Seemai siyan 4

Seemai siyan 4

சீமை சீயான் – 4

அரசு மருத்துமனையில் தலைக்குக் கையை முட்டுக்கொடுத்து தனக்கு எதிரில் இருந்தவனை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான் நமது எசக்கி முத்து, சீயானுக்கு நேர் எதிர் வேம்பு படுத்து இருந்தாள்.

வெளியில் பொன்னுரங்கனும்,முனியாண்டியும் காவல் துறை விசாரணைக்குப் பதில் கொடுத்துக் கொண்டு இருந்தனர்,அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொன்னுரங்கத்தால் பதில் கொடுக்க முடியவில்லை.

பாவம் அவருக்கு என்ன தெரியும் தெரிந்தால் அல்லவா சொல்வார். அவர்கள் கேட்ட ஒரே கேள்வியை விதமாக விதமாக மாற்றிக் கேட்டனர், அவரால் சமாளிக்க முடியவில்லை, மனதளவில் தளர்ந்து இருந்தார், இதில் இந்தக் கூத்து வேறு.

சூழ்நிலை மோசமாக போவதை உணர்ந்து முனியாண்டி இடையிட்டார். ‘நாங்கள் தான் அவர்களைப் பிரித்துத் திருமணம் செய்தோம்,இப்போதும் மறுமணத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தோம்,அதனால் தான் இவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார்கள் என்று சொல்லி,மேலும் அவர்களை நன்கு கவனித்து அனுப்பிவைத்தார்’.

இருவரும் இன்னும் கண் முழிக்கவில்லை.”டேய் எசக்கி, பாண்டி கண் முழுச்சுதும் சொல்லு நாங்க வந்து பாக்குறோம்”, சரியென்று பவ்வியமாகத் தலையை மட்டும் ஆட்டியவனைக் கண்டு.

“நல்ல புள்ள மாதிரி தலையை ஆட்டு, ஏன்டா எருமைமாடே அவன் கூடவே தானே சுத்திகிட்டு திரியுற, அந்த பைய என்ன பண்ணறானு உனக்குத் தெரியாது? இல்ல நீயும் கூட்டு களவாணியா”.

“ஐயோ! மாமா எனக்கு எதுவும் தெரியாது”, அலறியவனை நம்பாமல் பார்த்தவர்.

“பார்த்து சூதனமா இருக்க வேணாம்,பொசக்கெட்ட பயலே”.

மகன் மேல் இருக்கும் கோவத்தை எல்லாம் தங்கை மகனிடம் காட்டிவிட்டு சென்றார் அவர்.போகும் அவரை வெறித்தான் முத்து.’தப்பு செஞ்சது அவிங்க மகன்,போட்டுத்தள்ளுறது என்ன. வீராயி என்ன தர்மத்துக்குப் பெத்து போட்டுருக்கான்னு கேக்குறேன்’,மனதுக்குள் மட்டுமே எண்ணி கொண்டான்.

அவரைப் பார்த்துகொன்டு இருந்தவன் சீயானின் அசைவில் அவனிடம் சென்றான்,கண்களை லேசாகத் திறந்து தனக்கு எதிர் கட்டிலில் படுத்து இருந்த வேம்புவை தான் முதலில் பார்த்தான், சிறு புன்னகை இதழ் பிரியாமல். சீயானின் பார்வையை உணர்ந்த முத்து எரிச்சலுடன் அவனது தாடையைத் தன் புறம் திருப்பி.

“ஏன்டா உனக்கு இந்தக் கொலவெறி,ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்கடா உன்ன, ‘தானும் வாழ கூடாது அடுத்தவனும் வாழ கூடாது’ அதானே. சிரித்து வைத்த சீயானை கண்டு காண்டான முத்து. ராத்திரில இருந்து மூக்குல டீயூப் போட்டு கொடலு குந்தானிய உறிஞ்சியும் உனக்குக் கொழுப்பு குறையல பாரேன் போலியாக வியந்தவன்.

ஏன்டா எனக்கு அப்புடி ஒரு மெசேஜ் போட்ட ஆத்தமாட்டாமல் புலம்பினான் முத்து ,இரவு முழுதும் வயிற்றைச் சுத்தம் செய்யத் தொண்டையில் ட்யூப் போட்டதால் வலியில் முகம் சுளித்தவரே சிரித்தான் சீயான்.

சீயானின் குறுஞ்செய்தி அந்த அளவிற்கு இருந்தது ‘எனக்கு முதல் இரவு அரை மணி சென்று ஆம்புலன்ஸ் உடன் வா’.அர்த்த ராத்திரியில் ஒருவனுக்கு இப்படி ஒரு செய்தி வந்தால் அவன் என்ன ஆவான்?. முத்து என்ன கனவா கண்டான், முதல் இரவில் பாலுக்குப் பதில் இவர்கள் பால்டாயில் குடிப்பார்கள் என்று. முதல் இரவு என்றதே அதிர்ச்சி இதில்………
“சரிடா சாவனுன்னு முடிவு பண்ணவேன் ஏன்டா எனக்கு மெசேஜ் போட்ட? விளங்காத வெங்காயமே சிரிக்காம சொல்லுடா.விளையாட்டாகக் கேட்டாலும் நண்பன் செய்தது அவனுக்குக் கோபத்தைக் கொடுத்தது.

அதற்கும் சிரித்த சீயானை அடிக்கப் போகப் புயலாக உள்ளே வந்தாள் பிச்சி.”சீயான் மாமா!கத்தியவள் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு சூப்பர் சூப்பர் மாமா நீங்க சிங்கமுள்ள.ஐயோ எனக்கும் கையும் ஓடல காலும் ஓடல அம்புட்டு சந்தோசமா இருக்கு”.

அவளது சந்தோசத்தில் பொறுமை இழந்த முத்து.

ஆமாடி உன் மாமே உலகச் சாதனை பண்ணியிருக்கான் பாரு அப்புடியே புல்லரிச்சு போறதுக்கு,தெரியாமத்தான் கேக்குறேன் குடும்பமே கிறுக்கு புடுச்சு திரியிறீங்களாடி?. கூறுக்கெட்ட குக்கருங்களா மூஞ்சிய பாரு ஆமைய திருப்பிப் போட்ட மாதிரி.

அவனே சீயானின் மேல் கொலைவெறியில் இருந்தான் இதில் பிச்சி வேறு அதுக்குத் தூபம் போடவும் பொங்கி விட்டான். பட படவெனப் பொரிந்தவன் மீண்டும் சீயானிடம் திரும்பும் சமயம் வேம்பு விழித்துக் கொண்டாள்.

வேம்பு முதலில் பார்த்தது அவளுக்கு எதிரே படுத்து இருந்த சீயானை தான், இரண்டும் ஒரே மாதிரியே இருக்குதுங்க பாரு.. அவள் பார்வை உணர்ந்த முத்துக்குத் தாங்கவில்லை. நேற்று இரவு அவன் செய்த அனைத்தும் அவளுக்கு நியாபகம் வர கோவமாக அவனை முறைத்து பார்த்தாள்.

பதிலுக்கு அவனோ ‘சரிதான் போடி’ என்பது போல் பார்த்துவைத்தான் அவர்கள் பார்வை பரிமாற்றத்தை தவறாகப் புரிந்து கொண்ட பிச்சி, முத்துவை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள். திடீரென்று அவன் கை பற்றி இழுத்ததில் அதிர்ந்தவன்.

ஏய்,கைய விடு புள்ள யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க,

ஓ …. அவ கைய புடுச்சுட்டு நின்னப்ப மட்டும் யாரும் பார்க்க மாட்டாங்களா, ‘எவ கைய நான் புடுச்சேன்’. முதலில் அவள் சொல்லுவது புரியாது விழித்தவன் பின்பு புரிந்ததும்.

எதுக்கு எதடி இணைக் கூட்டுறவ, அடுச்சு பல்ல கலட்டிருவேன்.

அதற்கு மேல் பிச்சியால் பொறுக்க முடியவில்லை,ஓ………….. என்று கத்தி அழுக ஆரம்பித்துவிட்டாள்.

ஐயோ! பதறியவன் அடியேய் எதுக்குடி இப்ப ஒப்பாரி வைக்குற.

எப்ப பாரு என்னய வஞ்சுகிட்டே இருக்க, என்ன கண்டாலே உன் மூஞ்சி முன்னூறு மயிலு அப்பால போகுது.

முத்துக்கு அவளை பார்க்க பாவமாக இருந்த போதிலும் அவனது மனசாட்சி அவனுக்கு எச்சரிக்கை விடுத்தது,’வேணாமு டா முத்து, பாவப்பட்டா ரவுடி உன்ன பாவமாக்கிடுவா’ என்று எண்ணியவன்.

அவளிடம் பேச போகும் தருவாயில் அங்காயி,வீராயி,பொன்னுரங்கம் அவரது மனைவி ,முனியாண்டி என ஒரு பட்டாளமே திரண்டு வந்தது,ஊர் பெரிய தலைகளும் அதில் அடக்கம்.

முனியாண்டி மூலம் அவர்கள் திருமணத்தைத் தடுத்ததால் தான் அவர்கள் தற்கொலைக்கு முயன்றார்கள் என்று சொல்லப்பட்டது,முதலில் சீயான் தற்கொலைக்கு முயன்றான் என்பதே அதிர்ச்சி.

அவனா தற்கொலை செய்ய முயற்சிப்பான்? யாராலும் நம்ப முடியவில்லை ஆனால் கண் முன் சாட்சியாக மருத்துமனையில் உயிருக்கு இருவரும் போராடியபோது நம்பித்தான் ஆக வேண்டும் அல்லவா.

நடந்ததை முழுமையாக அறிந்தது முத்து மட்டும் தான் அதனால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க வில்லை மேலும் அவர்கள் தோட்டத்து வீட்டில் இருந்தார்கள் என்பதற்கும் சாட்சி இல்லாமல் போய்விட்டது,அனைத்தும் சீயானின் தெளிவான திட்டமிடல் என்பதை அறிந்த முத்து.

இப்படி திட்டம்போட்டு படித்து இருந்தா இந்நேரம் பெரிய பெரிய கட்டடம் கட்டி இருக்கலாம்,அதைவிட்டு புட்டு,வேணான்னு சொல்லுற பொண்ணுகிட்ட கண்ணாலத்துக்குக் கெஞ்சிகிட்டு, அவ பின்னாடி சுத்திகிட்டு இருக்கான் முட்டா பைய, நீ வீட்டுக்கு வா டா அப்புறம் இருக்கு.

பொறியியல் படிப்பில் பதினான்கு அரியர் வைத்து இருக்கும் சீயானை கருவி கொண்டான், அவனுக்கு வேம்புவின் மேல் அத்தனை கோபம், அன்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அனைவருக்கும் முன்னாள் தனது மாமன் குடும்பம் தலை வணங்கி நின்று இருக்காது.

என்ன முயன்றும் வேம்புவின் மீது முத்துக்குப் பாவம் என்று வரவில்லை, அவள் செய்த செயல் அப்படி, அதற்காகச் சீயான் செய்ததும் சரியென்று என்பதற்கில்லை, எது எங்க போய் முடியும் என்பதை என்னும் போதே கண்ணைக் கட்டியது.

பழைய எண்ணங்களை விடுத்து என்ன நடந்தாலும் பொறுமையா இருக்கணும் என்று எண்ணிக்கொண்டான்.
உள்ளே அனைவரும் பேசும் குரல் கேட்டது. அவரவர் மனதிற்கு ஏற்ப வேம்புவும்,சீயானும் அவர்கள் வாயில் அரைபட்டனர் பொன்னுரங்கம் மனைவியின் அழுகை சத்தமும்,அங்காயி குரலும் ஓங்கி ஒலித்தது,அதுக்கு மேல் நின்றால் தனது பொறுமை பறந்து விடும் என்று சென்று விட்டான் முத்து.
அவர்களது முடிவு அவன் அறிவான் அல்லவா.அந்த முடிவு அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் திண்ணம்.’சூடு சொரணை இல்லாத ஜென்மம்’ சீயானை மனதுக்குள் திட்டியவாறே மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவன் கண்டது அழுது கொண்டே செல்லும் பிச்சியைத் தான்,வேக எட்டுகளை எடுத்து வைத்து அவளைத் தடுக்க நடந்தவனின் இடையில் நீண்டு தடுத்தது அந்தக் கரம், மென்மையாக.

எவ அவ……………………

error: Content is protected !!