UVVU27

UVVU27

“ப்ரௌனி என்ன பண்ணுற?”
“எழுந்துட்டுடியா சிமி? அழுங்காம தூக்கிட்டுப் போகலாம்னு நினைச்சேன்”
“இறக்கி விடு ப்ளிஸ், தலை சுத்துது!”
“கதவு வரைக்கும் தூக்கிட்டுப் போறேன். அப்புறம் இறக்கிவிடறேன் சிமி”
அந்த ரூமில் மொத்தம் மூன்று கதவுகள் இருந்தன. வெளியே செல்ல ஒன்று, பாத்ரூம் கதவு ஒன்று. இன்னொன்று பூட்டி இருந்தது. என்ன கதவு என இவள் கேட்கும் போது, பிறகு சொல்கிறேன் என முடித்துவிட்டான் பிரகாஷ். பூட்டி இருந்த கதவின் அருகே அவளை இறக்கியவன், சாவியைக் கொண்டு அதை திறந்து லைட்டை போட்டு விட்டான். எட்டிப் பார்த்த சிமி,
“படிகட்டு மாதிரி இருக்கு ப்ரௌனி. எங்க போகுது இது?” என அதிசயமாக கேட்டாள்.
“மேல போனா தெரிஞ்சிற போகுது” என கைப்பிடித்து அவளை அழைத்து சென்றான். படி ஏறி சென்று அங்கிருந்த ஒற்றைக் கதவை திறந்தவன்,
“வெல்கம் டூ மூன்ரூம் (நிலவறை) மை ஏஞ்சல்” என சிரித்தான்.
சிறிய அறைதான். இருவர் நெருங்கி படுக்கும் அளவுக்கு மெத்தை மட்டும் விரித்திருந்தார்கள். ஹார்ட் ஷேப்பில் அழகிய தலையணைகள் வேறு இருந்தன. மெல்லிய வெளிச்சம் தரும் லைட் அறையை ரம்யமாக காட்டியது. அந்த அறையின் சிறப்பம்சமே வானத்தைப் பார்ப்பதற்கு ஏதுவாக கண்ணாடியில் செய்யப்பட்டிருந்த கூரைதான்.
“வாவ் ப்ரௌனி! டாப் டக்கரா இருக்கு இந்த ரூம்.” குதூகலித்தாள் சித்ரா. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. அடிக்கும் ஒவ்வொரு மழைதுளியும் தங்கள் தலையிலேயே விழுவது போல ஒரு மாயத்தோற்றம்.
அவள் மெத்தையில் அமர்ந்து கொள்ள,
“இரு சிமி, வாசனை மெழுகுவர்த்தி ஏத்துறேன். ரிப்ரெஸ்சிங்கா இருக்கும். சிட்ருஸ் வாசனை ஓகேவா? இல்ல லவெண்டர் வேணுமா?” என கேட்டான் பிரகாஷ்.
“சிட்ருஸ் இஸ் ஃபைன்”
ஏற்கனவெ சிறிய மேசையில் இருந்த மெழுகுவர்த்திகளை கொழுத்தியவன், மேசை ட்ராவரில் இருந்த சிறிய பெட்டியையும், இரண்டு கேன் ட்ரிங்கையும் அவளிடம் நீட்டினான்.
பெட்டியைத் திறந்து பார்த்தவள்,
“வாவ் ப்ரௌனி, கோடிவா சாக்லேட்ஸ். தேங்க் யூ சோ மச்” ஆசையாகப் பிரித்து சாப்பிட்டாள்.
அவள் அருகில் வந்து மெத்தையில் அமர்ந்து கொண்டவன் கேன் ட்ரிங்கை திறந்து குடிக்க ஆரம்பித்தான்.
“உனக்கு சாக்லேட் ப்ரௌனி?” அவனிடம் நீட்டினாள்.
“சாக்லேட் அவ்வளவா பிடிக்காது சிமி. நீ சாப்பிடு. இன்னும் ரெண்டு பாக்ஸ் கீழே ப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன். எல்லோருக்கும் குடு. இந்த பாக்ஸ் உனக்கு மட்டும்.”
“போதும் ப்ரௌனி, நாளைக்கு சாப்பிடறேன்” என்றவள் பெட்டியை மூடி வைத்தாள்.
மெத்தையில் நன்றாக சாய்ந்து படுத்துக் கொண்டவன், அவளையும் இழுத்து தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டான். மழை கொட்டுவதையே இருவரும் கண் கொட்டாமல் பார்த்திருந்தனர்.
“இங்க வெதர் போர்காஸ்ட் அக்குரேட்டா இருக்கும் சிமி. அதனால தான் மழை வரும்னு இந்த ரூம் புக் பண்ணேன். நீ வேலை வேலைன்னு பறந்துகிட்டே இருந்தாலும், சில நிமிடங்களாவது நம்ம வீட்டு ஆர்கிட் பூக்கள் கிட்ட பேசறத பார்த்துருக்கேன். செடில உள்ள நீர் துளிய தட்டி விளையாடறத பார்த்துருக்கேன். என்னை மாதிரியே உனக்கும் ரசிகமனம் இருக்கு. கண்டிப்பா இந்த ரூம் அண்ட் செட்டிங் என்னை மாதிரியே உனக்கும் பிடிக்கும்னு தான் புக் பண்ணேன். பிடிச்சிருக்கா சிமி?”
கண்கள் லேசாக கலங்க அவனை இன்னும் ஒட்டிப் படுத்துக் கொண்டாள் சித்ரா.
“எனக்கு நின்னு நிதானமா எதையும் ரசிக்க நேரம் இருந்தது இல்ல ப்ரௌனி. மாதி இருக்கற வரை , அவ கிட்ட மறைஞ்சி இருக்கனும்னு ரூம் உள்ளேயே இருப்பேன். அவ போன பின்னே, நிக்காத ஓட்டம்தான். வேலை, பிள்ளை, வீட்டு வேலை இப்படின்னு. எனக்காக இதை அரேஞ் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பிரகாஷ். இந்த ரூம், வெளிய கொட்டுற மழை, பக்கத்துல இருக்கற நீ, எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு”
“நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்? இனிமே நீ என் கைவளைவுல நின்னு வாழ்க்கைய நிதானமா அனுபவிக்கலாம் சிமி. இங்க வரப்பெல்லாம் இந்த ரூம் தான் புக் பண்ணுவேன். ஸ்னோ டைம்ல ரொம்ப நல்லா இருக்கும். ஸ்னோ கண்ணாடிய மறைக்கும் போது, கார் வைப்பர் மாதிரி மேல உள்ள வைப்பர் அதை துடைச்சிவிடும். ஸ்னோ பொழியறதும், இது துடைக்கறதும் அப்படியே பார்த்துட்டே இருக்கலாம். ஜனவரி டூ பிப்ரவரி ஸ்னோ சீசன்ல திரும்ப வரலாம் சிமி. எதையும் தனியா அனுபவிக்கறதோட, நமக்குப் பிடிச்ச துணையோட அனுபவிக்கறது தான் அலாதி சுகம்.”
“ஹ்ம்ம்” என்றவள் குளிரில் அவனை இன்னும் நெருங்கினாள். அப்பொழுதுதான் அவன் சட்டை இல்லாமல் வெறும் ஷொர்ட்சுடன் இருப்பதை 
கவனித்தாள் சித்ரா. அவன் நெஞ்சின் ரோமங்கள் இவள் கன்னத்தை குறுகுறுக்க வைக்க, பட்டென எழுந்து அமர்ந்தவள்,
“சட்டை எங்க ப்ரௌனி?” என அவன் முகத்தைப் பார்க்காமலே கேட்டாள்.
அவளுடனே எழுந்து அமர்ந்தவன்,
“நீ குளிருல நடுங்கிட்டு இருந்த, அதனால ஏசிய ஆப் பண்ணேன். எனக்கு வியர்க்க ஆரம்பிச்சிருச்சு. சூடு தாங்கலன்னு சட்டைய கழட்டுனேன். மழை தூரவும், உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்ங்கிற ஆர்வத்துல சட்டைய கூட போட்டுக்க மறந்துட்டேன். இரு கீழ போய் போட்டுட்டு வரேன்”
“பரவாயில்ல, இப்படியே இரு”
“ஆர் யூ ஷூவர்?”
“ஹ்ம்ம்.”
“அப்படின்னா என் முகத்தப் பார்த்து பேசு. ஏன் சுவத்த பார்த்து பேசற?” சிரித்தான் பிரகாஷ்.
“ஓவரா பண்ணாத ப்ரௌனி. நீ சட்டை இல்லாம ஸ்வீம் பண்ணறத நான் பார்த்ததே இல்ல பாரு” கடுப்பில் உண்மையை உளறி வைத்தாள்.
“ஓ! என்னை சைட்டடிக்கிற வேலைலாம் செஞ்சிருக்கியா?”
“தீபாவும் உன் கூட ஸ்வீம் பண்ணுறாளே, அவ பத்திரமா இருக்காளான்னு அப்ப அப்ப எட்டிப் பார்ப்பேன். அவ பக்கத்துல இருக்கற நீ கண்ணுக்கு தெரியாமயா இருப்ப? நான் பார்க்கக் கூடாதுனா, நீ சட்டைய போட்டுகிட்டு ஸ்வீம் செஞ்சிருக்கனும். தப்ப உன் மேல வச்சிக்கிட்டு என்னை கிண்டல் பண்ணாதே” சண்டைக்கு வந்தாள் சித்ரா.
“சரி, சரி. நீ என்னைய சைட்டடிக்கறதுக்காக பார்க்கலன்னு ஒத்துக்கறேன். உன் கண்ணு வேற வழி இல்லாம என் மேல மோதிருச்சு. ஓகேவா?”
“இப்போ சொன்னியே, இது ஓகே” மீண்டும் படுத்துக் கொண்டு மழையை ரசிக்கலானாள். மழையை ரசிக்கும் தன் மனையாளை ரசிக்க ஆரம்பித்தான் பிரகாஷ்.
“இப்போ எதுக்கு இந்த லுக்கு?”
அமர்ந்திருந்தவனை இழுத்துப் படுக்க வைத்தாள் சித்ரா.
“சிமி, இந்த ரோமேண்டிக் சிட்டுவேஷன்ல நீ ஒரு பாட்டு பாடனா எப்படி இருக்கும்?”
“புதினா சட்னில சப்பாத்திய தொட்டு சாப்பிடற மாதிரி கேவலமா இருக்கும்”
“இப்பவும் சாப்பாடு நினைப்பு தானாடி?” சிரித்தான்.
“எப்பவுமே சாப்பாடு நினைப்பு தான் ப்ரௌனி” கலகலவென நகைத்தாள் சித்ரா.
“நீ பாடுனா கேட்க ரொம்ப நல்லா இருக்கும் சிமி. தீபா கூட அமைதியா கேட்பா. நான் கேட்கமாட்டேனா? ப்ளிஸ்” கெஞ்சினானா அல்லது கொஞ்சினானா என அவளுக்கே தெரியவில்லை. தலையை சரி என ஆட்டினாள்.
“ப்ரௌனி, நான் பாடுவேன் ஆனா ஒரு கண்டிஷன்.”
“சரி, சொல்லு”
“நான் பாடற பாட்டோட அர்த்தத்தைப் புரிஞ்சு, அதன்படி நடந்துக்கனும். ஓகேவா?” அவன் நெஞ்சிலிருந்த முடியை தன் கையால் சுருட்டி விளையாடியபடியே கேட்டாள் சித்ரா.
அவள் சாதரணமாக கேட்டாலே எதையும் செய்து கொடுப்பான் பிரகாஷ். இப்படி ஒட்டிக் கொண்டு கேட்டால் முடியாது என்றா சொல்லி விடுவான்?
வார்த்தை வராமல், தன் நெஞ்சின் மேல் கிடந்த மனைவியின் முகத்தை நிமிர்த்தியவன், சரி என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான்.
மீண்டும் அவன் நெஞ்சில் புதைந்து கொண்டவள், இனிமையாக பாட ஆரம்பித்தாள்.
“ஒரே பார்வையடா ஒரே வார்த்தையடா ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் என்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே….
கேட்குதே…
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை”
அவளின் நெருக்கத்திலும், குரலின் உருக்கத்திலும் பிரகாஷிற்கு உடல் சிலிர்த்து அடங்கியது.
“சிமி!” மென்மையாக அழைத்தான்.
அவன் நெஞ்சிலிருந்து அவள் நிமிரவே இல்லை. முகத்தை நிமிர்த்த முயற்சி செய்யவும் இன்னும் அவனிடம் இறுக்கமாக புதைந்தாள்.
“நிமிர்ந்து பாரு சிமி, ப்ளிஸ்” குரலில் குழைவுடன் அழைத்தான்.
மெல்ல நிமிர்ந்தவளின் முகம், சிவந்து போய் கிடந்தது.
“சொல்லு சிமி, நீ பாடுன பாட்டு வரி மாதிரி உன் மனசுல நான் வேர் விட்டு நிக்கறனா?” பதில் தெரிந்திருந்தும் அவள் வாய் வழியாக வரட்டும் என கேட்டான்.
வெட்கம் பிடுங்கி தின்றாலும், அவன் கண்களை நேராக பார்த்தவள் ஆமென தலையாட்டி,
“ஏஜி, மேய்ன் தும்சே ப்யார் கர்தி ஹூன்” என சொன்னாள்.
மனதில் இருந்ததை அவள் பாடும் போதே பாதி மயக்கத்தில் இருந்தவன், ஏஜி என அழைத்து காதலை சொல்லவும் ராஜ போதையில் மிதந்தான்.
அவன் கைகள் இரண்டும் அவளை இறுக்கி இருந்தாலும் வாய் மட்டும்,
“சிமி ஆர் யூ ஷுவர் அபௌட் திஸ்?” என கேட்டது.
அவள் ஒற்றை தலை ஆட்டலில் அவன் உலகமே சுழல்வதை நிறுத்தியது.
“மேரி ஜான், க்யா லக் ரஹி ஹோ மார் ஹி டாலோகே (என்னமா இருக்கற நீ. என்னை கொன்னே போட்டுருவ போ! )” அது தான் அவன் முழுதாய் பேசிய வாய் வார்த்தை.
அடுத்த கணம் என்றும் இல்லாத வேகத்தில் அவன் உதடுகள், அவள் உதடுகளுடன் மோதி நின்றது.  
அதன் பிறகு பேசியதெல்லாம் அவன் உடலும், உதடுகளும் மட்டும் தான். அம்மழை இரவு, அவர்கள் வாழ்க்கைக்கு கொடுத்தது புது உறவு. உதடு எனும் தூரிகை கொண்டு விடிய விடிய முத்தக் காவியத்தை பெண் மேனியெங்கும் வரைந்தான் அந்த முத்த வித்தகன், சிமியின் காதல் ரட்சகன். வான் மழை ஓய்ந்த போதும், இவர்களின் காதல் மழை ஓயாமல் தொடர்ந்தது. காதல் கொடுத்த கேள்விகளுக்கு, விடை தேடி, கிடைத்த விடையில் திருப்தி இல்லாமல், மீண்டும் மீண்டும் தேடி இருவரும் ஓய்ந்த போது ஆதவன் ஆஜராகி இருந்தான்.
தீபாவோ, சித்ராவோ தூக்கத்தில் அசைந்தாலே, விழித்துக் கொண்டு மீண்டும் அவர்களை தட்டிக் கொடுத்து தூங்க வைக்கும் பிரகாஷ், அன்று காலை சித்ரா எழுந்து சென்றதை கூட உணராது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
வெட்கத்தில் அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல், உடைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு குடுகுடுவென கீழே ஓடிவிட்டாள் சித்ரா. சித்ராவின் குரலும் தீபாவின் குரலும் கேட்கவும் தான் உறக்கத்தில் இருந்து எழுந்தான் பிரகாஷ். முகத்தில் சிரிப்புடனே கீழே இறங்கி வந்தவன் காலை, ஓடி வந்து கட்டிக் கொண்டாள் தீபா. குனிந்து தூக்கிக் கொண்டவன்,
“தீபாகுட்டி, குட் மார்னிங்” என்றான்.
அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு எதுவோ செய்வது போல நின்றிருந்த மனைவியை ஆசையுடன் வருடின அவன் விழிகள்.
“சிமி!”
“ஹ்ம்ம்” அப்பொழுதும் திரும்பவில்லை அவள்.
“என்னை பாரு சிமி” மகளுடன் அவளை நெருங்கினான்.
மெல்ல திரும்பியவள், அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. அவள் முகத்தை நிமிர்த்தியவன், அதில் தெரிந்த வெட்கத்தைப் பார்த்து சொக்கிப் போய்,
“மே தும்ஹே ஹமேஷா ஹமேஷா ஐசே ஹி ப்யார் கர்தா ரஹீங்கா சிமி(இப்போது போலவே எப்போதும் உன்னை காதலிப்பேன் சிமி)” காதலாக சொன்னான்.
“ரஹீங்கா சிமி” பின் பாட்டு வந்தது தீபாவிடம் இருந்து.
மகளின் குறும்பில் சித்ராவின் வாய்பூட்டு அகன்றது. மகளை வாங்கிக் கொண்டவள்,
“கோ ஷவர் ஹே ஜி. கானா வேய்ட்டிங் ஹே ஜி” என பாத்ரூமை நோக்கி அவனைத் தள்ளிவிட்டாள். சிரித்தபடியே குளிக்க சென்றான் பிரகாஷ்.
அன்று சிவாவினால் லீவ் எடுக்க முடியாததால், இவர்கள் மட்டும் ப்ளான் செய்த மாதிரி நயாகரா ஃபால்ஸ் பார்க்க கிளம்பினர். நியூ யோர்கிலிருந்து ஆறு மணி நேர பயணம் என்பதால், இரவு அங்கேயே ஹோட்டலில் தங்கிக் கொள்வது என திட்டம்.
சித்ரா மட்டும் அமைதியாக வர மற்றவர்கள் கார் ஓட்டியபடி வந்த பிரகாஷிடம் பேசியபடியே வந்தனர். அங்கங்கே நிறுத்தி சாப்பிட, கொறிக்க என வாங்கி கொடுத்து கொண்டே வந்தான் பிரகாஷ். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தள்ளி தள்ளி போன மனைவியை கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ளவும் தவறவில்லை. 
அவர்கள் நயாகரா நீர்வீழ்ச்சியை அடைந்த போது மாலை ஆகியிருந்தது. கனடா நாட்டின் ஓன்டாரியோ நகரம் மற்றும் அமெரிக்காவின் நியூ யோர்க் நகரத்தில் நடுவில் இருந்தது இந்த நீர்வீழ்ச்சி. இரு நாட்டையும் இணைத்த அந்த நீர்வீழ்ச்சியைக் காண கண் கோடி வேண்டும். அருகில் நெருங்கும் போதே தண்ணீரின் பேரிரைச்சல் செவியில் வந்து மோதியது. பயந்து போன தீபா, பிரகாஷை இருக்கி அணைத்துக் கொண்டாள்.
“ஒன்னும் இல்லடா தீபாகுட்டி, தண்ணீர்தான். கண்ணைத் திறந்து பாருங்க. பிகாஷ் இருக்கறப்ப என்ன பயம்?” சமாதானப் படுத்தினான்.
“மாம்ஸ், கப்பல்ல போலாமா?” ஆசையாக கேட்டாள் நிலா.
“அப்படியே இவள தண்ணில தள்ளிவிட்டறலாம் ஜீஜூ”
“நீ இருக்கற வெய்ட்டுக்கு, அடிக்கற காத்துக்கே பறந்துருவ. இவன் என்னை தள்ளி விடறானாம்! போடா, போடா!”
அங்கே போயும் இருவருக்கும் பிரச்சனை ஓயவில்லை.
கப்பல் ஏறும் முன்னே நனைந்துவிடாமல் இருக்க அவர்கள் கொடுத்த நீல நிற பாலிதின் சட்டையை மனைவிக்கும், மகளுக்கும் அணிவித்தான் பிரகாஷ். மகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டவன், மனைவி ஏறவும் கைக் கொடுத்தான். நிலாவும் அவனது கைப்பற்றியபடியே ஏறினாள். உடலைத் தழுவி செல்லும் குளிர் காற்றும், காற்றினால் அடித்து வரப்பட்டு உடல் நனைத்த நீரும், நடுங்கி போனார்கள் இவர்கள். தீபாவை கவனமாக அணைத்து நின்றிருந்த பிரகாஷை நெருங்கி நின்றனர் அக்கா தம்பி மூவரும் என்னவோ அவனிடம் தான் கணப்பு இருப்பது போல.  
“ஜீஜூ!”
“சொல்லு மணி”
“செம்ம ரொமாண்டிக் ப்ளேஸ்ல இது” புன்னகையுடன் கேட்டான் மணி.
“இப்ப ரொமாண்டிக்கா இருந்தா மட்டும் நீ என்ன பண்ண போற?” வம்பிழுத்தாள் நிலா.
“போடி, நான் ஜீஜூ கிட்ட பேசறப்பலாம் மூக்கு வேர்த்த மாதிரி வந்துரு. இப்ப ஒன்னும் பண்ண மாட்டேன். கண்டிப்பா பெரியவனானதும், என் ஆள கூட்டிட்டு வந்து இந்த சில்லுன்னு இருக்கற நயாகராவுல தான் ஐ லவ் யூன்னு சொல்லுவேன்” சபதமிட்டான் மணி.
“உன் ஆளு யாரு? அந்த பல் செட்டு பவியா? இல்ல இல்ல! பல் செட்டு கவி” பழிப்புக் காட்டினாள் தம்பிக்கு.
“பாருங்க ஜீஜு இவள!”
“ரெண்டு பேரும் கொஞ்சம் சண்டைய நிறுத்துறீங்களா?” அக்காவின் குரலில் அதற்கு பிறகு ஹோட்டலுக்கு போகும் வரை அடக்கி வாசித்தனர் இருவரும்.
பிரகாஷின் தோளில் தூங்கியபடியே வந்த தீபாவை நிலா தம் ரூமிற்கு தூக்க முயற்சிக்கவும், கண் விழித்தவள்,
“அம்மா வேணும். அம்மா, அம்மா!” என அழ ஆரம்பித்தாள். உடல் அசதியிலும், சரியான தூக்கமில்லாததாலும் அழுது அடம் பிடித்தாள் தீபா.
“எங்க கிட்டயே இருக்கட்டும் நிலா. அழவிட வேணாம்” என்றபடி சித்ராவிடம் கொடுத்தான் தீபாவை.
இவர்கள் ரூமில் நுழைந்தவுடன், மகளுக்கு உடம்பு கழுவி, இரவு உடை அணிவித்து தட்டி தூங்க வைத்தாள் சித்ரா. தலையணையில் தலை பட்டதுமே தூங்கி விட்டாள் தீபா. பிறகு ஒரு மோன நிலையிலேயே ஒருவர் பின் ஒருவர் குளித்துவிட்டு வந்து படுத்துக் கொண்டனர் கணவன் மனைவி இருவரும்.
“சிமி!”
“ஹ்ம்ம்”
“இன்னிக்கெல்லாம் ஏன் என்னை நிமிர்ந்து கூட பார்க்கல?” ஆதங்கமாக கேட்டான் பிரகாஷ்.
“அது, பார்க்க முடியல ப்ரௌனி”
“அது தான் ஏன்? நேத்து நடந்தது பிடிக்கலையா?”
“அப்படிலாம் ஒன்னும் இல்ல!” அவசரமாக மறுத்தாள் சித்ரா.
“அப்போ ஏன் என்னைப் பார்க்கல?” பிடிவாதமாக கேட்டான்.
“எனக்கு கொஞ்சம் கவலையா, ஒரு மாதிரி அன்னீஷியா இருந்தது கப்பூரு”
“ஏன்?” தீபாவின் மறுபக்கம் அமர்ந்திருந்தவன், எழுந்து அமர்ந்திருந்தான்.
சித்ரா படுத்தவாக்கிலே மகள் முகத்தைப் பார்த்தபடி,
“நீ செஞ்சு வச்ச கிரேக்க சிலை மாதிரி வெள்ளயா கிண்ணுன்னு, அழகா இருக்க ப்ரௌனி. உன் உடம்ப பாரு, என் கை பட்ட இடமெல்லாம் எப்படி சிவந்துருக்குன்னு! நீ கொஞ்சம் கருப்பா, கொஞ்சூண்டு அசிங்கமா இருந்திருக்கலாம் கப்பூரு.”
சிரிப்பைக் கஸ்டப்பட்டு அடக்கியவன்,
“இப்ப நான் அழகா இருக்கறதுல உனக்கு என்ன பிரச்சனை?” என கேட்டான்.
“உன் லெவல்கு நான் இல்லையே! வெள்ளையா இருக்கேன். பார்க்க ஏதோ பரவாயில்லாத மாதிரி இருக்கேன். அது மட்டும் தான் ப்ளஸ். என்னோட ஹைட்டு, வெய்ட்டு, தழும்புகள் இருக்கற என்னோட வயிறு இப்படி நிறைய மைனஸ் என் கிட்ட இருக்கு. பயமா இருக்கு ப்ரௌனி, எங்க உனக்கு நான் கசந்துருவனோன்னு” கண்ணீரை உள்ளுக்குள் இழுத்தாள் சித்ரா.
அமைதியாகவே அவள் சென்னதை கேட்டவன், எழுந்து கட்டிலை சுற்றிக் கொண்டு அவள் புறம் வந்தான். அவளை எழுப்பி, தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன்,
“பாகல் (பைத்தியம்)! நீ அழகு இல்லைன்னு யாருடி சொன்னது? இந்த உலகத்துலயே நீ மட்டும் தான் அழகு. அன்பை மட்டுமே கட்டுற இந்த நீள் விழி, கோபத்தைக் கூட க்யூட்டா காட்டற இந்த மூக்கு, மனசுல சோகம் இருந்தாலும் மத்தவங்கள சிரிக்க வைக்கிற இந்த வாய், என்னை வந்து கடிச்சு பசியாறுன்னு அழைக்கிற இந்த ஆப்பிள் கன்னம் இதெல்லாம் இந்த உலகத்துல எவளுக்கு இருக்கு? நீ குண்டா இருந்தாதான் அழகு சிமி செல்லம். கொழுகொழுன்னு பொம்மை கணக்கா நீ இருக்க தெரியுமா? எனக்கு, மெத்தை மாதிரி என்னை தாங்கிக்கற இந்த சிமி மட்டும் போதும் ஏழேழு ஜென்மத்துக்கும். என்னால ஒல்லி பெல்லி ஆளுங்கள கட்டிப் பிடிக்கறத கனவுல கூட நினைக்க முடியாது சிமி. இப்படி கும்முன்னு ஒரு வைப் இருக்கறப்ப, எந்த மடையனாச்சும் வேற பொண்ண நினைச்சுப் பார்ப்பானா? ஐ லவ் யூ சிமி. காதல்ன்ற உணர்வு எனக்கு வந்தது உன்னோட மட்டும் தான். தயவு செஞ்சு இப்படிலாம் மனசுக்குள்ள போட்டு உளப்பிக்காத சிமி. என்னால தாங்க முடியாது. உன் நிம்மதிக்கு வேணும்னா, நானும் கொஞ்ச நாளைக்கு எக்சர்சைஸ் செய்யாம, தொந்தி வச்சிக்கவா?” நிஜமாகவே கேட்டான்.
“ஒன்னும் வேணாம்.”
“அப்போ, வெயில்லயே நின்னு கருப்பா ஆகிறட்டா?”
“அதுவும் வேணாம்”
“அப்போ நான் என்னதான்டி செய்யட்டும்?”
“இப்போதைக்கு என்ன லவ் பண்ணு. அது போதும்” அணைப்பிலிருந்து அவளை விலக்கி நிறுத்தினான் பிரகாஷ். தீபாவின் அருகில் சென்றவன், அவளை சுற்றி தலையணைகளை அடுக்கினான். பின் மனைவியை நெருங்கியவன், அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டான்.
“எங்க போறோம் கப்பூரு”
“வேற எங்க, பாத்ரூம்கு தான். இந்த ஹோட்டல நிலவறை இல்லையே!”
“அடச்சீ பாத்ரூம்கா?”
“என்னடி சீன்னு சொல்லிட்ட! நம்மள மாதிரி புள்ளை குட்டி உள்ளவங்களுக்கெல்லாம் பாத்ரூம் தான் காமனின் பள்ளியறை.” பாத்ரூம் கதவை திறந்தவன், அவளை ஷவர் அடியில் நிறுத்தி வைத்து, தண்ணீரை திறந்துவிட்டான்.
“ஏய், தண்ணிய ஏன் திறந்த கப்பூரு? குளிருதுல.”
“குளிரை அணைக்கத்தான் நான் இருக்கனே சிமி. இப்போ வேம்பாயர்(vampire) கிஸ் குடுக்கவா?” அவள் கழுத்தை நோக்கிக் குனிந்தான் பிரகாஷ்.
(அதுக்கு மேல சீன் கேட்டா, கப்பூரு கட்டையிலேயே அடிப்பான். பாத்ரூம் கதவை வேற சாத்திட்டான்! நம்மள சாத்தறதுக்குள்ள, டீசண்டா கிளம்பிருவோம்)
மறுநாள் காலையில், குளிக்க சென்வதற்கு முன்,
“சிமி! என்னோட ஆபிஸ் பேக்குல லேப்டோப் இருக்கு. எடுத்து சார்ஜ் போடு ப்ளிஸ். ஒரு ஈமெய்ல் ரிப்ளை செய்யனும்.” என சொன்னான்.
பேக்கை திறந்து லேப்டாப்பை எடுத்தவள், சார்ஜ் போட்டு திரும்புவதற்குள் அதில் இருந்த பைல்களை வெளியெ எடுத்து இறைத்துப் போட்டிருந்தாள் தீபா.
“ஏய், என்னடி பண்ணி வச்சிருக்க?”
“மிக்கி மவுஸ் ட்ரோ பண்ண பேப்பர் தேடுனேன்மா” அம்மாவின் குரலில் தான் செய்தது தப்பு என தெரிய பயந்தவாறு நின்றிருந்தாள் தீபா.
“செய்யறதெல்லாம் குரங்கு சேட்டை. எல்லாம் இம்போர்டண்ட் டாக்குமேண்ஸ். நான் அடுக்கி வைக்கிற வரைக்கும் ஒழுங்கா போய் கட்டில்ல உட்காரு” மகளை ஏசியவள், பத்திரங்களை அடுக்க ஆரம்பித்தாள். அதில் ப்ரைவட் அண்ட் காண்பிடேன்ஷியல் என இருந்த கவர் அவள் கருத்தைக் கவர்ந்தது. அதில் கார்த்திகை தீபா என எழுதி இருக்கவும், பிரித்துப் பார்த்தாள். பார்த்தவள், கண்கள் நிலைக் குத்த அப்படியே நின்றிருந்தாள். பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டுக் கூட அவள் அப்படியே தான் வேறோடி நின்றிருந்தாள்.
பாத்ரூமிலிருந்து வந்த பிரகாஷ், இன்றும் தனக்கு முதுகு காட்டி நிற்கும் மனைவியை வம்பிழுக்கும் நோக்கத்துடன் பின்னால் இருந்து அவளை அணைத்தான். அவள் கழுத்து வளைவில் வாசம் பிடித்தவன் கையில் கண்ணீர் துளி பட்டு சிதறியது. பதட்டத்துடன் அவளை தன் புறம் திருப்பியவன், கண்களில் கண்ணீர் வழிய அவனை உறுத்து விழித்த படி நின்ற மனைவியைக் கண்டு திடுக்கிட்டான்.
“சிமி!”
“செத்துட்டா சிமி!” கதறினாள் சித்ரா.
(தொடர்ந்து உன்னோடுதான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!