Yadhu weds Aaru 9

Yadhu weds Aaru 9

அத்தியாயம்

         ஷா தன்னை இவ்வளவு நேரம் முட்டாளாக்கிவிட்டாள் என்பதை உணர்ந்தவன்…தங்களுக்கு இருவருக்குமிடையில் நின்று சண்டைபோட்டுக் கொண்டிருந்த கவி மற்றும் மாஹிரை விலக்கிவிட்டு ஷாவின் அருகில் வந்தவன் அவளை நோக்கி கையை உயர்த்தினான்

 

       சண்டை போடுகின்ற மாதிரி கவியிடம்  காதல் பயிர் வளர்த்துக்கொண்டிருந்த மாஹிர் யாதவ் தங்களை ஒதுக்கித் தாண்டி செல்லவும் அதில் சுய உணர்வு பெற்றவன் உடனே தனது கவனத்தை யாதவ் மற்றும் ஷாவின் மீது திருப்பினான்…அப்பொழுது தான் தனது தமக்கையை நோக்கி யாதவ் கையை உயர்த்திக்கொண்டு அடிக்க செல்கிறான் என்பதை உணர்ந்தவன் உடனே கரத்தை நீட்டி ஷாவை தன்னைநோக்கி இழுக்கவும்…யாதவ் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு வினாடி நிற்க அதற்குள் அவன் மார்பின் மீது சரியாக ஒரு ஐஸ் கிரீம்  வந்து விழுந்திருந்தது….அது சிறிது அவன் முகத்தின் மீதும் தெறித்திருந்தது…

       

     என்ன நடந்தது என்று புரியாமல் ஆனால் யாதவின் நிலையில் சிரிப்பு வர  கவியும்…மாஹிரும் சிரித்துக்கொண்டிருக்க…ஷா தலையில் கைவைத்து என்ன டா இப்படி பண்ணிட்ட என்ற பார்வையுடன் வரும் சிரிப்பை அடக்கியவாறு மாஹிரை பார்த்தவாறு நின்றிருந்தாள்

 

       “டேய்…நீ என்ன லூசா டா…அந்த குட்டிப்பையன் அவங்க அம்மா கூட சண்டைபோட்டு ஐஸ்கிரீம் தூக்கி எரிய போக அது இந்த பஜாரி மேல படபோது அதை தட்டி விடலாம்னு தானே டா வந்தேன்…”என்று யாதவ் சிரிக்கும் மூவரையும் முறைத்தவாறு, மாஹிரை பார்த்துக்கூற

 

    மாஹிர் சிரிப்புடனே “நான் பீ ஆப் மேரே தீதி ஹோ மார்னே வாரிங்களோனு நினைச்சேன்….” நான் கூட நீங்க என் அக்காவை அடிக்க வாரிங்களோனு நினைத்தேன் என்று யாதவை நக்கலாக பார்த்தவாறு கூறினான்..

 

           அதில் கடுப்பாகிய யாதவ் “யாராச்சும் பொண்ணுங்களை அடிப்பாங்களா..அதுவும் இப்படி ஒரு பப்ளிக் பிளேஸ்ல…அதெல்லாம் ஹாராஸ்ட்மென்ட்…தப்பு…”எனவும் ஆருஷா புருவத்தை உயர்த்தி கண்ணை சுருக்கி பார்த்த முதல் நாள் நீ என்ன பண்ண என்ற கேள்வியை பார்வையில் ஏற்றி கேட்கவும்…அந்த கேள்வியை சரியாக புரிந்தவன்”அன்னைக்கு  நீ பண்ணது அப்படி அதான் அடிச்சேன்…”என்றவாறு அவளின் பார்வையின் கேள்விக்கு வார்த்தைகள் மூலம் பதில் தந்தான் யாதவ்…

 

      அவ்வளவு நேரம் கேலி சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாஹிர் என்னது…என் திதியை த்தப்பட் மார்னா…என் அக்காவை அறைந்தாயா…என்று வெகுண்டு எழுந்தவன்…அதற்கு பிறகு  யாதவ் பேசிய பேச்சில் கொதிநிலைக்கே சென்றுவிட்டான்

            “நீ எல்லாம் ஒரு பொண்ணு தானா டி…எப்ப பார்த்தாலும் பொய் பித்தலாட்டம்…ச்சீ…எப்ப நீ என் வாழ்க்கைல வந்தயோ அன்னையில இருந்து எல்லாம்

அசிங்கம் தான் எனக்கு…அன்னைக்கு வீடியோ…இன்னைக்கு இது…இன்னும் என்ன என்ன இருக்கோ…”என்று அவள் இன்று தன்னை இப்படி ஏமாற்றிவிட்டாளே என்று கோவமாக நினைத்தவாறு என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எகிறினான் 

யாதவ்

 

    அதற்கு ஷா என்ன மறுமொழி கூறி அசிங்கப்படுத்திருப்பாளோ அதற்குள் இடையில் புகுந்த மாஹிர்…

 

     “ஆப்கி ஹிம்மத் கேய்சே ஹு…”உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும் என்றவாறு யாதவின் சட்டையை பிடித்திருந்தான்

 

         

   அதில் அதிர்ந்த கவி முறைப்புடன் மாஹிரை விலக்க வருவதற்குள்…”மாஹிர்ர்ர்…”என்ற ஷாவின் ஆங்கார குரல் அழுத்தத்துடன் அதே நேரம் அமைதியாக ஒலித்தது

              அதில் ஷாவை திரும்பி பார்த்தவன் “தீதி…”என்று மாஹிர் கூற வர…”கெட் அவுட் திஸ் பிளேஸ் ரைட் நொவ்…”என்றவுடன் எதுவும் பேசாமல் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறினான் மாஹிர்

             அவன் வெளியேறுவதை பார்த்தவள் தங்களது பயண பொதிகளை எடுத்துக்கொண்டு யாதவை நிமிர்ந்து ஒரு இளக்காரமான பார்வை பார்த்தவள் “மைண்ட் யுவர் ப்ளடி ****** words ….otherwise ….”என்றவள் வலதுகையின் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும்  கத்தரிகோல் போல் ஆட்டியவள் கட் பண்ணிருவேன் என்ற செய்தியுடன் அவர்களை விட்டு சென்றாள்

       முதலில் மாஹிர் தனது சட்டையின் மீது கைவைத்ததில் உட்சபட்ச கோவத்தில் நின்றவன்…அடுத்து ஷா மாஹிரின் செயலை ஒரு நிமிடத்தில் தடுத்து ஒரு வார்த்தையில் வெளியேற வைத்ததை ஆச்சரியமாக பார்த்தான்…இப்படி மட்டும் நாம் கவியிடம் கூறினாள் என்ன ஆகும் என்று யோசித்தவாறு நின்றிருந்தவனுக்கு அடுத்து ஷா கூறிய வார்த்தைகள் புரிய அவளது செய்கை ஆஆ என்ன பொண்ணு டா இவ என்பதுபோல் வாய் பிளக்க வைத்தது

        “எதை கட் பண்ணுவாளாம்…”என்று யாதவ் சத்தமாக கேட்டு தொலைய…அவ்வளவு நேரம் என்ன பொண்ணு சார் இவங்க என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்த கவிக்கு யாதவின் வார்த்தைகள் தன்னாலே பின்வரும் வார்த்தைகளை சுயநினைவின்றி வரவழைத்திருந்தது….

          “உங்க குகுகு.”என்று கவி ஆரம்பிக்கவும்…எப்பொழுதும் போல் அவளது முட்டாள்தனத்தை அறிந்தவன் பதறி “கவி…”என்று யாதவ் அழைக்கவும் “உங்க குட்டி நாக்குனு சொல்ல வந்தேன் அண்ணா சார்…”என்று பதட்டத்துடன் கூற அதில் ஆசுவாச மூச்செறிந்த யாதவ் கவியை முறைத்தவாறு “இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா..”

         “யாரு அண்ணா சார்…”என்று புரியாமல் அவனது முகத்தை பார்த்துவினவ

              “நீ தான்…”என்றவன் அவளிடம் ஒன்றும் பேசாமல் பயணப்பொதிகளை எடுத்துக்கொண்டு வெளியேறினான்…

               இந்த சம்பவம் தான் மாஹிர் ஷாவிடம் பேசாமல் இருப்பதற்கும்…யாதவ் கவியிடம் பேசாமல் இருப்பதற்கும் காரணம்

      

 

இன்று….

       சித்தார்த்துடன் சிறிது நேரம் பொதுவாக பேசிவிட்டு அந்தஇடத்தை விட்டு நகர்ந்தவள் மாஹிர் இருக்கும் இடத்தை தேடிச்சென்றாள்

         அடுத்த ஷாட்டிற்காக அனைத்தையும் தயார் செய்துக்கொண்டிருந்த மாஹிரை சிரிப்புடன் நெருங்கியவள் “மஹி…”என்றழைக்க அவனோ திரும்பாமல் தனது வேலையை பார்த்துக்கொண்டிருந்தான்

         “மஹி…உன் கூட பேசணும்…எத்தனை நாளைக்கு என் முகத்தை பார்க்காம என்கூட தேவைக்கு மட்டும் பேசிட்டு இருக்க முடியும்னு நினைக்குற…

       இதான் கடைசிவாய்ப்பு இப்ப பேசாட்டி என் கூட உனக்கு பேச பிடிக்கலைனு நான் முடிவு பண்ணிக்குவேன்….அப்புறம் எப்பயும் பேச மாட்டேன்…யோசிச்சுக்கோ… “என்று மாஹிர்க்கு அருகில் கைகட்டி நின்றவாறு அவனது முகத்தை கூர்மையாக பார்த்து கூறினாள் ஆருஷா

      இது இதுதான் ஆருஷா….எவ்வளவு நெருங்கி பழகியவர்களாக இருந்தாலும் தன்னை விலக்குபவர்களை…..யாராக இருந்தாலும் ஒரே ஒரு நொடி…ஒரே ஒரு வாய்ப்பு அது மட்டும் தான்…அதற்கு பிறகு அவ்வளவு தான் தூக்கி எறிந்துவிட்டு சென்றுகொண்டிருப்பாள்…தன்னை பிடிக்காத இடத்தில இருக்க விருப்படாதவள்…அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு அவளது அப்பா…சிவா…அவளுக்கு தெரியும் சிவா தன்னை  விட்டு விலகியபோது மீண்டும் ஒரே ஒரு தடவை அவனிடம் சென்று பேசியிருந்தாளோ நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை என்று கெஞ்சி இருந்தாலோ என்னவோ அவர்கள் பிரியாமல் இருந்திருப்பார்கள்…சிவா எதிர்பார்த்தும் அதான்…நானும் அனைவரும் ஒன்றா…நான் உன்னிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா…அவ்வளவு தானா…என்பதுபோல்…ஆனால் ஷா எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவனை பிரிந்தாள்…

        

     அதில் அதிர்ந்த மாஹிர்  ” என்னை விட ஜயதா வோ ஆப்கி இம்பர்ட்டண்ட் ஹை…”உங்களுக்கு என்னை விட அவர் தானே முக்கியம்  என்று தாயிடம் அடிவாங்கிய குழந்தை தான் முக்கியமா இல்லை அண்ணன் முக்கியமா என்று வினவும் பாவத்தில் கேட்டான் மாஹிர்….

        அவன் கேள்வியில் ஷாவிற்கு சிரிப்பு வரும்போல் இருந்தது…”லூசா டா நீ…அவன் யாரு எனக்கு…நீ என் தம்பி டா…நான் கோவப்பட்டது நீ அவன் சட்டையை பிடிச்சேன்னு இல்லை..என் பிரச்சனையில் நீ எதுக்கு வரேன்னு தான்…”உன்னை விட அவன் முக்கியம் என்று கோபப்படவில்லை என்பதுபோல் ஷா சொல்லகடைசி வார்த்தைகள் மாஹிரை இன்னும் கோவப்படுத்தியது…

            தீதி..நான் ஆப்கா சோட்டா பாய்…”நான் உங்களுடைய தம்பி என்று மாஹிர் கோபத்துடன் முகத்தை கோணிக்கொண்டு கூற

               ஆமாம்…நீ என் தம்பி தான்…அதுக்காக…என் பிரச்சனைகளை நானா தான் பார்த்துக்கணும்…நீ கிடையாது புரியுதா…இன்னைக்கு வருவ…நாளைக்கு வருவ…அதுக்கப்பறம்…”என்று ஷா கூறிக்கொண்டிருக்கும் போதே…இடையில் புகுந்து மாஹிர் எதுவோ கூற வர…அவனை கைநீட்டி தடுத்தவள்

           “லெட் மீ பினிஷ் மஹி…எப்பயும் உன்கூடவே இருப்பேன் தீதினு சொல்லலாம்…இந்த வாழ்க்கை நமக்கு என்ன வைச்சு இருக்குனு யாருக்கும் தெரியாது…என்ன வேணும்னாலும் நடக்கலாம்..பெத்த அம்மா அப்பனை இல்லைனு இல்லைனு போகும் போது அண்ணன் தம்பிலாம் எத்தனை நாளைக்குஎன் பிரச்சனையே என் கஷ்டத்தை நான் தான் solve  பண்ணிக்கணும்… என் பிரச்சனைல அடுத்தவங்க தலையிடுறது இல்லை அவங்க கேர் பண்றது அப்படின்றதுஎன் காய்ச்சலுக்கு டாக்டர்கிட்ட போகாம நானா போடுற பாராசிட்டமால் மாதிரி…அது எனக்குள்ல போய் நோய் கொண்டுவர கிருமி கூட சண்டைபோட்டுகிட்டு இருக்க என் நோய் எதிர்ப்பு சக்திகிட்ட போய் நீ சண்டை போடாதே….இவனும் நம்ம ஆளு தான்…கம்முனு கிட நான் பாத்துக்கிறேன் அப்படினு சொல்லிட்டு என் எதிர்ப்பு சக்தியை அமைதியாகி வைச்சு எனக்கு தற்காலிகமா காய்ச்சலை நிப்பாட்டி வைக்கும்…ஆனால் குணப்படுத்தாது…அப்பறம்  அதை எடுக்குற வரைக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் இருப்பேன்..அந்த தற்காலிக தீர்வு ரொம்ப நாளைக்கு தொடர்ந்துச்சுனா ஹார்ட் அட்டாக்…ஸ்ட்ரோக்…அப்படினு பெரிய பிரச்சனைல விட்டுரும்…அதே மாதிரி தான் இதுவும்….இன்னைக்கு நீ பார்த்துகிறேன்னு நான் என் எதிர்ப்பு சக்தியை வைச்சு போராடம இருந்தேனு  வை…நாளைக்கு நீ இல்லாதப்ப என்னை காப்பாத்திக்க முடியாம போயிரும்…இன்னைக்கு அனுபவிக்குற கஷ்டத்துக்கு பயந்து வாழ்க்கை முழுக்க கோழையா இருக்க முடியாது நான்…” 

என்று ஆருஷா என் வாழ்க்கையில் எனக்கு நான் மட்டும் தான் உதவி வேறு யாரும் வேண்டாம் என்று கூறினாள்

      ஷாவை போன்ற பெண்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்…அவர்கள் தைரியம் நேர்மை தான் அவர்களுக்கு அழகு..அவர்கள் கடந்துவந்த பாதை மிக பெரிது…அங்கும் நம்பிக்கைகள் இருந்திருக்கும்…அதுவும் மிக கோரமாக உடைக்கப்பட்டிருக்கும்…அதிலிருந்து மீண்டு வந்து நம்பிக்கை என்னும் வஸ்துவையே தங்கள் வாழ்க்கையில் இருந்து  அழித்திருப்பார்கள்…ஷாக்கள் இப்படி இருப்பது தான் அவர்களுக்கு நல்லது

 

     தீதி சொல்வதும் சரி தானே ஒரு பெண் மீன் கேட்டால் அவளுக்கு மீன் பிடித்து தரவேண்டாம்…மீன் பிடிக்க கற்று தாருங்கள் என்று நினைத்த மாஹிர் சரி என்பதுபோல் தலையாட்டினான்…

        தட்ஸ் மை பாய்…”என்ற ஷா அவனை ஒரு  நிதான பார்வை பார்த்தவள் “என்னைக்கு தான் உங்க காதல் காவியத்தை வந்து சொல்றிங்கனு பாக்குறேன்…”என்றவாறு அவனின் தோளில் தட்டிவிட்டு திரும்பி செல்லவும்…

          ஷாவின் நிதான பார்வையில் குழம்பியவாறு நின்றவன் அவளின் கேள்வியில் தீதிக்கு எப்படி தெரியும் என்று சிறிது குழம்பி….தீதிக்கு தெரியும் என்று நிறைய சந்தோசப்பட்டு…”தீதி…”என்று அழைத்தவாறு ஷாவின் பின்னே ஓடினான்…

           தீதிதீதி…”

            என்ன டா…”

           ஹொவ் டூ யு நோ…தீதி…”என்று கண்களை சுருக்கி கொண்டு எப்படி கண்டுபிடித்தீர்கள் என்பது போல் கேட்டான்…

          மொச பிடிக்குற நாய் மூஞ்சை பார்த்தா தெரியாது…”

           மாஹிர்க்கு சாதாரண தமிழ் புரியும்…ஆனால் இந்தமாதிரி தமிழ் எல்லாம் புரியாது…”கியா தீதி…கியா மூஞ்சி…”என்று புரியாமல் மாஹிர் கேட்கவும்

             ஹா ஹா…நானா கண்டுபிடிச்சேன்…எப்படி உங்களுக்குள்ள லவ் ஸ்டார்ட்…”என்று ஷா கேட்கவும் கவி மற்றும் இவனுக்கான முதல் சந்திப்பை கூற ஆரம்பித்தான்….(இவன் வாயில கேட்டோம்னா அவ்வளவு தான்….நமக்கு கொஞ்சம் தெரிஞ்ச தமிழும் மறந்து போயிரும்…அதனால நாம பிளாஷ் பாக் போயிருவோம்எல்லாரும் மேலே பாருங்க…)

 

ஐந்து மாதங்களுக்கு முன்பு….

  

 தர்மா ப்ரொடக்ஷ்ன்ஸ்

 

                      தீதிபாலு  சார் சே நான் பாத் கர்லியா ஹை..அரை கண்டே மே வந்துறேன்… “சார் கிட்ட பேசிட்டேன் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று தொலைபேசியில் ஷாவுடன் பேசியவாறு தனது காரை எடுக்க வாகன தரிப்பிடத்துக்கு வந்தான் மாஹிர்

      அப்பொழுது அவனது காரை திறக்க ஒரு பெண் போராடிக்கொண்டிருந்தாள்மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள்…புட்டம் வரை நீண்ட பின்னிய கூந்தல்…அவள் ஒவ்வொரு முறையும் வலிந்து கதவை இழுக்கும் போது அசைந்தாடும் கூந்தல் ஒரு ரிதத்தில் இயங்குவது போலிருந்தது…பதட்டம் இல்லாமல் ரசிப்பு தன்மையோடு அந்தப்பெண்ணை  நெருங்கினான் மாஹிர்

      ஹலோ…”என்று அவனின் திடீர் குரலில் பயந்து துள்ளி குதித்து திரும்பினாள் அந்த பெண்…பதட்டம் பயம் கலந்த குழந்தை முகம்…வெளிர் மஞ்சள் நிறம்…சிறிய கண்கள் ஒளிரும் வீண்மீன்…முக்கோண மூக்கு…ஆஹ் என்று பயத்தில் இருந்ததால் பிளந்த அரைவட்ட செவ்வாய்…லாவெண்டர் நிற இதழ்கள்…மொத்தத்தில் ஒளிரும் அண்டத்தின் விண்மீன்கள் அனைத்தையும் கொட்டி செய்த பெண்ணவள்

 

    அவளை பார்த்தது பார்த்தவாறு அப்படியே நின்று விட்டான்…இவளை விட அழகான பலகோடி  பெண்களை எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் கடந்திருக்கிறான்……ஆனால் இவளிடம் மட்டுமே ஆண் காந்தமான அவனின் ஈர்ப்பு இருக்கிறது…

           ‘”யாரு நீங்க…என்ன வேணும்….”என்று அவள் கேட்டவுடனே…முதலில் தன்னையறியாமல் ஒன்றுமில்லை என்று தலையாட்டியவன் உடனே சுதாரித்து “மேரே கார்…”என்று கூறவும் அந்தப்பெண் திருதிருவென்று முழித்தாள்…

     இல்லை…பிளாக் கலர் கார்ல தான் மொபைல் இருக்கு எடுத்துட்டு வா அப்படினு அண்ணா சார் சொன்னாரே…”என்று அந்த கருப்பு நிற காரை பார்த்தவாறு கூறினாள்

        

           அச்சா…இட்ஸ் மையின்”என்றவன் கையில் இருந்த கார் கீயை அழுத்த வண்டியிலிருந்து சத்தம் வந்தது…அவனை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தவள் “எங்கே இருக்குனு தெரியலையே…”என்று உதடுகளை பிதுக்கி கையை ஆட்டி கூறவும் மாஹிர்க்கு அனைத்தும் vlc மீடியாவில் ஸ்லொவ் மோஷன் வைத்ததுபோல் அவள் செய்யும் ஒவ்வொரு செய்கையும் மிகமெதுவாக தெரிந்தது…கூடவே ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் பறப்பது…லட்சம் கோடி பூக்கள் ஒரே நேரத்தில் பூப்பது என்று அனைத்து காதலுக்கான அறிகுறிகளும் தலைவனுக்கும் தோன்ற ஆரம்பித்துவிட்டது…

           மாஹிரின் ஆவென்ற பார்வை கவியுனுள் சிறிது கோபத்தையும் பதட்டத்தையும் கிளப்பியது…”இந்த மைதா மாவு என்ன இப்படி பாக்குறான்…”என்றவாறு மனதினுள் பேசியவள் அவனின் முன் கையை ஆட்டவும் சுயநினைவுக்கு வந்தவன்…

           

                சீ…” என்றவாறு சுற்றி பார்த்து தனது தடுமாற்றத்தை சமன்செய்ய முயன்றபோது  அவர்கள் இருக்கும் இடத்திற்கு பின் வரிசையில் இருந்த ஆடம்பர கருப்பு நிற ரோல்ஸ் Royce காரை பார்த்தவன்…குறும்பு சிரிப்புடன்…(அங்கு இருந்த பத்து பதினைந்து நிற கார்களில் இது இரண்டை தவிர வேறு கருப்பு நிற கார்கள் இல்லை)

            யு மஸ்ட் டெல் யுவர் நேம்…இப் ஐ பைண்ட் யுவர் கார்…”என்று மாஹிர் கூறினான்

       இவன் என்ன டா பைத்தியம்…சும்மா கேட்டு இருந்தாலே சொல்லிருப்பேனே….என்று நினைத்தவள் சரி என்பதுபோல் தலையாட்டினாள்

            உடனே கார் நிற்கும் இடத்திற்கு மாஹிர் செல்ல அவன் பின்னாடியே சென்றாள்…

   காரை பார்த்தவுடன் “ரொம்ப தேங்க்ஸ்…என் பேர் கவி…யாதவ் கிருஷ்ணா சாரோட மேனேஜர்…”என்று கூற அவ்வளவு நேரம் அவனை சுற்றியிருந்த மாய வலை அறுபட…ஒரு இயலா பார்வையுடன் அவளிடமிருந்து விலகினான்

      பின்னிருந்து யாதவின் குரல் “கவி..”என்ற அழைப்புடன் வந்துகொண்டிருந்தது

        கீயை மறந்து வைச்சுட்டு வந்துட்ட…உன்கிட்ட சொன்னதுக்கு நானே வந்துருக்கலாம் போல….”என்ற யாதவ் சலிப்புடன் கூறியவாறு வந்திருந்தான்..

      ஆறு மாதத்திற்கு முன் தான் ஷாவிற்கு  கிடைக்கவிருந்த களங்கம் ஒளிப்பதிவு வாய்ப்பை புது ஆட்கள் என்பதால் வேண்டாம் என்று யாதவ் கண்டிப்பாக கூறிவிட…அந்த வாய்ப்பு தட்டி போய் ஷாவின் லட்சியம் கைசேர வந்து தூரம் போனது…அதனால் தான் யாதவின் மேனேஜர் என்றதும் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்பதுபோல் வந்துவிட்டான் மாஹிர்

      அடுத்த இரண்டு மாதங்கள் தூங்கினால் கவி…எழுந்தால் கவி…நடந்தால் கவி…உட்கார்ந்தால் கவி என்று கவி பைத்தியம் முற்றிப்போய் வெளியையும் சொல்லமுடியாமல்…தனக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் துயரப்பட்டு போனான்…

   இப்படியே போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் சிவாவின் திருமணம்…அங்கு இவனால் வரமுடியாத சூழல்…ஷா மட்டும் தனியாக செல்ல ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அழைப்பெடுத்து ஷாவை அலைக்கழித்து கொண்டிருந்தான்

      அப்படி மாஹிர் அழைப்பெடுத்த போது தான் ஷா கால்தடுக்கி யாதவ் மீது விழ..அவளது கைபேசி தண்ணீற்குள் விழ…அதற்கு பின்பு நடந்தது அனைத்தும்  உலகறிந்த விஷயம்

        மீண்டும் அழைப்பெடுத்த போது ஷாவின் கைபேசி அணைக்கப்பட்டிருக்கிறது என்று வந்ததால் வேகம் வேகமாக திருமண மண்டபத்திற்கு வந்தவனுக்கு அதிர்ஷ்டமாக இவனை போலவே அங்கு யாதவை தேடி சுற்றிக்கொண்டிருந்த கவி மாட்டியது தான்

      பிறகு அவளிடம் பேசி பேசி…இந்த மூன்று மாதத்தில் அவளது மனதையும் கரைத்து…கொஞ்சம் தமிழையும் கற்றுக்கொண்டு கவிக்கு காவிய காதலனாகி விட்டான் மாஹிர்.

 

error: Content is protected !!