விழியிலே விலங்கிட்டாள்

விழியிலே விலங்கிட்டாள்

விழியிலே விலங்கிட்டாள்

 

‘தலை சாய்க்க இடமா இல்லை

தலை கோத விரலா இல்லை

இளங்காற்று வரவா இல்லை

இளைப்பாறு பரவா இல்லை’

 

மிதமான வேகத்தில் தார்ச்சாலையில் மிதந்துகொண்டிருந்த உயர்ரக கறுப்பு வர்ண மகிழூந்தின் உட்புறம் முழுவதும் தன் காந்தக் குரலினால் ஆக்கிரமித்திருந்தார் ஜேசுதாஸ். 

 

பாடல் ஒன்றுதான் காட்சிகள் வேறு என்பது  போல கடந்தகாலத்தில் இதே குரலில் ‘காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே’ என்ற பாடலைத் தேசிய கீதமாக பாவித்த தினங்களை நினைக்கையில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த பவீனுக்கு சிரிப்பு பீரிட்டது.

 

“ம்ஹ் இந்த பாட்டு எல்லாம் மூன்று வருஷத்துக்கு முன்ன ஏதோ உலகமகாப் பொய் அதுதான் சுத்தமான உருட்டுனு நம்பினாயே பவீன். ஒன்று போன அடுத்து இல்லைனு சொன்ன அகம்பாவக் காதலன் ஒரு ஆதிக்க வாதியின் காலுல விழுந்து மண்டியிட்டுட்ட” முணுமுணுப்புடன் சேர்த்து இளநகையென்று அவனின் இதழ்களில் வீற்றுக் கொண்டது.

 

ஸ்டியரிங்கில் பாடலுக்கு ஏற்றவாறு விரல்களைத் தாளமிட்டவன், பாடலின் வரிகளையும் ரீங்காரமிட ஆரம்பித்தான். பாடலிசைக்குப் போட்டியாக அவனின் தொலைபேசி ஒலியெழுப்பவும், காதில் மாட்டியிருந்த செடுகி மூலம் அழைப்பை ஏற்றான்.

 

“சார் குட் ஈவினிங். இன்னைக்கு ஆறுமணிக்கு ஃபேன்ஸ் மீட்அப் இருக்கு சார். குயிஸ்டின் எல்லாம் ப்ரீ பிளாணட் வன் தான். பட்….” மறுபக்கம் பேசிய பவீனின் காரியதரிசி இழுக்கவும், “வாட் மேன்?” என்றான்.

 

“பேஃன் கேஃர்ஸ், மே பீ உங்க கடந்தகால காதல் பத்திய கேள்விகளை லிஸ்ட் அவுட் பண்ணியிருக்காங்க. வேணும்னா அதை ரிமூவ் பண்ணிடவா?” எடுத்த எடுப்பில் போட்டு உடைக்கவும், பவீன் சர் என்று வண்டியை நிருத்தியவன், மூச்சை இழுத்துவிட்டான்.

 

“சார்?” கேள்வியாக அவன் வினவ, “இல்லை என்னோட ரசிகர்கள் என்ன கேட்க விரும்புறாங்களே கேட்கட்டுமே. ஒரு நடிகரா என்னோட ரசிகர்கள் இல்லைனா இந்த குறுகிய காலத்துல என்னால நெசனல் அவார்ட் எல்லாம் சாத்தியமே கிடையாது. டோன் கட் எனி குயிஸ்டீன்ஸ். ஐ வில் பீ தெயார் எட் சார்ஃப் டைம்” அதிரடியாக பதிலைக் கக்கியவன் அழைப்பைத் துண்டித்துவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

 

வண்டி முன்செல்ல அவன் நியாபக அடுக்குகள் பின் சென்றன. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னதான பவீன் என்பவன் காதல் மன்னனும் வறுமையின் நாயகனுமாவான்.

 

தென்கோடிக் கிரமமொன்றின் உயர் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்த பவீனுக்கு அடுத்தது இரண்டு தங்கைகள். சென்னையில் முகாமைத்துவ கற்கைநெறியை முடித்தவன் முதுமானி பட்டப்படிப்பும் வணிகத்தில் சந்தைப்படுத்தல் துறையில் படித்தான். வீட்டின் குடும்ப சூழல், தனக்கடுத்த தங்கைகளை கரைசேர்க்க வேண்டிய பெறுப்பு என நினைத்த வேலையை விட்டு கிடைத்த வேலையாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்தான்.

 

சொற்பமான சம்பளம் எடுபிடித் தொழில் என்பதையும் தாண்டிக் கடமையில் கருத்தாயிருந்தவனுக்கு அத் தொலைக்காட்சி வட்டத்துக்குள் நெருங்கிய நட்புக்கள் கிடைக்கப்பெற்றன. அதில் அவனின் மனதைக் கவர்ந்த ஒருத்தியுமிருந்தாள்.

 

துஞ்ஜிதா, துணை நாடகக் கலைஞர்களுள் ஒருத்தியவள். எப்படியாவது ஒரு நடிகையாகிவிட வேண்டும் என்ற ஆவல் என்பதைத் தாண்டி பேராசையுடனே பவனிவருபவள். நாட்கள் நகர நகர நட்பு எனும் வட்டத்தைத் தாண்டி பவீன் மற்றும் துஞ்ஜிதாவுக்கு மத்தியில் காதல் செடி மலரினை விரித்தது.

 

எறும்பு ஊர தேய்ந்த கல்லாக, காதல் மாயை பவீனை ஆட்டுவிக்க, அவனும் துஞ்ஜிதா இழுத்த இழுப்பிற்கெல்லாம் நூலில் ஆடும் காற்றாடியாக அசைந்து கொடுத்தான். தொலைக்காட்சி வட்டத்தில் கிடைத்த சில நட்புக்களின் மூலம் தன்னை ஒரு நடிகையாக மாற்றுவதற்காக, குறும்திரைப்படமென்றை இயக்கி நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்த துஞ்ஜிதா சென்று நின்றது என்னவோ பவீனிடம் தான்.

 

“ஸ்டாபரி பாய். நாம்ம சேர்ந்து ஒரு ஷார்ட் பிஃல்ம் பண்ணலாமாடா?” பவீனின் தோள்களில் இரண்டு கையையும் கோர்த்தவாறு கொஞ்சினாள். “என்னடீ திடீர்னு?” விளங்காதவனாக கேட்டான் பவீன்.

 

“நம்ம தேவ் பையன் இருக்கான்ல, அவனுக்கு தெரிஞ்ச புரோடியூசர் கம்பனி ஒன்னு ஏதோ கம்படிசனா ஷார்ட் ப்பிஃல்ம் எடுக்குறாங்கடா. நம்மும் ஜாயின் பண்ணிக்கலாம் ஸ்டாபரி பாய்” மிளிற்றல் போல வார்தைகளைக் கோர்வையாக்கியள் எம்பி அவன் கன்னத்தில் இதழ் ஒற்றினாள்.

 

“நீ கேட்டு நான் எப்போ இல்லைனு சொல்லியிருக்கேன்” உதடுகளைத் திறந்து புன்னகைத்தவன் தன் சம்மதத்தையும் அறிவித்திருந்தான்.

 

“ஆனா…” என்றவள் முகத்தை குழந்தைபோல் சுருட்டவும், “சொல்லுடீ அது தான் வாய் வர வந்துச்சுல்ல வார்தை” என்றான் பவீன்.

 

“இல்லடா ஹீரோக்கு எஃக்ட் பண்ண யாரும் கிடைக்கல எண்ட் பட்ஜடும் கொஞ்சம் இடிக்குது. அதானால நீயே கொஞ்சம் நடிச்சிடு, பணமும் உன் கைல இருந்து போடு” மின்னாமல் முளங்காமல் அவனை அடித்து துவைக்க ஆரம்பித்தாள். 

 

“வாட்? விளையாடாதடீ” உண்மையில் அதிர்ச்சியில் அவன் துஞ்ஜிதாவை நோக்க, “எனக்காக இதுகூட பண்ண மாட்டியா?” பெண்களின் கடைசி ஆயுதமான அழுகையைக் கையில் எடுத்தாள். கடலில் குதித்தவன் கூட உயிர்தப்பிவிடுவான் ஆனால் காரிகையின் கண்ணீர் குதிதவர்கள் தப்பியதாக சரித்திரமேயில்லையே! விக்கித் திக்கி விழிநீரைப் பொழிந்து தன் சொல்லுக்கு அவனிடம் அங்கிகாரம் வாங்கினாள்.

 

அடுத்தடுத்த நாட்களிள், சிறுகசிறுக நெல்மணிபோல சேத்துவைத்த தனது பணத்தினை குறும்படத்தாயாரிப்புக்காக வாரியிறைத்தவன், தன் தமிழ்நாட்டுக்குறிய கம்பீர ஆண் தோற்றத்தையும் நடிப்புக்காக களத்தில் இறக்கினான்.

 

நடிகனாக நடிக்க ஆரம்பிக்கும் போதுதான் அவனுள்ளும் ஒழிந்திருக்கும் நடிகன் வெளிக் கொண்டுவரப்பட்டான். தன் திறமையும் நுட்பமும் வெளிகாட்டப்பட்ட போது, அவனுடைய காதல் அவனை விட்டுத் தூரம் சென்றதை அவன் அறியான்.

 

வெற்றிகரமாக படப்படிப்பு முடிவடைந்து, திரையிடலுக்கான பணிகள் நடந்து கொண்டிருந்த போதே பவீனுக்கு பேரிடி ஒன்று தலையில் விழுந்தது. திருமணப் பத்திரிகையுடன் அவனின் முன்னால் வந்து நின்றாள் அவனின் ஆசைக் காதலி துஞ்ஜிதா.

 

“அடுத்த புதன்கிழமை எனக்கும் நம்ம புரோடிசர் துகனுக்கும் கல்யாணம் கண்டிப்பா வந்துடு. அங்க நிறைய இன்டஸ்ரி ஆளுங்க வருவாங்க. உனக்கு இன்ரோ கொடுக்குறேன். எண்ட் இதுல கொஞ்சம் பணமிருக்கு…” அவள் தொடர்சியாக பேசிக் கொண்டிருக்கும் போதே,

 

“என்னடீ சொல்லுற” கரகரப்பான குரலில் வினவினான் பவீன். “உனக்கு புரியும்னு நினைக்கிறேன். எனக்கு என் லைஃப்ல செட்டில் ஆகுறது தான் எஃய்ம். துகன் ரொம்ப வசதியானவன். என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான். நானும் ஒகே சொல்லிட்டேன்” காரசாரமாக பேசினாள்.

 

“வியைாடாதடீ. சும்மா பொய்தானே சொல்லுற?” உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை அவனிடம். 

 

“என்னது பொய்யா? ஹாஹா, உன் கிட்ட என்ன இருக்கு பவீன். பஞ்சப்பரதேசியான உன் கூட நான் வாழ்ந்து என்னத்த சாதிக்க முடியும். எல்லாத்துக்கும் ஆசைபட மட்டும் தான் முடியும். நீ எப்போ உன் தங்கச்சிங்கல செட்டில் பண்ணி என்னைக் கல்யாணம் பண்ணுறது. நான் கிழவியானாலும் இது எதுவும் நடக்காது. நீ பிச்சைக்காரனா இருக்குறது உன் தலையெழுத்து எதுக்கு நானும் உன் கூட சாகனும். இந்தா இதை வைச்சிக்கோ” பணக் கற்றையென்றை கையில் வைத்துவிட்டு அவள் நகரவும்,

 

“ஏய்! இந்தப் பணம் யாருக்கு வேணும். உன்னை ஆசையா தொட்ட இந்தக் கையால அடிக்க வேணாம்னு பாக்குறேன். நான் பிச்சைக்காரனாகவே இருந்துட்டு பேறேன். ஆனா முதல்ல நீ எமாத்துக்காரியா இல்லாம இரு. ஆனா ஒன்னுடீ, காதல்னா புனிதமானது உண்மையானதுனு நம்பிக்கை வைத்திருந்தேன். காதலும் பொய், பொண்ணுங்களும் பொய்னு நிருபிச்சிட்ட. தங்ஸ் பாஃர் யூவர் லெசன்” அவளின் முன் பணத்தை வீசியெறிய, துஞ்ஜிதாவோ தயங்காமல் பணத்தை எடுத்து தன் கைப்பைக்குள் திணித்துக்கொண்டாள்.

 

தன்னை உடைத்துவிட்டுச் சொல்லும் துஞ்ஜிதாவின் வதனம் கண்ணை விட்டு மறையும் வரை அவளை வெறித்தவன், மன அழுத்தம் தாளாமல் அடுத்து சென்றது என்னவோ மதுவை நாடித்தான். மாதுவை மறக்க கையில் கோப்பையேந்தினான். காதலின் கசப்பை கடக்க குடியிலே குடித்தனம் நடத்தனான். அவளின் கன்னத்தை உராய்ந்த உதடுகள் புகையை ஊதித்தள்ள, அவளினைச் சுமந்த இதயம் அமிலத்தில் இறுக, நினைவுகளுடன் நிலையைமை கடக்க முடியாமல் உயிரை துறக்க துணிந்தான் பவீன்.

 

தனது விசிரிகளின் கேள்விகளுக்கான பதில்களை உதட்டில் தவழ்ந்த, வசீகரப்புன்னையுடன் வழங்கியவன், மேலும் மேலும் தன்பால் ரசிகர்களை ஈர்துக்கொண்டான். காதல், மனைவி, குடும்பம் என தொடுக்கப்பட்ட வினாக்களின் விடைகளில் அவன் உச்சரித்த பெயர் அவனின் சுபிட்ஷனா. 

 

கடிகாரங்களில் முற்கள் ஓட, காலதேவனும் அசைய அச் சந்திப்பு வைபவம் நிறைவு பெற்று, சிலபல பெண் ரசிகைகளுடன் புகைப்டத்திற்கு ஒட்டாமல் நின்று இதழ்விரித்து என மீண்டும் தனது வண்டியில் ஏறிக்கொண்டவனை வரவேற்றது அடுத்த பாடல்.

 

‘மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து இருந்து

பறந்து தினம் மகிழ,

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்’ 

 

ஆரம்பித்த போது சருகாகிப்போன தன் காதலை நினைத்தவன் மீண்டும் திரும்பும் போது அமுதமாக சுரந்து, நிறைந்து, வழிந்து சுவைக்கும் அவன் ஆத்மாவின் கேடயமான அவனவளை நெஞ்சுக்குள் மீட்டிப்பார்க்களானான்.

 

கண்ணாடிப் போத்தலில் தன்னை அடைத்துக் கொண்டு, அடுத்தவனின் வாழ்கையை ஆட்சிசெய்யும் பாணத்தில் தனக்கான நிம்மதியைத் தேடிய பவீன், தினமும் குடி, குடியென நாட்களைக் கடத்தினான்.

 

தாயிற்கு சமமான சாதத்தை உண்ணும் போதும் தண்ணீருக்குப் பதில் சாராயத்தைப் பருகுமளவுக்கு குடிக்கு அடிமையாகிவிட்டான். ஆண்களுக்கான விடுதியில் தங்கியவனின் அட்டூழியம் அதிகரிக்க, அவ்விடுதியின் பொறுப்பாளர் பவீனுடன் நல்ல உறவைபைப் பேணி வந்தவர், அவனின் நிலையைச் சகித்துக்கொள்ள முடியாமல் ஒரு நாள் அடாவடியாக அவனை மனநல வைத்தியரிடம் அழைத்துச் சென்றிருந்தார்.

 

ஆரம்பகட்ட பரிசோனையின் பின், “மிஸ்டர் பவீன் நீங்க கண்டிப்பா கவுண்சிலிங்ஸ் சிட்டிங் பண்ணியாகணும். படிச்ச பையன் தானே புரிஞ்சிப்பிங்கனு நினைக்கிறேன்” என்ற வைத்தியர், இவனுக்கான உளவியல் ஆலோசகராக தெரிவு செய்யதது, சுபிட்ஷனாவைத்தான்.

 

இரண்டு நாட்களின் பின், விடுதிப்பொறுப்பாளரின் நச்சரிப்பின் பெயரில், வைத்தியசாலைக்குச் சென்றான் பவீன். காத்திருப்பு இருக்கையில் அமர்ந்திருந்தவன் பெறுமையின்றி எழுந்து செல்ல நினைத்த போது, சிற்றூளியர் இவனை உள்ளே செல்லுமாறு பணித்துவிட்டுச் சென்றான்.

 

சம்பிரதாயத்துக்கு கூட கதவைத் தட்டாதவனாக, அடாவடியாக உள்ளே நுழைந்தவனை வரவேற்றது சுபிட்ஷனாவின் மலர்ந்த முகம்.

 

“எஸ். மிஸ்டர் பவீன். சிட்” என்று அவள் இருக்கையைக் காட்ட அவன் சற்று தள்ளாடியபடி அமர்ந்தான். ஒரு மாதத்துக்கு மேலாக சவரம் செய்யப்படாத தாடி, கசங்கிய ஆடை, மதுவின் நெடிவாசம் என உட்கார்ந்தவன் செய்த காரியத்தில் சுபிட்ஷனா தவிர்ந்து வேறு யாரும் வைத்தியராகவிருந்தால் நிச்சயமாக பவீனின் நிலை அதே கெதிதான்.

 

கதிரையில் சாய்ந்து அமந்தவன், சட்டைப் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து புகையை அவள் முகத்திலேயே ஊதினான்.

 

“பவீன்! என்ன இது?” வாசனை ஒவ்வாமையால் சற்று இருமிக்கொண்டு அவள் கேட்கவும், “உனக்கு யாரு டாக்டர் வேளை கேடுத்தது. கண்ணு தெரியாது? இது சிக்கரெட். வேணுமா?” என்றவாறு அவள் முன் நீட்டவும், அவள் அதைப் பறித்து குப்பைத் தொட்டியில் போட, பவீன் ஆத்திரத்தில் அவளை அடித்திருந்தான்.

 

“பொம்பளனு பாக்குறேன். கொண்ணுப்புடுவேன் பாத்துக்கோ. அது என்னடி எல்லாப் பொண்ணுங்களும் நல்லவ மாதிரி குடிக்க கூடாது, தம் அடிக்க கூடாதுனு சொல்லி நடிக்கிறிங்க” கத்த ஆரம்பித்தான்.

 

“சரிங்க பவீன் சாரி! உங்களுக்கு வேணும்னா வெளிய போய் ஸ்மோக் பண்ணலாம். இங்க வேணாமே” கண்களைச் சுருக்கி தலையை ஒரு புறம் சாய்த்துப் பேசியவளின் சொல்லுக்கு மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல கட்டுப்பட்டான்.

 

“உங்களுக்கு பிடிச்ச உணவு எது பவீன்” சாதாரனமா பேச்சை ஆரம்பிக்கும் முயற்சியில் அவள் இறங்க, “எனக்கு சாராயம் தான் ரொம்ப பிடிக்கும்” என்றான்.

 

“நல்லது, அப்போ பிடித்த பாட்டு” அடுத்த கேள்வி அவளிடம், “வேற என்ன தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான்” எனப் பாடியவன் மேசைமீது ஏறி ஆடவும் தொடங்கினான்.

 

சுபிட்ஷனாவுக்கு துளியும் கேபமே எழவில்லை மாறக, இதழ் நன்கு விரிய ஆரம்பிக்க, கலகலவென சிரிக்க ஆரம்பித்தவள், பின் அவனை அடக்கி சில மாத்திரைகளை வழங்கிவிட்டு, ஒரு வாரத்தின் பின் சந்திக்குமாறு கூறியனுப்பினாள்.

 

அடுத்த வாரமும் அதோ ரகளைதான் பவீனிடம், ஆனால் சுபிட்ஷனாவிடம் பெறுமையும் மென்மையும் மேலும் அதிகரித்தது. நான்கு அமர்வுகளின் பின்னும் சில சமயம் குடித்துவிட்டு வருவதை பவீன் நிருத்தவில்லை.

 

ஐந்தாவது வாரமும் அடர்ந்த தாடியுடன் வந்தவனை கண்கள் சுருக்கிப் பார்த்தவள், “என்கூட கொஞ்சம் வரமுடியா?” என்றாள். “நான் எதுக்கு வரனும்?” விடாப்பிடியாக நின்றவனிடம், “என்ன பிராண்ட் குடிக்குற பவீன்?” குதர்க்கமாக பேசவும், “எல்லாம் உள்ளூரு சரக்குத்தான்” என்றான்.

 

“சரி வா பவீன், இன்னைக்கு வெளிநாட்டுசரக்கு வாங்கிக் கொடுக்குறேன்” என்கவும், அவளை ஏறஇறங்க பார்தான் அவன். “அட வாப்பா” என்ற சுபிட்ஷனா, இழுக்காத குறையாய் அவனை முடிவெட்டும் கடைக்குக் கூட்டிச் சென்றாள்.

 

“பெஸ்ட் ஸ்டைல் ஆகலாம், அப்போதான் பாரிங் சரக்கு கிக்கா இருக்கும்” கண்ணைச் சிமிட்டியவளை ஏறிட்டவன், ‘பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்து லூசா ஆகிடுச்சா?’ மனதில் மட்டுமே நினைத்தவன், அவள் கூறிய சிகையலங்காரத்தையும் செய்து கொண்டான்.

 

பின், காரில் அவனை அமர்த்தி, வண்டியைக் கிளப்பியவள், ஆளரவமற்ற  சாலையில் வண்டியை நிறுத்தி, உயர் ரக மது பாணத்தை அவன் கைகளில் கொடுத்தவள், “ஒன்லி வன் சிப்” கட்டளையுமிட்டாள்.

 

படக்படக் என மூன்று மிடர்களைக் குடித்தவன், “உனக்கு வேணாமா டாக்டரே” அவளின் பக்கமாக நீட்டவும், அதனைப் பறித்தவள், காரின் கண்ணாடி வழியே வெளியில் எறிந்து விட்டு மீண்டும் கண்ணாடியை உயர்த்தினாள்.

 

“என்னா டாக்டரே இப்படி பண்ணிட்டே” அவன் கடியவும், “எப்படி?” என்றாள் சுபிட்ஷனா. “நீயும் பொம்பள பேய்தானே? ஆம்பளைங்க கஸ்டம் எங்க தெரியப்போகுது. நீங்கலாம் சரியான சுயநலவாதிடீ” ஆக்ரோசமாக அவன் பேசவும்,

 

“அது என்ன பவீன் எல்லாப் பொண்ணுங்களையும் சொல்லுற? உன்னை ஒருத்தி ஏமாற்றி விட்டுட்டுப் போனா எல்லோரையும் சாடுறது தப்புடா. ஏன் உன் அம்மா, தங்கச்சிங்க பெண்ணு இல்லையா? அவங்களையும் இப்படி பேசுவியா? மாட்டயில்ல?” எனக் கேட்டவளிடம்,

 

“அவங்களும் காதலியும் ஒன்னு இல்லைல?” என்றான். “பவீன்! நாலு படத்துல காட்டுறது மாதிரி ஒருத்தனுக்கு ஒருத்திதான் ஐ மீன் ஒரு காதல் தான் வரும்னு இல்லையே? காதல் பட்டுப் போன மரத்தில் மீளப் பூக்குற பூ தான் தவிர ஒரு முறை மலரும் அதிசப்பூக்கிடையாது. உனக்குனு ஒரு பொண்ணு உன்னைய மட்டும் உண்மையாக நேசிப்பா பவீன்” தன்மையாக எடுத்துக் கூறினாள்.

 

“இன்னொருத்தியா எனக்கா? தெரியாமத்தான் கேட்குறேன். என் கதை எல்லாம் உனக்குத் தெரியும்ல நீ என்னைய கல்யாணம் பண்ணிப்பியா?” அவளை மட்டம் தட்டுவதற்காக பேசினான்.

 

“எப்போ பண்ணிக்கலாம்” பவீனுக்கு அவளின் பதில் தூக்கி வாரிப்போட்டது. “சுத்தம் உனக்கு லூசுங்க கூட பேசிப் பேசி நட்டுக்கழண்டு பேச்சு” கலகலவென சிரிக்கவும், “நான் தெளிவாகத் தான் சொல்லுறேன் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றாள்.

 

“உன் பேசன்ட் எல்லார் கிட்டவும் இப்படித்தான் பேசுவியா?” நக்கலாக கேட்டான் அவன். “எல்லோரும் நீயாகிட முடியாது பவீன். சொல்லு எப்போ கட்டிக்கலாம்?” மீண்டும் அதே கேள்வி,

 

“அடிச்சேனு வை. நான் லவ் பையிலியர்டீ, கைல காசு இல்லாதவன், என் குடும்பத்ததை பார்த்துக்க வேணும், எல்லாத்துக்கும் மேல குடிகாரன்டீ” தன் குறைகளைத் தானே தொகும் போது அவனுக்குள் சற்று வேதனையே.

 

“இட்ஸ் ஓகே. அந்தப் பொண்ணு இப்போ உன் லைப்ல இல்லை. அம்மா, தங்கச்சிங்கல இரண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம். காசு என்கிட்ட இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” எதற்கும் தயாராக அவள் பேச,

 

“அப்போ குடிகாரன்” பவீன் எடுத்துக் கொடுக்கவும், “இந்த நிமிசம் வரை குடிகாரனா இருந்தா ஒன்னுமில்லை” என்க,

 

“அப்போ இனி குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடந்தா என்ன பண்ணுவியாம்?” என்றான். “அட்ரஸ்ஸ் சொல்லிட்டு விழுவியாம் நான் வந்து அள்ளிட்டு வருவேனாம்” சிரித்தாள் சுபிட்ஷனா.

 

“பேச்சுக்கு நல்லாத் தான் இருக்கும். ஆனா குடிச்சிட்டு உன் கிட்டவே வர விடமாட்ட, ஏன்னா இப்போவும் மூக்கைச் சுளிச்சிட்டு இருக்க” கடைசி வாய்ப்பைக் கையிலெடுக்க, “அப்படியெல்லாம் இல்லியே” என்றவளை இழுத்து உதட்டோடு உதடு பிணைத்தான் பவீன்.

 

சற்று நேரத்தின் பின் விட்டவன், “இந்த நாத்தம் உனக்கு என்ன பன்னீர் வாசமாகவா வீசுது” புருவத்தை உயர்த்தி ஏளனமாக சிரிக்க, “இன்னொரு வாட்டி பார்த்து சொல்லுறேன்டா” என்றவள் அவனை சிறைபிடித்துக் கொண்டாள்.

 

அமிலத்தில் கரைந்தவனை காதலால் கரைக்கும் விசப்பரீட்சையில் முதலடியை எடுத்து வைத்த சுபிட்ஷனா, அவன் வீட்டிற்குச் சென்று திருமணத்தையே பேசிமுடித்தாள்.

 

அவளின் அடாவடித்தனத்தில் சற்று ஆடிப்போன பவீன், மெல்ல மெல்ல அவளிடம் தன்னைத் தொலைக்க ஆரம்பித்தான். அவள் கூறியது போன்று குடித்துவிட்டு குப்புற விழுந்துகிடக்கும் போதெல்லாம் அவனைத் தன்மடியில் தாங்கியவள், இரண்டு மாதங்களில் அவனின் மனவாட்டியாக மாறினாள்.

 

எடுத்த எடுப்பில் அவனின் குணமும் பழக்கவழக்ங்களும் மாறக்கூடியதல்லவே! மெதுமெதுவாய் அடியெடுக்கும் குழந்தை போல, அவளின் விழி வழி பொழியும் நேசத்தில் சி்க்குண்டவன், பின் நாட்களில் அவளின் காதலின் காலடியில் கைதியாகியே பேனான்.

 

அவன் நடித்த குறும்படமும் சற்று புகழை அடைய, ஒரு இயக்குனர் அவனை அனுகி படவாய்பினையும் வழங்கினார். ஆரம்பத்தில் மறுத்தவனை, “உனக்குள்ள நீ யாருனு ஒரு மாயத்திரையிருக்கும் பவீன் அதை வெளிய கொண்டுவா. உன் கூட துணையாக நான் இருப்போன்” தட்டிக்கொடுத்தவளின் கையைப் பிடித்துக் கொண்டே இன்று விருது பெற்ற நடிகராக மிளிர்கிறான்.

 

சுபிட்ஷனாவின் நினைவில் வீட்டிற்கு வந்தவனை வரவேற்றது, அசைந்தாடும் தேர்வயிற்றுடன்  அவனின் மனைவியே. வாசலில் போடப்பட்ட கூடை ஊஞ்சலில் மெல்ல எம்பி அமர்ந்தவள் அவனை நோக்கி ‘வா’ எனக் கையை நீட்டினாள்.

 

பவீனோ அவளின் பாதத்தி்ன் அடியில் அமர்ந்தவன், காலைகளை அழுத்திவிட ஆரம்பிக்கவும், “என்னடா பவீன் பெண்ணுங்க எல்லாம் உன்னை டெக் பண்ணி இன்னைக்கு ரெண்டிங் லிஸ்ட முன்னுக்கு வந்துட்ட போல” செல்லமாக கொஞ்சவும்,

 

“எல்லாம் என் சுபியால தான்” அவளின் பாதத்தில் முத்தத்தை வைத்தவன், “இப்போவாச்சும் சொல்லு, ஏன் என்னை உனக்கு பிடிச்சது” இத்துடன் கோடித்தடவைகள் கேட்டுவிட்டான் பவீன்.

 

“பவீன், காதலுக்கு காரணங்கள் தேடக்கூடது. விருப்பு வெறுப்பு எல்லாமே உணர்வுகள் தான்டா. எனக்கு உன்னை பிடிக்கும் அதுக்கு மேலே எதுவுமே கிடையாது. இது உணர்த்த முடியாத ஒன்னு. எல்லாமே புரிதல் தான்.” வேதாந்தம் பேச ஆரம்பிக்கவும், பொறுக்க மாட்டாமல் எம்பியவன், அவளது மென்வரிக் கேடுகளை சிறையெடுத்தான். முத்தத்தில் நனைந்தாலும் அவன் கருமணிக்குள் தன் கருமணியை விளையாட விட்டவள், அவளின் விழிக்குள் அவன் விழிகளை விலங்கிடத்தவரவில்லை. 

 

கண்ணில் கண்சேர்த்து தன் காதலை கண்ணுக்குள் வசப்படுத்தயவளின் விழி விலங்கில் அவன் வாழ்நாள் தொடரட்டும்.

 

விலங்குகள் பூட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!