tk42
tk42
அத்தியாயம் – 42
தன்னுடைய கண்கள் உணர்த்தும் செய்தி உணர்ந்தவளின் மனமோ சிறகில்லாமல் வானத்தில் பறந்தது. அவளின் காதலுக்கும், காத்திருப்பிற்கும் விடை கொடுத்தது அந்த ஃபைல். பிரபா தவறு செய்யவில்லை என்ற உண்மையை உணர்ந்தவள் அந்த ஃபைலை மார்புடன் அணைத்துக் கொண்டாள்..
அவனை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை அடக்கி வைத்துவிட்டு கடைக்குள் சென்று பிரபாவிற்கு ஏற்ற வண்ணத்தில் துணிகளை தேர்வு செய்தாள். அந்த துணி பைகளுடன் அந்த ஃபைலையும் பத்திரமாக எடுத்து வைத்துகொண்டாள். அவள் பர்சேஸ் முடித்துவிட்டு வெளிவர அவளின் கைபேசி சிணுங்கியது.
அதன் திரையைப் பார்த்தவளின் விழிகள் சந்தோஷத்தில் துள்ள, “பிரபா..” என்றழைக்க, “ஜெயா எங்கே இருக்கிற” மறுப்பக்கம் அவனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.
“நான் பர்சேஸ் முடித்துவிட்டேன். உங்களோட வேலை முடிந்ததா?” என்று கேட்க, “நான் ஆபீஸிலிருந்து கிளம்பிவிட்டேன்” என்றவன் சொல்ல, “சரி வாங்க நான் மாலில் வெயிட் பண்றேன்” அவள் போனை வைத்துவிட்டாள்.
அங்கிருந்த புக் ஸ்டால் உள்ளே நுழைந்ததும், “இங்கே நியூ கலெக்சன்ஸ் இருக்குதா?” என்று கடைகாரரிடம் கேட்டாள்.
“ம்ம் இருக்கு மேடம்” என்றவன் எழுந்துசென்று, “இந்த ரேக்கில் இருப்பது எல்லாமே நியூ ஸ்டோரிஸ்” என்றார்.
“ஓஹோ ஓகே..” என்றவள் புத்தகங்களின் பெயர்களை படித்துக்கொண்டே வர, “கதிரழகி” என்ற தலைப்பைப் பார்த்தும் அவளின் உள்ளம் திக்கென்றது.
அந்த கதையின் கடைசி அத்தியாயம் அவளால் எழுந்த முடியாததால் தான் அப்படியொரு அறிவிப்பை கொடுத்திருந்தாள் ஜெயக்கொடி. அவளும் எழுத முயற்சி செய்தாள் ஆனால் அது அவளால் முடியவில்லை.
அதன்பிறகு நடந்த அனைத்தும் அவள் மனதில் படமாக ஓடவே, ‘இந்த கதை நிறைவடையாமல் நாங்க புக் போட முடியாது’ என்றவள் பப்ளிக்கேஷன் அனுப்பியது திரும்பி அவளிடமே வந்துவிட்டது. ஆனால் இன்று அது புத்தகமாக தன் கையில் இருப்பதை அவளால் நம்ப முடியவில்லை.
‘எண்டு இல்லாமல் எப்படி புத்தகமாக போட்டாங்க?’ கேள்வி அவளின் மனதில் எழுந்தது. உடனே புத்தகத்தை கையில் எடுத்து அதன் எண்டு பகுதியை படித்தாள்.
அழகி மனமிறங்க மறுத்துவிட, ‘நீ சொன்ன பிறகு நான் ஊர் அறிய உன்னைத் திருமணம் செய்தால் அங்கே நான் முட்டாள் ஆகிருவேன்’ என்றவனை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.
‘பரவல்ல உண்மையைக் கண்டு பிடிச்சிட்டீங்க..’ அவள் கர்வமாக புன்னகைக்க, ‘அதற்கு பிறகு நீ என்னோடு சேர்ந்து வாழ மறுத்துவிட்டு வந்துவிடுவாய் அழகி. இதுவரை உன்னோடு வாழ்ந்த எனக்கு தெரியாதா உன்னோட மனசு..’ என்றவன் அன்றிலிருந்து குழந்தையை கவனித்துக்கொள்ள தொடங்கிவிட்டான்.
அதன்பிறகு அழகி வேலைக்கு சென்று தன்னுடைய தேவைகளை கவனித்துக்கொண்டாள். கதிர் மகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அதன்பிறகு பார்கவி – பார்த்திபன் திருமணம் நடந்தது. கதிரழகி தவழ்ந்து நடக்க தொடங்கினாள்.
அவளின் வளர்ச்சிகளை எல்லாம் விலகி நின்றே ரசித்தாள் அழகி. தகப்பன் – மகள் இருவரும் இருக்கும் உலகிற்குள் அழகி ஒருநாளும் நுழைய நினைக்கவில்லை. ஆனால் கதிர் தன் மனைவிக்கும் அங்கொரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தான்.
அவன் எந்த முடிவு எடுத்தாலும் அதில் அழகியின் சம்மதம் மறைமுகமாக இருக்கும். நாட்கள் சீரான வேகத்தில் செல்ல நான்கு வருடம் ஓடி மறைந்தது. அதன்பிறகு பார்கவி கர்ப்பமாக இருக்க அங்கே சந்தோசம் இரட்டிப்பானது.
பார்கவிக்கு ஒன்பதாவது மாதம் நடக்கும் பொழுது அவர்கள் இருவரும் கதிரழகியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல அழகி வீட்டில் இருக்க கதிர் வெளியே சென்றிருந்தான்.
அழகியின் மனம் மெல்ல மெல்ல மாறி இருக்க கதிருடன் இணைந்து வாழும் எண்ணத்துடன் இருந்தாள். கதிர் தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வரவே அவனிடம் எப்படி தன் மனமாற்றத்தை சொல்வது என்று அவள் தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், அப்பொழுது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டில் சிலிண்டர் வெடித்துவிட வீட்டின் சுவர் இடித்து இருவர் மீது விழுந்துவிட்டது.
இருவரின் உடல்களும் தீயில் கருகும் முன்னேரே தீயணைப்பு வீரர்கள் அவர்களை காப்பாற்றிவிட பார்கவியும், பார்த்திபனும் வீடு வந்து சேர்ந்தனர்.
“அப்பா, அம்மா” என்று மகள் கதறியழுக சொல்ல வந்த விஷயத்தை சொல்ல முடியாமல் இறந்துவிட்டாள் அழகி. கதிரின் உயிர் மட்டும் ஊசலாட கடைசியாக சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்துவிட்டார். கடைசியில் பார்த்திபன் – பார்கவியின் மகளாக வளர்ந்தாள் கதிரழகி.
கடைசியாக சுபம் என்று கதை முடிந்திருக்க, ‘என்னோட வாழ்க்கையில் நடந்த விஷயம் எப்படி?’ என்ற திகைப்புடன் அவள் நின்றிருக்க, “இந்த மாதத்தில் அதிகம் விற்பனையான புத்தகம் இதுதான் மேடம்..” என்றார் கடைகாரர்.
“ஓஹோ..” என்றவளின் கைபேசி சிணுங்க, “மலர் எங்கே இருக்கிற..” என்றவனின் குரல்கேட்க, “இங்கே புக் ஸ்டாலில் இருக்கிறேன்..” என்றதும் அவன் போனை கட் செய்தான்.
அவள் சிந்தனையுடன் அந்த புத்தகத்தை பில் போட்டு வாங்கிவிட்டு வெளியே வர, “மலர் பைகளை கொடு..” என்று அவளிடமிருந்து பைகளை வாங்கியவன் அவளின் முகம் பார்த்தான்.
அடுத்தடுத்து நடந்த விஷயங்களில் அவள் குழம்பிப் போயிருக்க, “ஏன் ஒரு மாதிரி இருக்கிற..” என்றவனின் பார்வையில் விழுந்தது அவளின் கையிலிருந்த புத்தகம்.
அவளின் மனநிலை உணர்ந்தவனோ, “எந்த புத்தகத்தை கொடுத்து ப்ரபோஸ் பண்ணலாம் என்று நினைத்தேனோ அந்த புத்தகத்தையே காசு கொடுத்து வாங்க வெச்சிட்டான் கடன்காரன். .” அவனின் முணுமுணுப்பு அவளின் காதுகளில் தெளிவாக விழுந்தது..
“என்ன சொன்னீங்க..” அவள் விழி உயர்த்தி அவனை கேள்வியாக நோக்க, “சும்மாடா..” என்றவன் கண்சிமிட்டிட கார் நேராக ஏர்போர்ட் சென்றது.
டெல்லி ஏர்போர்ட் பார்த்த ஜெயா திரும்பி பிரபாவின் முகம் பார்க்க, “இங்கே வந்த வேலை முடிந்துவிட்டது. அதன் ஊருக்கு ரிட்டன் டிக்கெட்” என்றான் பிரபா சாதாரணமாகவே.
அதன்பிறகு அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிம்லா ஏர்போர்ட்டில் இறங்கினார்கள்.மீண்டும் கால் மணிநேரம் கார் பயணம். அவளின் மனம் அடுத்தடுத்த அதிர்ச்சியில் இருந்தாளோ என்னவோ அவள் வேறு எதையும் கவனிக்கவே இல்லை..
அந்த அதிர்ச்சியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திகொண்ட பிரபா அவளை அழைத்துக்கொண்டு ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்து, “ஸ்ஸ்ஸ்..” என்ற பெருமூச்சுடன் சுவற்றில் சாய்ந்து நின்றான்..
அப்பொழுது அவள் மெளனமாக இருக்க, “மலர்..” என்ற அழைப்புடன் அவன் அவளை அணைக்க வர, “பிரபா நீங்க என்னிடம் எதையோ மறைக்கிறீங்க..” என்று கூறிவே, “நான் என்ன மறைத்தேன்..” குறும்புடன் அவளிடமே கேட்டான்.
அவனின் முன்னாடி தன் கையிலிருந்த புத்தகத்தை அவனின் முன்னாடி காட்டி, “இந்த புத்தகம் வெளிவர வாய்ப்பே இல்லை என்று பப்ளிக்கேஷனில் இருந்து ரிட்டன் வந்த கதை இன்னைக்கு நாவலாக வெளி வந்திருக்கிறது. ஆனால் அது எப்படின்னு எனக்கு புரியல..” அவளின் பார்வை அவனின் மீது நிலைத்தது..
“அதை என்னிடம் கேட்டால் எனக்கு எப்படி தெரியும்..” சுவற்றில் சாய்ந்து நின்றவனோ, “அப்போ நீதான் அந்த தமிழரசியா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான்..
அவனை நேருக்கு நேராக பார்த்த ஜெயாவோ, “ஏன் நான் தமிழரசி என்று உங்களுக்கு தெரியாத அன்பரசு” அவள் விஷயத்திற்கு வர, “சபாஷ் நான்தான் அன்பு என்று கண்டுபிடித்துவிட்டாயே..” என்றவன் புன்னகைத்தான்.
“இந்த கதை எப்படி உங்களோட கைக்கு வந்தது? நான் எழுத நினைத்து எழுத முடியாமல் போன அதே கதையின் நிறைவு. அதுவும் ஒரு வரி மாறாமல் இந்த கதை புத்தகத்தில் இருக்கு. என்னைப்பற்றிய விஷயங்கள் தெரிந்த பிறகு நீங்க..” அவளின் பார்வை அவனின் மீது நிலைத்தது.
அவளைச் சரியாக புரிந்துகொண்ட பிரபா, “உன்னோட மனசு எனக்கு தெரியாதா மலர். உன்னோட மனம் எனக்கு புரியதா? நம்ம திருமணத்திற்கு முன்னாடியே நான் இந்த கதைக்கு எண்டு எழுதிவிட்டேன் மலர்..” என்றவனை அவள் விழி உயர்த்தி கேள்வியாக நோக்கினாள்..
“இந்த கதையை நீ பப்ளிக்கேஷனுக்கு அனுப்பும் பொழுது எங்கிருந்து அனுப்பின?” என்று கேட்க, அவள் உடனே யோசிக்க ருக்மணியின் முகம் மனதில் மின்னி மறைந்தது.
“ருக்மணியின் முகவரி. அதாவது நம்ம கம்பெனி முகவரி கொடுத்திருந்தேன்..” என்றவளின் குரலில் ஸ்ருதி குறைந்ததுவிட அவள் அங்கிருந்த படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்..
“அது ரிட்டன் எப்பொழுது வந்தது என்று உனக்கு தெரியுமா?” என்றவன் ஆழ்ந்த குரலில் கேட்க , ‘இல்லையென’ இடமும் வளமும் தலையசைத்தாள்.
“நீ நம்ம கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த ஒருவாரத்திற்கு பின்னாடி என்னோட கைக்கு கிடைத்தது. இதே கதைக்கு அன்று நிறைவுபகுதி எழுதி நான் உனக்கு அனுப்பிய மெயில். அடுத்த சிலநொடியில் நீ எனக்கு அனுப்பியதும் நீதான் தமிழரசி என்று எனக்கு தெரிந்துவிட்டது” என்றவனை அவள் புரியாத பார்வை பார்த்தாள்..
அன்று கொஞ்சம் ஹெவி வொர்க்கில் தனக்கு வந்த மெயிலை அவள் அவனுக்கு அனுப்பியது அவளின் நினைவிற்கு வந்தது..
அவளை கவனிக்காத பிரபாவோ, “வாழ்க்கையில் ஒன்று சேர முடியாத மனம் இந்த கதையிலாவது எழுத்து வடிவில் உன்னோடு சேரட்டும் என்று நான்தான் எழுதி பப்ளிக்கேஷனுக்கு அனுப்பினேன்..” அன்றைய நாளில் அவன் அனுபவித்த வலி அவனின் குரலாக ஒலிக்க அதற்கு மேல் அவளால் அவளின் கால்களுக்கு தடை போட முடியவில்லை.
அவள் ஓடிசென்று அவனை அணைத்துக் கொள்ள, “பனிமலர்..” என்றவனின் விழிகள் கலங்கிட, “நீதான் எந்த தப்புமே பண்ணல இல்ல அப்புறம் எதற்குடா இப்படி கலங்கற? உன்னோட காதல் பொய்யாக போகல இல்ல அப்புறம் எதற்கு நீ கலங்கணும்?” என்றதும், ‘இவளுக்கு உண்மை தெரிந்துவிட்டதா?’ அதிர்ந்து நிமிர்ந்தான் பிரபா..
“ஒரு நிமிஷம்..” அவனைவிட்டு விலகிய சென்ற ஜெயா தன்னுடைய கைக்கு கிடைத்த ஃபைலை அவனின் முன்னே நீட்டி, “இது என்ன தெரியுமா?” என்று கேட்க அவனோ தெரியாது இடமும் வலமும் தலையசைக்க அவனை இமைக்காமல் பார்த்தாள்..
“ நான் உங்கமேல் வைத்த நம்பிக்கை. இன்னைக்கு நீங்க தப்பு செய்யல என்ற உண்மை எனக்கு தெரிந்துவிட்டது..” என்றவளின் கையிலிருந்த ஃபைலை பார்த்தும் அவனுக்கு உண்மை புரிந்துவிட்டது.
“மினியோட மெடிக்கல் ரிப்போர்ட். அதில் அவள்..” என்றதும், “இது எப்படி உன்னோட கையில் கிடைத்தது?” என்றவன் அதிர்ச்சியுடன் கேட்டான்.
அவனிடம் மாலில் நடந்த அணைத்தையும் மறைக்காமல் கூறிய ஜெயா, “பிரபா நீ தவறே பண்ணல என்று இந்த ஃபைல் சொல்லுது. மினிக்கா கன்னி தன்மையுடன்..” என்றவள் அதற்குமேல் பேசாம முடியாமல் போக சந்தோஷத்தில் அவளின் கண்கள் இரண்டும் கலங்கியது..
அவளின் அருகில் வந்த பிரபா அவளை மார்புடன் சேர்த்து ஆதரவாக அணைத்துக்கொள்ள, “ஏண்டா என்னிடம் முன்னாடியே நீ இதை சொல்லல..” என்றவனின் மார்பில் குத்தினாள்..
அவள் கொடுத்த அடிகளை தாங்கிய பிரபாவின் மனம் நிறைந்தது. அவன் எந்த தவறும் செய்யவில்லை என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவனையும் மீறி நடந்திருந்தால் என்ற சந்தேகத்துடன் இருந்தான்.
அவனின் மனம் அதை இல்லை என்று சொன்னாலும் நடப்பவைகள் அனைத்தும் அவனுக்கு எதிராகவே இருந்ததால் அவனால் உண்மையை உணர முடியாமல் போனது..
ஆனால் ஜெயா சொன்னபிறகு அவன் தெளிவாக யோசித்துவிட்டு ஒரு டிடெக்டிவிடம் சொல்லி உண்மையைக் கண்டறிய சொன்னான்.. அதன்பிறகு அவனுக்கு கிடைத்த தகவலில் அன்று மருத்துவமனைக்கு சென்றதும் அங்கே அவர்கள் கொடுத்த ரிப்போர்ட் பற்றிய விவரங்கள் அவனின் கைக்கு கிடைத்தது.
அவனுக்கு உண்மை தெரிந்தும், ‘இந்த விஷயத்தை ஜெயாவிடம் சொல்ல வேண்டும்’ என்று நினைத்தான்.. ஆனால் அதன்பிறகு அவன் அந்த முடிவை மாற்றிக்கொண்டான்..
“உங்களுக்கு இந்த உண்மை தெரிந்த வந்த பின்னாடிதான் ஐ மீன் இப்போ உங்களோட மாற்றத்திற்கு இந்த ஃபைல்தான் காரணம். எங்கே இல்லன்னு என்னிடம் சொல்லுங்க பார்க்கலாம்..” சவால்விட அவன் மௌனமானான்.
அவனின் மௌனமே அவனைக் காட்டிக்கொடுத்துவிட, “தவறு செய்தேன் என்று தலை நிமிர்ந்து சொன்னீங்க. இப்போ மட்டும் என்ன மௌனம்?” என்றவள் விழி உயர்த்தி கேள்வியாக நோக்கினாள்.
அவன் சிலநொடி மௌனத்திற்கு பிறகு, “என் காதலை நீயாக உணரனும் என்று நினைத்தேன். மற்றபடி மறைக்கணும் என்ற எண்ணம் எனக்கு இல்ல மலர்..” என்றவன் நிதானமாகவே..
“இதை மட்டும்தான் என்னிடம் மறைச்சீங்க இல்லையே. இன்னும் இருக்கு” என்றதும், “இன்னும் என்ன இருக்கு?” என்று அவளிடமே கேட்க, “நீங்க என்னை பத்து வருசமாக காதலிப்பது உண்மைதானே” என்றவள் சாதாரணமாக கேட்க, “மலர்” அதிர்ந்தான் பிரபா.
“உன்னோட பனிமலர்..” என்றதும், “எனக்கு தெரியாமல் எப்போ மேடம் அந்த ரூமிற்குள் நுழைஞ்சீங்க” அவன் அவளை நெருங்க, அவளின் இதயத்துடிப்பு எகிறி குதிக்க பின்னாடி நகர்ந்தாள் ஜெயா.
அவன் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவள் இரண்டடி பின்னே நகர, “மலர் நில்லுடி..” என்று சொல்ல முடியாது என்றவள் பின்னாடி நகர சுவற்றில் மோது நின்றுவிட அவளின் பார்வை அவன் மீது நிலைத்தது..
அவளின் இருபுறமும் தன் இரு கரங்களை வைத்து அவளுக்கு அரணாக வைத்து அவளை நகர முடியாமல் செய்ய, “பிரபா..” சிணுங்கலுடன் அழைக்க, “ம்ம்” என்றவனின் பார்வை அவளின் உதட்டில் நிலைத்தது.
அவனின் பார்வையை புரிந்து கொண்ட ஜெயா அவனின் மார்பில் முகம் புதைக்க நினைக்க, அவளின் செயலை தடுத்த பிரபா அவளின் இதழோடு இதழ் பொருத்தினான். இருவருக்கும் மூச்சு முட்டும் வரை அந்த இதழ் முத்தம் நீடித்தது.
அவன் இதழ்பிரித்து நிமிர்ந்து அவளின் முகம் பார்க்க காதலியின் முகமோ செங்காந்தாள் மலர்களுடன் போட்டிபோட, “என்ன கன்னத்தில் ரோஜா பூ எட்டி பார்க்குது..” என்று குறும்புடன் கேட்டவனின் வலக்கரம் அவளின் கன்னங்களை வருடியது..
அவள் சிலிர்த்து விழிமூட, “மலர் விழி திறந்து என்னை பாரு..” அவளோ மறுப்பாக தலையசைத்து விழி மூடி நின்றாள். அவளின் முகத்தில் விழுந்த கற்றை முடியை அவளின் காதோரம் ஒதுக்கிவிட்டு, “அன்னைக்கு எந்த தப்பும் பண்ணல. ஆனால் இன்னைக்கு..” என்றவன் அடுத்து என்ன சொல்ல வருவான் என்று புரிந்து கொண்டவள்,
“ஐயோ வாய் திறக்காதே..” அவனின் பார்வை மீண்டும் அவளின் உதட்டில் படிய, “போடா..” என்று அவனை விலகி தள்ளிவிட்டு திரும்பியவளுக்கு அப்பொழுதுதான் ஹோட்டல் ரூமை கவனித்தாள்..
பெரிய படுக்கையுடன் கூடிய அறையில் எல்லாம் நேர்த்தியாக இருக்க ஜன்னல் வழியாக தெரிந்த இமயமலைகளை பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிய, “பிரபா நீ என்னை எங்கோ கடத்திட்டு வந்துட்ட..” என்றாள்.
அவளின் பார்வையில் ரசனை கூடிட அவளின் பின்னோடு நின்று அந்த இமயமலை தொடரின் அழகை ரசித்த பிரபா, “சிம்லாக்கு கடத்திட்டு வந்துட்டேன்..” என்றவன் புன்னகைத்தான்.
அவளின் பார்வை பனிமலையை ரசிக்க, “கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பனிமலை தொடர்.. என்னோட கைக்குள் என்னோட பனிமலர்..” என்றவனின் உதடுகள் அவளின் காதோரம் ரகசியம் பேசிட அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.
சிறிதுநேரம் நின்று அந்த அழகை ரசித்த ஜெயா, “நான் போய் குளிக்கிறேன்..” என்றவளை அவன் தடுக்கவில்லை.. அவள் குளித்துவிட்டு வந்தபிறகு இருவரும் சேர்ந்து மத்தியான உணவை அறைக்கே வரவழைத்து சாப்பிட்டனர்..
அவளே அவனுடன் பேசிகொண்டிருக்க பிரபா மெளனமாக அவள் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் அந்த அறைக்குள் சென்றது அதன்பிறகு நிகழ்ந்த மாற்றம் அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொண்டாள்.
மாலை பொழுதில் கணவனின் தோள் சாய்ந்த வண்ணம் அவள் அந்த ஊரையே சுற்றிவிட்டு வருவதற்குள் இரவாகிவிடவே டின்னரை முடித்துவிட்டு அறைக்கு வந்து சேர்ந்தனர்.
அந்த அறையின் ஏற்பாடுகளை கவனித்த ஜெயா, “நான்..” என்று தொடங்க, “நீதான் போய் குளிச்சிட்டு இந்த சேலை கட்டிட்டு வா..” என்றான் பிரபா குறும்பாகவே..
“நான் மாட்டேன்..” என்றவள் பிடிவாதம் பிடிக்க, “அப்போ எனக்கும் ஓகே..” என்றவன் அவளை நெருங்கிவர அவனின் கைகளுக்குள் சிக்காமல் குளியறைக்குள் சென்று மறைந்தாள் ஜெயா..
அவனும் சென்று தயாராகி வெளிவர ரோஜாபூக்கள் தூவப்பட்ட படுக்கையின் நடுவே இரண்டு இதயங்கள் இணைந்திருந்தது. அவன் கொடுத்த சேலையைக் கண்டிக்கொண்டு வந்தவளை அவன் இமைக்காமல் ரசித்தான்..
அவளோ நாணத்துடன் தலை குனிந்து நிற்கவே, “பனிமலர்..” என்று மெல்லிய குரலில் அவளை அழைத்ததும் அவள் அவனை கேள்வியாக பார்க்க, “உனக்கு சம்மதமா?” என்றவன் அவளை நெருங்கி இரண்டு கரங்களும் ஏந்திக்கொண்டு படுக்கையை நோக்கி நடக்க, அவள் விழியால் தன சம்மதத்தை தெரிவித்தாள்..
காதலால் இணைந்த இருமனங்கள் இங்கே அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வானமோ விடியலை நோக்கி பயணித்தது.. மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..
அடுத்தடுத்து வந்த நாட்களில் அவர்களின் பொழுது இனிமையாக கழிந்திட அன்று காலையில் மலையின் முகட்டில் உதயமாகும் சூரியனை நின்று ரசித்த மனைவியின் பின்னோடு வந்து அணைத்துகொண்ட பிரபா அவளின் காததோரம் பாடினான்..
“வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது..
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது..
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே..
மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே..
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை படுமே தோடி..
சந்தோஷ சாம்ராஜ்யமே..” என்றவனின் குரல் இனிமையாக ஒலிக்க இமைமூடி அவன் தோள்சாய்ந்தாள் அவனின் பனிமலர்.. அதே காதலுடன் அணைத்துக் கொண்டான் அவனின் பிரபா..
அங்கே ஒரு மாதம் தங்கிவிட்டு அதன்பிறகே இருவரும் பெங்களூர் திரும்பினர்.. அதற்குள் இங்கே பெரிய ரகளையே நடந்து முடிந்திருந்தது..