ap4

அத்தியாயம் – 4

அந்த நவீன பார் ஒன்றில் சயனத்தில் இருந்தான், கிரிமினல் லாயர் நந்தன். எப்பொழுது சக்தியுடன் சண்டை ஏற்பட்டதோ, அப்பொழுது இருந்தே அவன் இப்படி தான் இருக்கிறான்.

அவர்களது நட்பு கிட்டத்தட்ட பதினைந்து வருட நட்பு, இப்பொழுது ஏற்பட்ட சண்டை கூட நீ பெரியவனா? நான் பெரியவனா? என்றதில் இந்த மூன்று மாதமாக அவர்களுக்குள் பேச்சு வார்த்தையே இல்லை.

இந்த ஈகோ இருக்கே ஈகோ, அது மாதிரி ஒன்னு உலகத்தில் பெரிய கிரிமினல் இல்லவே இல்லை. இந்த கருமம் பிடிச்ச ஈகோனால நான் என்னோட பதினைஞ்சு வருஷ நட்பை இழந்துட்டேன்என்று புலம்பிக் கொண்டு இருந்தான் அந்த பாரில் நந்தன்.

அண்ணே! உங்க கிட்ட ஒருத்தர் பேசனுமாம், போன் பண்ணி இருக்கார் உங்களுக்குஎன்று அவனின் செல்லை எடுத்து நீட்டினான் அவனின் உதவியாளன்.

இப்போ நான் பேசுற மூடுல இல்லை, இனி நான் எந்த கேசும் எடுத்து நடத்த போறது இல்லை சொல்லிடுஎன்று கூறி அடுத்த பெக் எடுத்துக் கொண்டான்.

இல்லை அண்ணே, சக்தின்னு சொல்லு தெரியும் அவனுக்கு. இப்போ அவர் ஜெயில்ல இருக்காராம், உங்களை இன்னைக்கே வெளியே எடுக்க உதவி செய்ய முடியுமா அப்படினு கேட்கிறார்என்று அவன் சொல்லவும், உடனே அந்த போனை வாங்கி காதில் வைத்தான்.

அந்த பக்கம் என்ன செய்தி அவனுக்கு கிடைத்ததோ, உடனே அடுத்து தன் உதவியாளனை அழைத்துக் கொண்டு வெளியேறினான். இரவோடு இரவாக, யாரை எல்லாம் சந்திக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் சந்தித்து, சக்தியை பெயிலில் எடுக்க அத்தனை லீகல் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு காலை, அவன் கைது செய்யப்பட்டு இருக்கும் ஸ்டேஷன்க்கு வந்து சேர்ந்தான்.

அங்கே ஜெயிலினுள் சக்தியை பார்த்த நந்தனால், பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நேராக அவனிடம் சென்று முதலில் மன்னிப்பு வேண்டினான்.

என்னடா! எப்போ இருந்து உனக்கு இந்த ஞானோதயம் வந்தது? மன்னிப்பு எல்லாம் கேட்கிற!” என்று நக்கல் குரலில் கூறிய ராமனை பார்த்து சிரித்தான் நந்தன்.

உன் கிட்ட மன்னிப்பு கேட்கல, அப்படின்ற காண்டா நண்பா?” என்று சிரித்துக் கொண்டே கூறியவன், சக்திக்கு ஹை ஃபைவ் கொடுத்தான்.

அப்பொழுது அங்கே உள்ளே நுழைந்த பிரியங்கா தேவியை பார்த்தவன், சக்தியை பார்த்து வாயை பிளந்தான்.

டேய்! சும்மா சொல்ல கூடாது டா தங்கச்சி உனக்கு மேட்ச்சா தான் இருக்கு. சரி! நான் போய் என் வேலையை பார்க்கிறேன்என்று கூறிவிட்டு அவளை தேடி, அவள் அறைக்குள் சென்றான்.

என்ன மிஸ்டர் நந்தன், எப்படி இருக்கீங்க? பெய்ல் வாங்கிடீங்க அப்படினு கேள்விப்பட்டேன், பேப்பர் சப்மிட் பண்ணிட்டு கூட்டிட்டு போங்கஎன்றவளை பார்த்து இப்பொழுது மரியாதை வந்தது.

நான் நல்லா இருக்கேன் மேடம், ஆமா உங்களுக்கு நான் பெய்ல் வாங்க போறது தெரியுமா மேடம்?” என்று தன் சந்தேகத்தை தெரிவு படுத்த கேட்டான்.

ஹ்ம்ம்! தெரியும். நீங்க அவரை கூட்டிட்டு போங்க முதல, எனக்கு இன்னும் நிறைய வேலை இருக்குஎன்று கூறியவளை பார்த்து மேலும் வியந்தான்.

இடத்தை காலி செய், என்று இதுவரை யாரிடமும் அவன் இப்படி பேச்சு வாங்கியது இல்லை. இன்று இப்படி ஒரு பேச்சு வாங்கவும், அவனுக்கு கோபம் வருவதற்கு பதில் புன்னகையே வந்தது.

காரணம் நண்பனுக்கு ஏற்ற ராட்சசியாக அவனின் மனைவி இருப்பதால், அதில் வந்த சந்தோஷம் புன்னகையாக மாறியது.

பெயிலில் வெளியே எடுத்த பின், சக்தியை கட்டிக் கொண்டு வாழ்த்துக்கள் கூறிய நந்தனை விநோதமாக பார்த்தான் ராமன்.

என்ன டா நக்கலா? அவன் ஜெயில்க்கு போய்ட்டு வந்ததுக்கு வாழ்த்து சொல்லிகிட்டு இருக்க, லூசுஎன்று எரிந்து விழுந்தான்.

டேய் முந்த்ரிகொட்டை! அவன் கல்யாணம் என்ற பந்தத்தில் சிக்கி இருக்கானே, அதுக்கு தான் டா வாழ்த்து சொன்னேன். சும்மா சொல்ல கூடாது டா, சிஸ்டர் செமையா ஸ்கெட்ச் போடுறாங்க”.

இப்போ கூட இவனை பெயில்ல எடுக்க வந்தது தெரியும், ஆப்படின்ற மாதிரியே பேசி அனுப்பிட்டாங்க அப்படினா பாரேன்என்று நந்தன் கூறவும், சக்தி திடுக்கிட்டான்.

என்ன முன்னாடியே தெரியும் சொன்னாளா! கடவுளே! அடுத்து எதோ பண்ணிட்டா போலயே, டேய் அப்பாவுக்கு போன் போடு முதலஎன்று சற்று டென்ஷனுடன் கூறவும், ராமன் உடனே போன் செய்து பார்த்தான்.

அந்த பக்கம் கூறிய செய்தியில், அவன் அதிர்ச்சி அடைந்து அதை சக்திக்கு தெரியப்படுத்தவும், கேட்ட நந்தனும் அதிர்ந்தான்.

என்னடா இது? கிணறு வெட்ட வெட்ட பூதம் கிளம்பின கதையா இருக்கு. சிஸ்டர்க்கும், உனக்கும், இந்த கேஸ்க்கும் நிறைய தொடர்பு இருக்கு போலயேஎன்று சரியாக கணித்து கேட்டான் நந்தன்.

ம்ம்! நிறையவே இருக்கு, வா முதல வீட்டுக்கு போகலாம்என்று சக்தி இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

அங்கே சென்றால்,  வீட்டில் அவனின் தாய் ஹாலில் கவலையோடு அமர்ந்து இருந்தார். ராமனும், நந்தனும் இவனிடம் சொல்லிக் கொண்டு மேலே இவனின் அறைக்கு சென்றனர்.

அம்மா! கவலை படாதீங்க அப்பாவை நாம கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்திடலாம். போலீஸ்ல நீங்க தான் அவரை கடத்தி வச்ச உடனே, கம்பிளைன்ட் கொடுத்துட்டீங்களே அப்புறம் ஏன் மா கவலை படுறீங்க? சீக்கிரம் அப்பா வந்திடுவார்என்றான்.

அவரை நினைச்சு நான் கவலையே பட மாட்டேன், இப்போன்னு இல்லை எப்போவுமே. கொஞ்சமாச்சும், பொண்டாட்டி பேச்சை கேட்கிறாரா”.

எதுக்கு எடுத்தாலும் அனு, அனு, அனு அவ பேச்சை தான் கேட்கிறார். கேட்டா மருமகள் இந்த வீட்டுக்கு அவ தான், அவ சரியா தான் சொல்லுவான்னு என் வாயை மூட சொல்லிடுவார்”.

இப்போ என்ன ஆச்சு? அவரை கடத்திகிட்டு போய் இருக்காங்க, என்ன எதுன்னு விசாரிக்க வந்தாளா? இவளை சொல்லி குற்றம் இல்லை, உங்க அப்பாவை சொல்லணும் அவரே எல்லாத்தையும் இழுத்து விட்டுகிட்டார்”.

இப்போ என் கவலை எல்லாம் உன்னை பத்தி தான் கண்ணா, தேவி கூட நீ சந்தோஷமா இருக்கணும் நினைச்சேன், ஆனா உன்னையே அவ ஜெயில்குள்ள போட்டு இருக்கா அப்படினா, உன் மேல அவளுக்கு கோபம் அதிகமாக இருக்குன்னு தான அர்த்தம்”.

ஆயிரத்தெட்டு சண்டை வந்தாலும், நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குள்ள பேசி தீர்துகிட்டா தான் பா குடும்பத்துக்கு நல்லதுஎன்று அவர் கூறவும் அவன் சிரித்தான்.

எம்மா! நான் பண்ண தப்புக்கு தான் அவ சட்டப்படி எனக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தா. உங்க மருமகள் நீதி, நேர்மை, நியாயம்ன்னு இருக்கிறதை நினைச்சு சந்தோஷப்படுங்கள்என்று கூறி அவரை சமாதானப்படுத்திவிட்டு மேலே அவன் அறைக்கு சென்றான்.

அங்கே அவனின் நண்பர்கள் தலையில் கையை வைத்துக் கொண்டு, ஒரு வித சோர்வில் அமர்ந்து இருப்பதை பார்த்து என்னவென்று கேட்டான்.

டேய்! உங்க அப்பா கேஸ் இப்போ எந்த ஸ்டேஷன் போய் இருக்கு தெரியுமா?” என்று ராமன் கேட்டான்.

! தெரியுமே என் வைஃப் கிட்ட தான போய் இருக்கு, கண்டிப்பா அவ மாமனாரை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வருவாஎன்றவனை பார்த்து அதிர்ந்தனர்.

டேய்! உனக்கு எப்படிடா தெரியும்?” என்று கேட்டான் நந்தன்.

இப்போ தான் அம்மா கிட்ட எங்க கடத்தல் நடந்தது? எந்த ஸ்டேஷன்ல கம்பளைன் பண்ணீங்க? எல்லாம் கேட்டுகிட்டு தான் வந்தேன்என்று சொல்லவும் அவனின் புத்திகூர்மையை கண்டு எப்பொழுதும் போல் வியந்தனர்.

அது சரி! ஆனா இப்போ விஷயம் அது இல்லை, அவருக்கு எதோ போன் கால் வந்து இருக்கு, அதுக்கு அப்புறம் தான் அவர் கடத்தப்பட்டார் அப்படினு தெரியுது”.

டிரேஸ் பண்ண சொல்லி இருக்கேன் சக்தி, க்ளூ எதும் கிடைச்சா நல்லா இருக்கும்என்றான் ராமன்.

சிறிது நேரம் எதோ ஒரு யோசனையில் இருந்த சக்தி, ஸ்டேஷனில் அவனின் ரியா சொன்ன விஷயத்திற்கும், தன் கைது படலத்திற்கும் சம்பந்தம் இருப்பதாக தோன்றியது.

என்ன மேடம்? வெளியே நான் சீக்கிரம் வந்துட்டேனு ரொம்ப அதிகமா வருத்தப்படுறீங்க போலஎன்று அவளை சீண்ட சக்தி பேசினான்.

இனி தான் உங்களுக்கு வேலை நிறைய இருக்கு மிஸ்டர் சக்தி, ஆல் தி பெஸ்ட்என்று கூறிவிட்டு வேலை பார்த்தாள்.

இப்பொழுது அதை நினைவு கூர்ந்தவன், மெல்ல சிரித்துக் கொண்டான்.

ஆனாலும் என் பொண்டாட்டி செம ஷார்ப், என்னமா டிராப் பண்ணி இருக்கா. ராம், நீ க்ளூ கிடைச்சா எனக்கு கால் பண்ணு, நந்தா நாம கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம்என்று கூறிவிட்டு நந்தனை மட்டும் தன்னோடு அழைத்து சென்றான்.

காரில் பயணித்துக் கொண்டு இருந்தார்கள் நந்தனும், சக்தியும். நந்தனுக்கு சக்தி கூறிய செய்தி அதிர்ச்சியை தந்தது, அதில் இருந்து வெளியே வரவே அவனுக்கு சில நிமிடங்கள் பிடித்தது.

டேய்! அப்போ சிஸ்டருக்கு ஆபத்து இருக்கிறது தெரிஞ்சும், அவங்க காலத்தில் இறங்கி இருக்காங்களா!”.

நீ அவங்களை பாதுகாக்கிறதை விட்டுட்டு, என்ன வேலை டா பண்ணிகிட்டு இருக்க? இப்போ கூட நீ உங்க அப்பாவை காப்பாத்த கேட்டுகிட்டு இருக்க என் கிட்டஎன்று முழு விபரம் அறிந்த பின் அவனிடம் கோபப்பட்டான் நந்தன்.

இதுவரைக்கும் நான் என்ன செய்தேன் நினைக்கிற? அவளை பாதுகாத்துகிட்டு தான் இருந்தேன், அவ டார்கெட் ரீச் பண்ணுற வரைக்கும்”.

இப்போ அவளுக்கு மறைமுகமாக தான் ஹெல்ப் பண்ணனும், நேரடியா முடியாது. இல்லைனா, அவளுக்கு அவ திறமை மேல நம்பிக்கை போய்டும், அது கூடாதுன்னு தான் இப்படி செய்றேன்என்றவனை வியந்து பார்த்தான்.

நான் கூட உன்னை என்னமோ நினைச்சேன் டா, ஆனா நீ கேடி தான் டா. சரி, இப்போ நான் என்ன செய்யனும் சொல்லுஎன்று கேட்டான்.

அப்பாவுக்கு வச்ச டிராப் என்ன அப்படினு தெரியணும், அது தெரிந்தால் தான் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க முடியும். நீ உன் வழியில் தேடு, நான் என் வழியில் விசாரிக்கிரேன்என்று கூறிவிட்டு அவனை ஒரு இடத்தில் இறக்கி விட்டு சென்றான்.

நேராக வண்டியை கமிஷனர் அலுவலகம் முன் நிறுத்தினான் சக்தி. உள்ளே செல்லாமல், தன் செல்பேசியை எடுத்து கமிஷ்னர் தினகரனுக்கு அழைத்தான்.

முரளி! எங்க இருக்க?” என்று அவன் அழைத்த அடுத்த நிமிடமே கேட்டார் தினகரன்.

உங்க ஆபிஸ் முன்னாடி தான் இருக்கேன் சித்தப்பா, வெளியே வாங்க சொல்லிட்டு. நாம ஒரு ரைட் போய்ட்டு வரலாம், பேசணும் உங்க கிட்டஎன்று கூறி போனை அனைத்தான்.

ஒரு பதினைந்து நிமிடத்திற்கு பிறகு, வெளியே வந்தவர் அவன் காரில் ஏறினார். அதன் பின் அங்கு இருந்து கிளம்பியவர்கள் நேராக சென்றது, அவனின் பீச் ரிசார்ட் அருகே உள்ள அவர்களின் ரகசிய இடத்திற்கு.

என்ன முரளி? இது நாம எதிர்பார்த்தது தான, அப்புறம் எதுக்கு இப்போ மீட் பண்ண வர சொன்ன? எதுவும் க்ளூ கிடைச்சு இருக்கா உனக்கு?” என்று கேட்டார்.

ம்ம்! ஆமா சித்தப்பா, கங்காதரன் கேஸ் விஷயமா நந்தன் பேசும் பொழுது தான், எனக்கு அது ஸ்ட்ரைக் ஆச்சு. ஆனா, இதை எப்படி ரியா ஹேண்டில் பண்ணுவா அப்படினு தான் எனக்கு தெரியல?” என்று கூறியவனை புரியாமல் பார்த்தார்.

என்ன சொல்லுற முரளி? கொஞ்சம் புறிற மாதிரி சொல்லுஎன்றார்.

ரியாவோட அப்பா தான் அனுவுக்கும் அப்பா, அதாவது மிஸ்டர் கங்காதரன் ஓட பொண்ணுஎன்று கூறியவனை திகைப்புடன் பார்த்தார்.

முரளி! என்ன சொல்லுற?” என்று கேட்டார்.

ஆமா சித்தப்பா, இந்த நியூஸ் இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் எனக்கே தெரியும். இந்த விஷயம் தெரிஞ்ச ரெண்டு பேர் கங்காதரன், அவரோட வலது கை, எல்லாமா இருக்கிற கீதாராணி”.

இந்த கேஸ் விஷயமா நந்தன் கிட்ட பேசும் பொழுது தான், எனக்கு ஒரு க்ளூ கிடைச்சது. அதை வச்சு தான் என்னால இதை கண்டுபிடிக்க முடிஞ்சது, இப்போ அவ என்ன செய்வா அப்படினு தான் தெரியலஎன்று கூறி தலையை பிடித்துக் கொண்டான் சக்தி.

அவ தேவகி பொண்ணு டா, அப்படி எல்லாம் உடைய மாட்டா. எதிர்த்து போறாடுவா அவ அப்பாவுக்கு எதிராக, நீ உன்னையும் பார்த்துக்கோ, அவளையும் பத்திரமா பார்த்துக்கோ”.

அப்புறம் கல்யாண வாழ்க்கை எப்படி போகுது?” என்று சிரிப்புடன் கேட்டார்.

இப்போதைக்கு நீங்க தாத்தா ஆகுற வாய்ப்பு இல்லை, அதனால கொஞ்ச நாளைக்கு நீங்க உங்க யூத்தை எஞ்சாய் செய்ங்கஎன்று அவனும் சிரிப்புடன் பதில் கொடுக்கவும், இருவருக்கும் அதன் பின் மனது லேசானது.

சரி, ராகவ் எப்படி இருக்கான்? அவனை பார்த்தியா?” என்று கேட்டார்.

ஆமா பார்த்தேன், அவன் கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டேன். அவனுக்கு அவன் அக்கா சந்தோஷம் தான் முக்கியம், நிச்சயம் அவளை நான் நல்லா பார்த்துப்பேன் சொன்ன பிறகு தான் விட்டான் என்னைஎன்று கூறினான் சக்தி.

சரி சக்தி நேரமாச்சு, என்னை ஆபிஸ் ட்ராப் பண்ணிட்டு நீ பிரியாவை கூட்டிட்டு வீட்டுக்கு போஎன்று கூறவும், உடனே அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான்.

இங்கே இப்படி இருக்க, அங்கே ரியா அடுத்த வேலையை செய்து முடித்து இருந்தாள். அதன் தாக்கம் எத்தனை பேரை பதம் பார்க்க போகிறது என்பது, அவளுக்கு தெரியவில்லை.

தெரியும் பொழுது, அடுத்து அவள் எடுக்கும் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்..

 

தொடரும்..