Akila Kannan’s Thaagam 22

 

 

தாகம் – 22

 

விக்ரம் அவன் மொபைலில் மணியை பார்த்தான் .

 

 மணி 10:10

                கார் டிராபிக் போலீஸ் கை காட்டிய திசையில்  பயணித்தது. “மழை நிற்கும்”, என்ற  நம்பிக்கை  விக்ரம், ரமேஷ் இருவருக்கும் இல்லை. 

                       இந்த பாதையில் எந்த தடங்கலும் இல்லாமல் கார் சென்று கொண்டிருந்தது. அவர்கள் கண்களுக்கு விமான நிலையம் பிரகாசமாக காட்சி அளித்தது .

 

மணி 10:40

 

“ரீச் ஆகிடலாம் விக்ரம்.. 12:30 தானே  “flight” …. “check in” பண்ண  டைம் இருக்கு…”, என்று நிதானமாக பேசினான் ரமேஷ்.

 

“flight  கான்செல் ஆகாம இருக்கனும்..  ” , என்று மெதுவாக கூறினான் விக்ரம்.

 

“நல்லதே நடக்கும்…  இந்த மீட்டிங் வெற்றிகரமா முடியும் “, என்று நம்பிக்கையோடு கூறினான் ரமேஷ்.

 

“நடக்கனும்… “, என்று தீவிரமாக கூறினான்.

 

மனிதர்களுக்கு தெரியும்… ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு!!!!!!

இயற்கைக்கு தெரியுமா…..  ஏழை பணக்காரர் என்று ?????

 இயற்கையின் முன் அனைவரும் சமம் தானே !!!!!!

 

அவர்கள் விமான நிலையத்தில் இறங்கி, வரிசையில் நின்று  உள்ளே செல்ல மணி 11:10.

 

வரிசையில் நின்று “baggage செக் இன்” முடிந்து, செக்யூரிட்டி checkக்குக்காக  வரிசையில் காத்து நின்று, “Boarding pass” வாங்கி கொண்டு அவர்கள் “Gate number“  நோக்கி  நிற்க நேரம் இல்லாமல் ஓடினர்.

 

 

 

மணி 12:00

“Emirates flight” க்கான அறிவிப்பு வருவதற்கும் இவர்கள் அங்கு செல்வதற்கும்  நேரம் சரியாக இருந்தது.

“நிறைய flight cancel ஆகியிருக்கு .. நல்ல வேளை நம்ம flight cancel ஆகலை… “, என்று பெருமூச்சு விட்டான் விக்ரம். ரமேஷ் தலை அசைத்து அவனை ஆமோத்திதான்.

 

வரிசையில் நின்று விமானத்திற்குள்  நுழைந்தார்கள்.  எத்தனை அழகான பெண்கள் இவர்கள் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. அவர்கள் இருக்கையில் அமர்ந்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.

 

மழையின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது.

 

மணி 1:30

 

    அனைவரும் சீட் பெல்ட் மாட்டிக்கொள்ள, பல பாதுகாப்பு  அறிவிப்புகளோடு விமானம், மேலே பறக்க தொடங்கியது.

          ஒவ்வொரு ஆணும்  அவன் வீட்டில் கதாநாயகனே…..!

          ஒவ்வொரு பெண்ணும் அவள் வீட்டில் கதாநாயகியே……!

 

நமது கதாநாயகிகள் நம் நாட்டில் இருக்க , நம் கதாநாயகர்கள் “U S” நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதால்,  நாமும் ஊரைச் சுற்றும் வாய்ப்பை விடாமல் அவர்களோடு பயணிக்கிறோம்.

 

விமானம் மேலே  செல்ல செல்ல  வயிற்றில் சில பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வு, நமக்கும் தோன்றுகிறது. விக்ரம், ரமேஷ் முகத்தில் எதுவும் தெரியவில்லை. அவர்களுக்கு விமான பயணம் பழக்கம் போல் தெரிகிறது. சில குழந்தைகள் அழுது கொண்டிருக்கிறது.

 

விமானம் சற்று நேரத்தில் நிதானமாக பறக்க ஆரம்பித்தவுடன் விமானப் பணிப்பெண்கள் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர்.

 

விமானப் பணிப்பெண் அனைவருக்கும் ஏதோ கொண்டு வருவது நமக்கு தெரிகிறது. அவள் விக்ரம் ,ரமேஷ்  அருகே வந்து அவர்களிடம் ,

“ Do you want anything to drink?”,என்று கேட்க,

“what do you have?” , என்று விக்ரம் கேட்டான்.

“Red wine, apple juice, orange juice , tea… “ , என்று கூற,

“  tea “ , என்று கூறிய விக்ரம் , ரமேஷை பார்க்க அவனும் “tea” என்று கூறினான். “ wine “ ,ட்ரை பண்ணலியா..? ” , என்று விக்ரம் நக்கலாக கேட்க, “நம்மள மாதிரி teetotalerக்கு இந்த பேச்செல்லாம் தேவையா..?“ , என்று சிரித்தான் ரமேஷ்.

 

அங்கு ஒரு மணி ஓசை கேட்க, ஓசையை நோக்கி பார்த்தான் ரமேஷ்.

ஒரு பொம்மை மணி ஓசையை  மெலிதாக எழுப்ப, அந்த குழந்தை அதைப் பார்த்து கை கொட்டி சிரித்தது.

 

“ரமேஷ் என்ன ஆச்சு ?” ,  என்று விக்ரம் கேட்க, “மணி ஓசை கேட்டதும் திவ்யா ஞாபகம் வந்திருச்சு… ” , என்று கூறினான் ரமேஷ்.

 

“ஒரு மொக்கை “flashback” அதுக்கு இவ்வளவு “feeling” நல்லதில்லை “, என்று விக்ரம் கூற,  “அன்னக்கி நான் சொன்னது உண்மை இல்லை.. ” , என்று தீவிரமாக ரமேஷ் கூறினான்.

 

விக்ரம் ரமேஷை கூர்ந்து நோக்க, ரமேஷ் பேச ஆரம்பித்தான்.

 

              எங்க மாமா ரொம்ப நேர்மையானவரு.. அவருக்கு எங்க தப்பு நடந்தாலும் தட்டி கேக்கணும்.. மனு நீதி சோழன் கதை மேல அவருக்கு அலாதி பிரியம். எல்லாத்துக்கும் நியாயம் கிடைக்கனுமுனு சொல்லுவாரு… அவரும் அவர் வாழ்ந்த வீட்டுக்கு முன்னாடி ஒரு  மணி கட்டி வச்சிருந்தார்.. அவர் பகுதி மக்கள் எதாவது பிரச்சனைனா அந்த மணியை அடிச்சிருவாங்க… இவரும் நான்  பத்திரிக்கை நிருபருனு கேமரா, பேனாவை எடுத்துக்கிட்டு கிளம்பிருவாரு..அத்தை கூட மாமாவை இவருக்கு மனுநீதி சோழன் நினைப்பு அப்படினு கிண்டல் பண்ணுவாங்க….

 

            இதெல்லாம் திவ்யாவுக்கு விவரம் தெரியலைனாலும், மனசுல பதிஞ்சிருச்சு..அந்த மணி சத்தம் திவ்யாவுக்கு ஒரு விளையாட்டு.. .மாமா ஒரு விபத்துல இறந்துட்டாங்க இல்லை யாரும் கொன்னுட்டாங்களானு இப்ப வரைக்கும் தெரியாது.. மாமா போனதுக்கு அப்புறம் இந்த மணியை அத்தை கழட்டிட்டாங்க. அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணா திவ்யா.. அந்த மணி சத்தத்தையும் தான்…மணி இருந்தா அப்பா வந்திருவாங்கனு திவ்யா  நம்பினா .. அந்த மணி ஓசை , அவளுக்கு சொல்ல தெரியலைனாலும் காரணம் தெரியலைனாலும் அவளை ரொம்ப பாதிச்சிருச்சு.. 

 

   விவரம் தெரியாத சின்ன வயசுல வாசல்ல மணி இருக்கானு அடிக்கடி பார்த்துகிட்டு இருப்பா.. ரொம்ப நாளைக்கி அப்புறம் தான் அவளுக்கு மணி சத்தம் கேட்டா இப்படி ஒரு பாதிப்பு வந்ததை கண்டு பிடிச்சோம்…

          விளையாட்டா ஒரு காரணத்தை மனசுல பதிய  வச்சி அவளை divert பண்ணா நாளடைவில் சரி ஆகிருவானு வீட்டு பெரியவங்க சொன்னாங்க. முன்னாடிக்கு இப்ப எவ்வளவோ பரவா இல்லை.”

 

இவ்வாறு பழைய நினைவுகளை விக்ரமோடு பகிர்ந்து கொண்ட ரமேஷ்,    “உன்கிட்ட சொல்லணும்னு  தோணுச்சு .. அன்னக்கி பொய் சொன்னதுக்கு சாரி….திவ்யா இருந்ததால உண்மையை சொல்ல முடியல..” , என்று ரமேஷ் வருத்தம் தெரிவித்தான்.

 

         விக்ரமும்,ரமேஷும் பல கதைகளை பேசினர்.  படம் பார்த்து, பாட்டு கேட்டு, வீடியோ கேம்ஸ் விளையாண்டு பொழுதை போக்கி துபாயில் இறங்கி , அடுத்த “flight” மாறி வாஷிங்டன் வந்திறங்கினர்.

    

            இறங்கும் பொழுது காது விண்விண்ணென்று குத்துவது போல் நமக்கு இருந்தது. விக்ரம் , ரமேஷ் இருவரும் தன் கைகளால் காதுகளை மூடினார்கள். அவர்களுக்கும் சற்று சிரமம் இருந்திருக்கும் போல் தெரிந்தது.

                விக்ரம் , ரமேஷ் இருவரும் அதற்குள்  ” immigration ” முடித்து விட்டு , “baggage” எடுக்க சென்று விட்டனர். விமான நிலையம் மிகப் பெரிதாக இருக்கிறது.

                      யாரையும் தெரியாத இந்த ஊரில், நாம் தனியாக மாட்டிக் கொள்ள கூடாது.  நாம் விக்ரம், ரமேஷ் இவர்களையே பின் தொடர்வோம்..

 

” ஹாய்.. எப்படி டா இருக்க..? ” , என்று வினவிய படியே விக்ரமை தோளோடு அணைத்துக்  கொண்டான் முகுந்தன்.

“ஹாய் முகுந்த்….. நல்லா இருக்கேன்.. இது ரமேஷ்.. “, என்று விக்ரம் ரமேஷை அறிமுகப் படுத்த , “ஹை..” , என்று ரமேஷின்  கைகளை குலுக்கினான் முகுந்தன்.

 

மூவரும் கனமான ஜாக்கெட் அணிந்திருந்தனர்.

 காதுகள் முழுதாக மறையும்படி ear muff , கைகளுக்கு gloves  அணிந்திருந்தான் முகுந்தன்.

 

விக்ரம் , ரமேஷ் இருவரிடமும் ear muff, gloves இல்லை. இத்தகைய குளிரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.. குளிரில் நடுங்கினர்.

 

ரமேஷ் அமைதியாக இருக்க,  ” எப்பவுமே இப்படி தான் குளிருமா ? ” , என்று  விக்ரம் வினவினான்.

 

”  ஜஸ்ட்  செப்டம்பர் டு மார்ச் தான் குளிரும்..  , ஏப்ரல் ஓகேவா இருக்கும்”, என்று இவர்கள் பெட்டியை காரில் அடுக்கியபடியே கூறினான் முகுந்தன்.

 

விக்ரம் முன்னால் ஏற, ரமேஷ் காரில் பின்பக்கம் ஏறிக்கொண்டான் .

 

“சீட் பெல்ட் போட்டுக்கோ விக்ரம் ..” , என்று கூறிக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான் முகுந்தன்.

 

கார் ஹீட்டரில் இருந்து வந்த வெப்பக் காற்று  விக்ரம், ரமேஷ் இருவருக்கும் உயிர் கொடுத்தது.

 

கார்  ஆங்காங்கு சாலையில் குறிப்பிட்டிருந்த “Speed Limit” ல் பயணித்து “Richmond” வந்தடைந்தது.

 

“ஹில்டன்ல ரூம் போட்டல்ல .. எங்களை அங்க டிராப் பண்ணிரு முகுந்தன்”, என்று கூறினான்  விக்ரம்.

 

“ஹா.. ஹா..  ரூம்லாம் புக் பண்ணல.. வீடு இருக்கும் பொழுது எதுக்கு ஹில்டன் ஹோட்டல்.. ? , பேசாம வீட்டுக்கு வாங்க ” , என்று சிரித்துக் கொண்டே கூறினான் முகுந்தன்.

 

“இல்ல பாஸ் .. உங்களுக்கு எதுக்கு தொந்திரவு ?” , என்று ரமேஷ் கூற,

“ஒரு தொந்திரவும்  இல்லை..சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க..?  ஹோட்டலுக்கு தேடி போகணும்.. அதுக்கு கார் வேணும்.. இல்லைனா புதுசா செட் பண்ணி “self cooking” பண்ணனும்.. நம்ம வீட்ல எல்லாம் இருக்கு.. 1 வீக் தானே … பாத்துக்கலாம் ” , என்று காரின் ஸ்டியரிங்கை  திருப்பிய படி கூறினான் முகுந்தன்.

 

முகுந்தனின் கார் ஒரு அபார்ட்மெண்டுக்குள் நுழைந்தது. அந்த அப்பார்ட்மென்டில் ” Wellesly Apartment “ என்று பெயர் பதிக்கப் பட்டிருந்தது.

 

அபார்ட்மெண்ட் என்றால் அடுக்கு மாடி கட்டிடம் போல் காட்சி அளிக்கவில்லை ..  தனி தனி  வீடாகத்தான் காட்சி அளித்தது. 

எங்கும் பசுமை…. சீராக வெட்டப்பட்ட புல்தரை.. அடர்ந்த மரங்கள்…  கார் ஒரு வீட்டின் முன் நின்றது.

 

“ஏன் யாருமே இல்லை?” , என்று ரமேஷ் வினவ, “winter… எல்லாரும் வீட்டுக்குள்ள தான் இருப்பாங்க… சம்மர்ல வெளிய இருப்பாங்க .. “, என்று கதவை திறந்துகொண்டு கூறினான் முகுந்தன்.

 

“குளிச்சிட்டு வாங்க… சாப்பாடு ரெடியா இருக்கும் .. சுமாரா சமைப்பேன்..”, என்று கூறிக் கொண்டு கிட்சேனுக்கு  சென்றான் முகுந்தன்..

 

முகுந்தன் பொங்கல் சாம்பார் வைத்திருக்க, flight சாப்பிட்டில் உயிரிழந்த சுவை  நரம்புகளுக்கு  இப்பொழுது உயிர் வர ஆரம்பித்தது… ” Flight food  ஓகே தான்.. ஆனாலும் நமக்கு கஷ்டமாகத்தான் இருக்கு..” , என்று கூறினான் விக்ரம்..

” vegetarians க்கு  ரொம்ப கஷ்டம் ” , என்று  முகுந்தன்  கூற, ” options ரொம்ப கம்மி ” , என்று ரமேஷ் கூறினான்.

 

“ரெஸ்ட் எடுக்கணுமா இல்லைனா ஷாப்பிங் போகலாமா? ” , என்று முகுந்தன் வினவ, “Rest  வேண்டாம் .. 1 வீக் தானே ….  ரெண்டு மீட்டிங் இருக்கு.. அப்படியே கொஞ்சம் சுத்தி பார்க்க நாங்க ரெடி ” , என்று விக்ரம் கூற, அதை ஆமோதிப்பது போல் ரமேஷ் தலை அசைத்தான்.

 

“இந்த குளிர்ல எங்க சுத்தி பார்க்க, ஷாப்பிங் போவோம்… உங்களுக்கு  ear muff , hand gloves  வாங்கணும்.. இல்லைனா குளிர் தாங்காது.. “, என்று கூறினான் முகுந்தன்.

 

இப்படி Walmart, target, kohl’s, Best buy என பல கடைகள்  சென்று  விக்ரம் , ரமேஷ் சில பொருட்களை வாங்கினர்.

 

              அப்பொழுது விக்ரம் வாங்கிய ஒரு பொருள் ரமேஷின் கண்களிலும் , கருத்திலும் பட்டது.   அந்த பொருளை எப்படியாவது திவ்யாவிடம் கொடுக்க வேண்டும் என்றெண்ணி விக்ரம் அதை பத்திரப்படுத்தினான்.  ரமேஷ் விக்ரமை கவனித்தான். ஆனால், விக்ரம் ரமேஷை கவனிக்கவில்லை.

 

ஷாப்பிங் முடிந்த உடன் , இருவரும் வேலையை பற்றி பேச ஆரம்பித்து,  மீட்டிங்கிற்கு தேவையான வேலையை  செய்தனர்.

 

வரிசையாக நடந்த இரு  மீட்டிங்கும் வெற்றிகரமாக அமைந்தது.

ரமேஷ் , விக்ரம் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தனர்.

 

“எங்கயாவது சுத்தி பார்க்க போகலாமே…” ,என்று விக்ரம் கூற, “இந்த குளிரில் எங்க போக? ” , என்று முகுந்தன் யோசித்து, ” வாஷிங்டன் போயிட்டு வர வழியில் James River பார்த்துட்டு  வருவோம்.

James River ஜஸ்ட்  தள்ளி நின்னு பார்க்கலாம்… வர்ற வழில தான் இருக்கு…. ரொம்ப குளிரும்…” , என்று ஒரு எச்சரிக்கையோடு முகுந்தன் கூற, ” சுற்றி  பார்த்து விட வேண்டும்……”, என்று ஆவலில்  இருவரும் தலை அசைத்தனர்.

 

மூவரும்  வாஷிங்டன் சென்றனர். வாஷிங்டனில் Washington state Capitol, White house, Lincoln Memorial, Museum, இன்னும் சில இடங்கள் பார்த்து  விட்டு வரும் வழியில் James River வந்தடைந்தனர்.

 

“ஏன் யாரும் இல்லை..? ” , என்று விக்ரம் வினவ, “இந்த குளிரில் யார் இங்க வருவா..? “, என்று கடுப்பாக கூறினான் முகுந்தன்.

 

“சரி.. சரி.. இங்கும் கொஞ்சம் போட்டோஸ் எடுத்துக்கலாம் ” , என்று புகைப்படம் எடுக்க, “அடுத்த தடவை சம்மர்ல வாங்க….”, என்று முகுந்தன் கூறினான்.

 

 அந்த குளிரிலும் அந்த இடத்தின் அழகு அவர்களை கவர்ந்தது. நீர் வேகமாக ஓடியது.  அவர்களால் ஒரு குப்பையை கூட பார்க்க முடியவில்லை. அத்தனை சுத்தமான தண்ணீர்..

 

“எப்படிடா இவ்வளவு சுத்தமா இருக்கு ?” , என்று வினவினான் விக்ரம்.

“குப்பையை வெளிய போட்டா இங்க penalty…… அதனால யாரும் ரோட்ல குப்பையை போட  மாட்டாங்க … அதுவே பழகி நமக்கும் அது பழக்கமாகிரும்… ” , என்று முகுந்தன் கூற,  “How are they disposing Industrial Wastage?” , என்று விக்ரம் வினவினான்.

 

 “They have proper methods for waste management” ,என்று பதில் அளித்தான் முகுந்தன்.

 

“நம்ம நாட்டுல பழசை பேசாம, இனி இருக்கும் ஏரிகளை , நதியை காப்பாற்றணும்” , என்று விக்ரம் அக்கறையாக கூற, “நம்ம கம்பனி இண்டஸ்ட்ரியல் வேஸ்டேஜ் என்ன  பண்றோம்?” , என்று ரமேஷ் வினவ, விக்ரம் ரமேஷை கூர்ந்து நோக்கினான்..

 

“நான் கேட்கலை… திவ்யா கேட்டா..அவ இண்டஸ்ட்ரியல் வேஸ்டேஜ் பத்தி தான் ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருக்கா.. நம்ம கம்பெனியை பத்தி கேட்டா…” , என்று ரமேஷ் கூற விக்ரம் சிந்தித்தான்.

 

” We have implemented industrial waste management partially.. ஆனாலும் இன்னும் சில பிரச்சனைகள் இருக்கு.. ஒரு பகுதி கூவ நதிக்கரைல தான் போய்  சேரும்….” , என்று சிந்தித்துக்கொண்டே கூறினான் விக்ரம்.

 

      விதை மரமாகும்…

      கரு குழந்தையாகும்

      சில சம்பவங்கள் சிந்திக்க வைக்கும்

      சிந்தனை சொல்லாகும்

      சொல் செயலாகும்

       தனி மனித செயல் மாற்றத்தை  உருவாக்கும்

       விக்ரமிற்கு இன்று ஏற்பட்ட சிந்தனை

       அவன் செயலில் மாற்றத்தை உருவாக்குமா..?

 

நாமும் விக்ரமை போல் தான்………..

                தவறென்று தெரியாமல் நாம் செய்யும் செயல்கள் தான் நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் மாசுபடுத்துகிறது..

 

 விக்ரமின் சிந்தனை இன்றோடு முடிந்து விடுமா..?

 

 

                                  தாகம் தொடரும்……