Seemai ciyaan 5

சீமை சீயான் – 5

வீராயிடம் வரும் கெட்ட வார்த்தைகளைக் கேட்க முடியாமல் கண்களில் இருந்து தாரை தாரையாகத் தண்ணீர் கொட்டியது,அம்புட்டும் சுத்தமான கெட்ட வார்த்தைகள்.இதற்கு உபயம் பிச்சி என்று அறிந்த முத்துவிற்கு அவளைக் கொன்று விடும் வெறி கிளம்பியது.ஆத்தா மலையேற நமது முத்து வெயிட்டிங்.

அப்புடி என்ன செய்தாள் நமது பிச்சி ஒரு சிறு கொசுவர்த்திச் சுருள் சுருட்டி மருத்துவமனையில் முத்துவை தடுத்து கைக்குக் கொஞ்சம் மேல் போய்ப் பார்த்தால் அதிர்ச்சி.வேற யாரு நம்ம டீச்சர் தான்.

அவன் இருக்கும் மனநிலையில் டீச்சரிடம் குசலம் விசாரிக்க முடியவில்லை.அவன் கண்கள் எல்லாம் தனக்கு முன் சென்று கொண்டு இருக்கும் பிச்சியிடமே.அதுவும் அவள் திரும்பும் சமயம் தான் முத்து டீச்சரிடம் பிறகு பேசலாம் என்று சொல்லி கொண்டு இருந்தான்.

அவர்களைப் பார்த்தவளுக்கு இன்னும் அழுகை பொங்கி வர முத்துவை ஓர் பார்வை பார்த்து சென்று விட்டாள்.அவள் சண்டையிட்டால் கூட ஒன்றுமில்லை கோபம் தணியும்,அவள் பேசாமல் சென்றது. அவன் மண்டைக்குள் மணி அடித்தது.அவன் எண்ணிப்படியே வீராயிடம் என்ன சொல்லி சென்றாலோ முத்துவை வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தார்.

மருத்துமனையில் இருந்து சீயானை வீட்டுக்கு அழைத்து வந்து அவனைத் திட்டி,மேற் கொண்டு பண்ண வேண்டியதை திட்டமிட்டு வருவதற்குள் காலை பத்தை நெருங்கியது. களைப்பாக வந்து காப்பிக் கேட்டால் அன்னையிடம் இருந்து வந்த புனிதமான வார்த்தைகளில் நொந்து போய்விட்டான்.வசவுகள் முடிந்து,

“இந்தா காப்பிய குடுச்சுபுட்டு முனியாண்டி மாமனை பாரு,அவருகிட்ட பிச்சிய பொண்ணு கேக்க சொல்லிருக்கேன்,என்னனு கேட்டுட்டு வா”.

“என்னது பிச்சியா……………………..,யாரு கேட்டு நீ முடிவு பண்ண அவள கண்ணாலம் பண்ணா நான் காசிக்கு போய்டுவேன்”.

அப்பா பலமான மிரட்டல் அதற்கெல்லாம் அசையுமா எங்க தாய் குளம். “போ நல்லதா போச்சு எனக்குப் பாண்டி இருக்கு புள்ளையா, அது பார்த்துக்கும் என்ன.சொத்தெல்லாம் அது பேருல எழுதி வச்சுப்புட்டு மூணு வேளை கஞ்சி,வருசத்துக்கு ஆறு நூல் புடவை,கைக்குக் காதுக்கும் எங்க அண்ணன் போட்ட நகை இருக்கு,மீதிய பிச்சிக்கு கொடுத்துட்டு மதனி கூடச் சந்தோசமா இருப்பேன்”. ஐந்து ஆண்டுத் திட்டமெல்லாம் தோற்பது போல இருந்தது வீராயின் திட்டம்.

அதிர்ந்தவன் “நீயெல்லாம் ஒரு ஆத்தாவா புள்ள போறேன்னு சொல்லுறேன்,என்னமோ ஊற சுத்தி பார்க்க போற மாதிரி பொசுக்குன்னு போனு சொல்லுற”.மேல் மூச்சுவாங்க தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்தினான் முத்து.

அவனது கத்தலில் காதை தேய்த்து கொண்டவர் மெதுவாக, “டேய் உன்கூட மல்லுக்கு நீக்க நேரமில்லை கண்ணாலமா காசியா, நீயே முடிவு பண்ணி உன் மாமேகிட்ட சொல்லிடு.அப்புறம் நான் காட்டுக்கு போறேன் கடலை பறிக்க,உலைக்கு வைக்கல மதனி சோறு தரும் வாங்கிட்டு வந்து கொடுத்துடு”.

அவனை மதியாமல் வேலையைச் சொல்லிவிட்டு சென்றார்.வெற்றிலையை கொதிப்பிய வாரே முந்தானையை இறுக்கி சொருவி கொண்டு அவர் கம்பிரமாக நடக்க.கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் பிச்சியை நோக்கி படை எடுத்தான் முத்து.

“ஏண்டி பிச்சி முனியாண்டி அண்ணே என்னமோ சொல்லுதே நெசமா, நீ எதும் வீராயி அக்கா கிட்டுப் பேசுனியா புள்ள”,கொஞ்சம் கோபமாகப் பிச்சையின் தாய் கேட்க.

“ஏய்,எதுக்கு இப்போ புள்ளைய கேக்குற,பேசுனது நான் என்கிட்ட பதிலை சொல்லு,குறுத்துகிட்ட பயிராவ”.

“அண்ணே மதனி கிட்ட என் பொண்ணு நல்ல பொழைக்கும் தான்,ஆனா வசதி பாத்ததுண்ணே,உனக்கே தெரியும் நாங்க இங்க வந்த கதை”.

பிச்சையின் தந்தையும் “ஆமா மச்சான் நம்ப ஒசதிக்கு பாத்தாதான் தோது படும்.முத்து தங்கமான புள்ள தான் ஆனா அதுக்கு ஆசை இருக்கனுமுள.எதுக்கும் ஒரு வார்த்தை தங்கிச்சியும் முத்து மாப்பிள்ளையும் நேருல வச்சு கேட்ருலாம்.அப்போதான் எனக்கு முடிவு எடுக்க வசதியா இருக்கும்”.

“இப்போ பேசுனியே இது நியாயம் அதை விட்டுட்டு வசதி பத்தி பேசாத, தங்கச்சி சொல்லிருச்சு பிச்சி குணமே போதும். வீராயி சொத்துக்கு ஈடு ஆகிப்புடும். மனச போட்டு கசக்காத புள்ள எல்லாம் நல்லதே நடக்கும்.அப்பவே உன் மதனி சொன்னா.நீ இப்புடித்தான் யோசிப்பன்னு.
தலையைக் குனிந்து கொண்டார் பிச்சியின் தாய்.அவர் கூற்றும் நியாயமே பஞ்சம் பிழைக்கத் தஞ்சம் அடைந்த இடத்தில் நன்றியை மட்டுமே காட்ட வேண்டும்,உறவை அல்ல என்பதே அவர் எண்ணம்.வாக்குச் சுத்தம் கொண்ட மங்கை அல்லவா அதான் நியாயம் பேசினாள்.

பிச்சிக்கு உள்ளக்குள் குளிருக்குப் பதில் கிலி பிடித்தது,இந்நேரம் ராகு காலம் பூசை தனது மாமனுக்கு நடந்து இருக்கும்.அவனை எப்புடி சமாளிப்பது என்று தான் அவளுக்குப் பயமே.அவன் அவளை நெருங்கும் முன்பே கூச்சல் போட்டு அவனை அமிக்கிட வேண்டும் என்று எண்ணி கொண்டாள்.

அவள் எண்ணத்தின் நாயகனே அவளை அழைத்தான் போனில்,”ஏய் புள்ள பிச்சி கானா காணாம போன எடுடி பாட்டு வச்சு இருக்காப் பாரு பாட்டு விலக்கமாதுல சாத்தானும் போல வருது ,மறுவதையா பாட்ட மாத்திப்புடு, எடுபட்ட சிறுக்கி.தாலிகடிக்காம பொஞ்சாதியாம் அப்போதானே ஊர் மேயலாம்.(அப்புடி என்னம்மா பட்டு வச்ச பிச்சி)

தலையில் அடித்துவிட்டு அந்தப் போனை தூக்கி எறிந்தார். “தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி” இந்தப் பாட்டுக்கு தான் இத்தனை வசவு.மீண்டும் பாட்டு ஒலிக்க அடுக்கலைக்குள் இருந்து பறந்து வந்தது குழம்பு கரண்டி.
ஐயோ! ஆத்தா அலறியவரே போனை தூக்கி கொண்டு பின் கட்டுக்கு சென்றாள்.சொல்லுங்க மாமா.

“உடனே தோட்டத்து வீட்டுக்கு வா டி”.

டி… யா.ஹலோ ஹலோ எதிர் முன்னையில் போன் கட் ஆனது.

மாமா ரொம்பக் கோவமா இருக்கு போலையே.விளையாட்டுக்குச் சொன்னது வினாயப் போச்சே,சற்றுப் பயமாகத் தான் இருந்தது. சண்டைக்குத் தயார் ஆவது போல வேட்டியை மடித்துக் கட்டி சட்டையைச் சுருட்டி கொண்டு இருந்தான் முத்து.

—————————————————————————————–
இங்கு முனியாண்டி சீயானின் தலையை நீவி கொடுத்தார்.அதில் தூக்கம் கலைந்தவன். ஐயா! என்று அழைத்து எழுத்து அமர்ந்தான் “உன்ன கஷ்ட படுத்துறேனா சாமி”.

“என்ன ஐயா”.
இல்ல சாமி உன்ன அன்னக்கி நம்பி இருக்கணும் விட்டுக்கொடுத்துபுட்டேன் கோவம் கண்ண மறைச்சுப் புடுச்சு.பொன்னுரங்கம் உங்க ஆத்தாவை பேசவும் அடக்க முடியல சாமி.அன்னக்கி தெளிஞ்சு இருந்தா அந்தப் புள்ளயும் நல்ல பொழச்சு இருக்கும்.

“ஐயா உடுங்க நம்பக் கைல எதுவுமில்ல எதோ கெட்ட நேரம் ஆட்டி படைச்சுடுச்சு.ஆனாலும் உங்க தங்கச்சி பொண்ணுக்கு இம்புட்டு அதப்பு ஆகாது ஐயா.பொய்யாக அலுத்து கொண்டவனை முதுகில் செல்லமாக அடித்தவர்”.

‘சீயான்’ அவரும் அவனைச் செல்லமாகச் சீண்டும் பொதுச் சீயான் என்று தான் அழைப்பார், “வேலைய காட்டிப்புட்டு நடிக்காத சாமி.அங்க என்ன நடந்துச்சுனு தோரயமா தெரியும்”.

சங்கடமான மௌனம் முதலில் தெளிந்தவர். பொறையோடி போய் இருக்க புண்ணுக்கு வலிக்க வலிக்க அறுவை பண்றது நல்லது சாமி. அதற்கு மேல் சொல்லப்போனவர் அமைதியாக எழுந்து சென்று விட்டார்.

அவர் சொல்லாமல் சென்ற விடயத்தை அறிந்தவன் பல்லை கடித்தான் பச்சை தோரகம்.என்ன மனிதர்கள் இவர்கள்.”உங்கள சும்மா விட மாட்டேன்டா”.கண்ணில் அனல் பறக்க கை முஷ்டியை இறுக்கினான் சீயான்.கோபம் தணியாமல் வேம்புவிற்கு அழைக்க.அவள் ஹலோ என்று சொன்னது தான் தாமதம்.

பொரிந்துவிட்டான் பெரிய தியாகியாடி நீ,அப்புடி என்ன உன் அப்பன் ஆத்தா மேல பாசம்.நீ வச்ச பாசத்துல இப்போ அவுங்க குளுந்து போய் இருங்களா.

“குத்திக்காட்டுத்திங்களா மாமா” அழுகையாக அவள் கேட்க.

முட்டா சிறுக்கி என்னக்கி தாண்டி என்ன புரிஞ்சுக்கப் போற.மானங்கெட்டு உன்ன தொட்டதுக்கு எனக்கு வேணும்டி.

சடுதியில் வந்தது வார்த்தை “அப்போ ஏன் தொட்டிங்க”.

“எதிர்த்துப் பேசுனா பல்லு பேந்துடும்”.

“அடிங்க நல்ல அடிங்க எனக்கு யாரும் வேணாம் போங்க எல்லாரும்”. அழுகை அதிகமாக போனை அனைத்துவிட்டான்.

வேம்புவின் சத்தம் கேட்டு வந்த பொன்னுரங்கம் அவளை மார்போடு அனைத்துக் கொண்டு அவர் பங்குக்கு ஒப்பாரி வைத்தார். “ஐயோ! கருப்பா நான் என்ன செய்ய என் புள்ள தரிசா கெடக்கே,இதை பார்த்துட்டு இருக்கு முடியல சாமி என்ன எடுத்துக்கோட” என்று வாய்விட்டு கதற.வேம்புவின் தாய் கண்ணிலும் கண்ணீர்.
——————————————————————————————–
தோட்டத்தில் தன் எதிரில் நிற்கும் பிச்சியைக் குதறி விடும் நோக்கத்தோடு நின்று கொண்டு இருந்தான் முத்து.அவள் முதல் முறை அவனிடம் தலை குனிந்து நின்று இருந்தாள்.

“ஏண்டி கண்ணாலம் எதுக்குக் கட்டிறது இல்ல எதுக்குக் கட்டுறதுனு கேக்குறேன்”.

“வேற எதுக்குக் குடும்ப நடத்தத்தான்” குனிந்த வாக்குலே அவள் மூணு முணுக்க.

“அதாண்டி நானும் சொல்லுறேன் உன்ன கட்டிக்கிட்டு என்னால குடும்ப நடத்த முடியுமா.வாயா திறந்தா மாட்டுத்தாவணி வரைக்கும் கேட்கும்,ஒரு வாய் காபி தண்ணி குடிக்க முடியுமாடி உன்ன வச்சுக்கிட்டு.நீயெல்லாம் பொண்ணா” இன்னும் என்னன்னவோ சொல்லி அவளை வறுத்தெடுக்க.

“நிறுத்துங்க நீங்க என்ன கண்ணாலம் பண்ணிக்க வேணாம்”.அதற்கு மேல் வார்த்தை வராமல் தொண்டை அடைக்கக் கண்ணீருடன் சென்று விட்டாள்.

முத்துவுக்கு ஆத்திரம் சற்று மட்டுப்படத் தன் தலையிலே அடித்துக் கொண்டான்.சீயான் மேல் இருந்த கோபம்,வேம்புவின் மேல் இருந்த கோபம் எல்லாம் சேர்த்து வைத்து பிச்சியைத் தாக்கியது.

அடுத்த நாள் விடியல் முத்துவிற்கு நல்லதாக இல்லை போலும் சுமார் மூன்று மணியளவில் சீயான் போன் மூலம் சொன்ன செய்தியில் அடித்துப் பிடித்துக் கொண்டு பிச்சி வீட்டுக்கு சென்றான்.அங்கே வீராயி கையில் சூலம் வைத்துக் கொண்டு வரவேற்றாள்.

முத்துவின் நிலை?………….