Varaaga-21

Varaaga-21

அனைவரும் வற்புறுத்த...  என்ன தான் இரு மகள்களையும் ஒரே நேரத்தில் பிரிவது வருத்தம் என்றாலும்.. அவர்களின் அதீத எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கத்திற்கு நியாயம் செய்ய நினைத்தார் கருணாகரன்.

சீதாவை ஒரு பார்வை பார்த்தவர்.. அவர் கண்களில் மறுப்பிருந்தாலும், மகள்களை மனதில் வைத்து.. சம்மதம் சொல்லிவிட்டார் முத்ரா கல்லூரி விடுதியில் தங்கி படிக்க

முத்ராவிற்கு விடுதியில் தங்கி பழக்கம் இல்லை என்றாலும் தன் சகோதரி அருகில் இருக்கிறாள் என்பதே போதுமானதாக இருந்தது.

அது கல்லூரி திறந்து சில நாட்களே ஆனா காலக்கட்டம் என்பதாலும்… மேலும் யோகாவிற்கு சீட் காலியாக  வாய்ப்பே இல்லையென்பதாலும் முத்ராவிற்கு காயுவின் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமானது இல்லை.            

தன் செல்வாக்கின் மூலம் உடனே மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகளை முகிலன் தனதாக்கிக் கொண்டான்...  

அப்போதே மாலை ஆக… ருத்ராவின் குடும்பத்தினர் பிரியாவிடை பெற்றனர். இந்த முறை சகோதரிகள் அழவில்லை… கூடிய விரைவில் ஆசைப்பட்ட மேற்படிப்பு மற்றும் அக்காவின் அருகாமை உண்டென்பதால் முத்ராவை வாடாமல் இருக்க வைத்தது. ருத்ராவிற்கோ  பெற்றோரை பிரிவது தான் சற்று வேதனைக்குரிய விசியமாக இருந்தது.

“இனி எப்போது வருவார்களோ…? இல்லை நாம போவோமோ…? இங்க எப்படி பொருந்த போறோம்…?”

என்று ஆனானப்பட்ட ருத்ராவையே கலங்கடித்தது மனம் கேட்ட கேள்விகள். அப்போது விகாஷினி கூட அவள் நினைவை விட்டு தற்காலிகமாக நீங்கியிருந்தாள்.  

இம்மாதிரி சூழ்நிலையில் கணவன் துணை ஆறுதல் படுத்தும் என்றால்… அவனோ

“ருத்ராவை நாம் ஏன் கல்யாணம் செய்ய சம்மதித்தோம்..?”

என்ற விடை தெரியாத கேள்விக்கு மூன்றாவது நாளாக விடை தேடிக் கொண்டிருந்தான். அந்த விடை மிகவும் சுலபம் என்பது வேறு விசியம்… அதுவும் அவனிற்கு அன்றைய இரவே அதற்கான விடை கிடைக்கும் என்பது சுவாரசியமான விசியம். ருத்ராவும் கிட்டதட்ட அதே கேள்விக்கு தான் தற்போது விடை தேடுகிறாள். பார்ப்போம் இவளிற்கு எப்போது விடை கிடைக்கும் என்று…

அன்றைய இரவு புதுமணதம்பதிகளின் முதலிரவு… வீட்டினர் தான் ஏற்பாடு செய்திருந்தனர்… இன்னும் அவர்கள் வாழவில்லை என அவர்களின் பாராமுகம் கட்டியம் கூற… தன்னால் ஆனா முயற்சியாக அபிராமி முகிலனின் அறையை கார்த்தி மூலம் அலங்காரம் செய்திருந்தார்… முகிலன் எதற்கோ வெளியே சென்றது நல்லதாகிற்று…

அதை செய்து முடித்த கார்த்தி… தன் தாயிடம் வந்து…

“ஒரு கன்னிப்பையன் இதெல்லாம் பார்த்தா அவன் மனசு என்ன பாடுபடும்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்குறியே அபிராமி தாயே… நான் பாவம் இல்லையா…? எனக்கும் கல்யாணம் பண்ணி வையுங்க… நானும் ஒரு வருசமா கரடியா கத்துறேன்”

என்று வழக்கம் போல் வம்பிழுத்தான்..

எப்பொதும் இப்படி சொன்னால்…

“போடா… போய் வேற வேலை இருந்தா பாரு…”

என்றவாறு தோளில் அடிக்கிடைக்கும்… அதை எதிர்பார்த்து கார்த்தி நிற்க… அபிராமியோ என்றும் இல்லாத திருநாளாக அவனை பார்த்து,

“உனக்கு பார்த்து வச்சாச்சு டா மகனே… அப்பாகிட்ட தான் போட்டோஸ் இருக்கு… பார்த்து பிடிச்ச பெண்ணை காமி டா… கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்…”

என்றார்.

“விளையாடுறாங்களோ… ?”

என்றவாறே தன் தாயை உற்று பார்க்க… அவரோ மகிழ்ச்சியாக சொல்லிக்கொண்டிருந்தார்.

அவன் மனம் அலாரம் அடித்தது…

“அடேய்… உனக்கு இது தேவையா…? இத்தனை நாளா அண்ணன் ஒண்டிக்கட்டையா இருந்தான்… உன்னை கண்டுக்கல… இப்போ தான் சம்சாரி ஆகிட்டானே… வசமா மாட்டுன… ஏதாவது சொல்லி சமாளி டா…”

என்று யோசிக்க… சட்டேன்று தங்கை நியாபகம் வந்தது…

“அம்மா ஏன் மா… நான் சும்மா சொன்னேன்… காயுகுட்டி கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் எனக்கு… அதுனால அவளுக்கு மாப்பிள்ளை பாருங்க மா…”

என்று விட்டு…

அதற்கு மேல் இருந்தால் எங்கே மேலே பேசி நம்மையும்  ஒத்துக்கொள்ள வைத்து விடுவாரோ என்றெண்ணி…

“குட் நைட் மா…” என்றவாறு தன் அறைக்கு ஓடிவிட்டான்.

அபிராமி தான்…

“இவனை நம்பி…”

என்று தலையில் அடித்தவர்… ருத்ராவை ரெடி பண்ண கீழே இருந்த இன்னொரு அறைக்குள் சென்றார்.

காயுவும் சீக்கிரம் தூங்கும் பழக்கம் உள்ளவள் என்பதால் அவள் அறைக்குள் முடங்கியிருந்தாள்.       

முகிலன் வீட்டினுள் வந்ததும் தன் அறைக்குள் செல்ல… அறை இருந்த கோலம் கண்டு ஜெர்க்கானான். ஏற்கனவே தன்னிடம் மூஞ்சியை காமிக்கும் ருத்ரா இதை பார்த்தால் ருத்ரதாண்டவம் ஆகும் வாய்ப்பு இருக்கவே… தன் தாயை காண செல்ல…

அதற்குள் ருத்ரா கையில் பால் செம்போடு தேவதையை தோற்கடிக்கும் அழகோடு உள்ளே நுழைந்தாள்… அவன் இதயம் தொண்டைக்கு வந்து துடித்தது.

ஆனால் ருத்ராவோ அவன் ஒருவன் நிற்பதையே பொருட்படுத்தாமல்… ஓரமாக இருக்கும் பெட்டியில் இருந்து தன் இரவு உடையான நைட் பேண்ட் மற்றும் டாப்பை எடுத்தாள்… பின் அவன் முன் அதை அணிய தயங்கி.. அதை வைத்துவிட்டு சுடிதார் எடுத்து டிரெஸ்ஸிங் ரூமில் நுழைந்தாள்.

அப்போது தான் அவளின் மௌனம் மூளைக்கு உரைத்தது… நேற்று மாலையில் இருந்தே அவள் தேவைக்கு கூட அவனிடம் பேசாதது தாக்க… அவனின் இயல்பான கோபம் தலை தூக்கியது.

“வரட்டும்… அவளை ரெண்டுல ஒன்னு கேக்குறேன்… மகாராணி வாயே தொறக்க மாட்டங்களோ…”

என்று பல்லை கடித்தான்.

ஐந்து நிமிடங்களில் புடவை நகைகளை கலைந்து வெளியே வர… அவளை பார்த்ததும் கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது… அதற்கு அவள் போட்டிருக்கும் உடை ஒரு காரணம் என்றால் மிகையல்ல…

பின்னே… முதன்முதலாக ருத்ராவை பார்த்த உடையல்லவா…? ஆற்றில் மயங்கி கிடந்த நேரத்தில் தெரியாத பளிங்குமுக அழகு.. படித்துறையில் சாய்ந்திருக்கையில் அவனை சிறிதென்றாலும் தடுமாற செய்ததே… கனவிலும் விடாமல் துரத்திய அந்த ஈர முகம் இப்பொதும் நினைவு வர… இதயமும் அவன் அறியாமல் அந்த ஈரத்தை உள்வாங்கி குளிர்ந்தது.

அதே இதமான மனநிலையில் அவளிடம்…

“ருத்ரா… ஏன் நேற்றில் இருந்து ஒருமாதிரி இருக்க… ?”

என்று வினவ..

“அட… இவ்ளோ சீக்கிரம் கேட்டுட்டாரே”

என்று மனதில் கடுப்பாக கவுன்ட்டர் குடுத்தாள்.

வெளியில் ஒன்றும் பேசாமல் போர்வை எடுத்து கீழே விரிக்க…

அவனோ…

“ஏய்.. ஸ்டாப் ஸ்டாப்… ஊருல ஒரே கட்டிலில் தான படுத்த… இப்போ என்னாச்சு…? டைல்ஸ்ல போய் கோயம்புத்தூர் குளிர்ல படுக்குறியே…”

என்றவாறு விரித்த போர்வையை சுருட்டி கட்டிலில் போட்டான்.

அவ்ளோ தான்… அடக்கி வைத்த கோபம் வெடிக்க தொடங்கியது…

“நான் எங்க படுத்தா உங்களுகென்ன…”

என்று குரல் உயர்த்தியவள்… பின்னே தன்னை அடக்கி..

“சும்மா அக்கறை இருக்குற மாதிரி நடிக்க வேண்டியது..”

என்று தாழ்த்தி சொல்லி… போர்வையை எடுக்க…

இவனுக்கும் உசுப்பேறியது…

“நடிக்குறேன்னா… நானா…”

என்று எகிற

“பின்ன இல்லையா…?”

என்று விட்டு தூங்க ஆயித்தம் ஆனாள்… விடுவானா இவன்… பிடிச்சி வைக்காத குறையாக காரணம் கேட்க…

“விகாஷினி யாரு…?”

என்ற ஒற்றை கேள்வியை அவனை நோக்கி வீசினாள்.

ஆக… புரியாத பல விஷியங்கள் முகிலனிற்கு புரிய…

“என்ன சந்தேகமா…?”

என்றான் ஒரு மாதிரி குரலில்.

அவளோ அதற்கு பதில் சொல்லாமல் மேலும் அழுத்தமாக..

“அவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்…?”

என்று அடுத்த கேள்வியை வீச…

அவள் தாடையை இறுக்கி பிடித்தான்…

“ஏய்.. என்ன விட்டா ஓவரா போற… நேத்து பார்த்தவ… நேத்தே கேட்ருக்கணும்… அதை விட்டுட்டு மூஞ்ச தூக்கி வச்சி அலைஞ்சிட்டு இப்போ வந்து கேட்ட நான் சொல்லனுமா…? சொல்ல முடியாது போடி…”

என்றான்.

அவன் கையை பலம்கொண்ட மட்டும் தட்டிவிட்டவள்…

“நியாயப்படி நீங்களே சொல்லிருக்கணும்… மீறி நான் கேட்ட பிறகும் சொல்ல முடியாது அப்படி தான என்று வெடித்தவள்… இதில் இருந்தே தெரியுதே… அவ எந்த அளவு உங்களுக்கு முக்கியம்னு… நானும் இதே மாதிரி எவன் கிட்டயாவது பேசுனா… நீங்க என்ன கேள்வி கேக்க கூடாது…”

என்று கோபத்தில் வழக்கம் போல் வார்த்தையை விட்டு…

தன் வார்த்தையில் தனக்கே மித மிஞ்சிய ஆத்திரம் வர… இதற்கு மேல் இங்கிருந்தால் கத்தி அனைவரையும் எழுப்பி விடுவோம் என்றும் தோன்ற தொடங்கியது… ஆகையால் முகிலனை முறைத்துவிட்டு… கதவை திறந்து வெளியேறினாள்.

அவள் சொன்ன வார்த்தையில் தான் அப்படி ஒரு கோணத்தை எண்ணியவன்… பின் கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க… ருத்ரா வெளியேறிக் கொண்டிருந்தாள்.

“இவளோட…”

என்று அவள் பின்னால் சென்றவாறே மணியை பார்க்க.. அதுவோ நள்ளிரவை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது…

அவளை வழி மறித்து…

“எதுனாலும் காலையில் பேசிக்கலாம் உள்ள வா…”

என்று அழைக்க…

“நான் கொஞ்ச நேரம் வெளியே இருக்கேன்… தயவுசெஞ்சி என் பின்னாடி வராதீங்க…”

என்று கடித்துவிட்டு சென்றுவிட்டாள்.

இவனும்…

“போயேன்.. என்னகென்ன..”

என்று மனதினுள் நினைத்து தன் அறைக்கு திரும்பிவிட்டான்.

மனது சற்றும் சரி இல்லாமல் இருக்க.. தொலைகாட்சியை உயிர்ப்பித்தான்… ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டே வந்தவன்… சன்மியூசிக் வந்ததும் நிறுத்தினான். விளம்பரம் தான் ஓடியது.

அதை வைத்துவிட்டு உட்கார்ந்தவாக்கில் சாய்ந்து கண்மூட… இரண்டு நிமிஷம் தான்… அதற்கு மேல் அவனால் அங்கு இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை…

ருத்ரா அவனை பேசினாலும் பாதித்தாள்… பேசாமல் இருந்தாலும் பாதித்தாள்… இது என்ன மாறி உணர்வு என்று மனதுக்குள் சலிக்க…

சன்மியூசிக்கில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது… அதுவும் அவன் மனதை அவனுக்கே உணர்த்தும் வகையில்…

இரவா பகலா குளிரா வெயிலா….

என்னை ஒன்றும் செய்யாதடி…

கடலா புயலா இடியா மழையா

என்னை ஒன்றும் செய்யாதடி…

ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி…

என்னை ஏதோ செய்யுதடி…

காதல் இதுதானா…

சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்…

காதலா…? சட்டேன்று முழித்து பார்க்க… சூர்யா திரையில் உருகி உருகி ஜோதிகாவிடம் பாடி கொண்டிருந்தார்.

பாடலுக்கும் இவனுக்கும் என்ன ஜென்ம பந்தமோ…? ருத்ராவை அடையாளம் காட்டியதும் ஒரு பாடல் தான்.. இப்பொது அவன் மனம் அடையும் எதோ ஒரு உணர்வுக்கு அர்த்தம் சொல்லியதும் ஒரு பாடல் தான்…

காதல் என்று அறிந்ததும் என்ன… எப்போ… எப்படி… என்று யோசிக்க தோன்ற… பின் அதை அப்புறம் பார்த்துக் கொள்வோம்… இப்போ அவ என்ன பண்ணிட்டு இருக்காளோ… போய் அரை மணி நேரம் ஆச்சு.. என்றவாறு கீழே செல்ல…

வாசல் கதவு திறந்திருந்தது…

“இந்த நேரத்துல வெளியேவா… இந்த வெளியே தான் போறேன்னு  சொன்னாளா…?”

என்று அதிர்ந்தவன்… வெளியே சென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

எங்கும் இருள் சூழ்ந்திருந்தது… கேட் அருகே சென்று பார்க்க… காவலாளி நடந்துக் கொண்டிருந்தான்.

அப்போது வெளியே செல்ல வாய்ப்பில்லை என்று எண்ணியவன்.. பின் ஒரு எண்ணம் தோன்ற…

உடனே நீச்சல்குளம் நோக்கி விரைந்தான்…

தூரத்தில் வரும்போதே… தண்ணீர் சத்தம் சளக் சளக் என்று கேட்க…

அங்கே… நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு இரண்டு நாள்  மனப்புழுக்கம் தாங்காமல், விகாஷினியின் வார்த்தைகள் கொடுத்த அழுத்தம் மற்றும் கணவனின் கோபம் கொடுத்த ஆவேசம் எல்லாம் தாக்க… நீச்சல் குளத்தை பார்த்ததும் இப்போதைக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் பாய்ந்திருந்தாள் ருத்ரா.

முகிலன் வந்து பார்க்கையில் அவளை முதன்முதலாக கண்ட அதே தோற்றத்தில் அச்சு மாறாமல் ருத்ரா தெரிய… அவன் மனது பூப்பூவாய் வெடித்து சிதறி… இப்பொது உரிமையுடன் அவளை… அவளது வேக நீச்சலை ரசித்தது… கூடவே.. என்னே கோபம்டா சாமி என்றும் கொஞ்சலாய் எண்ணியது. ( அதுக்குள்ள யா முத்தி போச்சி.. )

வராக நதி பாயும்….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

  

 

 

 

 

 

 

 

  

 

 

 

 

 

 

 

error: Content is protected !!