AOA-3

அவனின்றி ஓரணுவும்- 3

தனக்கானது மட்டுமல்ல இந்த பூமி. இங்கு வாழும் சகலஜீவராசிகளுக்குமானதும்தான்.

ஆளுமை என்ற பெயரால் அதனை மனிதன் மறந்து மறுத்து பூமியின்  பெரும் வளங்களை கடைசி சொட்டுவரை உறிஞ்சி கொண்டிருப்பது பூமித்துரோகம். அதன் விளைவு பேரழிவு!

சத்யா குளிர் தாங்க முடியாமல் நடுங்கி கொண்டிருப்பதை பார்த்த ஷெர்லி, அவனுக்காக வேண்டி முன்னமே சோபாவின் மீது எடுத்து வைத்திருந்த ஆடையை அவனிடம் கொடுத்தாள்.

“இது யாரோடது… என் டிரஸ் எங்கே?” என்று கேட்டு சத்யா அவளை கூர்மையாக பார்க்க,

அவனை பார்த்து சில நொடிகள் தடுமாறியவள், “ப்ளீஸ் இதை வியர் பண்ணிக்கோங்க… இட்ஸ் வெரி கோல்ட் அவுட்சைட் னா” என்று மீண்டும் அந்த ஆடையை அவனிடம் நீட்டி கட்டாயப்படுத்தி அவனை பெற்று கொள்ளவும் செய்தாள்.

என்னவோ அவளிடம் சரியில்லையென்று யோசித்தபடி மறுவார்த்தை பேசாமல் அந்த முழு கை டிஷர்ட்டை அணிந்து கொண்டு அவன் நிமிர்வதற்குள் அவளை காணவில்லை.

அதற்குள் எங்கே மாயமாக மறைந்தால் என்று அவன் சுற்றும் முற்றும் அவளை தேடி கொண்டே, “ஷெர்லி” என்று அழைக்க,

“சத்யா! ஐம் ஹியர்… காபி ப்ரிபேர் பண்றேன்” என்று அவள் தன்னுடைய சமையலறையிலிருந்து அவனுக்கு கை காட்டினாள். அது திறந்த சமையலறை என்பதால் முகப்பறையோடு இணைந்து மேடை போல் அமைக்கப்பட்டிருந்தது.

அவள் உள்ளே நின்று கொண்டிருந்தது சத்யாவிற்கு தெளிவாக தெரிந்தது. அவளோ காபி போடுவதில் மும்முராமாக இருக்க, அவளிடம் எப்படி நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வது என்ற தயக்கமும் அச்சமும் அவனை தவிப்பில் ஆழ்த்தியது.

அவளை பார்த்து கொண்டே அவன் நிற்க, இரண்டு கோப்பைகளை எடுத்து கொண்டு அவள் வெளியே வந்தாள்.

“சத்யா… டேக் இட்” என்று ஒரு கோப்பையை அவனிடம் கொடுக்க, “தேங்க்ஸ்” என்று அதனை பெற்று கொண்ட அவன் முகத்தில் கொஞ்சமும் தெளிவு இல்லை.

அவள் அங்கிருந்த உணவு மேஜை அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் கோப்பையை எடுத்து பருக தொடங்கினாள்.

சத்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.  இப்படி ஒரு விஷயம் நடந்த பிறகும் அவளால் எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது என்று கேட்டபடி அவளை அப்படியே திகைப்பாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

“சத்யா கமான்” என்று அவனை அழைத்துவிட்டு அமர சொல்லி செய்கை செய்தாள்.

அவன் யோசனையோடு அமர்ந்து அந்த காபியை பருகினாலும் அவன்  பார்வை அவளையே ஆராய்ச்சியாக பார்த்து கொண்டிருந்தது.

ஒருவேளை நேற்று இரவு எதுவும் நடக்கவில்லையோ? பிறகு எப்படி தான் அவளின் அறையில் படுத்திருந்தோம்? தன் மேலாடைகள் எங்கே போனது? என்று கேள்விகள் வரிசை கட்டி அவன் மூளைக்குள் அணிவகுத்து கொண்டேயிருந்தன.

யோசித்து யோசித்து அவன் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. அவளிடம் கேட்க எண்ணிய மனதிற்கு, அவளின் இயல்புநிலை மனதை ஏதோ செய்தது. எப்போதும் போலவே அவள் அவனிடம் பேசினாள். கோபமோ அல்லது வேறு எந்தவித புதுமாற்றமும் அவளிடம் இருக்கவில்லை எனும்போது அது பற்றி கேட்க அவனுக்கு தைரியம் எழவில்லை.

தவறு நடந்திருந்தால் அவளே அது பற்றி பேசியிருப்பாள் என்று அவனாக ஒரு முடிவுக்கு வரும் போது,

“சத்யா நேத்து நைட்டு” என்று ஷெர்லி அவனிடம் ஏதோ சொல்ல எத்தனித்தாள்.

அவனுக்கு அந்த நொடியே பயங்கரமாக பொறையேறியது. குடித்த காபி எல்லாம் அவன் நாசிக்குள் நுழைந்து கண்கலங்க திக்கி திணறி போனவனை பார்த்து மிரண்ட ஷெர்லி வேகமாக ஒரு டிஷுவை அவனிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் எடுத்துவந்து வைத்தாள்.

அவனோ தன் மனநிலையை மறைக்க வாஸ்பேஸின் அருகில் சென்று தன் சட்டையை சுத்தம் செய்வது போல திரும்பி நிற்க,

“சத்யா வாட் ஹெப்பன்… ஆர் யு ஓகே?” என்று அவன் தோளில் கை வைத்து தடவி கொடுத்தாள்.

பட்டென அவளிடமிருந்து விலகி நின்று, “நேத்து நைட்டு என்னாச்சு ஷெர்லி?” என்று அழுத்தமாக கேட்க,

அவள் தயக்கமாக பார்வையை இப்படியும் அப்படியுமாக திருப்பியவள், “அதுக்காகதான் நானே உங்ககிட்ட சாரி கேட்கலாம்னு” என்று மெல்ல தம் வார்த்தைகளை கொணர முடியாமல் அவதியுற்றாள்.

‘ஐயோ! அப்போ நான் நினைச்ச மாறியே நடந்திருச்சா?!’ என்று எண்ணி கொண்டவன் அப்படியே இருக்கையில் சரிந்தபடி தலையை பிடித்து கொண்டான்.

ஷெர்லி அப்போது, “என் தப்புதான்… ஆனா பரவாயில்ல… டிரஸ் மட்டும்தான் கிழிஞ்சுடுச்சு” என்று சொல்லி கொண்டே போக,

அவன் மீண்டும் அதிர்ச்சியாக அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“டிரஸ் கிழிஞ்சிடுச்சா? யாரோடது?” என்றவன் கேட்க, “அது… உங்களோடதுதான்… நான் தடுக்க முயற்சி பண்ணியும் அவ்வளவு ஃபோர்ஸ்புல்லா” என்று சொல்லி கொண்டிருந்ததை கேட்டு சத்யா தாங்க முடியாமல் தலையில் அடித்து கொண்டான்.

அவள் உடனடியாக அவனருகில் அமர்ந்து, “ரீலேக்ஸ்” என்க,

அவன் நிமிர்ந்து அவளை குற்றவுணர்வோடு பார்த்து, “சாரி ஷெர்லி… நான் குடிச்சிருக்கவே கூடாது… என் மிஸ்டேக்” என்று உரைக்க,

“இதுல உங்க மிஸ்டேக் என்ன இருக்கு சத்யா? எல்லாமே என்னோட அஜாக்கிரதை… நான் உங்களை உள்ளே கூட்டிட்டு வரதுக்கு முன்னாடி  யோசிச்சிருக்கணும்” என்று அவள் பாட்டுக்கு நிறுத்தமால் பேசி கொண்டிருந்தாள்.

அவன் வேதனையோடு அவளை பார்த்து மன்னிப்பு கேட்க எண்ணி, “ஷெர்லி” என்று நிறுத்த அவளோ அவனை பேச விடாமல், “பேசாம டாக்டரை பார்த்து ஒரு இன்ஜெக்ஷன் போட்டுக்கிட்டா சேஃப் இல்ல?” என்று கேட்ட நொடி அவன் உடல் அதிர்ந்தது.

எப்படி இவ்ள்ளவு சாதாரணமாக சொல்லிவிட்டாள். அவளை அசூயையாக பார்த்து, ‘என்ன மாதிரி பொண்ணு இவ?!’ என்று மனதில் எண்ணி கொண்ட அதே சமயம்  இனியும் இங்கே இருக்க கூடாது என்ற எண்ணம் எழ அவசரமாக முகத்தை துடைத்து கொண்டு,

“நான் கிளம்புறேன்… பிரெண்ட்ஸ் தேடுவாங்க” என்று சொல்லிவிட்டு அவளை திரும்பி கூட பார்க்காமல் வாயிற் கதவை திறக்க சென்றான்.

ஷெர்லி அவனின் விசித்திரமான நடவடிக்கையை யோசனையாக பார்த்து கொண்டு நின்றாள்.

அப்போது பார்த்து வாயிலில் கட்டி வைக்கப்படிருந்த டேனி பயங்கரமாக குரைத்தபடி சத்யா மீது பாய வரவும், அவன் மீண்டும் மின்னல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்து கதவை தாளிட்டான்.

சத்யாவிற்கு இதயம் படபடவென துடிக்க, அவன் மூடிய கதவில் பல்லி போல் ஒட்டி கொண்டிருந்தான். ஷெர்லிக்கு அவன் செய்கையை பார்த்து சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வர, அவள் சத்தமாகவே சிரித்துவிட்டாள்.

அவள் மேலும் அவனை பார்த்து சிரித்து கொண்டே, “டேனியை நைட்டே நான் கட்டி வைச்சிட்டேன் சத்யா” என்று அவள் சொல்லும் போதுதான் அவன் மூளைக்கு உரைத்தது.

டேனி கட்டிபோடப்பட்டிருப்பதை அவன் கவனிக்கவில்லை. பதட்டத்தில் ஓடி வந்துவிட்டான். அப்போதுதான் அவனுக்கு மறந்த நினைவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்தன.

இரவு அவன் ஷெர்லியை அணைக்கும் போதே அவள் அவனை விலக்கிவிட்டு எழுந்து கொண்டாள்.

அரைகுறை போதை நிலையில், “நீங்க படுத்துக்கோங்க… நான் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன்” என்று அவள் சொல்லிவிட்டு அவள் அறைக்குள் சென்றது நினைவுக்கு வந்தது.

அவள் அங்கிருந்து அகன்றவிட, அவனுக்கு தலை சுற்றி கொண்டு மயக்கம் வரும் போலிருந்தது. அங்கிருந்த உணவு மேஜையிலிருந்த  தண்ணீர் ஜக்கை பார்த்துவிட்டு அதனை எடுக்க வேண்டி அவன் தள்ளாடி நடந்து வந்த சமயம்,

அதன் அருகிலிருந்த டேனி நறநறவென பல்லை கடித்து கொண்டு படுகூர்மையாக அவனை வஞ்சம் கொண்டு பார்த்தது. சத்யாவிற்கு ஏறிய போதையெல்லாம் இறங்க, அவன் தட்டுதடுமாறி ஓட அதுவும் விடாமல் துரத்தியது.

அவன் என்ன செய்வதென்று புரியாமல் ஷெர்லியின் அறை கதவை தட்டவும் அவள் கதவை திறக்கவும் சரியாகயிருந்தது. வேகமாக அறைக்குள் வந்தவன் தரைவிரிப்பில் கால் தடுக்கிய வேகத்தில் மெத்தையில் விழுந்தான்.

ஒருபுறம் பயம் மறுபுறம் போதை என அவன் தன் தேகத்தின் கட்டுபாட்டு நிலையை இழந்து மயக்கிநிலைக்கு சென்றுவிட, டேனி அந்த நொடி அவன் முதுகின் மீது பாய்ந்துவிட்டது.

நல்ல வேளையாக அவன் மேலே கனமான ஜெர்கின் இருந்ததால் அது வாயில் அதுமட்டுமே அகப்பட்டு கொண்டது.

ஷெர்லி மிரட்சியுற்று, “டேனி” என்று கத்தி கொண்டே அதனை இழுக்க, அவன் அணிந்திருந்த ஜெர்கினும் மேற்சட்டையும் அது தன் கூரிய  பற்களால் கிழித்து கொண்டுவிட்டது.

அந்த காட்சியை சத்யா தன் மனக்கண் முன் பார்த்தான். அவனுக்கு டேனி துரத்தி அவன் ஓடிவந்த விஷயம் நினைவிற்கு வந்தது.

படபடப்பில் இரவு நடந்ததிற்கு, சத்யா இப்போதுஅவன் மேலங்கத்தை தொட்டு தடவி பார்த்து கொண்டான். டேனியின் பல் தடம் பதிந்திருக்குமோ என்ற பயம் உண்டான சமயம்தான் நடந்த விஷயங்களின் தெளிவு பிறந்தது.

அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று அவனால் யூகித்து கொள்ள முடிந்தது. அவன் கிழிந்த உடைகளை கழற்றிவிட்டு அவள் அவனை நன்றாக படுக்கையில் கிடத்திவிட்டு வந்திருக்க வேண்டும்.

ஷெர்லி பேசியவற்றிருக்கான அரத்தமும் அவள் இன்ஜெக்ஷன் என்று ஏன் சொன்னால் என்று இப்போது புரிந்தது. அவளை தவறாக எண்ணி கொண்ட தன் அறிவீனத்தை எண்ணி சத்யா வருத்தம் கொண்டான்.

கண்களை மூடி அவன் இன்னும் அச்சம் நீங்காமல் நின்று கொண்டிருக்க ஷெர்லி அவனருகே வந்து, “சத்யா” என்று அழைக்க, அவன் விழிகளை திறந்து குற்றவுணர்வோடு அவளை பார்த்து, “ஐம் சாரி… ஐம் எக்ஸ்டிரிமிலி சாரி ஷெர்லி” என்றான்.

“ஃபார் வாட்?” என்று அவனை குழப்பமாக பார்த்தவிட்டு, தன் கரத்திலிருந்த தண்ணீர் கிளாசை நீட்டி, “பர்ஸ்ட் சிட்…  அன் ஹேவ் சாம் வாட்டர்” என்றாள்.

அந்த தண்ணீரை மொத்தமாக குடித்து முடித்துவிட்டு அந்த முகப்பரையின் சோபாவில் அமர்ந்து கொண்டு முகத்தை மூடி கொண்டான். ஷெர்லியை தவறான பார்வை பார்த்ததில் தொடங்கி அனுசுயாவின் அழைப்பை ஏற்காததுவரை உள்ளுர ஏதோ ஆழமாக குத்தி கிழித்தது போன்ற உணர்வு!

“சத்யா ஏன் என்னாச்சு?” என்று அவள் அவன் நிலையை பார்த்து பதட்டத்தோடு கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தவன், “அது… நேத்து நைட்… உங்ககிட்ட” என்று ஆரம்பிக்கும் போதே அவன் சொல்ல வருவதை அவள் புரிந்து கொண்டு முறுவலித்து,

“அதை பத்தி விடுங்க… நீங்க சுயநினைவோட அப்படி நடந்துக்கல” என்றாள்.

“ஷெர்லி… உங்களுக்கு” என்றவன் கேட்கவரவும் இடைமறித்து, “அந்த விஷயத்தை ப்ளீஸ் விடுங்க… நான் இப்போ உங்க கிட்ட வேற ஒரு ஃபேவர் கேட்க போறேன்… அதுக்கு நீங்க மறுக்காம சம்மதிக்கணும்” என்றாள்.

அவனோ அவள் மீண்டும் என்ன  வெடியை போட போகிறாளோ என்று பயந்து கொண்டிருக்கும் போதே, “நானும் உங்க கூட  தமிழ் நாடுக்கு வரட்டுமா? விசா எல்லாம் அப்ளை பண்ணி வாங்கிட்டேன்” என்று சொல்லி அவனை அதிர்ச்சியுற செய்தாள்.

ஷெர்லி அவனிடம் இந்த விஷயத்தை பற்றி பேசத்தான் வெகுநேரமாக முயன்று கொண்டிருந்தாள். சத்யாவின் குழப்பமான மனநிலையால் அவளால் பேச முடியாமல் போனது.

சத்யா எதுவும் பேசாமல் அவளை ஆழ்ந்து பார்த்தான். இதுவரை அவள் கேட்ட எல்லாவற்றிருக்கும் சுலபமாக சம்மதம் சொன்னது போல் இம்முறை  சம்மதம் சொல்ல கூடாது  என்று எண்ணி கொண்டவன்,

“உங்களுக்கு ஏன் தமிழ்நாட்டுக்கு வரணும் ஷெர்லி? அதுக்கு என்ன அவசியம்?” என்று அவளை ஆழம் பார்க்கும் நோக்கத்தோடு அந்த கேள்வியை கேட்க,

“அது… சும்மா பார்க்கணும்னுதான்” என்று இம்முறையும் அவளிடம் வெறும் சமாளிப்புதான் பதிலாக வந்தது. ஆனால் அவன் விடுவதாக இல்லை.

“இல்ல வேற காரணம் இருக்கு… நீங்க தமிழ் கத்துக்கிட்டது பின்னாடியும் வேறேதோ ஸ்ட்ராங்கான ரீசன் இருக்கு”

சத்யாவின் இந்த கேள்வியில் சற்று திணறித்தான் போனாள் ஷெர்லி. பதிலின்றி சில நொடிகள் தரையை பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தவள்,

“எஸ் ரீசன்… இருக்கு” என்று அவன் முகத்தை பார்த்தாள்.

அதன் பின் தீர்க்கமான பார்வையோடு சத்யாவை பார்த்துவிட்டு ஷெர்லி தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டு, “நீங்க என் கூட ஒரு நிமிஷம் வாங்க சத்யா” என்றழைக்க, அவன் அவளை குழப்பமாக பார்த்துவிட்டு அவள் செல்லும் திசை நோக்கி பின்தொடர்ந்தான்.

அவள் வேகமாக ஒரு அறைக்குள் புகுந்தாள். பின்னர் அந்த அறையின் நடுவிலிருந்த தரையில் சதுரவடிவில் அகலமாக இருந்த மரபலகையை தூக்கிவிட்டு அதற்குள் ஏணி போன்றிருந்த படிகட்டு அமைப்பில் இறங்கினாள்.

அவள் செல்வது அந்த வீட்டின் அடித்தளத்தின் அறை போல என்று யூகித்த சத்யாவிற்கு அவளை பின்தொடர அச்சமாக இருந்தது.

அவன் நின்று கொண்டிருக்கும் போதே அவள் இறங்கிவிட்டாள். வேறுவழியில்லை. என்னதான் இருக்கிறது பார்த்துவிடுவோம் என்று ஆர்வத்தில் சத்யா தன் கைபேசியின் டார்ச்சை போட்டுவிட்டு மெல்ல உள்ளே இறங்க தொடங்கினான். அவனுக்கு அதில் இறங்குவது மிகவும் சிரமமாக இருந்தது. அதேநேரம் பயமாகவும்!

அந்த இடம் வேறு முழுக்க இருள் சூழ்ந்து கிடந்ததால் கால்களை எங்கே வைக்கிறோம் என்று தெரியாமல் தன் பேசியின் ஒளிர்ந்த வெளிச்சத்தை  காண்பித்து வெகுஜாக்கிரதையாக தன் பாதங்களை ஊன்றி இறங்கினான்.

அவன் தட்டுதடுமாறி இறங்கியதால் அவன் இறங்க தாமதமானது. அவளோ முன்னமே இறங்கி அவன் கண்ணக்கு மறைவாக சென்றுவிட்டிருந்தாள். எந்த வெளிச்சமும் நுழைய அந்த அறைக்குள் எந்த வழிகளும் இல்லை. ஆதலால் கொஞ்சம் பயங்கரமான இருளாகவே இருந்தது.

எதற்கு தேவையில்லாமல் அவள் பின்னோடு வந்தோம். பேசாமல் சென்றுவிடலாமா என்று அவன் எண்ணிய சமயம் அந்த அறையின் மின்விளக்குகள் பளிச்சிட்டன.

லேசாக அவன் படபடப்பு குறைந்த தருவாயில் அந்த குளிரான சூழ்நிலையிலும் வியர்த்துவடிந்துவிட்ட தன் நெற்றியை துடைத்து கொண்டு, “ஊப்ஸ்” என்று நிம்மதி பெருமூச்சுவிட்டு ஷெர்லியை தேடினான். ஆனால் அவள் அவன் பார்வைக்கு தென்படவில்லை.

அவள் எங்கே போயிருப்பாள் என்று படபடப்பானான். அதேநேரம் அவள்தான் இந்த விளக்குகளை போட்டிருப்பாள் என்று யோசித்து கொண்டே மூச்சை இழுத்துவிட்டு கொண்டான்.

ஆனால் அவன் நிம்மதி சில வினாடிகள் கூட நீடிக்கவில்லை.   அந்த அறைக்குள்அவன்  அடியெடுத்து வைத்தவுடன் அவன் பார்த்த பயங்கர காட்சி அவனை அரண்டு போக செய்தது.

“ஆஆஆஆஅ அம்மா அப்பா” என்று அலறி கொண்டே அந்த ஏணியை நோக்கி ஏற போனவன் அது ஆட்டம் கண்டதில் சமநிலை இழந்து கால்கள் வழுக்கி  தரையில் சரிய, அந்த அமானுஷ்ய அறைக்குள் அவன் குரலே அவனுக்கு எதிரொலித்து அவனை மேலும் அச்சமூட்டியது