Penniyam pesathadi 5

பெண்ணியம் பேசாதடி – 5

 

நரை  கூடியபின் காதலாம்,காவியமாம்

ஊர் தூற்ற, நீ அஞ்ச!

யாரறிவார் நரை  கூடிய பின் தான்

உடலும்,கூடலும் உச்சம் தொடும் என்பதை!

போதுமடி  பெண்ணே, பெண்ணியம் பேசாதே.

 

ஐயோ! ஐயோ! என்று  தனது வாயில் கை வைத்து அடித்து கொண்ட ரமேஷ் வளவனை பார்த்து “என்னடா சொல்லுற”. 

 

“எதுக்கு இப்போ ஜெர்க்  ஆகுற” 

 

“டேய்! நீ சொன்னதுக்கு நான் நெஞ்ச புடிக்கலனு சந்தோச படு,நல்ல மகன் டா நீ”.

 

“ப்ச்….. உனக்கிட்ட எப்புடி சொல்லி புரியவைக்குறதுனு தெரியல ரமேஷ்.அம்மாவும் அப்பாவும் நல்ல தான் வாழ்ந்தாங்க, ஆனா ஏதோ ஒன்னு குறையுதுடா என்ற நண்பனை முறைத்து பார்த்தவன்”.

 

“வளவன் நீ யோசிக்குற மாதிரி வாழ்க்கை இல்ல, கணவன் மனைவினா கொஞ்சி கிட்டே இருப்பாங்களா,அதெல்லாம் சினிமாவுக்கும்,கதைகளுக்கும் தாண்டப்பா சாத்தியம்.நிதர்சனத்துல மூணு மாசம் தான் சந்தோசம், அதாவது ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். அப்புறம் ஓட்டம் தான்,அந்த மூணு மாசமும் இந்த காலத்துல இல்ல”.

 

“அது எனக்கு தெரியாத ஆனா ஆழமான அன்பு கட்டி புடிக்குறதுல இல்லடா, கணவனது சிறு சிறு தேவைகளை பூர்த்தி செஞ்சு காட்டலாம் தானே.அப்பா அம்மாக்கு தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்குவாரு தெரியுமா,ஆனா வேலையே இல்லாத எங்க அம்மா ஒரு நாள் கூட அவருக்கு நேரம் ஒதுக்கி நான் பார்த்ததில்லை விவரம் தெரிஞ்சு”.

 

‘நண்பனின் பேச்சு சற்று யோசிக்க வைத்தது. தவறு அவனது தாய் மேல் இருக்குமோ,அப்புடி என்றால்? யோசிக்கக் கூட ரமேஷ் விரும்பவில்லை அவனது எல்லை நண்பனுடன் மட்டும் தான்,அவனைத் தாண்டி குடும்பத்திடம் செல்ல அவன் விரும்பவில்லை, யோசனையைக் கை விட்டவன் நண்பன் பேசுவதில் கவனம் கொண்டான்’.

 

“ஏய்! என்ன கனவு காணுற. எப்புடி என் திட்டம் “.

 

“நல்ல திட்டமப்பா அமோகம்  திரிஷா இல்லனா திவ்வியா.மலர் கொடி இல்லனா காஞ்சனை, கொடுத்து வச்ச மனுஷன்டா  உங்க அப்பா.அவருக்கு ஏத்த மகன்”.

 

“பொறாமை படாத டா, எங்க குடும்பத்தை பார்த்து”. 

 

“ஆமா ஆமா பட்டுட்டாலும் , தெரியாம தான் கேக்குறேன் எந்த தைரியத்துல உங்க அப்பாக்கு அந்த ரவுடி பொண்ண பார்த்த”.

 

“என்னால சித்திய விட முடியாது.அதைவிட அந்த தொப்பைய சித்தி கல்யாணம் பண்ண கூடாது.எங்க சித்தியும்,அவனும் நடந்து போன சித்திக்கு அப்பன் மாதிரி இருப்பாண்ட அந்த ஆளு”.

 

“சரி சரி பொங்காத,உங்க அப்பாவும் சரி, உங்க சித்தியும் சரி ஒத்துக்க மாட்டாங்க வளவன்.உங்க தாத்தா கேட்ட போதே உங்க அப்பா முடியாதுனு சொல்லி தான் அவர் நண்பன் மாப்பிள்ளையா வந்தார் மறந்துடாத”.

“அதெல்லாம் சரியாவரும் ரமேஷ்,பேசியே ஒத்துக்க வச்சுடுவேன்”.

 

“நல்லது  நடந்தா  சந்தோசம் தான்”. என்றவர்கள் மீண்டும் சில மணி நேரம் பேசிவிட்டு விடை பெற்றான் வளவன்.தண்ணீரின் இருக்கும் தூசியாக மனதில் பல நெருடல்கள் மேலாக தளும்பி நின்றது.அதனை அறிந்து கொள்ளும் மார்கம் அறியாமல் தடு மாறினான் வாமணனின் தவ புதல்வன்.

 

———————————————————————————————–

மகனின் தவிப்பை அறியாத வாமணன் தனது காதலியுடன் உல்லாசம்  கொண்டு இருந்தார்.அவர் தழுவ இவள் வெக்கம் கொண்டு திருப்ப என்று சலிக்க சலிக்க  ஓர் காதல் நாடகம்.ஆம் அவர் காதலி தான் இந்த புத்தக பெண், தனது புத்தக அறையில் அவர் எழுதிய கவிதை தொகுப்பை படித்து கொண்டு இருந்தார்.

 

மேலும் அவரை சுற்றி பார்த்தால் பல எழுத்தாளரின் பிள்ளைகள் கண்ணுக்கு

குளுர்ச்சியாக. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பிள்ளையாம் எழுத்தாளர்களுக்கு.அப்படியென்றால் ஒவ்வொரு எழுத்தாளனின் படைப்பும் முதல் பிரசவம் போலும்.துடித்து,பயந்து,வலி எடுத்து இன்பம் கொண்டு பிள்ளை பெற்று மறுபிறவி எடுப்பது போல,

 

கற்பனை கொண்டு,ரசனை எடுத்து,கவி படைத்து இலக்கணம் கொண்டு பிறக்கும் கதைகளை படித்து மறுபிறவி எடுக்கிறோம் உண்மை தானே.

 

இன்று பேரிளம் பெண்ணுக்கு விடுமுறை தான்,இரு பெண்களையும் சமாளிக்கும் திறமை  வாமணனிடம் இல்லை போலும்.புத்தக காதலியை கையில் எடுத்து,பேரிளம் பெண்ணை விட்டுவிட்டார். 

 

காதலியை கொஞ்சியது போதும், இனி என்றவருக்கு மோகம் கூடி போக எழுது கோலை எடுத்து விட்டார்.இனி நமக்கு என்ன வேலை அவர் அந்த வழி வன் காதல் செய்யட்டும், நாம் வந்த வழி செல்வோம்.

 

 

அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் வந்த வளவன்,மீண்டும் தன்னை சுத்த படுத்திக் கொண்டு தனது தாத்தா வீட்டுக்கு சென்றான்.வீட்டுக்குள் நுழைந்தவனைக் கூடக் கவனியாமல் காஞ்சனை படு தீவிரமாகப் போனில் பேசி கொண்டு இருந்தார்.

 

“சரிங்க நான் அப்பாகிட்ட பேசுறேன்,எனக்கும் ஒன்னுமில்லை, எப்பனாலும் சரிதான்.சரிங்க உடம்பப் பார்த்துக்கோங்க என்றவளை போனை அணைக்கக் கூட விடாமல் கை பற்றினான் வளவன்”.

அவனது தீடீர் செயலால் ‘யாருடா இது’ என்று பயந்தவள் வளவன் தான் என்றவுடன் கடுப்பாகி “படுச்சவன் தானே நீ, இப்புடி நடந்துக்குற எரும மாடு, எரும மாடு இதுல தொழில் பண்ணுறானாம்”.

 

“நான் அப்புடித்தான்.யாரு கூடப் பேசிகிட்டு இருந்த அந்தத் தொப்பையா” கஞ்சனைக்குத் தோழிகள் இல்லை,அவள் ஒரு தனிப் பிறவி அவளை எதில் சேர்ப்பது என்பது யாருக்குமே தெரியவில்லை.அவளிடம் பேசும் ஒரே ஜீவன் அதுவும் சமீபகாலமாக அந்தத் தொப்பை தான், குறிப்பு திருமணம் முடிவு எடுத்த பின்.

 

வளவன் மேல் கொண்ட எரிச்சலில் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற தனது கால்  பெரு விரலை மடக்கி தலை கவிழ்ந்து,வாயில் தனது ஒரு விரல் கடித்து வெட்கம் கொள்ள நொந்து விட்டான் நம் வளவன் மேலும் அவனைச் சக அடிக்க “அவர் தாண்ட” என்றவள் மீண்டும் தலை கவிழ்ந்தாள். 

 

“என்ன கொடுமைடா இது,சித்தி… என்ன வெளில போடா நாயேன்னு சொல்லு போயிடுறேன்,என் முன்னாடி வெட்கம் மட்டும் படாத சத்தியமா பார்க்க முடியல”.

 

அவனை முறைத்தவள் “போடா தடி மாடு உனக்குப் புடிக்குமேனு ரசகுல்லா செஞ்சேன்,நீ என்ன கேலி பண்ணீல உனக்கு ஒன்னும் கிடையாது ஓடிடு”என்றவள் அடுத்து வீட்டுக்கு சென்று தனது தோழியை அழைத்து வந்தாள்.

 

வாண்டு அப்போதுதான் தூங்கி முழித்திருக்கும் போல வளவனை பார்த்ததும் ஒரு புருவ சலிப்புடன் சோபாவில் அமர்ந்தது. வளவன் வழமை போல் வாண்டை வம்பு செய்ய “ஆளா பாருடா ஆள குட்டி பிசாசு”.

 

அதற்கும் அந்த வாண்டு புருவத்தைச் சுளித்துக் கொண்டு பார்த்து வைத்தது. காஞ்சனை உள் சென்று இரு பௌலில் ரசகுல்லா எடுத்து வர லேசாக அதனை எட்டி பார்த்தான் வளவன்.

 

வாண்டு அதனை பெற்று கொண்டு எதுவோ காஞ்சனை காதில் சொல்ல, இருவரும் அவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்து கொண்டு உண்டனர்,அதில் கடுப்பாகி போனவன் “ஏய் திரும்புடி” என்றவன் அருகில் சென்று அழகாக தூக்கி வாண்டின் முகம் பார்க்க எங்கே தனது ரசகுல்லா போய்விடுமோ என்று பயந்து வாய்க்குள் போட பார்க்க,

 

அவள் கையோட சேர்த்து தனது வாய்க்குள் போட்டு கொண்டான் வளவன் வேண்டுமென்றே கண் மூடி அவன் ரசித்து உண்ண.உதட்டை பிதுக்கி அழகாக அழுதது அந்த வாண்டு அதில் மயங்கியவன்.

“என்னடி அழகுற நீ மட்டும் மாமா கூட பிரென்ட் ஆகிடு மாமா உனக்கு பெரிய ரசகுல்லா டின் வாங்கி தரேன்”அவன் ஆசை காட்ட வேறு ஒரு பிள்ளை என்றால் மயங்கி தலையாட்டும்,நிமிடம் இருக்கும் அசல் பீஸிடம் நடக்குமா,யாரு அது காஞ்சனையின்  தோழி ஆயிற்றே,

 

கால்களை வேகமாக உதைத்து “ஒன்னும் வேதம் போ ஏத்திக்கி உது” என்று அழுது வைத்தது.

 

அவனை தோரணையாக பார்த்த காஞ்சனை அந்த வாண்டை கையில் அள்ளி தான் வைத்திருக்கும் ஸ்வீட்ட்டை ஊட்டிவிட அவனுக்கு பழிப்பு காட்டியவரே உண்டது.

 

எரிச்சல் அடைந்த வளவன் “ஒரு நாள் இல்ல ஒரு நாள் மாமா ப்ளீஸ் மாமா உங்க சொன்ன பேச்சு கேட்பேன் என்ன பிரெண்டா ஏத்துக்கோங்கன்னு கதற வைக்கல நான் வளவன் இல்லடி”.

 

வளவனை பார்த்து கட்டை விரல் நீட்டிய இருவரும் “சிங்கம் சிக்கும் ஆனா சில்வண்டு சிக்காது” என்ற ராட்சஸிகள் தேவதைகளாக புன்னகை பூத்தது காஞ்சனை போல ஓர் தங்கையும்,அந்த வாண்டை போல் ஒரு பெண் பிள்ளையும் வேண்டும் எண்ணி கொண்டான்.

 

எண்ணம் பலிக்குமா என்ன?….

 

அவனது அமைதி கண்டு கஞ்சனையும் அமைதியாக போனாள். என்ன தான் சிரித்துப் பேசினாலும்,தனது திருமணமும்,வளவனின் பிரிவும் அவளை அச்சத்தில் ஆழ்த்தியது என்னமோ உண்மை. 

 

ஏனோ அவளுக்கு பயமாக இருந்தது, ஏதோ நடக்க போகிறது உள்ளுணர்வு எச்சரிக்கை செய்ய,யோசனையுடன் வேலைகளை தொடர்ந்தாள்,வளவன் விடை பெற்றது கூட அவள் கருத்தில் பதியவில்லை.கடவுள் யாருக்கு யார் என்பதை இக்கணம் முடிவு செய்துவிட்டான்.விதி வலியது தான் போலும்.

 

———————————————————————————————

 

அங்கே புத்தக அறையில் இருந்து வெளி வந்த வாமணனுக்கு வேர்த்து

 கொட்டியது உடலெல்லாம், தளர சோபாவில் விழ போக தாங்கி பிடித்தான் வளவன். நல்ல வேலை இன்று கஞ்சனையிடம் வம்பு செய்யாமல் வந்ததால் நேரத்துடன் வந்தது சரியாய் போச்சு. 

 

“அப்பா என்னப்பா ஆச்சு” என்றவனை பார்த்தவர் கலங்கிய கண்ணுடன் தனது சட்டையில் இருந்த அந்த கடிதத்தை எடுத்து கொடுத்தார்.அதை படித்த அவனுக்கும் பேச்சே எழவில்லை.

 

“என்னப்பா இது”.

 

“எனக்கும் ஒன்னும் புரியலடா” என்றவர் தனது நெஞ்சை நீவி கொண்டார்.

 

“அப்பா………..” 

 

“என்கிட்ட எதுவும் கேட்காத வளவா”.

 

“அந்த பொண்ணு பெரு என்ன “

 

“மலர் கொடி ப்பா……………”

 

“நாளைக்கி பார்க்க ஏற்பாடு பண்ணு நான் கொஞ்சம் பேசணும்”. 

 

சரிங்கப்பா.அப்பா சப்போஸ் அப்புடி இருந்தா பயந்து கொண்டே கேட்ட வளவனைத் தீர்க்கமாகப் பார்த்தவர். “என்னால மன்னிக்க முடியாது கண்ணா வாழ்க்கை முழுமைக்கும் அனுபவிச்சு தான் ஆகணும்”,பின்பு ‘முட்டாள், முட்டாள்’ தன்னையே திட்டி கொண்டார் மனிதர்.

 

வாமணனுக்கு அத்தனை கோபம்,அவருக்கு ஒரு பழக்கமுண்டு அடிக்கடி தான் எழுதிய கவிதையைப் படிப்பது, அதற்கு அவர் விசிறிகள் எழுதும் விமர்சனத்தையும் படிப்பது அவருக்குப் பிடித்தம்.அப்படி படிக்கும் பொதுப் பேரிளம் பெண் எழுதிய ஒரு கடிதம் கையில் சிக்க,அதனை காதலுடன் படித்தார் மனிதன்.

 

இதில் என்ன கொடுமை என்றால் அந்தக் கடிதத்தின் வயது சுமார் 25 இருக்கும் .இன்று தான்  அதனை முழுமையாகக் கவனித்துப் படித்துள்ளார் மனிதர் .அதில் அவருக்குச் சில நெருடலான விடயங்கள் பட அதிர்ந்து விட்டார்.

 

இது எங்கு போய் முடியுமோ என்று எண்ணியவன்,அந்த கடிதத்தை தந்தையிடம் இருந்து வாங்கி, தன்னுடன் வைத்து கொண்டான்.விசித்திரமான மனிதர்களுக்கு, விசித்திரமான நிகழ்வுகள் என்று சிரித்தது விதி.

 

பெண்ணியம் பேசி தள்ளி நிற்கும் பூங்கொடி.உன்னைக் கண்டு கொண்டாள் உன் பெண்மை களவாட படும்,அதன் பின் பெண்ணியம் பேசி பயனில்லை.