காதல் சதிராட்டம் 26b

காதல் சதிராட்டம் 26b

ஆதிராவின் பதற்ற சப்தத்தில் உறைந்துப் போனவனின் மூளை. காற்றில் கலந்து வந்த கருகிய வாசத்தில் மீண்டும் உயிர்ப் பெற்றது.

இரண்டு எட்டாக சமையல் கட்டை நோக்கி விரைந்தவனின் கண்கள் அங்கே வீசிய புகையில் கலங்கியது.

கண்ணைக் கசக்கி மீண்டும் பார்த்தான்.

ஆதிராவின் புடவை முந்தானையில் தீ பற்றிய தீ கொஞ்சம் கொஞ்சமாக அவளை முழுவதாய் முழுங்கும் பொருட்டு முன்னேறிக் கொண்டு இருந்தது.

அதைக் கண்ட வினய் அவசரகதியில் ஓடி அவள் மேல் இருந்த புடவை முந்தானையை கழற்றி எறிந்தான்.

அவள் இடையில் சொருகி இருந்த புடவையை முற்றிலும் அவன் சரசரவென இழுக்க ஆதிராவோ அந்த பதற்றத்திலும் வினய்யின் முகத்தை  மட்டும் தான் கூர்ந்துக் கவனித்து இருந்தாள்.

அவனது பார்வை தவறிக் கூட அவளது அங்கங்களின் மீது விழவில்லை.

அவனுடைய முகம் முழுக்க பதற்றம் மட்டும் தான் தெரிந்தது.

எள்ளளவு கூட காமம் தொணிக்கவில்லை அந்த கண்களில்.

அவன் அவளுடைய சேலை தலைப்பை முழுவதுமாக இழுத்து முடித்துவிட்டு தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டு திரும்பிப் பார்த்தவன்.

பார்த்தவனது கண்கள் கூர்ந்து விழுந்தது அவளுடைய தீக் காயம்பட்ட உள்ளங்கைகளின் மீது தான்.

அவளுடைய இரு கைகளும் பற்றி எறிந்த முந்தானையை பிடிக்கப் போய் காயம்பட்டு இருந்தது.

அதனால் தொடர்ந்து அந்த புடவையை அவிழ்க்க முடியாமல் சப்தம் போட்டு இருந்தாள். வினய் சரியான நேரத்திற்கு வந்து அவளுடைய சேலையை முற்றிலுமாக கலைந்து அவளைக் காப்பாற்றி இருந்தான்.

நெருப்பை அணைத்ததும் தன் அங்கங்களின் மீது தான் வினய்யின் கண்கள் விழும் என்று கணித்து இருந்தவளின் எண்ணத்தில் மீண்டும் ஒரு பெரும் அடி.

அவளுடைய செழித்த அழகில் நிலைக் கொள்ளாமல், மாறாக காயம்பட்ட அந்த இரண்டு  உள்ளங்கைகளின் மருந்திடுவதற்காக   முதலுதவிப் பெட்டியைக் கொண்டு வந்தவனையே இமைக்க மறந்து பார்த்தாள்.

பொதுவாக ஆடையோடு இருந்தாலே சில ஆண்கள் மனம் சலனப்படும். ஆனால் நான் இவன் முன்பு பாதி ஆடையோடு தான் நிற்கிறேன்.

வீட்டினுள் யாரும் இல்லை. என் கைகளிலும் அடிப்பட்டு இருக்கிறது. இதையே சந்தர்ப்பமாக கொண்டு அவன் என்னை வலுக்கட்டாயமாக நெருங்க முயலவில்லை.

அப்படியானால் இவன் தேவை என் உடல் அல்ல.

என் உயிரும் உணர்வும் மட்டும் தான்.

இவன் நிச்சயமாக அப்படி செய்து இருக்க வாய்ப்பே இல்லை. காமம் மட்டுமே கண்ணாக கொண்டவனின் செயல் இப்படி இருக்காது.

உறுதியாக அந்த கடிதத்தில் இருந்த வரிகள் வினய்யிற்கு சொந்தமான வரிகள் அல்ல.

இடையில் ஏதோ தவறு நிகழ்ந்து இருக்கின்றது.

அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தவள் கண்களோ இப்போது எந்த சந்தேகமும் குழப்பமும் இல்லாமல் வினய்யின் முகத்தை தெளிவாக நோக்கியது.

“ஆதிரா ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக்கோ.. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு வேற ட்ரெஸ் மாத்திக்கிட்டு நாம வேகமாக ஹாஸ்பிட்டல் போயிடலாம். ” என்று பதற்றமாக பேசியவனை மறுதலிப்பாக முறுவலித்தாள்.

“நீயே கட்டுப் போட்டுட்டே இல்லை. இதுவே போதும் வினய், ஹாஸ்பிட்டல்க்குலாம் வேண்டாம். எனக்கு இப்போ ட்ரெஸ் மட்டும் மாத்தி விட முடியுமா?” என்று காயம்பட்ட தன் இரண்டு கைகளைக் காட்டி கேட்க வினய் ஓடிப் போய் ஆதிராவின் அறையில் இருந்து நைட்டியைக் கொண்டு வந்து நின்றான்.

அதைப் பார்த்ததும் ஆதிராவின் முகம் மீண்டும்  விரிந்தது.

அவன் சேலையை எடுத்து வந்து இருந்தால் புடவை ஃப்ளீட்ஸ் எடுத்து இருப்பில் சொருக வேண்டிய சங்கடம் நேர்ந்து இருக்கும்.

சுடிதார் எடுத்து வந்து இருந்தால் அவளுடைய அடிப்பட்ட கைகள் உள்ளே செல்ல சிரமப்பட்டு இருக்கும்.

இதை எல்லாம் மனதினுள் கொண்டு தான் அவன் நைட்டியைக் கொண்டு வந்து இருந்ததைப் பார்த்து மெச்சுதலாக புன்னகைத்தாள்.

அவளை நெருங்கி நைட்டியை    அணிவித்துவிட்டு அவளைப் பார்த்துக் கேட்டான்.

“எப்படி சேலையிலே தீப்பிடிச்சது?”

“முகத்திலே பட்ட சப்பாத்தி மாவை சேலை தலைப்பை எடுத்துத் துடைச்சுட்டு கீழே போடும் போது அதோட நுனி அடுப்பு மேலே பட்டும் இருக்கு போல. அதான் பரபரனு தீப்பிடிச்சுடுச்சு. “

“ஆதிரா இனி கவனமா வேலை செய்யணும். சரி இரு நான் சமையல் பண்ணிக் கொண்டு வரேன். ” என்று உள்ளே சென்றவனின் மீது படிந்தது ஆதிராவின் பார்வை.

எங்கே எப்படி தவறு நிகழ்ந்தது?

யார் செய்த வஞ்சனை இது?

💐💐💐💐💐💐💐💐💐

கொடைக்கானலில் இருந்து ஊட்டி வந்தடைந்த ப்ரணவ்வும் உத்ராவும்  தாஜ் ரிசார்ட்டின் வாயிலில் எதிரும் புதிருமாக நின்றுக் கொண்டு இருந்தனர்.

“ப்ளீஸ் உத்ரா உள்ளே வா. அடம்பிடிக்காதே. “

“இல்லை ப்ரணவ். நீ வேகமா போயிட்டு வினய் அண்ணா சொன்ன P.A வை பார்த்துட்டு வா. நான் இங்கேயே நிற்கிறேன். நீ வந்ததும் அப்படியே பாஸ்போர்ட் ஆபிஸ்க்கு போய் உனக்கு பாஸ்போர்ட் அப்ளை பண்ணிடலாம். ” என்றவளை வருத்தமாகப் பார்த்தான்.

“ப்ளீஸ் உத்ரா. இதையே பேசிட்டு இருக்காதே. நான் போற வரைக்கும் நீ என் கூட ஜாலியா பேசலாம்ல. நான் நல்ல மெமரீஸ்ஸோட இங்கே இருந்து போவேன் இல்லை. “

“எப்படி எப்படி?  நான் உன் கிட்டே நல்ல படியா பேசணும் அதைக் கேட்டு நீங்க ஜாலியா வெளிநாடுக்கு போயிடுவீங்க இங்கே நான் உன்னை நினைச்சுட்டே சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கணுமா? ஒழுங்கா ஓடிப் போயிடு. அந்த PA வை பார்த்துட்டு சீக்கிரமா வா.  நான் இங்கே வெளியிலே இருக்க பார்க்ல வெயிட் பண்றேன் “சொன்னவள் ரிசப்ஷனுக்கு வெளியே இருந்த அந்த பூங்கா போன்று அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் சம்மணமிட்டு அமர்ந்துவிட்டாள்.

அவளைக் கிளப்ப வழி அறியாது ப்ரணவ் எதுவும் பேச முடியாமல் அந்த P.A வை தனியாக சந்திக்க சென்றான்.

அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டு இருந்த  உத்ராவின் உள்ளக் கொதிப்பு எல்லாம் கண்ணீராக வெளிவரத் துவங்கியது.

அவன் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து தன்னை  விட்டு மெது மெதுவாக விலகியதையே அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் பல காலம் மனதிற்குள் புழுங்கி இருக்கின்றாள்.

ஏனோ தனக்கு சொந்தமான ப்ரணவ் வேறு ஒருவளுக்கு சொந்தமானதை அவளால் முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எதையோ இழந்த ஒரு வெற்றிடம் அவளை ஆக்கிரமித்து இருந்தது.

அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக தான் இவள் வைபவ்வின் பெயரை ப்ரணவ்வின் முன்னால் கொண்டு வந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போல இப்போது தான் ப்ரணவ் கொஞ்சம் கொஞ்சமாக முன்பு போல அவளிடம் பேசத் தொடங்கி இருந்தான்.

ஆனால் மீண்டும் ஒரு  பெரிய இடியை இறக்கிவிட்டு செல்வான் என்று சிறிதும் அவள் எதிர்பார்க்கவில்லை.

ப்ரணவ் இல்லாமல் எப்படி இருக்க முடியும் என்று யோசித்தவளது கண்களில் தானாக நீர் நிறைந்தது.

அதைத் துடித்தவாறே எதிரில் பார்த்தவளது கண்கள் அப்படியே விக்கித்துப் போய் நின்றது.

அங்கே அந்த பூங்காவின் மரங்களுக்கு இடையில் சல்லாபத்தில் இருந்த அந்த ஜோடியைப் பார்த்து தான் இவள் திகைத்து எழுந்துவிட்டாள்.

அவள் முகம் முழுக்க வெறுப்பு  சூழ்ந்து கண்கள் கோபத்தில் தீஞ்சுவாலையாக எரிந்துக் கொண்டு இருந்த நேரம் அவள் தோள்களில் ஒரு கை வந்து விழுந்தது. திரும்பிப் பார்த்தாள்.

ப்ரணவ்வை கண்கள் காட்டியது.

“உத்ரா என்னோட போனை உன்னோட பேக்லயே விட்டுட்டு போயிட்டேனஅது கொஞ்சம் எடுத்துத் தர்ரீயா. அண்ணாவுக்கு போன் பண்ணனும் ” என்றுக் கேட்க உத்ராவிடம் சிறு அசைவு கூட இல்லை. அவள் கண்கள் எதையோ திரும்பி வெறித்தபடியே இருந்தது.

ப்ரணவ் அவள் பார்வை போன திசையை பார்க்க அங்கே கண்ட காட்சியைக் கண்டு அவன் அதிர்ந்துப் போனான்.

தன் காதலி வேறு ஒருவருடன் சல்லாபத்தில் இருக்கும் காட்சியைக் கண்டால் யார் தான் அதிர மாட்டார்கள்?

வைஷாலி வேறு ஆணுடன் இருப்பதைப் பார்த்த ப்ரணவ் அடிப்பட்ட வலியுடன் திரும்பி  உத்ராவைப் பார்க்க அவள் ஆதரவாக அவனை நோக்கினாள்.

“உத்ரா அந்த போனை எடுத்துக் கொடு.” என்றவனது குரலில் உணர்ச்சி இல்லை.

அவள் அவனுடைய போனை நீட்ட வைஷாலிக்கு போனில் அழைத்தவன் எதிரில் இருந்த வைஷாலியின் முகத்தைக் கூர்ந்து கவனிக்கலானான்.

“ஹலோ வைஷாலி நான் ஃபேமிலி கிட்டே பேசி சம்மதம் வாங்கிட்டேன். நீ பாஸ்போர்ட் விஸாலாம் ரெடி பண்ணிடு. ” என்று அவன் அலைபேசியில் சொல்லிவிட்டு எதிரில் இருந்த வைஷாலியின் முகத்தைப் பார்த்தான்.

அவளது முகத்தில் அதிர்ச்சி.

அவனுடைய குடும்பம் இதற்கு சம்மதிக்காது என்று மனதினுள் பெரும் நம்பிக்கை வைத்து இருந்து இருப்பாள் போல. திணறி திணறி வந்தது அவளின் மொழிகள்.

“ப்ரணவ் நான் ஒரு உண்மையை சொல்லுவேன் நீ பொறுமையா கேட்கணும். ” என்ற பீடிகை அவளிடம்.

“ம் சொல்லு” என்ற குரலில் இயந்திரத்தன்மை.

“நான் போட்ட கண்டிஷன் எல்லாம் கேட்டு நீயே என்னை விட்டு போயிடுவேனு நினைச்சேன்.  ஆனால் நீ ஓகே சொல்லுவேன்னு நான் எதிர்பார்க்கல. நம்ம ரெண்டு பேரும் soul partner இல்லை. ஐ யம் ரியலி சாரி நம்ம ரிலேஷன்ஷிப் எனக்கு வொர்க் அவுட் ஆகாதுனு தோணுது. லெட்ஸ் ப்ரேக் அப். ” என்று அவள் சொல்ல அவனோ ” ஓகே ” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு அங்கிருக்க பிடிக்காமல் ரிஸார்ட்டை நோக்கி நடந்தான்.

அவனது வேக நடைக்கு உத்ராவால் எடு கொடுக்க முடியவில்லை.  கிட்டத்தட்ட அவன் பின்னால் ஓடவே ஆரம்பித்து இருந்தாள்.

“டேய் ப்ரணவ் நில்லு டா. ப்ளீஸ் டா இப்படி அமைதியா போகாதே  நாம அவளை கிழி கிழினு கிழிக்கலாம் வாடா.” என்று உத்ரா பேசிக் கொண்டே இருக்க அவன் எதுவும் பேசாமல் அறைக்குள் நுழைந்துவிட்டான்.

அவன் பின்னாலேயே வந்த உத்ராவும் கதவை சாத்திவிட்டு அவன் முன்னே வந்து நின்றாள்.

“ஹே ப்ரணவ் எதுக்கு நீ அவளை சும்மா விட்டே. ஒழுங்கா கிளம்பி வா. அவளை நாரா கிழிச்சுட்டு வரலாம். ” என்று உத்ரா மீண்டும் அவன் கையைப் பிடித்து இழுக்க  “எதற்கு?” என்றான் அசிரத்தையாக.

“டேய் அவள் உன்னை நம்ப வெச்சு ஏமாத்தி இருக்கா.  நீ என்னமோ எதுக்கு திட்டணும்னு கேட்கிற. எனக்கு வர ஆத்திரத்துக்கு அவள் முடியைப் பிடிச்சு நாலு ஆட்டு ஆட்டுனா தான் மனசுல இருக்கிற பாரம் குறையும்.”

“நான் தானே ஏமாந்தேன் உத்ரா. அவள் என்னை ஏமாத்துற அளவுக்கு நான் விட்டு இருக்கக் கூடாது இல்லை.  தப்பு என் மேலேயும் தானே. இதை இதோட விடு. “

“டேய் என்னடா எனக்கு வர கோபத்துல பாதி கூட உனக்கு வரல.”

“இல்லை உத்ரா, எனக்கு சொந்தமான ஒன்னை இழந்தா மாதிரி எனக்கு எந்த உணர்ச்சியும் வரல. அவள் என்னை ஏமாத்திட்டான்ற வலி மட்டும் தான் இருக்கு. அவளை எனக்கு பார்க்கக்கூட பிடிக்கல. ” என்று சொல்லியபடியே சுவற்றை வெறித்தவன் மெதுவான குரலில் சொன்னான்.

“என் கிட்டே அவள் நேரடியாவே நான் வேற ஒருத்தனை காதலிக்கிறேனு சொல்லி இருந்தா நானே அவளை விட்டு விலகிப் போய் இருப்பேன். இத்தனை நாள் நான் முட்டாளா இருந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ” என்று பேசியவனது வார்த்தைகளில் வெறும் வெறுமை தான் இருந்தது காதல் சிறிதளவும் தெரியவில்லை.

உத்ரா அவனுடைய முகத்தையே உற்றுப் பார்த்தாள்.

காதலித்த ஒருவனால் கண்டிப்பாக இந்த சூழ்நிலையில் இவ்வளவு பக்குவமாக பேச முடியாது. அவன் சில்லு சில்லாக உடைந்துப் போய் நின்று இருப்பான்.
ஆனால் இவனோ இவ்வளவு தெளிவாக பேசுகின்றானே.

ஆக இவன் உண்மையில் வைஷாலியை காதலிக்கவில்லையா? அது வெறும் ஈர்ப்பு தானா? என்று அவள் அவனுடைய முகத்தையே பார்த்தபடி சிந்தித்துக் கொண்டு இருக்க ப்ரணவ்வும் அதையே தான் சிந்தித்தான்.

நான் ஏன் வருந்தவில்லை? வைஷாலியின் இந்த பிரிவு என்னை ஏன் கொஞ்சம் கூட பாதிக்கவில்லை?

உத்ரா வைபவ்விடம் பேசும் போது தோன்றிய எரிச்சலும் கோபமும் ஏன் இவள் மேல் எனக்குத் தோன்றவில்லை?
நான் உண்மையில் வைஷாலியை காதலித்தேனா? என்று அவன் குழம்பியக் குளத்தில் மீன் பிடிக்க முயன்று கொண்டு இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!