sippayinmanaivi4
sippayinmanaivi4
ஒற்றர் கூட்டம்
அந்த சௌவலய பெண் திடீரென நிறுத்தியதும் உக்ரகாரி மிகுந்த கோபமடைந்தான். ‘ஏய் பெண்ணே! ஏன் இப்படி செய்தாய் ? யாருடன் இருக்கிறாய் என்று தெரியுமல்லவா ?’ உச்சத்தை அடைய போகும் ஆணின் மனநிலை சற்று மிருகத்தனமாகத்தான் இருக்கும் ஆகவே அதை கடந்து வர சில நிமிடங்கள் ஆனது உக்ரகாரிக்கு.
‘தெரியும் அரசே! தெரிந்துதான் , தலையின் மீது நிராசை கொண்டுதான் இப்படி செய்தேன்!’
‘ஏன்? சாகவேண்டும் என்றால் வேறு வழி இல்லையோ ?’ உக்ரகாரி சற்று நிதானம் அடைந்தான், மீண்டும் புணர்வதை தொடரவேண்டும் என்று ஆசையுடன் பொறுமை காத்தான்.
‘இல்லை அரசே! இந்த போரில் வென்று விடுவோம், எங்களுக்கு வாழ்க்கை பிறக்கும் என்றிருந்தோம். ஆனால் அவ்வாறு இல்லை, இந்த வணிகர்களை நம்பி களத்தில் இறங்கினால் இது தான் கதி’ அச்சௌலவலய பெண் சொன்னாள்.
‘விலைமகள் அறிவுறை கூறும் அளவிற்கு என் ஆளுமை குறைந்து விட்டதோ? ஏன் உன் தலையை இன்னும் எடுக்காமல் இருக்கிறேன் என்று தன் நிலைமறந்த உன் மதிக்கு தெரியாமல் இருக்கலாம் அனால் பொன்
நகைகளால் புண்ணுற்ற உடலுக்கு தெரியவில்லையா?’ உக்ரகாரி அப்பெண்ணை வலுக்கட்டாயமாக புணர தயாராகிவிட்டான்.
‘அரசே, இது அறிவுறை அல்ல, இந்த இழிபிறப்பு, வகன பேரரசிற்கு செய்யும் சிறிய தொண்டு என்று எண்ணி கூறுகிறேன். தங்களுக்கு விருப்பமில்லையெனில் என் உடலும் தலையும் உமக்கு’ அந்த பெண் சிறு கலக்கத்துடன் சொன்னாள்.
‘உன் பெயர் என்ன ?’
‘ஆலதா’
‘சொல், உன் எண்ணம் என்ன ?’ உக்ரகாரி கையில் தேறலை ஏந்தி கொண்டான்.
‘எப்பேர்பட்ட ஒற்றனும் சில சமயங்களில் சரியான செய்தி தர தவருவதுண்டு ஆனால் நான் சொல்லும் இந்த ஒற்றர்களிடம் தப்பிக்க இயலாது’ ஆலதா சொன்னாள்.
‘யார் அவர்கள், எங்கிருக்கிறார்கள்?’
‘இந்த மதனபள்ளி பெண்கள் தான்!’ ஆலதா சொன்னாள்.
‘விலைமகள்கள் ?!’ உக்ரகாரி கேட்டது அந்த கோட்டை சுவர்களில் எதிரொலித்து ஆலதா காதுகளில் இரைச்சல் உண்டாகும் அளவிற்கு பலமாக இருந்தது.
ஆலதா அடைந்த கோபத்திற்கு அளவே இல்லை. உடனே தன் நகைகளை விறு விறு வென கழற்றி , உக்ரகாரியின் மேல் பாய்ந்தாள். அடுத்த சில நிமிடங்கள் உக்ரகாரி கைவசம் இல்லை. ஆலதா அவன் உடலிற்கு தந்த சுகத்தையும் இடை இடையே அவளின் பெரிய கண்களை கொண்டு அவள் பார்த்ததையும், அவன் கால்கள் பட்டு மெத்தையில் அசைந்து வேர்த்ததையும், அது சிராய்ப்புகள் சில்லென்ற காற்றில் ஆறுதல் அடைந்தையும், தன் உடல் தளர்ந்ததையும் அவனால் பார்க்கமட்டுமே முடிந்தது.
‘என்ன ஒரு சேவை, இப்பொழுது புரிகிறது’ உக்ரகாரி பேச்சும் மூச்சும் கிறங்கிய கண்கள் தெளிவடைந்து கட்டிலில் இருந்து எழுந்தான், தன் குறுவாளை எடுத்தான், ஆலதா அருகில் வந்தான், வழுக்கும் அவள் கைகள் உக்ரகாரியின் பாடியில் தப்பவில்லை, அவளின் கை முறித்தான் முதுகில் அடைத்தான், மெலிசான பச்சை நரம்புகள் தெரியும் – அவள் வியர்வையில் ஈரமான கழுத்தில் குறுவாளை வைத்தான்.
‘நீ ஒரு சௌவலய பெண், உனக்கேன் வகனர்கள் மேல் ஆர்வம்?’ உக்ரகாரி அரசனுக்கேற்ற கர்ஜனையுடன் கேட்டான். எவராயினும் அச்சமுற்றால் ஆச்சரியமில்லை. ஆனால் ஆலதா உடலில் எந்த பயமும் இல்லை அவள் குரலில் நடுக்கமில்லை.
‘உங்கள் பாட்டன் கண்டதோல் பேரரசர் போருக்கு முன் சௌவலய பேரரசு தானே?’ உக்ரகாரி அவள் சொல்வதை உணர்ந்தான். பிடியிலிருந்து விடுவித்தான்.
நம் ஒற்றர்கள் அனைவரும் உன்னை போல் திறமைசாலிகளா என்று சோதிக்க வேண்டும் என்று நகைப்புடன் சொன்னான். ஆலதா தன் காரியம் கைக்கூடியதை நினைத்து புன்னகைத்தாள்.
*********
‘தனிநாடாக பிரிய போகும் நாடுகள் எது? ‘ உக்ரகாரி கேட்டான்.
‘இரு திங்கள்கள் கழித்து கூடல் நகரில் நடைபெறும் கொண்டாட்டத்தில் அறிவிக்கப் போகிறார்கள், ஆனால் இதுவரை கிடைத்தச் செய்தி இது : கிழக்கில் பெருங்கலூர் மற்றும் பொன்ஆம்பல். மேற்கில் பிரம்பி மற்றும் தோண்டி. வடக்கில் கல்லூர் மற்றும் கருவூர். தெற்கில் குமரிகோடி மற்றும் திருகோணம். பெருங்கலூரில் மலையமான் தலைமை, பொன்ஆம்பல் வேளாதன் ஆட்சி, கல்லூரில் கல்லாடர், கருவூரில் வேங்கைமார்பன்,
குமரிகோடி இறைநேசன் ஆட்சி, திருகோணம் மார்த்தாண்டன் ஆட்சி, பிரம்பி கந்தன் ஆட்சி மற்றும் தோண்டியில் தேர்மலையன் தலைமை.’ என்று ஒற்றன் ஒருவன் சொன்னான். இந்த பேச்சுக்கள் சில மணிநேரங்கள் தொடர்ந்தது. பின்பு தனிமையில் உக்ரகாரியும் தளபதி குமாருடும் அடுத்த செயல்களை பேசினர்.
‘நாகரின் வடமேற்கில் இருக்கும் நிதி தலைநகரான வஞ்சிகாடு, நிதி தலைவன் கணியன் பார்த்துக்கொள்கிறான் அல்லவா?’ தளபதி கூறினார்.
‘ஆம் அவனின் ஆற்றலால் தான் ரோமர்களும், யுவனர்களும் நாகர் நாட்டில் பல இடங்களில் தங்களுக்கென சாலைகள் அமைத்துக்கொண்டு வாழ்கிறார்களாம். அந்தப் பொன்னான நகரில் வாழவும் வணிகம் செய்யவும் கூட்டம் அலைமோதுகிறதாம்’ உக்ரகாரி வழக்கமான சலிப்புடன் சொன்னான்.
‘அவன் பிரம்பி அரசனுடனும், தோண்டி அரசனுடனும் சிறப்பு நிதி ஏற்பாடுகள் செய்கிறானாம், குறைந்த திரைக்கு ரோமர்களுக்கு சிறுதானியங்களை ஏற்றுமதி செய்கிறானாம். அது போக அடிமைகளுக்கு சிறப்பு வேலைத்திட்டம் என ஏதேதோ செய்கிறான்’ தளபதி சொன்னார்.
‘நடுவில் இருக்கும் சிற்றரசர்களை நாம் கவர்ந்து விடுவோம் என்று யூகித்திருக்கிறான் கரும்நள்ளி’ உக்ரகாரி சொன்னான் .
‘கரும்நள்ளி தனக்கு கீழ் இருப்பவர்களின் ஆலோசனையை உதாசீனப்படுத்துவதில்லை, கணியனின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை’ தளபதி சொன்னான்.
‘நாமும் நமக்கு கீழ் இருப்பவர்கள் அறிவுறை கேட்கவேண்டிய நேரம் இது’ உக்ரகாரி சொல்லிவிட்டு தளபதியிடம் மர்ம புன்னகை செய்தான்.
இருவது பெண்களுடன், பல பல்லக்குகள் ஐநுறுவர் பாலத்தின் மீதேறி சௌவலய நோக்கி சென்றது. அதில் பெரும்பாலும் சௌவலய பெண்களும் மதனபள்ளி பெண்களும் இருந்தனர். உக்ரகாரியின் மனம் அமைதியற்ற மதமேறிய யானை போல் இருந்தது, பூம்புகாரின் காற்றும் மண்ணும் தன் உடலெங்கும் உணரவேண்டும் என்ற வெறி தலைக்கேறியது.
******
ஐநுறுவர் மாநாடு , இது முழுவதும் வணிக நாடு. மூன்று பேரரசுகளுக்கும் பெரிய எல்லையாக இருப்பது மங்கூர் மலை தொடர், இந்த மலை தொடரின் தெற்கில் நாகர் நாடு, வடக்கில் சௌவலய மற்றும் வகன நாடுகள். ஐநுறுவர் மாநாடு மங்கூர் மலை தொடரை ஒட்டி மூன்று பேரரசின் எல்லைகளில் சிறுபகுதிகள் இருக்கின்றது. அதாவது தெற்கில் நாகர் நாட்டில் அரை பகுதி நாடு, வடக்கில் முதல் கால் பகுதி சௌவலய நாடு மீதி கால் பகுதி வகன நாடு. ஐநுறுவர் மாநாட்டின் வடக்கிற்கும் தெற்கிருக்கும் இடையில் இருக்கும் மங்கூர் மலை தொடரை குடைந்து வணிக சாலை அமைத்திருந்தனர் ஐநுறுவர். முன்பு கூறியது போல ஐநுறுவர் என்பது வணிகர்கள் தங்களுக்கென ஏற்படுத்திக்கொண்ட இனக்குழு. மூன்று பேரரசுகளுக்கும் திரைக் காசுகளை மூட்டைகளில் அனுப்பும் பெரும் பொருள் பலம். இந்த ஐநுறுவர் மாநாட்டில் எந்த பேரரசும் போர் தொடுக்கக்கூடாது, உரிமை கொண்டாடக்கூடாது மற்றும் வணிகத்திற்காக ஏற்படுத்திய மங்கூர் சாலையை படையெடுப்பிற்கு பயன்படுத்தக்கூடாது. அரசர்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு செல்வமும் வாழக்கைத்தரமும் கொண்டவர்கள். ஐநுறுவரை பகைத்து கொண்டால் அவர்களின் பேரரசிற்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு ஐநுறுவரின் செல்வாக்கு பெருகி இருந்தது. ஐநுறுவர் மட்டுமின்றி சொற்பமானோர் ஐநுறுவர் அல்லாது பெரும் வணிகர்களாக இருந்தனர். அவர்களில் இருவரே உக்ரகாரியுடன் மூலோபாயத்தில் ஈடுபட்டிருந்தனர்.
உக்ரகாரியின் ஒற்றர் பெண்கள் கூட்டம் இருந்த அப்பல்லக்குகள் ஐநுறுவர் மாநாட்டின் சௌவலய நுழைவாயில் வழியே வந்துகொண்டிருந்தது. சௌவலய வாயில் என்று குறிக்கும் விதத்தில் இரு பெரும் காட்டு பன்றிகள் வாயிற்காவலர் சிலைகளாக வைக்கப்பட்டிருந்தது. அதன் உயரத்தை பார்த்து ஆச்சரியப்பட ஒரு பொழுது போதாது. அந்த ஒற்றர் பெண்கள் அதை கண்டு வியந்தவாரே ஐநுறுவர் மாநாட்டினுள் சென்றனர்.