அணிமா-37
“என் பெயர் சங்கரய்யா!” என்று சொல்லிவிட்டு மடிக்கணினியில் இருவருடைய புகைப்படத்தைச் சுட்டிக்காட்டியவன்,
“இவங்கதான் ‘அஞ்சு மேத்தா’ அண்ட் ‘கனகா ராவ்!’
இன்டர்நேஷனல் லெவெல்ல குழந்தைகளைக் கடத்தும் மாஃபியா காங்ல முக்கியமானவங்க.
இவங்க ரெண்டுபேருக்கும்தான் நான் வேலை செஞ்சிட்டு இருந்தேன்.
அந்த மகாபலிபுரம் ரெசார்ட்ல இறந்துபோன ரெண்டு பேருல ஒருத்தங்கத்தான் இந்த கனகா ராவ்.
அஞ்சு மேத்தாவும் இப்ப எங்க இருக்காங்கன்னே தெரியல.
ஸோ யாருக்கு ரிப்போர்ட் பண்றதுன்னு தெரியாமல் லோக்கல் ஆபரேஷன்ஸ் இப்ப கொஞ்சம் குழப்பத்துல இருக்கு.
ஃப்யூ மந்த்ஸ் பாக்… அமெரிக்கால ஒரு கப்புள் தத்தெடுக்க ஆண் குழந்தை ஒண்ணு வேணும்னு கேட்டிருந்தாங்க.
அவங்க கேட்ட மாதிரி பையனை கனகம்மா தேடிட்டு இருந்த சமயம்தான் ஜீவனைப் பற்றி சலீம்னு ஒரு இன்பார்மர் என்னிடம் தகவல் கொடுத்தான்.
அவன் ஜெகதீஸ்வரன் சாரோட தங்கை மகன்னு அப்ப எங்களுக்குத் தெரியாது.
சிங்கள் பேரெண்டோட பையன்னு மட்டும்தான் தெரியும்.
ஒரு சமயம் அவனை ஃபாலோ பண்ணி சலீம் போட்டோ எடுத்தபோது, அணிமா மலர் மேடமும் அதில் இருந்தாங்க.
மேலிடத்தில் அதை பார்த்துட்டு, ஜீவனோட சேர்த்து அவங்களையும் கடத்தி கொடுக்கிற ஏஜெண்ட்டுக்கு பெரிய அமௌன்ட் ஆஃபர் பண்ணுவதாக கனகம்மா சொன்னாங்க!” சொல்லிக்கொண்டிருக்கும் போதே அச்சம் மேலோங்க, எச்சிலை விழுங்கி ஒரு நொடி தன்னை சமன் செய்துகொண்டு தொடர்ந்தான் சங்கரய்யா.
இதை எப்படியோ தெரிஞ்சிட்டு, அஞ்சு மேத்தா… இந்த அசைன்மென்டை தனக்கு முடித்துக் கொடுக்கச் சொல்லி, எல்லா ஏஜென்ட்ஸையும் கேட்டாங்க.
அவங்க காண்ட்ராக்ட் படி சௌத் இண்டியா கனகம்மாவோட ஏரியா. அஞ்சு மேத்தா இங்க நடக்கற வேலைகளில் தலையிடக் கூடாது.
அதனால கனகம்மவுக்கு பயந்துட்டு ஏஜென்ட்ஸ் யாரும் அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கல.
கொஞ்ச நாளாகவே, அஞ்சு மேத்தா கனகம்மாவை ஒழிச்சு கட்ட பிளான் பண்ணிட்டு இருந்திருக்காங்க.
இது தெரியாம, கனகம்மா அவங்களுக்கு விசுவாசமான ஏஜென்ட் மூலமா அணிமா மலர் மேடத்தை கடத்த முயற்சி செஞ்சாங்க.
அதில் ஈடுபடும் ஒவ்வொருவராக இறந்துபோகவும்… ஸ்ரீ துர்கா என்னும் ஏஜென்ட் கூட சேர்ந்து மலர் மேடத்தை கடத்த, தானே நேரடியா இறங்கினாங்க அவங்க.
மலர் மேடத்தை தொடர்ந்து ஃபாலோ பண்ணி, அவங்களை பற்றிய தகவலை நான்தான் கனகம்மாவுக்கு கொடுத்தேன்.
அவங்க கிராண்ட் டேஸ் ஹோட்டல்ல ஈஸ்வர் சாரோட இருப்பதைப் பார்த்து, பயந்துபோய், அவங்கள கடத்தவேண்டாம்னு நான் எவ்வளவு அலெர்ட் பண்ணியும் கேக்கல கனகம்மா.
அந்த அசைன்மென்ட் அவங்களுக்கு ஒரு சவால்னு சொல்லிட்டாங்க. அதில் இறந்தும் போனாங்க.
இதில் நடக்கும் எந்த பிரச்சினையும் தெரியாம அஞ்சு மேத்தாவின் இன்ஸ்ட்ரக்ஷன் படி, நான் ஜீவனைக் கடத்தி வேதா கிட்ட ஒப்படைச்சிட்டேன்.
ஜீவனோட சேர்த்து கடத்தி வெச்சிருந்த குழந்தைகளெல்லாம் போலீஸ் கிட்ட மாட்டிக்கவும், வேதாவை உயிருடன் விட்டால் ஆபத்துன்னு அடுத்த நாளே அவனையும் கொன்னுட்டாங்க!
என்ன பிரச்சனைனு புரியாமல், எனக்கும் எதாவது ஆபத்து வரலாம்னு பயந்து போய், ஒளிஞ்சு மறைஞ்சு இருந்துட்டு இருந்தேன்.
இந்த கொலை எல்லாமே தொழில் போட்டில இந்த அஞ்சு மேத்தா தான் அவங்களோட கூலிப்படையை வைத்து செய்தாங்கன்னு, நேற்றுதான் எனக்குத் தெரிய வந்தது.
ஏன்னா நேற்று நைட் என்னையும் கொலை செய்ய அவங்க ட்ரை பண்ணாங்க! அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்துதான் இந்த வீடியோவை ரெக்கார்ட் பண்ணிட்டு இருக்கேன்.
எந்த நிமிஷம் வேணாலும் என்னை கண்டுபிடிச்சி அவங்க கொலை செஞ்சிடுவாங்க.
ப்ளீஸ்! எப்படியாவது என்னை காப்பாத்துங்க!
என்னை காப்பாத்தினீங்கன்னா நான் அப்ரூவரா மாறவும் தயாரா இருக்கேன்!”
காவல் துறை தலைமை அலுவலகத்தில் இருக்கும் ‘மீட்டிங் ஹால்’லில், மிகப்பெரிய திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்த காணொளி முடியவும், அது வரை இருளில் மூழ்கி இருந்த அந்த அறை மின்விளக்குகளால் ஒளிர்ந்தது.
அவனுடைய உயர் அதிகாரிகள், மற்றும் அவனுக்குக் கீழே வேலை செய்யும் காவலர்கள் என அங்கே அமைதியுடன் குழுமி இருக்க, கம்பீரமாக எழுந்து வந்து, நடுநாயகமாக நின்ற ஜெய், அனைத்தையும் தெளிவாக விளக்கத் தொடங்கினான்.
“இன்னைக்கு மார்னிங் என்னோட ஆஃபீசியல் மெயில் ஐடிக்கு இந்த வீடியோவை அனுப்பியிருந்தான் அந்த சங்கரய்யா!
செல் போன் சிக்னல் அண்ட் ஐ.பி அட்ரஸ் வெச்சு ட்ராக் பண்ணும்போது, மகாபலிபுரம் தாண்டி, பாண்டிச்சேரி ரூட்ல, ஒரு இடத்துல இந்த டிவைஸ் இருப்பது தெரிஞ்சுது.
இம்மீடியட்லி அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனை காண்டாக்ட் பண்ணி, அந்த இடத்தை ட்ரேஸ் பண்ணோம்!
ஒரு ஒதுக்குபுறமான இடத்துல அவனோட கார் அண்ட் ஹிஸ் காட்ஜெட்ஸ் எல்லாத்தையும் கைப்பற்றினாங்க.
பட் அன்பார்ச்யுனேட்லி நம்ம காப்ஸ் அங்க ரீச் ஆவதற்குள்ளேயே சங்கரய்யாவை அவங்க கொன்னுட்டாங்க!” என்னதான் முயன்றாலும், எழுந்த முறுவலை மறைப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது அவனுக்கு.
மல்லிகார்ஜுனையும் காட்டிக்கொடுக்காமல், அதே நேரம் தன்னையும் விட்டுக்கொடுக்காமல், புத்தி சாதுரியத்துடன் ஈஸ்வர் நடந்துகொண்ட விதம் அவனை நெகிழச் செய்திருந்தது.
‘அந்த மலர் கேடிக்கு ஏத்த ஜோடிதான் ஈஸ்வர் அண்ணா நீங்க’ என்ற எண்ணம் மனதில் எழ, அதைக் கடக்க எடுத்துக்கொண்ட சில நொடி இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்தான் ஜெய்…
“அவனோட லாப்டாப்ல இருந்து கிடைச்ச தகவலை வைத்துப் பார்க்கும் போது, இந்த வீடியோல அவன் குறிப்பிட்டிருந்த அந்த அஞ்சு மேத்தா… கனகா ராவ்… இவங்கதான் அந்த சைல்ட் ட்ராபிக்கிங் ராக்கெட்ல டாப் ல இருந்து இவங்களை இயக்குறாங்க.
இதுல இவன் குறிப்பிட்டது இரண்டே இரண்டு பேரை மட்டும்தான். பட் இதுபோல இன்னும் நிறைய பேர் இப்படி இருக்க வாய்ப்பு இருக்கு.
இந்த கமாண்டிங் பொசிஷன்ல இருக்கறவங்க, சங்கரய்யா மாதிரி ஏஜென்ட்ஸ் கிட்ட அவங்களோட டிமாண்ட்ஸை வைப்பாங்க.
அவங்க தேவைக்கு ஏற்ப, அதாவது அடாப்ஷன்காக… பாண்டட் லேபர்… செக்ஸ் லேபர்… ஆர்கன் ட்ரேட்… பெக்கிங்…
இதை எல்லாம் விட மிகக் கொடுமையாக… பத்து முதல் பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ‘பீடோ ஃபைலிக்’ சைக்கோக்களுக்கு பலியிடும்… மிக ஆபத்தான முறையில் நம்ம நாடு முழுதும் பரவி இருக்கும் சைல்ட் செக்ஸ் டூரிசம்… எட்செட்ரா… எட்செட்ரா…
இதுக்கெல்லாம் ஏற்ற மாதிரி என்ன குழந்தை வேணும், அவங்க ஏஜ்… ஈவன் அவங்க கலர்… லாங்குவேஜ்… ஹைட்… வெய்ட்… மெடிக்கல் ஹிஸ்டரி எல்லாமே சொல்லுவாங்க
இந்த ஏஜென்ட்ஸ்… அவங்களுக்கு கீழ இருக்கும் இன்பார்மர்ஸ் கிட்ட அவங்களோட டிமாண்ட்ஸை சொன்னால், அதுக்கு தகுந்த மாதிரி இருக்கும் குழந்தைகளை கண்டுபிடிச்சு, அவங்க டீடைல்ஸை பக்கவா போட்டோவோட அவங்க கொடுத்துடுவாங்க.
இந்த ஏஜென்ட்ஸ் பத்து பேர் இருந்தால், ஆள்காட்டிங்க நூறு பேர் இருப்பாங்க. அதாவது ஒவ்வொரு ஏஜென்ட் கிட்டேயும் பத்து இன்பார்மர்சாவது இருப்பாங்க. அதேபோல ஒரு இன்பார்மர் பல ஏஜென்ட்ஸ்க்கு வேலை செய்வாங்க.
இந்த ஆளுங்க எல்லாருமே, ஜஸ்ட் லைக் தட் பொதுமக்களோட மக்களா கலந்தே இருப்பாங்க.
லைக் கால் டாக்ஸி ட்ரைவரஸ், கூலிஸ், சேல்ஸ் ஆளுங்க, ஈவன் இந்த வீடியோல இந்த சங்கர் சொன்ன சலீம் கூட ஒரு ஜூஸ் கடை வெச்சிருக்கான்.
இன்னும் கூட நம்ம நாட்டில் வளர்ச்சி அடையாத பல கிராமங்கள் இருக்கு. ஈவன் பேசிக் போன் கூட இல்லாத மக்கள் பல பேர் இருகாங்க.
இந்த ஆளுங்க அவங்களை ஈசியா பிரைன் வாஷ் பண்ணி, குழந்தைகளைப் பணம் கொடுத்து வாங்குவாங்க.
தட் இஸ் ஒரு மினிமம் அமௌன்ட்க்கு பெத்தவங்களே பிள்ளைகளை வித்துடுவாங்க. ஜஸ்ட் ஆறாயிரம் ரூபாய் பணத்துக்காகப் பிள்ளையை விக்கற கதையெல்லாம் இங்கே நடக்குது.
வேதனை என்னனா, நாம நம்ம பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கும் ஒரு வீடியோ கேம் விலையை விட இந்த பிள்ளைகளின் விலை ரொம்ப குறைவு!”
கொதிப்புடன் வந்தன அவனது வார்த்தைகள்.
தென் இந்த ஏஜென்ட்… அந்த குழந்தைகளைத் தனியாகவோ இல்ல ஆட்களைக் கொண்டோ கடத்துவான்.
செத்துப்போன வேதா மாதிரி காங்ஸ்டர்ஸ் இதுக்கு பக்கவா பீல்டு ஒர்க் பண்ணுவாங்க.
இங்கே இவங்க கண்ட்ரோல்ல பதிவு செய்யப்பட்ட ஆர் பதிவு செய்யப்படாத அனாதை இல்லங்கள் நிறைய இருக்கு.
அதுல இந்த குழந்தைகளைக் கொண்டுபோய் தங்க வைப்பாங்க. மோஸ்ட் ஆஃப் த டைம் மயக்கத்துல.
இவங்க குழந்தைகளை ஃபாரினுக்கு கடத்த பெரும்பாலும் ஒரு சில குறிப்பிட்ட பாஸ்போர்ட்டை மட்டும்தான் பயன் படுத்துவங்க.
இவங்க காங்ல கை தேர்ந்த மேக்கப் எக்ஸ்பர்ட்ஸ் இருகாங்க. அவங்க குழந்தைகளை அந்த பாஸ்போர்ட்ல இருக்கும் போட்டோல இருக்கற மாதிரியே பக்கவா மாத்திருவாங்க.
ஆனால் அந்த பாஸ்போர்ட்ல எதாவது ஒரு கண்ட்ரில போய் இறங்கினத்துக்கான என்ட்ரி மட்டும்தான் இருக்கும். திரும்ப வந்ததுக்கான என்ட்ரி இருக்காது.
அதுக்கு உடந்தையா இங்கே பல ட்ரேவல் ஏஜென்ட்ஸ் இருக்காங்க. இன்னும் கேவலமான விஷயம் என்னனா… நம்ம ஏர்போர்ட் அத்தாரிடிஸ் சில பேர் உடந்தையா இருக்காங்க.
இந்த காங்கோட கிங்பின் அதாவது தலைவன் யாருன்னு இன்னும் கண்டு பிடிக்க முடியல.
ஆனா இந்த அஞ்சு மேத்தாவை கண்டுபிடித்தால், அவனையும் சீக்கிரமா கண்டுபிடிச்சிடலாம்.” என்று ஒவ்வொன்றையும் விளக்கமாகச் சொன்னவன், பிறகு தொடர் கொலைகளில் இறந்தவர்கள் ஒவ்வொருவருடைய உண்மையான பெயர் முதலிய அனைத்தையும் விளக்கினான்.
தொடர்ந்து, “நமக்கு கிடைச்ச அந்த ஆடியோ கூட பிளான் பண்ணிதான் அவங்க நமக்கு கிடைக்குற மாதிரி செஞ்சிருக்காங்க.
அதாவது மிஸஸ்.அணிமாமலர் போலீஸ் கஸ்டடியில் வந்தால் அவங்கள கடத்த முடியாது என்கிற காரணத்தால்தான் அவங்களை இந்த கேஸ்ல இருந்து தப்ப வெச்சிருக்காங்க” என முடித்தான்.
இறுதியாக, “சீயர் மை டியர் ஆபிஸர்ஸ்! இனிமேல் இந்த பேசிக் டீடைல்ஸை வெச்சுட்டு, நாம இந்த ஆளுங்கள களை எடுக்கற வேலையில் தீவிரமா இறங்கப்போறோம்…
அஸ் ஏர்லி அஸ் பாசிபிள் நாம அந்த கிங்க்பின் யாருனு கண்டுபிடிச்சு சிறையில் அடைகிறோம்! அதை விட முக்கியம், கடத்தப்பட்ட குழந்தைகள் எங்க இருந்தாலும் மீட்டுட்டு வந்து பெத்தவங்க கிட்ட சேர்க்கிறோம்!” என்று அவனுக்கு கீழே இருக்கும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக சொன்னவன்…
அவனுடைய மேலதிகாரிகளை நோக்கி மரியாதையுடன், “தாங் யூ ஆஃபீஸ்ர்ஸ்! வி ஹோப் வி வில் கெட் யுவர் ஃபுல் சப்போர்ட்!” என்று கம்பீரமாகச் சொல்லி முடித்தான்.
தொடர்ந்து அங்கே எழுந்த கர ஒலி அவன் சொன்னவற்றைச் சுலபமாகச் செய்து முடிக்க முடியும் என்ற முழு நம்பிக்கையை அவனுக்கு அளித்தது.
அன்றே அவனது வேட்டையை, சலீமிடமிருந்து தொடங்கினான் ஜெய்.
***
அடுத்து வந்த நாட்களில், ஈஸ்வர் அவனுடைய படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட, அவன் தொடங்கியிருந்த அறக்கட்டளையின் பணிகள் மலரை தனக்குள் இழுத்துக்கொண்டன.
காவல்துறையுடன் சேர்ந்து அவர்களுடைய அறக்கட்டளை மூலமாகப் பல பிள்ளைகளை மீட்டு அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் சிறப்புடன் நடந்துகொண்டிருந்தது.
கடும் எதிர்ப்புகளைக் கடந்து கருணாகரன் ஏற்படுத்தியிருந்த தனிப்படை அதன் பணிகளை செவ்வனே தொடங்கி இருந்தது.
ஜெய் விசாரணைக்காக இந்தியா முழுதும் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தான்.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சோமய்யாவை மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு வருவாள் மலர்.
நாட்கள் செல்லச்செல்ல அவனிடம் நல்ல மாற்றங்கள் தெரிந்தது.
காடு போன்று இருந்த தலைமுடி திருத்தப்பட்டு, சுத்தமாக ஷேவ் செய்து, தூய்மையான உடையில் அவனைப் பார்க்கும் பொழுது, ஈஸ்வரை நினைத்து மனம் பூரித்துப் போகும் மலருக்கு.
ஒவ்வொரு முறையும் அங்கே சென்று வரும் பொழுதும், சக்ரேஸ்வரி நம்பிக்கையுடன் அவளைப் பார்க்கும் ஏக்கம் நிறைந்த பார்வை அவளுடைய மனதின் ஆழம் வரை சென்று தாக்கும்.
“டிப்புவை சீக்கிரமே கண்டுபிடிச்சிடுவோம் கவலை படாதீங்க!” என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு சொல்ல முடியவில்லை அவளால்.
அந்த இயலாமை ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, நெருஞ்சி முள் என மனதை உறுத்திக்கொண்டே இருந்தது அவளுக்கு.
***