Penniyam pesathadi 4
Penniyam pesathadi 4
பெண்ணியம் பேசாதடி -4
கரை மீறும் வெள்ளமாக என் காதல்!
அணை கொண்டு தடுப்பாக உன் அன்பு!
நான் மீற, நீ தடுக்க என்னடி இது?
மனம் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கத் தனது தந்தையை இறுக்க அனைத்துக் கொண்டான் வளவன் “என்ன கண்ணா ரொம்பச் சந்தோசமா இருக்க கண்டு புடுச்சிட்டியா அவள” ஆர்வம் மின்ன கேட்கும் தந்தையைப் பார்த்து தலை அசைத்தான் வளவன்.
நிலை கொள்ளவில்லை வாமணனுக்கு “என்ன சொல்லுற கண்ணா எங்க இருக்கா,எப்புடி இருக்கா” என்று படப் படத்தவரை.
“அப்பா நான் என்ன சொன்னேன். உங்க பிறந்த நாள் அப்போ உங்க கண்ணம்மா தான் உங்களுக்குப் பரிசு சரியா.அதுவரைக்கும் நீங்க பொறுமையா இருக்கணும், எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகம் இருக்கு.உறுதி ஆகட்டும் உங்க முன்னாடி உங்க கண்ணம்மா ஓகே.
முகத்தைத் தொங்க போட்டவராகச் ‘சரிடா’ என்றவரை பார்த்துச் சிரிப்புதான் வந்தது. “ஓகே ப்பா நீங்க படுங்க,நானும் ரூமுக்கு போறேன்” என்றவனை.
“சாப்டுட்டு போ கண்ணா”.
“தாத்தா வீட்டுல சாப்பிட்டேன் ப்பா…”
சரி என்றவர் தோட்டத்துக்குச் சென்றார் அவர் மனம் அத்தனை நிம்மதியாக இருந்தது.இப்போது அவள் பேசுவாள்.இரவின் நிலவு குளுமையில்,இன்றைய மனநிலையில், பேச்சில் எல்லைமீற ஆசை வந்து தொலைத்தது இந்தப் பொல்லாத எழுத்தாளனுக்கு.
இந்த எழுத்தாளனை காதலித்தால் இது ஒரு தொல்லை. ரசனை கொண்டு துகில் உரிக்கும் துச்சாதனன் போன்று,கண்ணால் கவரும் கந்தரவன் போன்று,மனதால் மயக்கும் மாயவனைப் போன்று. பேசியே,கண்கள் கொண்டு கவர்ந்தே,எண்ணம் கொண்டு இறுக்கி அணைத்தே அனைத்தும் முடித்துவிடுவார்.அதனால் தான் பல ரசிகர்களால் ரசனை மாயையில் இருந்து மீண்டு வர முடியவில்லை.
மீளா சூழல் அவரது எழுத்தும் பேச்சும்,கவியும் கண்ணும்,இயற்கையும் ரசனையும்.அப்பப்பா வேண்டாம்டா உங்கள் சங்காத்தம் நீ எட்டியே இரு என்று நிற்கிறாள் பேரிளம் பெண்.பெண் சற்று அடக்கமுடையவளோ! இருக்கலாம், இருக்கலாம் யார் கண்டது.
அவரது ரசனையைத் தடை செய்தாள் அவர் ரசிகை, போன் ஒலியெழுப்ப இன்று அவ்வொலி கூட மெல்லிய கோவில் மணியின் ஓசையாய் கேட்டது வாமணனுக்கு.போனை காதில் வைத்தவர் அவளைப் பேச விடாது,
“சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக்கண் எம் காதலி குணனே”.
“என்ன எழுத்தாளரே! ரொம்பக் குஷியா இருக்கீங்க போல அகநானூறு அசத்தலா வருது”.
“காதல் கிறுக்கு கூடி போச்சுடி”.
“அதானே பார்த்தேன் நேத்து நீங்க அவுளோ மென்மையா பேசவும்.கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்.எழுத்தாளரே பைத்தியம் தெளிய வைத்தியம் என்ன தெரியுமா சன்யாசமாம்”.
“அடிப்போடி கல்யாணம் பண்ணனும்,காதல் செய்யணும்,காமம் கூடனும் அதன் வழி கொண்டு மழலை அள்ளணும்.
‘அதுசரி’ எழுத்தாளரே! நீங்க இப்போ யூத் இல்ல,யூத்தொட டாடி தப்புத் தப்பா பேச கூடாது.கல்யாணம் பண்ணுங்க உங்க மகனுக்கு,காதல் பண்ணுங்க உங்க குடும்பத்தை,காமத்தோட கலந்து போங்க உங்க எழுத்தோட,குழந்தை செல்வம் எடுங்க ,ஆளுங்க உங்க பேரனை.என்ன நான் சொல்லுறது”.
“அதுவும் உண்டு,எதுவும் உண்டு.இப்புடியெல்லலாம் பேசி என்ன கோபமாக்கி வைக்கிறேன் வாமணன் அப்புடின்னு ஓடிடுவ கேடி”
பேரிளம் பெண் சிரித்து விட்டாள் “என்ன எழுத்தாளரே இப்புடி சொல்லிட்டீங்க”.
“வேற எப்புடி சொல்ல, சரி நான் ரொம்பச் சந்தோசமா இருக்கேன் ஏன் எதுக்குன்னு கேட்காம,இதழ் தூது விடு”.
“என்னது….”
“ப்ச்… முத்தம் தாடி”
“நல்லா இல்ல வாமணன்”.
“வாங்குற நான் சொல்லணும்,அதெல்லாம் நல்லா இருக்கும் கொடுடி”.
எதிர்முனையில் அணைப்புத் துண்டிக்கப் பட்டுவிட்டது,இதை எதிர்பார்த்த வாமணன் உரக்க சிரித்தார்.
———————————————————————————————-
இன்று நேரத்திலே அலுவலகம் சென்று விட்டான் வளவன்.பத்து நாட்கள் வேலை செய்யாமல் தந்தையின் காரியமே முக்கியம் என்று சுற்றி ஆகிவிட்டது.இனியும் இதுபோல் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவன் கிளம்பிவிட்டான்.
தனக்கு முன் அலுவலகம் வந்து பொறுப்பாக வேலை செய்யும் வளவனை ஆச்சிரியமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் ரமேஷ். “என்னடா அப்புடி பாக்குற வந்து எனக்குக் கொஞ்சம் உதவி செய்,உனக்கு பதில உன் டிபார்ட்மென்ட் வேலையை அந்தக் குமார செய்யச் சொல்லு”.
நண்பனின் சொல்லுக்கு அடி பணிந்து அவனும் வேலையில் மூழ்கி போனான்.காலத்துக்கு மருந்து மாற்றம் என்றால்,கவலைக்கு மருந்து வேலை.வேர்வை துளிர்க்க,மூளை சூடாக உலகம் மறந்து,தன்னை மறந்து ஈடுபடும் பொது,சில துக்கங்கள்,கவலைகளை மாயமாய் மறைந்து போகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
தனது தாயின் இழப்பை மறக்க முதல் முதலாக இருபத்து ஓர் வயதின் பிறப்பில் அடி எடுத்து வைத்தான் வளவன்.அதில் ஓய்வு என்று பார்த்தால் இந்த பத்து நாட்கள் தான், அதுவும் தந்தைக்காக.நண்பர்கள் இருவரும் உணவு மறந்து மாலை நெருங்கும் வேளையில் தங்கள் பணியின் ஒரு பகுதியை முடித்தனர்.இடையில் டீ குடித்து வயிற்றைச் சமாதானம் செய்தனர்.
“வளவன் இதுக்குத் தாண்ட படுச்சு,படுச்சு சொன்னேன்,பாரு இப்போ வேல ரொம்பச் சேர்ந்துடுச்சு,படுத்திறீங்க டா” புலம்பிய ரமேஷை பார்த்து,
“கோச்சுக்காதடா” அவனது தாடையைப் பிடித்துக் கொஞ்ச,கோபம் கொஞ்சம் மட்டுப் பட்டது நண்பனுக்கு.இருவரும் பேசி கொண்டே வெளியில் வந்தனர்.ரமேஷின் சோர்வு மேலும் அவனைப் பேசவிடாது செய்ய.
“வளவா உங்கிட்ட பேசணும் சண்டே எங்க வீட்டுக்கு வந்துருடா”.
நண்பன் எதைப் பற்றிப் பேச போகிறான் என்பதை அறிந்த வளவனும் கண்டிப்பா “வந்துறேண்டா, நானும் உங்கிட்ட பேசணும்” என்றவன் அவனது தோள் தட்டி விடை கொடுத்தான்.
—————————————————————————————————-
பல் முழுவதும் வாயாக வளம் வரும் வளவனை ஓர கண்ணால் பார்த்தவரே வேலைகளை செய்து கொண்டு இருந்தாள் காஞ்சனை ‘என்ன ரொம்பப் பல்ல காட்டுறான் சரியில்லையே’எண்ணியவளாக அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
இன்று ‘சண்டே ஹாப்பி டே’ வேலை இல்லை. அதனால் தனது தாத்தா வீட்டில் ஓய்வு.அதுவும் இல்லாமல் மலர் கொடியிடம் பேசி பழக வேண்டும் அதற்கு இங்கு இருந்தால் தான் முடியும்.அவனிடம் நேரம் குறைவு இன்றோடு பதினோரு நாட்கள் வேறு பறந்து விட்டது.
சிரித்தவரே திரும்பியவன் பார்த்தது கஞ்சனையைத் தான்.அவளை பார்த்ததும் சினம் பெறுக “நேத்து அந்தக் குட்டி பேசு கூடச் சேர்ந்து என்ன அலுச்சாட்டியம் பண்ண.உன்னால உட்கார முடியல,உனக்கு என் மேல பாசமே இல்லை பேசாத போ ” நேற்று அவன் மீது பழி தீர்க்க.அவன் அமரும் இடத்தில் முள் கரண்டி வைத்துவிட்டார்கள் அவனது அழகு ராட்சசிகள்.
“டேய்! என்ன ரொம்பக் கத்துற நான் தான் பாவம் பார்த்து, ஐயோ நம்ப அக்கா புள்ளையாச்சே,என் செல்லத்துக்குக் குத்தணும் ஆனா காயம் ஆகா கூடாதுனு,யோசுச்சு யோசுச்சுச் சோபா கிழிஞ்சாலும் பரவாயில்லன்னு கரண்டியை குத்தி சாச்சு வச்சேன் தெரியுமா”உன் மீது எத்தனை பாசம் பாரடா மகனே என்று நிரூபிக்கும் பொருட்டுக் காஞ்சனை கூற,
அதுவோ எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய கதையாக ஆனது “அப்பா என்ன ஒரு விளக்கம் சிலிர்த்தவன், உன் பாசத்துல தீய வைக்க,ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு ஓடி போயிடு,உன்ன வச்சு சமாளிக்க முடியல”.
“நான் ஏன்டா ஓடணும், இது எங்க அப்பா வீடு நீ ஓடு உன் அப்பன்கிட்ட”.
“நான் ஏன் போகணும் இது என் தாத்தா வீடு”
“அப்பா வீடு”
“தாத்தா வீடு”
“அப்பப்பா………..”
“தாத்தா……..”
“இரண்டு பேரும் வெளில போங்க என்று கத்தியவரே உள்ளே நுழைந்தார் மூர்த்தி.ஏண்டா விடுமுறை வருதுன்னு இருக்கு எனக்கு.எத்தனை தடவ சொல்லுறது உங்களுக்கு. சின்னப் புள்ளைங்களா நீங்க”.
அவருக்கு எரிச்சலாக வந்தது. சில நேரம் இவர்கள் சண்டைகளை ரசித்தாலும்,பல நேரம் அவர் பிபி எகிறி குதித்து விடுகிறது.அதுவும் தனது பெண்ணை எண்ணினால் ‘முருகா’ என்பதைத் தவிர வேறில்லை, பாவம் மனிதர்.
சண்டை கோழிகளாகச் சிலிர்த்துக் கொண்டு சென்றனர் இருவரும்.பின்பு மலர் கோடி வீட்டுக்கு சென்றவன் அங்கு அவருடன் பேசி கொண்டு இருந்து விட்டு, மாலை ரமேஷின் வீட்டுக்கு கிளம்பி சென்றான்.
ரமேஷின் வீட்டினில் நுழைந்த வளவனை அவரது தயார் வரவேற்று, ரமேஷின் அறைக்கு அழைத்துக் கொண்டு வந்தார். நண்பனை பார்த்து “வாடா வா” என்றவன். பின்பு மாடிக்கு சென்று பேசலாம் என்ற முடிவுடன், அன்னையிடம் ஆளுக்கு ஒரு கோப்பை தேநீர் வாங்கிக் கொண்டு மாடிக்கு
சென்றனர்.
மிடறு மிடராகப் பருகியவன் “சொல்லுடா என்ன ஆச்சு அந்த மலர் கொடி தான் உங்க அப்பா ஆளா”
“தெரியல டா இன்னும் சந்தேகமாவே இருக்கு”.
“என்னடா சொல்லுற” நேற்று முன் தினம் நடந்தவற்றைச் சொன்னான் வளவன்.
நேற்று முன் தினம் மாடியில் வளவனைப் பார்த்து மலர்ந்த பெண்ணை,மலைத்து பார்த்துக் கொண்டு இருந்தான் வளவன்.வயது குறைந்த பெண்ணாக, அவர் சேலையில் இருக்க அவனுக்கு அத்தனை பிடித்தது.பார்வையின் கண்ணியம் அவனைப் பித்துக் கொள்ள வைத்தது.தனக்கு அன்னையாக அவரிடம் உள்ள தகுதிகளில் ஒன்று கம்பீரம், அதுவும் நிரம்ப இருந்தது பெண்ணிடம்.
ஹாய்! என்றவளுக்குப் பதில் மரியாதைச் செய்தவன்,தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள.
“எனக்குத் தெரியும் வளவன் நீங்க வாமணன் மகன்னு,எனக்கு வாமணனை ரொம்பப் புடிக்கும், சோ அவர் சமந்த பட்டது எல்லாமே என் கையில்.பெண் அடை மழையாகப் பேசினால் நிற்காமல்”.
அவனும் புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான். பேச்சு வாக்கில் அவள் ஓர் மருத்துவர் என்றும் சமூகச் சேவை ஆய்வாளர் என்றும் தெரிந்தது.வளவனுக்குப் பெருமையாக இருந்தது.அறிவுள்ள பெண்களைக் கண்டு மரியாதை கொள்ளும் ஆண் அவன்.அவன் தந்தையைப் போலவே.
“என்ன வளவன் நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க ஒன்னும் பேச மாட்டேங்கிறீங்க”.
“ஒண்ணுமில்ல உங்கள எப்புடி கூப்டுறது”எண்ணம் மறைத்து வினவ. “சித்தின்னு கூப்பிடுங்க” கண் சிமிட்டினால் பெண்.அவள் என்னமோ சாதாரணமாகச் சொல்ல.
ஆ…. என்று வாய்ப் பிளந்தான் வளவன்.
“என்ன வளவன் ஷாக் ஆகிட்டீங்க.காஞ்சனை சித்தின்னா நானும் சித்தி தான்,எனக்கும் அவளுக்கும் இரண்டு வருஷம் தான் வித்தியாசம்”
அவர் விளக்கத்தில் தான் மூச்சு வந்தது வளவனுக்கு பின்பு “நீங்க அப்பாவோட ரசிகைனு தெரிஞ்சு தான் உங்கள பார்க்க வந்தேன்” என்றவனைச் சந்தோசமாகப் பார்த்தவள்.
“உண்மையாவா”.
“ஆமா எங்க பதிப்பகம் சார்பா,அப்பா பிறந்த நாள் அன்று ஒரு சின்ன விழா ,அதுக்கு அவர் முக்கியமான ரசிகர் எல்லாம் வராங்க ,அதுல நீங்களும் ஒருத்தர்” வயதை மறந்து துள்ளி குதித்தார் பெண்.
“ரொம்பச் சந்தோசம் வளவன்.உங்க அப்பாவ பார்க்க ஏவுளோ நாள் ட்ரை பண்ணுனேன் தெரியுமா முடியல,அவருக்கு நான் யாருனு கூடத் தெரிய வேணாம்.தூரத்துல இருந்து பார்த்த கூடப் போதும்”.
“என்ன இப்புடி சொல்லிட்டீங்க அப்பாக்கு உங்கள நல்ல தெரியும்”
“உண்மையாவா”.
“ஆமாங்க”
அப்போ ஓகே என்றவள் சரி மிஸ்டர்.வளவன் நேரம் ஆகிடுச்சுக் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாதான் நைட் கண் முழிக்க முடியும் பாய்,அவனும் கை ஆட்டி விடை கொடுத்தான்.இதையெல்லாம் ரமேஷிடம் சொல்லிவிட்டு அவனது முகத்தைப் பார்த்தவனை,
“நீ சொல்லுறத பார்த்தா நிறைய விஷயம் இடிக்குதே டா”.
“எனக்கும் குழப்பமா தான் இருக்கு”.
“ஒன்னு செய் நீ உங்க சித்திகிட்ட நான் சொல்லுற மாதிரி சொல்லி.அவுங்கள பத்தி இன்னும் டீப்பா விசாரி,முக்கியமா அவுங்க கல்யாணம் எப்போ நடந்துச்சு,அவுங்க கல்யாண வாழ்க்கை எப்புடி போச்சு,அது மாதிரி”.
“நீ வேற ஏன்டா காஞ்சனை கொன்றுவா”.
“அப்போ அந்த வாண்டு அம்மாகிட்ட விசாரி”
அதுக்கு நான் மலர் கொடி கிட்டயே பேசிக்குறேன்,அதுங்க சங்காத்தமே வேணாம்டா நமக்கு என்ற நண்பன்.நேற்று முன் தினம் நடந்த தாக்குதலை சொன்னான்.ரமேஷிற்குச் சிரிப்பு தாங்கவில்லை.
“உங்க சித்திக்கு நிகர் யாருமில்லை போ,அவுங்க கல்யாணம் ஆகி போயிட்டா,உனக்கு தாண்ட ரொம்பக் கஷ்டம்”.
“ஆமா சித்தி இல்லாம இருக்க முடியாது அப்புறம் கல்யாணம் ஆனா தானே”
“என்னடா சொல்லுற அதிர்ந்து கேட்ட நண்பனை”தன்னை நோக்கி இழுத்துக் காதில் ரகசியம் சொல்ல.
ஐயோ! ஐயோ! ஐயோ! வாயில் அடித்துக் கொண்டான் ரமேஷ்.
நீ யாரென்று அறியாதவரை தான் உன் ஓட்டம்,
அறிந்து கொண்டேன் என்றால் ஆரம்பம் என் ஆட்டம்.