Sirpiyin Kanavukal – 12

அத்தியாயம் – 12

அன்று இரவு வீடு திரும்பிய மேகா – முகிலன் இருவரும் சிந்தனையுடன் அமர்ந்திருக்க அவர்களின் திருமணம்  பற்றி பேசியபடி அமர்ந்திருந்தனர் வீட்டின்  பெரியவர்கள்.

“என்ன சிந்தனை இருவருக்கும்” என்று சித்தார்த் இயல்புடன் கேட்க மற்றவர்களின் கவனமும் பிள்ளைகள் மீது திரும்பியது.

முகிலனை நிமிர்ந்து பார்த்த மேகா, ‘நீங்க சொல்லுங்கோ’என்று ஜாடை செய்ய, ‘நீயே சொல்லு’ என்றான் அவன் இதழசைவில்

“இருவரும் ஏதோ சொல்ல நினைக்கிறீங்க? என்ன விடயம் சொல்லுங்கோ” என்று திவ்யா அதட்ட, “அண்டைக்கு ஒரு திருமணத்திற்கு போனோமே அம்மா” என்று இழுத்தாள் மேகா.

தாய் அவளை முறைக்க, “எழிலன் – நிலாவின் திருமணம்” என்று சித்தார்த் நெற்றியை தட்டியபடி யோசனையோடு கூற, “அவையதான்.. இருவருக்கும் இடையே இன்னும் சண்டை தீரல போல..” என்றான் முகிலன் வருத்ததுடன்.

அவனின் வருத்தம் மூவரையும் திடுக்கிட வைத்தது. காரணம் தன் தாய் – தந்தையின் பிரிவும் அவர்களின் காதலும், இறுதிவரை அவர்கள் இணைய வாய்ப்பு இல்லாமல் போன விஷயம் அவர்கள் மூவரும் அறிந்ததே.

இப்போது அவர்களின் உருவத்தில் இருக்கும், ‘எழிலன் – நிலா’ இருவரும் அவர்களைப் போலவே பிரிந்து இருவேறு பாதையில் சென்றுவிடுவார்களோ என்ற பயம் அவர்களின் ஆழ்மனதில் இருந்துகொண்டே இருந்தது.

இன்று தன் பிள்ளைகள் சொன்னதும் அந்த பயம் இன்னும் அதிகரிக்க மற்ற மூவரும் அவர்களை எப்படி இணைப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தனர்.

“அவங்க இருவரும் கணவன் – மனைவி. அவங்களுக்குள் ஆயிரம் சண்டை வரும் அதை நீயேன் கண்ணா கவனிக்கிறயேள்” என்று மகனை கேட்ட நந்தினி இருவரையும் முறைத்தனர்.

“அம்மா அவர்களின் இடையே நடக்கும் பிரச்சனை நாலு சுவருக்குள் நடந்திருந்தா நாங்க ஏன் அவர்களைப்பற்றி கதைக்க போறம். அவைய இருவரும் சண்டை போட்டு கொண்டிருந்த இடம் எங்களின் கேம்பஸ் வாசல்” என்று மேகா உண்மையை போட்டு உடைத்தாள்.

அவர்கள் பேச பேச திவ்யா, சித்தார்த் இருவருக்கும் பயம் இன்னும் அதிகரிக்க சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

சித்தார்த்  ஒரு முடிவிற்கு வந்தவராக, “நம்ம இந்தியா போலாம் முகில் – மேகா” என்றதும் நால்வரும் அவரை திகைப்புடன் பார்க்க, “உங்க இருவருக்கும் இன்னும் பல விஷயங்கள் நாங்க சொல்லலப்பா.” என்றதும் சிறியவர்களின் முகம் சிலநொடி இருண்டு போனது.

“அதனால் நீங்க இருவரும் உங்க ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி அவங்களை இந்தியா அழைச்சிட்டு வாங்க” என்று சொல்ல சிறியவர்கள் சிந்தனையுடன் சரியென்று தலையசைத்தனர்.

அன்று இரவு நிலா படிக்க அமர்ந்துவிட இன்னொருபுறம் அந்த பிரவுன் கலர் ஃபைலை எடுத்துகொண்டு படுக்கையில் அமர்ந்தான். அவன் கம்பெனி கணக்கு வழக்குகளை சரி பார்த்துவிட்டு அந்த ஃபைலின் மீது பார்வையை திருப்பியவனின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

அந்த ஃபைலின் முதல் பக்கம் இருந்த புகைப்படத்தைக்கண்டு அவனுக்கு திக்கென்று இருந்தது. அந்த போட்டோவை வருடியவன் தன் மனைவியை திரும்பிப் பார்த்தான்.

அவள் படிப்பில் மூழ்கி இருக்க அந்த ரிப்போர்ட் பைலை முழுவதும் வாசிக்க தொடங்கினான். அதில் இருந்த தகவல் அவனை அதிர வைத்தது. அவன் எழுந்து சென்று அந்த பைலை எடுத்த இடத்தில் வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடினான்.

அங்கே சுரேஷ் எழுதிய டைரி கிடைக்க, ‘இதில் இதற்காக தகவல் கிடைக்குமோ?’ என்ற சிந்தனையுடன் டைரியை புரட்டினான். அவரின் பழைய டைரி இரண்டு மூன்று இருக்க அவற்றை எல்லாம் பிரித்து படிக்க ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் திருமண போட்டோவில் சுரேஷ்யுடன் மாலையும் கழுத்துமாக இருவர் நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்தும் அவனின் அதிர்ச்சி  இன்னும் அதிகரிக்க மீண்டும் படிக்க தொடங்க அதில் சுரேஷ் அந்த ஃபைலை பற்றியும் எழுதியிருந்தார். அனைத்தையும் படித்துவிட்டு அவன் நிமிரும் பொழுது அவனின் கண்கள் லேசாக கலங்கி  இருந்தது.

“இன்னும் தூங்காமல் என்ன பண்றீங்கோ” என்று அருகில் வந்த நிலா அவனின் கையில் இருந்த ஃபைல், டைரி, புகைப்படம் மூன்றையும் எடுத்து பார்த்தாள்.

சிலநொடிகளில் அவளின் முகமும் அதிர்ச்சியடைய அவளும் அனைத்தையும் படித்துவிட்டு கண்கலங்க கணவனை நிமிர்ந்து பார்த்து, “என்னிடம் ஒரு கடிதம் இருக்கு” என்று அவளும் தன் அலைமாரியை திறந்து அன்று பாட்டியின் அறையிலிருந்து கிடைத்த கடிதத்தை அவனிடம் நீட்டினாள்.

அதில் இன்னும் பல தகவல் கிடைக்க கணவன் – மனைவி  இருவருக்கும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. அன்று கண்ட கனவில் வந்த முகிலன், மேகா இருவரும் முன்னாடியே வாழ்ந்து இறந்தவர்கள் என்ற உண்மை புரிந்தது.

அப்போதுதான் எழிலன், “அன்றைக்கு பத்திரிகை கொடுக்க முகிலன் – மேகாவின் வீட்டிற்கு போனபோது இருவரின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ” என்று கேட்க நிலா ஒப்புதலாக தலையசைத்தாள்.

அதன்பிறகு இருவரும் சென்று சுரேஷ் இருந்த அறையை தட்ட அவர் வந்து கதவை திறந்தார். வாசலில் நின்ற இருவரையும் பார்த்தவர், “என்னப்பா இந்த நேரத்தில் இருவரும் வந்து இருக்கீங்க” என்று கேட்க,

“அப்பாப்பா உங்ககிட்ட கொஞ்சம் கதைக்கனும்” என்ற பேரனின் முகத்தை சிந்தனையுடன் நோக்கியவர், “சரி உள்ளே வாங்க” என்று அவர்கள் உள்ளே நுழைய வழிவிட்டு நின்றனர்.

அவரிடம்  அந்த பைலைக் கட்டி அவர்கள் சிலவிவரங்கள் கேட்க அவரும் எதையும் மறைக்காமல் அவர்களிடம் கூறினார். இறுதியாக அவர் சொன்ன விஷயம் அவரின் மனதை உலுக்கிட,

“இப்படியும் ஒரு காதல் இல்லையா தாத்தா” என்றான் பேரன் வியப்புடன்.

அவனைப் பார்த்து புன்னகைத்தவர், “நீங்க இருவரும் அவங்களவிட ஒரு படி நல்லா வாழணும் கண்ணா” என்றார்.

“ம்ம் கண்டிப்பா தாத்தா” என்றாள் மழைநிலாவின் பார்வை கணவனின் மீது படிந்தது. அதன்பிறகு தங்களின் அறைக்குள் வந்தவர்கள்  சிறிதுநேரம் பேசிவிட்டு உறங்க சென்றனர்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

காலை நேரம் வீடே பரப்பரப்புடன் இயங்கிக்கொண்டிருக்க முகிலன் – மேகா இருவரும் எழிலன் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களைக் கண்டதும் சுரேஷ்,

“வாங்கோ” என்று அன்று அழைக்க இருவரும் புன்னகையுடன், “எப்படி இருக்கீங்கோ தாத்தா” என்று கேட்டாள் மேகா.

“நான் நல்ல இருக்கான்.” என்று இருவரையும் சோபாவில் அமர வைத்துவிட்டு, “எழில்- நிலா” என்று குரல்கொடுக்க, “இதோ வரோம் அப்பப்பா” என்றான்.

சரளா சமையலறையிலிருந்து எட்டி பார்க்க, “மருமகளே பிள்ளைகளுக்கு கோபி எடுத்து வாம்மா” என்றார் சுரேஷ். அவரும் இருவருக்கும் காபி எடுத்து வர ஹாலில் அமர்ந்திருந்த இருவரையும் கண்டு,

“அடடே நம்ம முகிலன்- மேகாவுமா? வாங்கோ வீட்டில் அப்பா, அம்மா நல்ல இருக்கிறவளா?” என்று விசாரிக்க, “எல்லோரும் நல்லா இருக்காங்கோ ஆன்ட்டி” என்றாள் மேகா புன்னகையுடன்.

இருவருக்கும் கோபி கொடுக்கத்துவிட்டு நிமிரும்போது, “வா முகில்..” என்று அழைத்த எழிலன் அவர்களின் அருகே வந்து அமர்ந்து பேச தொடங்க மேகா மெல்ல எழுந்து நிலாவை தேடிச் சென்றாள்.

“எப்படி இருக்கிற? உன்னோட வேலை எல்லாம் எப்படி போகிறது” என்று எழிலன் நண்பனை நலம் விசாரித்த பின்னர் தான் முகிலன் விஷயத்தை கூறினான்.

“நாங்க இந்தியாவிற்கு குடும்பத்துடன் போறம். அதுக்கு நீயும் உன்ர மனைவியுடன் வரோணும்..” என்றதும் எழிலன் சிறிதுநேரம் சிந்தித்துவிட்டு தாயை நிமிர்ந்து பார்த்தான்.

“என்னப்பா தயக்கம் தம்பி. நீ நிலாவை அழைச்சிட்டு  ஒரு வாரம் ஊருக்கு போயிட்டு வாரும். அப்பாவை மற்ற வேலைகளை கவனிக்க சொல்றன்” என்று அவர்கள் செல்ல சம்மதிக்க நிலாவின் படிப்பு வந்து அவனுக்கு தடை போட்டது.

அங்கே அறையில் நோட்புக் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு திரும்பிய நிலா, “வா மேகா. என்ன திடீரெண்டு வந்திருக்கிறீர்..” என்று விசாரித்தபடி அவளோடு சேர்ந்து படுக்கையில் அமர்ந்தாள் நிலா.

“முகிலனுக்கும், எனக்கும் வீட்டில் திருமண ஏற்பாடு பண்ணிருக்காங்க நிலா” என்றாள் வேகத்தில் முகம் சிவக்க.

“அடியேய் உன்ர தோழி என்னிடம் விடயத்தை சொல்ல இப்போதான் உனக்கு நேரம் கிடைத்ததோ” அவளோடு செல்லமாக சண்டைபோட்ட நிலாவை அழைத்தான் எழிலன்.

“வாரும் மேகா” அவளை அழைத்துக்கொண்டு ஹாலிற்கு வரவே, “நம்மள இந்தியாவிற்கு கூப்பிட வந்திருக்காங்க நிலா. நம்ம இருவரும் இந்தியா போலாமா” என்று மனைவியிடம்  அவளின் விருப்பத்தை கேட்க அவளும் புன்னகையுடன் சரியென்று தலையசைத்தாள்.

இந்த தகவலை நிலாவின் வீட்டிற்கும் சொல்லிவிட்டு இரண்டு நாளும் ஊருக்கு செல்லும் ஏற்பாடுகளை கவனித்தான் எழிலன். அவர்கள் ஊருக்கு செல்லும் நேரத்தில் எதற்கும் தேவைப்படும் என்று அங்கிருந்த மெடிக்கல் ரிப்போர்ட் ஃபைல், புகைப்படம் மற்றும் கடிதங்களையும் எடுத்து வைத்தாள்.

இரண்டு குடும்பமும் இணைந்து எழிலன் – நிலாவிற்காக ஏர்போர்டில் காத்திருக்க அவர்களும் வந்து சேர்ந்தனர். மல்லிகா மற்றும் கீதா இருவரும் நிலாவை மனநிறைவுடன் வழியனுப்ப வந்திருக்க எழிலன் தன் குடும்பத்துடன் வந்து இறங்கினான்.

அவன் எல்லோரிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் பிளைட்டில் முகில் –மேகா, சித்தார்த் – நந்தினி, தருண் – திவ்யதர்ஷினி மற்றும் எழிலன் – நிலா என்று ஜோடியாக அமர்ந்தனர்.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் சென்னை வந்து இறங்கினர்.

அவர்கள் ஏர்போர்டில் வந்து இறங்கியதும் அவர்களை அழைத்துச்செல்ல வந்திருந்தார் அருண். இத்தனை வருடம் கழித்து வந்த தம்பியை புன்னகை முகமாக வரவேற்றவர், “வாடா தம்பி.. எப்படி இருக்கிற” என்று விசாரித்தார்.

தமையனை ஆரத்தழுவி கொண்ட தருண், “நான் நல்ல இருக்கேன் நீ எப்படி இருக்கிற” என்று கேட்டவர் தன் மகளை தன் உடன் பிறந்தவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவரின் அருகே நின்ற திவ்யாவை கண்டதும், “எப்படி திவ்யா இருக்கிற” என்று கேட்க, “நல்ல இருக்கேன்” என்று சொல்லிவிட்டு நகர அவளின் பின்னோடு வந்த சித்தார்த், நந்தினி மற்றும் முகிலனை பார்த்தவர்,

“வாங்க சித்தார்த்..” என்று அழைத்தவர் அவரைக் கையெடுத்து கும்பிட்டு, “என்னை மன்னிச்சிடுங்க. உங்களோட படிப்பு மற்றும் அந்தஸ்து தெரியாமல் அன்னைக்கு உங்களை அப்படி பேசிட்டேன்” என்று மனதார மன்னிப்பு கேட்டார்.

அவரின் அந்த பேச்சு அங்கிருந்த அனைவரையும் பாதித்தது. சில வருடங்களுக்கு முன்னால் அருனின் மகளுக்கு ஓபன் சர்ஜரி செய்து அவளின் உயிரையே காப்பாற்றி கொடுத்தார் சித்தார்த்.

அவர் பிரதிபலம் பாராமல் செய்த உதவியை நினைத்தும் பலவருடங்களுக்கு முன்னால் அவரை மரியாதை இல்லாமல் பேசியது அவரின் மனதை அரித்துக்கொண்டே இருக்க இன்று சித்தார்த் நேரில் கண்டதும் தன்னையும் அறியாமல் மன்னிப்பு கேட்டார் அருண்.

அவர்களின் பின்னோடு வந்த எழிலன் – நிலா இருவரையும் எதிர்பாராத நேரத்தில் பார்த்த அருண், “மாமா.. அத்தை..” என்று முணுமுணுக்க அது முகிலன் – மேகாவின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

சிறிதுநேரத்தில் ஏர்போர்டில் இருந்து காரில் கிளம்பியவர்கள் வீடு வந்து சேர்ந்தனர். பல வருடங்கள் கடந்தபிற்கு அந்த வீட்டின் பொலிவு மாறாமல் பராமரித்து இருந்த அருணிடம் நன்றி கூறிய திவ்யா வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள்.

இத்தனை வருடம் கடந்தபிறகு சின்ன பிள்ளை போல துள்ளி குதித்துக்கொண்டு ஓடும் தன் மனைவியை கண்ட தருண் சித்தார்த்திடம், “இனி  வீட்டில் ஒருஇடம் விடாமல் சுர்ரிபார்த்துட்டு உங்க தங்கை வர ரொம்ப லேட் ஆகும்” என்றார் குறும்பாக.

அவர்களின் பின்னோடு வீட்டிற்குள் நுழைந்த முகிலன் – மேகாவும் சுவற்றில் இருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்தனர். அவர்களின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிய திவ்யாவும், சித்தார்த்தும் அந்த புகைப்படத்தை பார்த்து மெய்மறந்து நின்றிருந்தனர்.

கார்முகிலன் –  மேகவர்ஷினியின் ஆளுயர புகைப்படத்தை வீட்டின் சுவற்றில் மாட்டி வைத்திருந்தனர் திவ்யாவும், சித்தார்த்தும்! அதை பார்த்துதான் சிறியவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர். அவர்கள் அதிர்ச்சிக்கு மற்றொரு காரணம்..

எழிலரசன் – மழைநிலா அப்படியே அவர்களின் உருவத்தில் இருந்தனர்.

தங்களையும் அறியாமல் இருவரும் திரும்பிப் பார்க்க வீட்டின் வாசலில் திகைத்தபடி நின்றிருந்த தன் பிள்ளைகளைப் பார்த்ததும், “என்னப்பா அங்கேயே நின்னுட்டிங்க வீட்டுக்குள் வாங்க” என்று கூறினார் சித்தார்த்.

முகிலன் – மேகா இருவரும் வீட்டிற்குள் நுழைய அவர்களின் பின்னோடு வந்த எழிலன் – நிலா இருவரும் அந்த புகைப்படத்தைப் பார்த்தும் தங்களுக்குள் இருந்த சந்தேகம் சரியென்று தோன்றிவிட, “ஆன்ட்டி இந்த போட்டோவில் இருக்கறாங்க” என்றாள் நிலா புகைப்படத்தில் பார்வையை பதித்தபடி.

சட்டென்று திரும்பிய தருண், “இவரு என்னோட மாமா கார்முகிலன் – அத்தை மேகவர்ஷினி. சித்தார்த், திவ்யாவின் அப்பாவும், அம்மாவும். இவங்களோட நினைவாகத்தான் எங்க பிள்ளைகளுக்கு இவங்க பெயரையே வைத்தோம்” என்றவர் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.

திவ்யா மற்றும் நந்தினி தனியாக ஒரு சோபாவில் அமர சித்தார்த் சுவற்றில் சாய்ந்திருக்க அருண்  ஏற்பாடு செய்த வேலையாள் அவர்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.

எல்லோரும் எடுத்துகொள்ள முகிலன் மற்றும் மேகா மட்டும் அதிர்ச்சியுடன் அமைதியாக அமர்ந்திருக்க தன் தம்பியின் பக்கம் திரும்பிய அருண்,“இவங்க இருவரும் யாருடா. நம்ம அத்தை மாமாவை மறுபிறப்பு போலவே இருக்காங்க” என்றார் திகைப்புடன்

“இவங்க எங்க பசங்க கூட படிச்சவங்கடா அருண். இப்போதான் கல்யாணம் ஆன ஜோடிங்க. அதன் நம்ம ஊருக்குத்தானே போறோம் நம்ம தமிழ்நாட்டை சுற்றி காட்டலாம் என்று கூட்டிட்டு வந்தோம்” என்றவர் தொடர்ந்து,

“உனக்கு ஞாபகம் இருக்க அருண் கீதாக்கா. நம்ம அத்தையோட ஃபிரெண்ட். அவங்க பேத்தி தான் மழைநிலா..” தருண் அறிமுகம் செய்ய, “இவரு எங்க அப்பா கம்பெனியில் பி.ஏ.வாக வொர்க் பண்ண சுரேஷ் அங்கிள் மகன்” என்று அறிமுகம் செய்தாள் திவ்யா.

அங்கே எல்லோரின் முகமும் மலர்ந்திருக்க ஆரம்பத்தில் இருந்து எழிலன் நிலாவோடு சண்டை போடும்போது புரியாத பல விஷயங்கள் முகிலன் மெகாவிற்கு புரிந்தது. மற்றவர்கள் போல இவர்கள் இருவரும் கிடையாது. இவர்களின் திருமணம் பூர்வ ஜென்மபந்தம் என்ற உண்மை உணர்ந்தனர்.

“எங்க தாத்தா – பாட்டி மாதிரியே இருக்கும் என் நண்பர்களைப் பார்த்து நிஜமாவே எனக்கு ஷாக்காக இருக்கு அப்பா” என்றான் முகிலன் திகைப்பு அதிர்ச்சியுமாக.

“இப்படியொரு விஷயத்தை எதிர்ப்பார்த்து நாங்க இந்தியா வரவில்லை” என்ற மேகா குழப்பமும் திகைப்புமாக மற்ற இருவரையும் நோக்கினர். அவர்களின் பேச்சு திசைமாறும் முன்னரே இடத்தைவிட்டு எழுந்த  அருண்,

“எல்லோரும் குளிச்சு ரெஸ்ட் எடுத்துட்டு பேசுங்க. நான் கம்பெனி வரை போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.  அவர் செல்லும்போது அவரின் பார்வை எழில் – நிலாவின் மீதே நிலைத்தது.

ஏனோ அவரையும் அறியாமல் மனம் நிம்மதியடைய தன் மற்ற வேலைகளை கவனிக்க சென்றார். அதற்குள் மற்றவர்களுக்கு அறையை ஒதுக்கி கொடுத்துவிட்டு சித்தார்த் மற்றும் தருண் தங்களின் மனைவிகளோடு  அகிருந்து நகர்ந்தனர்.

எழிலன் – நிலா இருவரும் புகைபடத்தின் அருகே வந்து நின்றனர்.

மனைவியின் தோளில் கைபோட்டு நின்ற கார்முகிலனின் முகத்தில் நிறைவான புன்னகையும் கண்ணில் மின்னிய காதலும் சொன்னது அவனின் மனதைபற்றி!

என்னதான் விலகி செல்ல நினைத்தாலும் அவனின் கரம்பிடித்து புன்னகைத்த மேகவர்ஷினியின் நிற்கும் நிலையே சொன்னது அவனைவிட்டு என்றும் நான் விலகமாட்டேன் என்று!

அவர்கள் இருவரும் ஜோடியாக நிற்பதைப் பார்க்கவே எழிலனுக்கு நிலைவாக இருந்தது. நிலா எழிலனின் கரத்தை பற்றி அவனின் தோள் சாய்ந்தாள் புன்னகையோடு.

“உங்களை பிரிச்சு வெச்ச விதிக்கு தெரியல்ல. நீங்க இருவரும் சாகும் வரை மனதளவில் இணைந்துதான் இருந்தீங்கன்னு” என்றவன் தங்களுக்குள் ஒதுக்கட்ட அறைக்குள் செல்ல நிலா அவனை பின் தொடர்ந்தாள்.

அவர்களை கவனித்துக் கொண்டிருந்த மற்ற இருவரும், “இவங்களை சேர்த்து வைக்க நம்ம போராடிய போராட்டம் எல்லாம் வீணாக போச்சே. நம்ம அப்பா- அம்மா இப்படி நம்மளை முட்டாள் ஆகிட்டாங்களே” என்று முகிலன் ஒருபக்கம் புலம்ப,

“நம்ம முயற்சி எடுக்காமல் இருந்திருந்தாலும் இவங்க இருவரும் சேர்ந்து இருப்பாங்க. இவங்க இருவரும் புரிஞ்சிக்காமல் சண்டை போடுறாங்க என்று நினைத்த நம்மளை எல்லாம் என்ன செய்யறது” என்று மறுப்பக்கம் அமர்ந்து புலம்பினாள்.

அதன்பிறகு எல்லோரும் குளித்து ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினர். அடுத்து வந்த நாட்களிலும் சென்னையை  சுற்றி உள்ள இடங்கள், மகாபலிபுரம் என்று அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்தனர்.

அன்று சித்தார்த் – மேகாவும் இருந்த வீட்டிற்கு செல்லும்போதே சித்தார்த் ஏதோ பேசவேண்டும் என்று சொல்லி அவர்களை எல்லாம் அழைத்து சென்றார்.