பெண்ணியம் பேசாதடி – 14

பெண்ணியம் பேசாதடி – 14

பெண்ணியம் பேசாதடி – 14

 

ராட்சசியே நான்!

பாவியோ நான்!

பாசமில்லா கல்லோ நான்!

பசியறியா தாயோ நான்!

கண்ணீர் மல்க பேரிளம் பெண்.

 

பொறுக்குமா எழுத்தாளருக்கு

 

வறண்ட என் வாழ்க்கைக்கு

வரமாய் வந்த வன தேவதை நீயடி

 

தாத்தா!……… என்ற கத்தலில் மூர்த்தி அடித்துப் பிடித்துத் தனது வயதையும் மறந்து ஓடி வந்தார் “என்னப்பா” பாவம் போல் மூச்சுவாங்க கேட்ட மனிதரை பார்த்துப் பாவம் வரவில்லை கஞ்சனையைப் பெற்றவர் இவர் தானே என்ற கோபம் தான் வந்தது வளவனுக்கு.

 

“இவுங்கள எந்த நேரத்துல பேத்திங்க சொன்னத எதையும் கேக்குறதில்ல எனக்குக் கோபமா கோபமா வருது”

தனது உயிரை கொடுத்து நரம்பு புடைக்கக் கத்தியவனைப் பார்த்து வெகு அலட்சியமாக “எதா இருந்தாலும் என்கிட்ட பேசுடா என்ன பயமா ஹ்ம்ம்…” இப்படிப் பேசுபவளை என்னதான் செய்ய

 

“கொஞ்சம்  பேசாம இருக்கியா காஞ்சனை எப்போ பாரு சின்னப் பையன்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு உன்ன சமாளிக்க முடியல. பாவம் என் தங்கச்சி மவன் என்ன பாவம் பண்ணுனானோ உங்கிட்ட வந்து மாட்டிகிட்டான்”

 

“ரொம்பத்தான் ப்பா யாராவது பொண்ண விட்டுக் கொடுப்பங்களா தப்பே பண்ணாலும்”

 

“பொண்ண இருந்தா சப்போட் பண்ணலாம் நீ தான் ராட்சசி ஆச்சே அதான்” என்று வளவன் சொல்ல.

 

“டேய் நான் எங்க அப்பாகிட்ட தானே பேசுறேன், நீ எதுக்கு வர நீ உங்க அப்பாகிட்ட போடா”

 

உன்ன…… என்ன சொல்லி இருப்பானோ அதற்குள் வாமணன் வந்து விட்டார் மூவரும் கப் சிப்.காஞ்சனை தலையைக் குனிந்து கொண்டாள் மூர்த்திச் சங்கடமாக நிற்க.வளவன் புசு புசுவென மூச்சு விட்டான்.

நேராக மகனிடம் சென்றவர் “கண்ணா நீ போய் ரெஸ்ட் எடு நாளைக்கி பெங்களூர்  மீட்டிங் போகணும் தானே போ.கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு அதுக்குத் தயாராகு”

 

தகப்பன் சொல் தட்டாத பிள்ளையாகத் தாத்தாவிடம் மட்டும் சொல்லி கொண்டு கஞ்சனையை நல்ல முறைத்துக் கொண்டு சென்றான்.அவன் செல்லும் வரை அமைதியாக இருந்தவர் “மாமா நீங்களும் கிளம்புங்க கார் வெளில இருக்குப் போய்ச் சாப்பிட்டு மாத்திரை போடுங்க”

 

சரி என்பது போல் தலை அசைத்தவர் மறு பேச்சின்றித் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பச் செய்கையில் அவரைத் தடுத்துக் கொண்டு இருந்தாள் காஞ்சனை பையை எடுக்கச் சென்றவரை தன்னைப் பார்க்குமாறு கையை அசைக்க ஐயோ பாவம் பார்த்தது கணவன்.

 

தனது மாமன் போகும் வரை உக்ரம் அடக்கி எழுத்தாளர் காத்திருக்க அவர் சென்ற மறு நொடி கதவு அடைக்கப் பட்டது.அவரது கோபத்தின் அளவு கதவை சாத்தியதில் தெரிய பேரிளம் பெண்ணுக்கு உதறல் தான் ஆனாலும் வெளியில் நல்ல பிள்ளைகயாகப் பாவம் போல் முகம் காட்டி அட்டகாசம்.

 

ஒன்றும் பேசாமல் அவளிடம் சென்று அமர்ந்தவர் மெதுவாக “உனக்கு இந்தக் குழந்தை பிடிக்கலைன்னா நமக்கு இந்தக் குழந்தை வேண்டாம்” அவரது பேச்சில் பதறி பேரிளம்  பெண் பேச வர அவளைக் கை நீட்டி தடுத்தவர்

“ஏற்கனவே பிடிக்காத திருமணம் இப்போ குழந்தை அது இல்லாம என் பையன் புரியுது தப்பு என் மேலதான் நான் கட்டாயப் படுத்தி இருக்கக் கூடாது,

 

அசால்ட்டா சொல்லுற ஒரு நாள்  சாப்புடாம இருந்தா என்ன ஆகும்னு சொதுச்சு பார்த்தேன்னு. என் பிள்ளையைப் பட்டினி போட்டுக் கொல்லப் பார்த்து இருக்க. அப்போ உனக்கு என் குழந்தைய புடிக்கல அதானே”

 

கண்ணில் நீர் வடிய “இங்க பாருங்க எழுத்தாளரே இது என் குழந்தையும் தான். எனக்குக் கல்யாணம் நடக்கும் குழந்தையெல்லாம் கிடைக்கும்னு கனவுல கூட நெனச்சு பார்க்கல இப்படியே இருந்துடுவேன்னு தான் யோசுச்சேன் தெரியுமா.

 

வளவனுக்கும் பாப்பாகும் தான் விரதம்  இருந்தேன் (அவளது ஒன்றுவிட்ட சித்தியின் கைங்கரியம் இது) இது வரைக்கும் சாப்பிடாம இருந்தது இல்ல அதான் இப்புடி ஆயிடுச்சு” சிறு பிள்ளை போல் உதடு பிதுங்கி சொல்ல அள்ளி கொண்டு தான் போனது எழுத்தாளருக்கு.

 

“எதுக்குடி இப்போ அழகுற கண்ணா துடை”

 

“திட்டுனா அழுகாம …. உங்கள ரொம்பப் புடிக்கும் தெரியாத உங்களுக்கு வயசானவரா இருந்தாலும் பரவாயில்ல நம்ப எழுத்தாளருனு கட்டிகிட்டேன் ஆனா நீங்க”

 

“திமிர பாரேன் ஏண்டி நான் கிழவனா உனக்கு”

 

“எத்தனை தடவ கேட்டாலும் நீங்க தாத்தா தான் எழுத்தாளரே”

 

“வாய் வாய் என்ன வாயிடி உனக்கு அப்பா நீ இவுளோ பேசுவனு தெரியாம போச்சே”

 

“தெரிஞ்ச மட்டும் ஒன்னும் செய்ய முடியாது உங்களால”

 

“அது என்னமோ உண்மை தான் உன் அக்கா உன்ன மாதிரி இல்ல அவ அமைதி”

 

“ஆமா ஆனா அழுத்தம் உங்கள தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒரே சண்டை அப்பாகிட்ட. எனக்கு ஒன்னுமே புரியல அப்போ”

ஹ்ம்ம்.. பழச பேசாத எனக்கு ஒரு மாதிரி இருக்கு. இனிமே இந்த மாதிரி கிறுக்குத் தனம் பண்ணாம இரு.பாவம் மாமாவும் வளவனும் உன் விஷயத்துல கண்ணா ரொம்பச் சென்சிட்டிவா இருக்கான்”.(அது என்னவோ கடந்த கால வாழ்க்கையைப் பற்றிய பேச்சுக்களைத் தவித்தார் அதுவும் கஞ்சனையிடம் சுத்தமாக அதனைப் பேச பிடிக்கவில்லை.மதுவின் நினைவு பசுமையாக இருந்தாலும் காஞ்சனை மட்டுமே எதிர் காலம் என்ற நிலையில்……)

 

“ஏன்னா அவனுக்கு அவுங்க அப்பா மேல சரியான கிறுக்கு” சிறு பொறாமையோடு பேரிளம் பெண் சொல்ல.

 

“நல்ல குழந்தைடி அவன் என்ன ரொம்பக் கவனிப்பான் பாசமா இருப்பான்.எனக்கு கடவுள் கொடுத்த சொர்கம் அவன்”.

 

“அப்போ நானு”

 

“நீ நரகம்டி நித்தமும் காதலால் கொன்னு,அன்பாலே சித்ரவதை செஞ்சு,எனக்கு உயிர்ப்பு கொடுத்துத் துடிக்கத் துடிக்கக் கொள்ளும் கொலைகாரி” கண்ணில் முழுதும் போதையாகச் சொன்னவரை அவருக்குக் குறையும் போதையோடுப் பார்த்தாள் பேரிளம் பெண்.

 

“எழுத்தாளரே” கை விரித்துப் பேரிளம் பெண் அழைக்கக் குழந்தை போல் வந்து அனைத்துக் கொண்டார் வாமணன்.

 

 

அடுத்த நாள் காலையில் மருத்துவமனையில்  இருந்து வீட்டுக்கு செல்ல மூர்த்தி மற்றும் ரமேஷ் மட்டுமே வந்தனர்.வளவன் பெங்களூர்  செல்ல வாமணன் தொழிற்சாலையில் இருந்தார்.

 

வளவன் மூலம் விடயத்தை அறிந்த ரமேஷ் டேய் நீங்கெல்லாம் எந்தக் கிரகத்துல இருந்து வந்தீங்கடா. டிசைன் டிசைனா உயிரை வாங்க என்று அலறி விட்டான். அவனுக்கு இருக்கும் குட்டி இதயம் இது போல் விடயங்களைத் தாங்கும் சக்தி அற்றது அய்யகோ….

 

வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் காஞ்சனை நலம் கூட விசாரிக்காமல் கரும சிரத்தையாக வேலை செய்யச ‘சரியில்லையே’ காஞ்சனை தடையைத் தடவி யோசிக்க அவளது செயலை பார்த்து மனதுக்குள் அலறினான் ரமேஷ்.

 

முருகா எந்தச் சேதாரமும் இல்லாம நான் வீட்டுக்கு போய்ட்டா உனக்கு மொட்டை போடுறேன் டா காப்பது சாமி மனதுக்குள் வேண்டி நிற்க யாருக்கு வேணும் உன் ம……… போடா என்று முருகன் நினைத்தாரோ என்னமோ முருகன் அவனது வேண்டுதலை புறம் தள்ளி விட்டார் பாவம்.

 

“என்னடா வாய் பேச வராதா  உடம்பு முடியாம இருக்கேன். நல்ல இருக்கீங்களா கேக்க மாட்ட என்ன வளர்த்து இருக்காங்க உங்க அம்மா”.

 

“ஆமா என்ன நல்ல வளர்கள தான். ஆனா உன்ன ரொம்ப நல்ல வளர்ந்து இருக்காங்க ஒத்த ரோசா”.

 

“யாருடா அது”

 

“உங்க அம்மா”

 

“எங்க அம்மா பெரு மித்ரா”

 

“ரொம்ப முக்கியம் இப்போ. நீங்க வரலனா நான் போய்கிட்டே இருப்பேன்”

 

“எங்க போ பார்ப்போம் என் பையனும் புருசனும்  உன்ன சும்மா விட்ருவாங்களா என்ன”

 

“அந்தத் தைரியத்துல தான் இந்த ஆட்டம்”

“ஆமாடா”

 

“அம்மா தாயே! ரெண்டே இட்லி தான் சாப்பிட்டான் அதுக்கு மேல உங்க மகன்  சாப்பிட விடமா போனுல உயிரை வாங்கிட்டான்.போய் அம்மாவை பத்திரமா விட்டுட்டு போன் பண்ணுனு டார்ச்சர்”

 

 

பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க அழகாகச் சிரித்து “என் மகன் நல்லவன்”

 

“ஆமா ஆமா ரொம்ப நல்லவன் வாம்மா பர தேவதை வீட்டுல விட்டுட்டு சாப்பிட போறேன் என்னால முடியல கண்ண கட்டுது”

 

சரி சரி அழுகாத வரேன் பெரிய மனதாகக் காரில் ஏறினாள் காஞ்சனை.ஒரு கஞ்சனையைச் சமாளிக்க முடியவில்லை இதில் இன்னொரென்று என்றால் ஐயோ!!!! எண்ணி கூடப் பார்க்க முடியவில்லை ரமேஷால் உடனே ஒரு பெரிய வேண்டுதல் வைத்தான் ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்று. வேண்டுதல் பலித்ததா என்பதை இன்னும் ஐந்து மாதங்கள் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

 ************************************************************************************

அதோ இதோவென்று ஒன்பது மாதங்கள் ஓடி விட்டது அவர்கள் சமூகத்தில் ஒன்பதில் வளைகாப்புச் செய்வது வழக்கம் .அதற்குத் தான் அனைவரும் இந்த விடுமுறையில் கூடி உள்ளனர்.

 

வழமை போல் காஞ்சனை பகிரங்கமாக இந்த வளைகாப்பை எதிர்க்க.தந்தையும் மகனும் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.மூர்த்தி மத்தளமாக நடு நிலையில். கஞ்சனையின் கூற்றுச் சரிதான் என்றாலும்,அவளுக்கு இது முதல் திருமணம் வாய் விட்டு சொல்லவில்லை என்றாலும் அவளுக்கு உள்ளுக்குள் ஆசை இருக்க தானே செய்யும்.

 

ஆனால் முப்பது நடக்கும் நிலையில் அதுவும் பருவ மகனை பக்கத்தில் வைத்துக் கொண்டு வளைகாப்புச் செய்ய மனம் ஒப்பவில்லை.கோவிலுக்குச் சென்று பழுத்த சுமங்கலி கையில் ஆசி பெற்று வளையல் அணிந்தாலும் வளைக்கப்புக்கு செய்வதற்கு  சமம் தான்.

 

எழுத்தாளரின் மனம் பேரிளம் பெணின் நலன் கருதி அவள் மகிழ்ச்சிக்காகச் செய்ய வீம்பு வந்தது அவருக்கு அது சரி.

 

“எழுத்தாளரே என்ன இது எதுக்கு வீம்பு புடிக்கிறீங்க வர வர நான் எது சொன்னாலும் அதுக்கு மாறாதான் செய்யுறீங்க  உங்களோட மல்லுக்கட்ட முடியல”

 

“உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண முடியாதும்மா அவர டென்ஷன் படுத்தாதீங்க” தனது தந்தையைப் படுத்தும் பாடு பொறுக்க முடியாமல் வளவன் சொல்ல. விடுவாளா என்ன காஞ்சனை

 

“டேய் நான் என் புருஷன்கிட்ட பேசுறேன் நீ எதுக்கு வர”

 

“அவர் எங்க அப்பா அப்புறம் தான் உனக்குப் புருஷன்”

 

“அடிங்க அதெல்லாம் முன்ன இரண்டவது கல்யாணம் பண்ண என்ன ரூல்ஸ் தெரியுமா” படும் தீவரமாக முகத்தை வைத்துக் கொண்டு காஞ்சனை வளவன் முகத்துக்கு நேராக நெருங்கி அவனது கண்ணைக் குத்திவிடுவது போலக் கையைக் கொண்டு சென்று,

 

“இதோபார் எல்லாமே இரண்டாவது பொண்டாட்டிக்கு தான் தெரியுமா உங்க அப்பா, இந்த வீடு, அப்புறம் அவர் தொழில் எல்லாமே எனக்கும் என் பிள்ளைக்கும் தான் உனக்கு இல்ல”

 

கஞ்சனையின் பேச்சில் அனைவரும் அதிர்ந்து நிற்க வளவன் மட்டும் அவளை நேர் கொண்டு பார்த்துத் தயவு செஞ்சு இது மாதிரி எல்லாம் ட்ரை பண்ணாத சிரிப்பா வருது அலட்டிக்காமல் சொல்லி சென்று விட்டான் வளவன்.

 

போகும் அவனை பார்த்து “போடா பிசாசு இரு சித்தி கொடுமைன்னா என்னனு காட்டுறேன் பாரு” அவனது காதில் விழுந்தால் தானே.

 

மூர்த்திக்கும் வாமணனுக்கும் அப்போது இவர்களின் விளையாட்டு புரிய கொஞ்சம் தெளிந்தனர் “ஏய் காஞ்சனை புள்ள கிட்ட இப்புடித்தான் பேசுவியா” என்று கடிந்து கொண்டு செல்ல அவரை தொடர்ந்து எழுத்தாளர் “ராட்சசி…. ராட்சசி…..” என்று கன்னம் கிள்ளினார்.

 

எழுத்தாளரின் இதயத்தில் காதல் பருகும் ராட்சசியாகப் பேரிளம் பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!