உயிர் – 10
கோட்டைநல்லூரில் பூஜைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டு இருந்தது.. ஆனாலும் கோவில் மணிகள் அடிப்பதை யாராலும் நிறுத்த முடியவில்லை.. ஊர் ஜனங்கள் ஆளாளுக்கு ஏதேதோ கூறிக் கொண்டு இருந்தனர்.. அவர்களுக்கு பயம் ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்று…
அப்பொழுது கோட்டைநல்லூர் கோட்டையின் அருகில் 3 கார்கள் வந்து நின்றது… அதில் இருந்து இறங்கினான் கெளதம்… இறங்கி நின்று இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அந்த மதிலை பார்த்தான் கெளதம்… பெரிய பெரிய பாறை கற்களை கொண்டு கட்டியிருந்தனர்… இரண்டு பக்கம் இரும்பு குழாய் கொடுத்து அதன் மேலே கோட்டைநல்லூர் என்ற எழுத்து பொன்னிறத்தில் மின்னிக் கொண்டு இருந்தது…
கெளதம் அவற்றை பார்ப்பதற்குள் அவனின் கார்ட்ஸ் வாச் மேனிடம் சென்று கோவில் பணி செய்ய மும்பையில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறி கோட்டை மதில் கேட் திறந்து விட கூறி இருந்தான்… அவன் திறந்து விடவும் கெளதம் மீண்டும் அவன் BMWவில் ஏறவும் சரியாக இருந்தது….. இவன் ஏறவும் இவனின் கார்ட்ஸ் ஓடி வந்து அவரவர் காரில் ஏறிக் கொண்டனர்… முதலில் ஒரு கார் செல்ல இரண்டாவது கெளதம் கார் உள்ளே சென்றது பின் அவர்களின் இன்னொரு கார் உள்ளே சென்றது…
ஊரின் மத்தியில் தான் கோட்டைத்தாய் கோவில் இருந்தது.. அதன் அருகில் தான் அந்த பூவரசம் மரமும் இருந்தது…. அவனின் கார் மெதுவாக கோட்டை மதில் சுவர் தாண்டி உள்ளே வரவும் கோவில் மணிகள் எல்லாம் அப்படியே நின்றது… அந்த பூவரசம் மரத்தின் பூவும், இலைகளும் உதிர்ந்து அவன் கார் வரும் பாதையில் வந்து விழுந்தது… கெளதம் அதை பார்த்துக் கொண்டே தான் வந்தான்… அவன் கண்ணுக்கு மஞ்சளும், பச்சையும் சேர்ந்த பாத விரிப்புகள் போட்டிருந்ததாகவே பட்டது… இதை பார்த்ததும் அவனுக்கு காரில் வர மனதில்லாமல்… காரை டிரைவரிடம் நிறுத்தக் கூறி வண்டியில் இருந்து இறங்கினான்.. இது எல்லாம் அவனுக்கு ஏதோ ஒரு உந்துதலில் தான் நடந்தது..
அவனின் ஷூவையும் காரில் கழட்டி வைத்துவிட்டு.. சாக்ஸுடன் வெளியில் இறங்கினான்… இவன் இறங்கவும் பின்னாடி வந்த கார் முன்னாடி வந்த காரில் இருந்த அவனின் கார்ட்ஸ்சும் இறங்கிக் கொண்டனர்… கார் நிற்கும் சத்தம் கேட்டு கோவிலில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தனர்… இவர்கள் பார்க்கும் பொழுது கெளதம் அவன் படைகளுடன் ராஜா போன்று நடந்து வருவதாகவே பட்டது…
அவனுக்கும் அப்படி தான் இருந்தது.. இதுவரை உணர்ந்திராத மரியாதையை அவன் அங்கு உணர்ந்தான்… ஏதோ மலர்விரிப்பில் நடந்து வருவது போலும், அங்கு நின்ற மக்கள் அவனை வரவேற்பது போலும் அவனுக்கு தெரிந்தது…
அப்பொழுது தான் மைத்ரேயி அவனை பார்த்தாள்… பார்த்துக் கொண்டே இருந்தாள்… இதுவரை அவர்கள் ஊரில் பார்த்திராத ஒரு அழகன் அவன்… அப்பொழுதே அவனை மனதில் ஏற்றி வைத்துவிட்டாள்.. அப்பொழுது பார்த்து கோவில் மணி வேகமாக ஒலிக்கவும் சரியாக இருந்தது… கோவில் மணி சத்தத்தில் தான் எல்லாரும் கனவில் இருந்து விழித்தது போல் விழித்தனர்… அந்த நேரம் கெளதம் கோவில் அருகில் வந்துவிட்டிருந்தான்.. அவனும் அப்பொழுது தான் கனவில் இருந்து விழித்தான்.. அவன் திரும்பி வந்த பாதையைப் பார்த்தான் அங்கு பூக்கள் ஏதும் இல்லை… அந்த மக்களும் அப்படி தான் பார்த்திருந்தனர்… எல்லாருக்கும் மறைமுகமாக கோட்டை அவன் இந்த ஊரின் ராஜா என்று உணர்த்தி இருந்தாள்…
அந்த ஊர் பெரியவரான சத்ரியன் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்… அவன் அந்த ஊர் மக்கள் எல்லாரையும் சுற்றி பார்த்தான் பார்த்து அவன் முகம் அஷ்ட்ட கோணல் ஆகியது… ஆம் அவன் இதுவரை கிராமத்திற்கு வந்தது இல்லை.. இது தான் முதல் முறை அவர்களை வேற்றுகிரக வாசிகளை போல் ஒரு பார்வைப் பார்த்தான்… அவனுக்கு அவர்கள் அழுக்காக இருந்தது போல் இருந்தது… தலை வாராமல் ஏதோ ஒரு கோலத்தில் இருந்தனர்… அந்த நேரம் அவனுக்கு சியோரா நியாபகம் வரவும் அவரை சரமாரியாக மனதில் திட்டிக் கொண்டு இருந்தான்..
அவருக்கு போன் செய்ய பேனை எடுத்துப் பார்த்தால் சுத்தமாக டவர் இல்லை… அவன் வாயில் நல்ல வார்த்தை மனம் போல் வந்தது.. இது எல்லாம் ஒரு ஊரு இங்க போய் அப்பா வைரவச்சுருக்காரே என்று அவனுக்கு கோபமாக வந்தது.. அந்த போனையே பார்த்துக் கொண்டு இருந்தான்.. அவனுக்கு முதலில் இந்த ஊர் பெயரே பிடிக்கவில்லை…அது தான் வர்சிக் வந்த அன்றே அந்த ஊருக்கு செல்லவே கூடாது என்று திடமாக முடிவெடுத்தான்… ஆனால் இன்று அப்பா இப்படி வரவச்சுட்டாரே என்று அவனுக்கு கோபமாக வந்தது..
ஆனால் அவனுக்கு தெரியவில்லை… கோட்டை தான் இங்கு வரவைத்தாள் என்று, அதே போல் இந்த டவர் நிறுத்திய வேலை எல்லாம் அவள் செய்தது என்று…
சுதாரித்த சத்ரியன் தான் அந்த ஊர் மக்களை பார்த்து போங்கள் என்று சைகை செய்யவும் எல்லாரும் அவரவர் வீட்டின் உள்ளே சென்றனர்.. அந்த மக்கள் தான் இவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர்…
அந்த ஊர் ஜனங்கள் செல்லவும் சத்ரியன் அவனை பார்த்தார்.. ஆனால் அவன் இவரை நிமிர்ந்துப் பார்ப்பது போல் இல்லையெனவும், “க்கும்” என்று குரலை கனைத்தார் சத்ரியன்.. அவர் அப்படி சத்தம் செய்யவும் நிமிர்ந்த கெளதம் சுற்றி எங்கும் பார்த்தான் பார்த்துக் கொண்டு மீண்டும் குனிந்துக் கொண்டான்.. அவனுக்கு அந்த ஊரில் யாரையும் பார்க்கப்பிடிக்கவில்லை…
விட்டால் இப்பொழுதே அவன் கிளம்பி விடுபவன் போல் இருந்தான்.. அது தான் அவன் அப்பாவுக்கு அழைக்க பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது இவர் வேற கழுதை மாதிரி கனைக்குறாரு என்று எண்ணி.. பின்னால் திரும்பி அவன் கார்ட்ஸை பார்த்து “இவர்ட்ட எல்லாம் விவரமும் கேட்டு.. கோவில் வேலை செய்ய ஒரு 10 ஆளை ஏற்பாடு செய்து தரமுடியுமா என்று கேளுங்கள்” என்று கூறி விறுவிறு என நடந்து சென்று அவன் காரில் ஏறி அமர்ந்துக் கொண்டான் கெளதம் சியோரா…
இவனின் இந்த ஆளுமையையும், திமிரையும், அலட்சியத்தையும் கோட்டையின் மாடியில் இருந்து ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மைத்ரேயி… அந்த நேரம் கோட்டைத்தாயின் முகத்தில் ஒரு கொடூர புன்னகை.. அந்த நேரம் யாரு பார்த்திருந்தாலும் பயந்திருப்பர்… அவளுக்கு நிச்சயமாக தெரியும் கெளதம் அவளை ஏறெடுத்துப் பார்க்கமாட்டான் என்று.. ஆனால் அவள் மனதில் காதலை விதைத்துவிட்டாள் கோட்டையம்மாள்….
கெளதம் கார்ட்ஸ் சத்ரியன் நோக்கி பார்வையை திருப்பவும், சத்ரியன் நேராக அவரின் கோட்டை நோக்கி சென்றார்.. அவர் செல்லவும் இவர்களும் அவர் பின்னே செல்லவும், அதை கண்ட கெளதம் “டேய் எங்கடா போறீங்க” என்று சத்தமாக கேட்டான்.. இங்கு இருப்பவர்களையும், இங்கு நடப்பதையும் பார்த்தால் ஏதோ பேய் கூட்டத்தில் வந்து மாட்டியதாகவே அவனுக்கு பட்டது அது தான் அவர்களை நிற்க கூறினான்…
கெளதம் அழைக்கவும் அவர்கள் நின்று “பையா அந்த அய்யாகிட்ட நீங்க சொன்னதை சொல்லணும் அது தான் போய்ட்டு இருக்கோம் பையா” என்று கூறினர்…
அவர்கள் அவ்வாறு கூறவும் அவர்களை முறைத்த கெளதம் “3 பேரு போங்க மீதி நீங்க இங்க வந்து நில்லுங்க” என்று அவர்களை தன் அருகில் அழைத்துக் கொண்டான்…
அவர்கள் 3 பேரும் உள்ளே போகவும் மைத்ரேயியும் மாடியில் இருந்து கீழே இறங்கினாள்.. அவளுக்கு அவனை பற்றி அறிய வேண்டி இருந்தது.. அதே நேரம் கெளதம் கார் கதவை திறந்து வைத்துக் கொண்டு கார் சீட்டில் இருந்து அந்த கோவிலை பார்ப்பது போல் அமர்ந்து இருந்தான்.. அவன் அருகில் அவன் கார்ட்ஸ் நின்றிருந்தனர்… அப்படி அமர்ந்து இருந்து அந்த ஊரை சுற்றி பார்த்தான்.. அப்பொழுது அவன் கண்ணுக்கு பசுமையான வயல் நிலம் கண்ணில் பட்டது… மனதில் “ம்ம் நல்லா செழிப்பா தான் இருக்கு ஊர்.. ஆனால் இந்த மக்கள் தான் ஏதோ ஆதி வாசி மாதிரி இருக்கிறார்கள்” என்று நினைத்துக் கொண்டு கோவில் பக்கமாய் பார்வையை திருப்பினான்..
அப்பொழுது அவன் கண்ணுக்கு தெரிந்தது. அந்த செழிப்பான பூவரசம் மரம்.. அந்த மரம் முழுவதும் இலையும், இலைகளுக்கு நடுவே மஞ்சள் நிறத்தில் பூவரசம் பூவும் சேர்ந்து பார்ப்பதற்கே அழகாக இருந்தது.. அவன் அந்த மரத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது அவனை நோக்கி அந்த மரத்தில் இருந்த பூ ஓன்று வந்து அவன் மடியில் விழுந்தது.. கொஞ்சம் ஷாக் ஆகி அந்த பூவை சிரிப்புடன் எடுத்து கையில் வைத்துக் கொண்டு அதன் தண்டை பிடித்துக் கையால் சுற்றிக் கொண்டு அப்படியே அவன் பார்வை அந்த கோவில் பக்கம் பார்வையை திருப்பினான்..
அந்த கோவிலில் கோட்டை சிலையை பார்த்தான்.. அமைதியாக சிரித்துக் கொண்டு இருப்பது போல் அவனுக்கு பட்டது.. எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு கோட்டை வாயில் நோக்கி பார்வையை திருப்பும் போது அவனின் கார்ட்ஸ் வந்துக் கொண்டு இருந்தனர்… அவர்கள் கெளதம் அருகில் வந்து “பையா அவங்க நிறைய கண்டிஷன் போடுறாங்க பையா ” என்று கூறினான்..
அவர்கள் அப்படி கூறவும் என்ன என்று பார்வையாலையே கேட்டான்.. அவன் கேட்கவும் “பையா இந்த ஊருல 6 மணிக்கு மேல நாம வெளிய வரக்கூடாதாம், எந்த பொண்ணுங்களையும் பார்க்க, பேச கூடாதாம், சாப்பாடு அந்த கோட்டையில் இருந்து தான் வருமாம், சரியா 6 மணிக்கு அந்த கோட்டைக்குள்ளே போய்டணுமாம், அந்த கோட்டையில் தான் தங்கணுமாம் பையா ” என்று சத்ரியன் கூறியதை அப்படியே வந்து கூறினார்கள் அவன் கார்ட்ஸ்…
அவர்கள் பட்டியல் முடியவும் “வாட்” என்று அதிர்ந்து எழுந்து நின்றான் கெளதம்.. பின் அவர்களை பார்த்து “ஹா ஹா” என்று சத்தமாக சிரித்து விட்டு… “பின் அவர்களை நோக்கி இந்த ஊரு ஜனங்கள் எல்லாம் பார்க்க ஆதிவாசி மாதிரி இருக்கு இதுல நாங்க பேசக்கூடாதாமா?? போய் சொல்லுங்க எங்க பையா இந்த ஊர் ஜனங்களை எட்டி கூட பார்க்கமாட்டார்… அதே போல உங்க கண்டிஷன் எல்லாம் கேட்க மாட்டார்… முதல உங்க ஊர் ஜனங்கள் என்னை தொந்தரவு பண்ணாம இருந்தால் பொதும் நான் அந்த கோட்டைக்குள் கால் எடுத்து வைக்கமாட்டேன்.. இங்க இந்த பூவரசம் மரத்துக்கு கீழ டெண்ட் கட்டி நான் இருந்துகிடுவேன்.. நீங்க வேணா அங்க போய் இருங்கடா” என்று கூறி அவன் காரில் எதுக்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்திருந்த டெண்ட் கட்ட தேவையான துணியை எடுக்க போகவும் அவனை தடுத்த அவனின் கார்ட்ஸ் அதை எடுத்துக் கொண்டு அந்த மரம் நோக்கி சென்றனர்.. மீதி 3 பேர் கோட்டை நோக்கி சென்றனர்.. கெளதம் கூறியதை கூற..
அவர்கள் சத்ரியனிடம் கூறவும் சத்ரியன் யோசனையாக புருவத்தை சுழித்தார் பின் நம்ம ஊர் ஜனங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என்று எண்ணி நாளையில் இருந்து 10 பேர் உங்களுக்கு வேலைக்கு வருவார்கள் என்று கூறிக் கொண்டு எழுந்து அவர் ரூம் நோக்கி சென்றார்.. அவர் செல்லவும் பேசியதை எல்லாம் கேட்ட மைத்ரேயி “ம்ம் பரவலா நம்ம மாமா நல்லவரா தான் இருக்கிறார்.. என்ன கொஞ்சம் கோவக்காரரா இருக்கார்.. நாளையில் இருந்து சமையல் செய்யும் போது கொஞ்சம் காரம் குறைச்சு போட்டு மாமாக்கு குடுக்க வேண்டும்” என்று அவள் பாட்டுக்கு எண்ணிக் கொண்டு மீண்டும் கௌதமை பார்க்க மாடி நோக்கி சென்றாள்..
சத்ரியனிடம் பேசிக் கொண்டு வந்தவர்கள். அவர் கூறியதை கௌதமிடம் கூறிக் கொண்டு டெண்ட் கட்டும் வேலையை பார்க்க சென்றனர்… அவர்கள் செல்லவும் காரில் இருந்து இறங்கிய கெளதம் கைகள் இரண்டையும் நீட்டிக் கொண்டு சோம்பல் முறித்துக் கொண்டு மாடி நோக்கி பார்வையை செலுத்தவும் அங்கு மைத்ரேயி காலையில் குளித்ததில் தலை காயாமல் இருக்கவும் இங்கு கௌதமை பார்த்துக் கொண்டே தலையை பிரித்துக் கொண்டு இருந்தாள்.. அவன் பார்க்கவும் அவன் கண்ணுக்கு அவள் முடி எல்லாம் மேல் எழும்பி காற்றில் ஆடியது போல் தெரியவும் “பிதாஜி பேய்” என்று அலறிக் கொண்டு துள்ளி விலகி கோவில் நோக்கி பார்வையை செலுத்தவும் கோவிலில் இருந்த சிலை டக்கென்று மறைந்து கோவில் கதவையும் அறைந்து சாற்றியது… அதை பார்த்து “மாதாஜி சாமி” என்று அலறி திரும்பி அந்த பூவரசம் மரம் நோக்கி பார்வையை செலுத்தினான் அந்த மரத்தில் இருந்த இலைகள் எல்லாம் காணாமல் வெறும் பூக்கள் மட்டுமே இருந்தது அதை பார்த்து பயத்தில் “பேயாஜி பேய்” என்று அலறி வைத்தான் கெளதம்…
அவன் அலறியது மாடியில் இருந்த மைத்ரெயிக்கு அவளை அழைத்தது போல் இருக்கவும் அவனை நோக்கி மான் குட்டியாக துள்ளி வந்தாள்.. அவள் வரும் நேரம் அதிர்ச்சி அடைந்த மனதை சமன் படுத்த கீழே குனிந்துக் கொண்டு நெஞ்சில் கைவைத்துக் கொண்டு மெதுவாக நெஞ்சை தடவி விட்டு கொண்டு மாடியில் இருந்தது பேயா என்று பார்க்க மெதுவாக கண்ணை மேல் நோக்கி பார்க்கவும் அவன் முன் “மாமா” என்று அழைத்துக் கொண்டு மைத்ரேயி வந்து நின்றாள்…
அவள் அப்படி வந்து நிற்கவும் பயத்தில் ஒரு அடி பின்னால் எடுத்து வைத்து கொஞ்சம் ஆசுவாச படுத்திக் கொண்டு அவளை கேள்வியாக பார்த்தான் கெளதம்.. அவன் பார்வையை உணர்ந்த மைத்ரேயி மாமாக்கு தமிழ் தெரியலை போல என்று நினைத்து “மாமாஹே நாஹே மைத்ரேயிஹே.. இதுஹே” என்று கோட்டையை நோக்கி கையை காட்டி “எங்கஹே கோட்டைஹே உள்ளஹே வாங்கஹே” என்று கூறி.. மூச்சு விடாமல் அவனை பார்த்து கையை கையை ஆட்டி பேசி பின் மெதுவாக அவனை பார்த்துக் சிரித்து, ” மாமாஹே எப்படிஹே இருக்கீங்கஹே ” கூறி கூறி அவனுக்கு பைத்தியம் பிடிக்க வைத்தாள் மைத்ரேயி… (“மாமா நா மைத்ரேயி.. இது எங்க கோட்டை . உள்ள வாங்க ” மாமா எப்படி இருக்கீங்க)
அவள் கூறி முடிக்கவும் அவனின் கார்ட்ஸ் அவளை பார்த்து சிரிக்கவும், நினைவு வந்த கெளதம் அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்… ஒரு பட்டுப்பாவாடை போட்ட சிறு பெண்ணாக அவன் கண்ணுக்கு தெரிந்தாள் மைத்ரேயி… சிறு பெண் ஏதோ தெரியாமல் பேசுகிறாள் என்று எண்ணிய கெளதம் அவனின் கார்ட்ஸ் பார்த்து முறைத்து விட்டு, அவளை பார்த்து திரும்பி ” போ போய் படிக்குற வேலையை பாரு” என்று அமைதியாக கூறி கொண்டு திரும்பி நடக்க ஆரம்பிக்கவும் அவன் பேசியது தமிழ் என்று தெரிந்த மைத்ரேயி “மாமாஹே” என்று அவனை அழைத்து அவன் கையை பிடித்தாள்…
அவ்வளவு தான் “அடச்சீ கையை விடு” என்று அவளிடம் சீறி அவள் கையை தட்டி விட்டு “மாமாவாம் மாமா.. போ அங்கிட்டு” என்று அவளிடம் சீறி மனதில் “பிதாஜி” என்று பல்லை கடித்துக் கொண்டும் “இது வேற லூசு மாதிரி… இந்த ஊருல எல்லாம் லூசு போல, இதுல இவங்க கிட்ட பேச கூடாதாம் பார்க்க கூடாதாம்” ச்சை என்று கையை மடக்கி காற்றில் குத்தி திட்டிக் கொண்டே அவளை திரும்பி பார்த்தான் கெளதம் அவள் பார்வையில் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் விட்டான்…
அவன் இவளை லூசு என்று திட்டிக் கொண்டே போகவும் “மாமா என்னையே நீ லூசுன்னு சொல்லுறியா.. ஆமாய்யா நான் உன் மேல லூசா தான் இருக்கேன்.. பார்த்ததும் அப்படியே மனசுல பதிஞ்சுட்டியே மாமாஹே.. ஆனா உனக்கு இந்த மைத்ரேயி பத்தி சரியா தெரியல… ஒண்ணு நினைச்சா அதை அடையாமல் விடமாட்டாள்.. மனதில் நினைத்தவனை சாகுறவரைக்கும் மறக்க மாட்டாள்… உன்னை விடமாட்டேன் மாமா… செத்தாலும் உன்னை தொடர்ந்து வருவேன் மாமா” என்று மனதில் அவனை பார்த்துக் கொண்டே சபதம் எடுத்தாள்…
அவள் பார்வையையும். அவள் தீவிரத்தையும் பார்த்த கெளதம் ” டேய் கெளதம் கொஞ்சம் உஷாரா இருடா.. இந்த லூசு உன்னை உஷார் பண்ண பாக்குது… உன் அழகுக்கு இந்த காஞ்சு போன லூசு எல்லாம் செட் ஆகவே மாட்டாள் எதுக்கும் கொஞ்சம் கவனமாக இரு என்று அவனின் மனசாட்சி சொல்லவும் கேட்டுக் கொண்டே அவன் டெண்ட் நோக்கி சென்றான்.. அவனின் கார்ட்ஸ் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவன் பின்னே சென்றனர்….
அவர்கள் செல்லவும் மைத்ரேயி மனதில் எடுத்த முடிவுடன் அவளின் கோட்டை நோக்கி சென்றாள்..
அங்கு மும்பையில்…
RK படு யோசனையில் இருந்தான்.. இன்று கௌதமை எப்படியும் கௌசிக் அரெஸ்ட் செய்துவிடுவான்… அதன் பிறகு இந்த சியோராவை எப்படியும் முடித்து விடலாம் என்று எண்ணி கொண்டு இருக்கும் பொழுது தான் மீண்டும் CPI ஆபிஸில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது.. எப்படி சியோராவுக்கு CPI ஆபிஸில் ஆட்கள் இருக்கிறதோ அப்படி தான் இங்கு RKக்கும் ஆட்கள் இருந்தது. அப்படி தான் கெளதம் அரெஸ்ட் விஷயம் அவனுக்கு தெரிந்தது.. இப்பொழுது மீண்டும் அழைத்து கெளதம் எங்கோ சென்று விட்டான் என்றும் அவனுக்கு பதிலாக விதார்த்தை கொன்றது வேற யாரோ என்று ஒருவன் ஆஜர் ஆகி இருக்கிறான் என்று தகவல் வரவும் அவன் கோபம் எல்லாம் இப்பொழுது சியோரா மேல் திரும்பியது… எப்படியாவது சியோராவை இன்று முடிக்கவேண்டும் என்று அவன் வீட்டின் முன் அவனும், அவன் மகனும் காவல் இருந்தனர் அவர்கள் காரில்..
சியோரா வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது கோட்டைத்தாயே என் மனைவியை மன்னித்து விடு அவள் ஏதோ தெரியாமல் செய்துவிட்டாள். என்று யோசித்துக் கொண்டும், கௌதமை இங்கு நான் காப்பாற்றிவிட்டேன்.. உன்னை நம்பி தான் அங்கு அனுப்பியிருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டே வெளியில் வந்தார்…
இவர் வெளியில் வரவும் சிலு சிலு என்ற சத்தத்தில் சத்ரியா, மையூரி, வர்ஷிக் மூவரும் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பவும் உடைந்த கோட்டை போட்டோவின் கண்ணாடிகள் சிதறி கிடந்ததது எல்லாம் ஒரு இடத்தில கூடிக் கொண்டு இருந்தது.. எல்லாம் கூடி பழையமாதிரி போட்டோவாக மாறியது… இதை மூன்று பேரும் ஆதரிசியுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்… அப்பொழுது அந்த போட்டோ எழும்பி சத்ரியா முன் ஒரு நிமிடம் நின்று மீண்டும் சாமி ரூம் நோக்கி செல்லவும் சத்ரியா அப்படியே மயங்கி விழுந்தார்…
அவர் மயங்கி விழவும் மையூரி அம்மா, என்றும் வர்ஷிக் ஆன்ட்டி என்றும் அழைத்துக் கொண்டு அவளை வந்து தாங்கி பிடித்தனர்.. அவரை மெதுவாக கீழே கிடத்தி விட்டு ஓடி போய் தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்த வர்ஷிக் அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.. அப்படியும் அவர் எழவில்லை.. மயூரி அம்மா அம்மா என்று அவரை தட்டி எழுப்பியும் அவர் எழவில்லை…
அப்பொழுது மீண்டும் சாமி ரூமில் இருந்த கோட்டை போட்டோ இவர்களை நோக்கி திரும்பி வந்தது… வந்து மையூரி, வர்ஷிக் இருவர் முன்னும் ஒரு நிமிடம் நின்று தள்ளுங்கள் என்று செய்கை செய்தது.. அதாவது அந்த போட்டோ கொஞ்சம் நிகண்டு காமித்தது. அந்த போட்டோ அப்படி செய்யவும் மையூரி, வர்ஷிக் இருவரும் மரணபயத்தை கண்களில் தேக்கி கொஞ்சம் வழி விட்டு நின்றனர்…
அவர்கள் இருவரும் தள்ளி நிற்கவும் அந்த போட்டோ சத்ரியா முன் வந்து நின்று அவன் தலையில் ஒரு அடி வைத்தது.. அந்த அடியில் மயங்கிய சத்ரியா மெதுவாக கண்ணை திறக்கவும் அவள் கண்முன் மீண்டும் அந்த போட்டோ நிற்கவும் அவள் மீண்டும் மயக்கத்துக்கு போக ஆரம்பிக்க கண்கள் மெதுவாக சொருக ஆரம்பிக்கவும் அந்த போட்டோ மீண்டும் அவள் தலையில் விழ வரவும் அதிர்ந்த சத்ரியா டக்கென்று எழுந்து தவண்டு போய் வர்ஷிக் அருகில் போய் இருந்துக் கொண்டாள்… அவள் அங்கு போய் இருக்கவும் மீண்டும் அந்த போட்டோ அவர்களை நோக்கி திரும்பி நின்று மீண்டும் சாமி ரூம் நோக்கி சென்றது….
அது சாமி ரூம் நோக்கி செல்லவும் என்னடா வர்ஷிக் இப்படி எல்லாம் நடக்குது என்று சத்ரியா வர்ஷிக் நோக்கி கேட்கவும் அவன் இன்னும் அந்த அதிர்ச்சி நிலையில் இருந்து மீளவில்லை…
ஷதாஷியிடம் வெளியில் போய் வருவதாக கூறிய கௌசிக் வீட்டை விட்டு வெளியில் வரவும் அவனுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது வர்மா தான் அழைத்திருந்தான்.. சார் விதார்த்தை கொலை செய்தவன் என்று ஒருத்தன் வந்த சரண்டர் ஆகிட்டான் சார் என்று அவன் கூறவும் கௌசிக்கு தெரிந்து விட்டது எல்லா வேலையும் செய்தது இந்த வர்மா தான் என்று.. ஆம் வர்மாவிடம், சியோரா கூறி இருந்தார் கெளதம் பதிலாக யாரையாவது இங்கு போடு நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று… அவனும் ஒருவனை இங்கு கொண்டு வந்துவிட்டு இதோ கௌசிக்கை அழைத்து கூறியும் விட்டான்..
வர்மா கூறியதை கேட்ட கௌசிக்கு கோபமாக வந்தது. இந்த அப்பாவை என்று திட்ட ஆரம்பித்து வேண்டாம் வீட்டுக்கு போய் அவரை பார்ப்போம் என்று நினைத்து காரை நேராக சியோரா வீடு நோக்கி விட்டான்… அப்பொழுது தான் சியோரா தளர்ந்த நடையுடன் வரவும் அவரை யோசனையுடன் பார்த்துக் கொண்டு காரை செலுத்தி வந்தான்…அடுத்த செகண்ட் கண்ணிமைக்கும் நேரத்தில் சியோராவை அடித்து தூக்கியது… RK வும், அவன் மகனும் வந்த வண்டி அவர்கள் பிளான் போட்ட படி சியோராவை முடித்துவிட்டனர்..அது மதிய நேரம் ஆட்கள் அதிகமாக இல்லை…
அவர்கள் அடித்து வீழ்த்தி சென்ற 2 நிமிடத்தில் தூரத்தில் கோட்டையம்மாள் என்று நேம் போர்ட் எழுதிய லாரி எங்கிருந்தோ திடீர் என்று வந்து RK காரை அடித்து வீழ்த்தி சென்றது… அப்பொழுது கடைசியாக RK கண்ணுக்கு தெரிந்தது லாரியின் மேல் பாடியில் ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை கிழே தொங்க போட்டு கொண்டு வந்த அவளை தான்.. பார்த்து அப்படியே இறந்துப் போனான் RK…. அவன் மகன் அடித்து வீழ்த்திய இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு இறந்துப் போனான்….
சியோரா ரத்த வெள்ளத்தில் கிடைக்கவும் கௌசிக் வண்டியை நிறுத்திவிட்டு ஓடி வந்து இவரை தூக்க முயற்சி செய்யவும் அவன் முன் அந்த லாரி வந்து நின்றது… வந்து நின்ற லாரியில் இருந்து சியோராவை நோக்கி பறந்து வந்த பூவரசம் இலைகள் அவர் மேல் விழுந்து அவர் காயத்தை குணமாக்கி, அவர் ரத்தத்தை துடைத்து மீண்டும் அந்த லாரியில் போய் சேந்ததும். கொஞ்ச தூரம் சென்று மறைந்து விட்டது… கௌசிக் இதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே சியோரா எழுந்தார்.. எழுந்து நான் எப்படி இங்க வந்தேன் என்று கேட்டுக் கொண்டே வர்ஷிக் முகம் பார்த்தார்.. அப்பொழுது வேகமாக ஒரு ஆம்புலன்ஸ் இவர்களை கடந்து சென்றது…
அதே நேரம் அங்கு கோட்டைநல்லூரில் அந்த பூவரசம் மரத்தில் இருந்து ரத்த கறைகள் கொண்ட இலைகள் உதிர்ந்து விழுந்துக் கொண்டு இருந்தது…
அப்பொழுது கோட்டைத்தாயின் கோவில் கதவுகள் தானாக திறந்துக் கொண்டது… அப்பொழுது கதவு திறக்கும் சத்தத்தில் கெளதம் வெளியில் வந்தான். அப்பொழுது ஒரு ரத்தம் சுமந்த இலை ஓன்று அவன் மேலாக விழுந்தது… அதை பார்த்து அதிர்ந்து விழித்த கெளதம் பார்வை தானாக கோவில் நோக்கி சென்றது. அங்கு கோவில் சிலை அவனை பார்த்து அமைதியாக சிரித்தது போல் இருந்தது…
அதை பார்த்ததும் அவன் காண்கள் சாசர் போல் பெரிதாக இருந்தது.. முதலில் பார்க்கும் பொழுது சிலை மறைந்தது இப்பொழுது சிலை இருக்கு… என்னடா நடக்குது இங்க… சரியான பேய்கள் நிறைந்த மர்ம ஊராக இருக்கு இனி ஒரு நிமிடம் கூட இங்க இருக்க கூடாது என்று அவன் டெண்டை கழட்ட சொல்லி அவன் கார்ட்ஸ்க்கு உத்தரவிட்டு கொண்டு அவனின் பேக் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு அவன் கார் நோக்கி சென்றான் கெளதம்….
கெளதம் ஊரை விட்டு கிளம்புவானா?? அவனை கோட்டை வெளியில் விடுவாளா?? அவன் ஊரை விட்டு போனால் மைத்ரேயி என்ன செய்வாள்?? பொறுத்திருந்து பார்ப்போம்..
உயிர் எடுப்பாள்….
Leave a Reply