TholilSaayaVaa2

TholilSaayaVaa2

2

‘பிக்சல் ஸ்டுடியோஸ் (Pixel Studios)’ இந்தியாவில் வளர்ந்துவரும் ஒரு முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம். திரைப்படங்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் கார்ட்டூன், 3D அனிமேஷன் செய்து தருவதே இவர்களது பிரதான சேவை.

மாயா உள்ளிட்ட நால்வரும், கிரியேட்டிவ் டீமை சேர்ந்தவர்கள். திரைப்பட நிறுவனங்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்கள் கேட்கும் 3டி கதாபாத்திரத்திறங்களை தங்கள் கற்பனையால் வடிவமைத்து, அவைகளை வாடிக்கையாளரிடம் காட்டி ஒப்புதல் வாங்குவது இவர்கள் வேலை.

வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்து ஒப்புதல் தந்தபின்னால், அடுத்த கட்டமாக அந்த வேலை வேறு வேறு குழுவிற்குக் கைமாறிச் சென்றுவிடும். முதற்கட்ட வேலையும், வாடிக்கையாளரின் ஒப்புதலை வாங்கும் கடமையும் இவர்களுடையது என்பதால் இவர்களுக்குப் பொறுப்புக்கள் அதிகம்.

இன்று புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றிற்கு டெமோ(செயல் விளக்கம்) கொடுக்கவேண்டி இருக்க, மாயா வரத் தாமதமாகிக் கொண்டிருப்பதால் வெங்கட், பத்மாவிடமும் வினோத்திடமும் தன் கோவத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.

“மாயா தான் டெமோ கொடுக்கணும்னு அவகிட்ட பலதரவை சொன்னேன்ல? புது கேரக்டரை இவனுங்கள ஒத்துக்க வைக்குறதே பெரும்பாடு. இவ இப்படி பொறுப்பே இல்லாம இருந்தா என்ன சொல்றது? எங்கடா அவ? ஃபோனை போடுடா வினோத். வரட்டும் வச்சுக்கறேன்”

மாயாவிற்கு கால் செய்த வினோத், “வெங்கட் அவ வந்துட்டாளாம், ராபர்ட் பிடிச்சு வச்சுருக்காராம். நான் போய் கூட்டிகிட்டு வரேன் நீங்க மீட்டிங் ரூம் போங்க” என்று ராபர்ட்டின் அறைக்கு விரைந்தான்

பத்மா “வெங்கட் ப்ளீஸ் அவ சின்ன பொண்ணுடா. பொறுமையா புரியவைப்போம். இன்னும் 5 நிமிஷம் இருக்கு. நான் வேணா உனக்கு சூடா சூப்பர் காஃபி கொண்டு வரவா?” புன்னகையுடன் அவனைச் சமாதானம் செய்தவளைப் பார்த்தவன்,

மெல்லிய புன்னகையுடன், “உனக்குத்தான் என்னை எப்படி கூல் பன்னுறதுன்னு தெரியுமே. டபிள் ஸ்டராங்கா கொண்டுவா, இவளால வந்த தலைவலிக்கு அதான் சரிப்படும்” என்றவன் அறியவில்லை, இனி வரப்போகிற தலைவலிக்கும் இந்த காபி தேவைப்படுமென்று.

“ரெண்டே நிமிஷம் டபிள் ஸ்ட்ராங் காபியோட வரேன்” கையில் கப்பை எடுத்துக்கொண்டு விரைந்தாள் பத்மா.

அங்கு ராபர்ட் அறையில், பள்ளி ஆசியரின் முன்பு குறும்பு செய்து மாட்டிக்கொண்ட பிள்ளையைப் போல ராபர்ட்டின் எதிரே நின்றிருந்தாள் மாயா.

“எத்தனை முறை சொல்றது மிஸ் மாயா? ஒரு நாள், ரெண்டு நாள் பரவால்ல தினமும் லேட். இன்னிக்கி என்ன கரணம் சொல்லபோறீங்க டிராபிக், நாய் குறுக்க வந்தது, பெட்ரோல் தீந்து போச்சு, மழை பெஞ்சுது, பார்க்கிங் இடம் கிடைக்கல, லிஃப்ட் நின்னுபோச்சு…இன்னிக்கி புதுசா ஏதான இருக்கா?” அவர் கோவமும் கிண்டலுமாகக் கேட்க

“இன்னிக்கி ஆடி வெள்ளிக்கிழமை சார்!” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டவள் சொல்ல

அதை எதிர்பார்க்காதவர், “ஆடி வெள்ளிக்கிழமைன்னா லேட்டா வரணுமா ? இதெல்லாம் ஒரு காரணமா? வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ்” பொறுமை இழந்தார்.

“நெஜம்மா சார், இன்னிக்கி ஆடி வெள்ளிக்கிழமை. புத்துக்கு பால் விட போனேனா, ஆனா பாருங்க அங்க ஒரே கூட்டம். பாதியில வரமுடியாதா, அதன் லேட் ஆகிப்போச்சு.” முகபாவங்களை மாற்றி மாற்றி சொன்னவள், அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல்,

“இத நான் ஏன் செஞ்சேன்னு நீங்க கேக்கலாம். கேக்கணும்”

“…”

“ஏன்னா எனக்கு நம்ம கம்பெனி மேல அவ்ளோ அக்கறை! புத்துக்கு பால்விட்டு வேண்டிகிட்டா இந்த கம்பெனி நல்லா வளர ஆசீர்வாதம் கிடைக்கும்னு ஒரு ஆண்ட்டி சொன்னாங்க. அதான் நம்ம கம்பெனிக்காக வேண்டிக்கிட்டு கோயிலுக்கு போனேன். நீங்க என்னடான்னா…” அவள் அவரையே குற்றம்சாட்ட,

கண்ணாடியைக் கழற்றி மேஜையின் மீது வைத்தவர், “எனக்கு இந்த விஷயமெல்லாம் புரியாது, சுலபமா தப்பிக்கலாம்னு இப்படியொரு பொய் சொல்றீங்க சரியா?” அவர் முறைப்பில், பதறியவள்,

“ஐயோ சார் அப்படிலாம் இல்ல”

“ஆடிமாசம் புத்துக்கு பால் விட்றது கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் கிடைக்கும்னு, கல்யாணம் ஆன பெண்கள் தன் கணவன் நீண்ட ஆயுளோட இருக்கணும்னு, குழந்தை இல்லாதவங்க குழந்தை வேணும்னு வேண்டி நாகத்திற்கு பண்ற பூஜை. இதுல கம்பனியும் ப்ரொஜெக்ட்டும் எங்கிருந்து வந்தது மிஸ் மாயா?” அவர் கோவமாக விளக்கம் கொடுத்து கேள்வியும் கேட்க

அதிர்ந்த மாயா, என்ன சொல்லி தப்பிக்கலாமென்று யோசித்துக்கொண்டே, வெளியில் பாவமாக முகத்தைவைத்துக் கொண்டு அமைதியாய் நின்றிருக்க,

கதவைத் திறந்து கொண்டு வேகமாக நுழைந்த வினோத் மூச்சுவாங்கியபடி,

“சார் லிப்ரா ஸ்டுடியோஸ் டெமோ சார்…இன்னும் 2 நிமிஷம்தான் இருக்கு. எதுவா இருந்தாலும், இந்த மெண்டல் சார்பில் நான் சாரி கேட்டுக்குறேன். ப்ளீஸ் அர்ஜென்ட் !” என்று கெஞ்ச,

‘லிப்ரா ஸ்டுடியோஸ்’ என்ற ஒற்றை பெயரில், முக்கியத்துவத்தை உணர்ந்த ராபர்ட்,

மாயாவிடம், “இதை சொல்லித் தொலைக்க வேண்டியது தானே? எப்போப்பாத்தாலும், ஏதான கேள்விகேட்டா ரீலா சுத்தவேண்டியது இல்ல இப்படி என் முகத்தையே பார்க்கவேண்டியது. கெட் லாஸ்ட்!” என்று விரட்ட,

இருவரும் விழுத்தடித்துக்கொண்டு வெளியேறினர்.

“முதல் டெமோன்ற பயமே இல்லையோ? ஓடிவாடி என்ன அன்ன நடை நடந்து வர” என்று வினோத் ஓட்டமும் நடையுமாகக் கடுகடுக்க,

“ஓடி போரது தப்புடா வினோத்” அவள் சிரித்துக்கொண்டே சற்று வேகம் எடுக்க

“அறைஞ்சேன்னா தெரியும், என்ன பேசுறோம்னு அறிவே இல்லையா?” திட்டிக் கொண்டே அவளை இழுத்துக்கொண்டு மீட்டிங் அறைக்கு ஓட்டம் பிடித்தான் வினோத்.

அவர்கள் அறையினுள் நுழைந்த பொழுதே டெமோ ஆரம்பித்துவிட்டிருந்தது, பத்மா திரையிலிருந்த 3D யானையைக் காட்டி விவரித்துக்கொண்டிருந்தாள்.

“சாரி” என்று உள்ளே வினோத்துடன் நுழைந்தவள், விளக்குகள் அணைக்கப் பட்டிருந்ததால், இருட்டில் தட்டுத் தடுமாறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

“இந்த எட்வின் என்ற யானையை வடிவமைத்த மிஸ்.மாயா இதுபற்றி விளக்கம் அளிப்பார்” என்று சொல்லி பத்மா விடைபெற,

மாயா தான் உருவாக்கிய யானையின் வடிவம்பற்றி விளக்கி, ஸ்டூடியோ ஆட்களின் சந்தேகங்களைத் தீர்த்துவிட்டு, அவர்களை அனுப்பியதும் சோர்வாக நாற்காலியில் அமர செல்ல,

“எனக்கு ஒரு டவுட்” கணீரென்று ஒரு குரல் கேட்ட, விளக்குகள் ஆன் செய்யப்பட்டு வெளிச்சத்தில் அந்த குரல் வந்த திசையைப் பார்த்தவள் கண்கள் விரிந்தாள்.

“நெகோ சார் நீங்க எங்க இங்க? எப்படி இருக்கீங்க? பார்த்து ஒரு மாசம் மேல இருக்குமா? லீவ்ல இருந்தீங்களா?” எப்பொழுதும் போல் கேட்டுக் கொண்டே போக.

“ஐயோ” என்று கண்களை மூடிக்கொண்டாள் பத்மா,

“நாசமா போச்சுடா” என்று வினோத் வெங்கட்டை மிரட்சியாய் பார்க்க, அவனோ தலையின் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

இதை எதையுமே கவனிக்காத மாயா நெடியவனின் மேல் கேள்விக் கணைகளை விடாது தொடுக்க,

“மாயா…” என்று அந்த நெடியவன் குறுக்கிட்டும் நிறுத்தாமல்,

“என்ன ஹாலிடே போய்ட்டிங்களா ? எப்படி இருந்துது?” அவள் நிறுத்துவதாக இல்லை.

“ஹே ஆழாக்கு ! ஒரு நிமிஷம் வாய மூட மாட்டியா ?” கத்திவிட்டான் நெடியவன் .

“யார் ஆழாக்கு?” என்று அவள் வரிந்துகட்டிக்கொண்டு முன்னேற,

“ஹே நில்லுடி…” பத்மா அரண்டு அவளைத் தடுக்க

“ஏன் நீதான் ஆழாக்கு, என்னமோ முதல் முறையா கூப்புடறமாதிரி? நான் கேக்குற சந்தேகத்தைத் தீர்த்துவை. அப்புறம் நம்ம பஞ்சாயத்தை பாப்போம்.” அவன் கிண்டலாகச் சொல்ல

“நீங்க கேக்குறதுக்கெல்லாம் நான் பதில் தர முடியாது” முறைத்தாள்

“வாட் ?” அதிர்ந்தான் அவன்

“மாயா ப்ளீஸ்” வெங்கட் கத்த

“நீங்க இதுல தலையிட வேண்டாம்” வெங்கட்டை எச்சரித்தவன்,

“டெமோன்னா யார் எந்த கேள்வி கேட்டாலும், அபிப்பிராயம் சொன்னாலும் பொறுமையா கேட்டுக்கணும். இதுகூட தெரியாம என்ன வேலை செய்றே?”

“உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்ல” அவன் முகத்தில் அறைந்தாற்போல் சொன்னவள், மீதி மூவரையும் பார்த்து,

“நான் களம்பறேன்” கதவை நோக்கி நடந்தாள்.

“மிஸ் மாயா ஸ்டாப் ரைட் தேர்!” கர்ஜித்தவன் தன் இருக்கையை விட்டு எழுந்து நொடியில் அவளை நெருங்கினான்.

“இந்த திமிரெல்லாம் என்கிட்டே வேண்டாம். ஒரு சின்ன ஆலோசனையையோ, விமர்சனத்தையோ தாங்க முடியாம, நீ இப்படி இருந்தா இந்த பீல்டுல நிலைக்கிறது கஷ்டம்.

எந்த கேள்வி கேட்டாலும் சமாளிக்க தெரியணும், எப்படி பொறுமையா பதில் சொல்றதுன்னு தெரியணும், புரியுதா இல்லையா நான் சொல்றது?” அவன், அவளை நெருங்கி நின்று கோவமாய் கேட்க.

தன் தவறை உணர்ந்தவள், சற்றும் தாமதிக்காமல் “சாரி ! வேணும்னே என்னை ஓட்டுறீங்கன்னு நெனச்சேன், இவங்க முன்னாடி ஆழாக்குன்னு வேற கூப்டீங்களா அதான்…” தன்னிலை விளக்கம் தந்தாள்.

“நானுங்கறதால பரவால்ல. இதே போல மத்தவங்க கிட்ட நடந்துக்கிட்டா என்ன நினைப்பாங்க?” என்றவன் முகத்தில் மெல்ல கோவம் மறைந்து,

“சாரி என்ன அது நெகோ ? நெகோ நீயான்னு கேட்டியே, நெட்டை கொக்குனா சொன்ன?” அவன் புருவம் உயர்த்த

‘ஐயோ எப்படி கண்டு பிடிச்சான்?’ பதறியவள்,

“நீங்க நேர் கொண்ட பார்வையோடவே எப்போவும் இருந்தீங்களா….அதான் சுருக்கமா நெகோ”

“இல்ல…” மறுப்பாகத் தலையசைத்தபடி அவளை இன்னும் நெருங்கினான்.

“ஐயோ நெட்டை கொக்குன்னுதான் சொன்னேன். சாரி சார் அதுக்கு ஏன் இவளோ கிட்ட வரீங்க? அறைய போறீங்களா?” பயத்தில் உளறியவள், கன்னங்களை கைகளால் மூடிக்கொண்டு திக்கித் திணறி,

“பாருங்க சார்…மொதல்ல மீட் பண்ணப்போவே என் பெயரை உங்ககிட்ட சொல்லிட்டேன். அ.அ….அப்படியும் நீங்க ஆழாக்குன்னு தான் கூப்புடுறீங்க, உங்க பேரையும் நீங்க சொல்லலை, அதான் கோவத்துல நெட்டை கொக்குன்னு …” கண்களை மூடி ஒப்பித்தாள்.

அவள் செய்கையில், சிரித்துக்கொண்டே விலகியவன், “நீதான் புத்திசாலியாச்சே, என் பெயரை கண்டுபிடி பாப்போம்” என்றபடி மற்ற மூவரையும் பார்த்து

“இவளுக்கு என் பெயரை யாரவது சொன்னீங்கன்னா தொலைச்சுடுவேன்! மைண்ட் இட்” என்று புன்னகையுடன் எச்சரித்து விட்டு அறையை விட்டு நகர

“சார் இதெல்லாம் டூ மச். நீங்களே சொல்லிடுங்க”

“என்ன?” திரும்பியவன், “நீ மரியாதையா கேட்டிருந்தா சொல்லிருப்பேன், உனக்குத்தான் மரியாதைக்கு அர்த்தமே தெரியாது போல இருக்கே” குற்றம் சாட்டினான்.

“விடுங்க. உங்க பேரை தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன செய்யப்போறேன்?” அவள் அலுத்துக்கொள்ள,

அவளை வியப்புடன் பார்த்தவன், மெல்ல அவளை மீண்டும் நெருங்கி, அவள் காதின் வெகு அருகே குனிந்து,

“உனக்கு மூணு நாள் டைம் தரேன், அதுக்குள்ள என் பெரியாரை கண்டுபிடிக்காட்டி உன்னோட இந்த டிசைனை நான் ரிஜெக்ட் பண்ணிடுவேன்! ஸ்டுடியோஸ் ஓகே சொன்னதால மட்டும் இது பைனலைஸ் ஆகாது. புரிஞ்சுதா?” மிடுக்காய் மிரட்ட,

அதில் கோவமானவள், “ஹலோ… நீங்க யார் ரிஜெக்ட் பண்ண ? இது என் ப்ரோஜெட் ஞாபகம் இருக்கட்டும்” என்று அவனை மிரட்ட,

பத்மா அதிர்ந்து வினோத்தின் கையைப் பற்றிக்கொள்ள, வெங்கட்டோ “மாயா நீ யார் கிட்ட பேசறேன்னு ஐடியா இருக்கா ?” கத்தினான்.

ஒற்றை பார்வையில் அவனை அடக்கியவன், மாயாவை நோக்கி,

“என்ன டீலா? இல்ல என்கிட்ட சரண்டர் ஆகப்போறியா?”

“சரண்டரா? நானா ? நோ சான்ஸ்! இதென்ன பிரமாதம் பிசாத்து வேல” தெனாவெட்டாகவே பதில் தந்தாள்.

ஏளன புன்னகையுடன், “அதையும் பாப்போம்” என்றவன், தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து, பேண்டின் பேக்கெட்டிற்குள் கைகளை விட்டுக்கொண்டு, மற்றவர்களை நோக்கி அதிகார தொனியில்,

“என் பெயரோ, இங்க நான் செய்யுற வேலையோ நீங்க யாரும் சொல்ல கூடாது. மிஸ் ஆழாக்கே கண்டு பிடிப்பாங்க” சிரித்துவிட்டு வெளியேறினான்.

அவன் சென்றபின் மாயாவோ, “இவர் பெரிய பிஸ்து! மெரட்டுறாராம். இதுல காதுல ரகசியம் சொல்றேன்னு காதுக்குள்ள மூச்சை விட்டு இம்சிக்கிறான். பாரு பத்மா கை பூரா புல்லரிச்சு போச்சு” என்று கைகளை பத்மாவிடம் காட்டி புலம்ப, பத்மா கேள்வியாய் வெங்கட்டையும் வினோதயும் பார்க்க அவர்கள் முகத்திலும் அதே பயம்.

மதிய உணவு இடைவேளையில் கம்பெனி ஃபுட்கோர்ட்டில், தங்களுக்கு வேண்டியதைப் பரிமாறிக்கொண்டு அமர்ந்த நண்பர்கள் எதோ ஜாடை பேசிக்கொள்ள, அதைக் கண்டுகொண்ட மாயா,

“போதும் போதும் கேவலமா பண்ணாதீங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க”

பத்மா தயக்கத்துடன் வெங்கட்டைப் பார்க்க,

மாயாவோ “அங்க என்ன பார்வை? இங்க…இங்க பாரு. என்ன விஷயம்?” பத்மாவை மிரட்ட, இடை மரித்த வெங்கட்,

“நீ மொதல்ல உனக்கு அவரை எப்படி தெரியும்னு சொல்லு”

நேர்மையானவன், முன்கோபி என்பதால் வெங்கட்டின் மேல் மட்டும் மாயாவுக்கு கொஞ்சம் பயம் உண்டு. பத்மா, வினோத் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பரகளாகிவிட அவர்களிடத்தில் மிகவும் சுதந்திரமாகப் பழகினாள்.

“யாரை?” தெரியாததுபோல் அவள் கேட்க

“அதான் இப்போ டெமோல வம்பிழுத்து வச்சுருக்கியே அவரை!” முறைதான்

“ஒ அவனா? ரொம்பலாம் தெரியாது சும்மா ரெண்டு மூணுவாட்டி பார்த்திருக்கேன்”

“அடிச்சேன்னா தெரியும்? என்ன இது பழக்கம் அவன் இவன்னு? யார் என்னன்னு தெரியாம இப்படி மரியாதையில்லாம பேசுறதை மாத்திக்க சொல்றேன், நீ கேக்கறமாதிரி தெரியல” அவன் முறைக்க

“சரி சரி அவன்னு சொல்லல… யார் அவர்? அந்த மரியாதைக்கு உரியவர்?” நக்கலாகக் கேட்க

“ஒழுங்கா போயிகிட்டு இருந்த மீட்டிங்கை வாய்கொழுப்புல கெடுத்துட்டு இப்போ பேச்சப்பார்”

“ஹலோ நான் என்ன பண்ணேன்? தெரிஞ்சவராச்சேன்னு எதோ ரெண்டு வார்த்தை பேசினேன் அவனா…” வெங்கட்டின் முறைப்பில் சுதாரித்தவள், “அவரா… சும்மா ஸீன் போட்டு போனா, நான் என்ன செய்வேன்?”

“தோடா! ரெண்டு வார்த்தையா பேசினே?”

“சரி சரி கொஞ்சம் நிறைய பேசிட்டேன். எதுக்கு இப்போ அதுக்கு நீங்க முறைக்கறீங்க?” என்று உரக்கக் கேட்டவள், மெல்லிய குரலில் “கண்ணு வெளியில விழுந்துட போகுது” முணுமுணுத்தபடி சாப்பிட

ஆதங்கத்துடன் வெங்கட், “மாயா நீ குழந்தை இல்ல, இது ஸ்கூலோ….” அவனை குறுக்கிட்ட மாயா, அதே தொனியில்

“காலேஜோ இல்ல…இங்க ப்ரொபெஷனாலா பழகப் பேச கத்துக்கோ… எத்தனை தரம் சொல்லணும்?” அவன் துவங்கியதை முடித்தாள்.

பத்மா வாயைப் பொத்தி சிரிக்க, வினோத் உறக்கவே சிரித்துவிட, வெங்கட்டின் முகத்திலும் மெல்லிய புன்னகை இழையோடியது.

“ப்ளீஸ் மாயா…அவர் கிட்ட இனி இப்படி நடந்துக்காதே. அவளோதான். சீக்கிரம் அவர்கிட்ட மன்னிப்பு கேளு”

“வாய்ப்பே இல்ல. ஓவரா சீன போட்டதுமில்லாம என் ப்ரொஜெக்ட ரிஜெக்ட் பண்ணிடுவேன்னு சொல்றான்?” வெங்கட்டின் முறைப்பைக் கண்டவள் “சரி சரி சொல்றார்…” பற்களை நர நறவெனக் கடித்தாள்.

வினோத், “அதானே சவால் விட்ட அப்புறம் என்ன சாரி கேக்கற்து?” மாயாவுக்குப் பரிந்துகொண்டு வர,

“என்னமோ பண்ணிட்டுப்போ, ஆனா உன்னால நம்ம ப்ராஜெக்ட் பாதிச்சா உன்ன அப்புறம் என்ன செய்வேன்னு தெரியாது!” அவளை எச்சரித்த வெங்கட், பத்மாவையும் வினோத்தையும் பார்து,

“நீங்க இவளுக்கு கொம்பு சீவிவிட்டீங்க… தொலைச்சுகட்டிடுவேன் தொலைச்சு!” மிரட்டினான்.

“சரிங்க ஆபீசர்!” கைக்கட்டி வாய் பொத்தி சொன்ன வினோத்தைப் பார்த்து மற்றவர் சிரித்துவிட

இவர்கள் டேபிளில் நடக்கும் கூத்தைத் தூரத்திலிருந்து பார்த்துச் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தான் அந்த நெடியவன்.

அன்றிரவு மாயா,

“மாதவா! ஏதான நல்ல ஆம்பளைங்க பேரா ஒரு பத்து பதினைஞ்சு பேரு சொல்லு பாப்போம்.”

“எதுக்குடி?”

“நீ மொதல்ல சொல்லேன்!”

“எதுக்குன்னு சொல்லு அப்புறம் சொல்றேன்”

நடந்த அனைத்தையும் எப்போதும் போல குடும்பத்தினரிடம் ஒப்பித்த மாயா, பேப்பர் பேனாவை எடுத்துக்கொண்டு தனக்கு தோணுவதை எழுதத் துவங்கினாள்.

கிருஷ்ணன், “சொல்றேன்னு கோவப்படாத, முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட பொறுமையா மரியாதையா பேச பழகனும்மா. அந்த பையன் சொன்னதுல நியாயம் இருக்கு. ஒருத்தர் நமக்கு அறிவுரை சொன்னா அதை ஏத்துக்குற மனப்பக்குவம் வேணும்.”

“இப்போ எண்ணென்ற?” தந்தையை முறைத்தாள்

“ஒன்னும் சொல்லல தாயே. நீ செஞ்ச எதோ ஒன்னு அந்த பையனை இப்படிப் பேச வச்சுருக்கு. இனி பார்த்து நடந்துக்கோ”

“சரி பாத்துக்றேன். குட்நைட்” என்று அறைக்குச் சென்றவேளை பின்தொடர்ந்து சென்றான் மாதவன்.

“எல்லாரையும் விரட்டுறியே நீ என்னத்த எழுதி வச்சுருக்கே காட்டு” என்றபடி தங்கையின் கையிலிருந்த காகிதத்தை எடுத்துப் படித்த மாதவன் விழுந்து விழுந்து சிரிக்க,

“என்னடா?” மாயா முறைக்க

“என்னடி பெயர் இதெல்லாம் ? பப்புளு, பப்பு, டாமி, டோனியா?” சிரித்தவன், “என்னடி நாய் குட்டிக்குப் பெயர் வைக்கிறியா? லூசு”

“கோவத்துல மூளை வேலை செய்யலை” வெடுக்கென்று காகிதத்தைப் பிடுங்கிக்கொண்டாள்.

“இல்லைனா மட்டும் கணிதமேதை ராமானுஜம்னு நெனப்பு. இந்த பெயரெல்லாம் அவன் கிட்ட சொன்னா, ப்ரொஜெக்ட்டை என்ன செய்வான்னு தெரியாது ஆனா உன்னை தொம்சம் பண்ணிடுவான்” தங்கையை விடாமல் அவன் கிண்டல் செய்ய

“போடா நானே பாத்துக்கறேன்” என்று அவனைத் துரத்தியவள். நீண்ட பட்டியலைத் தயார் செய்துவிட்தடு உறங்கினாள்.

மறுநாள் கையில் பெயர் பட்டியலுடன் அவனை, அந்த தளத்திலும் இன்னும் சில தளங்களிலும் தேடி அலைந்த மாயா, மாலைவரை அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, மனதில் அவனைத் திட்டி தீர்த்தாள்.

அதற்கு அடுத்த நாளும் அவனைத் தேடி களைத்தவள், மனதில் அவனைக் காணவில்லை என்ற தவிப்பும். நண்பர்கள் மூவரும் அவன் எச்சரிக்கையை மீறி உதவ முன்வரவில்லை என்ற கோவமும் பொங்க. மதிய உணவின் பின் மிகவும் வாடிவிட்டாள்.

ஒரு கையில் கப்பும் மறு கையில் அவர்கள் நிறுவன தயாரிப்பான கோகோ பொடியும் எடுத்துக்கொண்டு சாக்கலேட் மில்க் கலந்து கொள்ள அந்த தளத்திலிருந்த பிரேக் அறைக்கு (ஊழியர்கள் இடைவேளையின்போது தேநீர், காபி தயாரிதுக்கொள்ள அறை அல்லது மிகச்சிறிய சமையலறை) சென்றாள்.

“ஹாய் ஆழாக்கு, எப்படி இருக்க?” அந்த அறையிலிருந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தவனைக் கண்டு வாசலிலேயே நின்றுவிட்டாள்.

error: Content is protected !!