OVS5

OVS5

5

‘பொய் சொல்றானோ?’ சிறு சந்தேகம் தலை தூக்க,
“சும்மா சொல்றீங்க தானே, வீரா…?” என்றதும் அனிச்சை செயலாய் அவன் புருவம் ஏறி இறங்கியது.
“வீரா இல்ல! அத்தான்னு கூப்பிடு! கல்யாணத்துக்கு முன்ன எப்படியோ, இனி பேர் சொல்லி கூப்பிடறது, நம்ம ரெண்டு பேருக்குமே மரியாதை குறைவை உண்டாக்கும்.” ஒரு நொடி கடுமை காட்டினாலும் அவள் சுதாரிப்பதற்குள் இயல்புக்கு திரும்பியவனாய்,  
“நீயே சொல்லேன், நான் என்ன படிச்சிருப்பேன்னு நினைக்கிற?” இதமாய் வினவினான்.
“ஸ்கூலிங் முடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்…” (அடிங்க…) கோபித்து கொள்வானோ என்னும் பயத்துடன் மென்றுவிழுங்கிய படியே சொல்ல அவனோ மலர்ந்த சிரிப்புடன்,
“எம்.எஸ்சி அக்ரி முடிச்சிட்டு இப்போ phd பண்ணிட்டு இருக்கேன், வேளாண் துறையில் டிவிஷனல் அக்ரிகல்சுரல் ஆபீஸரா இருக்கேன்” (அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ? நாங்க தான் குறைச்சு எடை போட்டுட்டோமா?) என்றதும் அதிர்வும், மகிழ்வுமாய்,
“நிஜமாவா?” கண்கள் விரிய கேட்டாள். படிக்காத கிராமத்தானை தான் கட்டியிருக்கிறோம் என நினைத்தவளுக்கு அவனது கல்வித் திறனும், வேலையும் வியப்பை ஏற்படுத்தின என்று தான் சொல்ல வேண்டும்.
“பொதுவாவே நான் பொய் சொல்ல மாட்டேன். அதிலும் பொண்டாட்டிகிட்ட உண்மையை தவிர எதுவும் பேசக் கூடாதுன்னு உறுதியே எடுத்திருக்கேன். நீ என்னை நம்பலாம்” என்றதும் இதழோர சிரிப்புடன் மெல்ல எழுந்தவள், அப்பொழுது தான் அந்த அறையை நோட்டமிட்டாள். 
அவனோ அவளை நோட்டம்விட்டான். (நீங்க நோக்குங்க… நாங்க ரொம்ப நேக்குங்க… சத்தமில்லாம waiting)
“கல்யாணம் பண்றதுக்கு பொண்ணு பாருங்கன்னா… பொம்மையை தூக்கி கையில் கொடுத்திருக்காங்க… என்ன கொடுமை டா இது?” (தம்பி நான் கட்டிக்கிறேன்னு நீயா தான் வழிய போய் வலையில் விழுந்த…) 
‘ஏன் டீ… இவ்வளவு சின்னதா இருந்து என்னை கொல்ற…? பொம்மை!’ கொஞ்சமும் முதிர்வில்லாத சிறுபிள்ளை முகம் கொண்டிருக்கும் தன் பொம்மையின் மீது வருத்தமான வருத்தம் அவனுக்கு. 
தனி தனியாய் பார்க்கும் போது இருவரும் அழகோ அழகு தான் ஆனால் சேர்த்து பார்க்கும் போது கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் இருப்பதாக அவனுக்கு ஒரு பிரம்மை. 
‘ஆனாலும் கைப்பிடித்த பிறகு ஒன்றும் செய்வதற்கு இல்லை. நல்ல கணவனாய் இவளை தாங்கி தடுக்கில் இடத்தான் வேண்டும்’ மனதை தேற்றிக் கொண்டவனாய் அவனும் எழ,        
   தமிழ்நாட்டு முதல்வரிடமிருந்து பெரிய ஷீல்டு ஒன்றை வாங்குபவனின் புகைப்படத்தை காட்டி,
“இது எதுக்கு வாங்கினீங்க?” என்றாள் ஆவலாய்.
“அதுல தான் போட்டிருக்கே. படி!” என சிரித்தான்.
“சாரி, எனக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியும்!”
“நல்ல காலம் தப்பிச்சேன்! இல்ல, நீ சைனீஸிலயும் நான் தமிழ்லயும் முட்டி மோதிட்டு இருக்க வேண்டியது தான்!” என்றவன். (ச்ச… வடை போச்சே! நாங்க free யா சைனீஸ் கத்துக்கிட்டுருப்போமே!)
“இது சிலம்பம் டோர்னமெண்டில சவுத் இந்தியா லெவெல்ல முதல் பரிசு வாங்கினப்போ எடுத்தது.”
“வாவ்! சிலம்பம்ன்னா என்ன?”
“அது ஒரு வீர விளையாட்டு. தற்காப்பு கலைன்னு கூட சொல்லலாம். நீண்ட கோலை வச்சு விளையாடுறது.” என விளக்கம் வைக்க,
“ஓ… டேக்வான்டோ மாதிரியா? ப்ளீஸ், ப்ளீஸ் செய்து காட்டுங்களேன்!!” 
“இப்பவா?”
“ம்… எனக்காக. எப்படி பண்றீங்கன்னு பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு வீரா!” 
“ம்ஹூம், வீராவை விட்டு அத்தான்னு சொல்லு” என கனிந்த அதரம் பற்றி வலிக்காமல் கிள்ளி விடுவித்தான். 
“அத்தான் வேண்டாமே, வேணும்ன்னா மாமான்னு கூப்பிடவா?”
“நானும் மாமா, என் அப்பாவும் மாமாவா? அத்தானுக்கு என்ன குறைச்சல்? அப்படியே கூப்பிடு!” கரங்களை அவள் தோளில் பதித்து தன் உயரம் குறுக்கி அவள்  நெற்றி முட்டி சிரித்தான். 
“எனக்கு உங்களை வீரான்னு கூப்பிடறது ரொம்ப பிடிச்சிருக்கு. நமக்குள்ள மட்டும், லைக்… இந்த ரூமில் மட்டுமாச்சும் கூப்பிடவா?”
“எனக்கு நீ அத்தான்னு கூப்பிடறது தான் பிடிச்சிருக்கு, ஜில்லு! ரூமில் கூப்பிடுற பழக்கம் பட்டுன்னு நம்மை அறியாமல் நான்கு சுவர் தாண்டியும் வர வாய்ப்பிருக்குடா!” இதமாகவே சொன்னான். (அதான் இவ்ளோ கெஞ்சுறானே, இல்ல… சொல்றானே அத்தான்னு கூப்பிடேன்)
“நீங்க மட்டும் ஜில்லுன்னு ஏதோ சொல்றீங்க!” முகம் தூக்கி அவன் கழுத்தில் கிடக்கும் செயினைப் பற்றி முறுக்க, அந்த செல்லச் சிணுங்கல் அவனைக் கிளரச் செய்தது. இதமான அணைப்புடன்,
“எக்ஸ்க்யூஸ் மீ ன்னு முதன் முதலாக எங்கிட்ட வந்து பேசினியே, அப்போ நான் இருந்த டென்ஷனுக்கு உன் குரல் மழைச்சாரல் மாதிரி… மனசுக்கு இதமா, சூழலே ஜில்லுன்னு ஆயிடுச்சு. அதனால… என் பொண்டாட்டியோட செல்லப் பேரு ஜில்லு!! பொருத்தமா இருக்கா?” (நீ மேலே ஜொள்ளு… ச்சே சொல்லு… சத்தியமா டைப்பிங் மிஸ்டேக் தான்)
‘நல்லா தான் பேரு வைக்கிறான் கள்ளன்!’ மனதிற்குள் பாராட்டு பத்திரம் வாசித்தாலும், 
“நீங்களும் ரூமைத் தாண்டி ஜில்லுனு கூப்பிட மாட்டீங்களோ?” சந்தேகமாய் தலை சாய்த்துக் கேட்க, 
“இது நமக்கான பிரத்யேக கொஞ்சல். இதை எப்படி வெளியே உபயோகிக்க முடியும். அதனால அங்கெல்லாம் ஈஸ்வரி தான்!”
“அப்போ நானும், இங்க வீரான்னும் வெளியிலே அத்தான் -னும் கூப்பிடுறேன்… ப்ளீஸ்!!” கெஞ்சலாய் அவன் கன்னம் தாங்கி கொஞ்சினாள்.
“கட்டுப்பாடோட இருக்க முடியும்ன்னா எனக்கு ஒன்னும் பிரச்னை இல்ல ஜில்லு!” என கன்னத்தோடு கன்னம் உரச 
“வீரா, சிலம்பம் சுத்தி காண்பிங்க…” விட்ட இடத்திற்கே வந்தாள்.
“அர்த்த ராத்திரியில் பண்ற வேலையா அது? இருந்தாலும் என் ஜில்லு முதன்முதலா ஆசைப்பட்டு கேட்டதுங்கிறதால செய்யுறேன்!” என வேஷ்டியை மடித்துக் கட்ட எத்தனித்து லேசாய் ஒரு காலை பின்னோக்கி உயர்த்தி வேஷ்டியின் நுனி பற்றி தூக்கி அவன் மடித்துக் கட்டும் அழகில் மயங்கித் தான் போனாள் பேதை. (அட சைனா பீசு… எங்க ஊரு வேட்டி கட்டுக்கே அசந்து போறியா!)
அலமாரிக்குப் பின்னால் சுவற்றோடு சாற்றியிருந்த கம்பை எடுத்தவன், விதவிதமாய் சுழற்றிக் காட்ட ஆவென வாய் பிளக்காத குறையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒற்றைக் கோலில் அவன் காட்டிய பல வித்தைகளை இமை தட்டாது பார்த்தவள் வியர்த்து வழிய நிற்பவனின் கரம் பற்றி,
“சூப்பர்… சூப்பர்!” என்ற கூவலுடன் கை குலுக்கினாள்.
மனையாளின் மேனி தழுவியிருந்த மென்பட்டின் முந்தானை பற்றி முகம், கழுத்து, மார்பு, புஜங்கள் என முத்து, முத்தாய் பூத்திருக்கும் வியர்வைத் துளிகளை அவனே ஒற்றி எடுக்க, அவளுள் ஏதோ மாற்றம். 
இனம் பிரிக்க முடியா சுகமான அதிர்வு உடலெங்கும் ஓடி மறைய, அவன் ஆண்மையின் கம்பீரத்தில் கட்டுண்டவளாய் அசையாது நின்றாள். 
“படுக்கலாமா ஜில்லு?” குழைந்தது குரல். அவனுக்கும் மனையாளின் பார்வை போதை ஏற்றியது. வாயைத் திறப்பதற்கு முன்பே தலை தானாக சம்மதம் சொல்லிவிட்டது. சிறு சிரிப்புடன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன், மெல்ல கட்டிலில் கிடத்தி விலக எத்தனிக்க, அவன் கரம் பற்றி,
“எங்க போறீங்க?” என முனுமுனுக்க 
“லைட் ஆப் பண்ணிட்டு வந்துடுறேன் ஜில்லு!” என்றதும் பதறி எழுந்து அமர்ந்தவள்,
“வேண்டாம் லைட் இருக்கட்டும். ப்ளீஸ்… ப்ளீஸ் ஆப் பண்ணாதீங்க! எனக்கு இருட்டுன்னா பயம்.” என திருதிருக்க 
“அதான் நான் இருக்கேனே… அப்புறம் என்ன பயம்?”
“ம்ஹூம், யார் இருந்தாலும் எனக்கு லைட்டும் இருக்கனும்! சின்னதில் இருந்தே அப்படித் தான். விடிய, விடிய லைட்டை போட்டுக்கிட்டே தான் தூங்குவேன்!” ஆச்சர்யமாகப் பார்த்தாலும், 
“கண்கள் கூசாதா? எனக்கு இருட்டா இருந்தா தான் தூக்கம் வரும்.” என்றாலும் அவள் அருகில் அமர்ந்துவிட்டான். 
“நான் தூங்கினதும் ஆப் பண்ணிக்கோங்க! பாருங்களேன்… படுத்ததும் தூங்கிடுவேன். ரொம்ப நேரமெல்லாம் எடுத்துக்க மாட்டேன்.” என்றபடி அவனுக்கு முதுகு காட்டி கண்களை மூடிக் கொள்ள, அவளருகே படுத்து மெல்ல அவள் தோள் தொட்டு தன்புறம் திருப்பி,
“அப்படியெல்லாம் உடனே தூங்கனும்ங்கிற அவசியம் இல்ல.” என நெற்றியில் முத்தமிட்டு இதமாய் இடை தழுவிக் கொள்ள, அவனின் எதிர்பார்ப்பு ஓரளவு புரிய,
“என்ன?” என்றாள் வெட்கமும், தயக்கமுமாய்.
“எல்லாந்தான்…!” என கிறக்கமாய் கன்னம் வருடினான்.
“இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டுமே…!!?” அதிர்வுடன் அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை.
“எத்தனை நாள் ஆனாலும் நடக்கப் போறது தானே!” என்றான் சிறு சிரிப்புடன். (ஹே… உடனே கிட்னாவா… ரொம்ப அவசரப்படாத செல்லம்! சைனா பொம்மை ஷாக்காகப் போகுது!)
“இல்ல, நீங்க இன்னும் லவ் சொல்லவே இல்லையே! அதுக்குள்ள எப்படி?” மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்ட நாவை பிரித்துச் சொல்வதற்குள் பெரும்பாடு பட்டுப் போனாள். 
“நீயும் தான் சொல்லல!?” குறும்புப் பார்வையுடன் நெற்றி வருடி, 
“பார்த்ததும் எப்படி காதல் வரும்? ஒருத்தரோட இயல்பையும் குணத்தையும் தெரிஞ்சு, புரிஞ்சு மெல்லத் தான் காதலிக்கனும். இப்போ என் மனைவிங்கிற உரிமையும், உன் அழகில் ஈர்ப்பும் தான் இருக்கு.” உண்மை சொன்னான். (உண்மை விளம்பி….போடா டேய்!) 
“அதனால தான்… சொல்றேன்… ஓரளவுக்காவது அறிமுகமில்லாம… பட்டுன்னு எப்படி…?!” தயங்கித் தயங்கி சொல்ல,
“அறிமுகத்துக்கு அடிப்படையே இது தான்! ஒருத்தருக்கு ஒருத்தர் பழகி புரிந்துகொள்ள இது தான் பால பாடம் (இவரு பெரிய சயின்ஸ் வாத்தியாரு) தேடலுடன் அவளை நோக்கி முன்னேறினான்.
இந்த விதியில் அவளுக்கு உடன்பாடில்லை. அன்பை அடிநாதமாக வைத்துத் தான் காதல் உருவாக வேண்டும். காமத்தை வைத்தல்ல! ஆனால் இதை அவனிடம் சொல்ல பயமாக இருக்கவே மறுப்பின்றி கண்களை மூடிக் கொண்டாள்.
“லைட் ஆப் பண்ணிடட்டுமா?” பட்டென கண்களைத் திறந்து தன் மீது படர்ந்திருந்தவனின் விழி பார்த்து,
“வேண்டாம். இருக்கட்டும்!” என பதற,
‘வெளிச்சத்தில் என்னைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டு விளக்கணைக்கவும் விடமாட்டேன் என இம்சிக்கிறாளே!!’ ஒன்ற முடியாமல் தவித்தவன், 
“அப்போ, கண்ணைத் திறந்து என்னை பாரு ஈஸ்வரி! ப்ளீஸ்… உன்னை போர்ஸ் பண்றேனோன்னு எனக்கு கஷ்டமா இருக்கு.” அவன் நிலை புரிய,
“சாரி, சாரி… மன்னிச்சிடுங்க. ஹர்ட் பண்ணிட்டேனா?” அவன் கன்னம் தாங்கி பதற, அவள் பதட்டமும், தவிப்பும் மனதை நிறைக்க,
“உனக்கும் கஷ்டமா இருந்தாலோ, பிடிக்கலைன்னாலோ சொல்லிடனும் ஜில்லு!” 
தன் மனமறிய விரும்பும் கணவனின் பால் அன்பு பெறுக, இதழோர சிரிப்புடன் கேசம் களைத்து தன் முதல் முத்தத்தை நெற்றியில் பதிக்க, விரும்பித் தான் உடன்படுகிறாள் எனும் மகிழ்வில் மென்மையிலும் மென்மையாய் இதழோடு இதழ் பொருத்தினான். மீண்டும் கண்களை மூடிக்கொள்ள, மூடிய விழிகளில் முத்தமிட, தானாக திறந்து கொண்டது.
“என்னைப் பார்க்க பயமா இருக்கா? ஏன் முகம் பார்க்கவே மாட்டேங்கிற? நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன் இல்ல, கொஞ்சம் நல்லவன் தான். நிச்சயத்தப்போ ரொம்ப தைரியமா என்னோட தனியா வந்த! இப்போ என்ன?” 
“அப்போ நீங்க என் அண்ணியோட அண்ணன் மட்டும் தான். இப்போ அப்படியில்லையே!”
“ஏன், இப்போ உன்னை கடிச்சு சாப்பிடுற ராட்சஸன் ஆயிட்டேனா? இன்னொரு தரம் கண்ணை மூடின, அப்புறம் லைட் ஆப் பண்ணிடுவேன் பார்த்துக்க!” 
எல்லா நேரமும் கண் திறந்து பார்ப்பதென்பது இயலாத காரியம். சுகமோ, துக்கமோ அனிச்சை செயலாய் கண்கள் தானாக மூடிக் கொள்ளும் என்பது புரியாமல் அவளோடு மல்லுக்கு நின்றான். 
செல்ல மிரட்டல் என்பது புரியாமல் எங்கே விளக்கணைத்துவிடுவானோ என மிரண்டு கண்களை விரித்து வைத்துக் கொண்டிருந்தது அவன் பொம்மை.   தன் தேடலைத் தொடர்ந்தவன் அவள் கண்களில் தெரியும் உணர்வுகள் படித்து வன்மையும், மென்மையுமாய் காமம் செய்தான். 
‘அத்தை சொன்னது போல் இவன் பார்வைக்கு தான் முரடன். மனம் மென்மையிலும் மென்மை தான்.’
கள்ளனின் வசம் மயங்கிய கள்ளி பாராட்டு பத்திரம் வாசித்தாள்.  பூவென கையாண்டதால் பாவை அவள் பயம் விட்டு தன்னவனுடன் தங்கு தடையின்றி மோகக் கடலில் மூழ்கித் தான் போனாள். தன் பொம்மையிடம் இத்தனை இணக்கத்தை எதிர்பாராதவன், பெரும் நிறைவுடன் மார்போடு அணைத்து,
“பிடிச்சிருந்துச்சா ஜில்லு…?” ஆமோதிப்பாய் அசைந்த தலையில் முத்தமிட்டு,
“கஷ்டம் ஏதும் இல்லையே…?” அக்கறையாய் கேட்க, 
‘நோக செய்துவிடக்கூடாதென பார்த்து பார்த்து பொறுமையும் நிதானமுமாய் கையாண்டாயே இதில் எங்கிருந்து கஷ்டம் வரும் மகிழ்வு, மகிழ்வு பெரும் மகிழ்வு தான் ஆள் மயக்கி…’ எண்ணியது அத்தனையையும் சொல்ல முடியாமல் நாணம் தடுக்க அவன் கழுத்தடியில் முத்தமிட்டு தழுவிக் கொண்டாள். 
அந்த ஒற்றைச் செயல் அவள் நலத்தை அம்பலப்படுத்த,      
“தேங்க்ஸ் ஜில்லு, தூங்கு! காலையில குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கனும்!” என தலை கோதி கொடுத்தான்.
‘இவன் சொல்வது நிஜம் தானே. காமம் கூட காதல் மலர உதவக் கூடுமோ?’ யோசனையாய் பார்வையை அவன் முகத்திலேயே பதித்திருக்க,
“என்னையே பார்த்தது போதும். கண்ணை மூடித் தூங்கு ஜில்லு!” விழிகளில் முத்தமிட, தானாக இமைகள் மூடிக்கொண்டன. 
காலையில் கண் விழிக்கும் போது ஆளுக்கொரு பக்கமாய் படுத்திருக்க, கணவனின் கையணைப்பில் இல்லை என்பதில் பெருத்த ஏமாற்றம் தோன்றியது. 
‘காதலாகி கசிந்து உருகினால் தான் எப்பொழுதும் அணைத்தபடியே தூங்குவார்களோ? எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லையோ? அந்த உணர்வு எப்பொழுது தோன்றும்?’ யோசனையுடன் எழுந்தவளுக்கு,
இது தான் வழக்கமான இயல்பு. காதல் கொண்டவர்கள் எனினும் கண் விழிக்கும் பொது தான் அணைத்துக் கொள்வார்களே தவிர எப்பொழுதும் ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள் போல் கட்டிக்கொண்டே தூங்குவதில்லை என்பது தெரியவில்லை. 
மெல்ல எழுந்து பலமுறை உடையையும், தன்னையும் திருத்தி கண்ணாடியில் சரி பார்த்து, வெளியே சென்றாலும், மருமகளின் கூடுதல் சோபையான முகமும், தூக்கத்திற்காக ஏங்கும் விழிகளும் இரவின் நிகழ்வை அம்பலப்படுத்த,
“என் ராசாத்தி!” என்றபடி அவள் கன்னம் வருடி திருஷ்டி கழித்து,
“ரெண்டு பெரும் சந்தோஷமா இருந்தீங்களா?” என கேட்க, குப்பென சிவந்தது அவள் முகம். வெட்கம் பிடுங்கித் தின்றது.
‘ஐயோ, என்ன இப்படி பேசுறாங்க?’ நிமிர்ந்து கூட பார்க்காமல் அதிர்வுடன் தலையை மட்டும் அசைத்தாள். 
அத்தை மகளை கைவிட்டு விட்டோமே என குற்ற உணர்ச்சியில் எங்கே மகன் வாழாமல் போய்விடுவானோ என வருந்திய தாயுள்ளத்தின் தவிப்பு புரியாததால் அவரது கேள்வி அநாகரீகமாய் தோன்றித் தொலைத்தது. அட்டாச்ட் பாத்ரூம் இல்லாதது வேறு எரிச்சலாய் வந்தது.
“பாத்ரூம் எங்க இருக்கு அத்தை?” பதவிசாகவே கேட்டாள். 
“சுந்தரி, அண்ணிக்கு குளிக்கிற ரூம்பை காட்டு! பல்லை விளக்கிட்டு வாத்தா! காபியை குடிச்சுட்டு குளிக்கலாம். வெந்நீர் விளாவி வைக்கிறேன்.” என்றார் வாஞ்சையுடன்.
“இல்ல, நான் காபி குடிச்சதில்லை. மைலோ தான் குடிப்பேன்”
“அது என்னது ஆத்தா? நம்ம ஊர்ல கிடைக்குமா? தம்பி எந்திரிச்சதும் வாங்கியாரச் சொல்றேன். அது வரை பசியோடவா இருப்ப? ஒரு வாய் காபி குடித்தா நல்லா இருக்கும்!” அவரது பாசம் கண்டு மிரண்டு மறுக்க முடியாமல் விழிக்க,
“பூஸ்ட் குடிப்பீங்களா அண்ணி?” என்றதும்,
“ம்…” என தலையசைக்க,
“நம்ம பாப்பாவுக்கு போடுவோமே, அந்த பவுடரை போட்டு கலக்குங்கம்மா… நீங்க வாங்க அண்ணி!” என அன்னைக்கு ஆணையிட்டு, அண்ணியை கிணற்றடி நோக்கி அழைத்துச் சென்றாள். 
பாத்ரூம், டாய்லெட் எல்லாம் இருந்தது. ஆனால் பைப் தான் இல்லை. கிணற்றில் இருந்து நீர் இறைத்து எடுத்துச் செல்லும்படி இருந்தது. தன் வாழ்நாளிலேயே முதல் முறையாக கிணற்றை பார்ப்பவளுக்கு இந்த வசதி குறைவு பெரும் சிக்கலாய் தோன்றியது. 
சுந்தரியே கடகடவென நீர் செந்தி பெரிய வாளிகளில் நிரப்ப, அவள் நீர் இறைப்பதையே அதிசயமான அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். 
‘இவளுக்கு எல்லாமே உலக மகா அதிசயம் தான் போல!’ இதழோர சிரிப்புடன் மனையாளை பருகியபடியே வந்தவன்,
“சுந்தரி, அண்ணிக்கு எப்படி இறைக்கனும்ன்னு கத்துக் கொடு! அவளே இறைச்சுப்பா” என்றதும் கணவனின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவளுக்கு,
‘இதை எப்படி நான் செய்ய முடியும்?’ பயம் வந்து ஒட்டிக் கொண்டது. 
“பரவாயில்லண்ணே, அவுக பாவம். நானே செய்றேன்!”
“எத்தனை நாளைக்கு செய்வ? நீ உன் வீட்டுக்கு போனதும் இவ தானே செய்யனும்? நம்ம வேலையை நாம தான் செஞ்சுக்கணும்… அடுத்தவங்களை எதிர்பார்த்து இருக்கக் கூடாது. வாளியை அவகிட்ட கொடு” என்றதும் அண்ணனை மீற முடியாமல் அண்ணியின் முகம் பார்க்க, 
கையில் இருந்த தன் மாற்றுடை மற்ற உடைமைகள் அனைத்தையும் துவைக்கும் கல்லில் வைத்துவிட்டு வாங்கிக் கொண்டாள். 
வாளியை கிணற்றுக்குள் விட, அது வேகமாய் செல்ல, மிரண்டு போனவள் கையை எடுத்துவிட பெரும் இரைச்சலுடன் தண்ணீருக்குள் விழுந்தது வாளி. போட்டு விட்டோமே என்ற பதற்றத்தில், 
“ஐயோ!” என கூப்பாடு போட, அடுக்களையில் இருந்த குணவதி பதறிக் கொண்டு வர,
“ஈஸ்வரி, ஒன்னும் ஆகல… கயிறோட மறுமுனை கிணத்துக் கட்டையில் கட்டியிருக்கு பாரு. பயப்படாம கயிறைப் பிடிச்சு இழுக்க ஆரம்பி! இதோ இப்படி…” என அவளுக்கு பின்னிருந்து செயல்முறை விளக்கப் பாடம் எடுக்க, அன்னையும், தங்கையும் வீட்டிற்குள் சென்றுவிட்டனர். நான்கு வாளி தண்ணீர் கூட இறைக்க முடியாமல் 
“கை வலிக்குது! உள்ளங்கை எல்லாம் எரியுது!!” என கலங்கிய விழிகளுடன் சிவந்திருந்த கரங்களைக் காட்ட,
“ஆரம்பத்தில் அப்படித் தான் இருக்கும். போகப் போக பழகிடும் ஈஸ்வரி. சுந்தரியைப் பார்த்த தானே! அது போல நீயும் வேகமா இறைக்க ஆரம்பிச்சுடுவ!” கன்னம் தட்டி விலகிச் சென்றான்.
‘நாலு பக்கெட் தானே, இவன் இறைச்சுக் கொடுத்தா என்ன? நானே செய்யனுமா?!’ இரக்கமில்லா கணவன் மீது கோபம் வந்ததே தவிர அவன் செயலின் நியாயம் புரியவில்லை. 
நாளை சொல்லுவான்…

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!