Sirpiyin kanavukal – 8

Sirpiyin kanavukal – 8

அத்தியாயம் – 8

எழிலனும், மழைநிலாவும் நின்று கதைத்ததை தூரத்தில் நின்று கண்டுவிட்ட நிவேதாவுக்கு உள்ளம் புழுவாய் துடித்தது. அவனை சுற்றி சுற்றி காதலித்தபோது அவள் காணாத புன்னகையை இன்று அவனின் உதட்டில் அரும்பியிருக்க கண்டு உள்ளம் நொந்தது.

எழிலனை இவள் விரட்டி விரட்டி காதலித்த நாட்கள் எல்லாம் மனக்கண்ணில் வந்துபோக அன்று அவள் காணாத அந்த நேசத்தை அவனின் விழிகளில் இன்று கண்டவளின் உள்ளம் பெருமியது.

அவனின் மீதான காதல் அந்தக்கணம் மறைந்துவிட அவனை பழிவாங்கும் எண்ணத்துடன் அவனின் வீட்டிற்கு காரை செலுத்தினாள்.  அங்கே ரமணனும், சரளாவும் சோபாவில் அமர்ந்து வீட்டின் விடயத்தை கதைத்துக் கொண்டிருந்தனர்.

வழமைக்கும் மாறாக வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு யன்னலின் வழியாக எட்டிப் பார்த்தார் சரளா. அழகிய பெண் ஒருத்தி வீட்டிற்குள் நுழைவதை கண்டு, “யாரிந்த பெண்” என்ற கேள்வியுடன் சென்றார்.

அவரைப் பார்த்தும், “மாமி நான் நிவேதா. எழிலனின் காதலி” அவள் தன்னை இயல்பாக அறிமுகம் செய்ய கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் கேள்வியாக பார்த்தனர்.

சரளா வீட்டிற்கு வந்த விருந்தாளியை உபசரிக்கும் எண்ணத்துடன் தேத்தண்ணி கொண்டு வந்து கொடுக்க, “தேங்க்ஸ் மாமி” என்றவள் தான் வந்த விடயத்தைக் கதைக்க தொடங்க ரமணனின் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது.

அதற்கு எதிர்மாறாக சரளாவின் முகம் பளிச்சென்று மலர, “நல்ல பெண்ணல்லோ..” என்று நிவேதாவை கட்டியணைத்து நெற்றியில் இதல்பதித்தார்.

“என்ன விடயமாக இருந்தாலும் நீர் நேரில் வந்து கதைப்பது முறையெல்ல..” என்ற ரமணனை அவள் நோக்கிய கணமே அவளின் மனம் தெளிவாக உணர்ந்தார்.

அவள் ஏதோ பேசும் முன்னே  வீட்டின் வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. எழிலன் வெளிவேலையை முடித்துவிட்டு அடைந்த போது வழமைக்கு மாறாக வீட்டு வாசலில் நின்ற கார் அவனின் கவனத்தை ஈர்த்தது.

அது நிவேதாவின் கார் என்று சொல்லாமல் உணர்ந்தவன் வீட்டின் உள்ளே செல்ல வழமைக்கு மாறாக அவனின் தாய், தந்தையுடன் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தாள்.

அவன் வருவதைக் கண்டதும் வேகமாக எழுந்தவள், “எழிலன் நான் மாமியிடம் கதைத்துவிட்டனான். மாமிக்கும் நம்ம கல்யாணத்தில் வெகு திருப்தி” அவள் புன்னகையுடன் கூற அவனோ கற்சிலைபோல நின்றிருந்தான்.

ரமணன் மகனின் அசைவில் இருந்தே சிந்தனையுடன் பார்க்கலானார்.

இதென்று பிரித்தறிய முடியாத கலவை உணர்வுடன் உச்சகட்ட கோபத்தில் விழிகள் சிவந்தபோதும் பொறுமையாக நின்றான். நிவேதா நேரடியாக வந்து கல்யாணம் பற்றி கதைக்கவும் அவனுக்கு அவளின் மீது வெறுப்பு உண்டானது நிஜம்.

“நல்ல பிள்ளையடா” என்றார்  தாயார் அவளின் மனம் தெரியாமல்.

அவனின் பார்வை ஒரு கணமேனும் தாயின் மீது நிலைக்க அவளிடம், “உன் கல்யாணம் பற்றி என் அம்மாவிடம் கதைக்க என்ன இருக்கிறதாம்? என்ன விடயமாய் வந்தீர் நிவேதா” என்றான் இறுகிய குரலில் கோபத்தை கட்டுபடுத்தியபடி.

அவன் நேரடியாக விடயத்திற்கு தாவியதில் நிவேதாவின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவள் கணநொடி மெளனமாக நின்றிருக்க எழிலன் தன் பொறுமையைக் காற்றில் பறக்க விட்டிருந்தான்.

“நிவேதா இப்போது இங்க எதுக்கு வந்திருக்கிறீர்” என்றான் எரிச்சலோடு அவள் முகம் நோக்கியபடி.

அவள் பதில் சொல்லாமல் தலைகுனிந்து நின்றிருக்க, “நிவேதா எனக்கு பொறுமை இல்ல என்ர விடயம் அறிந்தும் என்னை சோதிக்காதேயும்” என்றான் அவன் கடுமையான குரலில்.

“அப்பாவிடம் அந்த பெடியனை வேண்டாம் எண்டு சொல்லிட்டன் எழில். எனக்கு நீதான் வேண்டும் என்ர எண்ணத்தில் நம்ம காதல் பற்றி அப்பாவிடம் கதைச்சனான். அப்பாவிற்கு இதில் பூரண சம்மதம் என்றதும் உன்னை சந்திக்க வாறன்” என்றாள் மெல்லிய குரலில்.

அவள் சொன்னதைக்கேட்டு எழிலனின் முகம் மலருமென்று அவள் எதிர்பார்க்க அவனோ மேலும் இறுகிப்போய் நின்றான்.

அவளின் தவிப்பைக் கண்ட சரளா அவளுக்கு உதவிக்கு வர எழிலன் எதுவும் பேசாமல் சோபாவில் அமர்ந்து சிந்திக்க, “நல்ல பொண்ணுடா கண்ணா. நீ சரியென்று சொல்லு அடுத்த கிழமையே உன் திருமணத்தை முடித்துவிடலாம்” என்றார் புன்னகையுடன்.

மனைவியின் பேச்சு ரமணனுக்கு கசந்தது. பிள்ளையின் வாழ்க்கை பழியாவது புரியாமல் கதைக்கிறாலே எண்டு அவருக்கு கோபம் அதிகரித்தது.

தாயின் இந்த அவரசம் எதனால் என்று புரியாத முட்டாள் இல்லையே. நிவேதா பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை மகன் கல்யாணம் பண்ணிவிட்டால் சொகுசு வாழ்க்கை மகனுக்கு கிடைக்கும். அவருக்கு தனித்தொரு அடையாளம் கிடைக்கும் சொசைட்டியில்.

“அம்மா நான் இன்னும் என்ர பதிலா சொல்லேல்ல. நீங்க கொஞ்சம் பொறுமையாக நில்லுங்கோ” என்றவன் எழுந்து நிவேதாவின் அருகினில் வந்து அவளின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தான்.

அவளோ இவனின் பார்வையை தவிர்க்க வெகுவாக போராடிட, “நிவேதா நான் என்ன கடையில் விற்கின்ற பொருள் என்ர நினைவில் இருக்கிறீரோ? சொல்லுங்கோவன்” அவன் நிறுத்தி நிதானமாக கேட்க அவளோ சற்று தடுமாற்றத்துடன் நிமிர்ந்தாள்.

அவளின் மீன்விழிகள் அவனிடம் காதலை யாசிக்க, “நீ வேண்டாம் என்று கதைச்சதும் விலகி போகவும், வேண்டும் என்ர கணமே நெருங்கி வரவும் நான் என்ன உன்ர கையில் விளையாட கொடுக்கபட்ட பொருளா என்ர எண்ணமோ” அவனின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

அவள் தலைகுனிந்து நின்றிருக்க அவளை தீர்க்கமாக நோக்கியவனோ, “ உன்ர அப்பா வடிவான மாப்பிள்ளை பார்த்ததும் என்னை வேண்டாமென்று உதறிவிட்டு போனவள் இப்போ என்ன காரியத்தோடு என் வாழ்க்கையில் மீண்டும் வந்திருக்கிறீர்” என்றான் எரிச்சலை மறைக்காத குரலில்.

அவனிடம் இப்படியொரு மாற்றம் வருமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவள் பார்த்த எழிலன் துரத்தி போனாலும் விலகி நடப்பனே தவிர இப்படி சுடுசொல் சொல்லி கதைத்ததை அவள் கண்டதில்லை.

“நான் உன்னைத்தானே விரும்பனான்” அவள் தன்பக்க நியாயத்தை உரைக்க, “அது கடந்தகாலம். இப்போ நீ ஏன் எண்ட நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் குழப்புறீர்?” என்ற மகனின் மனம் தாய்க்கு புரியவில்லை போல.

அவனின் பேச்சில் இடையில் புகுந்த சரளா, “என்ன கண்ணா இப்படி கதைக்கிறாய்? அந்த பொண்ணு பாவம்”என்ற தாயை அவன் முறைத்துவிட்டு அமைதியாக நின்றான்.

அவன் தன்னை வெகுவாக சமாதானம் செய்தபடி, “எனக்கும் மனசு என்ர ஒண்டு இருக்கு எண்டு நினைச்சு கதைங்கோ. ஆதில் ஆயிரம் ஆசைகள் இருக்கு..” என்றவன் தீர்க்கமான முடிவுடன் நிமிர்ந்தான்.

“நீர் எடுத்த் இந்த முடிவிற்கு நான் எண்டும் பொறுப்பாளி ஆக ஏலாது நிவேதா” அவளை வாசலின் பக்கம் திருப்பிவிட சரளாவிற்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது.

“என் காதல் பொய்யா எழிலன்?” அவள் கண்ணீரோடு கேட்க, “ என்னை வேண்டாம் என்று தூக்கி எரிஞ்சது நீ நான் அல்லோ. இன்று நீர் வேண்டும் என்றதும் மனசை மாற்றிக்க என்னால் ஏலாது நிவேதா” என்றான் அவளை நேருக்கு நேராக பார்த்தபடி.

அவன் கதைத்ததும் வந்த காரியம் நடக்கவில்லை என்ற கோபத்தில் வேகமாக சென்றாள். அவளின் மனம் அறியாத சரளாவோ மகனின் மீது கோபத்துடன் முறைத்தார்.

அவன் அறைக்குள் செல்ல திரும்ப மகனின் வழியை மறைத்த சரளா ஏதோ கேட்கும் முன்னே சுரேசு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

“நீர் சொல்லுங்கோ இஞ்சாருங்கோ. வீடு வந்த பெண்ணை உப்படி கதைத்துஅனுப்போணும். இவன் கதைத்தது சரியோ எண்டு கேளுங்கோ” என்றார் கோபத்துடன் மகனை முறைத்தபடி.

அவனோ சுவற்றில் சாய்ந்து நின்றிருக்க அவனின் கவனம் முழுவதும் வேறு யாரின் மீதோ இருந்தது. பேரனின் கவனம் இங்கில்லை என்ற விடயத்தை கெதியாய் புரிந்துகொண்ட சுரேஷ், “என்னப்பா அமைதியாய் இருக்கிறாய்?” மகனிடம் கேட்டார்.

அவரோ எழிலனைக் கேள்வியாக நோக்கிட, “அப்பா நான் என்ற கேம்பஸில் படிக்கும் மழைநிலா என்ற பெண்ணை நேசிக்கிறன். எனக்கு அந்த பெண்ணை கல்யாணம் பண்ணி வைங்கோவன்”என்றவன் நில்லாமல் விறுவிறுவென்று அறைக்குள் சென்று மறைந்தான்.

அதற்கு எல்லாம் அசராமல் செல்லும் மகனைக் கண்டு, “யாரென்று தெரியாதவள் ஒருத்தி இவனின் மனதை மயக்கி வைத்திருக்கிறள். அவளை நேரில் காணும் நேரம் கணபொழுது என்றபோதும் அவளை நான் என்ன செய்கின்றன் பாரும்” என்று தனக்குள் திட்டி தீர்த்தார் சரளா.

அவர் சென்று சமையலைக் கவனிக்க சுரேஷ் தன் அறைக்குள் சென்று மறைந்தார். ரமணன் சிந்தனையுடன் மகனின் அறையை இமைக்காமல் நோக்கினார்.

எழிலன் இதுவரை தனக்கு இது வேண்டும் என்று எதையுமே வெளிப்படையாக கதைத்ததில்லை. இன்று அவனே தான் ஒரு பெண்ணை நேசிக்கிறன் என்றதும் தெளிவானதொரு முடிவை எடுத்தார்.

அன்று இரவு உணவுவேளையில் டைனிங் டேபிளில் அமர்ந்த குடும்பத்தை ஒரு பார்வை பார்த்த ரமணன், “எழில் அந்த பெண்ணின் தாரும். நானும், உன் அம்மாவும் நேரில் சென்று கதைத்துவிட்டு வந்து ஒரு முடிவு சொல்கிறனான்” என்றார் பொறுமையாகவெ.

அவரின் அந்த நிதானம் எழிலனை வெகுவாக சிந்திக்க வைத்தது. தந்தை ஒரு விடயத்தை செய்கிறேன் என்றாலே அது முடிந்தது என்று அர்த்தம். சிறிதுநேரம் சிந்தனைக்கு பின்னர் அவனே அவளின் முகவரியை கொடுத்துவிட்டு மீண்டும் தன்னறைக்கு சென்றுவிட்டான்.

அன்று காலை மகளை அனுப்பிவிட்டு பின்னாரம் அவள் வீடு வரும் வரை நிலையில்லாமல் தவித்தார் மல்லிகா. அவள் வந்தும் நேராக சென்று கைகால் அலம்பிவிட்டு வந்து சோபாவில் அமர மணக்க மணக்க அப்பமும், சாம்பலோடு மகளின் அருகே வந்தார்.

அவர் கொடுத்ததை உணவை ரசித்து உண்ட மகளைக் கண்டு, “உனக்கு மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா நிலாம்மா” என்று ஆர்வத்துடன் கேட்க,

“நீங்க சொன்ன யாரும் அந்த கோபி ஷாப்க்கு வரவில்லை அம்மா. காத்திருந்து காலம் கடந்தது தான் மிச்சம்” என்றாள் அவள் சலிப்புடன்.

“ஏன் அவரிடம் சரியாகத்தானே சொன்னன்” என்றவர் சிந்தனையுடன் எழுந்து செல்ல இவளோ சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு கட்டிலில் படுத்து உறங்கிவிட்டு மாலை மயங்கும் வேளையில் தான் கண் விழித்தாள்.

அவள் கண் விழிக்கும்போது அவளின் அம்மம்மா அருகில் நிற்க கண்டு, “என்ன அம்மம்மா வந்து அமைதியாக நிற்கிறீங்கோ” என்று அவரை இழுத்து அருகே அமர வைத்தவளின் பார்வை ஹாலில் தாய் இருக்கிறாளா என்று நோட்டம் விட்டது.

அவர் இல்லை என்ற நிம்மதியுடன், “அம்மம்மா நான் அந்த மோதிரத்தை அவரிடம் கொடுத்துவிட்டன்” என்றவள் விழிகளில் சந்தோஷம்  மின்னியது.

“யாரிடம் கொடுத்தாய்” என்று அவர் புரியாமல் கேட்க, “நான் அண்டைக்கு கடையில் வாங்கிய மோதிரத்தை எழிலனிடம்  கொடுத்துவிட்டன்” என்று அவள் அங்கே நடந்த அனைத்தையும் அவரிடம் ஒப்பித்தாள்.

பேத்தியின் இந்த துள்ளல் கண்டு புன்னகையுடன் அவளின்  கன்னம் வருடியவர், “அந்த பெடியன் வடிவா இருப்பானோ” என்றவர் சந்தேகமாக இழுக்க, “நீர் இங்கே வந்தும் நேரில் பார்க்கத்தானே போகிறீர்” என்றாள் பேத்தி புன்னகையுடன்.

“எப்படியோ உன் மனதிற்கு மாப்பிள்ளை பிடித்தால் சரி” என்றவர் மீண்டும் பேத்தியின் நெற்றியில் இதல்பதித்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.

மறுநாள் காலை கந்தோர் சென்ற மல்லிகா அந்த பையனைக் கண்டு விவரம் கேட்க, “ஸாரி ஆண்டி எனக்கு உங்கன்ற மனுஷியை பிடிக்கேல்ல. நான் வேறொரு இடத்தில் பெண் பார்த்துட்டன்..” என்றவன் மற்ற வேலைகளை கவனிக்க சென்றான்.

அவன் எதற்காக அவரின் மகளை வேண்டாம் என்று சொன்னான் என்று அவருக்கு தெரியுமே. இங்கே எல்லாமே பணம் தான் பிரதானம். அது இல்லாத இடத்தில் மனிதர்கள் நிற்பதில்லை.

அவர் மாலை கவலையுடன் வீடு திரும்ப அங்கே ஹாலில் அவளின் தாயாருடன் நால்வர் அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்க கண்டு கேள்வியாக புருவம் சுருக்கினார் மல்லிகா.

“இது அவளன்ற அம்மாவே வந்தாவே” என்றதும் ரமணனும், சரளாவும் திரும்பி அவரைப் பார்க்க அவரும் களைப்பை மனதினுள் மறைத்துக்கொண்டு மெல்ல புன்னகைக்க, “நம்ம நிலாவைப் பெண்கேட்டு வந்திருக்கினம் மல்லிகா” என்றார் கீதா புன்னகையுடன்.

அதைக்கேட்டதும் அவரின் களைப்பு எல்லாம் பட்டென்று பறந்துவிட, “வாங்கோவன் அண்ணா, வாங்கோ அண்ணி” என்ற அழைப்புடன் அவரை நெருங்கிய மல்லிகா மகளை பார்வையில் தேடினார்.

அவரின் தேடல் உணர்ந்தும், “நிலா அறையின் உள்ளே இருக்கிறள்” என்றார் கீதா.

கீதாவிற்கு அவர்களின் குடும்பம் பேத்தியை பெண்கேட்டு வந்த சந்தோசத்தைவிட எழிலனைப் பார்த்த அதிர்ச்சி தான் அதிகம் இருந்தது. அப்படியே அச்சு அசல் தன் தோழியின் கணவனை பல வருடங்களுக்கு பிறகு நேரில் கண்டது போல இருந்தது.

“நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் போல தெரிகிறதே” என்றவர் அடையாளம் கண்டு விவரம் கேட்க, “ஓம் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே திருச்சி. கொஞ்சநாள் வேலை பார்த்து ஹைதராபாத்தில் கொஞ்சநாள் பணியில் இருந்தேன். அப்புறம் பெங்களூர் அங்கே இவளிண்ட அப்பா என்னை திருமணம் செய்து இங்கே கொழும்பு அழைத்து வந்துவிட்டர்” என்றார்.

அவர் பேச்சில் தெரிந்த தமிழில் உள்ளம் மகிழ்ந்தவர், “நான் பிறந்தது வளர்ந்து எல்லாமே பொள்ளாச்சி. பல வருடங்கள் கோவையில் வேலை பார்த்தேன். பிறகு என்ர பாஸ் சென்னை வந்தபிறகு அவரைப் பிரிந்து நான் இங்கே கொழும்பு வந்துட்டன்” என்றார்.

இருவரும் பேச்சில் பழைய ஊர் நோக்கி பயணிக்க எழிலனின் பார்வையோ மழை நிலாவின் அறையின் மீதே நிலைக்க, “கண்ணா பொண்ணு வடிவா இருப்பாள் அல்லோ” என்று கேட்க அவனும் புன்னகையுடன் தலையசைக்க சரளா மட்டும் கோபத்துடன் மெளனமாக இருந்தார்.

அவருக்கு இந்த சம்மதத்தில் துளியும் விருப்பமில்லை என்றபோதும் மகனுக்காக வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார். மல்லிகா சென்று மகளை அழைத்துவர தலைகுனிந்து நடந்து வந்தவளின் மீதிருந்து பார்வையை அகற்ற முடியாமல் தவித்தான் எழிலன்.

பச்சை நிறத்தில் மெரூன் கலர் சரிகையுடன் கூடிய பட்டுபுடவையில் தேவதை போல நின்றவளை கண்ணெடுக்காமல் ரசித்தான். அவளோ ஓரவிழி பார்வையில் அவனை நோக்கியது.

அவளைப் பார்க்கும் வரை இயல்பாக இருந்த சுரேஷ் பெண்ணை கண்ட மறுநொடியே, ‘என்ன நடக்குது இங்கே? இவங்க மேகாவின் மறுபிம்பம் போல அல்லோ இருக்கிறள்’ என்ற நினைவுடன் தன் பேரனையும் அந்த பெண்ணையும் மாறி மாறி பார்த்தவருக்கு உண்மை விளங்கிவிட்டது.

அவளுக்கு அவனும், அவனுக்கு அவளும் என்று மேலே இருப்பவன் எடுத்த முடிவை நம்மால் மாற்ற இயலாது என்று நிமிர்ந்தவர் கீதாவின் கண்களில் தெரிந்த மாறுதலைக் கண்டு கொண்டார். அவர் திகைப்புடன் நிமிர சுரேஷ் பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்து தலையைத் திருப்பிகொள்ள இருவருக்கும் திருமணம் பேசி முடிவானது.

இந்த விடயம் அறிந்த மேகாவும், முகிலனும் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தனர்.

error: Content is protected !!