vkv 21

vkv 21

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 21

நடந்தது எதையும் உமாவால் நம்ப முடியவில்லை. தன் நெற்றி வகிட்டில் குங்குமமிட்ட சுதாகரனை இமைக்க மறந்து பார்த்திருந்தாள். அவளை நோக்கிப் புன்னகைத்தவன், அவள் கரம்பற்றி அழைத்துக் கொண்டு சிதம்பரம், தமிழரசியிடம் வந்தான். அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க தமிழரசி தன் புடவைத் தலைப்பால் வாய்பொத்தி அழுதார். தன் வம்சத்துக்கே இது என்ன சாபம் என்று ஊமையாய் அழுதது அவர் மனது. தன் மகனுக்கு அவசரக் கோலமாக ஒரு திருமணம். அது போதாததற்கு, தன் பேத்திக்கும் அதே போல ஒரு திருமணம். ‘ஆண்டவா! இது நியாயமா?’ என்று கேள்வி கேட்டது அவர் மனது.

அடுத்தாற்போல பிரபாகரன் தம்பதிகள், தமிழ்ச்செல்வன் தம்பதிகள், இளமாறன் தம்பதிகள் என அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்றவன், மகேஷிடம் கண்ணைக் காட்ட, அவன் உமாவை காருக்கு அழைத்துச் சென்றான்.

என்ன நடக்குது மகேஷ்?” உமா மெதுவாக வாய் திறந்தாள்.

உமா, நடந்த எதுக்கும் ஆத்திரப்படாத. இதுவரைக்கும் அண்ணா என்ன பண்ணினான்னு எனக்குத் தெரியாது. ஆனா, இப்போ அவன் பண்ணுறது எல்லாம் எனக்கு சரின்னுதான் தோணுது. ஒவ்வொன்னையும் பாத்துப் பாத்து உனக்காகத்தான் செய்றான். சண்டை போடுறதா இருந்தா நல்லா போடு. நாலு அடி அவனுக்கு வெக்குறதுன்னாலும் வை. உன்னை ஏன்னு யாரும் கேக்கப் போறதில்லை. ஆனா, அவனை விட்டுட்டுப் போகாதே. அந்த ஜடத்துக்கு மனசுல இருக்கிறதை சொல்லத் தெரியலையே தவிர, அவன் மனசு முழுக்க நீதான் இருக்கே. அதை இந்த ஒரு வாரத்துல நான் புரிஞ்சுக்கிட்டேன். இப்போ கார்ல ஏறு.” இதமாக அவள் தலை வருடிச் சொன்னவனை விழி விரித்துப் பார்த்தவள்,

எங்கே போறோம் மகேஷ்?” என்றாள்.

போறோம் இல்லை, போறீங்க. நீயும், அண்ணாவும் மட்டும் போறீங்க.” என்றான்.

அதான் எங்க மகேஷ்?”

சொல்ல உத்தரவு இல்லையே அண்ணியாரே!” என்றான் நாடகப் பாணியில். அவனைப் பார்த்து அவள் புன்னகைக்க, அதே நேரம் சுதாகரனும் வந்து சேர்ந்தான். மகேஷ் சாவிக்கொத்தை நீட்ட, அதை வாங்கிக் கொண்டவன் உமாவைப் பார்க்க, உமா மகேஷைப் பார்த்தாள்.

ஏறு உமா.” மகேஷ் சொல்லவும் காரில் ஏறி அமர்ந்தாள் உமா. அந்த black Audi மெதுவாக நகர்ந்தது.

                                      ——————————————————–

மீண்டும் அதே மௌனம் அந்தக் காரில் குடி கொண்டிருந்தது. எங்கே போகிறோம் என்று அவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை. நடந்து முடிந்த நிகழ்வு அவர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது என்பதால், அதை அசை போட்டபடி அமைதியாக இருந்தனர்.

அபி தகவல் சொன்ன உடனேயே சுதாகரன் தொடர்பு கொண்டது மகேஷைத்தான். உமாவின் இருப்பிடம் தெரிய வந்திருப்பதால் தான் அங்கே செல்வதாகவும், திருமணத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறும் கட்டளையிட்டு விட்டே ஆளத்தூர் புறப்பட்டான். இரு தரப்பு பெற்றோருக்கும், இளமாறனுக்கும் தகவல் சொல்லப்பட்டது. மறந்தும் பாட்டிக்கு தகவல் சொல்லச் சொல்லி அவன் யாரிடமும் சொல்லவில்லை. உமா வந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அத்தனை பேரும் இருந்ததால், இந்த ஏற்பாட்டை யாரும் எதிர்க்கவில்லை.

கார் மெதுவாக அந்த வீட்டின் முன் நின்றது. உமா திரும்பி சுதாகரனைப் பார்த்தாள். இப்போது மெல்லிய சிரிப்பு ஒன்று மட்டுமே பதிலாகக் கிடைத்தது. குந்தவியின் தாயாதி அது. அந்தப் பழைய தொட்டிக் கட்டு வீடு அத்தனை கம்பீரமாக நின்றது

அன்றொரு நாள் தமிழ்ச்செல்வனும், இளமாறனும் குந்தவியின் திருமணத்தை முன்னிட்டு குந்தவியின் அப்பாவை சந்தித்த அதே வீடு. பழைய மிடுக்கோடும், பெரிய பெரிய வேலைப்பாடு கொண்ட மரத் தூண்களோடும் அத்தனை அழகாக இருந்தது. குந்தவியின் தந்தை தவறிய பிறகு பூட்டியே கிடந்த வீடு இப்போது அத்தனை சுத்தமாக இருந்தது. குந்தவியின் தங்கை மல்லிகாவும் திருமணமுடித்து ஆஸ்திரேலியாவில் குடியிருப்பதால் வீடு பூட்டியே கிடந்தது.

இறங்கு மது.” சுதாகரனைத் திரும்பிப் பார்த்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கினாள். அவளோடு கூட நடந்தவன், சாவிக் கொத்தை அவளிடம் நீட்டி,

யார் வீடுன்னு தெரியுதா?” என்றான்.

ம்அத்தை கூட ஒரு தரம் வந்திருக்கேன். அப்போ உங்க தாத்தா இருந்தாங்க.” என்றாள். முகம் பூரிக்க புன்னகைத்தவன்,

தாத்தா உன்னைப் பாத்ததும் அம்மாக் கிட்ட என்ன கேட்டாங்கன்னு ஞாபகம் இருக்கா?” என்றான்.

ம்ஹூம்…” என்று இடம் வலமாகத் தலையாட்டியவள்,

அப்போ நீங்களும் வந்திருந்தீங்களா?” என்றாள். வார்த்தைக்கு வார்த்தை அவளின் அத்தான் என்ற அழைப்பு தொலைந்து போயிருந்தது. அதற்காக மனம் ஏங்கினாலும், அவளை எந்த வகையிலும் வற்புறுத்த மனம் இல்லாமல் அமைதியாகச் சிரித்தான் ஆமோதிக்கும் வண்ணம்.

என்ன கேட்டாங்க உங்க தாத்தா?”

இது யாரு குட்டிப் பொண்ணுன்னு கேட்டாங்க.”

ம்…” என்றாள் உமா, மேலே சொல் என்பது போல.

அம்மா என்னோட மருமகள்னு சொன்னாங்க.” என்றான். மறந்தும்இவளைத் தான் சுதா பெரியவனானதும் கட்டிக்குவான் அப்பா.’ என்று குந்தவி சொல்லிச் சிரித்ததை சுதாகரன் சொல்லவே இல்லை.

சாவிக்கொத்தை வாங்கிக் கொண்டவள் அதை வியப்பாகப் பார்த்தாள். பழைய காலத்து சாவிகள் நான்கைந்து ஒன்றாகக் கோர்க்கப்பட்டு இருந்தது. நல்ல கனமாக இருந்தது.

இங்க எதுக்கு வந்திருக்கோம்? என்றவளை,

கதவைத் திற மது.” என்றான் சுதாகரன். அவனையே ஆச்சரியமாகப் பார்த்தவள், கதவைத் திறந்தாள். திறக்க முடியவில்லை. அத்தனை கனமாக இருந்த அந்த சாவியை அவளால் கையாள முடியவில்லை.

என்னால முடியல, கஷ்டமா இருக்கு.” 

என்ன சாப்பிடுற நீ? இதையே திறக்க முடியலையா?” என்றவன் இலகுவாக கதவைத் திறந்தான்

இங்க ஆரத்தி எடுக்க எல்லாம் ஆள் கிடையாது. உள்ளே போ மது.” என்றான். வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தவள், வீட்டை சுற்றும்முற்றும் பார்த்தாள். சுத்தமாக இருந்தது. அப்போதுதான் கழுவி விட்டதற்கான அறிகுறி தெரிந்தது. சுற்றிவர அறைகள் இருக்க, நடுவில் நிலா முற்றம் இருந்தது. அழகான துளசி மாடம் நடுவில் வீற்றிருந்தது. ஒரு பக்கம் இருந்த மர ஊஞ்சல், நான்கு கனமான சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருந்தது.

மது, நாம இனி இங்கதான் தங்கப் போறோம்.” அவள் பின்னோடு வந்த சுதாகரன் அவளைப் பார்த்தபடி சொன்னான்.

என்என்ன சொன்னீங்க? கம் அகெய்ன்.” 

நாம ரெண்டு பேரும் இனி இங்கதான் இருக்கப் போறோம். இந்த வீடு எங்க தாத்தா அம்மாக்குக் குடுத்தது. வழி வழியா மூத்த பிள்ளைங்களுக்குத்தான் இந்த சொத்து சொந்தம். இப்போ இது நம்ம வீடு மது.” அவன் சொல்லவும் அவனை வியப்பாகப் பார்த்தாள் உமா.

இந்த ஏற்பாட்டுக்கு உங்க வீட்டுல ஒத்துக்கிட்டாங்களா?”

நான் யாருகிட்டயும் பர்மிஷன் கேக்கலையே மது. மகேஷ்கிட்ட சொல்லி வீட்டை க்ளீன் பண்ண சொன்னேன். அவ்வளவுதான்.” 

தெரிஞ்சதுக்கப்புறம் ஒன்னுமே சொல்லலையா?”

சொல்லலை. ஏன் கேக்குறே?” 

இல்லை சும்மாதான் கேட்டேன். வீட்டுல மூத்த பிள்ளை நீங்க. நீங்க வீட்டை விட்டு வெளியே தங்குறதுன்னா…” அவள் முடிக்காமல் இழுக்க, அவளைப் பார்த்து புன்னகைத்தான் சுதாகரன். அந்தப் புன்னகை அவளை ஏதோ செய்ய, முகத்தைத் திருப்பிக் கொண்டாள் உமா.

வீட்டுக்கு மூத்த பிள்ளையா இருந்தது போதும். வீட்டை சுத்திப் பாக்கிறயா மது?” என்றான்

ம்…” ஆமோதித்தவள், அவன் பின்னோடு சென்றாள். நிலாமுற்றத்தைச் சுற்றி நான்கு ரூம்கள் இருந்தது. முதலாவது ரூமைத் திறந்தவன்,

இது தாத்தாவோட லைப்ரரி. அவருக்கு படிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம். அம்மாக்கும் சித்திக்கும் எவ்வளவு கண்டிப்பு இருந்துச்சோ, அதே அளவுக்கு அவங்களை படிப்புல ஊக்குவிச்சவர் எங்க தாத்தா. அவரோட கலெக்ஷ்ன்ஸ் இங்க நிறைய உண்டு. அம்மா, சித்தியோட புக்ஸும் உண்டு. எனக்கு இங்க பொழுது நல்லாவே போகும்.” சொன்னவனைக் கவனிக்காமல் அந்த ரூமை வலம் வந்தது அவள் விழிகள்.

வா மது.” அவளை அழைத்துக் கொண்டு அடுத்த ரூமிற்குச் சென்றான். அது கிச்சன். பழைய அமைப்பிலேயே இன்னும் இருந்தது

சமைப்பியா மது?” என்றான். அவன் கேள்வியில் திருதிருத்தவள், உதட்டைக் கடித்துக் கொண்டாள். ஏதோ தவறு செய்த குழந்தையைப் போல இடம் வலமாகத் தலை அசைத்தவள், அவனைப் பார்த்து விழிக்க பக்கென்று சிரித்தான் சுதாகரன். ஆனால் அவன் பார்வை மட்டும் அந்த உதடுகளில் ஒரு கணம் தங்கி மீண்டது. தான் இழந்திருப்பது எத்தனை பெரிய சொர்க்கம் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னை மீட்டுக் கொண்டவன்,

சமையலுக்கு ஆள் பாருன்னு மகேஷ் கிட்ட சொல்லி இருக்கேன். நீ ரொம்ப கவலைப் படாத மது.” என்றவன் கிச்சனை விட்டு வெளியே வந்தான்.

கிச்சனும், லைப்ரரியும் நிலா முற்றத்தின் ஒரு பக்கம் இருக்க, அடுத்த பக்கம் இரண்டு ரூம்கள் இருந்தன. அதில் ஒரு ரூமைத் திறந்தவன்,

இது உன்னோட ரூம் மது. அடுத்த ரூமை நான் யூஸ் பண்ணப் போறேன். அத்தைக்கிட்ட சொல்லி உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் இங்க கொண்டு வந்திருக்கேன். அரேன்ஜ் பண்ணிக்கோ. வேற ஏதாவது வேணுமா டா?” அவன் கேட்க, அவனை ஆழ்ந்து பார்த்தாள் உமா.

இப்போ எதுக்கு இவ்வளவு ஏற்பாடுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” அவள் நிதானமாகக் கேட்க, புன்னகைத்தான் சுதாகரன்.

இதுக்கு பதில் இப்போ நான் சொன்னா அது ட்ராமா மாதிரி இருக்கும் மது. ஆனா உனக்குப் பிடிக்கலைன்னு சொன்னா தாராளமா சொல்லு. வேற வீடு பாக்கலாம்.” 

அப்போவும் உங்க வீட்டுக்கு போறதுக்கான வாய்ப்புக்கள் இல்லையா?”

நிச்சயமா இல்லை. இது நம்ம வீடு. இங்கதான் நாம இருக்கப் போறோம். இங்க வர்றதுக்குக் கூட நான் எங்க வீட்டைச் சேந்தவங்களுக்கு அனுமதி குடுக்கலை. ஆனா நீ தாராளமா உனக்குப் பிடிச்சவங்களை கூட்டிட்டு வா மது. அதுக்கு முன்னாடி, இந்த வீடு உனக்குப் பிடிச்சிருக்கா?” அந்த நிலா முற்றத்தின் அகண்ட தூணை வருடியவள்,

ரொம்பவே பிடிச்சிருக்கு. க்ளாசிக், அவ்ளோ அழகா இருக்கு. உங்க தாத்தா ரொம்ப ரசிச்சு கட்டியிருக்காங்க.” என்றாள். அவன் முகத்தில் நிறைவான புன்னகையொன்று வந்து போனது

டயர்டா இருப்பே, ரெஸ்ட் எடுதுக்கோ மது.” சொல்லிவிட்டு அவன் ரூமிற்குள் புகுந்து கொண்டான் சுதாகரன்

ரூமிற்குள் வந்த உமா அங்கிருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டாள். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. படுக்கை விரிப்பு முதற் கொண்டு, ஜன்னல் கர்டன் வரை புதியதாக இருந்தது. ஆனால் பொருட்கள் எதுவும் புதிதாக வாங்கப் பட்டிருக்கவில்லை. பழைய தளபாடங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. என்ன, அட்டாச்ட் பாத்ரூம் மட்டும் இருக்கவில்லை. வெளியே ஒரு காமன் பாத்ரூம் இருந்தது. அது தவிர குறை சொல்ல எதுவும் இருக்கவில்லை. ஏதோ, கொஞ்சம் சுதந்திரமாக சுவாசிப்பது போல் இருந்தது உமாவிற்கு. அயர்வாக இருக்கவே அவளையறியாமலே கண்கள் மூடிக் கொண்டன.

                                          ——————————————————————-

தன்னை யாரோ பிடித்து உலுக்கவும் அடித்துப் பிடித்து கண்களைத் திறந்தாள் உமா. எதிரே சுதாகரன் கலவரமான முகத்துடன் நின்றிருந்தான்.

ரொம்ப நேரமா கதவைத் தட்டினேன் மது, ஆன்ஸரே இல்லை. அதான் பயத்துல கதவை திறந்து வந்துட்டேன். ஆர் யூ கே?” என்றான். கட்டிலில் மீண்டும் சொகுசாகப் படுத்துக் கொண்டவள்,

டயர்டா இருக்கு அத்தான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறனேஎன்றாள். அந்தஅத்தான்என்ற வார்த்தையில் ஒரு கணம் உறைந்து நின்றான் சுதாகரன். அவள் விட்ட தூக்கத்தை தொடர, இவன் இமைக்க மறந்து பார்த்திருந்தான். ஒருக்களித்து அவள் படுத்திருக்க, அவள் கழுத்திலிருந்த தாலி தலையணை மேல் கிடந்தது. கலைந்திருந்த கூந்தலும், களைத்திருந்த முகமும், கழுத்துத் தாலியும் அவனை ஏதோ செய்ய, ஒரு பெருமூச்சோடு ரூமை விட்டு வெளியேறினான் சுதாகரன்

ஹாட் பாக்ஸில் சாப்பாடு டைனிங் டேபிளின் மேல் இருந்தது. சமையலுக்கு உடனேயே யாரும் கிடைக்காததால் மகேஷ் இந்த ஏற்பாட்டை செய்திருந்தான். நாளையிலிருந்து சமையலுக்கு ஒரு பெண்மணி ஏற்பாடாகி இருந்தார். போரடிக்கவும் அங்கிருந்த தாத்தாவின் பழையஈசி செயாரில்அமர்ந்தவன், டீவியில் ஃபுட்பால் சானலை போட்டுக் கொண்டு அதில் மூழ்கி விட்டான்

சற்று நேரத்திற்கெல்லாம் உமாவின் அரவம் கேட்க திரும்பிப் பார்த்தான். தோளில் டவளைப் போட்டபடி பாத்ரூமிற்குப் போய்க் கொண்டிருந்தாள். பழமையான வீடு என்பதைத் தவிர, பிள்ளைகளுக்குத் தேவையான நவீன வசதிகள் அனைத்தையும் செய்து வைத்திருந்தார் குந்தவி. முகம் கழுவி அதைத் துடைத்த படி வந்த உமா, டேபிளின் மேல் இருந்த சாப்பாட்டைப் பார்க்கவும்,

பசிக்குது, சாப்பிடலாமா?” என்றாள்.

ம்சாப்பிடலாமே.” என்றவன் டைனிங் டேபிள் செயாரை டீவியை நோக்கித் திருப்பிப் போட்டுக் கொண்டான். மாட்ச் படு சுவாரசியமாக போய்க் கொண்டிருந்தது. அவனின் ஃபுட்பால் க்ரேஸ் அவள் அறிந்த விஷயம் தானே.

என்னை எழுப்பினீங்களா என்ன?” என்றாள் சந்தேகமாக.

ம்சாப்பாடு வந்திருந்துது. சரி சாப்பிடலாமேன்னு எழுப்பினேன்.”

நான் ஏதாவது சொன்னேனா?” அவள் கலவரமாகக் கேட்க அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

இல்லையே மது, எழும்பிப் பாத்துட்டு திரும்பத் தூங்கிட்டே. சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு நானும் விட்டுட்டேன்.” அவன் சொல்லிக் கொண்டிருக்க, இரண்டு பிளேட்களில் உணவைப் பரிமாறியவள் ஒன்றை அவனிடம் நீட்டினாள். கையை அலம்பிக் கொண்டு வந்தமர்ந்தவன், அவள் நீட்டிய பிளேட்டை வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். கண்கள் மாட்ச்சிலேயே இருந்தது

சரியாக அந்த நேரம் பார்த்துகோல்ஒன்று விழ, ‘ஹேய்என்று வாய்விட்டுக் கத்தினான் சுதாகரன். அவன் கத்திய சத்தத்திற்கு இவள் திடுக்கிட, அவனுக்குப் புரையேறியது. இருமிக்கொண்டே தண்ணீரை எடுத்து அவன் பருக, அவன் தலையில் தட்டியவள் மேஜை மேல் இருந்த ரிமோர்ட்டை எடுத்து டீவியை ஆஃப் பண்ணினாள்.

ஐயோ…! மது, நல்ல மாட்ச்ப்ளீஸ்டா.” என்றான் கெஞ்சலாக. அவனை முறைத்தவள்,

சாப்பிட ஒரு அஞ்சு நிமிஷம் தான் ஆகும். அதுக்கப்புறம் மாட்ச்சை பாருங்க.” என்றாள்

ம்ச்ச்என்ன மது, இப்பிடிப் பண்ணுற.” என்று தன் அதிருப்தியை காட்டினாலும், அவள் சொன்னபடி சாப்பிட ஆரம்பித்தான் சுதாகரன். இது இவன் குணமில்லையே! சிந்தனையோடே சாப்பிட்டாள் உமா.

 

 

 

error: Content is protected !!