“உன்னை தனியா விட்டதுக்கு அவன் உன்ன ஓகே வா ன்னு கேட்டான், அது சரி நீ ஏன் லாஜிக்கே இல்லாம அவனை ஓகே வா ன்னு கேக்குற ஒண்ணுமே புரியல” என மித்ரன் கேட்க
அவன் கேள்வியை கேட்டு சிரித்த தென்றல் பதில் கூறுமுன் விவேகன் பதில் கூறினான்.
“பஸ்ல ஏறினதும் பேசாதடா நான் வேகமா மூச்சு விட்டா கூட அவ என்னை கண்டுபிடிச்சிடுவானு உன் கிட்ட சொன்னேன்ல டா” என மித்ரனிடம் விவேகன் வினவ.
‘ஆம்’ என்பதைப் போல் மித்ரன் தலை அசைத்தான்.
“நாம என்னதான் சைலண்ட்டா ஃபாலோ பண்ணாலும் கிராதகி நம்ம இருக்கிறத கண்டுபிடிச்சுட்டா” என்று அவன் தென்றலை நோக்க அவளும் ஆமாம் என்பது போல் தலையை அசைத்து மித்ரன் மற்றும் விவேகனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“அந்த ஆளு மேல மேடம் காட்டுன கோபம் கூட நம்ம ரெண்டு பேரும் அந்த ஆள் பண்றத பார்த்தும் பார்க்காத மாதிரி நடந்துகிட்டதுதான் காரணம் மேடம் பயம் எதுவும் இன்னும் மாறல”.
“அதனால்தான் நானும் அவ நம்ம இருக்க தைரியத்தில அப்படி நடந்துகிட்டானு அவ ஜஸ்ட் பாஸ்னு ன்னு சொன்னேன்”.
“அவ அந்த ஆள தள்ளிவிட்டு அதுக்கு அப்புறம் நம்ம கிட்ட சண்டை போட வந்து இருப்பா ஆனா நாம தான் அந்த ஆள் இறங்கினதுன் இறங்கி வந்துட்டோம்ல அதனால ஜஸ்ட் மிஸ்ல நீயும் நானும் தப்பிச்சோம்டா இல்லன்னா நேத்து இவ கையாள நம்மளுக்கும் சங்கு ஊதி இருப்பா” என விவேகன் கூற மித்ரன் கண்ணில் மரண பீதி அப்பட்டமாக தெரிந்தது.
“அப்புறம் அவ என்னை ஓகே வா ன்னு கேட்டதுக்கு ரீசன். அந்த ஆளு அப்படி நடக்கும்போது எனக்கு எவ்ளோ கோவம் வந்திருக்கும் அதை கண்ட்ரோல் பண்ணிட்டு நிக்க நான் எவ்ளோ கஷ்டப்படுவேன் அதனால என்னை நான் எவ்வளோ வருத்திக்குவேனு அவளுக்கு தெரியும் அதான் அவ என்ன ஓகே வா ன்னு கேட்டா.”
“அது மட்டும் இல்லாம நான் அவள ஓகே வா ன்னு கேட்டதுக்கு கூட நேத்து தனியா அனுப்புனது ரீசன் இல்லடா நம்ம அந்த பஸ்ல இருந்தோம் ஆனாலும் அவளை காப்பாத்தல அத நினைச்சு மேடம் நைட்டு ஃபுல்லா அழுது தீர்த்து இருப்பாங்க அதான்” என விவேகன் கூறும் போதே தென்றல் பற்றியிருந்த விவேகன் கையை மேலும் இறுக்கி பற்றிக்கொண்டாள்.
தென்றலின் மனதில் உள்ளவற்றை விவேகன் அவன் வார்த்தைகளால் திரையிட.
தென்றல் விவேகனை தவிர்த்து அங்கிருந்த மற்ற நால்வரும் இவர்களின் உறவின் ஆழத்தையும் ஆர்த்மாதத்தையும் எண்ணிப் பெருமிதம் கொண்டனர்.
தன் மகள் எவ்வாறான பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கிறாள் என்பதனை உணர்ந்த அன்னை தேவகி தன் பெற்ற மற்றும் பெறாத பிள்ளைகளையும் கண்களால் ஆசிர்வதித்தவர். தன் கண்களில் தன்னையும் மீறி சுரக்கும் கண்ணீரை மறைக்க காலை உணவு சமைப்பதற்காக செல்கிறேன் என்றவர் சமயலறைக்கு சென்று விட்டார்.
அக்ஷாவும் அவருக்கு உதவ சென்றுவிட மூவர் படைக்கு இடையில் தமிழ் பார்வையாளர் ஆகினான்.
சற்று நேரத்திற்குள் தேவகி அம்மா சமையல் வேலையை முடித்து அனைவரும் உணவருந்த அமரவும் தென்றலின் அப்பா தர்மராஜ் வரவும் சரியாக இருந்தது.
ஒரு நாள் முழுவதும் வேலை வேலை என கடையிலிருந்து ஓய்ந்து போய் வந்த கணவனை கண்டவர் அவர் அருகில் சென்று அவர் இடையில் கை கோர்த்து அணைத்துக் கொண்டார்.
இதனைக் கண்ட அவர்களின் மக்கள் செல்வங்கள் “ஓஓஓஓஓஓஓஓ” என ஆரவாரம் புரிய ஆணவன் வெட்கம் கொண்டு மனைவியை விட்டு விலகியவர் சிறு சிரிப்புடன் குளியலறை புகுந்து கொண்டார். அவருக்கு டவல் மற்றும் மாற்று உடை எடுத்து வைக்க தேவகி அவரை பின்தொடர்ந்து செல்ல அவரைக் கண்டு முறைத்த தர்மராஜ் “எத்தனை முறை சொல்லுறது உனக்கு வேலையில் இருந்து வந்ததும் அந்த அழுக்கு துணியோட இந்த மாதிரி கட்டி பிடிக்காதனு உனக்கு புரியவே புரியாத” என கடிந்து கொள்ள.
அவரை மீண்டும் அதே அழுக்குத் துணியுடன் அணைத்துக் கொண்ட தேவகி “நீ எத்தனை முறை சொன்னாலும் எனக்கு உன்ன புதுத்துணியில அணைக்கிறத விட நீ எனக்காக உழைச்சிட்டு வர இந்த அழுக்குத் துணியோடு அணைச்சுக்க தான் பிடிக்கும் மாமா” என கூறியவர் காற்றில் பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு வெளியில் சென்று விட்டார்.
பிறகு அவரும் குளித்து முடித்து வந்தவர் காலை உணவில் கலந்து கொண்டார்.
தென்றல் விவேகனின் இடதுபுறம் அமர்ந்திருக்க தர்மராஜ் வலது பக்கம் அமர்ந்து கொண்டார்.
விவேகனை பார்த்து அவர் சிரிக்க அவரைக் கண்டு முறைத்தவன் “எத்தனை முறை சொல்லுறது நானா(அப்பாவ தென்றல் வீட்ல நானானு தான் கூப்பிடு வாங்க) உங்களுக்கு நானும் வரேன் கடைக்குனு படிக்கிற வேலைய மட்டும் பாருன்னு சொல்லிட்டு நீங்க இப்படி கஷ்ட படுறத நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா இதுவே உங்க மகனா இருந்தா இப்படி தான் வேலை செய்யாதுனு சொல்லுவீங்களா என்ன இருந்தாலும் நான் அ…”என சொல்ல வந்தவனின் முதுகில் ஒரு அடி போட்டவர்.
“படவா இனி இந்த வார்த்தை உன் வாயில் வந்துச்சு அப்புறம் நீ என் மூஞ்சிலேயே முழிக்க கூடாது” என அதட்டியவர். “இப்போ என்ன உனக்கு கடைக்கு வந்து வேலை பாக்கனும் அதானே வா வந்து வேலை பாரு இப்போ சாப்பிடு” என்றவர் தேவகியை நோக்க அவர் அனைவருக்கும் பரிமாறினார்.
அனைவரும் காலை உணவை முடித்துக் கொள்ள சிறிது நேர ஓய்விற்குப் பின் விவேகன் மித்ரன் தென்றல் அக்ஷா தமிழ் அனைவரும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிப்பதற்காக மாடிக்கு சென்றனர்.
மாடியில் அக்ஷா தனியாக பாய் விரித்து அமர்ந்து கொள்ள
விவேகன் தென்றல் மித்ரன் தமிழ் மற்றொரு இடத்தில் அமர்ந்து கொண்டனர்.
பிறகு விவேகன் தமிழிடம் “தமிழ் நீ இவளுக்கும், மித்ரனிற்கும் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதும் எனக்கு எதுவும் சொல்லி தரவேண்டிய அவசியம் இருக்காது அதனால அவங்க கேக்குறத மட்டும் சொல்லிக் கொடுத்துடு” என கூற
அவனிடம் “சரி” என்றவன் உங்களுக்கு இப்போ என்ன சொல்லிக் கொடுக்கணும் என கேட்க தென்றல் சில வேதியியல் சமன்பாடுகளை காண்பித்தாள்.
அவை அனைத்தையும் தமிழ் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் கற்றுக் கொடுப்பதை தென்றலின் முக பாவனைகளை வைத்தே அறிந்து கொண்டான் விவேகன். அதன் பிறகு அவன் கவனம் புத்தகத்திலேயே இருந்தது தென்றலிடம் கவனம் செலுத்துவதை தவிர்த்தான்.
அவர்கள் இருவரும் கேட்ட அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்த தமிழ் இருவருக்கும் சில கேள்விகளை வழங்கி அதற்கு பதில் எழுதச் சொன்னான்.
இரண்டு ஜந்துக்களும் பேந்த பேந்த முழிப்பதைப் பார்த்து உள்ளார சிரித்துக் கொண்டவன் “எழுதுங்க தப்பா இருந்தா திட்ட மாட்டேன்” என கூறவும் இருவரும் சற்று தள்ளி அமர்ந்து கொண்டனர்.
மித்ரன் எழுதிக்கொண்டிருக்க தென்றல் அவள் கையில் இருந்த பென்னை கத்தி போல் வீசி வானத்தை நோக்கி நீட்டியவள் “க்ரேஸ்கல் கோட்டையின் சக்தியே என்னுள் இருக்கும் சக்தியே” என மந்திரம் போல் எதையோ உலர இப்போது பேந்த பேந்த முழிப்பது தமிழின் முறையானது.
அவள் கூறியதைக் கேட்ட விவேகன் மித்ரன் அக்ஷா மூவரும் சிரிக்க தமிழ் என்ன மொழி இவ பேசினது என ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.
அவன் தோளைத் தட்டிய விவேகன் “அது அப்படித்தான் ஹீமேன் பைத்தியம் எதுனா அறிவாளித்தனமான செய்றதுக்கு முன்னாடி ஹீமேன் கார்ட்டூன் டயலாக் சொல்லும் நீ கண்டுக்காத” எனக்கூற.
‘அட ஹிமேன் பைத்தியமே’ என தென்றலை மனதில் நினைத்துக் கொண்டவன் விவேகனிடம் சிரிப்பை வழங்கி விட்டு மித்ரன் எழுதுவதை கவனித்துக்கொண்டிருந்தான்.
எதேச்சையாக அவனின் பார்வை தென்றலிடம் திரும்ப அவனையும் அறியாமல் அவனின் பார்வை அவளின் குழந்தை தனமான செய்கைகளை ரசிக்க தான் செய்தது.
பெரிதும் அல்லாத சிறிதும் அல்லாத வட்ட வடிவ கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு, அதற்குமேல் சிறியதாய் குங்கும கீற்று, எவ்வளவு இழுத்து கட்டியும் யாருக்கும் அடங்காது காற்றில் ஆடும் காற்குழல் கூந்தல்,காதில் பொன்னாள் ஆன லோலாக்கு அவள் தலை அசைவிற்கு ஏற்றார் போல தாளமிட, கழுத்தில் அவளையும் உறுத்தாது பார்ப்போரின் கண்களை உறுத்தாத மெல்லிய கழுத்து சங்கிலி.
இந்த ஸ்டைலிஷ் தமிழச்சி காலத்திலும் நவநாகரிக உடை, அதை அணிந்திருக்கும் விதத்திலும் அப்படி ஒரு அடக்க ஒடுக்கம். கையில் இருந்த கண்ணாடி வளையல்கள் அவள் எழுதுவதற்கு இணங்க கீதம் வாசிக்க அதிக ஒப்பனையில்லாத அவள் அழகிலும் எழுதும் போது அவள் முக பாவனைகளும் முக சுருக்கங்களும் வாய்க்குள் முனுமுனுக்கும் வார்த்தைகளும் என அவளை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தவன்,
“தமிழ்” எனும் மித்ரனின் அழைப்பில் நிகழ்காலம் வந்தான் ‘கரடி’ என அவனை மனதில் திட்டியவன் ‘முடிச்சுட்டியா’ என கேட்டு அவன் எழுதியதை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் மித்ரனின் நோட்டை சரிபார்க்க மித்ரன் இவனை அளவெடுத்து கொன்டிருந்தான். ‘இவன் என்ன முட்டை போண்டாவ அப்படி பார்க்கிறான் இதயெல்லாம் இந்த இடி மாடு பார்த்துச்சா பாக்கலையா பார்த்தும் பார்க்காத மாதிரி நடிக்கிறானா ஒன்னும் புரியலையே’ என யோசித்துக் கொண்டிருந்தான்.
பிறகு அவன் கொடுத்த நோட்டை சரி பார்த்து அவனிடம் கொடுத்த தமிழ் “எல்லாம் சரியா இருக்கு” என கூற அதை வாங்கிக்கொண்டாவன் சென்று மீண்டும் படிக்கத் தொடங்கினான்.
பிறகு தென்றல் பயந்து பயந்து நோட்டை தமிழிடம் நீட்ட சிரித்துக் கொண்டே அதை வாங்கியவன் அதில் சிறு சிறு தவறுகள் இருக்க மீண்டும் அதை அவளுக்கு புரியும்படி எடுத்துரைத்தான்.
சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ விவேகனிடம் வந்த அக்ஷா “அண்ணா எனக்கு தமிழ் பஸ்ட் செகண்ட் பேப்பர்ல என்னென்ன வரும்னு கொஞ்சம் மார்க் பண்ணி குடு” என கேட்க.
மித்ரனும் தென்றலும் கோரசாக, “இதென்ன கேள்வி கொஸ்டின் பேப்பர்ல கொஸ்டின் தான் வரும்” என கூறி ஹைஃபை அடித்துக்கொள்ள,
அவர்களை ஏளன பார்வை பார்த்த அக்ஷா, “கொஸ்டின் பேப்பர்ல கொஸ்டின் வராம ஆன்ஸர் வந்தா உங்கள மாதிரி முட்டாள் எல்லாம் ஏன் டியூஷன் கத்துக்க போறிங்க காலேஜ் போற வயசுல அதுவும் வேற டிபார்ட்மெண்ட் பையன் கிட்ட அசிங்கமா இல்ல இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு மாடியில இருந்து கீழே குதித்து செத்துடலாம். இதுல என்னை வேற கிண்டல் பண்ண வந்துட்டீங்க ரெண்டு பேரும் மூடிட்டு உங்க வேலைய பாருங்க” என எச்சரிக்க.
அவளை அடிக்க எழுந்த தென்றலை விவேகன் அடக்க
அக்ஷாவின் கேள்விக்கு தமிழ் பதில் வழங்கினான்.
அவன் குறித்து கொடுத்தவற்றை பார்த்த அக்ஷா நீங்க டென்த்ல என்ன மார்க் அண்ணா என வினவ.
நீ எடுக்கப்போற மார்க் விட கம்மி தாண்டா என்று தமிழ் கூற,
அவன் அப்போ ஸ்டேட் லெவல் ரேன்க் வாங்கினவன் குட்டிமா என விவேகன் கூற தென்றலும் மித்ரனும் “அது எப்புடி உனக்கு தெரியும்” என ஒரே போல் கேட்க.
சற்றும் அளட்டிக் கொள்ளாமல் “நியூஸ் பேப்பர்ல பார்த்தேன்” என கூறிவிட்டு தன் வேலையை அவன் கவனிக்க,
கேள்வி கேட்ட இருவரும் “ஓஓஓஓ” என்பதுடன் முடித்துக் கொண்டு தங்கள் வேலையில் மூழ்கினர்.
ஆனால் விவேகனின் பதில் தமிழுக்கு தான் சரியானதாக தோன்றவில்லை.
‘நியூஸ் பேப்பரில் பார்த்து இருந்தாலும் அது எப்படி இத்தனை நாட்கள் நினைவிருக்கும்’ என அவன் ஒரு சிந்தனையில் மூழ்க அவனை அழைத்தாள் அக்ஷா.
“அப்போ நீங்க ஸ்டேட் ரேங்க் ஹோல்டரா அண்ணா, எனக்கு நீங்களே சொல்லிக் கொடுங்க” என்க.
‘சரி’ என்று தலை அசைத்தான் தமிழ்.
“என்னை தமிழ்னே கூப்பிடு அக்ஷா” என கூற சரி தமிழ் என்றவள் படிக்கச் சென்றுவிட்டாள்.
பிறகு சிறிது நேரம் கழித்து அனைவரையும் மதிய உணவிற்கு தேவகி அழைக்க உண்டு முடித்தவர்கள் அவரவர் வீட்டிற்கு கிளம்ப,
தென்றலை அழைத்த விவேகன் “நாளைக்கு காலையில வெளியே போகணும் கிளம்பி இரு என்ன வெயிட் பண்ண வைக்காத” என கூறியவன் தர்மராஜ் தேவகி மற்றும் அக்ஷாவிடம் கூறி விட்டு கிளம்பி அவரவர் வீட்டிற்கு சென்றனர்.
வீடு வந்து சேர்ந்த விவேகனிடம் “நாளைக்கு எங்கடா அவளை கூட்டீட்டு போற” என மித்ரன் வினவ,
“நம்ம சார் வீட்டுக்கு” என்றான் விவேகன்.
“வழுக்க மரம் வீட்டுக்கா ஏன்டா அவ தான் அவரை பார்த்தாலே பயந்து க்ளாஸ் விட்டு ஓடி போராளேஅவள எதுக்கு அங்க கூட்டிட்டு போற” என மித்ரன் கேட்க.
“அதை நாளைக்கு பாரு” என்றவன் வெளியில் சென்று விட்டான்.
வீட்டிற்கு வந்த தமிழ் அவன் அறையில் சென்று படுத்தவன் சற்று தூங்கலாமென கண்களை மூட இன்று காலை அவன் தென்றலை அணுவணுவாய் ரசித்த காட்சி மனக்கண்ணில் படமாக ஓட திடுக்கிட்டு எழுந்தவன் ‘என்ன பொண்ணுடா அவ’ என மனதில் நினைத்து பித்துப்பிடித்தவன் போல சிரித்து கொண்டே குப்புற படுத்து சிறிது நேரம் தென்றலின் நினைவில் உருகியவன் உறங்கிப் போனான்.
(தொடரும்)