Ruok – 6

Ruok – 6

நிலா-முகிலன் 6

கதிர் கேள்வியுடன் முகிலனை ஏறிட, “ஜெய்! என்னோட பேட்ச் மேட்!” என உதட்டசைவில் அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, “டேய் மச்சி எங்கடா இருக்க?” என்று கேட்க, “ஆஃபீஸ்லதாண்டா மாப்பிள! ஏண்டா! எதாவது முக்கியமான விஷயமா?” என்று அந்த ஜெய் கேட்கவும்,

உன் ஆபிஸ் வாசல்லதான் இருக்கேன்டா மச்சி!” என்றான் முகிலன். அப்பொழுதுதான் கவனித்தான் கதிர்அவர்கள் வந்த வாகனம்அந்த அலுவலகத்தின் வளாகத்தினுள் நுழைந்துகொண்டிருந்தது.

வண்டியை பார்க்கிங்‘ பகுதிக்குள் ஓட்டி சென்று நிறுத்திவிட்டு, “உங்கண்ணன் கேசவன் மாதிரியேஜெய் என்னோட பெஸ்ட் ஃப்ரென்ட். என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சவன். இப்ப இங்கதான் போஸ்டிங்ல இருக்கான்” என்றவாறே,  முகிலன் காரிலிருந்து இறங்கமறுபுறம் கதிரும் கீழே இறங்கினான். அதற்குள் அங்கேயே வந்துவிட்டான் ஜெய்.

முகிலனைக் கண்டதும் நட்புடன் அவனை அணைத்துக்கொண்டு,”அம்மாஅப்பா,அக்காமாம்ஸ்குட்டீஸ்எல்லாரும் எப்படி இருக்காங்க?” என ஒரே மூச்சில் விசாரிக்க, “நல்லா இருக்காங்கடா! உங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருகாங்கஉன் ஜுனியர் எப்படி இருக்கான்?” எனக் கேட்டான் முகிலன்.

சூப்பரா இருக்கான்! ஒய்ஃபும் பையனும் அம்மா அப்பா கூட ஊருல இருகாங்க. எல்லாரும் இங்க வந்து இருந்துட்டு டூ டேஸ் முன்னாலதான்டா ஊருக்கு போனாங்க!” என்றான் ஜெய் பெருமையுடன். 

உடனே, “மீட் கதிரவன். கேசவன் தெரியும் இல்லஅவனோட சொந்த தம்பி! எனக்குத் தத்து தம்பி! பித்து தம்பி எல்லாம்!” என அவனுக்குக் கதிரை அறிமுகம் செய்து வைத்தான் முகிலன்

அண்ணா எனச் சலுகையாய் கோபப்பட்ட கதிருடன், ஹாய் சாம்ப்!” என கை குலுக்கிய ஜெய், “கேசவன் உன்னோட ஃப்ரெண்ட் இல்லஉங்க அப்பாவோட கோ ஆபீசர் நந்தா அங்கிள் சன் தான! ஞாபகம் இருக்கு” என்றவன், “நீதான் திரிலோக சஞ்சாரி ஆச்சே! காரணம் இல்லாம உன் காத்து இந்த பக்கம் வீசாதே!” என்றான் முகிலனை நன்றாக அறிந்தவனாக.

எக்ஸாக்ட்லீ மச்சி! ஆனால் காரணம் எதையும் இப்ப கேட்காதே! சின்ன பிரச்சனைதான். எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு நானே உன்னிடம் சொல்றேன்!”  என்றவன், “காரை சுட்டிக்காட்டி! என் கூட ஒரு பொண்ணு வந்திருக்காடா! ஹோட்டலுக்கு எல்லாம் போக முடியாது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுஉடனே சென்னை கிளம்பனும் மச்சி! சேஃபா ஒரு இடம் சொல்லுடா!” எனக் கேட்டான் உரிமையாக.

அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன், “என்னடா உனக்கு மனசுல பெரிய அப்பாடக்கர்னு நினைப்பா. போலீஸ்காரன்தானடா நீயும். என்னோட குவாட்டர்ஸ்க்கெல்லாம் வர மாடீங்களோ! அந்த இடம் சேஃபா இருக்காதா உனக்கு?” என அவன் முறுக்கிக்கொள்ள,

ஐயோ தெரியாம சொல்லிட்டேன் தெய்வமே! என்னை விட்டுடு!” என்ற முகிலன், “உனக்கு ஹெல்பர் அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க இல்லஎதாவது லைட்டா குக் பண்ண சொல்லுடா! செம்ம பசியா இருக்கு!” என்று சொன்னான் முகிலன்.

வெஜ் சொல்லவாஇல்ல நான்வெஜ்ஜாடா?” என ஜெய் கேட்க, “டேய்! வேட்டைல இருக்கும்போது கிடைப்பதெல்லாம் சாப்பிடுவேன்! ஆனா ஹோம் டவுன்ல இருந்தால் ஒன்லி வெஜ்!” என்ற முகிலன் கதிரை பார்க்க,,

பசிக்கு எதுவா இருந்தாலும் மேயலாம் அண்ணா நோ பிரப்லம்! அதுக்காக புல்லை வெச்சுடாதீங்க” என்றான் அவன் சிரித்துக்கொண்டே.

அதற்குள்ளாகவே அங்கே நின்றுகொண்டிருந்த ஜெய்யைவினோதமாக பார்த்தவண்ணம்சல்யூட் செய்துவிட்டு சென்றனர் அவனுக்கு கீழே வேலை செய்யும் சில காவலர்கள்.

அதைக் கவனித்தவனாக, “எனக்கு கொஞ்சம் வேலை இருக்குமுடிசிட்டு வரேன்நீங்க வீட்டுக்கு போங்க!” என்று சொல்லிவிட்டுஅவனது வாகன ஓட்டியை அழைத்து முகிலனுடைய காரை செலுத்த சொன்னான் ஜெய்.

முகிலன் ஜாடை செய்ததில்கதிர் முன்புறம் உட்கார்ந்துகொள்ளபின்புறமாகச் சென்று நிலாவின் அருகில் உட்கார்ந்துகொண்ட முகிலனை, ‘இது இவனோட டிசயன்லேயே கிடையாதே!‘ என்ற எண்ணம் தோன்றவியப்புடன் அவனைப் பார்த்தான் ஜெய்.

கார் ஜெய்யின் காவலர் குடியிருப்பு வீட்டை அடைந்ததும்சில்லென்ற நீர்த்துளிகள் முகத்தில் தெறிக்கபதறியவாறு தூக்கத்திலிருந்து விழித்தாள் நிலா. அந்த சூழலை உணர அவளுக்கு சில நொடிகள் பிடித்தது.

கீழ இறங்குங்க மேடம்! கொஞ்சம் ரெப்பிரேஷ் பண்ணிட்டு கிளம்பலாம்!” என்று முகிலன் சொல்லகைகளால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டுவாகனத்திலிருந்து இறங்கினாள் நிலா!

அவள் அந்த வீட்டைக் கண்டு மிரளவும், “என் ஃப்ரெண்ட்டோட வீடுதான் பயப்படாம வா!” என்றான் முகிலன்.

கார் டிக்கியை திறந்துதனக்கு ஒரு மாற்று உடையையும்தனது லேப்டாப் பேக்கையும் எடுத்துக்கொண்டு முகிலனை நெருங்கிவந்த கதிர், “யோவ் அண்ணா! என்னையெல்லாம் பார்த்தால் ஒரு மனுஷனாவே தெரியலையா?’ என்று கேட்க, “உன்னைப் பார்த்தால் மனுஷன்னு யாராவது நினைப்பாங்களாமரத்துல இருந்து குதிச்சு வந்த மங்கீன்னு நினைப்பாங்க! ஒரே ஒருநாள் இங்க இருந்தால் போதும். ஜெய்யை கேட்டல் கூட அதையேதான் சொல்லுவான்!” என அவனை வாரினான் முகிலன்.

ஜெய்யின் உதவியாளர்அவர்களை வரவேற்று உபசரிக்கஅதற்குள் அவனுடைய ஓட்டுநர் அவர்களுடைய பயண பைகளை வீட்டின் உள்ளே ஒரு அறையில் கொண்டு வந்துவைத்துவிட்டு, “இது கெஸ்ட் ரூம் சார்! டேக் ரெஸ்ட்!” என மரியாதையுடன் சொல்லிவிட்டுச் சென்றார்.

நிலா நீ ரெப்பிரெஷ் செய்துட்டு சாப்பிட வா! நாங்க பக்கத்து ரூம்ல இருக்கோம்! என்று அவளிடம் கூறிவிட்டுஅங்கிருந்து சென்றான் முகிலன்.

அதன் பின் குளித்து உடை மாற்றி முகிலனும்கதிரும் வரவேற்பறைக்கு வரஜெய் அங்கே வந்து அவர்களுக்காகக் காத்திருந்தான்.

சில நிமிடங்கள் காத்திருந்தும் நிலா வராமல் போகவே, “கதிர்கதவைத் தட்டி அவளைச் சாப்பிட கூப்பிடு!” என்றான் முகிலன். என்னா வில்லத்தனம்!‘ என முனகியபடி, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் கதிர்.

அதைக் கவனித்த ஜெய், “முகிலா! என்னடா நடக்குது இங்க! என்ன இந்த பையன் அந்த பொண்ணை லவ் பண்றானாநீ அவங்களை சேர்த்துவைக்க ஹெல்ப் பண்றியா! இல்ல இடைஞ்சல் எதாவது செய்யறியாஅவன் இந்த லுக் விடுறான்?”என மெல்லிய குரலில் கேட்க,

அதற்கு, “ டேய் கதையையே மத்தாதடா!” என்ற முகிலன், “ஏன்டா நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுவேன்னு கற்பனைல கூட யோசிக்க மாட்டியா நீ?” என்று கேட்க,

என்னநீ! அந்த பொண்ணை …லவ்… பண்றயா?!” என்று அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டுவயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கத் தொடங்கினான் ஜெய்.

அதைக் கவனித்தவாறே அங்கே வந்த கதிர், “என்னன்னு சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல?” என்று சொல்ல, “இல்லப்பா! உன் அண்ணன் இருக்கானே! யாராவது பொண்ணுங்க கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டா அவனைப் பார்த்தால் கூடஅவங்களை கூப்பிட்டுஅட்வைஸ் பண்ணி கொன்னுருவான்.

அந்த பொண்ணுங்க அதுக்குப் பிறகு அவனைப் பார்த்தாலே தெறிச்சு ஓடுவாங்க! அவன் போய் ஒரு பொண்ணை லவ் பண்றானாம்!” என்று சொல்லி மேலும் சிரிக்க, “காலைல இருந்து அதே டவுட்டுதான் அண்ணா எனக்கும்!” என்று ஜெய்யுடன் சேர்ந்துகொண்டான் கதிர்.

பொறுமை எல்லையைக் கடக்க, “தேவை இல்லாம வெப்பனை எடுக்கவேணாம்னு பார்க்கறேன்!” என்றான் முகிலன் கொஞ்சம் காரமான குரலில்.

டேய்! வெப்பன் வெசிருக்கியா என்ன?!”என்று வியந்தது போல் கேட்டான் ஜெய்.

எனக்கு எப்பவுமே அலவ்ட்! உனக்கு தெரியாதா?” என்றான் முகிலன் கெத்தாக.அதே நேரம் நிலா அங்கே வரவும்அமைதியானார்கள் மூவரும்.

பின்புஉணவு உண்டுசிறிது ஓய்விற்குப் பிறகுமெல்லியதாக இருள் பரவத்தொடங்கும் நேரம்அங்கிருந்து கிளம்பினார்கள் மூவரும்.

இரவு அங்கேயே தங்கிவிட்டுஅதிகாலை கிளம்பலாம் என்ற நண்பனிடம்முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றான் முகிலன்.

முகிலன் வேறு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் கூட அங்கே தங்கி இருப்பான். நிலாவைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்ளும் எண்ணம் அவன் மனம் எங்கும் ஆக்கிரமித்திருக்கநேரம் கடத்த விரும்பவில்லை அவன்.

மூணு வருஷம் ஆச்சுடா மாமாநாம மீட் பண்ணி! மறுபடியும் எப்பவோ?” என்று ஜெய் உண்மையான வருத்தத்துடன் கேட்க,

நம்ம வேலை அப்படி! என்ன செய்ய முடியும் சொல்லு! இப்படி சான்ஸ் கிடைத்தால்தான் உண்டு. ஆனாலும் சென்னைல சொந்தமா பிளாட் வாங்கற ஐடியால இருக்கேன்அதுவும் பிஃப்த் ஃப்லோர்ல!” என்று நிலாவைப் பார்த்துக்கொண்டே சொன்னவன், “நான் சென்னைல இருக்கும்போது நீ லீவ் எடுத்துட்டு உன் மனைவி மக்களோட அங்க வந்துரு!” என்றான் உற்சாகத்துடன்.

நிச்சயமா!” என்றவன், “உன்னை இப்படி பார்க்க! ஹாப்பியா இருக்குடா மாமா! சீக்கிரமா பேமிலி மேன் ஆயிடு!” என்றவாறு நண்பனை அணைத்துக்கொண்டான் ஜெய்.

பை டா!” என்றவாறு நண்பனிடம் விடைபெற்று காரில்ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டான் முகிலன். கதிர் அவனுக்கு அருகில் உட்காரபின் இருக்கையில் போய் உட்கார்ந்த நிலாவைகண்டுகொள்ளாமல் காரை கிளப்பினான் அவன்.

ஜெய்யின் முன்னிலையில் அவளிடம் ஏதும் பேசி வம்பை வளர்க்க அவன் முற்படவில்லை அவ்வளவே!

கார் அங்கிருந்து கிளம்பியதும்ப்ளூ டூத் மூலம்ஒரு பாடலை வழியவிட்டான் கதிர்.

ஒய்யா!

புது ரூட்டுலத்தான்!

ஒய்யா!

நல்ல ரோட்டுலத்தான்!

நின்றாடும் வெள்ளிநிலவு!

ஒய்யா ஒய்யா ஒய்யா!

இந்த ராத்திரியில்

ஒய்யா!

ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது!

ஒய்யா ஒய்யா!

நிலவு எங்கே சென்றாலும்!

நிழல் பின்னால் வராதா!

நீ வேண்டாமென்றாலும்!

அது வட்டமிடாதா ஹொய்!

நிலாவைச் சீண்டவே அந்த பாடலை போட்டான் கதிர். ஆனாலும் அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு அந்த பாடல் இனிமையைப் பரப்பஅதில் கரைந்தே போனான் முகிலன்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிஅவனது வாகனம்கொஞ்சம் நிதானமாக செல்லரியர் வ்யூ கண்ணாடி மூலமாக அந்த இதமான மனநிலையில் முகிலன் நிலாவை பார்க்கஏதோ காரணத்தால் அவள் பதட்டம் அடைவதுபோல் தோன்றியது அவனுக்கு.

அவனது எண்ணத்தை மெய்ப்பிப்பதுபோல்அவசர கதியில் அவளது கைப்பையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து, “கதிர் வாட்டர் பாட்டிலை எடுத்து குடுங்க!” என்று தண்ணீரை கேட்டு வாங்கிஅந்த மாத்திரையை வாயில் போட்டுதண்ணீரை பருகினாள் அவள்.

அது அவள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் தூக்க மாத்திரை என்பது புரியஅவளை பற்றிய யோசனையுடனே வாகனத்தை செலுத்தினான் முகிலன்.

பிறகு அவனது வாகனம் வேகம் எடுக்க,மக்கள் பரபரப்பு குறைவாக இருக்கும் பகுதி ஒன்றில் காரை நிறுத்தியவன், “கதிர் நீ பின்னால போய் உட்கார். மேடம் இங்க உட்காரட்டும்!” என்று சொல்லபதில் பேசாமல் கதிர் இறங்க எத்தனிக்கவும்,

நான் அங்க உட்கார மாட்டேன்! அது அடிமைங்க சீட்டுன்னு இவன்தானே சொன்னான்!” என்று அவள் கொஞ்சம் உளறல் குரலில் சொல்லமாத்திரை வேலை செய்ய தொடங்கி இருப்பது புரிந்தது அவனுக்கு.

இனிமேல் நான் கார் டிரைவ் பண்ணும்போது மட்டும் நீ இங்க உட்காரலாம். என்னா இது கிங் சீட். பக்கத்துல அது குவீன் சீட்!” என்றான் முகிலன் வெளிப்படையாக.

காலையில் அவன் முகத்தில் இருந்த இறுக்கம்இப்பொழுது சுத்தமாக தளர்ந்திருப்பது கதிருக்கு நன்றாகவே புரிந்தது.

ஆனால் நிலா கொஞ்சமும் அசராமல் அப்படியே உட்கார்ந்திருக்கவும், “நீயே வரியா! இல்ல நான் வந்து உன்னை தூக்கவா?” என்று அவன் கேட்கவும்பக்கென்று சிரித்தான் கதிர்.

வேறு வழி தெரியாமல்அவனை முறைத்தவாறே முன் இருக்கையில் வந்து உட்கார்ந்தாள் நிலா.

தொடர்ச்சியாக, ‘தங்கமே ஒன்னதான் தேடி வந்தேன் நானே!

வைரமே ஒரு நாள் ஒன்ன தூக்குவேனே!’ பாடலை அவன் ஒலிக்கவிடவும்,

அடங்கவே மாட்டியாடா?” என்றுகேட்டு தலையில் அடித்துக்கொண்டான் முகிலன்.

சில நிமிடங்களில் வாகனம்சென்னையை நோக்கி பயணிக்க தன்னை மறந்த உறக்கத்தில் இருந்தாள் நிலா.

அதற்காகவே காத்திருந்தவனாக, “டேய் மங்கி! அவ ஹாண்ட் பேக்ல ஒரு மாத்திரை இருக்கு. அதை எடுத்துஅதோட காம்பினேஷன் என்னனு பாரு!

நெட்டுல பார்த்து அது என்ன மாத்திரைனு சொல்லு!” என்று முகிலன் சொல்ல, “அண்ணா! மங்கீன்னு சொன்னாநீங்க சொல்றத நான் செய்ய மாட்டேன்!” என முறுக்கிக்கொண்டான் கதிர்.

“ஓவர் சீன போட்டஇங்கேயே இறக்கி தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் மங்கி! சொன்னதை செய்!” என்று கெத்து குறையாமல் முகிலன் சொல்லவும்வடிவேலு பாணியில், “அவ்!” என்று முகத்தைச் சுளித்தவாறு அவன் சொன்னதைச் செய்தவன், “அண்ணா! நியூரோ ட்ராமா பேஷண்ட்ஸ்கு கொடுக்கிற செடேஷன் ட்ரக் அண்ணா இது!

அதுவும் இது கொஞ்சம் ஓவர் டோஸ்!

இதை இப்படி கன்ஸ்யூம் பண்றது ரொம்ப டேஞ்சரஸ்!” என்றவன், “இது யூஷுவலா யாருக்கும் கிடைக்காது! ஏன்னா இதை இன் பேஷண்ட்ஸ்க்கு மட்டும்தான் யூஸ் பண்ணுவாங்க.

இவ எப்படி வாங்கறான்னு தெரியலியே!

அண்ணா இதைத் தொடர்ந்து யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்துனு போட்டிருக்கு!

தேங்க் காட்! நாம கொஞ்சம் எர்லியா கண்டுபிடிச்சுட்டோம் அண்ணா!” என்றான் கதிர்.

வலது கை கார் ஸ்டியரிங்கை பிடித்திருக்கஇடதுகையால் மார்பைத் தேய்த்து விட்டவாறுகதிரிடம் தண்ணீரை எடுத்து தரச்சொல்லிஅதைப் பருகிய முகிலன் பின்பு, “நிலா ஒரு டாக்டரா?” என்று கதிரை பார்த்துக் கேட்டான்.

முகிலன் உச்சபட்ச அதிர்ச்சியில் இருக்கஎந்த வித சலனமும் இன்றிமயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் நிலவழகி தன்னை மறந்த நிலையில்!

error: Content is protected !!