ஊஞ்சல் – 23
தோழனாய் பக்கம் வந்தாய்
காதலனாய் தூரம் செல்கிறாய்
நிற்கிறேன் உன் தீண்டலுக்காய்
தொடாமலே செல்கிறான்
இதுதான் காதல் என்பதா?
இரவின் குளுமையில் மனைவியோடு தனியாக மேற்கொண்ட கார் பயணத்தை வெகுவாக ரசித்தான் ரிஷபன். அருகில் அவனின் மனையாள் அசதியில் உறங்கிக்கொண்டு வர, அதை ரசித்தாலும் அவனது இலகுவான மனநிலை அவளைச் சீண்டிப் பார்க்கும் ஆசை கொள்ளவே, அவளை உலுக்கி எழுப்பி விட்டான்.
“தூங்கினது போதும் சாலா!கொஞ்சநேரம் பேசிட்டே வா”
“போங்க பாவா, நல்லா சுகமா இருக்கு” மறுத்தவள் தன்தலையை அவன் தோள்களுக்கு மாற்றி, கணவனின் கைகளோடு தன்கைகளை பிணைத்துக் கொண்டாள்.
“வீட்டை விட்டு புறப்படும் போது மூஞ்சிய தூக்கி வச்சவளுக்கு, இப்போ அசதி வந்துருச்சா?” கிண்டலில் இறங்க.
“ரொம்பநாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன். கொஞ்சநேரம் சும்மா இருங்க” சுகமாய் அலுத்துக் கொண்டாள் மனைவி.
“இத்தன நாள் உன்னோட நிம்மதி எங்கேயாவது வெளிநாட்டுக்கு போயிருந்ததா சாலா?”
“நீங்க ஒருத்தர் போதாதா? அதுக்கு பாஸ்போர்ட் விசா குடுத்து அனுப்ப?”சலித்துக் கொண்டு மீண்டும் கண்களை மூடிக்கொள்ள,
“நீ இப்டி தூங்கிட்டு வந்தா, எனக்கும் தூக்கம் வரும். டிரைவர் பக்கத்துல உக்காந்தா பேசிக்கிட்டே வரணும்” விடாமல் அவளை சீண்ட, மனைவியும் உறக்கத்தை தொலைத்தாள்.
“டிரைவர கூட்டிப்போம்னு நான் சொல்றத கேக்காம, இப்போ என்னை வம்புக்கு இழுக்கீறீங்க பாவா! வரவர ரொம்ப வீம்பு பண்ண ஆரம்பிச்சுட்டீங்க” என்று நொடித்துக் கொள்ள,
“அப்படி என்ன செஞ்சேனாம்? எஜமானியம்மா பழி போடுற அளவுக்கு”
“மாப்பிள்ளைகிட்ட விவரத்தை சொல்லிட்டேன்னு, என்கிட்ட ஏன் சொல்லல பாவா?”வெகுவாய் குறைபட்டுக் கொண்டாள் அசலாட்சி.
“அப்படி சொல்லி இருந்தா மட்டும் நீ சமாதானம் ஆகியிருப்பியா? அதுவுமில்லாம உனக்கு, என்மேல இன்னமும் நம்பிக்கை வரலையோனு மனசுல ஒரு ஆதங்கம் வந்துடுச்சு. அதான் சொல்லத் தோணல” தன் மனதை வெளிபடுத்தினான்.
“இப்டி பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க பாவா… ஒரு அம்மாவா அவளோட நல்லதை மட்டுமே பாக்குறப்போ எனக்கு எல்லாமே மறந்து போய்டுது. உங்ககிட்ட பேசிட்டு நானும் ரொம்ப வருத்தப் பட்டுட்டேன். ஆனாலும் என் மனசுல உள்ளத உங்ககிட்ட பகிர்ந்துக்காம, வேற யார்கிட்ட நான் சொல்ல முடியும்?” தன் நிதர்சனத்தை உரைக்க,
“புரியுது சாலா உன்னை நான் தப்பா நினைக்கல… ஆனா ஒரு மனைவியா நீ என்னை புரிஞ்சு வச்சது அவ்வளவு தானாங்கிற நினைப்புலதான் உன்கிட்ட கோபப்பட்டுகிட்டு இருந்தேன். மாப்பிள்ளைய நேர்ல பார்த்து பேசுற வரை உன் மனசும் அடங்காது. இன்னைக்கு இல்லைன்னா வேற ஒரு நாள் உன்னை அவர்கூட பேச சொல்லிருப்பேன்” என்றவன் அமைதியானான்.
“போகட்டும் விடுங்க பாவா! மாப்பிள்ளை ரொம்ப நல்ல மாதிரியா இருக்கார். பொம்மி மனசு நிறைஞ்ச வாழ்க்கைய வாழப் போறாங்கிற நினைப்பே என்னை வானத்துல பறக்க வைக்குது” பொங்கிய சந்தோசத்தில் உடல் சிலிர்த்துச் சொல்ல,
“நீ பறந்தாலும் உன்னை விடமாட்டான், உன்னோட அப்பாவி பாவா” என்றபடியே தனது ஒருகையால் மனைவியை அணைத்துக் கொள்ள,
“ஊர் பெரியமனுசன்னு பெத்த பேரு! செய்யுறதெல்லாம் புது மாப்பிள்ளை காரியம்தான்” என்றவள் தள்ளிபோக முயற்சி செய்ய, அவளை விடாமல் இறுக்கிக் கொண்டான்.
“இப்படி விலகிப்போன கார் ஓட்டமாட்டேன். அப்படி என்ன வயசாச்சுனு என்னை பெரியவங்க லிஸ்ட்ல ஒதுக்கி வைக்குற? உனக்கு தெரியாதா நான் எப்படினு?” அவளைப் பார்த்து கண்சிமிட்டியவாறு கேட்க,
“பெரியவரே! உங்க பையன் அஞ்சு வருசத்துக்கு பிள்ளை பெத்துக்கிறத தள்ளிப் போடலன்னா, இந்நேரம் உங்க பேரன் என் மடியில இருப்பான். இத மனசுல நல்லா பதிய வச்சுக்கோங்க” சிரித்தபடியே கணவனின் வயதை சுட்டிக்காட்ட,
“கொள்ளுப்பேரன் வந்தாலும் உன் பக்கத்துல இருக்கும்போது நான் புதுமாப்பிள்ளைதான்” இருவரின் இலகுவான மனநிலை வெகுநாட்களுக்கு பிறகு அவர்களிடையே வந்துவிட, தங்கள் தனிமைப் பொழுதை ரசித்த வண்ணமே கிராமத்திற்கு வந்தடைந்தனர்.
விஸ்வாவிடம் பொம்மியின் மீதான நம்பிக்கையையும் அன்பையும் நேரில் கண்டவர்கள், அதே மகிழ்ச்சியில் வீட்டிற்குவந்துமகளைப் பார்க்க, அவளோ முற்றிலும் உடைந்து போனதொரு தோற்றத்தில் இருந்தாள். அவளது உள்ளக்காய்ச்சல் உடலை வதைத்து தோற்றத்தையே மாற்றியிருந்தது.
“என்னடி ஆச்சு? ஒருநாள் சென்னை போயிட்டு வர்றதுக்குள்ள சீக்கு விழுந்த கோழியா கிடக்க?” என்று அசலா பதற,
“லைட் ஃபீவர் தான்ம்மா வேற ஒண்ணுமில்ல” பொம்மி மழுப்பி விட்டாள்.
சின்னவளிடம் என்னவாயிற்று என்று அசலா பார்வையால் கேட்க, அவளும் பதிலுக்கு,
“மூணு நாளா அக்கா இப்படிதான் இருக்கா. நாணா,இன்னும் பேசலன்னு ரொம்ப பீல் பண்றா போல. நைட் பீவர்ல உளறிட்டு இருந்தா” என்று அவளது பலவீனத்தைப் போட்டு உடைத்தாள்.
“நாளைக்கு கல்யாணம் முடிச்சு போற பொண்ணு இப்படிதான் கண்டதையும் நினைச்சு கவலப்படுவியா? அவர் உன்கூட பேசலன்னு குறைபடுறவளுக்கு, தானா போய் பேசத் தெரியலையாடி? எங்கே இருந்துடி வந்தது இந்த வீராப்பு?” கேட்டுக்கொண்டே மகளைக் கடிந்து கொள்ளவும் தவறவில்லை அசலாட்சி.
இந்த சமயத்தில் கண்ணே மணியே என்று அவளோடு ஒத்து ஊதினால் இன்னமும் தன்னுள்ளே முடங்கிக் கொள்வாள் என்று மகளின் போக்கினை அறிந்தவள், மேலும் பல கண்டிப்பு பேச்சுக்களை பேசி அவளை நடமாட வைத்தாள். மகளும் பெற்றோர் சென்னை சென்றுவந்ததை பற்றி மூச்சு விடாமல் இருக்கவும் தாயின் மனம் தளர்ந்து கொண்டது.
அசலாவிற்கு என்னசெய்து மகளின் நிலையை சரிசெய்வது என்றே தெரியவில்லை. திருமணத்திற்கு நிற்கும் பெண்ணை கலகலப்பாக வைத்திருக்கவென்று என்னென்னவோ யோசித்துக் கொண்டே இருக்கிறாள், தீர்வு என்னவோ அவளுக்கு கிடைத்த பாடில்லை.
அன்று இரவு தோட்டத்தில் தனியாக நடைபயின்று கொண்டிருந்த பொம்மியை ரிஷபன் மேலிருந்தபடியே பார்த்துக்கொண்டிருக்க. அவனருகே வந்த அசலாட்சி,
“உங்க பொண்ணுக்கு இத்தன வீம்பு ஆகாது பாவா! உங்ககிட்டயே மொகத்தை தூக்கிவைக்கிறா… மூணு நாளா உங்களை பாக்காம பேசாம இருக்கா. ரொம்ப செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க” சடைத்துக்கொள்ள,
“அவளகுத்தம் சொல்லன்னா உனக்குபொழுது போகாதா சாலா? பொண்ணுக்கு என்ன தேவையா இருக்கும்னு தெரிஞ்சுக்க முடியாத அம்மாவா இருக்கே” என்றே முறைத்தவன் கீழே மகளை தேடிச் சென்றுவிட்டான்.
ஏற்கனவே மகளை கடிந்து கொண்டதை நினைத்து மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தவனுக்கு மனைவியின் பேச்சு கடுப்பைக் கிளப்ப, அவளை கண்டித்து விட்டு கீழே சென்றான்.
“இந்த நேரத்துல தனியா இங்கே என்ன பண்ற?”பொம்மியை பார்த்துகேட்டுவைக்க, மகளும் அதிர்ந்த பார்வையில்,
“ஒன்னுமில்ல நாணா… தூக்கம் வரல்லன்னு வந்தேன்” என வார்த்தையை முழுங்கினாள்.
“அஜூகுட்டி இல்லாம வரமாட்டியே? இப்போ என்ன தனியா?”
“அவ தூங்கிட்டா”
“என் தோள்ல சவாரி செஞ்ச பங்காரம் எங்கே போனான்னு தெரியலே? அவ இருந்தா இப்படி பேசமாட்டா… எதுக்கு என்கூட பேசாம இருக்கீங்கன்னு வந்துசண்டை போட்ருப்பா” முறைப்பில் ஆரம்பித்து சிரித்துக்கொண்டே முடிக்க, மகளின் முகத்தில் அத்தனை பாவங்களும் போட்டிபோட்டு வந்து செல்ல,
“என்மேல கோபம் இல்லையா சீனிப்பா” கரகரத்தகுரலில் கேட்டவள், தந்தையின் தோளில் தஞ்சம் கொண்டாள்.
“எனக்கு உன்மேல கோபம் இல்லரா… மனவருத்தம்தான். எனக்காக பார்த்து உன்ஆசைகள மூடி வைக்கிறீயேனு ரொம்பவே கலங்கிப் போய்ட்டேன். நாங்க இருக்குறதே உங்க சந்தோசத்துக்கு தான். அதுவே கேள்விக்குறி ஆனதுல வந்த சங்கடம். நாணா,உனக்குரொம்ப கஷ்டத்த குடுத்திட்டேனா பங்காரம்?” என அன்பாகக் கேட்க,
“இல்ல சீனிப்பா… எனக்கு கொஞ்சம் குழப்பம் இருந்தது. எங்கேயும் உங்களுக்கான மரியாதை குறையக் கூடாதுன்னு நினைச்சு,என்னமோ பேசிட்டேன். இனி அப்படி இருக்கமாட்டேன்”
“விஸ்வாக்கு என்ன பதில் சொல்லபோற?”
“தெரியல சீனிப்பா? இவன எப்படி புரிஞ்சுக்கணும்னு எனக்கு இன்னும் விளங்கல”
“சீக்கிரமா நல்லபதில சொல்லு. அவன ரொம்ப வெயிட் பண்ணவைக்காதே! நேத்துதான் நீ இங்கே சைக்கிள் கத்துக்க அடம்பிடிச்சமாதிரி இருக்கு. இன்னைக்கு பார்த்தா கல்யாணப் பொண்ணா நிக்கிற… ஏமிரா இவ்வளவு சீக்கிரமா வளர்றீங்க? நாளைக்கு அஜுவும் இப்படி வளர்ந்து நிப்பாளே? ”சந்தோசமும் வருத்தமும் கலந்த குரலில்மகளிடம்தனதுமிகமுக்கியசந்தேகத்தைகேட்டான்ரிஷபன்.
“ஈஸி சீனிப்பா! உங்க கூடவே எங்கள வச்சுக்கோங்க… கல்யாணம் பண்ணாதீங்க. நாங்களும் ஜாலியா இருப்போம்” குறும்பு குரலில் தன்னை மீட்டுக் கொண்டிருந்தாள் பொம்மி.
மகளின் பேச்சே அவள் இயல்புநிலைக்கு வந்ததை சொல்லிவிட அதில் ஆசுவாசமடைந்தவன்,
“இத உங்கம்மா கேக்கணும். உன்னோட என்னையும் சேர்த்தே தாளிப்பா” என்றவாறே வீட்டிற்குள் செல்ல, அசலாட்சி கணவனின் பேச்சில் முறைத்துக் கொண்டு நின்றாள்.
“ஆமா… இவர தாளிச்சுதான் என்வீடு மணக்குது. என்னை தவிர்த்துபேச உங்களுக்கு வேற விசயமே கிடைக்காதா?”அசலா பொய்க்கோபம் கொள்ள,
“அச்சோ அரெஸ்ட் பண்ணிட்டாங்க அச்சும்மா, என்னை காப்பாத்துங்க சீனிப்பா… சாலா மந்திரம் சொல்லி கட்டிப்போடுங்க, மீ எஸ்கேப்” சொல்லிவிட்டு தன் அறைக்குள் ஓடிச்செல்ல, மகளை இப்படி பார்க்கத்தானே தான் ஆசைகொண்டது என்று அசலாட்சியின் மனமும் உவகை கொண்டது.
மஹதியின் தந்தை ராகவனின் பல்நோக்கு மருத்துவமனையின் ஒருகிளையை கிராமத்தில் திறக்கும் ஏற்பாடுகளை கவனிக்கவென பத்ரி, மஹதியோடு வந்து சேர,பொம்மியின் திருமணத்திற்கான அத்தனை வேலைகளிலும் இருவரும் பொறுப்பாய் பங்கேற்றனர்.
இடைப்பட்ட நேரத்தில் சிறியவர்களின் கொண்டாட்டம் ஆரம்பமாகிட,ரெட்டைவால் குருவிகளாக இப்பொழுது மூன்றுபேர் சேர்ந்துகொள்ள அவர்களின் கொட்டம் வீட்டை இரண்டாக்கியது.
அதில் பெரிதும் மாட்டிகொண்டவன் பத்ரி மட்டுமே… மனைவியும் தன் தங்கைகளோடு கூட்டுசேர ஏகத்திற்கும் புலம்பித் தள்ளினான்.
“அவங்களோட சேர்ந்து என்னை வாரிவிடதான்,அத்தன அவசரப்பட்டு இங்கே என்னை கூட்டிட்டு வந்தியா சில்க்கி?” தங்கள் அறையில் மஹதியிடம் சண்டை பிடித்தான்.
“டாக்டரே! இது உங்க வீடு. என்னமோ உங்கள மாமியார் வீட்டுக்கு கடத்திட்டு வந்தமாதிரி கோபப்படுறீங்க” நக்கலாக மனைவி சொல்ல,
“என் நேரம்! எனக்கு வந்து வாய்ச்சதும் வானரமா இருக்கே… அதுக்கு வாக்க பட்டாவாலை சுருட்டி வச்சுதான் விளையாட்டு காட்டணும். அதுசெய்றேன்” என்றவன் மனைவியை தனக்குள் இழுத்துக் கொள்ள.
“அய்யோடா! இருக்குறத சமாளிக்கவே உங்களுக்கு தெம்பு இல்ல… இதுல கொரங்கோட குடும்பம் நடத்தி, அந்த குட்டி வந்தா நீங்கதாங்க மாட்டீங்க பத்ரி. உங்க நல்லதுக்கு சொல்றேன் கீப் டிஸ்டன்ஸ்” பதிலுக்கு வம்பிலுத்து விலக முயற்சித்தாள்.
“என்னோட கீப்,வொய்ப் எல்லாமே நீதானே சில்க்கி. உன்னைத் தள்ளி வச்சா, அந்த குரங்கு குட்டிக்குகூட வழியில்லாம போயிரும்” என்றே தன் விளையாட்டைஆரம்பித்தான்.
“நெஜமாவே உங்க அஞ்சு வருஷம் தவம் மாறிடுச்சா? நம்ம குட்டிய ரிசீவ் பண்ண ரெடியா பாஸ்?” மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க,
“மூச்! இப்போதான் டிஎம்ஈ முடிச்சிருக்கேன். உனக்கும் எம்எஸ் முடிஞ்சுருக்கு. இன்னும் ஒரு வருஷம் பிராக்டீஸ்பண்ணி முடிக்கிற வரை ஜூனியருக்கு தடாதான்” சொன்னவன் பேச்சில் கடுப்பில் முகம் சுருக்கினாள்.
“இன்னும் எவ்வளவுதான் நீங்க படிச்சு,என்னையும் படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணுவீங்க? பிளீஸ் சின்னு! நான் இங்கேயே அத்தம்மாகூட இருந்துறேன். நீங்கமட்டும் ஊருக்கு போங்க” கெஞ்சியும் கொஞ்சியும் அவனிடம் ஒட்டிக்கொள்ள,
“எதுக்கு? இன்னும் கொஞ்சம் வால்நீளமா வளர்த்து, என்னை அதாலயே அடிக்கவா? உன்னை பிரிஞ்சு எனக்கு மூச்சு முட்டினது போதும் சில்க்கி. இதுக்குமேல பிரிவுவேணாம் டார்லிங்”
“படிக்க அனுப்பினது நீங்கதானே? கேப் விடுவோம்ன்னு சொன்னதும் தாங்களேதான் பாஸ்”
“விட்டா நீ பேசிட்டே இருப்ப… என்னால முடியாது” என்றவன் அவளை ஆக்கிரமித்துக் கொண்டான்.
அன்றாட வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும் ஏதோ ஒரு இறுக்கத்தில் தன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் பொம்மி. அவளை நன்கு அறிந்தவன் என்ற முறையில் பத்ரி அவளிடம் பேச்சு வளர்க்க, அவளும் தனது அலைபேசி எண்ணை விஸ்வா தடை செய்தது வரை சொல்லி முடித்தாள்.
“டாக்டரே! உங்க சிஸ், உங்களுக்கும் மேல… பாவம் விஸ்வா. நம்ம காவியத்த தூக்கி சாப்பிடுற மாதிரி இருக்கே இவங்க காவியம்” மஹதி தன்போக்கில் கிண்டலாகப் பேசிட, அதோடு பத்ரியின் அறிவுரை வேறு இடைச்செருகலாக பொம்மியை வாட்டி வதைத்தது.
“ஏன் பிடிக்கலன்னு சொல்ற பொம்மி?நீ அவர லவ் பண்றன்னு எனக்குத் தெரியும். நீ வெளியாட்கள் யார்கிட்டயும் இவ்வளவு உரிமையா பேசினதில்ல. ஐயாம் ஷ்யூர்… யு லவ் ஹிம், அப்புறம் எதுக்கு இந்த பிடிவாதம்?” என்று கேள்வி எழுப்ப, அவள் மனதை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியவில்லை.
“அவனோட பேச்சு, பிடிவாதம் இதெல்லாம்தான் உன்னை தடுக்குதா பொம்மி? இப்போவே இவ்வளவு டார்ச்சர் பண்றவன் ஆஃப்டர் மேரேஜ் எப்படி இருப்பான்னு பயப்படுறியா? சரியான முரட்டு போலீஸ்காரன் போல” மஹதி சற்றே நக்கலடித்துப் பேச,
“எனக்கு பிடிக்குதோ இல்லையோ, அனாவசியமா அவனை கீழே இறக்கி பேச வேணாம்” சட்டென கோபம் கொண்டாள் பொம்மி.
“ஆரம்பிச்சுட்டா… இப்படிதான் பட்டு, எது சொன்னாலும் எரிஞ்சு விழுறா பொம்மிக்கா” தன்பங்காய் பேசினாள் அஜூகுட்டி.
“அடேங்கப்பா! இத்தனை பிடித்தம் இருக்கு. திரும்ப என்ன பத்ரி? தைரியமா கல்யாணத்தை முடிக்கலாம்” என்று அவள் வாயாலேயே, அவளது நிலையை வெளியே கொண்டுவந்து மஹதி பேசிட,‘எனக்கு நானே ஆப்பு வச்சுக்கிட்டடேனா?” என்றே நொந்து கொண்டாள் பொம்மி.
விஸ்வேந்தரை மிகமிகப் பிடித்திருந்தாலும், அவன் மட்டுமே மனம் முழுவதும் இருந்தாலும் முழுமனதாக அவனை ஏற்றுக்கொண்டு தேடிச் செல்ல முடியவில்லை.
என்னதான் அவன் முன்பு வீராப்பாக இருந்தாலும் அவன் காட்டும் அன்பும் பாசமும் திகைக்க வைக்கிறது. அவளை தடுமாற செய்கிறது என்பது உண்மையே!
‘அப்படியானால் நீ அவனை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறியா? நேரில் பார்க்கும்போது மட்டும் காளிக்கு தங்கையாக அவதாரம் எடுத்து அவனை சீண்டச் செய்கிறாயா?’ என்று மனம் எதை எதையோ நினைத்து குழம்பத்தான் செய்கிறது. அதற்கு முடிவு என்னமோ அவளுக்கு தெரியவில்லை.
திருமண வேலைகள் ஜரூராய் நடக்க, கல்யாண பட்டு எடுக்கவென காஞ்சிபுரம் செல்லலாம் என்று அனைவரும் ஒரே மனதாய் முடிவு செய்து தயாராகிட,
“மாப்பிள்ளைக்கும் சென்னையில டிரஸ் எடுத்திடலாம். நாங்க வர்றோம்னு சொல்லி வைக்குறேன்” என்று பத்ரி முடிவு செய்ய,இரண்டு சம்மந்த குடும்பங்களும் கிளம்பினர்.
காஞ்சிபுரத்திற்கு தன்னால் வர இயலாது என்று கூறி,விஸ்வா சென்னையிலேயே தங்கிக் கொண்டான். வேலையின் பொருட்டு அவன் செல்வதை தவிர்த்திருக்க, பொம்மிக்கோ,தன் முகம் பார்ப்பதை கூட விரும்பாமல்தான் இப்படி சாக்குபோக்கு சொல்கிறான் என்று மனதோடு அவனை கரித்துக் கொண்டு இருந்தாள்.
ஒரு வழியாக சென்னையில் மாப்பிள்ளை உடை எடுக்கும் போது அவன் வந்து நிற்க, இருவரும் உஷ்ணப் பார்வையில் பேசிக்கொண்டனர்.
“உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா?தனியா போய் சமாதானமா பேசிட்டு வாங்க, போங்க அந்த பக்கம்” இவர்களாக பேசிக்கொள்ள மாட்டார்கள் என்று தானாகவே அவர்களை அனுப்பினான் பத்ரி.
“கல்யாண மாப்பிள்ளையா லட்சணமா சிரிக்காம, எதுக்கு இத்தன வீராப்பு போலீஸ்கார்?” மனம் தாளாமல் முயன்று,தன் இயல்போடுபொம்மி விஸ்வாவிடம் சமாதானமாக பேசிட,
“இந்த திமிர் பேச்சு மட்டும் உனக்கு குறையவே குறையாதடி?” தன்வீம்பிற்கு கொடி பிடித்தான்.
“அப்ப உனக்கு இருக்குறதுக்கு பேர் என்ன விஸ்வா?” அவனுக்கு குறையாமல் இவளும் பேச,
“எனக்கா? திமிரா? உன் அளவுக்கு இல்ல” கோபபாவனையில் விஸ்வா சுருதி சேர்த்தான்.
“நீயே எல்லாத்தையும் செஞ்சுட்டு என்மேல பழி போட்ற விஸ்வா”
“ஷ்… எனக்கு சண்டை போட தெம்பில்ல, இதுக்கு நீ சும்மாவே இருக்கலாம் பொம்மி”
“ஓ… நான்தான் பேசாம இருந்து பிடிவாதம் பண்றேனா? சார் ரொம்ப நல்லவரோ?” அவன் பேசாமல் தன்னை தவிர்த்ததை சுட்டிக் காட்ட,
“பின்ன? வேற என்ன பண்ண சொல்ற?” அலுத்துக் கொண்டான் விஸ்வா.
“என்ன பண்ணனும் விஸ்வா?”
“என்னை லவ் பண்ணு. அது மட்டும் போதும்” என்றவன் உத்தரவு போட,
“ஹ்ம்ம்… பண்ணிடலாமே! அதுக்கு பதிலா நீயும் ஒண்ணு பண்ணனுமே?” இவள் குறும்பாக பார்க்க,
“என்ன பண்ணனும் ஸ்பைசி?” இவன் குழைவாக கேட்க,
“இப்போன்னு இல்ல அடுத்து வர்ற ஜென்மங்கள் கூட நீ என்னை மட்டுமே லவ் பண்ணனும் விஸ்வா”
“திரும்பவும் இந்த ராட்சஸியா? போடி இதெல்லாம் ரொம்ப பேராசை”
“தப்பிக்க முடியாது ஆபிசர்,என்னை தவிர யாரும் உன் மூஞ்சிய ஏறெடுத்தும் பாக்க மாட்டாங்க. எப்பவும் நீதான், என் பின்னால சுத்தபோற! நான், உன்னை தொரத்தி அடிக்கத்தான் போறேன்” என்று விடாமல் இவளும் பேசிவைக்க, என்ன செய்தால் இவளை அடக்கலாம் என்ற நினைவில் இருந்தவன் யோசிக்காமல் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலகினான்.
நொடிநேர அதிர்ச்சியில் தன்னை மீட்டுக் கொண்டவள்,
“தொங்கனா!(திருடா) இதுக்குதான் என்னை ஃபுட்கோர்ட்க்கு தள்ளிட்டு வந்தியா? பப்ளிக் பிளேஸ்ல இப்படி செஞ்சா உங்க லா அண்ட் ஆர்டர்ல என்ன ஆக்ஷன் எடுப்பாங்க போலீஸ்கார்?” உஷ்ணத்துடன் கேட்டு வைக்க,
“முத்தம் குடுத்தா அனுபவிக்க கத்துக்கோடி. லவ் பண்ண சொல்றவ இதுக்கெல்லாம் ரூல்ஸ் பேசக்கூடாது” தனது சீண்டலை தொடங்கி விட்டான்.
“உனக்கெல்லாம் வெள்ளைக்கொடி பறக்க விட நினைச்சேன் பாரு, என்னை சொல்லணும்”அவனை கடித்துக் குதறியவள், கோபத்துடன் விலகிச் சென்றாள்.
“போடி, உனக்கு எல்லாம் சாய்ஸ் குடுக்காம அடிக்கணும்” பதிலுக்கு இவனும் எகிறினான்.
நாட்கள் அதன்போக்கில் ஓட, இருவரும் முறைப்புகளோடு தங்களது திருமண நாளை எதிர்கொண்டனர்.
***************************************
சோற்றை மறுதலித்து விண்மீன் விழுங்க சொல்லும்
அன்னம் தண்ணீர் செல்லாது
நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும்
வேண்டாம் என்றால் கேட்காது
ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே
பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே
இந்த நோயின்றி போனாலே
வாழ்க்கையே சௌக்கியம் ஆகாதே…. பாடல்வரிகள்.