Uyirodu Vilaiyadu – 1

Uyirodu Vilaiyadu – 1
(ஒரு நாட்டினையே உள்ளிருந்து அழிக்கக்கூடிய ஆற்றல், organised crime/ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உண்டு. எல்லைகள் தாண்டிய பிரச்சனையாக, உரு எடுத்துக் கொண்டிருக்கும், இதன் முக்கிய நோக்கம் லாபம் மட்டுமே!…
ஆவணப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் முக்கிய வடிவங்கள்- சமக்ளிங்:– போதைப் பொருள் கடத்தல், மனித கடத்தல், சட்ட விரோத ஆயுதக் கடத்தல், நிதி மோசடி, வரி ஏய்ப்பு, இணைய மோசடி, பதிப்புரிமை மீறல் /copyrights violation, கள்ளநோட்டு, forgery, சர்வதேச கார் திருட்டு வளையங்கள், விபச்சாரம், ஆபாச படம். கான்ட்ராக்ட் கொலைகள், பாஸ்போர்ட் மோசடி, சுகாதார மோசடி/healthcare fraud, ரியல் எஸ்டேட் மோசடி, காப்பீட்டு மோசடி. மிரட்டிப் பணம் பறித்தல்/ extortion, protection money. இந்த லிஸ்ட் இன்னும் நீளம்.)
அத்தியாயம் -1
வருடம்:- 2015
இடம்:- முகப்பேர், சந்தான
கோபால கிருஷ்ணர் ஆலயம், சென்னை.
‘கிருஷ்ணா!… ஜனார்தனா!…
ஹரே கிருஷ்ணா!… ஜனார்தனா
யது நந்தனா!… கிருஷ்ணா!..
மதுசூதனா!…
கோபிகா வல்லபா!…. ராதா ரமணா!….’ என்ற பாடல், பாடகி, ‘அனுபமா’ குரலில், அந்தக் காலை வேளையில், முகப்பேரில் அமைந்து இருந்த, ‘சந்தான சீனிவாச பெருமாள் கோயில்’ பிரகாரத்தில் ஒலித்து, கேட்பவர் மனதை, தாலாட்டிக் கொண்டு இருந்தது.
பாடகி அனுபமா, ‘கவிஞ்சர் முகமது ரஃபிக்’ அவர்களின் வழிவந்தவர்.
அந்தப் பாடல் ஆரம்பிக்கும் போதே அங்கு வந்து நின்ற, ஓலா கேப்பிலிருந்து இறங்கினார்கள் சம்யுக்தாவும், அவள் தோழி ஹேமாவும்.
அனுபமா தன் தெய்வீக குரலால், அந்தக் கிருஷ்ணை கொஞ்சி அழைத்துக் கொண்டிருக்க, அந்தத் தெய்வீக குரல் வளத்தைக் கேட்டு, கண்ணை மூடிக் கோயிலின் வாயில் அருகே நின்று கொண்டிருந்த சம்யுக்தாவின் மனதில், பாடலின் தாக்கம் அப்பொழுதும் இருந்தது.
முகப்பேர் ஒரு காலத்தில், ‘மக பேரு’ அதாவது, ‘குழந்தை வரம் ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்ற பெயரே மருவி, இன்று, ‘முகப்பேர்’ என்று அழைக்கப்படுகிறது.
‘சந்தான சீனிவாச பெருமாள், திருக்கோயிலின் நாயகனாக அருள் பாலிக்கும், 650 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், தமிழில், ‘மஹா பேரு, உலகத்தில் மிகப் பெரிய பேரு/ செல்வம், குழந்தை செல்வம், அந்த வரத்தை, அளிக்க இறைவன் கோயில் கொண்டுள்ள இடம்’ என்று அழைக்கப்படும் திருத்தலம்.
சந்தான ஸ்ரீனிவாசரின்,9.5 அடிஉயர சிலையை, காலை நேர கற்பூர ஆர்த்தியின் ஒளியில் காண, ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனின் அனைத்து கண்களால் பார்த்தாலும் போதாது என்றே நினைக்கத் தூண்டும்.
பொழுது, புலர்ந்தும் புலராத அந்தக் காலை வேளையில், கோயில் நடை திறக்கப்பட்டு, அப்பொழுது தான் சுத்தப்படுத்தி கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் பாடல், இன்னொரு பக்கம் கோயில் வளாகத்தில் கூடு கட்டியிருக்கும் பறவைகளின் இசை கச்சேரி, இன்னொரு பக்கம் இளங் காலையின் மெல்லிய காற்று பூக்கள், துளசி, அபிஷேக வாசனை திரவியங்களின் பரிமள சுகந்தத்தை சுமந்து, தேகத்தை வருடிச் சென்று, மனதை கொள்ளை கொண்டிருந்தது.
காலை வேளையில், கோயிலுக்குள் நுழைந்தால் மட்டுமே, அனுபவிக்க முடிய கூடிய, ஏகாந்த நிலை அது.
கண்மூடி நிற்கும்போது,‘நாம் என்ற சுயமே காணாமல் போய் விடும்’ மந்திரஜாலம் நடக்கும் நிலை.
அந்தச் சூழ்நிலையைக் கண் மூடி ரசித்தவாறு சற்று நேரம் நின்று இருந்தாள் சம்யுக்தா, மணப்பெண் கோலத்தில்.
சம்யுக்தா!…
ஐந்தடி நான்கு அங்குல ரோஜா, வெண்ணெய், ளிங்கு கலந்துசெய்த சிலை அவள்.
ஐம்பத்தி நாலு கிலோ தங்க பதுமை.
சட்டென்று பார்க்க நடிகை, ‘கீர்த்தி சுரேஷ்’ சாயலில் இருப்பவள்.
வயது இருபத்தி ஐந்திலிருந்து, இருபத்தி ஏழுக்குள் இருக்கலாம்.ஆனால், நிச்சயம் அவளைப் பார்ப்பவர்களுக்கு இருபதின் தொடக்கத்தில் இருப்பவள் என்றே சொல்லும் வண்ணம் இருந்தாள்.
தங்க நிற பட்டுப் புடவையில், தங்க மயிலாய் இருந்தவளை, அங்கு வருவோர், போவோரின் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த உடை அவளுக்கு அழகாய் இருக்கிறதா, இல்லை அவளால் அந்த உடை அழகாய் தெரிகிறதா என்று ஒரு கணம் திகைக்கத் தான் தோன்றும்.
பக்கத்து வீட்டு பெண்ணைப் பார்ப்பது போன்ற, ‘ஹோமலி லுக்’ அவளிடம்.
அவளின் அழகில் மென்மை, ஒரு தெய்விகத்தன்மை இருந்தது. மனதை குளிர வைக்கும் இயற்கையான அழகு அது.
தேவையற்ற செயற்கை ஒப்பனை பூச்சுகள் அற்று, மஞ்சளில் மிளிரும் அழகு காவியம் சம்யு.
அவளிடம் இருந்த தெளிவு, நேர்மை, தன்னம்பிக்கை, தையும் எதிர் கொள்ளும் ஆற்றல், நேர்கொண்ட பார்வை, அந்த அழகினை பன் மடங்கு அதிகரித்து காட்டியது என்னவோ உண்மை.
சம்யு கண் மூடி நின்றிருக்க, அவள் அருகில் இருந்த ஹேமா, ‘ஒன்றை மணி நேரம் தாமதம் ஆகி விட்டதே’ என்ற பதட்டத்தில் இருந்தாள்.
ஹேமா சட்டென்று பார்க்க, ‘நடிகை நடிகை பூர்ணா’ போல் இருந்தாள்.
ஹேமா, சம்யுக்தாவின் வீட்டில், சம்யுக்தாவுடன் தான் தங்கி இருக்கிறாள்.
கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரமாய், அவர்களைச் சுற்றலில் விட்டது, சென்னையின் அன்றைய சூழ்நிலை.
ஹேமா போலவே சம்யுக்தாவும் பதட்டத்தில் தான் இருந்தாள் என்றாலும், அதை வெளியே காண்பிக்காமல், கண்ணை மூடிக் கோயில் வாயிலில் நின்று, அந்த அதிகாலையை ரசித்த தோழியைக் கண்டு, வழக்கம்போல் வியந்து நின்றாள் ஹேமா.
எதற்குமே பதட்டப்படாத, சூழ்நிலைகளை அலசிஆராய்ந்து, அதற்கு ஏற்பத் தன்னை பொறுத்தி கொள்ளும் தன்மை கொண்டவள் சம்யுக்தா.
எதற்குமே கலங்காத அவளின் அந்தத் துணிவு, மரணங்களைத் தினமும் ஏதாவது ஒரு வகையில், ஏதாவதொருரூபத்தில் கண்டு கொண்டே இருப்பதால் கூட இருக்கலாம்.
சம்யுக்தா ஒரு மருத்துவர்.
Trauma கேர் அண்ட் எமெர்ஜென்சி மெடிசின்/emergency medicine அவளது ஸ்பெஷாலிட்டி.
நீண்டகால disability அல்லது மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட, எந்தவொரு காயமும், ‘trauma அண்ட் எமெர்ஜென்சி’ என்ற மருத்துவ துறையின் கீழ் வரும்.
சம்யுக்தா மரணத்திற்கும், வாழ்விற்கும் நடுவே நின்று, உயிர்களைக் காக்கும், trauma கேர் மருத்துவர்.
split second decisions/நொடிகளில் முடிவுகளை எடுக்க வேண்டிய, உயிர் எடுக்கும் எமனையே தடுத்து நிறுத்தும் சக்தியுள்ள மருத்துவ பதவி வகிப்பவள்.
blunt போர்ஸ்/force’ என்று சொல்லப்படும் உயிர்க்கு ஆபத்தை விளைவிக்கும் தாக்குதல்கள், மோட்டார் வாகன விபத்துக்கள், கத்தி குத்தல், அரிவாள் வெட்டு காயங்கள், துப்பாக்கிசூட்டுக் காயங்களால் ஏற்படும்ஆபத்திற்கு, தகுந்த மருத்துவ உதவி அளிப்பது இவர்கள் வேலை.
‘கோல்டன் ஹவர்/golden hour, என்று மருத்துவ துறையில் சொல்லப்படும்,உயிர் போகும்அந்தக் கடைசி நொடியில்,அது நிகழாமல் தடுக்க போராடும் யுத்த களம்.
இந்தத் துறைகள் கொண்ட மருத்துவ மனைகள், ‘trauma centres’ என்று அழைக்கப்படும்.
இங்கு Trauma surgeons, Neurosurgeons, Orthopedic surgeons, Cardiac surgeons, Radiologists, Registered nurses, ரத்த நிபுணர்கள், அனஸ்தீஜியலிஸ்ட் இருபத்தி நான்கு மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள்.
இந்த வார்டில் உயிருக்குப் போராடி கொண்டு இருப்பவருக்கு முதல் உதவி கொடுத்த பிறகே, மேற்கொண்டு தேவையான அறுவை சிகிச்சையோ, மேலும் ட்ரீட்மென்ட், ஆபரேஷன் தியேட்டர்களில் நடக்கும்.
‘1st line of defence’ என்று அழைக்கப்படும் எமெர்ஜென்சி மருத்துவ களம்.
எனவே அந்த ஒன்றரை மணி நேர தாமதம், சம்யுக்தாவிடம் அதிக பதட்டத்தை ஏற்படுத்தவில்லை.
‘தங்கள் பதற்றத்தை வெளியே காட்டி கொண்டால் மட்டும் என்ன, கால சக்கரம் பின் நோக்கிச் சுழன்று,‘ அர்ஜுன் முதல்வன் படத்தில்’ சொல்வது போல், ரிவேர்ஸ் பட்டன் வேலை செய்யப் போகிறதா என்ன?.. நம்மை மீறி நடந்து விட்ட ஒன்றை கட்டுப்படுத்தும் ஆற்றல் நம்மிடம் இல்லாதபோது, சிந்திய பாலுக்கு, மனதை வருத்திக் கொள்வது மடத்தனம்.’ என்று காரில் வரும்போது, சம்யுக்தா சொல்லியது நினைவிற்கு வர, ஹேமா தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.
ஹேமாவும் மருத்துவர் தான் என்றாலும், இருவரும் ஒன்றாய் ஒரே தனியார் மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் தான் வேலை பார்க்கிறார்கள் என்றாலும், ஹேமா மகப்பேறு மருத்துவர்.
சம்யுக்தவின் துறைபோல் ‘அட்ரீனலின்/adrenalin அதிகமாய் செயல்படும் துறையல்ல. அடுத்த நொடி மரணம், ஒரு உயிர் இறப்பதும், இனி வாழ்வதும் தன் கையில் என்ற நிலையில் போராடும் நிலை அல்ல.
சில ரிஸ்க்கான பிரசவம் ஹேமா பார்த்திருக்கிறாள் என்றாலும், அது மாதிரி கேஸ் எல்லாம், இருநூறில் ஒன்று தான், அப்படி ஹேமாவிடம் வரும்.
ஆனால், சம்யுக்தாவிற்கு வரும் கேஸ் எல்லாமுமே நொடிதோறும் உயிரைக் காப்பாற்ற ஓடும் ஓட்டம் மட்டுமே!.. அதுவும் மரணத்தின் விளிம்பில் நிற்கும் உயிர்கள்.
பதட்டபட வேண்டிய சம்யுக்தாவே, அவ்வளவு நிதானத்துடன் இருக்கும்போது, தான் செய்தது சற்று ஓவராக ஹேமாவிற்கே தெரிய, ஒரு அசட்டு சிரிப்பொன்றை சம்யு பக்கம் வீசினாள்.
ஆம், அன்று அந்தச் சந்தான கோபால கிருஷ்ணர் கோயிலில் சம்யுக்தாவிற்கு தான் திருமணம்.
காலணிகளை அவர்களுக்குத் தெரிந்த பூக்கடையில் விட்டுவிட்டு, உள்ளே செல்ல முயன்றவர்களை தடுத்தது பூக்கடை அக்காவின் குரல்.
“கண்ணுகளா!…. பொறுமையா போங்க… பெரிய ஐயருமாரே இப்போ தான் வந்தாரு… கோயிலும் இப்ப தான் திறந்தாங்க.
ராத்திரில இருந்து ஊர் முழுக்க போலீஸ் கெடுபிடு ஜாஸ்தியா இருக்குல்ல…. அதான் இப்படி இன்னைக்கு எல்லாருமே லேட்டு. என்னவோத்தா காலம் கெட்டு போயிருக்கு போ…” என்றார் அவர்.
அப்பொழுது தான் நிம்மதி பெருமூச்சு வந்தது அந்தப் பெண்களிடமிருந்து.
“தேங்க்ஸ் அக்கா… கண்டிப்பா முகூர்த்த நேரத்திற்கு வந்திடணும் அக்கா.” என்றாள் சம்யுக்தா.
“என்ன சம்மு, இப்படி சொல்லிட்டே!… உங்க ஆத்தா, கொடுத்த வாழ்க்கை இது… உன்ர கல்யாணத்தை பார்க்கத் தான், அதுக்கு கொடுத்து வைக்கலை…” என்றவர், சம்யுக்தா முகம் கசங்க,
“நா ஒரு கூறு இல்லாதவ!… கல்யாண நாள் அதுவுமா புள்ள முகத்தை வாட வச்சிட்டேன். உன்ர ஆத்தா, மேல இருந்து உன்னை வாழ்த்திட்டு தான் கண்ணு இருக்கும் உள்ளாரா போ…” என்றார்.
ஒரு சில சமயங்களில் இதுபோல் அன்பும், ஆறுதல் வார்த்தைகளும் கூட வலியைக் கொடுத்து விடும். சம்யுக்தாவின் முகம் வேதனையில் கசங்க, ஹேமா அவள் தோளில் ஆறுதலாய் கை வைத்தாள்.
சம்யுக்தாவின் கலங்கிய கண்கள், தன் முன்னே எழுந்து நின்ற கோயில் கோபுரத்தில் நிலைத்தது.
‘ஏன்?….’ என்ற விடை தெரியா கேள்வியொன்று, சம்யுக்தா மனதை கசக்கி பிழிய ஆரம்பித்தது.
இந்தக் கேள்விக்கான விடை, உலகில் யாரிடமும் இல்லை என்பது தான் நிதர்சனம்.
‘கடவுள் எல்லா இல்லங்களிலும் இருக்க முடியாது என்று தானே, தன் உருவில், அன்னையை ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்து இருப்பதாய் சொல்வார்கள்.
அப்படி கடவுளின் மறுபதிப்பாய், அன்னையை கொடுத்து விட்டு, எல்லா அன்பையும் பொழிய வைத்து, இப்படி திடீர் என்று உயிரானவர்களை பறித்துக் கொள்ளும் விளையாட்டுக்கு, விடை தெரியாமல் தான் பல ஞானிகள், சித்தர்கள் இருக்கிறார்கள் என்னும்போது, ஆயிரம் ஆசை, கனவுள்ள சாமானிய பெண்ணான தனக்கு, உலகையே படைத்தவனின் திருவிளையாடலின் பின் உள்ள சூட்சமம் புரிந்து விடுமா என்ன!…
அன்னை!…
உலகத்தில் உள்ள அனைத்தையும், ஒரு தராசில் நிறுத்தினாலும் ஒப்புமை கூற முடியாத உன்னதம்.
ஒரு உயிரை உலககிற்கு கொண்டு வரும் கற்பக தரு.
கண் முன்னே நடமாடும், உயிருள்ள தெய்வம்.
அன்பை மட்டுமே கொடுக்கத் தெரிந்த, பெற்ற பிள்ளைகளின் நன்மையை மட்டுமே நாடும், அட்சய பாத்திரம்.
அன்பை, அக்கறையை அள்ளிக் கொடுப்பதில் கடையெழு வள்ளல்களை விட, மேலான உயிர்.
கருணையின் சிகரம்.
பொறுமையின் உறைவிடம்.
பசிக்கு உணவு தருவதில் அன்னபூரணி.
அரிச்சுவடி சொல்லிக் கொடுத்த சரஸ்வதி…’
‘மனுஷே தேவோ சொரூபினே!…’ என்று வாழும் தெய்வமாய், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தாய்….’ என்று தன் எண்ணத்தில் உழன்றவளின் காதுகளில், அருகில் இருந்த டீக்கடையிலிருந்து வந்த பாடல், மேலும் கண்ணீரை சுரக்க வைத்தது.
இசையா!…
இசையோடு கலந்த அந்தப் பாடலில் உள்ள உயிர்ப்பா!…
இல்லை அதில் பொதிந்துள்ள ஆழ்ந்த பொருளா!…
ஏதோவொன்று சம்யுக்தாவை, அடுத்த அடி எடுத்து வைக்க விடவில்லை.
‘அந்தத் தெய்வம் அது !….
தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாயவளும்
சாமிக்கும் மேல தான்.
வெறுங்கைய வீசிக் கொண்டு,
விறகு சுமந்து விட்டு,
இரவா!… பகலா!…
தினம், தினம் உளைச்சதும்
சருகு பொறுக்கி வந்து,
சாதம் வடிச்சுத் தந்து,
பசியே!….
தெரியா மகனா வளர்த்ததும்…
எத்தன தாயுங்க!….
நம்ம தமிழ் நாட்டிலே?
என் தாயி அவளப் போல்
யாரு இந்த ஊரிலே?
தியாகி!…. யாரு தியாகி
யாரும் இல்ல போடா…
தாயின் கால வணங்கிக்
கும்பிட்டுட்டு வாடா…
அவ தான் கோயில்…
அவ தான் உலகம்…
மண்ணில் வரும் செடி கொடிகள்
எவ்வளவு வகைகள் தான்?
மரமோ!… கொடியோ!…
தண்ணி மட்டும் ஒண்ணே தான்
பல வித மரங்கள் என்ன?
மரத்தில பழங்கள் என்ன?
நிறத்தில், ருசியில்
ஒவ்வொண்ணும் வேறதான்
பழமாய் பழுத்ததால்…
மிளகாய் இனிக்குமா?
காயாய் இருப்பதால்…
கொய்யா கசக்குமா?
நல்ல வயித்தில் பொறந்தா
நல்லவனே தாண்டா!…
கெட்டது செய்யமாட்டான்
வல்லவனே தாண்டா!…
அவனே மனிதன்
அதை நீ உணரு
பெத்த மனசு
சுத்தத்திலும் சுத்தமடா
இந்தப் பிள்ளை மனசு
பித்தத்திலும் பித்தமடா
தெய்வம் அது!…
தாயுக்கும் கீழ தான்
எந்தன் தாயவளும்
சாமிக்கு மேல தான்….’ என்ற வரிகள் நெஞ்சை நிறைக்க,
https://www.youtube.com/watch?v=o6pEGz6Uwh8
‘தன் வீட்டில் இருந்த, அந்தத் தாய் என்னும் தெய்வம் இல்லாமல் போனதேன்!…
‘ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் மீள்வதில்லை’ என்ற உண்மை புத்திக்கு புரிந்தாலும், ‘விதி’ என்று ஆயிரம் சமாதானம் செய்து கொண்டாலும், ஈடுகட்டவே முடியாத இழப்பு அல்லவா, ஒரு அன்னை குடும்பத்தை விட்டு மறைவது?…’ என்று எண்ணி, கண்களில் நீர் வழிய நின்ற தோழியை, எப்படி தேற்றுவது என்று வழக்கம்போல் புரியாதவளாய் தோளை அழுத்திக் கொடுத்தாள் ஹேமா.
“சம்யு!…. இந்த உலகத்தில் பிறந்த எல்லோரும், எக்ஸ்பயரி/ expiry தேதியோடு தான் பிறக்கிறோம். சிலர் முன்னாடி போயிடுறாங்க… பின்னால் நாமும் செல்லத் தான் போகிறோம்… மக்கான நேரம் வரும் வரை, விட்டுப் பிரிந்தவர் பெருமைப்படும் வண்ணம், அவரின் மகளா இவர்!…’ என்று ஊரே வியக்கும் வண்ணம் வாழ்வதில் தான், இறந்தவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இருக்கிறது சம்யு…
ரோட்டில் நின்னுட்டு கண் கலங்கிட்டு இருக்கே!… அதுவும் நல்ல நாள் அதுவுமாய்… கண் கலங்கிட்டு இருந்தா, உன் அம்மாவுக்குச் சந்தோஷமாய் இருக்குமா என்ன?… கண்ணைத் துடை சம்யு…
ஆன்ட்டி எங்கேயும் போகலை… உன் கூடத் தான் இருக்காங்க… ஏற்கனவே லேட் ஆகிடுச்சு… உள்ளே வா…” என்றவள் தோழி சமாளித்து கொண்டாள் என்று தெரிந்ததும், அவள் முகத்தைத் துடைத்து, பருகத் தண்ணீர் கொடுத்து, அவள் கைப் பிடித்துக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றாள்.
உள்ளே வந்த இருவரையும் பார்த்த தலைமை ஐயங்கார் கேசவ மூர்த்தி “அட… வா சம்யுக்தா… இப்போ தான் உன்னைப் பத்தி நினைச்சிட்டு இருந்தேன்!…
உனக்குத் தான் போன் செய்யச் சொல்லலாம்ன்னு வந்துட்டு இருக்கேன். நீயே வந்துட்டே… ஆயுஷ்மான் பவ…. வழியிலே நோக்கு தொல்லை ஒன்றுமில்லை தானே…?” என்றார் பதட்டத்துடன்.
சம்யுக்தா, கேசவ மூர்த்திக்குப் பதில் சொல்வதற்குள், கணவன், மனைவியாய் தம்பதி இருவர், அவர்களிடம் வந்து பேச ஆரம்பித்தார்கள்.
“நல்லவேளை வந்துட்டே சம்யுக்தா….” என்றார் அந்தக் கோயில் க்ளெர்க் மணிகண்டன்.
உடன் அவரின் சகதர்மினி கவிதா.
“வாக்கண்ணு… நல்லவேளை வந்துட்டியா!…. நானே இவர் கிட்டே சொல்லிட்டு இருந்தேன்…
நாமளே போய்க் கூட்டிட்டு வந்துடலாம் என்று… ஆனா, வழி முழுக்க போலீஸ் கெடுபிடி பார்த்து, மனசு பதறிப் போச்சு… நாங்களே வந்து சேர, படாதபாடு பட்டுட்டோம். இதுல எங்கே வந்து, உன்னைக் கூட்டிட்டு வரதுன்னு கவலையா போச்சு.” என்றார் கவிதா.
“போலீஸ் தான் அங்கங்கே நிறுத்திச் செக் செய்தாங்க… அதான் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஆகிடுச்சு. பிரச்சனைன்னு வேற எதுவும் இல்லை…” என்றாள் சம்யுக்தா.
“போலீஸ் கெடுபிடியில் மாட்டிண்டு, நாங்களே, பத்து நிமிடம் முன்னே தான் வந்தோம். சரிமா… நான் போய் அபிஷேகம், நீராஞ்சனம், நெய்வேத்தியம் எல்லாம் பார்க்கிறேன்.
இன்னைக்கு முழுக்க முகுர்த்த நாள் தான்… அதனால் முதல் முகூர்த்தம் தவறி போச்சுதேன்னு, நீ மனம் கலங்காதே குழந்தே!… மணி பார்த்துக்கோ…” என்ற மூர்த்தி திருக்கோயில் கைங்கரியம் செய்ய, உள்ளே சென்றார்.
அன்று காலை முதல் முகூர்த்தத்தில், சம்யுக்தாவிற்கும், அவள் காதலிக்கும் காலேஜ் ப்ரொபெஸர் ஈஸ்வருக்கும், திருமணம் நடப்பதாக இருந்தது.
சென்னையில் அன்று வழக்கத்தைவிட, போலீஸ் கெடுபிடி, செக்கிங் அதிகமாய் இருக்க, ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு செக்கிங் போஸ்ட் இரவோடு இரவாக முளைத்து இருக்க, வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது அவர்களுக்கு.
இவர்கள் அனைவரும் வந்து சேர ஏறக்குறைய ரெண்டு மணி நேரம் தாமதமாகி இருக்க, அந்த முதல்முகூர்த்தம் தவறி இருந்தது.
மாப்பிள்ளை ஈஸ்வர் இன்னும் வந்தே சேர்ந்திருக்கவில்லை.
காரில் வந்து கொண்டிருந்த அவனும் அவன் நண்பர்களும் செக்கிங்கில் சிக்கி, ட்ராபிக் ஜாமில் மாட்டி இருந்தார்கள்.
மோப்ப நாய், கையளவு மெட்டல் டிடெக்டர், ஐடி செக்கிங், காரிலுள்ள பொருட்கள் முதல் கொண்டு சோதனை என்று ஏனோ அன்று போலீஸ் சற்று அதிகமாகவே, தரோ செக்கிங்/thorough checking செய்து கொண்டு இருந்தார்கள்.
முகூர்த்தம் தவறி போவதை கண்டு, மற்றவர்கள் கலங்க, ‘அன்று முழுவதும் முகூர்த்த நாளே என்பதால், அடுத்து வரும் முகூர்த்தங்களில் ஏதாவது ஒன்றில், திருமணத்தை நடத்தலாம்…’ என்று திருமணத்தை நடத்த போகும், கேசவமூர்த்தி சொல்லிய பிறகே, அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.
சம்யுக்தா திருமண கோலத்தில் ஈஸ்வரின் வருகைக்காகக் காத்து நின்றாள்.
இந்தக் காதல் கைக்கூடுமா?
இந்தத் திருமணம் அந்தப் பதற்றமான சூழ்நிலையைத் தாண்டி நடக்குமா?
மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் கொண்டு ஒவ்வொரு இடத்தையும் சோதிக்கும் வண்ணம், அப்படி என்ன மக்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்று, காவல் துறைக்கு மட்டும் தெரிந்து இருக்கிறது!…
போலீஸ் ட்ரில்/ஒத்திகை என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கும் அந்தச் சோதனைகள் உண்மையில் ட்ரில் தானா?
இப்படியொரு அசாதாரண சூழல் நிலவ யார் காரணம்?…
இதை எல்லாம் பின்னால் இருந்து நடத்தி கொண்டிருந்த ஒருவன் புன்னகையுடன் விசில் அடித்தவாறு காரை ஒட்டிக்கொண்டிருந்தான்.
நேற்றிரவு முதல் பசி, தூக்கம் என்று எதுவும் பாராமல், தமிழகத்தையும், அதன் மக்களையும் காக்க ஓடிக் கொண்டு இருக்கும் காவல் துறையைக் கண்டதும், அவன் இதழில் வெளியே தெரியாத வண்ணம் ஒரு புன்னகை உதயமானது.
அடுத்த செக் போஸ்டில், அவன் கார் சோதனைக்காக நிறுத்தப்பட, தன் வாகனத்தில் தனியாக இருந்த அவன், தன் அடையாள அட்டையைக் கொடுத்து விட்டு,
“சார்!… என்ன சார் இன்று தமிழகமே பரபரப்பாய் இருக்கு?.” என்றான் ஒன்றுமே தெரியாதவன் போல்.
“அது ஒன்றும் இல்லை சார்… ரெகுலர் போலீஸ் ட்ரில் தான்… நீங்கக் கிளம்புங்க…” என்றார் காவல் துறையைச் சேர்ந்தவர்.
“பார்த்துச் சார்… கமல் நடித்த, ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில், எல்லா பொது இடத்திலும் கறுப்பு பாக் வைப்பாரே, அதுபோல் யாராவது வெடிகுண்டு வச்சிட்டாங்களோ என்று நினைத்தேன்…” என்றான் புன்னகையுடன்.
ஒரு கணம் ஜெர்க் ஆன அவர் பதட்டமே சொல்லாமல் சொன்னது அது தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று.
“அதெல்லாம் இல்லை சார்… நீங்கக் கிளம்புங்க…” என்றார்.
மௌன சிரிப்பில் உடல் குலுங்க, தன் காரை அங்கிருந்து கிளப்பியவன், டாஷ்போர்டில் இருந்த, தன் கூலர்ஸ் எடுத்து அணிந்து கொண்டவன், ரேடியோவை ஆன் செய்ய,
‘எவன் என்று நினைத்தாய்!
எதைக் கண்டு சிரித்தாய்!
விதை ஒன்று முளைக்கையில்,
வெளிப்படும் முழுரூபம்….
ரூபம்… ரூபம்… ரூபம்…
நெருப்புக்கு பிறந்தான்!…
நித்தம் நித்தம் மலர்ந்தான்!…
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்
ரூபம்… ரூபம்…ரூபம்
யார் என்று புரிகிறதா!
இவன் தீ என்று தெரிகிறதா?
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா?
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கும் காயம் இல்லை
சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே வெளிப்படும்
விஸ்வரூபம்… விஸ்வரூபம்…
ரூபம்… ரூபம்… ரூபம்…
என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வரூபம்…விஸ்வரூபம்
ரூபம்…ரூபம்… ரூபம்.’என்று பாட ஆரம்பித்தது.
ஆட்டம் தொடரும்…