Vizhi 16

அன்பின்  மொ(வி)ழியில் – 18.

  

அன்றைய பொழுது விடுதியில் இருந்து கிளம்பும் போதே கயலுக்கு மிகவும் படபடப்பாக இருந்தது.

 

என்னதான் கடந்த மூன்று வருடமாக வேந்தன் குரூப்ஸில் வேலை செய்தாலும், நிறுவனத்தின் இன்னொரு பாஸ் என்ற முறையில் ராம் வில்லியம்ஸ்ஸை நேரில் பார்த்து இருந்தாலும், அவனின் அருகில் இருந்து இன்றைய தினத்தை கடக்க வேண்டியதை எண்ணி சிறு பயம்  அவளுக்கு இருந்தது.

 

ராஜ் வில்லியம்ஸ் அனைவரிடமும்  ‘எட்டி நில்’ என்ற முறையில் நடந்து கொண்டாலும், கயல்விழியிடம் அத்தனை கடுமையாக நடக்க மாட்டான், அமைதியான பெண்ணவளின்  பாசாங்கு இல்லாத இயல்பான நடைமுறை அவனை சிறிது இணக்கமாக வைத்திருந்தது அவளிடம்.

 

ஆனால் ராம் எப்போதும் கடுமையாகவே இருப்பதாக தோன்றும் அவளுக்கு. வெகு சில சமயங்களில் மட்டுமே நிறுவனத்திற்கு வருபவன், கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல மற்றவர்களை கவனிக்காமல் தன் வேலை மட்டும் செய்பவனை கண்டு, அவளுடன் இணைந்து வேலை செய்பவர்கள் எல்லாம்  திமிரும், பெண்களை மதிக்காத அலசிய போக்கும் கொண்டவன் என்று, ராம் தங்களை கவனிக்காததை எண்ணி வயிற்றேரிச்சலில் கூற,  அன்பு மிகுந்த  மென்மையே வடிவானவன், அவனவள் மனதில் பெண்களை மதிக்காதவனாய் பதிந்து போனது விதியின் செயலே அன்றி வேறில்லை.

 

ராஜ் வெளிநாடு செல்லும் முன் அவளிடம் சொல்லிருந்தான்.                “கயல் ஜெர்மனில இருக்க லீடிங் சாப்ட்வேர்  கம்பெனி, தன்னோட நியூ பிரான்ச்சை கட்டி முடிப்பதற்கான பொறுப்பை நம்ம வேந்தன் கன்ஸ்ட்ரக்ஷனுக்குக் கொடுத்திருக்காங்க, நான் அதுக்கு  அங்க  போய் ஆகணும், இங்க இந்த விருது வழங்கும் விழாவ, ராம் வில்லியம்ஸ் வந்து அட்டென் பண்ணுவாரு, ஈவினிங் ஸ்டைட்டா அவார்ட் செரெமோனி (awards ceremony) வந்துடுவாங்க”,

 

ராஜ் கூறிய அனைத்தையும் அமைதியாக உள்வாங்கி கொண்ட கயல், “நான் ஏதாவது பண்ணனுமா சார்?” என்றவளிடம்.

 

 

ராஜ் –  “யெஸ், தாஜ்ல பார்ட்டி அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் கவனிங்க கயல், எந்த  குறையும் இருக்க கூடாது. எல்லாரையும் பேமிலியோட இன்வய்ட் பண்ணிருக்கேன், சோ  நீங்க பார்ட்டி முடியிற வரை அங்க இருக்க வேண்டியது வரும், அண்ட், நிறைய பேருக்கு ராம் தான் இங்க இருக்கிறதுன்னு தெரியாது”. 

 

“முக்கியமா  அந்த விஜய் கன்ஸ்ட்ரக்ஷன் எம். டி, மிஸ்டர் விஜய்க்கு தெரிய கூடாது, இல்ல ஜெர்மன் ப்ரொஜெக்ட் ஏதாவது ப்ரோப்ளேம் பண்ணுவான், சோ கவனமா இருக்கணும்” என்றவன்,  தன் அலுவலக அறையில் இருந்து முக்கியமான பைல் எல்லாம் எடுத்துக் கொண்டு அன்றைய இரவே விமானத்தில் பறந்து விட்டான்.  

 

இந்தமாதிரி பார்ட்டியில் எல்லாம் கயல் இதுவரை கலந்து கொண்டதில்லை, அவள் ராஜிற்கு பி .ஏ வாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. அதே நேரத்தில் ராஜும் இது போன்ற விடயங்களில் கயலை  ஈடுபடுத்தியது இல்லை.

 

இன்று எல்லாரையும் குடும்பத்துடன் அழைத்திருப்பதால் மட்டுமே கயலை கவனிக்க சொன்னான் இல்லை என்றால் அவனின் வினி குட்டியை வைத்தே அனைத்தையும் சாதித்து விடுவான்.

 

பார்ட்டியில் இறுதி வரை இருக்க கயலுக்கு விருப்பம் இல்லை என்றாலும் ராஜின் வார்தைகளுக்காக சம்மதித்திருந்தாள்.

 

ராஜ் தான் செல்வதை  விஜயிடம் மறைப்பதால் உண்டாக போகும் விளைவை அறியவில்லை, அதை நன்கு அறிந்த விதியோ தன் ஆட்டத்தினை அழகாக ராம் மற்றும் கயல் வாழ்க்கையில் தொடங்க காத்திருந்தது.

 

 

**********************

 

 

ராம் தன் உடன் பிறந்தவனிடம் சம்மதம் சொல்லி விட்டாலும், எந்தவிதமான உதவியும் செய்யாமல் அவன் வாங்க வேண்டிய விருதினை தான் பெற்றுக் கொள்வதை நினைத்து சங்கடமாக இருந்தது.

 

இருப்பினும் ராஜ் ஜெர்மன் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து அன்னையிடம் சொல்லி விட்டு நெய்வாசலில் இருந்து  சென்னை வந்தடைந்தான்.

 

செல்லும் இடத்திற்கு ஏற்ப   நேர்த்தியாக உடையணிந்து, சரியான நேரத்தில் விழாவிற்கு வந்தவனை கண்டு அங்கிருந்தவர்கள் கண்கள்  ரசனையாய் நோக்கியது.

 

ஆறு அடிகளுக்கு மேல் அசாத்திய உயரத்துடன், கவர்ச்சியாகவும், வசிகரமாகவும், காணும் பெண்கள் அனைவரையும் அடியோடு வீழ்த்தும் ஆளுமை சேர்ந்த அழகோடு, பிளாக் கலர் கோட் அவனின்  அந்த அழகிய பால் வண்ண சருமத்திற்கு அழகு சேர்க்க, உடற்பயிற்சியின்  பலனை பறைசாற்றுவது போல, அகன்ற மார்போடு, ‘என்ன  பார்வையடா இது?’ என்று பார்ப்பவர்கள்  எல்லாம் வியந்து போகும் அளவு கத்தி போல கூர்மையை, அந்த எழில் கொஞ்சும் ஆழ் கடலை நினைவூட்டும் நீல நிற விழிகளில் தாங்கி, எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை என்று அடித்து கூறும் வகையில் அமைந்த சிவந்த அதரங்களில் மென்னகையுடன், கம்பீரமாக, படகு போல் இருந்த அந்த சொகுசான பென்ஸ் மெர்சிடெஸ்ஸில் இருந்து இறங்கினான், வேந்தன் க்ரூப்ஸ் ஆஃப் கம்பெனிஸின்  எம்.டி ராம் வில்லியம்ஸ்.               (   Venthan  groups  of companies                                   M . D. Ram williams ).

 

ஆம், ராஜ் இல்லாத நேரங்களில்,  நிர்வாகம் சார்பில் அனைத்தையும் கையாள்வது  ராம் வில்லியம்ஸ் தான்.

 

வேந்தன் குழுமத்தில் சரி விகித பங்கு ராமிற்கு உண்டு.

 

இரட்டையர்கள் இருவருக்கும் உள்ள உருவ ஒற்றுமையின் காரணமாக,  அவர்களுக்கு நெருக்கமான  வெகு சிலரை தவிர,  மற்ற யாருக்கும் தெரியவில்லை வந்திருப்பது ராம் என்று.

 

அத்துணை கம்பீரமாக வந்து இறங்கியவனை அனைவரின் கண்களும் ஆர்வமாக, அதே வேளையில் சிறிது பொறாமையுடன் பார்த்த போது, அங்கிருந்த ஒருவனின் விழிகள் மட்டும் அளவிட முடியாத வெறுப்புடன் நோக்கியது.

 

அவனிற்கு இத்தனை வருடங்கள் கழித்தும் கிடைக்காத ஒன்று, தொழிற்துறையில் நுழைந்த இந்த குறுகிய காலத்தில் ராஜிற்கு கிடைத்ததை எண்ணி வெதும்பியவாறு அங்கே அமர்ந்திருந்தான் விஜய்.

 

விஜயும் ஒன்றும் சாமானியனல்ல, காலம் காலமாக கட்டிட துறையில் பெயர் பெற்ற நிறுவனத்தின் ஒரே வாரிசு.

 

என்ன அளவுக்கு மிஞ்சிய பணம் விஜயிடம் நல்ல பண்பை வளர்ப்பதிற்கு பதிலாக, திமிரையும் குறுக்கு புத்தியையும் ஏற்படுத்தியது.

 

 பரம்பரை பரம்பரையாக இதே தொழிலை செய்தாலும், சூது நிறைந்த, ஒழுக்கம் அற்ற விஜயினால், ராஜினை வெற்றி கொள்ள முடியவில்லை, புதிதாக வந்த ஒருவன் அவனை மிஞ்சுவதை ஏற்றுக்கொள்ள இயலாமல், ஏதாவது ஒன்றை செய்து அனைவரின் மனதிலும் ராஜை பற்றிய தவறான எண்ணங்களை பதிய வைக்க நரியினை போல சரியான நேரத்துக்கு காத்திருந்தான்.

 

அன்றைய விழாவில் விஷ்ணு, ராமின் அருகில் உதவியாக இருக்க, கயல்விழியை பார்க்க வேண்டிய அவசியம் நம் நாயகனுக்கு ஏற்படவில்லை.

 

அவன் வாழ்வில் அந்த  நிமிடம் வரை அவனவளை ராம் கவனிக்கவில்லை.

 

 

யார் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து, தன் மகவை ஈன்று, காதலுடன் கூடி இறுதி வரை அவனுடன் வர போகிறாளோ, அவளை அறியாமல், தன் அருகில் இருந்த அத்தை மகனுடன் பேசிக் கொண்டிருந்தவன்.

 

 அதே சமயத்தில் தன்னை கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டிருந்த, அவனுடைய எதிர்காலத்தை மாற்றப் போகும் எதிரியையும் அறியவில்லை.

 

 

விஜயின் நரித்தனமான அறிவு, ராஜை எப்படி அசிங்கப்படுத்துவது என்று யோசித்து கொண்டு இருந்த அதே வேளையில் கண்களோ, அவனின் ஆளுமையை கண்டு வெறியுடன் வெறித்தது.

 

தத்தம் துறையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் விருது வழங்கி மரியாதை அளித்தவர்கள். 

 

 “சிறந்த இளம்  தொழிலதிபருக்கான விருதினை வேந்தன் குரூப்ஸ் எம் . டி திரு வில்லியம்ஸ் அவர்களுக்கு வழங்குகிறோம்” என்று ராமை மேடைக்கு அழைக்க, எந்தவித அலட்டலும் இல்லாமல், கம்பீரமாக மேடையேறியவன் மென்னகையுடன் விருதை பெற்றுக் கொண்டு “நன்றி” என்றதோடு  இறங்கி விட்டான்.

 

முதலே ராஜ்  விழா கமிட்டிக்கு ராமை பற்றி தகவல் தெரிவித்ததால், இருவருக்கும் பொதுவான பெயரை சொல்லி அழைத்து, அதேபோல் இந்த தொழிலில்  அவன் அடைந்த  வெற்றி, சாதனை குறித்து எந்தவித கேள்வியும் கேட்காமல் ராமை விட்டு விட்டனர்.

 

அமைதியாக சென்று விருதை பெற்று வந்து அமர்ந்தவனிடம் விஷ்ணு தயக்கமாக, “மச்சான்,  இதுக்காக பார்ட்டி இருக்கு தாஜ்ல, ராஜ் ஏற்பாடு செஞ்சது” என்றவனிடம்.

 

ராம்- “ஹ்ம்ம்ம் சொன்னான் விஷ்ணு எத்தனை மணிக்கு”.

 

விஷ்ணு “எட்டு மணிக்கு” என்றவன், ராமிடம் சொல்லி விட்டு  வெளியே வந்து  கயலுக்கு அழைத்து.

 

“கயல்விழி  நீங்க பார்ட்டி அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் ஓகேவான்னு போய், இன்னொரு முறை செக் பண்ணுங்க நாங்க ஒன் ஹவர்ல வறோம்”என்றவனிடம்.

 

“ஓகே சார்” என்றவள் தன் வேலையை செய்ய கிளம்பி விட்டாள்.

 

************************

 

 

ராமிற்கு  அங்கு இருக்கவே கடுப்பாக இருந்தது.

 

பார்ட்டி என்ற பேரில் இன்றைய நகரங்களில் நடக்கும் கேளிக்கைகளில் என்றுமே அவனுக்கு விருப்பம் இருந்ததில்லை.

வெளிநாடு சென்று ராஜுடன்  இணைந்து படித்த போது இதை விட அதிகமாய் அங்கு பார்த்திருந்தாலும்.

 

இந்திய மண்ணில் அதுவும் தமிழகத்தில் இது போன்ற கலாச்சார சீரழிவுக்கு, நாகரிகம் என்ற பெயர் சூட்டி இவர்கள் அடிக்கும் கூத்தை கண்டு எப்பவும் ராமிற்கு வருத்தம் தான்.

 

ராஜினை போல் அவனால்  இவையனைத்தையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

 

பார்க்க வெளிநாட்டை சேர்ந்தவன் போல் இருந்த, ராமின் மனது கிராமத்தில் வாழும் விவசாயியை போன்று தூய்மையானது.

 

தன் உடன்பிறப்பிற்காக மட்டுமே, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு  இங்கு அமைதியாக  அமர்ந்திருந்தான்.

 

ராஜ் தன் தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த பார்ட்டிக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

 

வந்தவர்கள் எல்லாம் ராமை வாழ்த்திய பின்னர்  மதுவுடன் அன்றைய தினத்தை கொண்டாடினர்.

 

 ராஜின் பி .ஏ என்ற முறையில் வந்திருந்த பெண்களுடன் பேசிக்கொண்டு, அவர்களை கவனித்து கொண்டிருந்தாள் கயல்விழி.

 

 

 அதுவரை ராஜினை வீழ்த்த தகுந்த   நேரம் பார்த்துக் கொண்டு, கைகளில் மது கோப்பையுடன் அமர்ந்திருந்த விஜயின் கண்களில், அன்று பூத்த மலரை போன்று பாந்தமாக புடவை கட்டி எளிமையாக அதே நேரத்தில் பார்ப்பவர் மனதை மயக்கும் விதத்தில் இருந்த கயல் விழுந்தாள்.

 

அவன் அறிந்த பெண்களைப் போல் இல்லாமல்,  பார்த்தவுடன் மனதை அமைதிக்கொள்ள செய்யும் அவளின் அழகு அவனை பித்தமடைய செய்தது.

 

ஒன்றை நினைத்து விட்டால் உடனேயே அடைய நினைக்கும் கேவலமான விஜயின் மனது தவறான கண்ணோட்டத்துடன் அவளை ரசித்தது.

 

பெண்கள் விஷயத்தில் விஜய் சுத்தமும் சரியில்லாதவன். அவனின் விழியில் விழுந்தது அறியாமல் வெள்ளையாய் சிரித்து கொண்டிருந்தவளை அடைய ராஜிற்கு விரிக்கப் போகும் அதே வலையை பயன்படுத்த முடிவெடுத்தவன்.

 

அவனின் ஆட்களின் மூலம் யாரும் அறியாமல் கயல், ராம் இருவர் அருந்தும் பானத்தில் ஒருவிதமான போதை மருந்தை கலக்க  ஏற்பாடு செய்தான்.

 

 

ராம் வில்லியம்ஸ் எல்லாரிடமும் இன்முகமாக  பேசியபடியே விஷ்ணுவுடன் சுற்றி கொண்டிருந்தவன். அன்னையின் அழைப்பு வரவும் அவருடன் பேசி கொண்டிருந்த போது, விஷ்ணுவுக்கு ராஜிடம் இருந்து கால் வந்தது.

 

 

விஷ்ணு ராமினை விட்டு நகர்ந்த நேரத்தில் விஜயின் ஆள் ஒரு குளிர் பானத்துடன் ராம் வில்லியம்ஸ் நெருங்கி தர,  நடக்கப்போவதை அறியாமல், அவனுக்கும் தற்போது அருந்த தேவைபட்டதால்  அதனை நன்றி தெரிவித்து மென்னகையுடன் எடுத்துக் கொண்டான்.

 

கயலும் அதே வேளையில் விஜய் விரித்த வலையில் விழுந்தாலும் அவளுக்கு அந்த போதை மருந்து கலந்த குளிர்பானத்தை அவ்வளவாக பிடிக்காத காரணத்தால் சிறிதளவே குடித்தவள், அவளில் உடன் வேலை செய்பவள் கூப்பிட  அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

 

கயலுக்கு முதலில் ஒன்றும் தெரியாமல் இயல்பாக இருந்தாலும், சிறு தடுமாற்றம் வந்துருக்க, குழம்பியவாறு  நடந்தவளின் செவிகளில் விஜயின் வார்த்தைகள் விழ அதிர்ந்து சிலையை போல நின்று விட்டாள்.

 

ஒரு மனிதன் தொழிலில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இவ்வளவு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதை எண்ணி அருவருத்தவள், விஜய் அறியா வண்ணம் ராமினை நெருங்கினாள்.

 

 

*************************

 

 

பானத்தை அருந்தும் வரை இருந்த நிதானம், கொஞ்ச நேரத்தில் ராமை விட்டு எங்கோ பறந்து சென்று விட்டது.

 

விஜய் பயன்படுத்திய போதை மருந்து அருந்தியவர் நடப்பதை உணராத வகையில், தன்னிலை இழக்க செய்து,  மனிதர்களின் உடலில் உள்ள ஹார்மோன்களை தாறுமாறாக சுரக்க வைத்து,  மனதில்  அடங்கா மோகத்தை ஏற்படுத்த கூடியதாக இருந்தது.

 

அதுவரை அமைதியாக இருந்த ராமிற்கு ஒன்றுமே புரியவில்லை.

 

 ராமிற்கு சிறிது நேரத்தில் உடலில் என்னவோ செய்தது, அவனின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் துள்ளி விளையாட, ராஜ போதை என்பது இதுதானோ என்பது போல அவனால் எதையும் முழுமையாக அறியமுடியவில்லை.

 

இதுவரை சாதாரணமாக மதுவினை  கூட அருந்தாதவன், ராம் வில்லியம்ஸின் தேகம் எல்லாம் முதல் முறை அறிந்த இந்த இன்பமான மயக்கத்தில் தன்னிலை இழந்து கொண்டிருந்தது.

 

மனம் முழுவதும் ஒருவித ஆர்வத்துடனும், அதே நேரம் யாரையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்காதவனின் உடலில் தற்போது மோகம் தலைவிரித்து ஆடியது.

 

விஜயின் விழிகள் வெற்றியை நெருங்கியதை எண்ணி களிப்புடன் தனது பி. ஏ விற்கு அழைத்து “நான் சொன்னபடி ஏற்பாடு  செய்த அந்த  பொண்ண கூட்டி  வா” என்றவன் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அவனிடம் தெளிவாக சொல்ல, அந்த வழியில் சிறு தடுமாற்றத்துடன் வந்த கயலின் காதுகளில் விஜயின் வார்த்தைகள் விழ ஒரு நொடி ஒன்றும் புரியாமல் நின்றவள் அறிவு,  உடனேயே வேலை செய்தது.

 

 

விஜயின் கவனம் சிதறிய நேரத்தில்  ராமிடம் சென்றவள்  ஏதோ கோப்புகளில் கையேழுத்து வேண்டும் என்று அவனிடம் பேசியவாறு, ராமை யாரும் கவனிக்காதபடி  அவனுக்காக புக் செய்திருந்த அறைக்கு  எப்படியோ தடுமாறியவாறு,  அழைத்து வந்து விட்டாள்.

 

விஜய் அவளை அடைய எண்ணி  கயல் அறியாமல் கலந்த போதை மருந்து குளிர்பானத்தை, முழுவதும் பெண்ணவள் அருந்தவில்லை என்றாலும் பாதி மட்டுமே குடித்தவள் அந்த அளவினை கூட தாங்க  முடியாமல் தள்ளாடியபடி , இதுவரை எப்படியோ ராமை அந்த விஜயின் மூலம் ஏற்பட இருந்த இக்கட்டிலிருந்து காத்து விட்டாள்.

 

அத்துணை நேரம் இருந்த அவளின் துணிவை எல்லாம்  போதை மயக்கம் துரத்திவிட்டிருக்க, எவ்வளவு முயன்றும் முடியாமல்,  அருகில் இருந்த ராமின் மீதே தடுமாற்றத்துடன் சரிந்தாள்.

 

 

 தன்மீது மாலை என விழுந்தவளை தன்னுடன் சேர்த்து இருக்கிக் கொண்டது ராமின் கரங்கள்.

 

ராம் தன்னுடைய நிலையை கொஞ்சம்  அறிந்திருந்தாலும் அவனின் விரல் நுனி கூட  எந்த ஒரு பெண்ணின் உடலையும் உரிமையில்லாமல், அவளின் விருப்பமில்லாமலும் தீண்டிருக்காது, போதை என்பது எவ்வளவு உயர்ந்த எண்ணங்கள் கொண்ட  மனிதனையும் எப்படி கீழ்த்தரமான செயலை செய்ய வைக்க கூடியது என்பதிற்கு சாட்சியாகி போனான் காளையவன்.

 

மனதை மயக்கும் அந்த இரவில், ஓவியம் போல் தன் கைகளில் வீற்றிருந்தவளின் மீது நன் கரங்கள்  என்னும் தூரிகை கொண்டு அழகான சித்திரம்  எழுத அரம்பித்தவனின் கைகள்  இரண்டும் இதுவரை அவளை தவிர வேறு யாரும் தீண்டாத இடங்களில் எல்லாம் தன் தடங்களை அழுத்தமாக பதிக்க, கயல் அதிர்ந்து தான் போனாள்.

 

கயலின் நிலை ராமின் அளவுக்கு தன்னிலை இழக்கும் அளவுக்கு இல்லை.

 

கன்னியவளுக்கு நினைவுகள் ஓரளவிற்கு தெளிவாக இருந்தாலும், அவளிடம் அத்துமீறும் ராமினை தடுக்க நினைத்தாலும் அவளில் உடம்பில் நிறைந்திருந்த போதை வஸ்து  கயலின் எண்ணத்தினை செயல்படுத்த விடவில்லை.

 

ராமின் கைகளை தூரிகையாகி வரைந்த ஓவியத்திற்கு, அவனின்  இதழ்கள் கொண்டு  வண்ணம் தீட்டியவாரே, கலவி பற்றி எப்போதும் அறிந்திராத பேதையவளை மொத்தமாக தன்னையறியாமல் தன்னுள் நிரப்பிக் கொண்டவனின் ஆழ் மனதில் மங்கையவளின் அழகிய  உருவம் கலங்களாகவும், ஸ்பரிசம் பசுமரத்தாணி போலவும் பதிந்து போனதை மன்னவன் அவன் உணரவில்லை.

 

 தன்னிலையை எண்ணி பெண்ணவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்த வண்ணம் இருந்தது. மெல்லிய காற்று அவளின் முகத்தில் மோதி கண்ணீரை துடைக்க, பெண்மை பறிபோய் கொண்டிருப்பதை அறிந்தவள் உள்ளம் நடுங்கி கொண்டிருந்தது.

 

 

தடுக்க முடியாத கயலின் நிலையை அறிந்தது அறையில் இருந்த குளிர்ந்த காற்று மட்டுமே!.. 

 

மற்றவர்கள் மனம் வருந்தா வண்ணம் நடந்து கொள்ளும் ராம், முதல் முறையாக ஏதும் அறியா சிறு பெண்ணின் வாழ்வில் தன்னை அறியாமலே வேதனையை மட்டும் பரிசாக கொடுத்துக் கொண்டிருப்பதை  உணரவில்லை.

 

*************************   

 

 

விஜயால் இப்போது கூட நடந்ததை நம்ப முடியவில்லை, அழகாக அவன் போட்ட திட்டம் இரண்டும் படு தோல்வி அடைந்ததை எண்ணி வெறியில் இருந்தவன் முழு மிருகமாகி இருந்தான்.

 

கண்முன்னே மறையும்  புகையை போல அவன் வீழ்த்த எண்ணிய இருவரும் மறைந்த விதத்தை அறியாமல்.

 

 அடிபட்ட வேங்கையென, ஏமாற்றம் நிறைந்த கோபத்துடன்  நின்று கொண்டிருந்தவனை கண்டு,

 

விஜயின் எதிரே நின்றிருந்த அவனுடைய பி. ஏ வின்  இதயம்  வெளியில் வந்து விடுவது போல பயத்தில் வேகமாக துடித்தது.

 

வஞ்சம் கொண்டவன் ஆட நினைத்த ஆட்டத்தினை, அழகாக ஆடி முடித்த விதி நடப்பதை, நடக்க போவதை  எண்ணி நகைத்து கொண்டிருந்தது…