Akila Kannan’s Thaagam 5
Akila Kannan’s Thaagam 5
தாகம் பகுதி – 5
“விக்ரமின் பார்வை திவ்யாவிடம் திரும்பியது. இந்த பெண் யார்..? இவளுக்கும் ரமேஷுக்கும் என்ன சம்பந்தம்..? “என்ற கேள்வி மனதில் எழுந்தது.
யோசனையுடன் அவளைப்பார்த்தான் விக்ரம்.
திவ்யா தன் முதல் கேள்வியை கேட்டாள்.
“1. What is your plan for industrial wastage? Do you have plans for reusing water?
We have and we are working more on it.
என்று சுருக்கமாக பதில் அளித்தான்.
- Do you think your industry may lead to power fluctuations here?
தன் கண்களை சுருக்கி கொண்டு ரமேஷை பார்த்தவாறே இந்த கேள்விக்கு பதில் கூறினான் விக்ரம்.
There may be initial problems, but we will overcome them in a week or 10 days
தமிழ் ல கேள்வி கேளுமா என்று கூறினார் ஒரு பெரியவர்.
தன் கேள்விகளை அத்துடன் முடித்துக்கொண்டாள் திவ்யா.
அவள் டீம் மெம்பெர்ஸ் அவளைப் பாராட்டும் விதமாக அவளுக்குக்கை குலுக்கினர்.
“இவளுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா?” என்று யோசித்தான் விக்ரம்.
மேலும் சில கேள்விகளுக்கு பின், அவர்கள் நேர்காணலை முடித்துக் கொண்டனர்.
அனைவருக்கும் நன்றி தெரிவித்தான் விக்ரம்.
ரிப்போர்ட்டர்ஸ் அனைவரும் கிளம்பி விட்டனர்.
திவ்யா ரமேஷிடம் தனக்கு வேலை இருப்பதாக கூறிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
” திவ்யா சர்வ நிச்சயமாக இப்பொழுது வீட்டுக்கு செல்ல மாட்டாள். அவள் தோழிகளோடு எங்காவது சென்று விட்டு தாமதமாகத் தான் வீட்டுக்கு வருவாள்.
அதுவும் இன்று நான் வீட்டுக்கு சென்று, அனைவரின் கோபமும் சற்று குறைந்த பின் தான் வருவாள். “, என்று நினைத்துக் கொண்டிருந்தான் ரமேஷ்.
தொழிற்சாலையில் ரமேஷ் அவனது அறையில் இருந்து கொண்டு திவ்யாவைப்பற்றி சிந்தித்து கொண்டிருந்தான்.
அந்த தொழிற்சாலையில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட விசாலமான அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் விக்ரம்.
அவனின் சிந்தனையும் திவ்யாவை ச் சுற்றி தான் இருந்தது.
“எதையும் நேரடியாகவே ரமேஷிடம் கேட்டுவிடலாம்”, என்று எண்ணி ரமேஷை அழைத்தான்.
” என்ன என்ன கேள்விகள் வருமோ.., பார்த்துக் கொள்ளலாம் “, என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்றான் ரமேஷ்.
“அந்த பெண் யார்?” , என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் விக்ரம்.
“திவ்யா.. என் அத்தை பெண் சார்….” , என்று கூறினான் ரமேஷ்.
” அவங்களுக்கு நேத்து நடந்தது தெரியுமா? ஜஸ்ட் கிளாரிஃபிகேஷன் ” , என்று கேட்டான் விக்ரம்.
ரமேஷின் மூளை அந்த ஒரு நொடிக்குள் பல மடங்கு யோசித்தது.
இது தான் ஒரு மனிதனை முடிவு செய்யும் நேரம்.
உண்மை சொல்லுகிறோமா? பொய் சொல்லுகிறோமா..? சூழ்நிலை சரியாக இருக்கும் பொழுது அனைத்து மனிதர்களும் ஹரிச்சந்திரன் தான் என்று நினைத்துக்கொண்டான் ரமேஷ். இந்த சூழ்நிலையிலும் அவனால் திவ்யாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை . ” தான் நினைத்ததை பட்டும் படாமலும் கேட்டுவிட்டாள்.”, என நினைத்துக் கொண்டான்.
ரமேஷின் சிந்தனையை கண்டு, ” நான் … ” , என்று தொடங்கிய விக்ரமை இடை புகுந்தான் ரமேஷ்.
“இல்ல சார், சந்தேகப்படற இடத்தில் நீங்க இருக்கிறீங்க… பதில் சொல்ற இடத்துல நான் இருக்கேன் சார்… இதுல வேற எதுவும் இல்லை..” , என்று கூறி மேல பேசத் தொடங்கினான் ரமேஷ்.
சூழ்நிலை எதுவாக இருப்பினும் பொய் சொல்ல ரமேஷிற்கு இஷ்டமில்லை.
” நேத்து கரண்ட் போனதும், அது இரண்டு மணி நேரத்துல வந்ததும் திவ்யாவிற்கு தெரியும் சார்…”, என்று கூறினான் ரமேஷ்.
” திவ்யா ஒரு பத்திரிக்கை நிருபர்னு எனக்கு இன்னக்கி காலைல தான் சார் தெரியும்.. நம்புகிற மாதிரி இல்லைனாலும் இது தான் உண்மை .”, என்று கோர்வையாக முடித்தான் ரமேஷ்.
சிரித்து கொண்டான் விக்ரம்.
“ரமேஷ், என்ன நடந்துச்சுனு தான் கேட்டேனே தவிர , நீ சொல்வது உண்மையா? இல்லையா னு கேட்கல.. “, என்று கூறினான் விக்ரம்.
“இப்படி என்னை சார் னு கூப்பிடாதனு பல தடவை சொல்லிட்டேன்.. கால் மீ விக்ரம் “, என்று அழுத்தமாக கூறினான்.
இப்பொழுது சிரிப்பது ரமேஷின் முறை ஆகிவிட்டது.
“நான் கிளம்புகிறேன் “, என்று கூறினான் ரமேஷ்.
“நாளைக்கி பார்ப்போம்.. டேக் ரெஸ்ட்”, என்று கூறினான் விக்ரம் .
அனைவரும் கிளம்பிய பின், விக்ரமும் தன் தாயுடன் வீட்டிற்கு கிளம்பினான்.
விக்ரம் தன் காரை மெதுவாக ஓட்டிச் சென்றான்.
அவன் தாயாருக்கு பிடித்த சுசீலா அவர்களின் பாடல் காரில் ஒலித்துக் கொண்டிருந்தது.
டிராபிக் அதிகமாக இருந்ததால் கார் சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது . நாம் ஜன்னல் வழியாக பார்த்தோம் என்றால், ராமசாமியின் தள்ளு வண்டி கடையை நம்மால் பார்க்க முடியும்.
“ஏன்டா.. விக்ரம்.. இவ்வளவு டிராபிக் தினமும் இருக்குமா..?”, என்று வினவினார் விக்ரமின் தயார்..
“ஆமாம் அம்மா…. அதா டெய்லி லேட் ஆகுது..”, என்று கூறினான் விக்ரம்.
இருவரும் இன்று நடந்த விழாவைப்பற்றி பேசியபடியே வீடு வந்து சேர்ந்தனர்..
“பரவாயில்லை மூன்று மணிக்குள் அணைத்து வேலையும் முடிந்து விட்டது…” , என்று கூறிக் கொண்டே சோபாவில் அமர்ந்தார்.
முதல் கேள்வியாக.,
“அந்த பொண்ணு யாருடா ?”, என்று வினவினார்.
“எந்த பெண்?” , என்று வினவினான் விக்ரம்.
” எந்த பொண்ண கேட்கறேன்னு உனக்கு தெரியாது..?” , என்று அவனைப்பார்த்து சிரித்தபடியே கேட்டார் விக்ரமின் தாய்.
“தெரியாது..”, என்று ஒற்றை வார்த்தையாக பதில் கூறினான் விக்ரம்.
“ஓஹ்!!!!! என்று கூறியவாரே…..
“எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறிய உன்னை அவள் கேள்வியால் திணரச் செய்த அந்த பெண்..” , என்று கூறினார் விக்ரமின் தாய்.
“ஓஹ்!!!! ” , கூறுவது விக்ரமின் முறையாகிவிட்டது.
“என்ன ஓஹ்!!?” , என்று வினவினார் விக்ரமின் தாய் ..
இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் போதும் என்று எண்ணியவனாக ,
“ரிப்போர்ட்டர் திவ்யா. புது ரிப்போர்ட்டர் . நம்மை பற்றி அவளுக்கு தெரியாது..
நியூ டு திஸ் பீல்ட்”, என்று கூறினான்.
“இஸ் எனிதிங் ராங் ?”, என்று கேட்டார் விக்ரமின் தாய்.
“நத்திங் அம்மா..” , என்று கூறினான்.
“சரி டா.. ரொம்ப டயர்டா இருக்கு .. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்”, என்று பேசிக்கொண்டே தன் அறைக்கு சென்றார்.
மீன் தொட்டியை கடந்து மாடி ஏறி, தன் அறைக்கு சென்றான். குளித்து விட்டு , பூப்போன்ற மென்மையான நீல நிற துண்டால் தன தலையை துவட்டி கொண்டே மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தான் விக்ரம்.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே”
என்ற பாடல் ஒலித்தது.
இன்றைய களைப்பில் விக்ரமிற்கு தந்தையின் ஞாபகம் அதிகமாக வந்தது.
“அப்பா உங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன்..” , என்று தனக்குள் முனங்கினான்.
அவனையும் மீறி அவன் கண்களில் நீர் வழிந்தது.
எத்தனை சாம்ராஜ்யங்களுக்கு அரசன் என்றாலும் அவனும் மகன் தானே.
“தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்”
என்ற வரிகள் அவன் சிந்தனையை வேறு வழியில் செலுத்தியது.
தந்தையின் மறைவுக்கு பின்., இந்த சாம்ராஜ்யத்தை காப்பாற்ற எத்தனை வலிகள் , காயங்கள்!!!
கடந்து வந்த பாதை விக்ரமிற்கு கற்று கொடுத்த பாடங்கள் பல..
முகத்துக்கு தெரிந்த எதிரிகளை விட முதுகில் குத்திய எதிரிகள் பலர்..
வாழ்ந்தாலும் பேசும்.. வீழ்ந்தாலும் பேசும் உலகம் அல்லவா இது.?
இவனுக்கு திவ்யாவின் ஞாபகம் வந்தது..
எந்த வித ஒப்பனையுமின்றி அழகாக இருந்தாள். தெளிவாக பேசினாள்.
அந்த பெண் இவன் மனதை தொட்டாளா? இந்த கேள்விக்கு பதில் விக்ரமிடம் இல்லை.
ஆனால், மூளையை தொட்டுவிட்டாள்.. விக்ரம் சிந்திக்க தொடங்கினான்..
ரமேஷின் அத்தை பெண். ரமேஷை பற்றி நன்கு தெரியும் . நேர்மையானவன்..
ஆனால் இந்த பெண்…?
தனது போட்டி நிறுவனங்களிலிருந்து வந்திருப்பாளா?
இந்த விஷயம் ரமேஷிற்கு தெரிய வாய்ப்பில்லை என்று விக்ரமிற்கு தோன்றியது.
“நான் கற்பனை செய்து கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.”, என்று நினைத்தான் விக்ரம்.
“பல ஏமாற்றங்களையும், எதிரிகளையும் சந்தித்ததால்.., நான் இவ்வாறு யோசிக்கிறேனோ…? “, என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டான் விக்ரம்.
“கேட்க வந்த கேள்விகளை நேரடியாக கேட்காமல் சுற்றி வளைத்து கேட்பது ஏன்..?”, இந்த கேள்வியை அவளை பார்க்க நேரிட்டால் கேட்க வேண்டும் என்று குறித்துக்கொண்டான்.
இதற்கு மேல் சிந்திக்கும் அளவிற்கு திவ்யா ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று எண்ணினான் விக்ரம்.
நாளைய பணிகளை பற்றி சிந்திக்க தொடங்கினான்.
விக்ரமின் சிந்தனைக்கு இடையூறு இல்லாமல்.., நாம் ரமேஷ் என்ன செய்கிறான் என்று பாப்போம்.
சுமார் மூன்றை மணி அளவில் , வீட்டுக்கு வந்தான் ரமேஷ். ரமேஷுடன் சென்ற திவ்யா வராததால் அனைவரும் ரமேஷை கேள்வியால் குடைந்தனர்.
ரமேஷ் நடந்ததை விவரித்தான்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..?” , என்று வினவினார் ஷண்முகம்.
“அப்பா , நான் என்ன பண்ணுவேன்..?”, என்று கேட்டான் ரமேஷ் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடி .. .
“நீ ஏன் அவளை அங்கு கூட்டிட்டு போன ?”, என்று கேட்டார் ரமேஷின் தாய் .
“அவ தா வரேன்னு சொன்னா…”, என்று கூறினான் ரமேஷ்.
” ஏம்ப்பா இந்த வேலை எல்லாம் வேண்டாம்னு நாங்க சொல்லியும் நீ கூட்டிட்டு போகலாமா ?”, என்று சோகமாக கேட்டார் திவ்யாவின் தாய்.
“அத்தை, அவ வேலைக்காகத்தான் கூட வரான்னு எனக்கே தெரியாது .. கம்பெனியை பார்க்கனுமுனு சொல்லிட்டு தா வந்தா”, என்று பரிதாபமாக க் கூறினான் ரமேஷ்
“பொய் சொல்லாதடா .. எப்படி உனக்கு தெரியாம இருக்கும்..”, என்று கோபப்பட்டார் ஷண்முகம்.
“அப்பா , அவ வேலைக்கு சேர்ந்து இன்னையோட ரெண்டு நாள் ஆகுது…”, என்று கடுப்புடன் கூறினான் ரமேஷ்.
“உனக்கு தெரியவே தெரியாதுன்னு சொன்ன.. இப்ப ரெண்டு நாள் ஆகுதுன்னு சொல்ற..?”, என்று அதி புத்திசாலித்தனமாக கேட்டார் ரமேஷின் தாய்..
“எல்லாரும் என் கிட்ட புத்திசாலித்தனமா கேள்வி கேளுங்க.. அவகிட்ட ஏமாந்திருங்க… மூணு நாளா நம்ம எல்லாரையும் ஏமாத்திருக்கா.. இன்னக்கி தான் எனக்கு தெரிய வந்தது …”, என்று கோபப்பட்டான் ரமேஷ்.
” எதுவும் நம்பற மாதிரி இல்லை.. உன் துணை இல்லாமல் எந்த தைரியத்துல அவள் இந்த வேலைக்கு போவாள்?”, என்று முகத்தை திருப்பிக்கொண்டு போனார் ரமேஷின் தாய்.
“வரட்டும் .., அப்பா இல்லாத பொண்ணுன்னு செல்லம் குடுத்து வளர்த்தா அவ அட்டகாசம் ரொம்ப ஜாஸ்தியா போகுது… அவ ஒரு பயந்தாங்குள்ளி …. ஒரு மணி அடிச்சா காதை பொத்திகிட்டு நடுங்குவா… இவளுக்கு இந்த ரிப்போட்டர் வேலை எல்லாம் தேவையா..?” , என்று அவளை திட்டினார் திவ்யாவின் தாய்.
ரமேஷ் அனைவருக்கும் நடுவில் அமர்ந்திருக்க அவனுடைய போன் ஒலித்தது..
“திவ்யா தானே..?”, என்று வினவினார் ஷண்முகம்..
“அவளாகத்தான் இருக்கும் அண்ணா… வீட்டு பக்கம் வரட்டும்.. அவளை ரெண்டுல ஒன்னு பார்க்கல … நான் என் பெயரை மாத்திக்கிறேன்..”, என்று சூளுரைத்தார் திவ்யாவின் தாய்.
போனை எடுத்து தன் அறைக்கு சென்ற ரமேஷ், “ஏய் திவ்யா..எங்க இருக்கிற..? சீக்கிரம் வீட்டுக்கு வா..” , என்று கூறினான்.
“ஏன் டா..? பெருசுங்க எல்லாம் ஒரே டென்ஷனா இருக்கா?”, என்று வினவினாள் திவ்யா..
“இதுல உனக்கு சந்தேகம் வேறயா..?”, என்று சிடுசிடுத்தான் ரமேஷ்.
“எங்க அம்மா பெயரை மாத்திக்குறேனு சபதம் போட்டு இருப்பாங்களே..?”, என்று அக்கறையாக கேட்டாள் திவ்யா.
ரமேஷ் பேசுகிறானா இல்லையா என்றெல்லாம் திவ்யாவிற்கு கவலை இல்லை.
“நானும் எங்க அம்மா பெயரை மாற்றுவா… ஸ்டைலா சமந்தா , த்ரீஷா , நயன் தாரா…. இப்படி பல பெயர் யோசிச்சி வச்சிருக்கேன்….” , என்று பேசினாள் திவ்யா..
“இப்ப எங்க இருக்க..? எப்ப வீட்டுக்கு வர..?” , என்று விவரம் கேட்பதில் குறியாக இருந்தான் ரமேஷ்.
“இது நல்ல கேள்வி..” , என்று மெச்சினாள் திவ்யா.
“நீ முதல பதிலைச்சொல்லு” , என்றான் ரமேஷ் கட்டிலில் சாய்ந்தபடி .
“இப்ப நான் பிரெண்ட்ஸுக்கு ட்ரீட் குடுக்க போறேன்..” , என்று கூறினாள் திவ்யா.
” போன மாசம் தானே குடுத்த…?”, என்று கேட்டான் ரமேஷ்.
“அது ஜாப் ரிசைன் பண்ணதுக்கு.. நீ குறுக்க பேசாத.. நான் சொல்றத கேளு..
நான் ட்ரீட் முடிச்சிட்டு வருவேன்.. நீ பின் கட்டு கதவை திறந்து வை.. நான் அந்த வழியாக உள்ள வருவேன் “, என்றாள் திவ்யா.
“என்னால முடியாது..”, என்று கூறினான் ரமேஷ்.
“ஹா.. ஹா…”, என்று சிரித்தாள் திவ்யா.
“என்ன சிரிப்பு….?”, என்று சிடுசிடுத்தான் ரமேஷ்.
” நீ கதவை திறக்கணும், இல்லனா உன் சம்மதத்தோட தான் இன்னக்கி இன்டெர்வியூ எடுக்க போனேனு சொல்லுவேன்..” , என்று மிரட்டினாள்.
“நீ வீட்டுக்கு வா பார்த்துக்கலாம்..”, என்றான் அமைதியாக.
இது பயமா ? இல்லை பாசமா..? இது ரமேஷிற்கு மட்டுமே அறிந்த உண்மை.
“அது…”, என்று கூறினாள் திவ்யா.
“சீக்கிரம் வா..” , என்று கூறிவிட்டு போனை வைத்தான் ரமேஷ்.
“என்ன சொன்னா?” , என்று வினவினார் திவ்யாவின் தாய்.
” கொஞ்ச நேரத்துல வந்திறேன்னு சொன்னா… அத்தை அவ இன்னக்கி எவ்வளவு அழகா கேள்வி கேட்டா தெரியுமா..?”, என்று அத்தையின் மனசை மாற்ற முயற்சித்தான்..
“வேண்டாம் ரமேஷ்.. இந்த விஷயத்தில் நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணாத.., அவங்க அப்பாவோட மரணத்திற்கு காரணமானது இதே வேலை தான்..
இப்ப இவளையும் இழக்க நான் தயாராக இல்லை ..”, என்று கூறினார் திவ்யாவின் தாய்.
திவ்யா கனவை விட்டுக்கொடுப்பாள் என்று ரமேஷிற்கு தோன்றவில்லை..
என்ன செய்வது என்று புரியாமல் யோசித்தான் ரமேஷ்.
விக்ரம் நினைப்பது போல் திவ்யா ஒரு சின்ன பிரச்சனை தானா..?
காத்திருப்போம்…….