சமர்ப்பணம் 18

சமர்ப்பணம் 18

(உலகளாவிய அடிமைத்தன குறியீட்டின்படி, உலகம் முழுவதும் அடிமைப்படுத்தப்பட்ட 35.8 மில்லியன் மக்களில் 14.2 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தியா மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லாத வேலைகள்/NON EXISTENCE JOBS  குறித்த வாக்குறுதிகளுடன் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பின்னர் பாலியல் தொழிலுக்கு விற்கப்படுகிறார்கள், குழந்தை திருமணங்களும் இதில் அடங்கும்.)

(‘தத்வாசி சமாஜ் நியாஸ்அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்ற ஒரு அரசு சாரா அமைப்பு. பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்குள் மறுவாழ்வு பெற்று சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று இந்திய சட்டம் கட்டளையிடுகிறது. ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை என்கிறார் “லவ் மேட்டர்ஸ் இந்தியாஎன்ற பாலியல் கல்வி வலைத்தளத்தை, வித்திகா யாதவ்.)

(ஒரு சிறிய மாதிரி கணக்கெடுப்பைப் பயன்படுத்தி, மனித உரிமைகள் கண்காணிப்பு திட்டங்கள் அறிக்கை படி 100,000 மைனர்களில்/minor children  1.6 பேர்-இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். பாலியல் கடத்தல் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மேப்லெக்ராஃப்ட் ஆய்வு செய்த நாடுகளில், இந்தியா 7 வது இடத்தில் உள்ளது. 2006 ஆம் ஆண்டின் தேசிய குற்ற பதிவு பணியக அறிக்கையில் சுமார் 71% கற்பழிப்பு குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிடுகிறது.)

man in darkக்கான பட முடிவுகள்

நள்ளிரவு, குளிர் காலம், பேய்களும், நாய்களும் கூட உறங்கி கொண்டிருக்கும் பொழுது, மெல்ல அந்த உருவம் சத்தம் ஏற்படுத்தாமல் மாடி ஏறிக் கொண்டு இருந்தது.

வாயில் காவலன், சிசிடிவி கடந்து யாரும் பார்க்காமல் இந்த உருவம் எப்படி உள்ளே வந்தது.

அதன் கையில் கத்தியொன்று பளபளத்து கொண்டு இருந்தது.

தலை முதல் கால்வரை  மூடி இருந்தது.

யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு, கெளதம் அறையைக் குறி வைத்து ஏறியது.

கதவைத் திறக்க முயன்றும் முடியாமல் போக, பின் வாசல் வழியாகத் தோட்டத்திற்கு வந்து மெல்ல எட்டி பார்த்தது.

வாட்ச்மென் ஆழந்த உறக்கத்தில் இருக்க, பின்புறம் இருந்த படிகள் மூலமாய் ஏறி கெளதம் அறை இருந்த பால்கனியில் எகிறி குதித்தது.

அறைக்குள் இருந்து பால்கணி வரும் கதவு திறந்தே இருக்க,

கெளதம், சாதனா, முரளி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க சத்தம் போடாமல் கட்டிலை சுற்றி கொண்டு கெளதம் அருகே சென்று நின்றது.

கெளதம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட அந்த உருவத்தின் முகத்தில் கோபம் எழுந்தது.

கையில் கத்தியுடன் உள்ளே நுழைந்து கௌதமை நெருங்கியது.

நெருங்கிய உருவம் கௌதமை தட்டி எழுப்ப, கண் விழித்தவன் முகத்திற்கு நேராய் கத்தி நீட்டப் பட்டது.

ஒரு கணம் கெளதம் முகத்தில் கோபம் எழ, இருக்கும் சூழ்நிலையில் அப்போதைக்கு சினிமா ஹீரோ மாதிரி எதுவும் செய்ய முடியாது என்று தெரிய, எழுந்த கோபத்தை கஷ்ட பட்டு அடக்கினான்.

“ஹ்ம்ம் எழுந்திரி…” என்று அந்த ஆள் இட்ட கட்டளையை மறுக்க முடியாமல், தந்தைக்கும், சாதனாவுக்கும் எதுவும் ஆகி விடக் கூடாதே என்று கத்தியுடன் நிற்பவன்  சொன்னபடி எழுந்து சென்றான்.

முரளி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, கத்திமுனையில் கௌதமை அந்த அறையை விட்டுப் பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்ற உருவம் படுக்கை அறை கதவைச் சாத்தி விட்டுத் திரும்ப, அடுத்த நொடி அதன் கழுத்தை பிடித்து உயர தூக்கிய கெளதம் சுவரோடு சுவராய் அழுத்திப் பிடித்தான்.

கத்தி பிடித்திருந்த கையின் மணிக்கட்டில் கராத்தே அடி ஒன்று போட, கையிலிருந்த கத்தி கீழே விழுந்தது.

அடுத்து முகத்தை நோக்கி ஒரு குத்து குத்த கெளதம் கை முஷ்டியை மடக்கி வேகமான விசையுடன் கையை அந்த மனிதனின் முகத்தின் முகத்தை ஓங்கி குத்த கையை எடுத்துப் போக,

“டேய், கொலைகார பாவி… நான் தாண்டா.” என்ற குரல் கேட்டுப் பதறி விலகினான் கெளதம்.

“நீயா?” என்றான் திகைப்புடன்.

“இல்லை நானே வருவேன் பார்ட் 2… கட்டின பொண்டாட்டிக்கும் கத்தி எடுத்துக் கொல்ல வரும் கொலைகாரனுக்கும்  கூட வித்தியாசம் தெரியாத உன்னை எல்லாம் வச்சிட்டு…” என்று தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்த பால்கனி சுவற்றில் ஏறி உட்கார்ந்தாள் அஞ்சலி.

எருமை…என்ன அடி அடிக்கறே நீயி…புத்தூருக்கு தான் டா நான் போகணும் போல் இருக்கு.”என்றவள் மணிக்கட்டை தேய்த்து விட, அஞ்சலி கையைப் பிடித்து அழுத்தி விட்ட கெளதம்,

“லூசா டீ நீயி… மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றவன் கிட்டே வந்து நைட் டைம்மில் கத்திய காட்டறீயே உனக்கு அறிவு என்ற ஒன்று கொஞ்சமாவது இருக்கா… எக்கு தப்பா அடிச்சி இருந்தேன் உயிரே போய்யிற்கும் லூசு… ஆள் மட்டும் தான் வளர்ந்து இருக்கே… இப்போ கத்தி எடுத்து வரும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்?”என்றான் கெளதம் அஞ்சலியை முறைத்து கொண்டு

“அது ஒண்ணும் இல்லைடா… நைட் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தேனா, அப்புறம் வந்துடுச்சு…” என்றாள் அஞ்சலி.

“என்ன வந்துச்சு…” என்றான் கெளதம்.

“பசி தான்…” என்றாள் அஞ்சலி முகத்தைச் சீரியஸ்சாக வைத்துக் கொண்டு.

“என்னது பசியா….”என்றான் கெளதம் திகைப்புடன்.

“எஸ் டியர் பையா… பசி தான்… வயிறு கைம் முய்ன்னு சத்தம் போட்டு dts எபெக்ட் எல்லாம் கொடுக்குமே அதே பசி தான்… அதான் ஆப்பிள் கட் செய்து சாப்பிட்டுட்டு உன்னை அப்படியே மிரட்டலாம் என்று கத்தியுடன் வந்தேன்.”என்ற அஞ்சலியைக்  கண்டு தலையில் அடித்துக் கொண்டான்.

“இங்கே என்னடி செய்யரே?” என்றான்.

“ம்ம்ம் சட்டியும் பானையும் செய்யலாம் என்று வந்தேன்.” என்றவள் கத்தியை அவன் முன்னே தூக்கி காட்டி,

” சாமியோவ்…. எனக்கு ஒரு நியாயம் கிடைச்சாகனும் சாமியோவ்.” என்று முதல் மரியாதை மாடுலேஷனில் அஞ்சலி கேட்டு வைக்க, கெளதம் கடுப்பானான்.

‘இவளுக்கு நியாயம் கேட்க நேரம் கிடைச்சுது பாரு’ என்று முணுமுணுத்தவன்,

“யாரை கேட்டு என் கழுத்தில் நீ தாலி கட்டினே?” என்றாள் தலையைச் சாய்த்து.

“யாரை கேட்கனும்?” என்றான் கெளதம் எழுந்த புன்னகையை அடக்கிக் கொண்டு.

“என்னைக் கேட்கனும்…  தி கிரேட் ஒரு எலி ரெண்டு எலி ….3,4, இந்த அஞ்சலியைக் கேட்கணும்.” என்றாள் அஞ்சலி.

“மண்டையில் மசாலா இல்லாதவளை எல்லாம் கேக்க முடியாது. போடி… அப்படி தான் கட்டுவேன். என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ.

உன் காதலன் கிட்டே வேண்டும் என்றால் கம்பளைண்ட் கொடு. போடீ நடுராத்திரியில் பேய் மாதிரி வந்து மனுஷனை காபரா படுத்திட்டு… ஒழுங்கா போய்த் தூங்கு…

அப்பா இருக்கார். ஏற்கனவே என்னை வச்சி செய்வார். உன்னை வேறு இங்குப் பார்த்தார் வேறு வினையே வேண்டாம்… கிளம்பு தாயே.” என்றான் கெளதம்.

“டேய்… லூசா நீ? பொண்ணு நானே சுவர் எல்லாம் எகிறி குதித்து வந்திருக்கேன். இவன் என்னவோ ஸ்கூல் பையன் மாதிரி அப்பாவுக்குப் பயந்துட்டு இருக்கான்… மாமோய்… மாமோய்.” என்று அஞ்சலி குரல் குழைந்து வழிய, ஒரு அடிபின் நகர்ந்த கெளதம்,

“என்னடீ குரல் எல்லாம் ஒரு தினுசாய் இருக்கு…” என்றான்

“மாமோய், அடிக்குது குளிரு…” என்று அஞ்சலி ராகம் இழுக்க.

“ஹ்ம்ம் போர்வையை போர்த்திட்டு தூங்கு…” என்றான் கெளதம்.

“கம்பரசம் தரட்டுமா,

இன்ப ரசம் தரட்டுமா,

நயாகரா போல் பொங்கி வரட்டுமா?” என்று ராகம் இழுத்து பாட, அவள் வாயைக் கை வைத்து மூடினான் கெளதம்.

“ஏய் நட்டு போல்ட் கழண்டு போச்சாடீ உனக்கு? நீ எந்தப் பொங்கும் நீ இப்போ பொங்க வேண்டாம்… கிளம்பு.” என்றான் கெளதம்.

வேறு வினையே வேண்டாம்… அவன் அப்பா ஒருத்தர் போதும்….  அவன் கவலை அவனுக்கு, மீம்ஸ் போட்டுக் கூடக் கலாய்ப்பார் முரளி.

“சரி போறேன் மாமு… கொஞ்சம் கடனாய் ஒரு உம்மா கொடேன்.” என்றாள் அஞ்சலி

“என்னது?” என்றான் கெளதம்.

“வட்டி போட்டு நிச்சயம் திருப்பித் தந்துடறேன் மாமு… காட் ப்ராமிஸ். எனக்கு லைசென்ஸ் இருக்கு” என்றவள் அவன் கட்டியிருந்த திருமாங்கல்யத்தை அவன் முன் தூக்கி காட்ட அவளை என்ன செய்வது என்ற அவனுக்குத் தெரியவில்லை.

“என்ன மாமு பார்க்கில், லிப்ட்டில் தான் உங்களுக்கு எல்லாம் செய்ய வருமோ…. இப்போ என் மாமனார் கிட்டே லிஃப்டுக்கும், பார்க் கட்ட சொல்லி எப்படி கேட்பேன்.”என்று கமல் அழும் வாய்ஸில் பேச, கெளதம் விழித்தான்.

“யோவ் மாமனார்…எழுந்து வாங்க….வந்து உடனே ஒரு லிப்ட் கட்டி கொடுங்க பா.”என்று அஞ்சலி சத்தம் போடக் கௌதமிற்கு முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியலை.

“ஏய் மானத்தை வாங்கத்தேடி…என் செல்லம் இல்லை.என் பட்டு இல்லை…போய்த் தூங்குடீ…காலையில் உனக்குக் குருவி ரொட்டி வாங்கி தாரேன்.”என்றான் கெளதம்

கழுத்தில் அவன் கட்டியிருந்த திருமாங்கல்யத்தை தூக்கி அவள் முன்னே விட்டிருக்க, பைஜாமாவில் ரெட்டை பின்னல் போட்டு, கால்களை ஆட்டியவாறு அமர்ந்திருந்த கோலமே அவன் நெஞ்சை கொய்த்தது.

“மவளே மனுஷனை வெறுப்பு ஏத்தாதே… இப்போ தான் உன் அண்ணன், ‘கபி…கபின்னு’ பாடி வெறுப்பேத்திட்டு போனான்… இவ வேற வந்து…. போடீ…போய்த் தூங்கு.”என்றவன் கிளம்ப, பின்னால் வந்த பாட்டுச் சத்தம் கேட்டுத் திரும்பினான்.

“வான்மதியே வான்மதியே
தூது செல்லு வான்மதியே

வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே
மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர வேண்டும்
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

வைகை வந்து
கை அணைக்க வெள்ளி
அலை மெய் அணைக்க
வாடி நின்ற தென் மதுரை
நான் தானோ

தென்றலுக்கு
ஆசை இல்லை தேம்பிடுதே
வாச முல்லை அம்மம்மா
அன்புத் தொல்லை ஏன் தானோ

வண்ணப்பூவும்
என்னைக் கண்டு வாய்
இதழை மூடிக் கொண்டு
புன்னகைக்க மாட்டேன்
என்று போராடுது

அந்தி மாலை
வரும் நோய் கொண்டு
தன்னந்தனி நான் என்று
பாவை நிதம் வாடும்
விதம் பாராய்

நெஞ்சுக்குள்ளே
கொட்டி வைத்து நித்தம்
நித்தம் நான் அளக்கும்
என்னுடைய ஆசைகளை
கூறாயோ

உன்னைப்போல
நானும் மெல்ல தேய்வதிங்கு
நியாயம் அல்ல வெண்ணிலவே
தூது செல்ல வாராயோ

எத்தனையோ
சொல்லி வைத்தேன்
எண்ணங்களை அள்ளி
விட்டேன் இன்னும் அந்த
மன்னன் மனம் மாறாதது
ஏன்

உயிர்க் காதல்
துணை வராமல்
கண்ணை இமை
சேராமல் பாவை நித்தம்

வாடும் விதம் பாராய்.” என்று யுடூப் பாடல் கேட்கத் திரும்பிய கெளதம் முகம் காதலில் கனிந்தது.

அவள் இரு கன்னத்தையும் தன் உள்ளங்கையால் கெளதம் பிடித்துக் கொள்ள, அதில் தலைவைத்து கண்ணை மூடியவள், “ஐ மிஸ்ட் யு சோ மச் டா.” என்றவள் அவன் இடையை அணைத்து கொண்டு தன் தலையை அவன் மார்பில் சாய்த்து கொண்டாள்.

“நானும் தாண்டீ….” என்றவன் அவள் கன்னத்தில் முத்தம் இட, அவன் மார்பில் சாய்ந்தவாறே உறங்கி இருந்தாள் அஞ்சலி.

தன் மார்பினை தலையணையாகக் கொண்டு கட்டி பிடித்து அமர்ந்த வாக்கிலேயே தன் மேல் சாய்ந்து உறங்கி இருந்த தன் காதல் மனைவியைக் கண்டதும் அவன் மனம் காதலில் விம்மியது.

சிறு குழந்தையை இரு கைகளால் தூக்குவது போல் கெளதம் தூக்கி கொள்ள அவன்மேல் இன்னும் வாகாய் சாய்ந்து கொண்டு தன் உறக்கத்தை தொடர்ந்தாள் அவன் ஆசை மனையாட்டி.

“சோ ஸ்வீட் செல்லம்.” என்றவன் அவளை இரு கரங்களில் ஏந்தி கொண்டு அறைக்குள் வர, முரளி இவனைப் பார்த்துத் தலை அசைத்து விட்டுச் சாதனாவை தூக்கி கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

குழந்தைபோல் உறங்கிக் கொண்டிருந்தவளை அவன் கட்டிலில் இருத்தி விட்டு, அவனும் அவளைப் பார்த்தவாறே படுத்தான்.

உடனே அவனை நெருங்கி வந்த அஞ்சலி அவன் மார்பில் தலை வைத்து வாகாய் படுத்துக் கொண்டாள்.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.

‘தாமரையில் இருப்பவன் பிரமன் என்பர். அவன் இருக்கும் உலகம், ‘தேவர் உலகம்’ என்பர்.

ஆணோ, பெண்ணோ அவர் விரும்பும் காதலரின் தோளில் துயில்வதை விட, தாமரைக் கண்ணன் உலகு இனிமையாக இருக்குமோ!’ என்று அன்றே, ‘அய்யன் திருவள்ளுவனுக்கு’ தோன்றிய சந்தேகத்திற்க்கு, இன்று வண்ணமயில்லாளைத் தன் மார்பினில் ஏந்திய கௌதமிற்கு விடை கிடைத்தது.

“ஐ லவ் யு டீ பேபி.” என்றான் கெளதம்.

“மீ டு லவ் யு சோ மச் பிரபு.” என்று தூக்கத்தில் முனகியவளை அணைத்து கொண்டு, உறங்கிப் போனான் அஞ்சலியின் உயிரான அவள் கணவன்.

இதயம் இடம் மாறிய காதல், இங்கு உயிர் பெற்று விட, தங்கள் இணை அருகில் இருக்கும் நிம்மதியே பல வருடங்கள் கழித்து கெளதம், அஞ்சலியை உறங்க வைத்திருந்தது.

 பல ஆண்டுகள் பிறகு சந்தித்தது, திருமணம், தனு, ராம் என்ற மனஉளைச்சல், கௌதமை நினைத்து பல நாள் இரவு கண்ணீரில் கரைந்து, இரவுகளை தள்ளியவளால், இதுவும் ஆசை கொண்ட மனதின் கனவோ என்ற எண்ணத்தை விளக்கமுடியவில்லை.

கௌதமுடனான தன் திருமணம் வெறும் கனவோ  என்று பயப்பட்டே, ‘கெளதம் அறைக்கு வந்திருக்கிறாள்’ என்பது புரிந்தாலும் கௌதமையும், அஞ்சலியையும் ஓட்டி எடுத்தனர்.

கேலி, கிண்டலுடன் தனுவும், அஞ்சலியும் சுமங்கலி பூஜை செய்து முடித்து, அவர்களின் குல தெய்வமான வடபழனி முருகன் கோயிலுக்கு சென்று வந்தனர்.

இவர்கள் திரும்பி வரும் போது புடவை கடையும், நகை கடையும் கெளதம் வீட்டில் குவிந்து கிடந்தது.

பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுர நெசவாளர்கள் கைவண்ணத்தில் தூய மல்பெரி பட்டு நூல் கொண்டு தங்கத் துணியில், சந்தன மரத்தின் துகள்கள் சேர்த்து, இருபது வருடம் சந்தன வாசனை நீங்காத ஆரஞ்சு, சிகப்பு நிறத்தில் கௌதமே ஆர்டர் கொடுத்து நெய்து வாங்கியிருந்த புடவையை கண்டு விழிகள் விரித்தாள் அஞ்சலி.

“என் தங்க தாமரையின் நிறத்துக்கு எடுப்பாய் இருக்கும் பேபி.” என்றான் அர்ஜுன்.

“என்ன புடவை சந்தன வாசனை அடிக்குது?.” என்றாள் அஞ்சலி.

“இது ஸ்பெஷல் ஆர்டர் புடவை அஞ்சலி. நிஜ சந்தன மர பயன்படுத்தி நெய்வார்கள். ராஜா ரவி வர்மாவின் ஓவியங்கள் மற்றும் மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காவியங்களைக் காட்டும் நெய்த பல்லுடன் சேலைகள் இருக்கும்.

கெளதம் நண்பன் ஒருவன் சொந்த தரி வைத்து இது போல் புடவைகளை நெய்து தருவான்.

உனக்காக என்று கெளதம் ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து, அவனே என்னென்ன டிசைன், ஜரி  வேலை என்று ஒன்றையும் விடவில்லை.” என்றார் ரேணுகா.

“எனக்காகவா?’ என்றாள் அஞ்சலி .

“இல்லை எனக்காக. இந்த நிறம் ரொம்ப பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது. இந்த புடவை அணிந்தால் உன் அழகு இன்னும் பெருகும். உலகத்தின் மிக கவர்ச்சியான உடை புடவை தானாம்….” என்ற கெளதம் அஞ்சலி காதில் எதையோ சொல்ல செங்கொழுந்தாகி போனாள் அஞ்சலி.

“பேபி இப்படி எல்லாம் சிணுங்காதே… அப்புறம் விளைவுக்கு நான் பொறுப்பில்லைடீ. கற்கால மனிதன் போல் என்னை நடக்க வைத்து விடாதே.” என்ற என்றவன் பேச்சில் எழுந்து ஓடினாள் அஞ்சலி.

நிறைய எதிர்பார்ப்புகளுடன், இளமையின் தேடல்களுக்கான பதிலை மனைவியிடம் இருந்து பெற கெளதம் காத்திருக்க விதி அவனை பார்த்து சிரித்தது.

அன்று மாலை கெளதம் வடிவமைத்த பட்டில் தேவதைகளின் தேவதையாய், தயாராகி வந்த அஞ்சலியை அந்த புடவையை விட மிகவும் சிவக்க வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து, இரவின் மடியில் தன்னவளிடம் மேதாவிலாசம் எழுதுவதற்கான ஒத்திகையை அப்பொழுதில் இருந்தே ஆரம்பித்து இருந்தான்.

அன்று பாண்டிய மன்னன் செண்பகராம பாண்டியனுக்கு ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இருக்கிறதா?’ என்ற சந்தேகம் கூடலின் போது வந்தது.

அவரையும் மிஞ்சும் விதமாய் யோசிக்க ஆரம்பித்தான் கெளதம்.

‘இவளை கண்டால் இன்பம்,

இவள் பேசுவதைக் கேட்டால் இன்பம்,

இவள்  எயிறு ஊறலை உண்டால் இன்பம்.

இவள் உடல் வீசும் மணத்தை முகர்ந்தால் இன்பம்,

இவளை தொட்டால் இன்பம்,

இப்படி அவள் ஐம்புலதிற்கும் இன்பம் தருவதால் தானோ கவி மன்னர்கள், ‘இன்பமே உந்தன் பேர் பெண்மையோ?’ என்று கேட்டார்களா!

‘தழுவும் போதெல்லாம், என் புத்துயிர் தளிர் விடுவதால் என் பேதையின் தோள் அமிழ்தத்தால் செய்யபட்டு இருக்கிறதா!

தேனை பருகும் வண்டு எப்படி மதிமயங்கி போகுமோ அப்படி மதி மயங்கியவன், அந்த தேன் ஊற்றையும் மயங்க வைத்து மயங்கி கொண்டிருந்தான்.

‘உடலில் தோன்றும் நோய்க்கு மருந்து வெளியில் கிடைக்கும். ஆனால் என் உணர்வில் தோன்றும் நோய்க்கு மருந்து இவளிடம் மட்டுமே எப்படி இருக்கிறது!

‘உண்மைகளை அறிய, அறிய அறியாதன உள்ளதை உணர்வது போலப் புணரப், புணரக் காமத்தில் புதுப்புது இன்பம் எப்படி தோன்றி கொண்டே இருக்கிறது!

‘நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்’ என்று, ‘வரதராசன்’ கேட்ட கேள்விக்கு என்னால் விடை தேடியும் கிடைக்கவில்லையே’ என்று அஞ்சலியின் அழகில் அங்கு அவளின் மன்னனனுக்கு சந்தேகம் எழுந்தது

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படாஅ முயக்கு.

காற்று இடையே செல்ல முடியாதபடி, இறுக்கமாகத் தழுவுதல் விரும்பித் தழுவும் இருவர்க்கு இன்பத்தை மிகுதிப் படுத்தும்’ என்று இன்பத்து பால் சொல்லும் கூற்றினை அங்கு அந்த காதலர்கள் மெய்ப்பித்து கொண்டிருந்தார்கள்.

‘கூடல் இல்லா கூடல் அது…

முடியவே முடியாத தேடல்…

இணையாத ஒரு இணைவு…’ என்று இல்லறத்தின் முதல் பயணத்தை தொடங்கி இருந்தவர்களுக்கான நேரமோ, காலமோ அது இல்லையென்பதை உணர்ந்த அவர்கள் விட்ட மூச்சுக்  காற்றின் வெப்பம், சூரியனின் கதிர்களே குளிர்ச்சி பொருந்தியது என்று கூறும் அளவிற்கு தான் இருந்தது .

கெளதம் அஞ்சலியை தவிர இரு குடும்பத்தாரும் முன்னேரே ரிசெப்சன் நடக்கும் ஹோட்டலுக்கு சென்று விட்டு இருக்க, இவர்கள் மிகவும் மெதுவாகவே கிளம்பினார்கள்.

கௌதமின் எந்த ஹோட்டலில் அவர்கள் சந்திப்பு நிகழந்ததோ எந்த இடத்தில் அவள் இதழுடன் இதழ் சேர்த்து இது பிரிக்கவே முடியாத, ஜென்ம  ஜென்மமாய் தொடரும், ‘ஆத்ம பந்தம் என்று’ சாசனம் வரைந்தானோ, அதே ஹோட்டலுக்கு இன்று கணவன் மனைவியாக திரும்பி இருந்தான்.

“டைம் இருக்கா கெளதம்?” என்றாள் அஞ்சலி.

“டைமும் இருக்கு, நமக்கு சொந்தமான ஹோட்டல் அறையும் இருக்கு. மாமனும் ரெடி யா தாண்டீ இருக்கேன்.” என்றான் கெளதம் அவள் இடையில் கையால் கோலமிட்டபடி.

“ஹ்ம்ம் நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்… ஆசை தோசை… நான் ஒண்ணும் அதுக்காக கேட்கலை.” என்றாள் அஞ்சலி எல்லை மீறும் அவன் கரங்களை தன் கரத்தால் சிறை பிடித்தபடி.

“எதுக்காக கேட்கலை பேபி… கொஞ்சம் இதற்கு கோனார் உரை தந்தால் நன்றாய் இருக்கும் தேவி” என்றான்.

“சும்மா இரு கெளதம்…” என்றாள் அஞ்சலி சிணுங்கலுடன்.

“சும்மா தான்மா இருக்கேன்.” என்றான் அவன்.

“கெளதம்…” என்று அஞ்சலி சிணுங்க, அவள் சிணுங்கியதற்கான தண்டனையை கொடுத்த பிறகே அவளை விடுவிக்க, அவனை விட்டு பிரிந்தவளின் கண்கள் வெளியே பார்க்க திகைத்தது.

அஞ்சலி ரியாக்ஷன்னை கண்டு கெளதம் புன்னகை அதிகமானது.

கார் நின்றதும் கீழே இறங்கிய அஞ்சலியின் கண் முன்னே விரிந்தது ரோஜா தோட்டம் ஒன்று.

கெளதம் ஹோட்டலின் பின்புறத்தில் எந்த இடத்தில் இவர்கள் சந்திப்பு நிகழந்ததோ, அந்த இடத்தை சுற்றி காம்பௌண்ட் போட்டு, ரோஜா தோட்டம் போடப்பட்டு இருந்தது.

எந்த மேட்டில் ஏறி கால் வழுக்கி கெளதம் மேல் விழுந்தாளோ,  அந்த மேட்டை சுற்றி மேடை அமைக்கப்பட்டு, இவர்கள் அமர பளிங்கு மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

அங்கங்கே கிளி, குருவிகள், புறாக்கள் பறந்து கொண்டிருந்தன. பச்சை கம்பளம் போர்த்தியது போன்ற புல்வெளி அந்த மேடையை சுற்றி வளர்க்க பட்டு இருந்தது.

செயற்கை பாறை அமைக்கப்பட்டு அதிலிருந்து அருவி போல் நீர் வழிந்து கொண்டிருந்தது.

கதைகளில் சொல்லப்படும் தேவலோகம் தான் அங்கு சிருஷ்டிக்க பட்டு விட்டதா என்று நினைக்க தோன்றும் வண்ணம் இயற்கை அங்கே மாயாஜாலத்தை காட்டி கொண்டிருந்தது.

 “பிடித்து இருக்கா அஞ்சு பேபி… இந்த இடத்தை பார்க்க தானே வரணும் என்று கேட்டே!” என்றான் கெளதம் அவளை பின்னிருந்து அணைத்தபடி.

நின்றவாக்கில் பின்புறமாய் கெளதம் மேல் சாய்ந்தவளை தாங்கி கொண்டு அந்த பளிங்கு மேடையில் அமர்ந்தவன், அவள் இதழ் வழியாக தன் உயிரை அவளுடன் இணைத்தான்.

“எப்படி?’ என்றாள் அஞ்சலி.

“தினமும் இங்கே வந்து விடுவேன் பேபி… நீ இல்லாத போது இந்த இடம் தான் எனக்கு பைத்தியம் பிடிக்காமல் வைத்து இருந்தது. நீ இப்போ பார்க்க எப்படி இருக்கே தெரியுமா?” என்றான் அவள் கன்னத்தில் காதல் கவிதைகள் எழுதி கொண்டிருந்தவன்.

“எப்படி இருக்கேன்?’ என்று கிசுகிசுப்பாய் வந்தது அஞ்சலியின் வார்த்தைகள்.

ஆயிரம் நிலவே

வா ஓராயிரம் நிலவே

வா இதழோரம் சுவை

தேட புதுப் பாடல் விழி

பாட பாட

நல்லிரவு

துணையிருக்க நாமிருவர்

தனியிருக்க நாணமென்ன?

பாவமென்ன நடைதளர்ந்து

போனதென்ன?

இல்லை உறக்கம்

ஒரே மனம் என்னாசை

பாராயோ

என் உயிரிலே உன்னை

எழுத பொன்மேனி தாராயோ?” என்று அஞ்சலி காதில் அவன் பாட வெட்கத்துடன் எழுந்து ஓடினாள் அஞ்சலி.

“அஞ்சு பேபி நில்லுடீ….” என்று கெளதம் துரத்த அங்கு காதலர்களின் இனிமையான விளையாட்டு அரேங்கேறியது.

“உன்னை பிடிச்சுட்டேன்… என்னை விட்டு ஓடி போக முடியுமா மை பேபி?” என்றான் கெளதம் அவள் தோள் மேல் தன் கைகள் ரெண்டை போட்டு கொண்டு கெளதம், ஏதோ சொல்ல வந்த சமயம், வெளியே அவர்கள் காருக்கு அருகே பெரும் கூச்சல் கூச்சல் கேட்க இவர்கள் என்ன என்று அறிய அங்கே ஓடினார்கள்.

அங்கே ஒரு பெண்ணை போட்டு ஹோட்டல் பணியாளர்கள் தாக்கி கொண்டு இருந்தார்கள்.

கெளதம் வருவதை பார்த்து, அந்த பெண்ணை உதைப்பதை நிறுத்த, கெளதம் ரௌத்திரமானான்.

“இப்படி தான் ஒரு பெண்ணை அதுவும் வயதானவரை அடிப்பீர்களா?’ என்று அவன் உறுமியதை கேட்டு அவர்கள் நடுங்கினார்கள்.

“திருடி சார்… திருட வந்திருக்கு… அய்யோ மேடம் நீங்க எழுந்து கொள்ளுங்கள்… உங்க கை டிரஸ் எல்லாம் அழுக்காகிடும்… நாங்க இவளை போலீசில் ஒப்படைத்து விடுகிறோம்… நீங்க போங்க சார்… மேடம் ப்ளீஸ்…” என்ற அவர்களின் குரல் கேட்காதவளாய் கீழே அமர்ந்து அந்த பெண்ணை தூக்கினாள் அஞ்சலி.

கீழே விழுந்ததில் பூந்தொட்டி அவர் நெற்றியை பதம் பார்த்திருக்க அவர் நெற்றியில் ஆழ காயம் ஏற்ப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

முகம் முழுக்க அழுக்கும் சேருமாய், ஆடை கிழிந்து அவர் பார்க்கவே மிகவும் பரிதாபமாய் இருந்தார்.

“வாட்டர் எடுத்து வா கெளதம்.” என்ற அஞ்சலிக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தான் கெளதம்.

அவர் முகத்தை கழுவி விட்டு, அவர் குடிக்க தண்ணீர் கொடுத்து அவரை எழுப்பி அமர வைத்த அஞ்சலி திடீர் என்று அலறினாள். “கங்கம்மா!” என்று.

“யாரு… யாரு?” என்று அவரால் சரிவர அஞ்சலியை அடையாளம் காண முடியாமல் கண்ணை சுருக்கி பார்த்தார்.

mother actress tamilக்கான பட முடிவுகள்

“கங்கம்மா!… நான் தான் அஞ்சலி… உங்க காவ்யா பாப்பா… நீங்க தூக்கி வளர்த்த காவ்யா… பாண்டியன், ஹேமா மகள்… எங்க வீட்டில் வேலை செய்தீர்களே கங்கம்மா…” என்றாள் அஞ்சலி.

‘மஞ்சள் பூசிய முகத்துடன்,  நெற்றி நிறைய குங்கும போட்டு வைத்து, அதில் கொஞ்சம் மல்லி சூடி, நேர்த்தியாக புடவை கட்டி,கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டுமே இருந்தாலும் அதில் ஒரு ராணியின் கம்பீரத்துடன், கணவன், மகள் என்று தங்கள் வீட்டில் வேலை செய்த கங்கம்மாவா இது!’

திகைப்பில் அஞ்சலிக்கு மூச்சு விடவே மறந்து போனது.

அதற்குள் ரத்த சேதாரம் அதிகமாகி இருக்க, கங்கம்மா மயங்கி விழ அஞ்சலி அவரை தாங்கி கொண்டாள்.

“கெளதம் இவங்களை தூக்கி வா.” என்று சொல்லிவிட்டு அஞ்சலி காரை கிளப்ப, அவரை தூக்கி வந்து பின்னால் படுக்க வைத்துவிட்டு முன்னே அவன் ஏறவும், காரினை ஹாஸ்பிடலுக்கு செலுத்தினாள் அஞ்சலி.

“அஞ்சலி என்ன ஆச்சு? யார் இவங்க..?” என்றான் கெளதம்.

“எங்க வீட்டில் வேலை செய்தவங்க கெளதம் இவங்க. இவங்களும் இவங்க புருஷன், கண்ணப்பா அப்பாவும் சேர்ந்து தான் எங்க வீட்டு வேலைக்கு வருவாங்க. வேலை அவ்வளவு சுத்தமாய் இருக்கும்.

ms bhaskarக்கான பட முடிவுகள்

உழைப்புக்கு அஞ்சாதவங்க. ஒரு சிலர் காசை வாங்கினோமா ஏதோ பெயருக்கு வேலை செய்தோமோ என்று இருப்பர்வர்களுக்கு மத்தியில் சொந்த வீட்டை பார்த்து கொள்வது போல் எங்க வீட்டையும், மூத்த மகளாக என்னையும் பார்த்து கொண்டார்கள்.

நான் காலேஜ் சேர்ந்திருந்த சமயம், ‘ஊர் திருவிழாவுக்கு போய்ட்டு வரேன்’ என்று சொல்லி போனவர்கள் தான். ஊரில் சென்று அப்பா விசாரித்தால் இவர்கள் அங்கே வரவேயில்லை என்று சொல்லி விட்டார்கள்.

என்ன ஆச்சு என்று தெரியாமல் இருந்தோம். இவங்க எனக்கு இன்னொரு அம்மாடா.” என்றாள் அஞ்சலி கண்களில் கண்ணீரோடு,

லைப் கேர் மருத்துவனையில் சேர்க்க, அங்கு தான் சந்தோஷ் வேலைக்கு சேர்ந்திருந்தான்.

பெங்களூருவில் இருந்து சுமித்ரா, சேகர், சந்தோஷ், நிலா மீண்டும் சென்னைக்கே வந்திருந்தார்கள்.

உள்ளே கங்கம்மாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து நர்ஸ் சகிதம் உள்ளே வந்த கெளதம் அஞ்சலியை டூட்டியில் இருந்த சந்தோஷ் ஒரு கணம் திகைத்தாலும், அடுத்த கணம் டாக்ட்ராய் தன் பணியை ஆரம்பித்தான்.

பாண்டியன் ஹேமாவிற்கு தகவல் சொல்ல அவர்கள் பதறி அடித்து வந்தார்கள்.

கண்களில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிய, கங்கம்மா இருந்த நிலை தாங்கமுடியாதவளாய் அஞ்சலி துடிக்க , கெளதம் அவளை அணைத்து கொண்டான்.

“அப்பா தீர விசாரித்தீர்கள் தானே டாடி.பின் ஏன் இப்படி இருக்காங்க….எப்படி இருந்த மனுசி…”என்று அஞ்சலி கண் கலங்க,

“உனக்கே தெரியுமே பாப்பா, வருஷா வருஷம் நானே போய் அவங்க க்ராமத்தில் விசாரித்து விட்டு தானே கண்ணா வருவேன்…. நீ விட்டு சென்ற பிறகு கூட அதை நிறுத்தலை.

அவங்க ஊர்க்காரங்க, உறவு எல்லாரிடமும் சொல்லிட்டு தான் ம வந்தேன்.அவங்க சம்பள பணம் அவங்க பெயரில் அப்படியே தானே மா நம்ம கிட்டே இருக்கு…” என்றார் பாண்டியன்.

“அம்மா!… கங்கா அம்மாவை பார்த்தா எப்படி இருப்பாங்க….தெரியும் தானே!… ஒரு சிலரை பார்க்கும் போது தான அவங்க  கிட்டே ஒரு கிரேஸ் தெரியும். நானே அவங்களை கிளாசிக்கல் பியூட்டி என்று தானே மா கூப்பிடுவேன்….

கையெடுத்து கும்பிட தோணும் சாமி சிலை மாதிரி இருந்தவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா மா….. “என்று மகள் கதற ஹேமாவின் கண்களும் சேர்ந்து கலங்கி!யது.

அவர்களும் தானே உள்ளே பார்த்து விட்டு வந்தார்கள்.ராணி மாதிரி வாழ்ந்த பெண்மணி, பிச்சைக்காரியை விட, மன நலம் குன்றியவர் போல் இருந்த நிலை அவர்களாலும் தாங்க தான் முடியவில்லை.

தன் மொபைலிலிருந்து பழைய போட்டோக்களை அஞ்சலி கௌதமிற்கு காட்ட, இன்று தான் பார்த்த பெண்மணியும், அஞ்சலி போட்டோவில் காட்டும் பெண்மணியும் ஒன்று என்றே கௌதமால் நினைக்க முடியவில்லை.

முதல் முறை பார்க்கும் தனக்கே இப்படி இருக்கிறது என்றால் அந்தப் பெண்ணின் மடியில் அவரின் இன்னொரு குழந்தையாய் வளர்ந்த அஞ்சலியின் துடிப்பு கௌதமிற்கு மிக நன்றாகப் புரிந்தது.

ட்ரீட்மென்ட் நடந்து கொண்டு இருக்க, சந்தோஷ் வெளியே வந்து, “பயப்பட ஒன்றுமில்லை.”என்று சொல்லிவிட்டு தான் சென்று இருந்தான்.

ஹாஸ்பிடலில் இருக்க அஞ்சலி தயார் தான், ஆனால் ஊரே அங்கு இவர்கள் திருமண வரவேற்புக்கு மண்டபத்தில் கூடியிருக்கிறதே.

“பேபி!… வீட்டுக்கு போகும் முன் ஒரு தடவை வந்து பார்க்கலாம். அதான் சந்தோஷ் சொல்லி இருக்காரே… செடேடிவ் கொடுக்க போவதாய்… அவங்க தூங்கிட்டு தான் இருப்பாங்க.

இப்போ உன் துணையோ, தேவையோ அவங்களுக்கு தேவை இல்லைம்மா…. அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்… வா அங்கே ஊரே காத்து இருக்கு…     ” என்றவன் அஞ்சலியை அழைத்து சென்றான் ஹோட்டலுக்கு.

கார் ஓடி கொண்டிருக்க, அஞ்சலி கங்கம்மாவை நினைத்து கொண்டிருக்க,

“அந்த சந்தோஷ் உன்னை விரும்பினான் இல்லையா? இங்கே மண்டபத்தை விட்டு பெங்களூர் போன பிறகு அவனும் அவன் அக்கா மிஸ்ஸஸ் சுமித்ரா சேகர் பழக்கமா இல்லை, முன்பே நீங்கள் எல்லாம் நண்பர்களா?’ என்றான் கெளதம் திடீரென்று.

“சந்தோஷ் எனக்கு நல்ல நண்பன். நான் விரும்புவது உன்னை மட்டும் தான் கெளதம்… இந்த பொறாமை உனக்கு சூட் ஆகலை.” என்றாள் அஞ்சலி.

“பொறாமை எல்லாம் இல்லை… ஜஸ்ட் தெரிந்து கொள்ள தான். ஹே காட் ப்ரோமிஸ் பேபி சந்தேகம் எல்லாம் இல்லை.

அனுவல்டேயில் உன்னை பார்த்துட்டு தனு எனக்கு அழைத்ததும் நானும் பெங்களூர் வந்தேன். அங்கே தான் சுமித்ராவையும், சந்தோஷையும், சிவசாமி அய்யாவையும் பார்த்தேன்.

மூன்று பேரும் நிற்க வைத்து ரவுண்டு கட்டி, சொல்லால் அடித்தார்கள் பாரு, இதற்கு இவங்க கையால் நாலு அடி கொடுத்திருக்கலாம் என்றே தோன்றி விட்டது.

உண்மையில் அதுவரை கூட தங்கைக்காக நான் செய்தது சரி தான் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.

ஆனால் சிவசாமி கேட்டாரு பாரு கேள்வி, “உனக்கும் ராம்மிற்கும் என்ன வித்தியாசம்? அவன் உன் தங்கையை காதல் சொல்லி ஏமாற்றினான் என்றால் நீ திருமணத்தை சொல்லி அஞ்சலியை ஏமாற்ற முயன்று இருக்கிறாய்.

உனக்கு வந்தால் அது ரத்தம், அதுவே அஞ்சலி என்றால் உனக்கு சட்னியா?’ என்று கடித்து குதறி எடுத்துட்டார்.” என்றான் கெளதம்.

வாய் விட்டு நகைத்த அஞ்சலி, “ஆமாம் பின்னே நீங்க செய்ததற்க்கு உங்களை தூக்கி கொஞ்சுவாங்களாகும்? யாப்பா என்ன ஆக்ட்டிங்? என்ன ஆக்ட்டிங்?

‘ ஹல்க் மாதிரி ஆஹா ஊவுன்னு’ இவர் கத்தி எகிறி குதித்தால் நாங்க அப்படியே லோக்கி மாதிரி பயந்துடுவோம்… போவியா அங்கிட்டு … உனக்கு வேலை போச்சுன்னா கூட சின்ன திரையில் எதிர்காலம் இருக்கு மாமு.” என்றாள்.

“அடிங்க… கஷ்டபட்டு மாஸ் ஆக்ட்டிங் ஆப் தி செஞ்சுரி கொடுத்தால் கிண்டலா செய்யரே?” என்றான் கெளதம்.

“இல்லை மாம்ஸ் நக்கல்ஸ்…” என்றவள் தலையில் வலிக்காமல் குட்டியவன், “சரி நீ சந்தோஷ் மேட்டருக்கு வா.” என்றான் கெளதம்.

“விஷ்ணு சந்தோஷிற்கு சீனியர். அவங்க காலேஜ் கல்சுரல் என்றால் விஷ்ணு என்னையும் அழைத்து போவான்.

அங்கே தான் நான், சுமி, தனு, சந்தோஷ் எல்லோரும் நட்பானோம்.

ரெண்டு பேருமே டௌன் டு எர்த். அமைச்சர் பிள்ளைகள். அதிலும் ப்ரைம் மினிஸ்டர் நெருங்கிய நண்பர் இவங்க அப்பா என்னும் பந்தா எல்லாம் எதுவுமே கிடையாது.

அங்கே தான் தனுவை பார்த்து விஷ்ணு பிளாட்.

காலேஜ் ப்ரோபஸ்ஸர் முதல், முதல் ஆண்டு மாணவர்கள் வரை சுமிக்கு லெட்டர் வந்துட்டே இருக்கும்.

சுமி என் காலேஜ் தான். ஏதோ ஒரு படத்தில், ‘ஸ்னேகா பாக் திறந்து இவ்வளவு ப்ரோபோசல் வந்திருக்கு’ என்று காட்டுவாளே, அதே ஸீன் நிஜத்தில் சுமிக்கு நடந்தது.

செமையா இருப்பாங்க. செம்ம லூட்டி அடிப்போம். அவங்க இருக்கும் இடம் லைவ்லியா இருக்கும்” என்றாள் அஞ்சலி.

“அவங்க மேரேஜ் வாழ்க்கையில் பெரிய பிரச்சனை, அவங்க ஹஸ் பண்ட் சேகர் வேறு ஒரு பெண்ணுடன்…” என்ற கெளதம் கேள்விக்கு அஞ்சலி தலை மட்டும் அசைத்து விட்டு மௌனமாகி விட்டாள்.

வேறு எதுவும் சுமித்ரா-சேகர் வாழ்க்கையை பற்றி அஞ்சலி சொல்லுவாள், ஏதாவது உதவி செய்யலாம் என்று கெளதம் நினைத்திருக்க அஞ்சலி அதற்கு மேல் பேசவேயில்லை அதற்குள் திருமண மண்டபமும் வந்து விட்டு இருந்தது.

திருமண வரவேற்பு வெகு விமர்சையாக நடந்தது. ஆனால் அஞ்சலியின் புன்னகை போலி என்பதை கெளதம் உணர்ந்தே இருந்தான்.

இவர்கள் பேருக்கு ஏதோ சாப்பிட்டோம் என்று பெயர் செய்து கொண்டு வாயிலுக்கு வர, சந்தோஷ் அழைத்து,

“அவங்க உங்களை மீட் செய்யணும் என்கிறார்கள்” என்றான்.

ஹாஸ்பிடலில் அஞ்சலியை கண்டதும், அவள் கையை பிடித்து கொண்ட அவர், “கண்ணு..” என்று பாசமாய் அழைக்க, அஞ்சலி கண்களில் இருந்து கண்ணீர்.

“காவ்யா அப்பா, பாப்பா நம்மை விட்டுட்டு போய்ட்டாங்களே… இனி நான் என்ன செய்வேன்? இந்த பாவி சிறுக்கியை விட்டுட்டு போய்ட்டாங்களே” என்று கதறினார்.

“அம்மா!… .என்ன சொல்றீங்க?” என்றாள் அஞ்சலி அதிர்ச்சியோடு.

“ஆக்சிடென்ட் கண்ணு… ஒரு கார்காரன் அடிச்சுட்டான்.” என்றவரை அணைத்து கொண்டு அவரை சமாதானம் படுத்தினாள் அஞ்சலி

“அம்மா அப்பாவுக்கும் பாப்பாவுக்கு நீங்க கண் கலக்கினால் பிடிக்காதுமா. வேண்டாம் அழாதீங்க. அவங்க ரெண்டு பேரும் மேல் இருந்து கடவுளாய் உங்களை பார்த்துட்டே தான் இருப்பாங்க… உங்களுக்கு மகளாய் நான் இருக்கேன் அம்மா.” என்றாள் அஞ்சலி.

“பாப்பா சாகலையே கண்ணு. அது உசுரோடு தான் இருக்கு.” என்றார் அவர்.

“ரூபா உயிரோடு இருக்காளா? எங்கே இருக்கா அட்ரஸ் சொல்லுங்க… கூப்பிட்டு வர சொல்றேன்.” என்றாள் அஞ்சலி.

வாய் விட்டு கதறிய அவர், “அது செத்து போச்சுன்னு அது பொணத்தை காட்டினா கூட போதுமே… இப்போ எங்கே, எவன் கையில் சிக்கி, நீ தூக்கி வளர்த்த பொண்ணு சீரழிஞ்சுட்டு இருக்கான்னு தெரியலையே..

மொத்தமா இப்படி நாசம் செய்துட்டாங்களே கவி என் பொண்ணை… அதை தேடி தான் ஹோட்டல், ஹோட்டல்லா அலைஞ்சிட்டு இருக்கேன்… அது எங்கே இருக்குன்னு தான் தெரியலையே கண்ணு.

பத்து மாசம் சுமந்த என் குழந்தையை தொலைச்சிட்டு நான் ஆறு, ஏழு வருசமாய் தெரு தெருவாய் தேடிட்டு இருக்கேன் தாயீ. ரூபா நான் பெத்த என் தாயீ… எங்கே இருக்கே? என்று அலறியவர் மீண்டும் மயங்கினார்.

திக்ப்ரமை பிடித்து நின்றாள் அஞ்சலி.

“கவிக்கா!… நான் படிச்சி பெரிய டாக்டர் ஆகி எல்லோருக்கும் இலவச வைத்தியம் பார்க்க போகிறேன் அக்கா” என்று பள்ளி சீருடையில் ரெட்டை பின்னல் இட்டு,” பை அக்கா.” என்று கையாட்டிய அந்த சிறுமி அஞ்சலி கண்ணின் முன் வந்தாள்.

அஞ்சலி தள்ளாட அவளை தாங்கி பிடித்து கொண்டான் கெளதம்.

இதயம் சமர்ப்பிக்கப்படும்

 

 

 

 

 

 

 

error: Content is protected !!