சமர்ப்பணம் -எபிலாக்

சமர்ப்பணம் -எபிலாக்

people in marriage hallக்கான பட முடிவுகள்

நான்கு வருடம் கழித்து…

“கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான்

வாழ்க்கை உண்டானதே

கலை மகளே நீ வாழ்கவே

அவனே நினைத்தான் உறவை வளர்த்தான்

இரண்டும் ஒன்றானதே திருமகளே நீ வாழ்கவே

ஆயிரம் காலமே வாழவே திருமணம்

ஆயிரம் காலமே வாழவே திருமணம்” என்று கெளதம் மேடையேறிப் பாடி கொண்டு இருந்த பாட்டால் அவன் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் எல்லோரும் நெக்குருகி அமர்ந்திருந்தார்கள்.

முதல் வரிசையில் விஷ்ணு, தனுஸ்ரீ  அவர்கள் கையில் மூன்று வயதான அவர்கள் மகன் சுரேந்தர், மகள் சாதனா.

poonam kaur with ganesh venkatramanக்கான பட முடிவுகள்

அவர்கள் அருகே முரளி, ரேணுகா, வைரவேல்,  ராகேஷ், காயத்ரி இவர்களின் மடியில் நான்கு வயது ரோஹன், இவர்கள் குடும்பம் சகிதமாய் அமர்ந்திருந்தனர்.

காயத்ரி ராகேஷ் தொழிலைத் தற்பொழுது கவனித்து கொண்டிருக்க, இந்த வருடம் சிறந்த பெண் தொழிலதிபர் விருது வாங்கும் அளவிற்கு முன்னேறி இருந்தாள்.

கதிருக்கு அவர்கள் சொந்தத்திலிருந்து மணம் முடித்து இருந்தார்கள்.மணம் முடித்த பெண் யசோதாவின் ஆசை படிக்கச் வேண்டும் என்பதை அறிந்து அவளைக் கல்லுரியில் சேர்த்திருக்கிறான்.

அஞ்சலி, ராம், சுமித்ரா அவள் அருகே   இவர்களின் நடுவே நான்கு பிள்ளைகள் ஒன்றின் கையை மற்றொன்று பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

இந்த நான்கு வருடத்தில் இவர்கள் வாழ்வு பூஞ்சோலையாய் வாசம் வீசிக் கொண்டு இருந்தது அன்பு, காதல், பாசம், கருணை என்னும் பூக்களால்.

ராம், சுமித்ராவிற்கு நான்கு வயது ஆண் குழந்தை கிருஷ்ணா, ரெண்டு வயது பெண் குழந்தை சாகித்யா பிறந்திருக்க, மூன்றாம் முறையாகக் கருவுற்று தாய்மையின் மிளிரவில் ஜொலித்து கொண்டு இருந்தாள் சுமித்ரா.

சொல்லவும் வேண்டுமோ இவர்கள் காதலில் தங்களையே சமர்ப்பித்து கொண்டவர்கள் என்று.

கெளதம் அஞ்சலிக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை ஆராதனா, ரெண்டு வயதில் ஸ்ரீராம் என்ற மகன் இருக்க, மூன்றாவது முறையாக ரெண்டு ட்வின்ஸ் உடன் தாய்மை அடைந்து இருந்தாள் அஞ்சலி.

மனம் நிறைந்து பாடி கொண்டு இருந்த கணவனைக் காதல் பொங்க பார்த்துக் கொண்டு இருந்தாள் அவனின் இல்லாள்.

கெளதம் பாடி முடிக்க அவனின் இந்தப் பரந்து விரிந்த குடும்பத்தின் கரகோசத்தில் அந்த மண்டபமே அதிர்ந்தது.

கெளதம் திருமண மண்டபத்தில் சந்தோஷ், லலிதா திருமணம் வெகுவிமர்சையாக நடந்து முடிந்து இருந்தது.

சந்தோஷை  கண்டு, ‘ஒரு தலை ராகம்’ பாடி ‘காதல் கோட்டை’ கட்டியிருந்த  லலிதாவின்  காதலை புரிய வைத்து இன்று அவர்களின் திருமணமும் நடந்து முடிந்திருந்தது.

காதலுடன் லலிதா கையைப் பிடித்து இருந்தான் சந்தோஷ்.

இவன் மனம் மாற முக்கிய காரணம் ராம், சுமியின் வாழ்வு என்று கூடச் சொல்லலாம்.

சுமித்ரா ராம்மை ஒரு தலையாகக் காதலித்து அது கைக்கூடாமல் சுமி வருந்தியதை எல்லாம் நேராகப் பார்த்திருந்தவனுக்கு லலிதாவின் துடிப்பும், தவிப்பும் புரிந்து கொள்ள மிக இலகுவாய் இருந்தது.

ராம் தனுவை காதலித்தான். விதிவசத்தால் அந்தக் காதல் கைக்கூடாமல் போக, காதலனாய் இருந்தவன் வழிகாட்டியாய், ஒரு ஆசானாய்  மாறிக் காதலியின் வாழ்வில் தீபம் ஏற்றி விட்டான்.

உண்மையான காதல் ஆக்கச் சக்தி.தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கும் உன்னதம்.

ராம்மை ஒரு முன்னோடியாகக் கொண்டவனால், அஞ்சலியின் உயிர் கௌதமிடம் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இதோ இன்று லலிதாவின் காதலுக்கு தகுந்த மரியாதையை கொடுத்து அவளைத் தன் சகதர்மினியாக ஏற்று கொண்டான்.

ஸ்ரீவத்சன் தன்னிடம் வேலை செய்து கொண்டு இருந்த கணவனை இழந்த பெண் சுமிதாவை மணந்து இருந்தான்.இன்று கடன் எல்லாம் அடைத்து, ‘இந்தியாவின் சிறந்த ஹோட்டல்’ பெயர்  பெற்று கொண்டு இருக்கிறது அவன் தங்கபிறை ஹோட்டல்.

actor darshan heroine thumbaaக்கான பட முடிவுகள்

“கெளதம்….ப்ளீஸ் ஒன் மோர் சாங்யா…உங்களுக்குப் பிடிச்ச சாங்…”என்றான் சந்தோஷ் மணமக்கள் நின்ற மேடையிலிருந்து.

சந்தோஷ் விருப்பத்தைத் தொடர்ந்து மேடைக்குக் கீழே இருந்த குடும்பத்திடம் இருந்தும் இன்னொரு பாடல் என்ற குரல் எழும்ப,

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

சுதியோடு லயம் போலவே இணையாகும்

துணையாகும் சம்சார சங்கீதமே

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே.

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து

பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்

மணவாழ்க்கையை, அதன் நிறைவை, இதைவிட வேறு வார்த்தையால் சொல்ல முடியாது.

கெளதம் குரலில் இருந்த வசீகரம், கடலைவிட வெகு ஆழமான அர்த்தம் கொண்ட பாடல் வரிகள் அங்கிருந்தவர்கள் தங்கள் துணையின் கையைக் காதலுடன் பற்றிக் கொண்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

விஷ்ணு, தனு கிளம்ப, அவர்களுடன் முரளி, ரேணுகா, வைரவேல் கிளம்பி விட, காயத்ரி குடும்பமும் விடை பெற்றது.

ராம், சுமித்ரா, கெளதம், அஞ்சலி தங்கள் பிள்ளைகளுடன் அமர்ந்திருக்க, அவர்களை நோக்கி வந்தார்கள் பாண்டியனும், ஹேமாவும்.

“சிவசாமி, சுமித்ரா உங்களுடன் நாங்களும் அங்கே லைப் கேர் தொண்டு நிறுவனத்தில் வந்து தங்கலாமா. அங்கே உள்ளவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று தோன்றுது.

அஞ்சலிக்கும் திருமணம் முடிந்து விட்டது.இனி எங்கள் வாழ்க்கை அங்கே அந்தப் பிள்ளைகளுக்கு அம்மா அப்பாவாய் இருப்பது தான்….உங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லையே… அஞ்சலி கிட்டேயும், கெளதம் கிட்டேயும் ஏற்கனவே பேசிட்டோம்…”என்றார் ஹேமா.

“நீங்க வாழ்ந்த அளவிற்கு எல்லாம் அங்கே வசதி இருக்காது… சாப்பாடும் ஹெல்த்தியா, ருசியா இருக்குமே தவிர ஆடம்பரமாய் இருக்காது.உங்களால் அங்கே எல்லாம் இருக்க முடியுமா?”என்றான் ராம்.

“எங்க மகனும், மருமகளும் பிறந்த, இனி பிறக்கப்போகும் பேர பசங்களுமே அங்கே தான் வாழும்போது எங்களால் இருக்க முடியாதா என்ன… மாலை அங்கே வந்திடறோம்.” என்றார் பாண்டியன்.

ராம்மும் சுமியும் திகைத்துப் பார்க்க, ராம் வழுக்கை தலையில் கை வைத்துத் தடவி கொடுத்த ஹேமா, அவன் முகத்தை வருடி விட்டார்.

சிதைந்து இருந்த மகன் முகத்தைக் கைகளில் ஏந்தியவர், அவன் நெற்றியில் தன் இதழ் பதித்தார்.

பாண்டியன் கைச்சுமித்திராவின் தலையைத் தடவியது.

“அம்மா…”என்ற ராம் குரல் கண்ணீருடன் ஒலிக்க, அன்னையின் இடையை அணைத்து கொண்டான்.

“இப்போ எதுக்கு நீ டாம் ஓபன் செய்யரே…அங்கே இன்னொரு திருமணத்திற்கு போகணும்… கிளம்பு…. டிவி சீரியல் ஹீரோயின் மாதிரி சோகத்தைப் புழியோ புழின்னு புழியதே… நாங்க முன்னாடி கிளம்பறோம்…” என்று அவர்கள் கிளம்ப ராம், சுமித்ரா திக்ப்ரமை பிடித்து அமர்ந்து இருந்தார்கள்.

“நீ சொன்னியா…”என்று ராம், சுமி, அஞ்சலி ஒன்றாய் கேட்டு அவர்கள் சொல்லவில்லை எனபதை புரிந்து கொண்டு விழிக்க,

“அவங்களுக்கு ஏற்கனவே தெரியும் போலிருக்கு.என் கிட்டே வந்து உங்களிடம் தங்க போகிறோம் என்று சொல்லும் போதே தெரிஞ்சு போச்சு….பெத்தவங்க இல்லையா…

அதிலும் ஒரு வருடம் நம்மைத் தனக்குள்ளேயே வைத்து இருக்கும் தெய்வம் ஆச்சே…ஏற்கனவே தனுவிற்காக ராமச்சந்தர் என்பவனை உயிரோடு இருக்கும்போது உன்னை நீயே கொன்று விட்டாய்…உன் பெற்றோரையும் பிரிந்து இருக்க வேண்டுமா …சுமிக்கு புகுந்த வீட்டு உறவு வேண்டும் தானே.உன் பிள்ளைகளுக்குத் தாத்தா பாட்டியின் அரவணைப்பு தேவை….

ஒரு வீட்டின் மூத்த தலைமுறை என்பது ஒரு யூனிவர்சிட்டி, நூலகத்திற்கு சமம். எங்களுக்காக நீ இழந்தது போதும் ராம்…நீயும் அஞ்சலியும் செய்ததற்க்கு எல்லாம் ஈடாக எதையும் சொல்ல முடியாது தான்…ஆனால் உன் பெற்றோரை இழக்கும் கொடுமையையும் உனக்கு வேண்டாம்…அதான்…” என்றான் கெளதம் கண்களில் கண்ணீருடன்.

அவனை அணைத்து கொண்டான் ராம்.

அஞ்சலியின் கண்களில் கெளதம் மேல் காதல் இன்னும் பெருக்கெடுத்தது.

ரெண்டு மணி நேரம் கழித்து நொந்து போனவவர்களாய் இருந்தார்கள் கௌதமும், ராம்மும்

சந்தோஷ் திருமணத்தில் வேலை பார்க்கிறேன் என்று மேடிட்ட வயத்தை தூக்கி கொண்டு இங்கும் அங்கும் சென்று கொண்டு இருந்த மனைவியையும், தங்கையையும் ஒரு இடத்தில் அமர வைக்க முடியாமல் விழி பிதுங்கிக் கிடந்தான் ராம்.

“டேய் மாப்பிள்ளை… இங்கே வாடா… இவங்களை அமைதியா உட்கார சொல்லு.” என்று சேகர், தங்கையையும், மனைவியைச் சமாளிக்க முடியாதனவாய் கௌதமை துணைக்கு அழைக்க, அவனோ இவனை முறைத்தான்.

“டேய்… நானே இவங்களை சமாளிக்க முடியாமல் திணறிட்டு இருக்கேன்…”  என்று திசைக்கு ஒன்றாய் ஓடிக் கொண்டிருந்த நான்கு பிள்ளைகளைப் பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான் கெளதம்.

“இருங்கப்பா… நான் வரேன்.” என்று நிலா குழந்தைகளைப் பிடிக்க உதவ, நாக்கு தள்ளிப் போய் வந்து அமர்ந்தான் கெளதம்.

“இதுக்கே மாமாவுக்கு மூச்சு வாங்குதுன்னா… இனி பிறக்கப் போகும் இந்த ட்வின்ஸ்சை எப்படி சமாளிப்பீங்க?” என்றாள் அஞ்சலி மூன்றாவது முறையாய் தாய்மை அடைந்து ட்வின்ஸ் இருவரை வயற்றில் சுமந்து கொண்டு.

“எல்லாத்துக்கும் காரணம் நீ தாண்டீ… அந்தத் திராட்சை கண்ணை வச்சி பார்த்துப் பார்த்து, சிணுங்கி சிணுங்கிய மனுஷனை ஒருவழியாக்கிடு…” என்றான் கோபம் போல்.

“என்ன மாமா இதுக்கே உங்களுக்கு அல்லு வுட்டுடிச்சி… சின்ன ஸ்கூலே ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கேன் நமக்கு பிறக்கப் போகும் குழந்தைகளை வச்சி…”  என்று மூன்றாம் முறையாய் தாய்மை அடைந்து இருந்த சுமி ராகம் இழுக்க, சேகர் பேய் விழி விழித்தான் சேகர்.

“என்னது மினி ஸ்கூலா?” என்றவன் அலண்டு போக,

“டேய் மாப்பிள்ளை காரை எடு… இதுங்க ரெண்டும் டேஞ்சர் பார்ட்டிங்க…” என்று இருவரும் கழண்டு கொள்ள, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இன்னொரு திருமணத்திற்க்கு சென்றார்கள்.

சந்தோஷ் லலிதா திருமணம்போல், எந்த ஆடம்பரமும் இல்லாமல் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் மிகவம் எளிதாய் நடந்தது-ஸ்வாதிரூபா, ACP கமலநாதன் திருமணம்.

“அம்மா… நீங்க ஐ.பி.எஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடமாம்… ரிசல்ட் வந்துடுச்சாம்…. கமல் அப்பா சொல்லச் சொன்னாங்க.

வேலைக்குப் போகிறேன் என்று அவங்கலை மறந்துட கூடாதாம்… சிவசாமி அங்கிள் ஸ்கூல் ஆரம்பிச்சி இருக்காராம்… அதில் அவ்வளவு சுலபமாய் சீட் கிடைக்காதாம் ….

இப்பவே பார்ம் வாங்கி வைக்கட்டுமா என்று கேக்க சொன்னாங்க…”  என்று ஸ்வாதியின் மகன் இந்தர் கத்த, மற்ற இரு பிள்ளைகளும் எகிறி குதிக்க,   அங்கிருந்தவர்கள் சிரிக்க, ஸ்வாதி கணவனை முறைக்க, அசடு வழிந்தான் அந்தக் காவலன் காதலனாய்.

கண்ணில் நிறைவோடு நின்றார்கள் ஸ்வாதிரூபாவின் இரு அம்மாக்கள் – கங்கம்மாவும், அஞ்சலியும்.

அங்கு இனி ஆனந்தம் மட்டுமே.

அன்புக்காக, காதலுக்காக, பாசத்திற்காக இவர்கள் தங்களையே சமர்ப்பித்து கொண்டவர்கள்.

வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பதில்லை.

 

இந்த நொடிக்காகத் தான்

நான் காத்திருந்தேன்

நமது இதயங்கள் இணையும்

இந்தத் தருணத்திற்காக.

நான் உன்னைக் கண்ட தருணம்,

நான் என் இதயத்தையும் மனதையும்

உன்னிடம் அர்பணித்தேன்.

என் வாழ்க்கையின் முழுமை நீ.

கடவுள் எனக்களித்த வரம் நீ,

என் கனவுகளின் முழு உருவம் நீ     

உன்னுள் என்னையும்,

என்னுள் உன்னையும்

முழுதாய் இணைத்து விட்டேன்.

உன் காதலென்னும் தீபத்தால்

என் இதயத்தை ஒளிர செய்து,

ஆன்மாவை உயிர்ப்பவள் நீ 

நீயே என் சுவாசம், நீ இதய துடிப்பு

                       உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்

                                 “சமர்ப்பணம்”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!