thaagam 23

thaagam 23

 

தாகம் – 23

 

         நமக்கும் பல சிந்தனைகள்  தோன்றுவது இயல்பு..  ஆனால்   அவை அனைத்தையும்  தினமும் யோசித்து செயல்படுத்துகிறோமா..?   விக்ரம்  தனக்குள் ஏற்பட்ட சிந்தனையை  செயலில்  காட்டுவானா..?  அதை விக்ரமின் வாழ்க்கை போக்கில் தான் தெரிந்து கொள்ள முடியும்.

 

      விக்ரம், ரமேஷ் சிந்தனையை பற்றி நமக்கு  தெரியவில்லை. ஆனால்  அவர்கள் முகத்தில்  எல்லையில்லா மகிழ்ச்சி  இருந்தது.

        அதே மகிழ்ச்சியோடு  சென்னை வந்திறங்கினர்.

இப்பொழுது சென்னையில் மழை இல்லை.

 

   திவ்யா நமக்காக பல சுவாரசியமான செய்திகள் வைத்திருப்பாள், என்ற நம்பிக்கையில் ரமேஷுடன் வீட்டிற்கு செல்வோம்.

 

சாலையில் ஆங்காங்கே  தண்ணீர் தேங்கி கிடந்தது.  கார் குண்டும் குழியிலும் ஏறி இறங்கியது.

              ரமேஷ் அவன் வீட்டை வந்தடைந்தான். திவ்யா ரமேஷின் வருகைக்காக  காத்திருந்தாள். 

 

“ரமேஷ் ட்ரிப் எப்படி இருந்துச்சு..? ரொம்ப குளிருச்சா..? எங்கல்லாம் போனீங்க ? மீட்டிங் வெற்றிகரமா முடிஞ்சிதா..?” , என்று திவ்யா தொடர்ந்து கேள்விக் கணைகளை தொடுக்க, ரமேஷ் சோபாவில் அமர்ந்தபடி அவளை கண் இமைக்காமல் பார்த்தான்.

 

“ஏன் இப்படி பாக்குற..?” , என்று திவ்யா வினவ, “உன்னை  எப்படி ரிப்போர்ட்டர் வேலைல வச்சிருக்காங்க ” , என்று ரமேஷ் கேட்டான்.

“மாமா… ரமேஷை பாருங்க .. வந்ததும் வராததுமா என்கிட்டே வம்பிழுக்கிறான்.. ” , என்று ரமேஷ் அருகே சோபாவில் அமர்ந்திருந்த ஷண்முகத்திடம் புகார் கொடுத்தாள்..

 

அவர் இவர்கள் இருவரையும் பார்த்து  புன்னகைக்க, “நீ இப்படி வந்ததும் வராததுமா கேள்வி கேட்டா….??   எவ்வளவு தூரத்துல இருந்து வந்திருக்கான்.. அவனுக்கு ஒரு வாய் தண்ணி கொடுக்கணும்னு தெரியல… அவன் பதில் சொல்ல  விடாமல் கேள்வி கேட்கற…” , என்று புஷ்பா ரமேஷிற்கு தண்ணீர் கொடுத்த படியே கூறினார்.

 

” “flight”ல  எல்லா தண்ணியும்  குடுத்திருப்பாங்க ….” , என்று கண் அடித்த படியே கூறிய திவ்யா,  “அதுல ரமேஷ் எதை எதை குடிச்சானோ…?” , என்று கேள்வியோடு நிறுத்தினாள்.

 

“உன்னை அனுப்பிச்சிருந்தா எங்களுக்கு இந்த சந்தேகம் வரும்…..” , என்று புஷ்பா கூற, “அம்மாஆ………. “, என்று கத்திக்கொண்டே திவ்யா புஷ்பாவை முறைக்க,    ரமேஷ் தன் காலரை தூக்கியபடி ” I am a teetotaler   . இது ஊருக்கே தெரியும்..” , என்று பெருமையாக கூறினான்.

திவ்யா கழுத்தை நொடித்துக் கொண்டாள்.

 

                ” இப்பொழுது தான் திவ்யா இவ்வளவு பேசுறா.. ஒரு வாரமா இருந்த இடமே தெரியலை “, என்று ரமேஷின் அம்மா கூற ரமேஷ் புன்னகைத்து கொண்டான்.

 

“நாளை ஆபீஸ் போகணுமா?” , என்று ஷண்முகம் வினவ, “ஆமாம் அப்பா”, என்று ரமேஷ் கூறினான்.

 

“நீ  போய் ரெஸ்ட் எடு ” , என்று அவர் கூற, “நில்லு… நில்லு … ” , என்று ரமேஷின் வழியை  மறித்தாள் திவ்யா.

“சாக்லேட் எங்க ? என் friends ஸ்வீட்டி, ஸ்வாதி, மனோஜ், நவீன் …..   இப்படி நிறைய பேருக்கு சாக்லேட் கொண்டு வரேன்னு சொல்லிருக்கேன்..”, என்று ரமேஷின் வழியில் நின்ற படி கேட்டாள் திவ்யா.

 

” அதெல்லாம் வாங்கிட்டு வர நேரம் இல்லை… இங்க இருந்து மீட்டிங் போவனா? இல்லைனா உனக்கு ஷாப்பிங் பண்ணுவனா … ஒன்னும் கிடையாது “, என்று சிடுசிடுத்து  விட்டு  அவன் அறைக்கு சென்றான் ரமேஷ்.

 

திவ்யா அவனை முறைத்தபடி நின்றாள்.

 

சிறிது நேரத்தில் திவ்யாவின் கதவை ஓங்கி தட்டினான் ரமேஷ்.  மெதுவாக கதவை திறந்த திவ்யா ரமேஷை  ஸ்டைலாகப் பார்த்தாள்.

 

“என்கிட்டே கேட்காம,  ஏன் என் பெட்டியை திறந்த ? ” , என்று ரமேஷ் கோபமாக கேட்க, “ரொம்ப டென்ஷன் ஆகாத, நீ என்னை கடுப்பேத்தின,  நான் உன்னை டென்ஷன் பண்ண தான் உன் பெட்டியை திறந்தேன்.. எதுவும் பார்க்கல…..  ” , என்று  நமட்டு சிரிப்போடு கூறினாள் திவ்யா..

 

“உன் கேர்ள் frinedக்கு எதுவும் கிப்ட்  வாங்கினியா ? ” , என்று திவ்யா  கேட்க… ” என்ன பேச்செல்லாம் ஒரு மார்க்கமா போகுது?  வேலை இல்லையா…? ” , என்று ரமேஷ் எதிர் கேள்வி கேட்டான்.

 

“நிறைய விஷயங்கள் இருக்கு… நீ சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு அப்புறம்  சொல்றேன்.. “, என்று திவ்யா நழுவப்  பார்த்தாள்.

 

“என்ன விஷயம்… ?” , என்று கூர்மயாக கேட்டான் ரமேஷ்.

 

”  கூவம் நதிக்கரையை  சுற்றி இருக்கிற  இண்டஸ்ட்ரி லிஸ்ட் எடுத்திருக்கோம்.. ஒவ்வொருத்தரும் ரெண்டு கம்பெனி “M.D” மீட் பண்ணி இன்டெர்வியூ பண்ண போறோம். நான் விக்ரம் இண்டஸ்ட்ரீஸ் & “G.K” இண்டஸ்ட்ரீஸ் “M.D” மீட் பண்ணணும்கிறது பிளான்” , என்று திவ்யா கூறினாள்.

 

“விக்ரம் இண்டஸ்ட்ரீஸ்ல appointment  வாங்கிட்டியா? “, என்று ரமேஷ் கேட்க, “நீ appointment வாங்கி குடு… ” , என்று திவ்யா கேட்டாள்.

 

“என்னால் சாக்லேட் தான் வாங்கி குடுக்க முடியும். “appointment ” வாங்கி தர முடியாது..” , என்று பெட்டியிலிருந்து சாக்லேட் எடுத்து கொடுத்தான்..

 

“ஹே.. ரொம்ப தேங்க்ஸ… appointment நான் பாத்துக்கிறேன் ” , என்று திவ்யா சாக்லேட்டை பார்த்து ஆனந்தமாக கூறினாள்.

 

அதோடு ரமேஷ் ஒரு கேமராவும் கொடுக்க, திவ்யா திடுக்கிட்டு பார்த்தாள். “என்ன அப்படி பாக்குற? “, என்று ரமேஷ் கேட்க, “எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா வாங்கின ?” , என்று திவ்யா கோபமாக  கேட்டாள்.

 

“நீ எடுக்கிற போட்டோ நல்லா  வரணும்.. யாரும்  ஷாக் ஆகா கூடாதுனு ஒரு நல்ல எண்ணம் ” , என்று சிரித்துக் கொண்டே ரமேஷ் கூறினான்.

 

“தேங்க்ஸ்… “, என்று ஒரு சாக்லேட்டை சுவைத்த படியே கூறினாள். 

ரமேஷ் அவள் தலையில் செல்லமாக அடித்துவிட்டு சென்றான்.

திவ்யா ஆர்வமாக  கேமராவை ஆராய ஆர்மபித்தாள்.

 

 

மறுநாள்  காலையில்…

ரமேஷ்  ஜாக்கிங்  முடித்து கொண்டு வீட்டுக்குள் நுழைய, “ரமேஷ் விக்ரம் கிட்ட appointment கிடைச்சிருச்சு..” , என்று திவ்யா கூற மனதிற்குள் சிரித்து கொண்டான் ரமேஷ்.

 

“ நான் “G.K”  இண்டஸ்ட்ரிஸ்ல  இன்டெர்வியூ  முடிச்சிட்டு பதினோரு மணிக்கு  உங்க கம்பனிக்கு  வரேன்..” , என்று தன் சுடிதாரை ஐயன்  செய்தபடி கூறினாள்  திவ்யா.

 

தலை அசைத்துக் கொண்டான் ரமேஷ்.

“எதாவது  பேசு.. “, என்று திவ்யா சிடுசிடுக்க ,  அமைதியாக  இருந்தான் ரமேஷ். “இவன்  என்ன நினைக்கிறான்?” , என்று  யோசிக்க ஆர்மபித்தாள்  திவ்யா.

 

மணி 9:30 காலை:

               திவ்யா “G.K” இண்டஸ்ட்ரிக்குள் சென்றாள். பிரமாண்டமான கட்டிடம். Appointment கிடைத்தும்,  அவளால் M.D. கோதண்ட ராமனை  பார்க்க முடியவில்லை. மேனேஜரை பார்க்க அனுமதி கிடைத்தது.

 

அழகான பிரமாண்டமான A.C அறை. சூழல் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தாள்  அழகான இளம் பெண்.  

” ஹாய்… I am Divya…” , என்று தயக்கத்தோடு கூறினாள்.(கோதண்டராமனை பார்க்க முடியாத ஏமாற்றம் அவள்  குரலில் இருந்தது.)

அவள் ஏமாற்றத்தை போக்கும் விதமாக, “ஹாய்.. I am chitra…  Waiting for you. “, என்று  இன்முகத்தோடு கூறினாள் அந்த பெண்.

 

திவ்யாவின் சிந்தனை வேகமாக ஓடியது. இவள் அன்று விக்ரமோடு  “coffee shop” ல் பேசிக்கொண்டிருந்த பெண், என நினைத்துக்  கொண்டாள்.

 

      ” கோதண்டராமன் சார் வெளிய போயிருக்காங்க.. சார்,  ரிப்போர்ட்டர்ஸ்  வருவாங்கனு சொன்னாங்க… உங்களை எதிர் பார்க்கவில்லை.., “Interview about our industry waste management”ன்னும் சொன்னாங்க…. இண்டஸ்ட்ரி வேஸ்டேஜ்  பத்தி எனக்கு தெரிந்த விஷயத்தை  என்னால சொல்ல  முடியும்…”, என்று கலகலவென்று பேசினாள் சித்ரா.

           திவ்யா தனக்கு  தேவையான விஷயங்களை சேகரித்துக் கொண்டு கிளம்பும் பொழுது , “ரமேஷ் எப்படி இருக்கான்?”, என்று சித்ரா வினவினாள்.

 

திவ்யா அதிர்ந்து நோக்க, “.நானும் ரமேஷும் கிளாஸ் மட்ஸ் ..” , என்று புன்னகையோடு கூறினாள்  சித்ரா.

 

“அந்த புன்னகையில் என்ன மறைந்திருக்கிறது. “, என்று யோசித்துக் கொண்டே “ஓ.. நல்ல இருக்கான்…” , என்று  பதிலளித்த படி தன் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினாள் திவ்யா.

 

திவ்யாவிற்கு ” G.K ” இண்டஸ்ட்ரியில் தன் வேலை முடிய 10:30 மணி ஆகிவிட்டது.      

     திவ்யாவின் வண்டி விக்ரம் ஆட்டோமொபைல்  இண்டஸ்ட்ரி நோக்கி  சென்றது.

 

           விக்ரம் திவ்யாவின் வரவுக்காக ஆர்வமாக  காத்திருந்தான். அவளுக்காக அவன் வாங்கி வைத்திருந்த கிபிட்  விக்ரமின் அறையில் இருந்தது.

          

          விக்ரமிற்கு தன் அம்மாவிடம் கூறியதெல்லாம் இப்பொழுது நினைவில்லை. திவ்யா அவன் மனதிலும் , மூளையிலும் நிறைந்திருந்தாள். 

 

       விக்ரம் தன்னை தானே சமாதானபடுத்திக்க கொண்டான். ” நான் அவளிடம் காதல் சொல்லவா காத்திருக்கிறேன்.. ஏதோ இரண்டு வார்த்தை.  இதில் என்ன தவறு…. “

 

விக்ரம் அவனை அவனே ஏமாற்றிக் கொள்கிறானா ? இல்லை அவன் தாயை ஏமாற்றுகிறானா..? இந்த கேள்விக்கு பதில் விக்ரமிடம் இல்லை.

 

               திவ்யா விக்ரமின் அறைக்கு சென்றாள்.  ரமேஷின் கண்களுக்கு இது தப்ப வில்லை.

 

                    விக்ரம் அறை கதவை தட்டினாள் திவ்யா.

 

“எஸ் கம் இன்… ” , என்ற விக்ரமின் குரல் கம்பீரமாக ஒலித்தது.

 

திவ்யா விக்ரமின் அறைக்குள் சென்றாள்.

 

                      வழக்கத்தை விட , இன்று திவ்யா அவன்  கண்களுக்கு அழகாக தெரிந்தாள்.  சிகப்பு நிற சுடிதார்.   அதில் ஆங்காங்கே  வெள்ளை நிற பூக்கள். காட்டன் சுடிதார் .  தலையில் ஒரு கிளிப். மூடி ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தது. விக்ரமின்  கண்களுக்கு தெரிந்த திவ்யா அவன் கருத்திலும்  பதிந்தாள்.

                       இவை அனைத்தும் ஒரு நொடி தான்.

 

தன்னை சுதாரித்துக் கொண்டாலும் வார்த்தைகள் வராததால்  விக்ரம் ,   

  ” விக்ரம் சொதப்பாத ” , என்று மனதிற்குள் கூறிக் கொண்டே,  அமரும் படி அங்கிருந்த நாற்காலியை கை காட்டினான்.

 

“இவன் பேசமாட்டானா… பெரிய பணக்காரன்.. ஆஃபீஸுக்குள் இருந்தால்,  இவனுக்கு தலை கணம் வந்து விடும்…”,  விக்ரமை மனதிற்குள் திட்டினாள் திவ்யா.

 

“இந்த லட்சணத்தில் நீ பார்க்கும் பார்வை சரி இல்லை.. அவன் பார்க்கும் பார்வை சரியில்லைன்னு சொல்ற ரமேஷின் தலையில் ஓங்கி ஒன்று போட வேண்டும்… “, என்று மனதிற்குள் ரமேஷை இப்பொழுது திட்டினாள் திவ்யா.

 

“அவன்  பேசாமல் கையை காட்டினால், நான் மட்டும்  தேங்ஸ் சொல்ல வேண்டுமா ?” , என்றெண்ணி வீம்பாக  மெளனமாக அமர்ந்த்தாள் திவ்யா.

 

தான் இன்டெர்வியூ எடுக்க வேண்டும் என்ற எண்ணம் திவ்யாவுக்கு பின்னே சென்று, விக்ரமிடம் சண்டை போடும் குணம் முன்னே வந்துவிட்டது.

 

ஆனால் விக்ரமிற்கு சண்டையிடும் எண்ணமெல்லாம் இல்லை.

 

முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளியே தெரியாத படி , பேச்சை தொடங்குவதற்கு ஏதுவாக, “என்ன இன்டெர்வியூ?” , என்று கம்பீரமாக  வினவினான்.

 

திவ்யாவிற்கு இன்னும் கோபம் கிளம்பியது.  “அந்த  பெண் சித்ரா என்ன அழகாக அன்பாக பேசினாள். என்னை இவனுக்கு இதற்கு முன் தெரியாதா?  என்னை பார்த்து புன்னகைத்தால், முத்துக்கள் உதிர்ந்து விடுமா…?  இவன் என்னை எப்பொழுதும் இப்படி தான்  தோரணையாக  கேள்வி கேட்கிறான். மிரட்டுகிறான்.  இதெல்லாம் என் வாழ்க்கைக்கு செட் ஆகாது ” , என்று மனதிற்குள் குறித்து கொண்டாள் திவ்யா.

 

“இவனுக்கு  நான் என்ன இன்டெர்வியூக்காக வந்திருக்கிறேன் என்று தெரியாதா.. இல்லை நான் பேசும் விஷயத்தை இவன் காது குடுத்து கேக்க மாட்டானா..? ” , என்று திவ்யா தனக்குள்  சிந்திக்க ,

 

“Interview on Industrial waste management” தானே என்று அவன் குரல் மீண்டும் கம்பீரமாக ஒலித்தது.

 

“எஸ்  சார்…  உங்க இண்டஸ்ட்ரியால, கூவ நதிக்கரைக்கு எவ்வளவு பாதிப்பு ? நீங்க அதுக்காக எதாவது “precautionary steps” வச்சிருக்கீங்களா..? இல்லனா எல்லாம் “only in plans” தானா? ” , என்று திவ்யா காட்டமாக கேட்டாள்.

 

         திவ்யா இப்படி பேச வேண்டும் என்று நினைக்கவில்லை.  ஒரு வாரம் சுயஆராய்ச்சிற்கு  பின் விக்ரமை பார்க்க வந்த திவ்யாவிற்கு அவன் பேசிய விதம் ஏமாற்றம் அளிக்க கேள்விக் கணைகளை காட்டமாக தொடுத்து விட்டாள்.

 

            எதிர்பார்ப்புகள் என்றும் ஏமாற்றத்தை தானே தரும்…?

 

“இவள் என்னை ஒரு நாளும் புரிந்துக் கொள்ளப் போவதில்லை” , என்று மனதிற்குள் நொந்து கொண்டு , “Meet Ramesh and get the details  ” , என்று கூறிவிட்டு லேப்டாப்பில்  தன் வேலையை தொடங்கினான் விக்ரம்.

 

திவ்யாவிற்கு கோபம் தலைக்கு ஏற, ” பணக்கார திமிர்… ” , என்று மனதிற்குள் கூறிக்  கொண்டு, விக்ரமிடம் எதுவும் பேசாமல் ரமேஷின் அறைக்கு  சென்று அவளுக்கு தேவையான  விஷயத்தை தெரிந்து கொண்டு  கிளப்பினாள்.

 

” என்ன நடந்திருக்கும் ? ” , என்று யோசித்த ரமேஷிற்கு எதுவும் புரியவில்லை.

 

திவ்யா ரமேஷின் அறையிலிருந்து வெளியே செல்வதைப் விக்ரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“இவள் என்னிடம் மட்டும் தான் சண்டை வளர்ப்பாளா..? ” , என்று விக்ரம் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது,  அவன் ஆபீஸ் டெலிபோன் ஒலித்தது.

 

விக்ரம் ஸ்பீக்கர் ஆன் செய்ய  கம்பீரமாக ஒரு குரல் கேட்டது.

                   ” அந்த பொண்ணு தான் சின்ன பொண்ணு, தேவையில்லாத விஷயத்தை தேடி அலையுது… உனக்கு எங்க போச்சு அறிவு..?..” விக்ரம் ஸ்பீக்கர் ஆப் செய்து, காதில் வைத்து பேச ஆரம்பித்தான்.

 

“……….” , எதிர் பக்கத்தில் ஏதோ கூற,

 

“நீ சொல்றதை நான் எப்படி நம்புறது..? ” , என்று கேட்டான் விக்ரம்.

 

” …….” , எதிர்பக்கத்தில் ஏதோ கூற, தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு ரமேஷின் அறைக்கு சென்றான் விக்ரம். ரமேஷ் அங்கு இல்லை.

 

            நேரம் கடத்த விரும்பாமல், காரை எடுத்துக் கொண்டு திவ்யா பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்றான் விக்ரம்..

           திவ்யாவை மொபைலில் அழைத்தான். ” நான் உன் ஆபீஸ் வெளியிலே வெயிட் பண்றேன்…. கிளம்பு……” , என்று கூறினான் விக்ரம்.. “எங்கே?…..” , என்று கேட்டுக் கொண்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தாள் திவ்யா.

 “இவனுக்கு என்னை அதிகாரம் பண்ணுவதே வேலையாகிவிட்டது “, என்று மனதிற்குள் அவனை திட்டினாள்.

 

“கிளம்பு.. ” , என்று மீண்டும் விக்ரம் அழுத்தமாக கூற, “அவனிடம் பேசி பயன் இருக்காது என்ற எண்ணமும் , அவன் முகத்திலிருந்த பதட்டமும்”, அவனோடு திவ்யாவை கிளம்ப வைத்தது.

 

கார் எங்கு செல்கிறது ? எதற்காக திவ்யாவை அழைத்து செல்கிறான் விக்ரம்..?

திவ்யாவிற்கும் தெரியவில்லை..

                     நாமும் காத்திருப்போம்….

                                        தாகம் தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!