Tag: Krishnapriya narayan novels

Ruok-8

0
நிலா-முகிலன் 8 முகிலன் பாதியாக உடைத்துக் கொடுத்த மாத்திரையில் திருப்திஏற்படாமல் தவித்தவள், மீதத்தையும் அவனிடம் கேட்கவெனஅறையிலிருந்து வரவும், அவன் அவளுடைய அப்பாவிடம்பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது நிலாவிற்கு. அவன் நேரடியாகத் திருமணத்திற்குக் கேட்கவும், அவள் எப்படிஉணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. மனம் கட்டுப்பாடின்றி எதை எதையோ சிந்திக்கத் தொடங்கியது. கண்களை அகற்றாமல் அவளுடைய முகத்தையே முகிலன்பார்த்துக்கொண்டிருப்பது புரியவும், அந்த மாத்திரையைக் கூடமறந்தவளாக அறைக்குள் சென்று கதவை தாளிட்டாள் நிலா. "நிலா! ரூமை லாக் பண்ணாத!" என அவன் கட்டளையாகச் சொல்லவும்,அடுத்த நொடி, 'க்ளிக்' என தாழ்பாள் திறக்கப்படும் ஒலி கேட்டது. புன்னகைத்துக்கொண்டான் முகிலன். அனைத்தையும் கவனித்தவராக; அதுவும் அவரது முன்னிலையிலேயேமுகிலன் நிலாவை மிரட்டவும், அவளும் கூட அதற்கு கீழ்ப்படியவும்,கொஞ்சம் திடுக்கிட்டவராக; நிலா தெளிவான மனநிலையில்இருக்கும்போது அவளுடைய சம்மதத்தைக் கேட்கவேண்டும்; மேலும்அவனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றஎண்ணத்துடன், "வேண்டாம் தம்பி! அவரசரப்படாதிங்க; இப்ப இவஇருக்கற நிலைமையில் எதையும் முடிவு செய்ய முடியாது. முதல்ல அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்துடலாம். பிறகு மத்ததை முடிவுபண்ணிக்கலாம்! எல்லாம் ஒத்து வந்தால் உங்க எண்ணத்துக்கு குறுக்க நிக்க மாட்டோம்!புரிஞ்சிக்கோங்க!" என அவர் மென்மையாகவே திருமணத்திற்குமறுக்கவும், அதற்கு ஒப்புக்கொண்டு கொஞ்சம் இறங்கிவந்தான் முகிலன். ஆனால் அவளுக்கான மருத்துவம் சென்னையிலேயேபார்க்கப்படவேண்டும் என்பதில்மட்டும் தீர்மானமாய் இருந்தான். சிவராமன் அங்கே வந்திருப்பதை அறிந்து, கதிரும் ஜீ.கே மாமாவும் அங்கேவர, பரஸ்பரம் அறிமுகப்படுத்திவைத்தான் அவன். சிவராமன் மாமாவிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க, முகிலன்குடும்பம் பற்றி அவர்மூலம் தெரிந்துகொண்ட தகவல்களால்,  அவனைப்பற்றிய அவருடைய தயக்கம் கூட கொஞ்சம் விலகித்தான் போனது. *** முந்தைய இரவில் யார் மீது சத்தியம் செய்தானோ அவருக்கு முன்பாக,அதாவது ஜெய்யின் மாமியாருக்கு முன்பாக உட்கார்ந்திருந்தான் முகிலன்தான் வருங்கால மாமனாருடனும் அவருடைய ஒரே மகளுடனும். ஜெய்யின் மாமியார் அகிலா ஸ்ரீதரன், ஒரு பிரபல மனநல மருத்துவர்.சென்னையிலேயே புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றின் மனநலமருத்துவ சிறப்புப் பிரிவில், தினமும் மாலை நேரங்களில் அவர்நோயாளிகளைச் சந்திப்பதால், முன் அனுமதி பெற்று, நிலாவை அங்கேஅழைத்துவந்திருந்தான் அவன்.   ஐம்பது வயது மதிக்கத்தக்கத் தோற்றத்தில்,  பருத்திப் புடவை அணிந்துமிகவும் எளிமையாகவும், மென்மையுடனும், மருத்துவருக்கே உரியக்கம்பீரத்துடன் இருந்தார் அகிலா. அவர்களைப் பார்த்ததும் சிநேகத்துடன் புன்னகைத்தவர், "ஹை! முகிலன்எப்படி இருக்கீங்க?" என சகஜமாக விசாரிக்கவும், "நல்லா இருக்கேன்ஆண்ட்டி! ஹவ் இஸ் அங்கிள்?" என்று அவனும் இயல்பாக கேட்க,சிவராமனுக்கு முகிலன் அவ்வளவு வற்புறுத்தியதன் காரணம் புரிந்தது.மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. அவரை சந்திப்பதற்கு முன்பே, அவருடைய உதவி மருத்துவர்நிலாவுடனும் மற்றவருடனும் பேசி, அவளைப் பற்றிய குறிப்புகளைஎடுத்திருக்கவே. அந்த அறிக்கைகளைப் படித்தவர், மற்ற இருவரையும்வெளியில் அனுப்பிவிட்டு, பின்பு சிறிதுநேரம் நிலாவிடம் பேசினார். அதன் பிறகு நிலாவைச் செவிலியருடன் தனியே அனுப்பிவிட்டு,அவர்களைச் சந்தித்தவர், "இது பெரிய பிரச்சினையா தெரியலியேமிஸ்டர்.சிவராமன். ஸ்ட்ரெஸ்; டிப்ரஷன்; அதாவது சாதாரண மன அழுத்தம் அவ்வளவுதான். இந்த மாதிரி நேரத்துல, மூட் ஸ்விங்ஸ் இருக்கத்தான் செய்யும். ஒரு சமயம் நல்லா உற்சாகமா இருப்பாங்க; ஒரு சமயம் ரொம்பசிடுசிடுப்பா இருப்பாங்க; அடிக்கடி டயர்டா ஓய்ந்து போயிடுவாங்க. தனிமையை அதிகம் நாடுவாங்க. கில்ட்டி கான்ஷியஸ்னால தன்னையேதுன்புறுத்திப்பாங்க. தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்க நினைச்சு எக்குத்தப்பாஎதையாவது செஞ்சுவைப்பாங்க! ட்ரக் அடிக்ஷன் கூட இவங்களை பொறுத்தவரைக்கும் சகஜம்தான். தற்கொலை எண்ணமும் ஏற்படும்தான். அவ்வளவு சுலபமா சட்டுனு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. இவங்கள பொறுத்தவரைக்கும், மனசுல எதையோ வெச்சு குழப்பிக்கிட்டுஇருகாங்க. அதை கண்டுபிடிச்சு வெளியில கொண்டுவரனும். நான் புரிஞ்சிட்ட வரைக்கும், ஒரு டென் டு ஃபிப்டீன் டேஸாதான் இவங்கடிப்ரஷன் பீக்ல இருந்திருக்கு. நாமதான் கவனிச்சிட்டோமே, ஸோ பயப்பட வேண்டாம். கொஞ்சம் சிம்ப்பிள் மெடிகேஷன் அண்ட் கௌன்சிலிங் போதும்;மேக்ஸிமம் டென் டேஸ்ல நார்மலுக்கு கொண்டுவந்துடலாம். அவங்கள எப்பவும் எங்கேஜ்டா வெச்சுக்கோங்க, தனியா விடாதீங்க;அவ்வளவுதான்" நம்பிக்கை கொடுக்கும்விதமாக விளக்கி முடித்தார் அந்தமனநல மருத்துவர். கௌன்சிலிங் கொடுக்கவென தினமும் நிலாவை அங்கேஅழைத்துவரச்சொன்னார் அவர். *** சிவராமனுக்கு அதிகம் விடுப்பு எடுக்க இயலாத காரணத்தால், மகளைமுகிலனுடைய காவலில், மாமா மற்றும் மாமியின் பொறுப்பில்ஒப்படைத்துவிட்டு அடுத்த நாளே டெல்லிக்குக் கிளம்பினார் அவர். நிலமங்கை அவளது கணவர் பிரபஞ்சனுக்குப் பரிசளிக்கவெனவாங்கியிருந்த வீட்டில்தான் இப்பொழுது நிலா இருக்கிறாள் என்பதுநன்றாகவே புரிந்தது முகிலனுக்கு. தொடர்ந்து அவள் அந்த வீட்டில் இருப்பது அவன் மனதிற்கு உவப்பாகஇல்லாமல் போனதால், அதே தளத்திலேயே வேறு பிளாட்டைவாடகைக்கு எடுத்தவன், நிலாவை அங்கே தங்கவைத்தான். ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, நிலாவின் அம்மா உமாவும், முகிலனின்அம்மா ஸ்ரீமணியும் அங்கே வரவழைக்கப்பட்டனர் நிலாவைக்கவனித்துக்கொள்ள. நேரில் பார்ப்பதற்கு முன்பாகவே முகிலனின் மீது அபரிமிதமானநம்பிக்கையும் அன்பும் மரியாதையும்  உண்டாகிப்போனது உமாவிற்கு.நேரில் பார்த்தபிறகோ அந்த எண்ணம் பன்மடங்காகப் பெருகித்தான்போனது. கதிர் சென்னையில் கால் பாதித்தது முதல், நடந்த ஒவ்வொன்றையும்அவனது அபிமான ஸ்ரீமணி ஆண்ட்டிக்கு உடனுக்குடன் நேரடிஒளிபரப்பாகச் சொல்லியிருக்க, திருமணமே வேண்டாம் என்றுசொல்லிக்கொண்டிருந்த மகன், காதல் கல்யாணம் என்று பொங்குவதைக்கேள்விப்படவும் நம்பவே முடியவில்லை அவரால். நிலாவின் படிப்பைப் பற்றி முன்பே அறிந்திருக்கவும், அனைத்தையும்மீறிய ஒரு நல் அபிப்ராயம் அவளிடம் உண்டானாலும், அவளுடையநிலவரம் அவரை கலவரம் செய்தது. ஏற்கனவே ஸ்ரீமணி அவளை நேரில் பார்க்கவேண்டும் எனஎண்ணிக்கொண்டிருக்க, மகன் வேறு அங்கே வருமாறு அழைக்கவும்அங்கே பறந்து வந்துவிட்டார் அவர். நிலாவை நேரில் பார்த்ததும் அவளது அடக்கமான அழகு அவரைகரைத்துவிட, அவளை மகளாகவே ஏற்றுக்கொண்டார் அந்த அன்பானபெண்மணி. தினமும் மாலை, நிலாவை மருத்துவமனைக்கு ஆழைத்துச்செல்வான்முகிலன். உமாவும் ஸ்ரீமணியும் அவளுக்குத் துணையாகக் கூடவேகிளம்பவும், மறுக்காமல் அவர்களையும் உடன் இணைத்துக்கொள்வான். தேவை இல்லாத கேள்விகள் எதையும் கேட்டு அவளைக் குழப்பவேண்டாம் என டாக்டர் அகிலா எச்சரிக்கை செய்திருக்க, யாருமே அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் போதை கலந்த மாத்திரையைஉட்கொள்வதை, மிக முயன்று நிலா தானாகவே தவிர்க்க, அதுவேமிகப்பெரிய உதவியாய் இருந்தது மருத்துவருக்கு. நேரத்தில் உறக்கம், சத்துள்ள உணவுகள் என இருவரின் அன்னையரும்நிலாவைப் போட்டிப் போட்டுக் கொண்டு கவனிக்க, கவுன்சிலிங்கும்சேர்ந்து கொள்ள, நான்கு ஐந்து தினங்களிலேயே  கவனிக்கும்படியானமாற்றங்கள் தெரிந்தது நிலாவிடம். கலகலப்பாக இல்லாவிடிலும் எல்லோரிடமும் கொஞ்சம் சகஜமாகப் பேசஆரம்பித்திருந்தாள் அவள். இடையில் ஒரு நாள் நிலாவை கவுன்சிலிங்கிற்காக அழைத்துச்சென்றிருந்தசமயம் முகிலனைத் தனியே அழைத்த அகிலா, "சாத்தியமா முடியலப்பாமுகிலா! நானும் எவ்வளவோ கேஸை பார்த்திருக்கேன். டாக்டர்ஸ்,என்ஜினியர்ஸ், பலதரப்பட்டவங்களுக்கும் ட்ரீட்மெண்ட் பண்ணிஇருக்கேன். அட்வான்ஸ் ஸ்டேஜ் பேஷண்ட்ஸ் கூட என்னை இவ்வளவுபடுத்தினது இல்ல. முதல் ரெண்டு நாள்தான் அமைதியா இருந்தா. அதுக்கு பிறகு மெடிக்கலா நிறைய கேள்வி கேக்கறா! எந்த மாத்திரைசஜஸ்ட் பண்ணாலும், அதோட காம்பினேஷனை பார்த்துட்டு, அதை யூஸ் பண்ணாம அவாய்ட் பண்ண, ஆயிரம் காரணம் சொல்றா. அவ மைண்ட் ரீட் பண்ண கேள்வி கேட்டால், அதோட ரீசனைகண்டுபிடிச்சு கோ ஆபரேட் பண்ண மாட்டேங்கறா. நீயே அவகிட்ட கொஞ்சம் சொல்லு" என நிலாவைப் பற்றிக்குற்றப்பத்திரிகை வாசித்தார் அவர். மருத்துவரின் பரிந்துரையின் பேரில், அவளைத் தனியாக இருக்கவிடாமல்,ஸ்ரீமணி, உமா, மாமா, மாமி, கதிர் என எப்பொழுதும் யாராவது ஒருவர்மாற்றி ஒருவர், நிலவுடன் இருத்து கொண்டே இருக்கவும், தள்ளி இருந்துஅவளைப் பார்க்க மட்டுமே முடிந்தது முகிலனால். அதையும் தாண்டி சில நேரங்களில்  முகிலனை நேருக்கு நேர் பார்க்கநேரும் போதெல்லாம் தலையைக் குனிந்து கொண்டு சென்றுவிடுவாள்அவள். ஆனாலும் அந்த கணத்தில் சிவத்து மலரும் அவளுடைய முகம்அவளுடைய உள்ளத்தை அவனுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல,புன்னகைத்தவாறே சென்று விடுவான் முகிலன். அதற்குமேல் அவளிடம் ஏதும் பேசும் சந்தர்ப்பம் அவனுக்கு அமையவேஇல்லை. அன்று மருத்துவர் இவ்வாறு சொல்லவும், வீட்டிற்குள் நுழைந்தவுடன்வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட கோபத்துடன், "நீ ட்ரீட்மென்டுக்குகோ ஆபரேட் பண்ணலேன்னா, எக்கேடோ கேட்டு போன்னு விட்டுட்டு,இப்பவே வேற எதாவது ஸ்டேட்ல ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு, வீட்டைகாலி பண்ணிட்டு, போயிட்டே இருப்பேன்! அது மட்டும் இல்ல! எங்க அம்மா பார்த்து ஒரு குப்பம்மா, முனியம்மாயாரை காமிச்சாலும், தாலி கட்டி, ஹனிமூனுக்கு மசூரி கூட்டிட்டுபோயிடுவேன்! ஜாக்கிரதை! என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு!" எனக் கடுமையாக அவளைமிரட்டியவன், அன்னையை நோக்கி, "அம்மா! நீங்களே ஒரு பொண்ணைபார்த்து முடிவு பண்ணிடுங்க! ஓகே வா?" என்று அவன் கேட்க, என்னசொல்வது என்று புரியாமல், எல்லா பக்கத்திலும் தலையைஆட்டிவைத்தார் அவர். அவரது செயலை பார்த்ததும் எழுந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவாறு,"பார்த்த இல்ல! வசதி எப்படி! வேற பெண்ணை கல்யாணம்பண்ணிக்கட்டுமா?" என அவன் கேட்க, முகமெல்லாம் இறுகிப்போய்,கண்களில் கலவரம் தெரிய, அவசரமாக  வேண்டாம் என்று தலையைஆட்டினாள் நிலா.   "அப்படினா அகிலாம்மா சொல்றத ஒழுங்கா கேக்கறியா?" என்றுஅதட்டலாக அவன் கேட்கவும், கண்களில் நீர் கோர்க்க, அதற்கும் அவள்தலை ஆட்டவும், "சரி போய் ரெப்பிரேஷ் பண்ணிட்டு சாப்பிடு!" என்றுசற்று தகைந்த குரலில் சொல்லிவிட்டு அவனுடைய இருப்பிடத்திற்குச்செய்வதற்காக அவன் திரும்ப, கலவரத்துடன் அவனையேபார்த்துக்கொண்டிருந்தார் உமா. "சும்மா!" என்று உதட்டசைவில் சொல்லிவிட்டு, கண் சிமிட்டியவாறுஅவன் அவரை கடந்து சென்றுவிட, மேலும் கலவரமாகிப்போனார் அவர். *** இதற்கிடையில் மகளுடைய விடுமுறையை முன்னிட்டு பிறந்தவீடுசென்றிருந்த சுசீலா மாமியின் மருமகள் ஜெயந்தி, ஊரிலிருந்துதிரும்பியிருந்தாள். அப்பொழுது அவர்கள் வீட்டிற்கு வந்தான் கதிர். அங்கே வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த ஜெயந்தியின் எதிரில்போடப்பற்றிருந்த இருக்கையில் அமர்ந்தவன், " எப்படி இருக்கீங்கஅக்கா? எப்ப ஊருல இருந்து வந்தீங்க?" என நலம் விசாரிக்க, "எனக்கு என்ன நான் நன்னா இருக்கேன்? நேத்து நைட் வந்தேண்டா! நீஎப்படி இருக்க? எக்ஸாம் எழுதினியே என்ன ஆச்சு?" என எதார்த்தமாகக்கேட்க, பரிட்சையைப் பற்றிக் கேட்கவும் அதில் கடுப்பானவன், அதில்தோல்வி அடைந்ததை பற்றிச் சொல்லப் பிடிக்காமல், பேச்சை மாற்றும்பொருட்டு,  " என்னை பத்தின விஷயமெல்லாம் ஒரு பக்கம்இருக்கட்டும்,  உங்க ஃப்ரண்ட் நிலா இல்ல நிலா! அவங்க கிட்ட கொஞ்சம்பார்த்து ஜாக்கிரதையா நடந்துக்கோங்க!" என கதிர் எச்சரிக்கும் குரலில்சொல்ல, "அட நிலாவைத் தெரியுமா உனக்கு?' எனக் கேட்டவள், "அவளுக்குஎன்ன? அவ ரொம்ப நல்ல பொண்ணாச்சே!" என்றாள் ஜெயந்தி. "நல்ல பொண்ணுதான்; ஆனா அந்த நல்ல பொண்ணுக்குத்தான்பயங்கரமான பேய் பிடிச்சிருக்கு!" என்றான் கதிர் கிசுகிசுப்பான குரலில். "லூசாடா நீ! இந்த காலத்துல போய் பேய் பிசாசுன்னு பேசிண்டு!" எனஅவள் அலட்சியமாக பதில் கொடுக்க, "எதோ உங்க கிட்ட சொல்லி அலர்ட் பண்ணனும்னு சொன்னேன்!அப்பறம் உங்க இஷ்டம்!" என அவன் தீவிரமாக முகத்தைவைத்துக்கொண்டு சொல்லவும், "கதிரவா! நிஜமாவாடா சொல்ற!இப்படிலாம் கூட நடக்குமா?" என அவள் அவனுடைய வலையில் வந்துசிக்கவும், "ஆமாம் ஜெயாக்கா! அதுவும் அவங்களை பிடிச்சிருப்பதுசாதாரண பேய் இல்ல! மோஓஓஓஓகினி பேய்! அது நம்ம முகில் அண்ணாவையே மயக்கிடுச்சுனா பார்த்துக்கோங்களேன்!"என்றான் கதிர் உண்மைபோல. "ஐயோ முகிலனையா! பாவம்டா அந்த பையன்!" என்றாள் ஜெயந்திபதறியவளாக. "நீங்க வேணா பாருங்கக்கா, முகில் அண்ணா அவ கிட்ட எப்படி உருகிகரையறாருன்னு! நிலா அம்மாவும், ஸ்ரீமணி ஆண்ட்டியும் இப்ப இங்க வந்திருக்கிங்களேஏன்னு தெரியுமா?" என்று கதிர் தொடரவும், "ஏண்டா! தெரியலியே!அதையும் நீயே சொல்லிடு!" என அவள் பயத்துடன் கேட்க, "சைதாபேட்டைல ஒரு குறி சொல்ற ஆன்ட்டி இருக்காங்களாம்; அவங்கபேயெல்லாம் ஓட்டுவாங்களாம்; டெய்லி சாயங்காலம், சாயங்காலம்அங்கே போய் ரெண்டுபேருக்கும் வேப்பிலை அடிச்சு கூட்டிட்டு வராங்க! நிலா சாதாரணமா இருக்கற மாதிரித்தான் இருப்பாங்க. நீங்க அவங்க எதிரேபோனீங்கன்னா, திடீர்னு நிலவழகி டிராகுலா அழகியா மாறி, உங்க பிளட்மொத்தத்தையும் குடிச்சிடுவாங்க! ஜாக்கிரதை!" என்று சொல்லிவிட்டு,அவளை மேலும் மேலும் கலவரப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றான்கதிர். அவன் சொன்னவற்றை நம்பலாமா வேண்டாமா எனக் குழம்பியவளாக,மாமியாரைத் தேடிப் போன ஜெயந்தி, "அம்மா! இந்த கதிர் பையன் நம்மநிலாவைப் பத்தி என்னென்னமோ சொல்றானே! உண்மையா?" எனக்கேட்க, "அம்மாம்மா ஜெயா! பாவம் அந்த பொண்ணு!" என்று சொன்ன சுசீலாமாமி, "நாமளும் ரெண்டு மூணு மாசமா அவளை பார்த்துண்டேதான இருக்கோம்!ஆனா எதுவுமே தெரியல பாரேன்! நீ ஊருக்கு போனதுக்கு அப்பறம் என்னென்னமோ நடந்துபோச்சு. பதினஞ்சு நாளா அவளுக்கு ரொம்பவே முத்தி போச்சு! அவளோட சேர்ந்துண்டு இப்ப இந்த முகிலனும் படாத பாடுபட்டுண்டிருக்கான் பாவம்" என்று முடித்தார் அவளுடைய உண்மைநிலையைக் குறிப்பிட்டு. பயத்தில் அரண்டே போனாள் ஜெயந்தி. நிலாவை தனிமையில் சந்திப்பதை முடிந்த வரையிலும் தவிர்க்கஆரம்பித்தாள் அவள். நிலாவிற்கு ஏதும் வித்தியாசமாகத் தெரியாமல் இருக்குமாறு, எல்லோரும்இருக்கும்போது, பொதுவாக எதாவது பேசிவிட்டு, வீட்டிற்குவந்துவிடுவாள் அவள். அதுபோன்ற சமயங்களில், முகிலன் அவளிடம் எடுத்துக்கொள்ளும்அக்கறையைப் பார்த்து, அவன் மோகினிப் பிசாசிடம்மயங்கிப்போய்த்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறான் என்றேஎண்ணிக்கொண்டாள். ஜெயந்தி, கதிர் சொன்ன அனைத்தையும்உண்மைதான் என திட்டவட்டமாக நம்பினாள்! *** முகிலன் அங்கிருந்து சென்ற பிறகு, அவன் சொன்னது போலவே குளித்து,இரவு உடைக்கு மாறியவள், அவளுடைய அம்மாவும் வரும்காலமாமியாரும் பார்த்துப் பார்த்து பரிமாற, உணவை உண்டு முடித்தாள் நிலா. பின்பு முகிலன் கோபத்துடன் சென்றதையே எண்ணியவாறுயோசனையுடன் அவள் வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்திருக்க,அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்த கதிர்,...

Ruok – 6

0
நிலா-முகிலன் 6 கதிர் கேள்வியுடன் முகிலனை ஏறிட, "ஜெய்! என்னோட பேட்ச் மேட்!" என உதட்டசைவில் அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, "டேய் மச்சி எங்கடா இருக்க?" என்று கேட்க, "ஆஃபீஸ்லதாண்டா மாப்பிள! ஏண்டா! எதாவது முக்கியமான...

Ruok- 5

0
நிலா-முகிலன் 5 முகிலனிடம் பேச்சைத் தொடர்ந்தார் நிலமங்கையின் அன்னை. "நாங்க அவளை மங்கைனு கூப்பிடுவோம். ஆனா காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ் எல்லாரும்  நிலான்னுதான் கூப்பிடுவாங்க போல. ஃபைனல் இயர் படிக்கும் போதே, யாரோ ஒருத்தனை காதலிக்கறேன்னு வந்து நின்னுச்சு. சாதி...
0