TholilSaayaVaa20A

TholilSaayaVaa20A

திருமணத்திற்கு ஒருவாரம் முன்னதாக பைரவும் வாணியும் அவர்கள் ஊருக்கு சென்று திருமண ஏற்பாடுகளை செய்யத்துவங்கினர். அவர்கள் சென்ற இரண்டு நாட்களில் மாயாவும் அவள் குடும்பத்தினரும் அவன் ஊருக்கு புறப்பட்டனர்.

காரை ஓட்டிக்கொண்டிருந்த மாதவன், ஊர் எல்லையை அடையும் நேரம், தன் பெற்றோரிடம், “ம்மா! ப்பா! இங்க பாருங்க, நாம இப்போ ஊருக்குள்ள நுழைய போறோம். மேளதாளமுன்னு ஊரே திரண்டு வரவேற்கும்! ஈ ன்னு இளிக்காம சும்மா கம்பீரமா நடக்கணும். எல்லார் முன்னாடியும் என்னை வாடா போடான்னு சொல்லக்கூடாது! வாப்பா போப்பான்னு மரியாதையா பேசணும்” நூற்றி நாற்பத்தி எட்டாவது முறை எச்சரித்தான்.

பெற்றோர்கள் அவனை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அவர்கள் மௌனத்தை சம்மத்தமென்று எடுத்துக்கொண்டவன், மாயாவிடம்,
“இங்கபாருடி இது கிராமம், கல்யாண பொண்ணுன்னா குனிஞ்ச தலை நிமிராம தரையை பார்த்துகிட்டே நடக்கணும்…”

“ஏன்டா எங்கயான போயி நான் முட்டிக்கவா?” மாயா முறைக்க,

“அசட்டு முண்டம் பேசாம சொல்றத கேளு! வெக்கத்துக்கு ஸ்பெல்லிங் கூட உனக்கு தெரியாதுன்ற ரகசியம் கடுகளவும் வெளியே கசியக்கூடாது. யார் எந்த கேள்வி கேட்டாலும் கொஞ்சமா சிரிச்சு, யாருக்கும் கேட்காதமாதிரி கம்மி குரல்ல பதில் சொல்லணும்…”

“அதுக்கு பேசாம இருந்துடலாமே எதுக்கு சிரமப்பட்டு பதில் சொல்லணும்?”

“மொதல்ல இப்படி ஏட்டிக்கு போட்டி பேசாம பதுவிசா நடக்கணும்.”

கண்களை உருட்டிய மாயா, தாயை முறைக்க, அவரோ நாக்கை துருத்தி, அவனை கண்டுகொள்ள வேண்டாம் என்று ஜாடை செய்ய, மாயா உரக்க சிரித்துவிட்டாள்.

“ஆண்டவா இப்படி வெங்கல கடைல யானை புகுந்த மாதிரி சிரிக்க கூடாது! பொறுமையா கிளுக்குன்னு சிரிக்கணும். அந்த காலத்து ஹீரோயின் மாதிரி” என்ற மாதவன் ரெயர்வியு மிரரில் தங்கையை பார்த்தான்.

“எப்படி கிளுக் கிளுக்குன்னு சவுண்ட் வரமாதிரி சிரிக்க முடியும்? அதையும் நீயே பண்ணிக்காட்டு டா ” மாயா முறைக்க,

“சிரிக்கணும் ஆனா சத்தம் வரக்கூடாது, பாத்தா சிரிக்கிறேன்னு தெரியணும் ஆனா பல்லு தெரியக்கூடாது.”

“அடேய் நான் சிரிக்கவே இல்லடா” மாயா சிடுசிடுக்க,

“எல்லாத்துக்கும் மேல இப்படி அங்க வந்து அடேய் கிடேய்ன்னு சொல்லவே கூடாது. சொல்லுங்கண்ணா சரிங்கண்ணான்னு மரியாதையா இருக்கணும் புரியுதா?” தங்கையை எச்சரித்தான்.

“அம்மா இவனை இங்கயே இறக்கிவிடு , இல்லை நான் என் கல்யாணத்துக்கு வரமாட்டேன்!” முறைத்தவளை கண்டுகொள்ளாத கீதா, கிருஷ்ணனிடம்,

“கிருஷ்! இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்? ஏற்கனவே லேட், ஒழுங்கா இருட்டறதுக்கு முன்னடியாவது ரீச் ஆவோமா?”

கிருஷ்ணன் பதில்தரும் முன்னரே, குறுக்கிட்ட மாதவன்,

“அம்மா! மொதல்ல அப்பாவை பேரைச்சொல்லி கூப்பிடதே, என்னங்கன்னு கூப்பிடு!” கடுப்பான கீதா , “டேய்! பிச்சுடுவேன் சொல்லிட்டேன்”.

“நல்லதுக்கு காலமில்ல!” முணுமுணுத்தபடி காரை செலுத்தினான்.

கொஞ்சநேரத்தில் பைரவின் வீட்டின் முன் காரை நிறுத்திய மாதவன் மறுபடி மறுபடி கைபேசியில் விலாசத்தை சரிபார்க்க, மாயாவோ, “அடேய் அண்ணா! பாட்டாசுன்னே… மேளதாளமுன்னே… கூட்டம் கூட்டமா குவியும்னே…. ஒரு ஈ காக்காவ காணும்? யார் வீட்டுக்கோ வந்துட்டோமோ?”

“அதோ அது பைரவ் சித்தப்பா தான?” கிருஷ்ணன் கேட்டபடி காரைவிட்டு கீழே இறங்கி நிற்க, தொலைவிலிருந்து அவர்களை பார்த்தவர், “வாங்க வாங்க! வெல்கம்! காரை உள்ளே பார்க் பண்ணிக்கோங்க” என்றபடி கேட்டை திறந்தார்.

கேட்டிலிருந்து சற்று தொலைவில் மரங்களுக்கு பின்னால் அழகிய பிரமாண்டமான பழைய காலத்து வீடு, நேர்த்தியாய் அலங்கரிக்கப்பட்டு மாளிகைபோல் காட்சியளித்தது.

வாசலில் வேஷ்டியை மடித்துக்கட்டியபடி, அங்கு நடந்துகொண்டிருந்த பணிகளை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் பைரவ். இவர்கள் கார் சத்தத்தில் திரும்பியவன் முகமெங்கும் புன்னகையுடன், அவர்களை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச்சென்றான்.

“ட்ரிப் எப்படி இருந்தது அங்கிள்? சாரி இப்போதான் வாணிமாவும் சித்தியும் அவசரமா பக்கத்துல கோவில்வரைக்கும் போயிருக்காங்க” என்றவன், ஆட்களை அழைத்து பெட்டிகளை அவர்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட அறைகளில் வைக்க சொன்னான்.

அதற்குள் காபியுடன் வந்த அவன் சித்தப்பா, “சாரி நீங்க வர தாமதமானதால நாங்க பாத்துக்குறோம்னு சொல்லி கொஞ்சம் முன்னாடிதான் அவங்கள போயிட்டு வரச்சொன்னோம். ஏதோ பொம்பளைங்க விஷயம்னு சொன்னாங்க அதான்…”

காபி கோப்பையுடன் விழித்துக்கொண்டிருந்த மாதவனிடம், “தைரியமா குடிங்க தம்பி. காபி நான் கலக்கல, பைரவ் சித்திதான் போட்டாங்க” என்று சிரிக்க, அசடு வழிந்தான் மாதவன்.

சிறிதுநேர உரையாடலுக்கு பின்னர், “நீங்க பிரெஷ் ஆகிட்டு வாங்க, லன்ச் ரெடியா இருக்கு சாப்பிடுவோம்” என்ற பைரவ், “நான் வாணிமாக்கு கால் பண்றேன்” அவர்களை அறைகளுக்கு அழைத்து சென்றான்.

***

மெல்ல மெல்ல உறவினர்கள் வருகை அதிகரிக்க இரண்டே நாட்களில் வீடு களைகட்ட துவங்கியது.

வாணியும் பைரவும் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்துவைக்க, பைரவிற்கு இவ்வளவு சொந்தங்களா என்று மாயாவின் குடும்பத்தினர் மலைத்தே போனார்கள். தனிமை என்பதே மாயாவிற்கு மறந்துபோனது, எப்பொழுதும் பெண்கள் பட்டாளம் சூழ, பேசிப்பேசியே களைத்துப்போனாள்.

பெரியவர்கள் திருமண வேலையில் மூழ்கியிருக்க, மாதவனோ யாருடனும் ஒட்டாது பைரவ் கூடவே சுற்ற துவங்கினான்.

“என்ன மாதவா? வீடுபூரா பொண்ணுங்க ஒருத்தரையும் சைட் அடிக்காம என்கூடவே சுத்துறே?” கிண்டலடித்த பைரவ், “வேணும்னா நான் இண்ட்ரோ தரேன் வா” என்றபடி தடாலடியாக அவனை பெண்கள் கூட்டத்தில் சிக்கவைத்து சிரித்தபடி அவ்விடத்தைவிட்டு ஓடிவிட்டான்.

பெண்கள் செய்யும் பரிகாசத்திலும், வம்பிழுத்தத்திலும் கூச்சத்தில் நெளிந்த மாதவன் தப்பிக்க வழியின்றி விழிபிதுங்கி நின்றான்.

***

மாலை மார்க் தாத்தா, மானசா, வாசுகி மற்றும் அவர் கணவர் நால்வரும் வந்து சேர்ந்தனர்.

நடப்பவற்றை ஏற்று கொண்ட வாசுகி மாயாவிடமும் அவள் குடும்பத்தினரிடமும் இப்பொழுது சாதாரணாமாக பழக, வாசுகியின் கணவரின் மனதிலோ மனசாவை பைரவிற்கு திருமணம் செய்துவைக்காத வருத்தம் இன்னும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது.

மார்க் தாத்தாவை கண்ட மாயா ஓடிச்சென்று அவர் கையை பற்றிக்கொண்டு, “எங்க நீங்க இன்னும் வரலைன்னு பைரவ கேட்டுகிட்டே இருந்தேன், எப்படி இருக்கீங்க டார்லிங்?” குதித்தவள், மான்ஸாவிடம் , “ஹாய் டா எப்படி இருக்கே?” நலம் விசாரித்தாள்.

“நல்லா இருக்கேன் டா. பை தி வே கங்கிராட்ஸ்! உங்க கல்யாணம் பிக்ஸ் ஆனா அப்புறம் வந்து பாக்கவே முடியலை”

மார்க் தாத்தாவிடமும் மானஸாவிடமும் பேசி கொண்ருந்தவள், பைரவ் தனிமையில் பேச அவளை மாலை மொட்டைமாடிக்கு அழைத்ததை முற்றிலும் மறந்திருந்தாள்.

வெகுநேரம் அவளுக்கென்று காத்திருந்தவன், கோவமாக வாட்சப்பில், ‘வரியா இல்லையா?’ என்று அனுப்பிவிட்டு, கோவமாக அருகிலிருந்த தென்னைமர கீற்றை பிய்த்தெரிந்துக் கொண்டிருந்தான்.

அவன் மெசேஜை பார்த்தவள், சமாளித்துக்கொண்டு மொட்டைமாடிக்கு வருவதற்குள், பைரவ் பொறுமை இழந்து கிளம்ப திரும்ப, தன் காதை பற்றிகொண்டவள், “சாரி , மார்க் தாத்தா அவர் காலேஜ் டேஸ் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தாரா, நேரம் போனதே தெரிய” அவனருகில் வந்து நின்றவள் அப்பொழுதுதான் கவனித்தாள் கோவத்தில் அவன் முகம் சிவந்திருந்ததை.

“என்னடா ஏன் இந்த தக்காளி ஃபேசியல்? என்னாச்சு?”

“பேசாத! போ மார்க்கிட்டவே பேசு! நான் எதுக்கு உனக்கு?” கோவமாக திரும்பிக்கொண்டவன், கோவமாக மறுபடி தென்னகக்கீற்றை பிய்த்து எரிய,

‘சுத்தம் வேதாளம் தென்னைமரத்துல ஏறி இருக்கு!’

“பாஸ்… இங்க பாரேன்… ப்ளீஸ்டா…” அவனை கெஞ்சியவள், அவன் திரும்பாததால், அவனுக்கும் தென்னைமரக்கிளைக்கும் நடுவே சென்று அவன் முன்னால் நின்றாள்.

“மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்! அதுலையும் பாரு, நீ எவ்ளோ பெரிஈ……ய மனுஷன்!” அவன் உயரத்திற்கு அண்ணாந்து பார்த்தவள், “கோச்சுக்காம எதுக்கு கூப்பிட்டேன்னு சொல்லுவியாம்” என்று கெஞ்ச,

“எவ்ளோ ஆசையா கிஃப்ட் கொடுக்க வரச்சொன்னேன் மூடே போச்சு!”

“ஹே என்ன கிஃப்ட் ?” ஆர்வமானவள் அவன் கைகளில் பரிசேதும் இல்லாததை கண்டு , “எங்க கிஃப்ட்?” ஆர்வமாக பார்த்தவள் மேல் இல்லாத கோவத்தை இழுத்து பிடிக்க முடியாதவன்,

“தரேன் ஆனா லேட்டா வந்ததுக்கு ஃபைன் கட்டு கிஃப்ட்ட தரேன்!” பேரம் பேசினான்.

“என்ன வேணும்?” புருவத்தை உயர்திவள், “சீக்கிரம்! நான் எங்கன்னு கீழ தேடுவாங்க” அவசர படுத்த,

“கிஃப்ட் வேணும்னா கிஸ் வேணும்!” பேக்கெட்டிற்குள் கையை விட்டுக்கொண்டு மிடுக்காக கேட்க,

“அல்ப! இதுதான் உங்க ஊர்ல ஃபைனா?” கண்களை உருட்டியவள், அவன் சட்டையை பற்றி இழுத்து, கன்னத்தில் முத்தம் தர எத்தனிக்க, அவளை தடுத்தவன், இதெல்லாம் வேலைக்கு ஆகலைன்னு ஏற்கனவே தெரியுமே, இங்க வேணும்” என்று அவளை உற்று பார்த்தான்.

“அடேய்! ஓடி போயிடு! சான்ஸே இல்ல!” பதறி பின்னோக்கி நடந்தவள் சுவரில் முட்டி நின்றாள்.

“கைல காசு வாயில தோச! கிஸ் பண்ணா கிஃப்ட் இல்லனா கிடையாது” அவன் முறுக்கிக்கொள்ள,

“டேய் படுத்தாத, எனக்கு லிப் கிஸ் பண்ணத்தெரியாது” எங்கோ வெறித்தாள்.

“அதென்ன பிரமாதம் கன்னத்துல கொடுக்கறதை இடம் மாத்தி கொடுக்க போற!” விடாப்பிடியாய் அவன் நெருங்க, பதறி தடுத்தவள்,

“நானே தரேன்…” தயங்கியபடி அவனை தன் உயரத்திற்கு இழுத்து, மிகவும் மென்மையாக முத்தமிட்டவள், தன் இதழ்களை மெல்ல விரலால் வருடியபடி, யோசனையில் மூழ்க,

“என்னடா தேடற ?” அவனுக்கு அவள் ஆராய்ச்சி விளங்கவில்லை,

“பாஸ்!”

“ம்ம்”

“உன்கிட்ட ஐஸ்க்ரீம் வாசனை வருது! என்னைவிட்டு சாப்பிட்டியா?”

“ஆமா நானும் மாதவனும் கடைத்தெருவுக்கு போனபோது அங்க…” சொல்ல ஆரம்பித்தவன் மாயாவின் முகத்திலிருந்த கோவத்தை அப்பொழுதுதான் கவனித்தான்.

“அ..அது… மாதவனுக்கு ஆசையா இருந்ததுன்னு… நான் சொன்னேன் மாயாக்கும் வாங்கிகிட்டு போகலாம்னு… கல்யாணம் வச்சுக்கிட்டு சளிபிடிக்கும்னு…” கோர்வையாக பொய் சொல்ல முடியாமல் தவித்தான்.

“ஏன் உனக்கும் தான கல்யாணம்? நீ ஐஸ்க்ரீம் சாப்டா உனக்கு ஜலதோஷம் பிடிக்காதோ?” முறைத்தவள், “உனக்கு அந்த பாக்கியும் கூட்டு அதான? போ ! “ கோவமாக இடத்தைவிட்டு விலக,

“நில்லு ப்ளீஸ்!” அவள் கையை பற்றி இழுக்க,

“என்ன?” எங்கோ வெறித்தபடி கேட்டாள்.

“கண்ண மூடு” புன்னகையுடனே சொன்னவன், அவளை மெல்ல நெருங்கி,
அவள் கையை மென்மையாக பற்றியவன், அவள் விரலில் மோதிரத்தை அணிவித்து, “பிடிச்சுருக்கா?” ஆர்வமாக கேட்க,

சொல்லத்தெரியாத உணர்வுகள் ஆட்கொள்ள, “ரொம்ப பிடிச்சுருக்கு பைரவ்! உன்ன!” அவனை இறுக்கமாக கட்டிக்கொள்ள, அவனும் அன்பாய் அவளை அணைத்துக்கொண்டான்.

“மாயா!”

“ம்ம்”

“தேங்க்ஸ்”

“எதுக்கு பாஸ்?” அணைப்பிலிருந்து விலகாமல் கேட்க,

“என் லைஃப்ல வந்ததுக்கு, என் பெஸ்ட் பிரென்ட் ஆனதுக்கு, என்னை கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சதுக்கு அப்புறம் இப்போ கொடுத்த கிஸ்ஸுக்கு!” அவள் உச்சியில் முத்தமிட்டான்.

“இதெல்லாம் கனவுதான பாஸ்?” அவள் அண்ணாந்து அவன் முகம்பார்க்க,

“கிள்ளவா? அப்போ நம்புவியா?”

“நம்பிகிட்டு தாண்டா இருந்தோம்!” மானஸாவின் குரலில் திரும்பியவர்கள், விலகி நின்றனர்.

மானஸா, “பிரெண்ட்ஸ்ன்னு சொன்ன நம்பினேன், பெரியவங்க பார்த்துவச்ச கல்யாணம்னு சொன்ன நம்பினேன் இப்போ கட்டிப்பிடிச்சு ரோமேன்ஸ் பண்ணற?” பைரவை சிரிப்புடன் முறைக்க,

“இதுக்கு பேரு ரோமேன்ஸா ஏன்?” புன்னகைத்த பைரவ், “மனசுவிட்டு பேசலாம்னு கூப்டா… சரி அதான் கரடி மாதிரி வந்துட்டே என்ன சொல்லு” அவளை வம்பிழுக்க,

“நான் மாயாவை தேடி வந்தேன். கீழ மார்க் மாயாகூட தான் சாப்பிடுவேன்னு அடம்” நெற்றியில் தட்டிக்கொண்டவள் , “மாயா கொஞ்சம் உன் பாய் பிரெண்ட சாப்பிட வைக்க வா தாயே”

“இதோ வந்துடறேன்” என்று மானஸாவை கீழே அனுப்பிவைத்தவள், பைரவ் தன் கையில் அணிவித்த மோதிரத்தை மெல்ல வருடியவாறு நிற்க,

“என்னமா?” பின்னாலிருந்து நெருங்கியவன், அவளை தன் புறம் திருப்பினான்.

“எனக்கு பயமா இருக்கு. நான் பர்ஃபெக்ட் இல்ல, உனக்கு எந்த விதத்துலயும் நான் பொருத்தமா இல்ல” தலை கவிழ்ந்தவளை, நாடி பிடித்து உயர்த்தியவன், “நமக்கு வேண்டியமாதிரி இருக்க அவங்க பர்ஃபெக்ட்டா இருக்கணும்னு அவசியமில்லடா. மனசுக்கு பிடிச்சவங்களா இருந்தா போதும். எனக்கு வாணிமாக்கும் எங்கப்பாக்கும் அப்புறம் ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரே ஆள் நீதான்!”

“…”

“ஓவரா யோசிக்காதடா. ரிலாக்ஸ்!”

“ம்ம், என்கூடவே இருப்பியா? பயமா இருக்குடா” அவன் சட்டையை பற்றிகொண்டவள் கேட்க,

“கூடவே இருப்பேன் சரியா? வா” மாயாவை அணைத்தவாறு நடந்தான்.

“எவன் எவனோ வில்லனா வருவான்னு பாத்தா இந்த தொன்னூறு வயசு மார்க் வந்து நிப்பாருன்னு நினைக்கவே இல்ல!” போலியாய் அலுத்துக்கொள்ள,

“போடா! மார்க் என் டார்லிங்!”

“விளங்கிடும்!” புன்னகைத்தவன், கீழ்தளம் செல்லும்வரை தன் அணைப்பிலிருந்து மாயாவை விலக்கவில்லை.

***

திருமணத்திற்கு முன்தினம் காலையே ராபர்ட்டும் வெங்கட்டும் வினோத்தும் வந்து சேர்ந்தனர்.

“பத்மா வீட்ல அவளை விடமாட்டான்னு உனக்கு தெரியும்ல கண்டிப்பா அடுத்தவாரம் ரிசெப்ஷனுக்கு வருவா. நான் கேரண்டீ!” வாக்களித்தான் வெங்கட்.

“ம்ம் ஏன் இப்படி இருக்காங்க நானும் எவ்ளோவோ பேசிப்பாத்தேன் ஆன்ட்டி அங்கிள் கேட்கவே இல்ல” வருந்திய மாயா, “அட்லீஸ்ட் ரிசெப்ஷனுக்கு வர பர்மிஷன் கொடுத்தாங்களே!”

வினோத், “விடு தெரிஞ்ச விஷயம் தான, ஆமா என் டார்லிங் வரலையா?”

“அவ ஈவினிங் வருவா” என்றபடி வந்த பைரவ், “வாங்க உங்களுக்கு ரூம் ரெடி” என்றவன் மேலும், “டின்னர் இன்னும் அரைமணிநேரத்துல ரெடி ஆகிடும் சீக்கிரம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க, ட்ரேவலிங்ல களைப்பா இருக்கும்.”

பேசிக்கொண்டிருக்கும் பொழுதே யாரோ அழைக்க, பைரவ் சென்றுவிட,
வெகுநேரம் அவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த மாயா , கீதா வந்து விரட்டும்வரை அவ்விடத்தைவிட்டு விலகவில்லை.

***

கைகளில் மருதாணி இட்டுக்கொண்டு பால்கனியில் அமர்ந்திருந்த மாயா மூக்கை சுவரில் தேய்த்துக்கொண்டிருக்க ,

“விடிஞ்சா கல்யாணம் என்கூட ரொமான்ஸ் பன்னாம?” சிரித்தபடி வந்தான் பைரவ் .

“அப்பா நல்லவேளை வந்தே, ரொம்பநேரமா மூக்கு அரிக்குது, கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்” மூக்கை நீட்ட ,

“அவனவன் கல்யாணம் பண்ணப்போற பொண்ணு தனியா மாட்டினா முத்தம் கொடுக்க பாப்பான், நான் மூக்கை சொறிஞ்சுகிட்டு இருக்கவேண்டி இருக்கு” சிரித்தபடி அவள் மூக்கை தேய்த்துவிட்டவன்,

“பொழுதோட தூங்காம என்ன பண்ற?”

“போ பாஸ் தூக்கமே வரல, என்னமோ படபடன்னு இருக்கு. நீ எப்படி கூலா இருக்க?” மீண்டும் மூக்கை நீட்டியபடி கேட்க , புன்னகையுடன் அவள் மூக்கை தேய்த்தபடி,

“பயம் இல்ல ஆனா என்னம்மோ வித்தியாசமா இருக்கு. சொல்ல தெரியல.”

“என்ன பண்ணலாம் பாஸ்?” அவனையே கேட்டாள்.

“நீங்க ரெண்டுபேரும் போயி தூங்கலாம் பாஸ்1” என்றபடி வந்தார் வாணி.

“சீக்கிரமா தூங்குங்கன்னு ரூமுக்கு அனுப்பினா தூங்காம அரட்டை?” புன்னகைத்தவர், “அதான் நாளைலேந்து கூடவே இருக்க போறாளே பொறுமையா பேசிக்கலாம்ல? போ தூங்குடா” அவனை ஒருவழியாக அனுப்பிவைத்தார்.

“நீயும் தூங்கு மாயா, நாலுமணிக்கே எழுந்தாதானே டிரஸ் பண்ணிக்கிட்டு ரெடியாக முடியும்?”

“தூங்கறேன்…” என்றவள் மூக்கை அவரிடம் நீட்டி, “ப்ளீஸ் வாணிமா” என்று உதட்டை பிதுக்க, சிரித்தவாறே அவள் மூக்கை தேய்த்தபடி,

“நீ சந்தோஷமா இருக்கியா டா? எல்லாரும் உன்கிட்ட அன்பா இருக்காங்களா? எதுனாலும் என்கிட்டே சொல்லு சரியா?” வாஞ்சையுடன் கேட்டார்.

“சூப்பர் ஹேப்பி வாணிமா. இந்த மூக்கைத்தவிர ஒரு பிரச்னையும் இல்ல, என்னன்னே புரியல மூக்கு ரொம்ப அரிக்குது”

“வீபூதி தடவி விடறேன் கண்ட்ரோல் ஆகும், நீ படுத்துக்கோ வா”

எப்பொழுது உறங்கினாளென்று உணரும் முன்னரே விடிந்திருந்தது, மாயா கண்திறக்கும் முன்பே அவள் அறையில் சூழ்ந்த பெண்கள் அவளை யோசிக்கவிடாமல் தயார் செய்ய துவங்கினர்.

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!