்டில் வன்முறை நடந்தால் ஆட்சி மாற்றம் வரும் என்று இந்த ஏற்பாடு.அதுக்கு மேல் பொறுக்க முடியாமல் ஐஸுவையும் பிள்ளைகளையும் மறைவாக்கிட்டு,போலீஸ்க்கு தகவல் கொடுத்துட்டேன்.

அவங்க என் பெயர் வெளியே வராமல் எல்லாத்தையும் சீஸ் செய்துட்டாங்க.ஆனால் என் உயிர்க்கு குறி வைத்து விட்டான் காபோஸ். அதான் உயிருக்கு பயந்து இப்படி ஓடி ஒளிஞ்சுட்டு இருக்கேன்.” என்றான் கிருஷ்ணா.

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது கிருஷ்ணா.நீங்க இருக்கும் இடம் காபோஸிற்கு தெரிந்து விட்டது.சோ அங்கே இருக்கு பாருங்க நான் வந்த கார்.அதில் இருப்பவர் இந்திய ராணுவ வீரர் தான்.நம்பி காரில் ஏறி போங்க.இதோடு உங்களை பிடித்த ஏழரை முடிய போகுது.உங்க காபின் சாவியை கொடுத்துட்டு கிளம்புங்க.”என்று ஜெஸ்ஸி கை நீட்ட,அவன் திகைத்தான்.

“உனக்கு என்ன பைத்தியமா ஜெஸ்ஸி!.என் கேபின் சாவி உனக்கு எதுக்கு?.நீயும் என்னுடன் கிளம்பு.இங்கே நீ இருந்து என்ன செய்ய போறே?”என்றான் கிருஷ்ணா.

“காபி வித் காபோஸ்.உங்களுக்கு சொன்னால் புரியாது. கிளம்புங்க.” என்றாள் ஜெஸ்ஸி.

பலமுறை கிருஷ்ணா அழைத்தும் ஜெஸ்ஸி வரமறுத்து விடவே அவளிடம் தான் தங்கி இருந்த கேபின் ஒன்றின் சாவியை கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். கிருஷ்ணாவை  சுமந்த கார் கண்ணை விட்டு மறையும் வரை அங்கேயே நின்றவள்,பின் மெல்ல அந்த ஏரியை சுற்றி கொண்டு காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தாள்.

மலை மேல் ஏறிக்கொண்டு இருந்தவளின் மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தவள் அதை அட்டென்ட் செய்யாமல் சற்று நேரம் ஒலிக்க விட்டாள்.

அவளை அழைத்து கொண்டு இருந்தவனோ ஜெஸ்ஸியின் காலர் டியூன் கேட்டு பற்களை நறநறவென கடித்தவன் தன் நெற்றியில் தானே அடித்து கொண்டான்.

ஜெஸ்ஸியின் காலர் டியூனாக

“முதல்வனே வனே வனே வனே வனே

முதல்வனே வனே வனே வனே வனே

முதல்வனே வனே வனே வனே வனே

முதல்வனே…

முதல்வனே! என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா?

ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா?

வாளின் ஓசை கேட்கும் தலைவா வளையலோசை கேட்கவில்லையா?

முதல்வா!…முதல்வா!…முதல்வா!” என்று அர்ஜுன்,மனிஷா கொய்ராளா நடித்த,  ‘முதல்வன்’ பட பாடல் செட் செய்ய பட்டு இருந்தது.

அவனை கடுப்பேத்தியது போதும் என்று நினைத்தவள், அழைப்பை ஏற்று,”ஹலோ முதல்வரே!…எப்படி இருக்கீங்க?” என்றாள்.

“இப்போ எதுக்கு இந்த பாட்டை நீ வச்சே?”என்றான் அர்ஜுன் தூய தமிழில்.

“அட CMஜி தமிழ் செமையா வருது.எட்டு மாதம் தமிழ் டீச்சர் அம்மா கொம்பை எடுத்து விளாசியத்தில் தமிழ் நாலு கால் பாய்ச்சலில் வருது.”என்றாள் ஜெஸ்ஸி நக்கலாக.

“ஏண்டீ சொல்லமாட்டே!அந்த பாட்டி தமிழ் கத்து தரேன் என்று என்னை வச்சி நல்லா செய்தாங்க பாரு.நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன். கம்ப ராமாயணம்,கள்ளிக்காட்டு இதிஹாசம் ரேஞ்சுக்கு என்னையும்  எழுத வைக்காமல் விட மாட்டேன் என்று அந்த பாட்டிக்கு என்ன வேண்டுதலோ!

இன்னொரு பக்கம், ‘ஏக் காவ் மே ஏக் கிஷான் ரஹதாத்தா’ என்று ஹிந்தி கத்து கொடுக்கிறேன் என்று ஒருத்தங்க.இன்னொரு பக்கம் ஐ வாக் இங்கிலிஷ்,டாக் இங்கிலிஷ் என்று என்னை ஷேக்ஸ்பியர் ஆக்காமல் விட மாட்டேன் என்று ஒருத்தர். ” என்றான் நொந்து போனவனாய் அர்ஜுன்.

“CM அதுவும் ஸ்டைலிஷ்,சார்மிங், யங்,டாஷிங் CM.டெல்லியில் போய் பஞ்சாபி மொழியில் பேசினால் யாருக்காவது புரியுமா என்ன?பல நாட்டு டிக்னிட்ரீஸ் வருவாங்க.அவங்க கிட்டே எப்படி பேசுவே?”என்றாள் ஜெஸ்ஸி.

“கேடி நீ பேச்சை மத்தாதே!எதுக்கு இப்போ இந்த சினிமா பாட்டை வைத்து இருக்கே.?”என்றான்.

“தோடா! இது என்ன வம்பா போச்சு?.எனக்கு அந்த பாட்டு பிடிக்கும் வச்சேன்.ஆனா ஒரே மாதிரி சிட்டுவேஷன் இல்லை.அங்கே முதல்வர்கள் சீட் வைத்து ஒன் டே மேட்ச் நடத்துவாங்க. மாட்ச்  சார் தான் ஸ்ட்ரெயிட் முதல்வர் ஆகிட்டிங்களே.”என்றாள் ஜெஸ்ஸி.

“ஏன்டீ சொல்ல மாட்டே!.வேண்டாம் என்றவனை அரசியலில் இழுத்து விட்டுட்டு,நக்கலா செய்யரே.மவளே கையில் கிடைச்சே” என்று அவன் பல்லை கடிக்க,

“CM பதவினா என்னான்னு தெரியுமா உனக்கு?என்னைக்காவது CM ஆபீஸ் வாசற்படியாவது மிதித்து இருக்கியா?வந்து பார். ஒருநாளைக்கு எத்தனை பேர் என்னை வந்து சந்திக்கறாங்கன்னு. எவ்வளவு குறை நிறைகள்,எவ்வளவு கண்ணீர்,எவ்வளவு நன்றிகள்,எவ்வளவு நெருக்கடி….இதானே CM சார்?

இதை எல்லாமே எங்க தலை ரகுவரன் சொல்லி எப்பவோ கேட்டாச்சு ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் நீ எவ்வளவு தான் நிரப்பினாலும் நிரம்பாது ஜி. சோ முதலில் ஓட்டையை அடைக்க தான் உங்களை இறக்கி இருக்கோம்.

அர்ஜுன் என்று பேரை வச்சிட்டு கையில் காண்டீபம் ஏந்தி களம் புக மாட்டேன் என்று அடம் பிடித்தால் எப்படி முதல்வரே?” என்றாள் ஜெஸ்ஸி.

“ஜெஸ்ஸி!”என்று அர்ஜுன் கத்த,

“என்ன CM சார்! என் இந்த பெயர்  அவ்வளவு அழகாவா இருக்கு?இப்படி ரசிச்சி கூப்பிடறீங்க.”என்றாள்.

“கொலை காண்டுல இருக்கேன்.”என்றான் அர்ஜுன்.

“CM வேலைய பார்க்க சொன்ன நீ,  ‘பேட்ட’ படத்தை பார்த்துட்டு இருக்கியாடா எருமை?”என்றாள் ஜெஸ்ஸி.

“அடியேய்! ஷிம்லாவுக்கு போய் உனக்கு கொழுப்பு அதிகமாகி தான் போச்சு.யப்பா போனில் பேசுவதற்கே எனக்கு கண்ணை கட்டுது.பாவம் அமன்,ரஞ்சித் ரெண்டு பேரும்.உன்னிடம் மாட்டிட்டு என்ன முழி முழிச்சிட்டு இருக்கானுகளோ!.கடவுள் காப்பாற்றட்டும்.”என்றான் அர்ஜுன்.

“அமன் நிச்சயம் ஷிம்லாவில் தண்ணிய போட்டுட்டு குளிருக்கு இழுத்து போர்த்திட்டு தூங்கிட்டு இருப்பான்.இந்த ரஞ்சித் பிசாசு தான் எங்கே போச்சுன்னு தெரியலை.”என்றாள் ஜெஸ்ஸி.

“இரு இரு அமன் ஷிம்லாவில் இருக்கான் என்றால் நீ எங்கே இருக்கே? ரஞ்சித் எங்கே இருக்கான் ?”என்றான் அர்ஜுன் திகைப்புடன்.

“ஷிம்லா ஒரே குளிரா!.என் ஸ்வெட்டர் எடுத்து போக மறந்துட்டேனா. குளிர் தாங்க முடியலை.சோ ஒட்டகம் வெயிலில், ‘சன் பாத்’ எடுப்பது போல் நானும் கஜகஸ்தான் பாலைவனம் பக்கம் ஒதுங்கிட்டேன்.இந்த ரஞ்சித் பிசாசு இங்கே உள்ளே பொண்ணுங்களை பார்த்துட்டு,ஜொள் விட்டுட்டு,  ‘மெர்சல் ஆயிட்டேன்!’ என்று பாட்டு பாடிட்டே பின்னால் போனான்.இன்னும் வரலை.

சும்மா சொல்ல கூடாது CM சார் பொண்ணுங்க ஒவ்வொன்றும் இங்கே பாதம் ஹல்வா மாதிரி சும்மா நச்சுன்னு இருக்குங்க.ஏன் பையனா பிறக்கவில்லை என்று எனக்கு ஒரே பீலிங்ஸ்சா போய்டுச்சு பாஸ்.” என்றாள் ஜெஸ்ஸி.

“விளையாடாதே ஜெஸ்ஸி!.எங்கே இருக்க நீ?”என்றான் அர்ஜுன் பதட்டத்துடன்.

“செத்து போன எங்க ஆயா மேல் சத்தியமா நான் கஜகஸ்தான் நாட்டில் தான் இருக்கேன் முதல்வரே!.”என்ற ஜெஸ்ஸி,

“நீ நம்ப மாட்டே.இரு குல்பி அனுப்பறேன்.”என்று வாயை கோணி கண்ணை சுருக்கி,கையில் வி காட்டி அஷ்டகோணலாய் ஒரு செல்பி எடுத்து அனுப்பி வைக்க அதை பார்த்த அர்ஜுனுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்னவோ உண்மை.

“யேய்! அங்கே என்ன செய்துட்டு இருக்கே?”என்று ஹை பிட்சில் அர்ஜுன் குரல் உயர்ந்தது.

தன் பாதுகாவலன் ஒருவனுக்கு சைகை காட்டியவன் அந்த அழைப்பை ட்ரேஸ் செய்யவும் என்று சைகை செய்ய அவன் யாருக்கோ அழைத்து சொன்னான்.

“அதுவா CM சார் ஒட்டக பாலில் ஹல்வா செய்து தரங்களாம். ஒட்டக பால் ஹல்வா நான் சாப்பிட்டது இல்லையா அதான் அதை டேஸ்ட் செய்யலாம் என்று வந்தேன்.”என்றாள் ஜெஸ்ஸி.

“ஹல்வா சாப்பிட போனியா இல்லை யாருக்காவது ஹல்வா கொடுக்க போனியா ஜெஸ்ஸி?”என்றான் அர்ஜுன் ஒரு மாதிரி குரலில்.

ஜெஸ்ஸியின் மௌனமே அவள் அங்கு ஏதோ பிளான் உடன் தான் சென்றிருக்கிறாள் என்று அர்ஜுனுக்கு உணர்த்தி விட,”என்ன பைத்தியக்காரதனம் செய்து இருக்கே அங்கே?ரஞ்சித்துக்கு நீ அங்கே இருப்பது தெரியுமா இல்லை அவனுக்கும் தெரியாமல் அவன் பாதுகாப்பில் இருந்து எஸ்கேப் ஆகி சுத்திட்டு இருக்கியா?

ஒரு தடவை துப்பாக்கி குண்டு பறந்து வந்தது போதாதா? ஒருத்தியை எந்த நிலையில் பார்த்தோம். இப்போ நினைத்தாலும் நெஞ்சே பதறுதே…ஒழுங்காய் ஷிம்லாவுக்கு திரும்பு. நான் கிளம்பி வந்துட்டே இருப்பேன்.” என்றான் அர்ஜுன்.

“CM சார்!…ரிலாக்ஸ்…எனக்கு எந்த ஆபத்தும் இல்லை.நான் பாதுகாப்பாய் தான் இருக்கேன்.நீங்க பாத்திரத்தில் உள்ள ஓட்டையை அடைக்கும் வேலையை மட்டும் பாருங்க.நீங்க அந்த ஓட்டையை அடைக்க வேண்டும் என்றால் அந்த ஓட்டை எது, எங்கு இருக்கிறது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் இல்லையா…அதான்..

CM சார் டென்ஷன் ஆகாம ஆன்டி சில்லுன்னு கீர் செய்து பிரிட்ஜில் வைத்து இருப்பாங்க.அதை குடிங்க கோபம் குறையும். பை CM.”என்று அழைப்பை துண்டித்து விட,அதன் பிறகு அர்ஜுன் எத்தனை முறை அழைத்தும் ஜெஸ்ஸி அழைப்பை ஏற்கவில்லை.

இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் ஜெஸ்ஸி,கஜகஸ்தான் நாட்டில் தான் இருக்கிறாள் என்பதை உறுதி படுத்த ஸ்தம்பித்து போனவனாய் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் அர்ஜுன்.

அடுத்த்த நொடி அவன் கான்பாரென்ஸ் அழைப்பு ஒன்றை போட எதிர்முனையில் வந்த அமன்,ரஞ்சித் இருவரும் இவன் தாளித்த தாளிப்பில் நொந்து நூடுல்ஸ் ஆகி போனார்கள்.

“உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வேலை.அவளை பத்திரமாய் பார்த்து கொள்ளும் வேலை.அதை செய்யாமல் நீ ஷிம்லாவில்,இன்னொருத்தன்    கஜகஸ்தான் நாட்டில் அவளுக்கு சொம்பு தூக்கிட்டு என்ன செய்துட்டு இருக்கீங்க?”என்றான் அர்ஜுன் கோபத்துடன்.

“என்னது! இவங்க கஜகஸ்தான் நாட்டில் இருக்காங்களா?பாதுக்காப்பு காரணம் என்று வேறு எங்கேயோ கூட்டிட்டு போகணும் என்று சொல்லி தானே இவனும் அவளும் கிளம்பினாங்க.” என்றான் அமன் திகைப்புடன்.

அவன் திகைப்பே சொல்லாமல் சொல்லியது.இந்த பிளான் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது என்பதை .

“அப்போ அவ தான் உனக்கு உடந்தை அப்படி தானே! .நீ காபோஸ் பிடித்து மெடல் வாங்க, உனக்கு பகடையாக அவள் தான் கிடைத்தாளா?அவ தான் பைத்தியக்காரி.நீ வெள்ளை காக்க பறக்குதுன்னு சொன்ன கூட ஆமா மிக அழகாய் பறக்குது இல்லை என்று சொல்லும் லூசு.

உனக்கு வேறு வழியே கிடைக்கலையா?.அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு CM என்று எல்லாம் கூட நிதானிக்க மாட்டேன். உன்னை கொன்று விட்டு தான் மறுவேலை.”என்றான் அர்ஜுன் எரிமலையை உள் அடக்கிய குரலில்.

“யப்பா!…கொஞ்சம் அடங்கு.இந்த பிளான் என்னுடையதே இல்லை. கதை,திரைக்கதை, வசனம்,இயக்கம் எல்லாம் அம்மையார் தான். அவ சொல்லும் படி தான் செய்துட்டு இருக்கேன்.” என்றான் ரஞ்சித் பாவமாய்.

“என்னது! அவ சொல்லும் படி செய்துட்டு இருக்கியா?அறிவு இருக்கா இல்லையாடா உனக்கு எல்லாம்?அவளை பாதுகாப்பதை விட்டுட்டு ஆபத்தில் அவளை சிக்க வச்சிட்டு இருக்கே.அவ ஆயிரம் சொல்லுவா.

ரூமில் வைத்து அவளை பூட்டி வைக்காமல் அவ தாளம் தட்டுறாள் நான் ஆடுகிறேன் என்று மக்கான் மாதிரி பேசிட்டு இருக்கே.உன்னை எல்லாம் எவண்டா போலீஸ் வேலைக்கு எடுத்தது?” என்றான் அர்ஜுன் கோபத்துடன்.

“நான் அதை செய்யவில்லை என்று நினைக்கறியா?அவளை ரூமில் வைத்து பூட்டியே தான் விட்டேன்.ஹேர் பின் வச்சி பூட்டை உடைத்து விட்டு அந்த லூசு ஏர்போர்ட்ல போய் நிக்குது. அங்கேயிருந்து என் ஆட்கள் போன் செய்து விஷயத்தை சொல்ல பதறி அடித்து ஓடி,கிளம்பிய விமானத்தை நிறுத்தி அதில் ஏறுவதற்குள் எனக்கு ஹார்ட் அட்டாக் வராதது ஒன்று தான் குறை.”என்றான் ரஞ்சித் நொந்து போனவனாய்.

“அப்படியே அர்ரெஸ்ட் செய்து திரும்ப கூட்டி வந்து பாதாள சிறை என்று ஏதாவது கட்டியாவது அவளை உள்ளே இறக்கி வைத்திருக்க வேண்டியது தானே…”என்றான் அர்ஜுன் கடுப்புடன்.

“யாரு அவளா!கை நகத்தை வைத்து பூமியை தோண்டியாவது எஸ்கேப் ஆகும் அந்த பிசாசு.இன்னுமாடா அவளை பத்தி உனக்கு தெரியலை?உனக்கு தான் அவளை பற்றி தெரியும் இல்லை.

நினைத்ததை முடிக்காமல் நிக்காது.நீ CM ஆன பிறகும் உன் மேல் மேலும் ரெண்டு தடவை அட்டாக் நடந்தது இல்லையா?” என்றான் ரஞ்சித்.

“ஆமா அதுக்கென்ன?அதான் என் பாதுக்காப்பு படை என்னை காப்பாத்திட்டாங்க.மத்திய அரசாங்கமும் ஸ்பெஷல் கமாண்டோஸ் என் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்துட்டாங்களே இன்னும் என்ன?”என்றான் அர்ஜுன் திகைப்புடன்.

“அதில் இருந்து அவ இப்படித்தான் இருக்கா.உன் பாதுக்காப்பு நினைச்சே அவ பல நாள் தூங்கவில்லை அர்ஜுன்.உன்னை மாதிரி நல்லவன் ஒரு மாநிலத்தின் ஆட்சி பொறுப்பில் இருப்பது தான் நல்லது.

ஆனால் சுயநலம்.பணம்,பதவி மேல் வெறி பிடித்த கூட்டம் என்று ஒன்று இருக்கே.நாடே சுடுகாடு ஆனாலும் தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாய் இருந்தால் போதும் என்று இருக்கும் அரக்க ஜென்மங்கள். அதுங்க ஆசைக்கு தீனி போட காபோஸ் போன்றவனும், சைத்தான் போன்ற தீவிரவாதியும் போதுமே. இவனுங்க இருக்கும் வரை நீ நிம்மதியாய் நாட்டை ஆளவே முடியாது என்று புலம்பல் நிற்கவேயில்லை.”என்றான் ரஞ்சித்.

“உடனே இந்தம்மா ஜான்சி ராணி மாதிரி கிளம்பிட்டாங்க.நீ கூட சொம்பு தூக்கிட்டு சுத்திட்டு இருக்கியா?உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையாடா?இப்படின்னு ஒரு வார்த்தை என் காதில் சொல்ல வேண்டியது தானே!நானே அவளை பார்சல் செய்திருப்பேன். மடச்சி…மடச்சி.மனசிற்குள் அப்படியே சினிமா ஹீரோயின் என்று நினைப்பு.”என்று பொரிந்தான் அர்ஜுன்.

“அர்ஜுன்! அவளை நிறுத்த முயல்வதற்கு பதில் உதவி செய்வது தான் நல்லது.தடுக்க நினைத்தால் அந்த தடையை அவள் உடைக்காமல் விட மாட்டாள். அவளுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்து கொள்கிறேன் அர்ஜுன்.என் உயிரை கொடுத்தாவது அவளை நிச்சயம் காப்பாற்றுவேன் அர்ஜுன்.ட்ரஸ்ட் மீ.” என்றான் ரஞ்சித்.

எதையும் சொல்லாமல் அழைப்பை துண்டித்த அர்ஜுன் தலையில் மீண்டும் கை வைத்து அமர்ந்து விட்டான். அவன் மனம் மட்டும் நிலையில்லாமல் துடித்து கொண்டு இருந்தது.ஏதோ விபரீதம் மீண்டும் நடக்க போவதாய்.

இதயம் பதற அமர்ந்திருந்தவனும்,உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவேன் என்று உறுதி அளித்தவனும் அறியவில்லை அந்த நொடி ஜெஸ்ஸி ஆபத்தில் தான் நுழைந்து இருந்தாள் என்பதை.

ஸ்ரீ கிருஷ்ணா தங்கி இருந்த கேபின் அடர்ந்த காட்டுக்கு நடுவே ஏதோ ஆங்கில SLASHER படங்கள் என்ற வகையை சேர்ந்த, திகில் பட செட் போன்ற செட் அப்பில் மிரட்டி கொண்டு இருந்தது.

‘அடேய்! தங்கறதுக்கு ஊரில் நல்ல ஹோட்டல் ஒன்றுமே இவனுக்கு கிடைக்கலையா?பக்கத்து வீட்டில் கொலையே நடந்தாலும் இந்த காலத்தில் எவனும் கண்டு கொள்வதில்லை. மனங்களை போல் வீட்டின் கதவுகளும் திறக்க படாத போது ஹோட்டல் கதவுகளை தான் திறந்து என்ன ஏது என்று இவனை பத்தி சொல்லிட்டு இருக்க போறாங்களாக்கும்.

எப்படி ஒரு இடத்தை தேர்ந்து எடுத்திருக்க பாரு லூசு.அப்படியே ரோமம் எல்லாம் எம்பிட்டு நிக்குது.எப்போ மாஸ்க் அணிந்து கொண்டு கையில் கத்தியுடன் இல்லையென்றால் மரம் அறுக்கும் ரம்பத்துடன் ஒருவன் வந்து நின்றான் அப்படியே , SCREAM,டெக்சாஸ் செயின் ஷா மாசகெர் படமே தான்.’என்று மனதிற்குள் புலம்பி கொண்டே அந்த கேபின் கதவை திறந்து கொண்டு ஜெஸ்ஸி உள் நுழைந்தாள்.

SCREAM க்கான பட முடிவு

உள்ளே நுழைந்த அவள் முகத்தை நோக்கி நீண்டது பத்து துப்பாக்கிகள் ஒரே சமயத்தில்.

‘கதம் கதம்.எலி பொறியில் சிக்கியது போல் நீயே எப்படி வந்து மாடிட்டியே.சொக்க காப்பாத்துப்பா.’என்று மனதிற்குள் எண்ணம் ஓட,திகைத்து நின்றவள் வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டது.

கைகள் பின்புறமாய் வளைக்கப்பட்டு கயிறால் கட்டப்பட்டது. முகத்தில் கருப்பு நிற துணியொன்று போட்டு மூடியவர்கள் அவளை அப்படியே அலேக்காக தூக்கி கொண்டு பின்னல் நிறுத்தியிருந்த ஜீப் ஒன்றில் பொத்தென்று போட்டனர்.இவளுடன் ஐந்து பேர் கிளம்ப,மீதம் இருந்த ஐந்து பேர் ஸ்ரீ கிருஷ்ணாவை கடத்த அங்கேயே காத்திருந்தனர்.

எந்த எதிர்ப்பையும் காட்டாமல் உடன் சென்றாள் ஜெஸ்ஸி.யார் இவர்கள்?காபோஸ் ஆட்களா இல்லை சைத்தான் எனப்படும் தீவிரவாதியின் ஆட்களா இல்லை அந்த நாட்டில் பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டும் என்றாலும் வேலை செய்யும் கூலி படையா?

ஆக மொத்தம் காபோஸ் கையால் ஒருத்தி மரணித்து இருக்க, கடத்தப்பட்டிருக்கும் இந்த ஜெஸ்ஸியின் உயிரும் போகுமோ?

ஜெஸ்ஸியை துப்பாக்கி முனையில் தரதரவென்று இழுத்து சென்றவர்கள் அவளை ஒரு அறையில் தள்ளி வெளியே பூட்டினர்.

சற்று நேரத்தில் ஜெஸ்ஸியின் முகத்தில் இருந்த மாஸ்க் எடுக்கப்பட,அந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தவள்,கைகள் முன்புறமாய் கட்டப்பட்ட நிலையில் தன்னை கண்களால் எரித்து கொண்டு இருந்த அவளை கண்டு அசடு வழிந்தாள்.

“அப்போ உன்னையும் பிடிச்சுட்டாங்களா?.மேலே டிக்கெட் வாங்கும் போது,நரகத்திற்கு போகும் வரை பேச்சு துணைக்கு ஆள் இருக்காதே என்று ரொம்பவே வருத்தப்பட்டேன்.பாரேன் உன்னை அவங்களே இங்கே துணைக்கு கொண்டு வந்துட்டு இருக்காங்க.”என்றவளை வித விதமாய்,ரக ரகமாய் முறைத்தாள் எதிரில் நின்றவள்.

“ஏண்டீ சொல்லமாட்டே!.நீ எல்லாம் தோழி,சரி உனக்கு உதவலாம் என்று வந்தேன் பாரு.என் புத்தியை எதை கொண்டு அடித்தாலும் போதாது.உன்னை நம்பியதற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.என்னை எதுக்குடி அந்த வீட்டிற்கு போக சொன்னே?யார் வீடு அது?”என்றாள் அவள் கடுப்புடன்.

“அர்ஜுனை முதல் முறை டார்கெட் செய்தாங்க இல்லை.அதில் செத்தவன் வீடு தான் அது.ரஞ்சித் வேறு வேலையாய் போக வேண்டி இருந்தது.நானும் கிருஷ்ணாவை காப்பாத்த போனேன். சோ மீதம் இருந்தது நீ தான்.அதான் காபோஸ் பற்றிய தடயம் ஏதாவது இங்கே கிடைக்குதான்னு பாரு என்று உன்னை அனுப்பினேன்.”என்றாள் ஜெஸ்ஸி என்னவோ மளிகை சாமான் வாங்க அனுப்பிய குரலில்.

“என்னது! அது காபோஸ் தளபதி வீடா?அடியேய் உன்னை…” என்று அவள் பற்களை நறநறவென்று கடிக்க,

“அட சும்மா அலுத்துக்காதே. வாழ்க்கையில் எத்தனை பேருக்கு இப்படி ஒரு மாபியா கும்பலால் கடத்தப்படும் வாய்ப்பு கிடைக்கும் சொல்லு?சும்மா ஆக்ஷன் சீகுவென்ஸ் இல்லாம டல் வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க பொண்ணுங்க.

அப்படியே ஸ்பீட் பட சாண்ட்ரா புல்லக், லாரா கிராப்ட் மாதிரி ஜெகஜோதியாய் வாழணும்.”என்றவளை என்ன செய்வது என்று தெரியாமல் முறைத்தாள் அவள்.

“நீ எல்லாம் என்ன மாதிரி டிசைன் சத்தியமா தெரியலை. மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்கிறதா நினைப்பா?மாபியா கூட்டம்.உயிர் போனால் கூட போதும் என்ற எண்ணம் வரும் அளவிற்கு வக்கிரங்களை செய்து  வைப்பானுங்க.நாம டூருக்கு வரவில்லை.எந்த கணமும் உயிர் போகலாம் என்ற நிலையில் இருக்கோம் .இப்போ கூட உனக்கு சீரியஸ்நெஸ் இருக்காதா?”என்றாள் அவள்.

“சரி என்னை இங்கே கொண்டு வரும் வரை நீ என்ன செய்துட்டு இருந்தே?”என்றாள் ஜெஸ்ஸி.

“இவங்க கிட்டே மாட்டிட்டோமே என்று பயந்து செத்துட்டு இருந்தேன். எப்போ எந்த மிருகம் உள்ளே வரும்.எப்போ எதையாவது செய்துட போறாங்கன்னு செத்து செத்து பிழைச்சுட்டு இருந்தேன்.”என்றாள் அவள்.

“அப்போ பெரிய இவளாட்டம் பெண்கள் தற்காப்பு கிளாஸ் எல்லாம் எதுக்கு கத்துக்கிட்ட?என்ன சொல்லி இருக்காங்க ஒரு ஆபத்தில் சிக்கி இருக்கிறாய் என்றால் உன்னை சுற்றி முதலில் பாரு.

எது எல்லாம் உனக்கு ஆயுதமாய் பயன் படும்,தப்பிக்க வழி இருக்கா என்று பாரு என்று சொல்லியிருக்காங்க தானே?DAMSEL இன் DISTRESS என்று எந்த இளவரசனாவது குதிரையில் வந்து உன்னை காப்பாற்றுவான் என்று பைத்தியம் மாதிரி காத்துட்டு இருக்கியே நீ என்ன படிச்ச முட்டாளா?”என்றாள் ஜெஸ்ஸி.

“ஆமா இது சினிமா பட செட் பாரு.நீ தப்பி போக என்று எல்லாத்தையும் ரெடியா வச்சிட்டு இருப்பாங்க.”என்றாள் அவள் கடுப்புடன்.

“உள்ளே வந்த ஐந்து நிமிடத்தில் அறையை சுத்தி பார்த்துட்டேன். அதோ உனக்கு பின்னால் இருக்கும் ஜன்னல் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு பெரிசு தான்.அதை உடைக்க அதோ உடைந்து போன அந்த நாற்காலியின் கால் போதும்.

சத்தம் வராமல் இருக்க கீழே இருக்க கந்தல் துணி போதும். ஜன்னல் கண்ணாடி உடைந்தால் அந்த உடைந்த பீஸ் வைத்தே கை கட்டை அறுத்து இருக்கலாம்.உன் பையையும் இங்கே தானே போட்டு வைத்திருக்கானுங்க.”என்றாள் ஜெஸ்ஸி புன்னகையுடன்.

“அதுல எதுவும் இல்லை.அதனால் அதை இங்கே போட்டானுங்க. கடத்தறவன் ஒன்றும் லூசு கிடையாது.”என்றாள் அவள்.

“பையை திற.”என்றவள் பேச்சை கேட்டு அவள் தான் ஹாண்ட்பாக் திறக்க, அதில் அழகு சாதன பொருள்கள் தான் இருந்தது .

“பாரு பவுடர்,பெர்பியூம்,இது தான் இருக்கு.”என்றாள் அவள்.

“இது போதுமே.மிளகாய் பொடி மட்டும் அல்ல,பவுடர்,இதோ இந்த சேப்டி பின்,பூ குத்தும் இந்த ஸ்லைட் எல்லாம் கூட ஆயுதம் தான்.நாம் பயன்படுத்தும் ஆயுதம் பெரிது.சிறிது என்று இல்லை. அது நாம் பயன்படுத்தும் வகையில் தான் இருக்கிறது.

இது எல்லாவற்றையும் விட மிக பெரிய ஆயுதம் எது தெரியுமா எந்த நிலையிலும் ஒரு பெண்ணை விட்டு நீங்க கூடாத மனத்துணிவு. அதை விட ஒரு பெண்ணை காப்பாற்றும் உயர்ந்த ஆயுதம் உலகில் வேறு இல்லை.நீ தோற்கும் வரை உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது.இதை என்றுமே மறக்காதே.” என்றாள் ஜெஸ்ஸி.

ஜெஸ்ஸி பேசி முடிக்கவும் அந்த அறை கதவை திறந்து கொண்டு, ‘சைத்தான் என்று அழைக்கப்படும் தீவிரவாதியும் அவன் மிக நெருங்கிய தளபதிகளும் உள்ளே நுழையவும் மிக சரியாய் இருந்தது.உள்ளே வந்தவன் இவர்களை எதிர்பார்த்திருக்கவில்லை என்று அவன் முகம் போன போக்கிலேயே தெரிந்தது.

உள்ளே நுழைந்தவர்களில் ஒருவன் முகம் மட்டும் பெண்கள் இருவரை கண்டதும் அதிகபட்ச அதிர்ச்சியை காட்ட,நிமிட நேரத்தில் தன் முகத்தை அவன் சரி செய்து கொண்டான்.

பயணம் தொடரும்…

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!