Sirpiyin Kanavugal – 5

அத்தியாயம் – 5

அன்று மதியம் வழமைபோலவே வகுப்புகள் முடிந்து வெளியே வரும்போது மழைநிலாவை பார்த்தான். முகிலன் இவனுடன் பேசிய படியே வரவே, “முகில்” என்ற அழைப்புடன் ஓடிவந்த மேகாவைப் பார்த்தும் ஒரு நிமிடம் பதறிவிட்டான்.

“என்ன விடயம் இவ்வளவு கெதியா வறாள்” என்றவனின் பார்வை அவளின் பின்னோடு செல்ல, “அம்மா போனில் கதைச்சாங்க, உன்னோடு சேர்ந்து கெதியா வர சொன்னார்”  விவரத்தை சொல்லி முடிக்க அவனும் தாமதம் செய்யாமல் நண்பனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் மட்டும் தனியாக நடந்து வர அவள் தோழியுடன் பேசியபடியே அவனை கடந்து செல்ல, ‘என்ன கண்டுக்காமல் போறாள்’ என்ற எண்ணம் அவனின் நெஞ்சில் எழுந்தது. மழைநிலா அவனின் மனதில் சலனத்தை ஏற்ப்படுத்த தொடங்கியிருந்தாள்.

கொஞ்சதூரம் சென்றபிறகு மயூரி அவளிடம் விடைபெற்று செல்ல மலைநிலா தன்னுடைய ஸ்கூட்டியில் கிளம்பிவிட அவளை பார்வையில் பின்தொடர்ந்தபடி நின்றிருந்த எழிலும் பைக்கில் வீடு நோக்கிச் சென்றான்.

இருவரும் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. அது நல்லதுக்கான தொடக்கமா இல்லை தீமைக்கான அடுத்த கட்ட பயணமா என்று தான் புரியவில்லை. அன்று அவர்கள் பிரிவதை பார்த்து கண்ணீர் வடித்த அதே காதல்தான் இன்று அவர்களை சேர்க்க திட்டம் தீட்டுகிறதோ?

இலங்கையில் சிலநேரங்களில் இன கலவரங்கள் நடக்கும். அன்றும் ஏதோவொரு போராட்டம் நடந்தது. அங்கே இந்த மாதிரியான கலவரங்கள் நடப்பது இயல்பே. சில போராட்டத்தின் போது திடீரென்று கைது செய்யபட்ட நபர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் மக்கள் போராட்டத்தில் ஈருபட்டனர்.

அது ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. இவர்கள் இருவரும் செல்லும் வழியில் திடீரென்று நடந்த கலவரத்தால் எதிர் அணியினர் வீசிய கல் சரியாக அவளின் நெற்றியைப் பதம்பார்க்க அவளோ தடுமாறி வண்டியிலிருந்து கீழே விழுந்தாள்.

அவளின் பின்னோடு வந்த எழில் பைக்கை நிறுத்திவிட்டு ஓடிசென்று அவனை பிடிக்கும் முன்னரே அவனின் காலில் போலீசார் வீசிய லத்தி மோதிட அவன் சமாளித்து நிமிரும் பொழுது கலவரத்தில் வீசபட்ட கண்ணாடி பாட்டில் தலையில் விழுந்தது.

இருவரும் கலவரத்தில் கீழே விழுந்து மயக்க நிலைக்கு செல்ல அங்கே வந்த ஆம்புலன்ஸ் அவர்களை மீட்டெடுத்து வைத்தியசாலையில் சேர்த்தது. அப்போது சித்தார்த், திவ்யா தங்கள் அறையில் இருந்து மற்ற நபர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தனர்

“டாக்டர் இரண்டு பெசண்டும் கலவரத்தில் அடிபட்டு இருக்காங்க” என்று நர்ஸ் ஓடிவது சொன்னார்.

“பெசண்டுக்கு பிளட் லாஸ் அதிகமா?” என்று சித்தார்த் விசாரிக்க, “ஒரு பொண்ணுக்கு தலையில் மட்டும் நல்ல அடி, இன்னொரு பையனுக்கு தலையில் அடிப்பட்டு கொஞ்சம் பிளட் லாஸ் சார்” என்றார்.

சித்தார்த் மற்றும் திவ்யா இருவரும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அறையின் உள்ளே சென்று படுக்கையில் படுத்திருந்த இருவரையும் பார்த்து அதிர்ச்சியில் உரைத்தனர்.

எழில், நிலா இருவரும் உருவத்தில் கார்முகிலன், மேகவர்ஷினியை அச்சில் வார்த்ததுபோல இருந்தனர். அவர்களைப் பார்த்தும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க இதுவே காரணம்!

“அண்ணா” என்றவளின் உடல் சிலிர்த்துவிட சித்தார்த் பிரம்மை பிடித்தவர் போல நின்றிருந்தனர்.  அவர்கள் இருவரும் தலையில் பலமாக அடிபட்டிருந்த காரணத்தினால் மயக்க நிலையில் இருக்க தங்களின் திகைப்பில் இருந்து மீண்ட இருவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு நேரம் விரையமாவதை உணர்ந்து அவர்களுக்கு சிகிச்சை செய்தனர்.

இருவரின் ஐடி கார்டு பார்த்தும், “எழிலரசன் இந்த பையனோட பேரு. அந்த பொண்ணு பேர் மழைநிலா இவர்களின் குடும்பத்திற்கு தகவல் கொடுங்க” என்று சொல்லிவிட்டு தங்களின் இடத்திற்கு வந்தனர்.

தன்னுடைய கதிரையில் அமர்ந்த சித்தார்த் சிந்தனை முழுவதும் அவர்களை சுற்றிவர அறையின் கதவுகளை திறந்து உள்ளே நுழைந்தாள் தர்ஷினி.

“அண்ணா என்ன நடக்குது? நம்ம கண்ணால் பார்த்தது” என்று சொல்லும் பொழுதே அவளையும் மீறி அவளின் உடல் மீண்டும் ஒரு முறை சிலிர்த்துவிட அவளை இருக்கையில் அமர சொல்லி செய்கை செய்தான்.

அவனாலும் இந்த நொடிவரை நடந்த விஷயத்தை நம்பமுடியவில்லை. அச்சு அசல் இருவரின் உருவத்தையும் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார் சித்தார்த்.

“எனக்கே ஒன்றும் புரியல தியா. நம்ம அம்மா, அப்பாவை நேரில் பார்த்த மாதிரி இருந்துச்சு. சத்தியமா இது அவங்களோட மறுபிறவியா? என்ற சந்தேகம்கூட வருது” என்றவர் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.

இவரின் பேச்சில், ‘மறுபிறவி’ என்ற சொல்லைக் கேட்டு ஆடிபோய்விட்டாள் தர்ஷினி. அது எப்படி சாத்தியம் என்று அவளின் மனம் கேள்விகேட்டதும், “அண்ணா” என்றாள் தயக்கமாக.

அவர் நிமிர்ந்து கேள்வியாக நோக்கிட, “இது அவங்களோட மறுஜென்மம் என்றால் அவளோட முதல் ஜென்ம ஞாபகங்கள் இருவருக்கும் வர வாய்ப்பு இருக்கா?” என்று மனதில் தோன்றிதை வாய்விட்டு கேட்டுவிட்டாள்.

“இல்லம்மா மருத்துவத்துறை பொறுத்தவரை மறுபிறவி என்பது எல்லோருக்கும் நிகழாது. இதில் இரண்டு விஷயம் இருக்கு. ஒருத்தர் மாதிரி ஏழுபேர் இருப்பது, மற்றொன்று நம்ம தாத்தா பாட்டி சாயல் நமக்கு வந்துவிட்டது இப்படி இரண்டு ரகம் இருக்கு..” என்று தெளிவாக விளக்கினார்.

திவ்ய சிந்தனையோடு அவரையே இமைக்காமல் பார்க்க, “இவங்களோட விசயத்தில் நம்ம முதல் ரகத்தில் எடுத்துக்கலாம். அதாவது ஒரே மாதிரி ஏழு நபர். அந்த மாதிரி இவங்க பிறந்திருக்கலாம்..” என்றார் அவரின் எட்டுகல்வியை வைத்தும் தன் இத்தனை வருட அனுபவித்தை வைத்து கூறினார்.

அப்போதும் திவ்யாவின் முகம் தெளியாமல், “அதெப்படி அண்ணா அவங்க ஒரே இடத்தில் பிறந்திருக்க முடியும்” என்றாள் தீராத சந்தேகத்துடன்.

“இருவரும் பிறந்த இடம் வேறாக இருக்கலாம். இப்போ இந்த விபத்துக்கு இருவரையும் சேர்த்து வைத்திருக்கலாம் இல்ல” என்றார்

அதில் கொஞ்சம் திருப்தியடைந்த தர்ஷினி, “அப்போ அவங்களுக்கு முன்ஜென்மம் ஞாபகம் வராது இல்லன்னா” என்றவள் அவரின் மீது பார்வையை பதித்து.

“அப்படி சொல்ல முடியாது. சிலருக்கு தலையில் அடிபட்டுகூட ,முன்ஜென்மம் ஞாபகம் வந்த கேஸ் எல்லாம் இருப்பது நமக்கு தெரியும்மா. இனிவரும் நாட்களில் இவங்களுக்கு வரும் சில நிகழ்வுகளின் போராட்டம் அல்லது அவர்களின் செயல்கள் வைத்துதான் இதை உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.

அதாவது அவர் முன்ஜென்மம் ஞாபகம் கட்டாயம் வரும் என்றும் சொல்லவில்லை. அந்த ஞாபகங்கள் அவர்களுக்கு வராது என்றும் சொல்லவில்லை. இரண்டும் கெட்டான் நிலையில் சொல்லியிருக்க கவலையுடன் எழுந்து சென்றாள் திவ்யா.

இவர்கள் இருவரும் இங்கே பேசிய அதே நேரத்தில் அவர்களின் நிலை.

எங்கோ ஒரு இருள்சூழ்ந்த இடத்தில் அவள் நின்றிருக்க ஒரு இருபது அடி தூரத்தில் கையில் பச்சை குழந்தையுடன் வரிசையில் அமர்ந்திருந்த அவனின் முகத்தைப் பார்த்தாள். அவன் கை குழந்தையிடம் தன்னை மறந்து ஏதோபேச குழந்தையும் சிரித்தது.

திடீரென்று குழந்தை வீரிட்டு அழுக இவளின் நெஞ்சில் வலி அதிகமாகி மார்புகள் விம்மிவிட பால்கசிய முகத்தின் முந்தானையை மூடிக்கொண்டு சத்தம் இல்லாமல் கண்ணீர்விட அவனின் பார்வை அவளின் மீது படிந்தது.

அவ்வளவு தூரத்தில் நின்றவளை அவன் அடையாளம் கண்டதும் மகளை தோளில் போட்டு தட்டிகொடுத்து, “உங்க அம்மாவை கவலைபடாமல் இருக்க சொல்லுடா. உன்னை நான் நன்றாக வளர்ப்பேனா என்ற கவலையில் அவளோடு ஆய்சை குறைக்க வேண்டான்னு சொல்லும்மா” என்றவனின் குரல்கேட்டு அவள் வெடுக்கென்று திரும்பிப் பார்க்க, “முகில்” என்று அலறியபடி கண்விழித்தாள் மழைநிலா.

“பாப்பா அம்மா பக்கத்தில் இருக்கேன். உனக்கு ஒன்றும் இல்ல” என்று அவர் தோளில் சாய்த்துக்கொள்ள அவளின் உள்ளம் படபடவென்று அடித்துகொண்டது. அன்னையின் கைக்குள் நுழைய அவளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்திற்கு வந்தது.

சிலநொடியில் நிதர்சனம் புரிந்திட, “அம்மா நான் எப்படி வைத்தியசாலைக்கு” அவள் கேள்வியெழுப்ப அவளின் தாய் மல்லிகா மகளுக்கு விளக்கம் கொடுக்க சிறிதுநேரம் அவருடன் பேசிவிட்டு மீண்டும் படுக்கையில் படுத்தாள்.

அந்த உருவத்தை மீண்டும் மனதிற்குள் கொண்டு வந்ததும், ‘இவரு நம்ம சீனியர் இல்ல. இவரோட பேரு முகில் இல்லையே அவர் பேரு எழிலரசன் தானே’ என்ற சிந்தனையில் உழன்றது.

அவளின் கண்முன்னே மீண்டும் அந்த காட்சி வந்துபோக, ‘இல்ல என்னால் முடியாது. அவனை பிரிந்து என்னால் தனியாக இருக்க முடியாது. இந்தமுறை அவனைவிட்டு நான் பிரிய மாட்டேன்’ என்று அவளையும் அறியாமல் அவள் நினைத்தாள்.

‘இத்தனை நாளும் அவரை எங்கோ பார்த்து பழகியது போலவே தோன்றியது. ஆனால் இன்று கனவில் பார்த்த காட்சி நடந்து முடிந்த ஒன்றா? இல்ல இனிமேல் தான் நடக்க போகிறதா?’ என்று ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் வெகுநேரம் விழித்திருந்தாள்.

அதேநேரத்தில் ஒரு ஷாப்பிங் காம்பிளக்ஸ் உள்ளே ஒரு பையனுடன் நுழைந்தவளை பார்த்தும் அவளை பின்தொடர்ந்து சென்றான். அவனின் கவிழிகள் இமைக்க மறந்து அவளையே பார்க்க அங்கிருந்த ஆளுர கண்ணாடியில் அவனின் உருவம் கண்டவள் சிலையென நின்றுவிட்டாள்.

அப்போது அவளின் அருகே நின்றவன் எதோ சொல்லி அவளின் கைபற்றி இழுக்க தன்னை மறந்து கண்ணாடியில் அவனின் உருவத்தை கைகளால் வருடியவள், “நீங்க நம்ம பெண்ணை நல்ல வளர்ப்பீங்க என்ற நிம்மதியில் இதோ இவனை நான் வளர்த்துட்டு இருக்கேன். நான் மனம்போன போக்கில் போகலங்க நான் எங்கிருந்தாலும் என்னோட மனசு உங்களை சுற்றிதான் இருக்கும்” என்றாள்.

அவளின் பார்வை அவனின் விழிகளில் கடந்திட, “எனக்கு இருக்கிற நோயால் நான் சாக நேர்ந்தாலும் அதை உங்களுக்கு நான் உணர்வுபூர்வமாக சொல்வேன்” என்றவள் கண்களில் நிறைவுடன் அவனைவிட்டு விலகிச்சென்றாள்.

அவள் தன்னைவிட்டு விலகுவதை ஏற்றுகொள்ள முடியாமல் “மேகா” என்று கத்திக்கொண்டு அவன் எழுந்தபோது அவனின் நெற்றியில் முத்து முத்தாக வேர்த்தது. தலையில் அடிபட்டதால் வலி ஒரு பக்கம் உயிர்போனது.

அப்போதும் அந்த முகம் பரிச்சியமான முகமென்று தோன்றியதும் ஆழ்மனத்தின் ஓரம் வந்து நின்றது மலைநிலாவின் உருவம். அதைக் கண்டதும் அவனின் மனம் கொஞ்சம் தெளிந்தது. ஆனால் அவளின் பெயர்தான் அவனின் மனதில் சந்தேகத்தை உருவாக்கியது.

அவனின் தாத்தா சுரேஷ் அவனின் அருகே வந்து, “கண்ணா என்னப்பா ஆச்சு” என்று அவனை சமாதானம் செய்ய கொஞ்சம் தெளிவடைந்து அவரை நிமிர்ந்து பார்த்தான்.

சுரேஷ் அவனின் அருகே ஒரு கதிரையை எடுத்துபோட்டு அமர்ந்து பேரனின் முகம் பார்க்க, “தாத்தா நமக்கு வர கனவுகளில் நடந்து முடிந்து கூட வருமா” என்று புரியாமல் கேட்டவனை கேள்வியாக நோக்கினார்.

அவன் மனதைப் பொறுத்தவரை மழைநிலாவை மேகா என்று பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. அந்த பெயர் சொன்னாலே அவள் தன்னைவிட்டு விலகி போவதே கண்முன்னே வந்து போனது.

‘இல்ல என்னால் அவளை விட்டு விலகி இருக்க முடியாது’ என்று அவனே மீண்டும் ஒரு முறை அழுத்தமாக சொல்லிக்கொள்ள பேரனின் முகத்தில் வந்துபோன கலவையான உணர்வுகளை கண்டும் அமைதியாக இருந்தார்.

அப்போது அவன் கேள்வியாக நோக்கிட, “நீ முதலில் கனவைப் பற்றி சொல்லுப்பா” என்றதுக்கு அவன் பதில் சொல்லாமல் அமைதியாகவிட அவரும் அதன்பிறகு அவனிடம் கேட்கவில்லை.

முறையான மருந்து மாத்திரையின் பலநாள் இருவரும் சீக்கிரமே குணமாகிவிட அன்று வைத்தியசாலை விட்டு வெளியே வரும்போது அவனைக் கண்டதும், “சீனியர்” என்று அவள் எதோ பேச வர அவனோ அவளிடம் பேசாமல் விலகிச் சென்றான்.

அவன் காரில் ஏறும்போது அவனையும் அறியாமல் அவன் திரும்பிப் பார்க்க  அவன் செல்வதை பார்த்தபடியே நின்ற மழைநிலாவின் கண்களில் கண்ணீருடன் நின்றவளின் தவிப்பு அவனின் மனதில் வழியைக் கொடுத்தது.

அவன் வீட்டிற்குள் நுழையும்போது, “கண்ணா என்னப்பா விபத்து நடந்ததா எல்லோரும் கதைக்க ஒரு நொடி பயந்தே போனன்” என்றவர் மகனை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளந்தார் சரளா.

“அம்மா நான் நல்லா இருக்கேன்” என்று ஆயிரம் சாமதானம் சொன்ன பின்னரும் வேதனையுடன் சென்ற தாயின் மனம் உணர்ந்து தந்தையின் பக்கம் பார்வையை திருப்பினான்.

அவனின் பார்வையில் கேள்வியை உணர்ந்த ரமணன், “இப்படி சொன்னதுக்கே இன்னும் ஒரு மாதம் இதே எண்ணத்துடன் இருப்பார். உன்னை நேரில் கண்டிருந்தா அவளை உயிரோடு கண்டிக்கிருக்க முடியாது” என்றவர் விளக்கம் கொடுத்துவிட்டு எழுந்து சென்றார்.

எழிலனுக்கு உடன் பிறந்தவர்கள் என்று யாருமில்லை. அவனின் அதிகநேரம் படிப்பிற்கும், மீது நேரம் தாத்தாவுடன் அரட்டை அடிப்பதற்கும் போய்விடும். ரமணன் நடுத்தர குடும்பத்தில் இருந்து முன்னேறி இப்போது பேங்க் வேளையில் இருக்கிறார்.

அவள் தாயுடன் இணைந்து வீடு சென்று சேர்ந்தாள். அவள் வீட்டிற்குள் நுழையும்போது, “பாட்டி” என்றவளின் குரல்கேட்டு தன்னறையில் இருந்து வெளிவந்தார் கீதா.

“கண்ணம்மா நீ இல்லாமல் இரண்டு நாளும் வீடு வீடு மாதிரி இல்லம்மா” என்றவர் பேத்தியை அணைத்து கொள்ள, “எந்த இது எந்த பாட்டிக்கு பேத்தி என்றால் சால இஷ்டமோ” என்று இடையில் கையூன்றி அவள் வம்பிற்கு இழுத்தாள்.

“ஆமா எண்ட பேத்தி என்றால் எனக்கு வளர இஷ்டம்” என்றார் அவரும் புன்னகை முகமாகவே. இருவரும் பேசுவதைப் பார்த்து சிரித்தபடியே சமையலறைக்குள் சென்று மறைந்தார் மல்லிகா.

மழைநிலாவிற்கு தகப்பன் இல்லை. தாயும், பாட்டியும் தான் அவளின் உலகமே. மல்லிகா எப்போதும் போல வேலைக்கு செல்ல கீதாவும், நிலாவும் தான் அரட்டை அடிப்பதில் முதல் ஆட்கள். பாட்டியும் பேத்தியும் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே பகடி பேச்சு அளவே இருக்காது.

அதன்பிறகு நாட்கள் விரைந்து செல்ல இரண்டு வாரம் சென்றபின்னர் அவள் எப்போதும் கல்லூரி சென்றாள். அன்று வண்டியை நிறுத்திவிட்டு அவள் திரும்பும்போது அங்கே நின்ற சீனியரை பார்த்தும் சுள்ளேன்று அவளுக்கு கோபம் வந்தது.

நேராக அவனின் எதிரே சென்று நின்றவளின் விழிகள் கோபத்தில் சிவக்க அவளைவிட பலமடங்கு கோபத்துடன் அவளின் எதிரே நின்றிருந்தான் எழிலரசன்.

error: Content is protected !!