SS 2

SS 2

  • சீமை சீயான் -2

ஆயிற்று இன்றோடு வேம்புவின் கடந்த காலம் காற்றாகி போய் ஒரு மாதமாயிற்று,ஆனால் மாற்றம் என்பது யாரிடமும் இல்லை,வளமை போல் எல்லாம் நடந்தாலும் இன்னும் எதுவும் நேராகவில்லை.

கையில் பேப்பரை வைத்து இப்புடியும் அப்புடியும் பார்த்துக் கொண்டு இருந்தான் முத்து, காலையில் பேப்பர் படிக்க என்று பேர் பண்ணி கொண்டு காலை காபிக்கு இங்கு வந்து விடுவான்.

“ஏலெய்! எசக்கி இந்தா காப்பிய குடிச்சிட்டு படி”.

“ஆமா,அப்புடியே பேப்பர படிச்சு கிழிச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பான்,ஏன்ம்மா நீ வேற காபிக்கு வந்து உக்காந்து இருக்கான்”.
ஆசையாகக் காப்பியை கையில் வாங்கிய முத்து,பாண்டியை முறைத்து பார்த்தவாரே,”மாப்ஸ் நீ ரொம்பப் படிச்சேங்கற அதப்புல பேசுறியா,நாங்கெல்லாம் படிக்காத மேதை தெரியுமுல்ல”,சட்டை காலரை தூக்கி விட்டு சொல்ல தலையில் அடித்துக் கொண்டான் பாண்டி.

சீயானை கண்டு கொள்ளாது காப்பியை பருக போக,அதே குரல்………..

“ஐத்த”,என்று கூவிய வாரே வந்தாள் பிச்சி.பலம் கொண்டு தன் தலையில் அடித்துக் கொண்ட முத்துக் கவனமாக நமது சீயானிடம் இருந்து சற்று தள்ளி அமர்ந்தான்.
எதுக்கு வம்பு மாமான்னு வந்து கட்டி புரண்டு என் காப்பிய காலாவதி ஆக்கிடுவா கருவாச்சி,எங்கு இருந்துதான் மூக்கு வேர்க்குமோ மவராசி ஜங்குன்னு வந்து நிக்குறா.
சீயானுக்கு முதுகு காட்டி காப்பியை பருக போக,முனியாண்டி கொல்லை புறத்தில் இருந்து அழைத்தார்,”அந்த கொண்டிய எடுத்துட்டு வா எசக்கி,முருங்கை காய் கிடக்குது பாரு,பாதிக்கு மேல முத்தி போச்சு”.
கையில் உள்ள காப்பியை அழுகாத குறையாக வைத்துவிட்டு,கொண்டியயை எடுத்துக் கொண்டு தனது மாமனை நோக்கி சென்றான்.

சீயானை முறைத்துக் கொண்டு தனது அத்தையைப் பார்க்க அடுக்கலைக்குள் செல்ல,அவனைத் தாண்டி சென்றவளது கையைப் பற்றியவன்,”நீயாவது என்ன புருஞ்சுக்கோ பாப்பா”.
கண்ணில் நீர் கோர்க்க வேண்டியவனைப் பார்த்தவளது மனம் பதறியது, பாவிமவ சிங்கமா இருந்தவுங்கள இப்புடி ஆக்கிப்புட்டாளே வேம்புவின் மீது கொலைவெறியே வந்துவிட்டது, பிச்சிக்கு.

என்னத்துக்கு மாமா நீ கலங்குற,அவளுக்காக அழுகாத மாமா,உனக்காக அவ பார்த்தால அன்னக்கி,அத்தனை பேரையும் தூக்கி போட்டுட்டு அவ அப்பேன் ஆத்தா முக்கியமுன்னு கரிய பூசுனாள,அவளுக்காக நீ எதுக்கு வெசன படுற.

சண்டாளி! ஒரு சொட்டு தண்ணி கண்ணுல வரலயாம் மாமா,கல்லாட்டம் இருந்தானு அம்மா சொல்லுச்சு,பாவி முடியல மாமா”,தனது தோள் மீது சாய்ந்து அழும் பிச்சியை அனைத்து,அவளது முதுகை தடவி கொடுத்தான்.

என்ன முயன்றும் அவனால் நடந்தவற்றை மறக்க முடியவில்லை இரக்கம் கொள்ள மனம் எண்ணினாலும்,காயம் கண்ட உள்ளம் அதனை மறுத்துவிடுகிறது.

“இப்போதான் அவளுக்கு நம்ப ஆறுதலா இருக்கணும் பாப்பா,நீயும் தள்ளி நிக்காத,போய் ஒருஎட்டு பார்த்துட்டு வா,எதிரியே இருந்தாலும் துக்கத்தை அனுசரிக்கணும் பாப்பா”,தலையைத் தடவி மென்மையாகச் சொல்ல அவளும் தலையை ஆட்டினாள்.

அவனது கையை மென்மையாக பற்றி அழுத்தியவள், அவனது சொல்லுக்கு அடி பணிந்து அடுக்களை நோக்கி சென்றாள்.

பிச்சி சீயானுக்குத் தந்தை வழி சொந்தம் தான்,ஆதரவற்று பிச்சையின் தந்தை இவ்வூருக்கு வந்தது முதல் அவரை அரவணைத்துக் கொண்டு சென்றது சீயானின் தந்தை தான்,அன்று முதல் அவருக்குச் சீயானின் குடும்பம் சொல்லுவதே வேதவாக்காக எண்ணி செயல்படுவார் பிச்சையின் தந்தை,

கோசிறு வயது முதல் தங்களுடனே பிச்சியும் வளர்ந்தாள், அவள் என்றும் அவனுக்குப் பாப்பா தான்,அவள் மீது அத்தனை பாசம்,ஒற்றை ஆளாய் வளர்ந்த சீயானுக்கு விளையாட்டுப் பொம்மையான தங்கை அவள்.

அவன் சொல்லுவதே அவளது செயல்,இதனை முத்துவும் நன்கு அறிவான்.ஆனாலும் அவளிடம் வம்பு வளர்க்காமல் அன்றைய பொழுது அவனுக்கு விடியாது,இது அவன் விவரம் அறியாத வயதில் இருந்தே தொடரும் வம்பு தான்.
கலங்கிய கண்களை யாருக்கும் அறியா வண்ணம் சுண்டி எறிந்தான் சீயான்,அழுகை வாழ்க்கையில் தோற்று போனவனுக்கே சொந்தமென்ற எண்ணுபவனை இன்று கலங்க வைத்து விட்டாள் அவனது அ….. எதிரி.

தலை தாங்கி நாற்காலில் சரிந்து அமர்ந்தான்,கொல்லைக்குச் சென்ற முத்து வேகமாக வந்து மீண்டும் அந்தக் காபியை எடுக்க,நல்ல வேளை அது குடிக்கும் பதமாகத் தான் இருந்தது.

மீண்டும் அவன் வாய் அருகில் கொண்டு செல்ல,அவனது பார்வை எதார்தமாக வாசல் பக்கம் பார்க்க அங்கே …..

“மாப்ஸ் வில்லங்கம் வேட்டி கட்டி வருதுடா”,கையில் லோட்டாவை வைத்துக் கொண்டு வாசலில் வரும் பொன்னுரங்கத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னான் முத்து.

வந்தவர் சீயானை பார்த்து தயங்கி நிற்க,அவன் தான் அவரை வரவேற்றான்,”வாங்க மாமா “.
அவனது அழைப்பு அவருக்குச் சாட்டையை எடுத்து வீசியது போல் இருந்தது,இதோ நான் பெரிய மனிதன் என்று செயலால் காட்டிவிட்டான்.

சொன்னானே அன்றே சொன்னானே நான் செய்யவில்லை மாமா என்னை நம்புங்கள் என்று காலை பிடித்துக் கெஞ்சாத குறையாக அனைவர் முன்பும் நின்றானே,என் மூளை அன்று சரியான வழியில் சொல்லவில்லையே! என்ன செய்ய,அவர் வருந்திய வாரே சீயானை பார்த்து நிற்க,அங்காயி குரல் அவர்களை நடப்புக்கு அழைத்து வந்தது.
“வாண்ணே மதனி,வேம்பு எல்லாம் என்ன பண்ணுது,புள்ள சாபிடுச்சானே”.அவர் அடிக்கி கொண்டே போக அவருக்குக் குற்ற உணர்ச்சியில் கூனி குறுகி போனார்.
“எதோ இருக்கு தாயி,எனக்குப் பொறந்த பாவத்தைத் தவிர அவ எதுவும் செய்யலை “,இதனை சொல்லும் போது அவரது பார்வை சீயானை தொட்டு மீண்டது.” மச்சானையும்,உன்னையும் பார்த்துட்டு போலன்னு வந்தேன்”.
அதற்குள் முனியாண்டியும் வந்து விட்டார்,அவரும் நல்ல முறையில் வரவேற்று அவரை நாற்காலியில் அமர வைத்தார்,அங்காயி கையில் காப்பியை திணிக்க மெல்ல தலை நிமிர்ந்தார் பொன்னுரங்கம்,அழுது வற்றி போன விழிகளில் என்ன கண்டாரோ தனது கணவனை ஒரு பார்வை பார்த்தார்,இம்முறை முனியாண்டியால் அதைத் தவிர்க்க முடியவில்லை.
மனைவியின் பார்வைக்கு அடிபணிந்து .“சொல்லு ரெங்கம்”.
அவர் கேட்டது தான் தாமதம் குலுங்கி குலுங்கி அழுக ஆரம்பித்து விட்டார்.

“மச்சான் என்ன பாருங்க எதுக்கு இப்போ வெசன படுறிங்க”,நாங்க இருக்கோம் விட்ருவோமா.
“முடியல மச்சான் என்ன பிச்சுத் திங்காத குறையச் சொந்தமெல்லாம் புடுங்குதுங்க,ஒருத்தன் எனக்குக் கட்டி கொடு நான் அவளையும் சொத்தையும் பார்த்துக்குறேனு சொல்லுறான்,இன்னொருத்தன் இரண்டாந்தரமா கேக்குறான்,புள்ள பயந்து கிடக்குது,பச்ச தண்ணி இறங்காம,எனக்குக் கல்யாணம் எல்லாம் வேணாம்ப்பா நான் எங்கயாவது போய்டுறேன்னு,காலப் புடுச்சுக் கதறது மச்சான்”.
அங்காயி கோபமாகத் தலை முடியை தூக்கி கொண்டை போட்டவாரே சண்டைக்கு வந்தார்.
“எந்தச் சிறுக்கி மவன் பொண்ணு கேட்டான் சொல்லு வகுந்துடுறேன்,கேட்க ஆள் இல்லாத அநாதனு ….
அதற்க்கு மேல் வார்த்தை வராமல் கோபம் அடைக்க,”ஏலேய்,பாண்டி வெரசா கிளம்பு இனி வேம்பு நம்ப வீட்டு பொண்ணு,அவளை இங்கன கூட்டியாந்துரு”.
அவசர படாத அங்காயி இப்போ சூழ்நிலை சரியில்லை,நம்பப் பாண்டியயும் கொஞ்சம் யோசி. கணவனின் பேச்சில் கோபம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

அவரது வார்த்தையில் பொன்னுரங்கம் அதிர்ந்து பார்த்தார்,அவர் பார்வையில் கெஞ்சல் இருந்தது.
மச்சான் நான் சொல்லுறது கஷ்டமா தான் இருக்கும் ஆனா நடப்புக்கு இது சரிவராது,யாரு கண்ணு பட்டுச்சோ நம்பப் புள்ளைங்க இரண்டும் ஊர் வாயுல விழுந்துச்சுங்க,இனி நம்ப எடுத்து வைக்குற அடி கவனமா இருக்கணும்,இப்பவும் சொல்லுறேன் மச்சான் என் பையனுக்கு உன் பொண்ணுதான்னு இருந்தா,அவன் என்ன முடிவு எடுத்தாலும் சரி நான் இருப்பேன்,உன் பொண்ணு தான் என் வீட்டு மருமக”.
முதல அந்தப் பையன் வீட்டுல இருந்து ஆளுங்கள கூட்டு மச்சான் , அவுங்கள ஓரம்கட்டு அப்போதான் நம்பப் புள்ளய பத்தி யோசிக்க முடியும்.சொன்னவர் எழுந்து சென்றுவிட்டார்.
பொன்னுரங்கத்துக்கு இதுவே யானை பலம் தந்தது,ஆனால் துரைப்பாண்டி…..
அவர் எதிர்பார்ப்போடு சீயானை பார்க்க,அவன் தனது அறைக்குச் சென்று விட்டான் தலையைக் குனிந்த வாரே.
அதன்பின் அங்காயி அவருக்குத் தைரியம் சொல்லி அனுப்பிவைத்தார்.அவரை அனுப்பி வைத்துவிட்டு வந்தவர் கண்டது தலையில் கை வைத்திருக்கும் முத்துவையும்,தரையில் கொட்டிய காபியையும் தான்.
அடப்பாவி ஏன்டா காப்பிய கொட்டி வச்சு இருக்கப் பொசக்கெட்ட பையலே,அதற்கும் அவன் பதில் சொல்லாது அமர்ந்து இருக்க,அவன் தலையில் இரண்டு கொட்டு கொட்டிவிட்டு,”பொறுப்பு இல்லாத பைய” என்று திட்டிவிட்டு வேறு சென்றார்.
சிறிது நேரத்துக்கு முன் பொன்னுரங்கம் வேம்புவின் நிலையைச் சொல்ல,கை மூடி கோபத்தை அடக்கிய சீயான் அவள் அழுததைச் சொல்லவும் பொங்கி விட்டான்,கையைக் காற்றில் வீச பக்கத்தில் இருந்த முத்துவின் காபி லோட்டா பறந்து சென்றது,அனைவரும் உணர்ச்சி பிடியில் இருந்ததால் இதனைப் கவனிக்கவில்லை.
அவனுக்குக் காபி கொட்டியதே பெரிய அதிர்ச்சியாகத் தான் இருந்தது,இப்போது அவனது கோபமெல்லாம் கருவாச்சியை நோக்கி தான்.
“அடியேய் கருவாச்சி உன்ன இன்னக்கி பொங்கி திங்காம விடமாட்டேண்டி,காப்பில செய்வினை வச்சுட்டீலடி உன்ன சும்மா விடமாட்டேண்டி”,காப்பிக் கொட்டிய வெறியில் கருவாச்சி வீட்டை நோக்கி சென்றான் எசக்கி முத்து.
அங்கு…..

வேம்புவை பார்க்க பிச்சி வந்து இருப்பதாகச் சொல்ல,அறையை வீட்டு வேகமாக ஓடி வந்தாள் வேம்பு,அவளை பார்த்த கணத்தில் பிச்சிக்கு மனம் பிசைந்தாலும் மனதை இரும்பாக்கி தன்னை அணைக்க வந்தவளை தள்ளி நிறுத்தி அறைந்தாள்.
வேம்புவுக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை அரை வாங்கியதில் ஒரு நிம்மதி தான் பரவியது.
அரைந்ததைப் பொருட்படுத்தாமல் தன்னைக் கட்டி கொள்ளும் தோழியை,கட்டி கொண்டு அழுதது பிச்சி தான்.இரு பெண்களும் அழுது ஓய்ந்து அமர்கையில் சுமார் இருபது பேர் அவர்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.அவர்கள் சொன்னதைக் கேட்ட தோழிகள் இருவரும் அதிர்ந்தனர்.
அடுத்த நிமிடம் பொன்னுரங்கத்தின் பேசி முனியாண்டியின் எண்ணை அழுத்தியது,அவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவர் தானே.

error: Content is protected !!