KanmaniUnainaankaruthinilniraithen2

KanmaniUnainaankaruthinilniraithen2

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

அத்தியாயம் -2

இளாவின் கேபினை விட்டு வெளியே வந்த மாலினி ,
‘என்னடா………..நடக்குது இங்க..? .

அவ என்னடான்னா மோரு கேட்டா…
இவன் என்னடான்னா டயம் இல்ல, அவளை
உள்ளே விடாதேன்னு சொன்னான்,

அவனை நம்பி அந்த பிசாசு கிட்ட நாம சீன போட்டா…….

கிராதகன் அந்த கத்தரிக்காய போய் லட்டுங்கிறான். அவ என்னை ஆமை வடைங்கிறா… கடங்காரி.

அதைக் கேட்டு உனக்கு என்ன ஒரு ஆனந்தம். இளமாறா.

அடேய்.கடைசில உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா..?.

ம்.. பெருமூச்சுடன் அவன் கேபினை மீண்டும் பார்த்தவள்,மூடாத பாதி டோர் வழியே ஆராவிற்கு சாப்பாடை வலிய ஊட்ட முயற்சி செய்து சமாதானப் படுத்த முயன்று கொண்டிருந்த புன்னகையுடன் மிளிர்ந்த இளகிய முக இளமாறனை பார்த்ததும்… ,

அய்யய்யோ…..,
இதுக்கு மேல என்னால தாங்க முடியாது சாமி என்றபடி அவளது தோழி பவித்ராவை ஃபோனில் அழைத்தாள். அவள் கால் அட்டெண்ட் செய்ததும்..,

“பவி நான் மோசம் போயிட்டேண்டி. என் பாஸ் இளமாறன் என்னை நம்ப வச்சி கழுத்த அறுத்துட்டான்டி.”

அந்த பக்கம் பதில் வந்ததும்..

“அட ச் சீ.. அதெல்லாம் இல்ல”.

“ வந்த நாளில் இருந்து விடாம சைட் அடிச்சு, புரப்போஸ் பண்ணலைன்னாலும் அப்போஸ் பண்ண ஆளில்லைன்னு, மனச தேத்திட்டு இருந்தேன்.
ஆனால் இன்னைக்கு மாமன் பொண்ணுங்ற பேர்ல ஒரு மங்க்கீய மடியில உக்கார வச்சி சோறு ஊட்டி விட்டுட்டு இருக்கான்.”

அந்த பக்கம் பவித்ரா ஏதோ கேள்வி கேட்க,

“அதெல்லாம் இல்லடி பவி. ரொம்ப சுமாரா கருப்பா குண்டா கத்தரிக்காய்க்கு கால் முளைச்சது போல இருக்கா..அவ?”

“ஒழுங்கா மூடிட்டு வந்திருக்கலாம்…., கேபின் டோரை.. குழைஞ்சு குழைஞ்சு ஊட்டி விடறதும், கொஞ்சி கொஞ்சி அவளை சமாதானப் படுத்தறதையும் பார்க்க , பார்க்க என் நெஞ்சுல இரத்தம் சொட்ட ஆரம்பிச்சுட்டுடி பவி.”

“உள்ள இருக்கும் போது பார்த்ததுக்கே, ஒரு நாள் லீவு போட்டுட்டு அழ வேண்டியதா இருக்கும்ன்னு பார்த்தா, , வெளிய வந்து எட்டிப்பார்த்ததை ஜீரணிக்க வாரகணக்குல ஆவும் போலயே பவி.”

“ஆனாலும் இந்த அயிட்டகாரன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போல நானு… ஏதோ கருகுற வாசனை அடிக்குதுன்னு சொல்லி டக்குன்னு ஏன் வயித்தெரிசலை மோப்பம் புடிச்சிட்டான்… எனக்கில்லை அவன் எனக்கில்லை, அந்த குள்ளகத்திரிக்காய் க்கு தான் அவன்.”

“சரி. ஏண்டி வேலை நேரத்தில் உனக்கு இந்த வெட்டி அரட்டை. போனை வை. நான் போயி வேலைய பார்க்குறேன். அழகான பொண்ணை அசிங்கப் படுத்துறோமுன்னு நினைக்காம, மூஞ்சிலயெ எல்லா பேப்பரையும் உட்டெறிவான்.”

மறு பக்கம் கேட்டு கொண்டிருந்தவள், இவளோட பிளேடில் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாளா, இல்லையா..? என அறியாமலேயே,
புலம்பி முடிச்சதும் ஃபோனை கட் செய்து விட்டு ஒரு வழியாக வேலையை பார்க்கக் ஆரம்பித்திருந்தாள் மாலினி.

பிசினஸ்லயும் , அவனோட ஸ்டாஃப் கிட்டயும் எப்போதுமே அவனோட சீரியஸான முகத்தை தான் காட்டுவான் இளமாறன். அதுவும் வேலையில் ஏதாவது தப்பு இருந்தால் ஆண் பெண் பேதமே இல்லாமல் பேயோட்டி விடுவான். அவன் தந்தை காலத்து வேலையாட்களிடம் மட்டுமே அவனது மரியாதையோடு அன்பும் வெளிப்படும். மற்ற அனைவரிடமும் மரியாதை மட்டுமே.

மாலினி போல ஒரு இளம்பெண்ணை ஆர்வமாகவும் ஏக்கமாகவும் பார்க்க வைக்கும் அத்தனை தகுதியும் இளமாறனிடம் இருந்தது.

உடம்புல சில பல பழனி மலை படிகட்டுகளோட, பிரபாஸ் உடைய ஆர்ம்சும் , ராணா வோட ஆப்சும் கொண்ட ஒரு பாகுபலிதான் இளமாறன்னு சொல்லனும் தான் ஆசை..ஆனால் இளாகிட்ட அப்படியெல்லாம் எதுவும் ஸ்பெஷல்லாம் இல்ல.

அதற்காக ரொம்ப சாதாவும் இல்லை. ஆறடியும் அதற்கேற்ற ஆரோக்யமான உடம்பும் கொண்ட அழகு பையன் தான்.

தினமும் போகும் ஜாகிங்கும், சில பல
அவுட்டோர் ஜிம் எக்கியிப்மன்ட் உதவியும் சேர்ந்து ஒரு அத்லெட்க்கு உள்ள அத்தனை அம்சத்தோடு ஃபிட்டாக அவனை மாற்றி இருந்தது.

நல்ல தென்னிந்திய நிறத்தில் , களையான முகமும்,வசீகரிக்கும் கண்களும் உடைய காந்த கண்ணழகன் தான் . நான் சிரிக்கவா…..? இப்ப சிரிக்க போறேன் என்று கேட்டபடியே இருக்கும் உதடுகள். அதோட இரண்டு நாள்தான் ஆச்சு, நான் வளர்ந்து என்பது போல அழகாய் டிரிம் செய்யப்பட்டிருக்கும் தாடி.

எந்த பொண்ண பார்த்தாலும் கண்ணை மட்டும் பார்த்து பேசும் கம்பீரம் கொண்ட ஆணாய்,
கிழிஞ்ச சொக்கா போட்டாலே சோக்காதான் தெரிவான். அதோடு ஆசிர்வாத் டெக்ஸ்டைல்ஸ், யார்ன்,ஸ்பின்னிங் மில் என கொஞ்சம் கையில் பணம் புரளும், செல்வாக்கான உயரத்தில் இருப்பதும் , அதற்கேற்ற செழுமை நடை உடை பாவனைகளில் அப்பட்டமாய் தெரியும்படி இருக்க, வயது பெண்களை , இளமாறன்னின் அழகும் , கம்பீரமும் அசைத்து பார்க்க, மாலினி அதில் கொஞ்சம் ஆடித்தான் போயிருந்தாள்.

உள்ளே இளாவும் சாப்பிட்டு விட்டு கை கழுவி விட்டு வந்தான். உள்ளே போன சாப்பாட்டில் , சற்று ஆக்ஷ்ன் மோடு குறைந்த ஆரா, ஆசுவாசமாய் ரெஸ்ட் மோடிற்கு மாறி இருந்தாள்.

அப்போது தான் ஆராவின் தலையை பார்த்தான். நடந்த அடிதடி சண்டையில், அவளுடைய போனிடெயில் பாதி முடியை வெளியே துப்பியிருக்க, நாலாபக்கமும் பறந்து கொண்டிருந்தது அவள் முடி. பார்த்ததும் சிரிப்பு பீறிட ,

சிரிச்சதை பார்த்தா அடுத்த போரை ஆரம்பிச்சுடு்வா என்ற எண்ணத்தில் அடக்கி கொண்டான்.

‘முச குட்டி போல முடி வெட்டியிருக்கா பாரு.’ கோபமாய் முகத்தை வைத்து கொண்டு..,

“என்னடி இது ஹேர் ஸ்டைல்..? ரப்பர் பாண்டுக்குல நுழையாமல் நாலா பக்கமும் பட்டம் விடுது”. என்று கேட்க.

“சீமா தான் வெட்டிவிட்டா இளா. நல்லா இல்லையா.?” பாவமாக பதில் அளித்தவளை பார்த்ததும் இளகிவிட்டான்.

“லட்டு…. எத்தனை முறை சொல்லியிருக்கேன்.? அந்த
சிலுக்கு சீமா கூட சேராதன்னு. பாரு முடியை கொத்து கொத்தாக குதறி வச்சிருக்கா அதுகூட பிரவுன் கலரிங் வேற. பார்க்க போமரேனியன் டாகுக்கு போனி டெயில் போட்டது போல இருக்கு.வா என் கூட”

என்றபடியே கொத்தாக அவள் முடியை பிடித்து அவன் கேபினை ஒட்டியிருந்த அவனது ரெஸ்ட் ரூமிற்குள் இழுத்து சென்றான். கண்ணாடியின் முன் அவளை நிற்க வைத்தவன், விரல்களால் அவள் முடியை கோதி ஹேர் பாண்டிற்க்குள் நுழைக்கலானான்.

“நான் டாகா…? போ… நான் இந்தி பண்டிட்டா மும்பைக்கே போயிடுறேன்.என்னைய பார்த்துக்க பாசம் காட்ட சென்னையில் யாரு இருக்கா…?”

“ அறைஞ்சேன்னா, கன்னம் பன்னு போல வீங்கிக்கும் பார்த்துக்க. தனியா போகனும்னு ஆசை இருந்தா போ. எனக்குத் தான் யார் மேலயும் பாசம் இல்லையே…?”

ஒழுங்கு படுத்திய முடியை உதறிவிட்டு , கையை கட்டிக் கொண்டான் உம்மென்று.

ஆரா விற்கும் கஷ்டமா இருக்க, இளா அவள் மேல் கொண்ட பாசம் தெரியும். சிறு வயதில் இருந்து அவளை கண்ணுக்குள் பொத்தி வைத்து காக்கும் ஒற்றை உறவு. அவளது ஆறடி உலகம். அவனைத்தாண்டி எதுவும் அறியாத தனக்காய் ஏதோ செய்ய முயன்றிருக்கிறான் என்பது வரை புரிய, வெள்ளைக்கொடியை பறக்க விட்டாள்.

“சரி விடுறா விடுறா, நாம அப்படியா பழகி இருக்கோம்”,

இளாவை இழுத்து இயல்பாய் ஒரு பாச முத்தம் வைத்து அவன் கன்னத்தை எச்சில் படுத்தியபடி,

அவன் விட்ட முடியை கொத்தாய் அள்ளி அவன் கையில் திணித்து,

“எனக்கு ஹேர் பேண்ட் போட்டு கட்ட முடியல, அடங்க மாட்டுது. போட்டு விடு இளா, பிளீஸ்.”

“நீ அடங்கினா தான உன் முடி அடங்கும். அப்புறம் , இந்தி பண்டிட் எப்போ மும்பைக்கு வண்டி ஏறுறீங்க..?” திரும்ப பற்றி அவள் முடியை சரி செய்து விட்டான்.

“ ஹி ..ஹி… அது சரிபட்டு வராது இளா. என் அளவுக்கு மும்பையில் யாரும் ஹிந்தி பேச மாட்டுறாங்க. என்னோட செந்த ஹிந்தி( செந்தமிழ் போலஅங்க யாருக்கும் நஹி ஆத்தா ஹே இளா.”

வாய் விட்டு சிரித்து விட்டான்.

“ இந்த வாய் இல்லைன்னா , உன்னை நாய் தூக்கிட்டு ஓடிருக்கும், சீனி உருண்டைன்னு நினைச்சு.,”
அவள் வாயில் செல்லமாய் ஒரு அடி போட்டவனாய்,

“டிரெயின் ஏத்தி விட்டப்ப ஒழுங்கா தானடி போன, எப்ப உன் தலையில் இந்த கொத்து பரோட்டாவை கொத்தி விட்டா சிலுக்கு..?”

“ அதெல்லாம் போறதுக்கு முன்னாடியே வெட்டியாச்சு, மும்பைக்கு ஸ்டைலா தான் போகனும், வான்னு சொல்லி பண்ணி விட்டுட்டா இளா. எனக்கு அப்பவும் டவுட் வந்துச்சு, நம்ம சின்னசாமி அங்கிள் , கார்டனை க்ளீன் பன்றப்போ , சஜக்கு சஜக்குன்னு செடி வெட்டுறா போல, என் தலையை சுத்தி சுத்தி கத்திரிச்சா.”

“அதோட நிப்பாட்டிட்டு வந்திருந்தாலாவது பாதியை காப்பாத்தி இருக்கலாமேடி.” இளா இடையிட,

“அங்கதான் இந்த ஆராவோட ஏழாம் அறிவு பளீர்ன்னு எரிஞ்சு பழி வாங்குச்சு. நான் வெறும் பி எஸ் சி , அவ எம் எஸ் சி, சரி நம்மள விட கூட ரெண்டு வருஷம் படிச்சு இருக்காளே விவரமா இருப்பா, அதோட ஃபேஷன் டெக்னாலஜி படிச்சுட்டு ஃபேஷன் தெரியாத மக்குன்னு ஓட்டுவாளேன்னு விட்டுட்டேன்.”
“அதோட கிளம்பும் போது போட்டிருந்த மொத்தமா சுருட்டிபொட்டிருந்த பன்னில் உனக்கு தெரியாம போயிருக்கும்.”

“,உனக்கு ஆறாவது அறிவு ஆனாவறதே ஆடிக்கு ஒருக்கா, அமாவாசைக்கு ஒருக்கா, இதுல ஏழாம் அறிவு வேற இருக்கா…? விளங்கின மாதிரி தான்.” மண்டையில் தட்டினான்.

சீமா, வைத்தியநாதன் – கற்பகம் தம்பதியின் மகள். இருபத்தி ஐந்து வயதாகிறது. வைத்தியநாதன் ஆசிர்வாத்
குரூப்ஸ்ற்கு ஆடிட்டர். இளமாறன் – ஆராதனா பெற்றோர் குடும்ப நண்பரும் கூட.

“அவ வெட்டி விட்டான்னு நீயும் இந்த அரை மண்டையோட மும்பையை சுத்தி மானத்தை வாங்கியிருக்க…?” சொல்லி கொண்டே முடியை இழுக்க,

“ஆ…தலை வலிக்குது., விடுடா இனி அவகிட்ட என் மண்டையை தர மாட்டேன்” என்று சொன்னபடியே
ஆரா .. அடுத்த ஆப்ளி கேஷனை வைத்தாள்.

“இளா உனக்கும் சீமாக்கும் கல்யாணம் ஆனதும் , அவ என்னை ரொம்ப நல்லா கவனிசுக்குவாளாம். எனக்கு ஹேர்ட் ஸ்டைல்லாம் வித விதமா அவளே பண்ணி விடுவாளாம், நாம மூணு பேரும் ஜாலியா இருக்கலாமுன்னு சொன்னா … நீ எதுக்கு இளா அவளை வேண்டாம்னு சொல்லுற?.
அவ எவ்வளோ கலரு, என்னா அழகு, செம்மையா டிரஸ் போடுவா. என் இளாவுக்கு மேட்சா ஸ்டைலா இருப்பா. பிளீஸ் இளா எனக்காக.” என்று ஆரா

சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் இளா ,

“வாயை மூடு ஆரா , வீட்டுக்கு போ.”

“ இல்லை , இளா,” ஆரா பேசத் தயங்கி நிற்க,

“இப்படி பேச சொல்லி அந்த சீமா சொல்லி கொடுத்தாளா..? உன்னை எதுக்கு அவ பார்த்துக்கணும். இருபத்தி இரண்டு வயசாகுது
உனக்கு. உன்னால உன்னை பார்த்துக்க முடியாதா?
அனுப்பி விட்டுட்டு கண்டுக்கவே இல்லைன்னு சொன்னியே, அப்படியே விட்டுடுவேன்னு நினைச்சியா..?,”

“ மாமாவும் அத்தையும் செத்து கிட்டத்தட்ட பதிமூணு வருஷமா நான் தான் உன்ன பார்த்துக்கிறேன். இனிமேலும் நான் உன்ன பார்த்துக்க மாட்டேனாடி.?அவ யாரு நமக்கு இடையில. நம்ம வீட்டுல நாம ரெண்டு பேரும் தான்
ஆரா. அதுதான் சரியாவும் இருக்கும் புரிஞ்சுதா..? இதுக்கு மேல இந்த விஷயத்தை பத்தி பேசின அவ்வளோ தான்..”

கோபமாய் ஆரம்பித்து அவள் முகம் பார்த்து தன்மையாய் பேசி முடித்தவனுக்குள் என்னென்னவோ யோசனைகள் படமாய்….
இளாவுக்கு புரிந்தது .

சீமாவிற்கு எப்போதும் அவன் மேல் ஒரு மயக்கமிருக்கும். மூணு வருஷத்துக்கு முன்னால தான் புரப்போஸ்
செய்திருந்தாள், இளா மறுக்கவும், வைத்தியநாதன் தம்பதியை வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டாள். இவன் அவர்களிடமும்
உறுதியாக மறுத்து விட்டான். ஆனாலும் அடிக்கடி இவன்
மனதை கலைக்க எதாவது செய்து கொண்டே இருப்பாள்.
அந்த வரிசையில் இப்போ ஆரா..

ஆராவிற்க்கு சீமாவின் நிறத்தின் மேல், அவள் அழகின் மேல் ஒரு ஆர்வமிருக்கும். அதோட விளைவுதான் .. ஆராவின் இன்றைய பேச்சு.

அப்பப்போ ராங்கியாக அவள் சிலுப்பி கொண்டே பேசுவதால்
சிலுக்குவார்பட்டி சீமா என்று இவனும் இவன் ஃப்ரெண்ட் கிருஷ்ஷும் கலாய்ப்பார்கள்.. இப்போ செய்யிற
வேலையில் சிலுக்கு சீமாவாகவே மாறிவிட்டாள்.

சிந்தித்து கொண்டே கண்ணாடியில் பார்த்து கொண்டிருந்தவன்..,கோபத்தில் அதிர்ந்து பேசியதில் மிரட்சியுடன் அவனையே பார்த்துகொண்டு இருந்த ஆரா கவனத்துக்கு வர,கனிந்துவிட்டான்.

“இனிமே அந்த சிலுக்கு கூட சேர்ந்து முடியை எதாவது
ஏடாகூடமாக பண்ணிட்டு வந்த , திருப்பதிக்கு கூட்டிட்டு போய் மொத்தமா மொட்டையடிச்சு விட்டுடுவேன் பார்த்துக்க லட்டு, அப்புறம் உன் தலையும் லட்டு போல ஆயிடும்..”.-
இளா சிரித்தபடியே கூற,.

“ம்…ஹும், இனி சீமா பக்கமே போக மாட்டேனே,” மண்டையை டிங்கு டிங்கென்று ஆட்டிவிட்டு, சமாதானமாய் அவனை ஓட்டி சாய்ந்து நின்று கொண்டாள்.

இளாவின் புன்னகை ., ஆராவுக்கும் தொற்றி கொண்டது.

“இங்க பாரு லட்டு”, கண்ணாடியில் அவளை காட்டியவன்.

“அந்த சீமாவெல்லாம் ஒரு அழகா? அவ மனசு முழுசும் விஷம். நீதான் என் அழகி.. உனக்கு கேவலமான ஹேர் ஸ்டைல் வச்சி விட்டவளுக்கே வக்காலத்து வாங்குற உன் வெள்ளந்தியான மனசு அழகு . தங்க நிறத்துல கொஞ்சம் புசு புசுண்ணு கியூட் டா இருக்குற நீ , அவளை போய் அழகுன்னு சொல்ற. அந்த வெள்ளை பன்னி , சரியான சதிகாரி என் கையில் சிக்கட்டும் அதுக்கு அப்ப இருக்குது கச்சேரி.”

“அத்தை உன்னை ரொம்ப குட்டி பொண்ணா என்கிட்ட கொடுத்துட்டு போனாங்கடி. அப்போதிலருந்து உன்னை நல்லாத் தானே பார்த்துகிட்டேன். இடையில் ஒரே ஒரு தப்பு பண்ணிட்டேன், நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் ஆண்டாள் பாட்டிய விட்டுட்டு நீ பட்டபாடு போதாதா.? இன்னும் படணுமா?.”

அவன் கரகரத்த குரலில் கூறி முடிக்க,

“சாரி தெரியாமல் சொல்லிட்டேன். இனி இப்படி பேச
மாட்டேன் இளா.” அவனின் சோக குரலில் மனமுடைந்து ஆராவிற்கு கண்களில் குளம் கட்டியது.

ஒரு வினாடியில் .அவள் முகத்தை பார்த்து சுதாரித்தான்
இளமாறன்.

“ஒரே நாளில் ரொம்ப சிரிச்சு ரொம்ப அழுதாச்சு லட்டு. விடு… போ போய் வீட்டில் குளிச்சிட்டு ரெஸ்ட் எடு. அப்படியே அழுக்கு மூட்டையா நான் வீட்டுக்கு வர்ற வரைக்கும் தூங்கிட்டு இருந்தால் பாத் டப்ல தூக்கிட்டு போய் போட்டு முக்கிடுவேன் ஜாக்கிரதை.. கிளம்பு வீட்டுக்கு நேரம் ஆச்சு.”

முகம் மாறாமல் அவளை கிளப்பியவன் ,

அவள் சென்றதும் அப்படியே அமர்ந்து விட்டான். சீமா தானே ஆரம்பித்தாள் இந்த குழப்பத்தை அவளை. .. என்று கடுப்புடன் அவளுக்கு போன் செய்தான்.

“ஏய் என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல…?
இப்ப எதுக்கு ஆராவ குழப்பி விட்ட..? எனக்கு கல்யாணம்
வேண்டாம். அதிலும் முக்கியமா நீ வேண்டாம். உங்கப்பா முகத்துக்காக பார்க்கிறேன் இல்லைன்னா மரியாதை கெட்டுடும்.”

அந்த பக்கம் சீமா அளித்த பதிலை கேட்டு விட்டு,

“ஆமாம். அதுக்கு என்னா இப்போ… நான்
சாமியார் ஆக போறேன் இல்ல மண்ணா போறேன் உனக்கு என்னடி வந்தது.. எங்க வாழ்க்கையில் குறுக்க வரலாம்னு நினைக்காத, வை ஃபோனை..” ச்சை என்றபடி கட் செய்தவன்.

ஒரு காலத்தில் நல்ல தோழி. இளா அறிந்த மிகச் குறைந்த பெண்களில் அவளும் ஒருத்தி. வண்டி வண்டியாக கோபம் வந்தாலும் அவள் மேல் காட்ட மனமில்லாதவனாக , நொந்து கொண்டான்.

வேலையை செய்ய முடியாமல், கிளம்பி , நேரே காரை எடுத்துக்கொண்டு பீச்சிற்கு போய்விட்டான். கடற்கரை அலையை பார்த்தபடி மணலை அளைந்தவனுக்கு .. மனம் கொள்ளா துக்கம்..

மீண்டும் மீண்டும் அந்த கேள்வி அவன் மனதை குடைந்தது..

ஆராவுக்கும் எனக்கும் இடையில் மீண்டும் ஒரு ஆளா…..?

எனக்கும் ஆராவுக்கும் இடையில் மீண்டும் இடைவெளி
வந்து விடுமா ..?

ஆண்டாள் பாட்டி…..? ஆரா….? சீமா..? ஆரா…?

இளமாறனுக்கு மண்டை வெடித்து விடும் போலிருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவன் நண்பன்
கிருஷ்ணாவிற்க்கு செல்லில் அழைத்தான்.

“டேய் கிருஷ் உடனே கிளம்பி பீச்சுக்கு வா. .
……….??
“மனசு சரியில்ல மச்சான்.”
…………??
“நாம எப்போதும் வர்ற இடத்தில தான் இருக்கேன்.”

………………………

“சரிடா.”
மீண்டும் ஆழ்கடலின் ஆர்பரிப்பான அலைகள் போலவே அவன் மனம்.
கிருஷ், இளாவின் நெருங்கிய தோழன்.
ஆடிட்டர் வைத்தியநாதன் தங்கை வேதவல்லி மகன்.
இருவரும் கல்லூரி படிப்பை ஒன்றாக முடித்ததும்,
நஷ்டத்தில் இருந்த ஆசிர்வாத் டெக்ஸ்டைல்ஸ், மில்ஸ், என்று குடும்ப பிசினசை தூக்கி நிறுத்த, கிருஷ்ஷின் பங்களிப்பு அதிகம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறவும், இளா எங்கேயும் எப்போதும் தலை குனியாமல் மரியாதையோடு வலம் வர, அவனது வலது கையாகவே மாறிட்டான் கிருஷ்.

அதற்கு கைமாறாக, கிருஷ்ஷிர்க்கு தானே முதலீடு செய்து
தனியாகவே, வேதா டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் டெக்ஸ்டைல் பிசினஸை ஒன்றரை வருடத்திற்கு முன் தான் ஆரம்பித்து கொடுத்திருந்தான் இளா.. புதிதாக தொழில் தொடங்கிய கையோடு ரோஜா உடன் திருமணமும் நடக்க,.சீக்கிரமாக குடும்பஸ்தானாக மாறிவிட்டான்.கிருஷ்.

சொந்தபந்தம் இல்லாத இளா ஆராவிர்க்கு கிரிஷின் குடும்பம் தான் சொந்தம்.
பாதி நாட்கள் இருவரும் அங்கேதான் தங்குவது.
கையில் கட்டியிருந்த பாசில் வாட்ச், மணி ஐந்தரை என்றது…
இன்னும் முழுசா முப்பது நிமிஷம் இருக்கே….

வானத்தை பார்த்தான் . அந்தி வானத்திற்கான ஆயத்த
பணிகள் நடந்து கொண்டிருந்தது. அவன் மனது,
பதினேழு வருடங்களுக்கு பின் சென்றது. எந்த ஜாங்கிரியும் சுற்றாமல் தனக்குத் தானே ஃப்ளாஷ் பேக் ஓட்டியவன்,
பெருமூச்சுடன் கடலை வெறித்தபடி எவ்வளவு நேரம் இருந்தானோ..? தோளில் ஒரு கை போட்டபடி கிருஷ்…

சாஷா…

error: Content is protected !!