Author: Selva sankari
-
ஆழி சூழ் நித்திலமே 28
ஆழி 28 மீன் பதப்படுத்தும் கூடம் அமைக்கும் வேலை முக்கால்வாசி முடிந்திருக்க, மீதமுள்ள பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் பாரி. அந்நேரம் அலைபேசி இசைத்தது. வெற்றியின் பெயரைப் பார்த்ததும் தன்னாலே முகம் மலர்ந்தது. தேனிலவுக்காக கயலையும் அழைத்துக்கொண்டு ஊட்டிக்குச் சென்றிருந்த வெற்றி அன்று காலையில்தான் வந்திருந்தான். “இன்னாடா, குஜாலாக்கிற போல? ஃபோனுகூட போடல. கயலு எப்புடிக்கிது?” “ம்ம்ம், அதெல்லாம் சூப்பரா இருக்கா. நானு குஜாலாக்கறது உனக்கு காண்டாவுதோ? வேலையெல்லாம் எப்புடி போவுது?” “எனக்கு…
-
ஆழி சூழ் நித்திலமே 27
27 ஆயிற்று, கயல் வெற்றி திருமணம் முடிந்து ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. நித்திலா பாரியின் உறவில் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி அப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. லேசாய் பேசி உறவில் முன்னேற எண்ணினாலும் முள்ளாய் குத்துபவளை என்ன செய்வது என்றே புரியவில்லை பாரிக்கு. தவறு முழுக்க அவன் மீது இருக்கையில் அவளைக் குறைகூறக் கூட அவன் தயாராய் இல்லை. எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவனாகிப் போனான் அவளிடத்தே. கயல் திருமணத்திற்குப் பிறகு…
-
ஆழி சூழ் நித்திலமே 26
26 கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது கயல் வெற்றியின் திருமணம். பாரியும் நித்திலாவும் தாரைவார்த்துக் கொடுக்க, உற்றார் உறவினர்கள் வாழ்த்துகளோடு மங்கலநாண் பூட்டி கயலைத் தன்னவளாக்கியிருந்தான் வெற்றி. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமென எதிலும் குறையில்லாது நண்பனின் திருமணத்தை நடத்தியிருந்தான் பாரி. நண்பர்கள் உற்றார் உறவினர்கள் என வந்திருந்த அத்தனை பேரையும் நன்கு உபசரித்து, வழியனுப்பிய பிறகு பாரியின் வீட்டில் பாலும் பழமும் கொடுத்து சடங்குகள் முடிந்ததும் வெற்றியின் வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர் மணமக்கள். பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு…
-
ஆழி சூழ் நித்திலமே 25
24 பேயறைந்தவன் போல முகமும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாது அலைபாய்ந்த மனதும் பாரியை வெகு சோர்வாகக் காட்டியது. மழை வேறு தூவானமாய் தூவிக் கொண்டிருந்தது. அந்த குளிர்ந்த சூழல்கூட உறைக்காது உடலெங்கும் மழைநீரோடு சேர்ந்து வேர்த்து வழிய, தோளில் முகத்தை அழுந்தத் துடைத்தவன், எதிரே வண்டியில் வந்து இறங்கிய நிகிலேஷிடம் ஓடினான். “இன்னாச்சு மாப்ள?” “தெரியல மாமா. அக்கா அவ ஃபிரெண்ட்ஸ்ங்க யார் வீட்டுக்கும் போகலயாம்.”…
-
ஆழி சூழ் நித்திலமே 24(2)
அவ்வளவு நேரம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பெண் அவனது ஸ்பரிசத்தில் அமைதியானாள். திரும்பி அவனைப் பார்த்தவள், அவனது பார்வையைக் கண்டு மௌனமாகத் திரும்பி கடலை வெறிக்கத் துவங்கினாள். ஆண்மையின் பார்வை எப்போதும் பெண்மைக்குப் புரியும். அதிலும் ஆசையும் நேசமும் கலந்த கணவனின் பார்வை அவளுக்கு நன்கு புரிந்தது. அவனது கரங்களில் இருந்து தனது கரத்தை விலக்கவும் இல்லை, அவ்வளவு நேரம் அவளிடம் இருந்த இயல்பும் இல்லை. உடல்மொழி சற்று இறுக்கமாக அமைதியாக அமர்ந்திருந்தாள். “ஏங்க, உங்களாண்ட நெறைய பேசனுங்க.…
-
ஆழி சூழ் நித்திலமே 24(1)
கயல் திருமணத்திற்கு நான்கே நாட்களே இருக்க, என்னென்ன தேவையென்று லிஸ்ட் போட்டு வைத்து அதன்படி அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தாள் ரதிமீனா. “வெற்றி மாலை ஜடையாரம் பூ இதெல்லாம் ஆர்டர் குடுத்துட்டல்ல?” “அட்வான்ஸ் குடுத்து ஆர்டரும் குடுத்தாச்சு. நீ சொன்ன டிசைன்தான் ஆர்டர் குடுத்திருக்கேன்.” “உன் டிரெஸ்ஸெல்லாம் தச்சு வந்துடுச்சா?” “நேத்தே வாங்கி வச்சிட்டேன் மதினி. நீதான பெட்டியில அடுக்கி வச்ச?” “ஆமால்ல, மறந்துட்டேன்டா. வேற எதெல்லாம் விட்டுப்போச்சு? கொஞ்சம் நினைவுபடுத்துடா வெற்றி.” கையில் இருந்த லிஸ்ட்டைப்…
-
ஆழி சூழ் நித்திலமே 23(2)
காலை வழக்கம் போல விடிய, வெளியே தேவாவின் குரல் கேட்டதும் எழுந்து வந்தாள். இட்லி கடையருகே முக்காலியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான் தேவா. முன்தினம் வாங்கிய அடியின் மிச்சங்கள் அவன் முகத்தில் இருந்தது. உடலின் காயங்களை அவன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை, ஆயாவோடு வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான். “இன்னா கெயவி… வரவர இட்லி சைசு கோலிகுண்டாட்டம் ஆயிடுச்சி. ஒரு வாய்க்கு நாலு தள்றேன் வயிறு நெறயல. ஆனா துட்ட மட்டும் ஏத்திக்கினே போற நீ…” “ரெண்டு ஈடு இட்லிய…
-
ஆழி சூழ் நித்திலமே 23(1)
மழை வரும் போல சூழலில் இறுக்கம். கடல்காற்று கூட வெம்மையாய் தழுவிச் சென்றது. கட்டிலில் படுத்திருந்த நித்திலாவுக்குப் பொட்டு உறக்கமில்லை. சோபையாய் ஒளிர்ந்த விடிவிளக்கையே பார்த்தபடி படுத்திருந்தாள். மனம் முழுக்க அன்றைய நிகழ்வையே நினைத்திருந்தது. படிக்காத பாமர மக்கள்தான், ஆனாலும் அவர்களது பிணைப்பும் புரிதலும் பாசமும் வியப்பூட்டியது. அவ்வளவு பிரச்சனை… அதுவும் அதற்கு முழுக்க முழுக்க அவள்தான் காரணம். அவளை வைத்துதான் பிரச்சனை. ஆனாலும் ஒருவர்கூட வாய் வார்த்தைக்குக் கூட தன்னை குறை சொல்லாதது வெகுவாய் பாதித்திருந்தது…
-
ஆழி சூழ் நித்திலமே 22
ஆழி 21 என்றோ சொர்க்கத்தில் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை வெகு சந்தோஷமாக வீட்டில் நிச்சயித்துக் கொண்டிருந்தனர். முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு ஆயா அமர்ந்திருக்க, அவரருகே அமர்ந்திருந்த கயலோ அவசர அவசரமாய் செய்யப்பட்ட மிதமான ஒப்பனையிலும் அழகாய் மிளிர்ந்தாள். எந்தவித முன்னறிவிப்புமின்றி வெற்றியும் மீனாவும் வீட்டுக்கு வந்தபோது எப்போதும் போல உபசரித்த கயலும் ஆயாவும், “உங்க வீட்டுப் பொண்ணை எங்க வெற்றிக்கு கேட்டு வந்திருக்கோம்” என்ற ரதிமீனாவின் வார்த்தைகளில் அயர்ந்து போனார்கள். பாரிக்கோ தலைகால்…
-
என் விழியில் நீ இருந்தாய் 5
என் விழியில் நீ இருந்தாய் 5 பயணங்கள் எப்போதுமே இனிதானவை. உடலைத் தழுவிச் செல்லும் குளிர் காற்றும் ஜன்னலோர இருக்கையும் காதுகளில் ரீங்கரிக்கும் இளையராஜாவும் சேர்ந்த தனிமைப் பயணம் சொர்க்கம். அதுவே நண்பர்களோடு இணைந்து கலகலப்பும் ஆர்ப்பரிப்புமாய், அதிரும் இசையோடு இணைந்த பயணங்கள் புத்துணர்ச்சி தருபவை. உற்றார் உறவினர்கள் இணைந்து கட்டுச்சோறு கட்டிக்கொண்டு, பேச்சும் கும்மாளமுமாய் போகும் பயணங்கள் மனநிறைவைத் தரும். இப்படி எந்த வகையிலும் சேராதவொரு பயணத்தை மேற்கொண்டிருந்தாள் மதுஜா. அந்த அதிநவீன…