Aval throwpathi alla – 23

ஸ்தம்பித்தாள்

அரவிந்த் சாரதி அலுவலகத்தில் நுழைந்து மூன்றாவது தளத்திற்கு லிஃப்டில் போய் கொண்டிருந்தான்.

சாரதியிடம் பேசிய பிறகு அவன் மனம் இருப்பு கொள்ளவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.

அதே நேரம் அவனை மேலும் எதிர்த்து கொண்டு  வேறெந்த பிரச்சனையையும்  இழுத்துவிட்டு கொள்ள அவன் விரும்பவில்லை. இருக்கும் பிரச்சனையை தீர்த்து நிலைமையை சீர் செய்தால் போதுமென்றிருந்தது.

அதுவும் அந்த தீ விபத்தை சாரதி எத்தனை புத்திசாலித்தனமாய் நடைமுறைப்படுத்தியிருக்கிறான் என்று யோசிக்கும் போதே அரவிந்திற்கு அதிர்ச்சியும் பிரம்மிப்புமாய் இருந்தது.

அவனை தான் ரொம்பவும் குறைவாக எடைப்போட்டுவிட்டோம் என்பதை ஒருவாறு உணர்ந்தவன்,

சாரதியை நேராய் சந்தித்து இப்போதைக்கு இந்த பிரச்சனையை தற்காலிகமாய் முடிவுக்கு கொண்டு வர எண்ணினான்.

ஆம்! தற்காலிகமாகதான். அவனை பொறுத்துவரை சாரதியை அத்தனை சீக்கிரத்தில் விட்டுவிடும் எண்ணமில்லை.

மனதில் தீராத வஞ்சத்தோடே அரவிந்த் சாரதி அலுவலகத்தில் நுழைந்தான். அவனிடம் சமரசம் பேச!

  கணேஷ் சாரதியிடம் அவன் வந்த தகவலை பேசியில் உரைக்க,

“உள்ளே அனுப்பி விடு கணேஷ்” என்றான்.

சாரதியின் எதிரே வந்து நின்ற அரவிந்திற்கு அவனை எதுவும் செய்ய முடியவில்லையே என்று வெறி கூடியது.

அவன் மனமெல்லாம் எரிமலையாய் குமுறி கொண்டிருக்க,

“பரவாயில்ல தம்பி… சொன்னதும் வந்துட்ட… “சாரதி சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து கொண்டே கேட்டவன் மேலும்,

“இப்ப புரிஞ்சிருக்குமே உனக்கு… இந்த சாரதி யாருன்னு” என்றான் அழுத்தமாக!

அரவிந்தின் உள்ளம் கொந்தளிக்க, “வேண்டாம்! இந்த பிரச்சனையை இதோட முடிச்சிக்கலாம்” என்க,

“என்னடா கைப்பிள்ளை ரேஞ்சுக்கு…
பேசிட்டிருக்க ?! வேண்டாம்… விட்டுடுங்க… நான் அழுதிருவேன்” என்று சொல்லி கேலியாய் சிரிக்க,

“சாரதி” என்று பொறுமினான்.

“ஏய்! என்னடா நானும் பார்த்திட்டிருக்கேன்… பேரை சொல்லி கூப்பிடிற… வாடா போடாங்கிற… நான் உன்னை விட பெரியவன் இல்ல.. அண்ணான்னு கூப்பிட்டு பழகு”

“நான் உன்னை பார்க்க வந்ததே இந்த பிரச்சனையை இதோட முடிச்சிக்கலாம்னு சமாதானம் பேசதான்… தேவையில்லாததெல்லாம் பேசிட்டிருக்க வேண்டாம்”

“ஆமான்டா! நீயும் நானும் பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கும் ப்ரைம் மினிஸ்டரு  பாரு… சமாதான உடன்படிக்கை போடிறதுக்கு… ஒழுங்கா நீ செஞ்சதெல்லாம்  தப்புன்னு மன்னிப்பு கேட்டிட்டு கிளம்பிற வழியை பாரு… எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றபடி அவன் தன் கரத்திலிருந்த பைஃல்ஸை புரட்ட,

“நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்… நீ எங்க அப்பாவையும் எங்க குடும்பத்தையும் அசிங்கப்படுத்தின.. அதுக்காகதான் நான் உன்னை ஆளை வைச்சி போட்டு தள்ள பார்த்தேன்… சரி அது தப்பாவே கூட இருக்கட்டும்… அதுக்காக நீ எங்க கடையை எரிச்சதெல்லாம் ரொம்ப டூ மச்” என்றவன் சொல்லி கோபவேசமாய் முறைக்க,

“தம்பி! நீ என்னை கொல்ல பார்த்ததுக்காக ஒண்ணும் நான் கடையை எரிக்கல… நீ என்கிட்ட பேசின வார்த்தை இருக்கு பாரு… அதுக்காதான்” என்றவன் சொல்லும் போதே அவன் விழிகள் சிவக்க,

“நான் தப்பா எதுவும் சொல்லலயே… உண்மைதானே சொன்னேன்… உனக்கு சொந்தபந்தம்னு யாராச்சும் இருந்திருந்தா நான் அனுபவிச்ச வலி உனக்கு புரிஞ்சிருக்கும்… எங்கப்பா மரண படுக்கையில உயிருக்கு போராடினாரு… உன்னால… அதே போல் உனக்கும் யாராச்சும் இருந்து அவங்களுக்கு என்னால இப்படி ஒரு நிலைமை வந்திருந்தா நீ என்னை சும்மா விட்டிருப்பியா?!”

“ஹ்ம்ம்! இமோஷனலா பேசி மடக்கிற!” என்று சாரதி அலட்சிய புன்னகையோடு அவனை பார்த்து,

“சரி நானும் உன் பாயின்டுக்கே வர்றேன்.”

“நீ சொல்ற மாறியே உங்க அப்பாவுக்காக நீ கோபப்பட்டது நியாயம்னா… நான் பார்த்து பார்த்து வியர்வையும் ரத்தமும் சிந்தி கஷ்டப்பட்டு கட்டின என் கடையில… உங்க அப்பா கையை வைச்சாரே… அது தப்பில்லையா தம்பி?! உனக்கு உங்க அப்பா முக்கியம்னா எனக்கு என் கடை முக்கியம்…

“அந்த கடைதான் அனாதையா நாதியில்லாம இருந்த இந்த சாரதிக்கு அங்கிகாரமும் மரியாதையும் கொடுத்திருக்கு… என் கடையில ஒரு துரும்பை தொட்டாலும் எனக்கு கோபம் வரும்… எப்படி உங்க அப்பாவை தொட்டா உனக்கு கோபம் வருமோ?!” என்றவன் ஆக்ரோஷமாக பேசி முடிக்க,

அரவிந்த் மௌனமாய் எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.

சாரதி மேலும், “இத பாரு அரவிந்த்… நம்ம பிரச்சனையை இதோட முடிச்சிக்கனும்னா… ஒழுங்கா… நீ பேசினதுக்கெல்லாம் என்கிட்ட மன்னிப்பு கேளு… இல்லன்னா … லெட்ஸ் கன்டின்யூ த கேம்” என்றான்.

“வேண்டாம்… இந்த பிரச்சனையை இதோட முடிச்சிக்கலாம்… நான் பேசினதெல்லாம் தப்புதான்னு உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்… என்னை மன்னிச்சிடு” என்று அரவிந்த் இறங்கிவர,

“இது நல்ல பையனுக்கு அழகு… ஓகே ஓகே நான் உன்னை மன்னிச்சிட்டேன்… நீ கிளம்பு” என்று சாரதி சொல்லி ஆணவமாய் புன்னகையிக்க,

அரவிந்த் மனதிற்குள் எரிந்து கொண்டிருந்த அடங்கா கோபத் தீயை பிராயத்தனப்பட்டு உள்ளடக்கி கொண்டு செல்ல யத்தனித்தான்

“அரவிந்த்” என்று சாரதி அப்போது அழைக்க,

அரவிந்த் யோசனைகுறியோடு திரும்பினான்.

“இத பாரு… முடிஞ்ச விஷயத்தை திரும்பவும் கிளறி பார்த்திராதே… இந்த சாரதியை அப்புறம் நீ இன்னும் மோசமானவனா பார்க்க வேண்டியிருக்கும்” என்று சாரதி எச்சரிக்க அரவிந்த் வேண்டா வெறுப்பாய் அவனிடம் தலையசைத்துவிட்டு வெளியேறினான்.

அவன் தரைதளத்தில் கார் நிறுத்தம் நோக்கி வர,

வீரா அப்போது காரில் சாய்ந்து கொண்டு சுகுமாரிடம் பேசி கொண்டிருந்தாள்.

“இன்னைக்காச்சும் ஏதாச்சும் உறுப்படியான வீடா பாரு”

“நேத்தே ஒரு வீடு ஓகாயிச்சு இல்ல… நீ ஏன் வேணான்னு சொன்ன… அதை விட நல்ல வீடா உனக்கு எவன் கொடுப்பான்”

“அந்த ஆளு என்னை பார்த்த பார்வையே சரியில்ல… அவன் ஆளும் மூஞ்சியும்… நானும் தங்கச்சிகளுன்னு சொன்னதுக்கு அவன் வாயெல்லாம் பல்லு… அந்த பேமானி வூடு வேணா… நீ வேற வூடு பாரு”

“நான் என்ன வூடு ப்ரோக்கரா… என்னை தெரு தெருவா வீதி வீதியா அலைய விடற… இதுக்கு மேலெல்லாம் என்னால முடியாது”

“என்ன சுகுமாரு ?!… நாம அப்படியா பழகினோம்?!”

“இதை ஒண்ண சொல்லிடு ஆனா வூனா” இவ்வாறாக இருவரும் பேசி கொண்டிருக்க,

வீரா அப்போது அரவிந்த் அங்கே வந்து கொண்டிருப்பதை பார்த்தாள்.

“இவன் அவன் இல்ல” என்றவன் சொல்ல,

“எவன்” என்று கேட்டான் சுகுமாரு!

“சுகுமாரு… நீ போஃனை வை நான் அப்புறம் பேசிறேன்” என்று அவன் பதிலுரைக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தவள்,

‘இந்த லூசு கண்ணில நம்ம சிக்கினோம்… அவ்வளவுதான்’ என்று சொல்லியபடி காரின் ஓரமாய் உட்கார்ந்து வார்க்கில் மறைந்து கொண்டாள்

உச்சபட்ச கோபத்தோடு நடந்த வந்த அரவிந்த் தன் கரத்தால், “சே!!” என்று தன் காரின் மீது குத்தியவன்,

‘இது உன்னோட டைம் சாரதி… ஆனா இதே மாதிரி எனக்கொரு டைம் வரும்… அப்போ உன்னை நான் கதறிவிடல என் பேர் அரவிந்த் இல்ல’ என்று சூளுரைத்து கொண்டான்.

அதே சமயம் சாரதி தன் அலுவலக அறையில் இருக்க, கணேஷ் அவனிடம்,

“சார்! தாம்பரம் பக்கத்தில அந்த லேண்டை பார்க்கனும்னு  சொல்லியிருந்தீங்களே” என்றதும்,

“ஆமா ஆமா… நான் கிளம்பிறேன்… “

“சார் நான்”

“இல்ல கணேஷ்…. ஷிப்பான்  மெட்டிரீயல்ஸ் வந்திருக்கும்… எல்லாம் டேமேஜில்லாம இருக்கான்னு செக் பண்ண சொல்லு… அன் நீயே கிட்ட இருந்து எல்லாத்தையும்  சூப்பர்வைஸ் பண்ணு.. டேமேஜ் பீஸஸ் இருந்தா உடனே திருப்பி அனுப்பிடுங்க” என்றவன் பணிக்க, “ஒகே சார்” என்று தலையசைத்தான் கணேஷ்!

சாரதி தன் அறையை விட்டு வெளியேறியதும் வீராவின் பேசிக்கு அழைத்தான்.

அது அவள் கையிலிருந்து கொண்டு அலற,

அப்போது அங்கே புலம்பியபடி நின்று கொண்டிருந்த அரவிந்தின் காதிலும் அந்த சத்தம் ஒலித்தது.

அவன் துணுக்குற்று சுற்றும் முற்றும் தேடலாய் பார்த்தவன் சத்தம் வந்த திசையை கண்டறிந்து அவள் ஒளிந்திருப்பதை பார்த்துவிட,

வீரா தலையை கவிழ்ந்து பதட்டத்தில் தவறவிட்ட அவள் செல்பேசியின் உபகரணங்களை ஒன்றிணைத்து கொண்டிருந்தாள்.

“யார் நீங்க? கீழே குனிஞ்சி என்ன பண்ணிட்டிருக்கீங்க?” என்றவன் கேட்க,

“போஃனு கீழே வூந்திருச்சு… அதை எடுத்துக்கின்னு இருந்தேன்பா” என்று முகத்தை காண்பிக்காமலே கச்சிதமாய் அவள் ஆண் குரலில் சமாளித்துவிட ,

அவனும் நம்பிவிட்டு தன் காருக்குள் ஏறி அமர்ந்துகொண்டான்.

‘தப்பிச்சோம்’ என்று எண்ணியபடி அவள் பலமாய் பெருமூச்சுவிட்டு கொண்டே எழுந்திருக்க, 

அப்போது முன்னே சென்ற அரவிந்த் கார் அப்படியே நிற்க, அவன் இறங்கி இவளை நோக்கிதான் நடந்து வந்தான்

‘இன்னாத்துக்கு இந்த அறைலூசு இப்போ திரும்பி வருது… ?!’ என்று எண்ணி கொண்டவள்

முகத்தை மறைத்தபடி காரை துடைப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள்.

“சார்” என்று அரவிந்த் அழைக்க அவளுக்கு தூக்கிவாரி போட்டது.

‘கண்டுக்குன்னு இருப்பானோ?!’ என்று பதட்டம் கொண்டவள் அவன் முகத்தை பாராமல்,

“இன்னா வேணும்?” என்று கேட்டாள்.

“இந்த அட்ரெஸுக்கு வழி தெரியல… கொஞ்சம் வழி சொல்ல முடியுமா?”

“எனக்கு எந்த வழியும் தெரியாது… வேறயாராச்சையும் கேளுப்பா”

“டிரைவரா இருக்கீங்க… உங்களுக்கு போய் தெரியலயா?!”

“நான் வேலைக்கு புதுசபா…நீ போய் வேறயாரைச்சும் கேளு”

“கொஞ்சம் ட்ரை பண்ணுங்க… உங்களுக்கு தெரிஞ்சு கூட இருக்கலாம்” என்றவன் கேட்க,

‘இன்னாத்துக்கு இவன் இப்படி நம்மகிட்ட ரப்சர் பண்ணின்னுகீறான்’ என்று எண்ணிகொண்டே,

“எனக்கு தெரியாதுன்னா தெரியாது… போப்பா” என்று காட்டமாய் பதிலளித்துவிட்டாள். இத்தனை சம்பாஷணையிலும் அவனிடம் முகத்தை காட்டாமல் அவள் தப்பித்து கொண்டிருக்க,

“அட்ரெஸ் தெரியாது சரி… வீரமாக்காளியாவாச்சும் தெரியுமா ? பொன்னியம்மன் கோவில் தெரு வியாசர்பாடி” என்றதும் அவள் முகம் இருளடர்ந்து போனது. 

அரவிந்த் காரில் ஏறி அமர்ந்து காரை ஓட்டி கொண்டு செல்லும் போதே பின்னோடு நின்றவளை,

வலதுபக்க கண்ணாடியில் பார்த்துவிட்டான். அப்போதே அவளை அடையாளம் கண்டுகொண்டும் விட்டான்.  அவன் மறக்க கூடிய முகமா அது! அவளை முதல்முதலாய் அப்படிதானே பார்த்தான்.

வீரா தவிப்போடு அவனை பார்க்காமல் நிற்க, “ஏ வீரா! நீயா திரும்பிறியா இல்ல நானா உன் வேஷத்தை கலைக்கவா?!” என்றவன் கண்டிப்பாய் சொல்ல, அவளுக்கு பதட்டமானது.

அவள் எப்படி இவனிடமிருந்து தப்பி கொள்வது என்று யோசிக்கும் போதே அவளை வலுக்கட்டாயமாய் திருப்பி அவள் முகத்தில் ஒட்டியிருந்த மீசையை அவன் பிரித்து எடுத்துவிட, “யோவ் அதை கொடுய்யா” என்று தவிப்புற்றாள்.

“எதுக்குடி இந்த வேஷம்? இங்க என்ன பண்ணிட்டிருக்க?” என்றவன் கேட்க,

“என்னவோ பண்றேன்? உனக்கு என்னயா? உன் வேலையை பார்த்துக்கின்னு போ” என்று சொல்லி அவன் கையிலிருந்த ஓட்டு மீசையை அவள் பறிக்க யத்தனிக்க அவன் அதனை தராமல்,

“அன்னைக்கு உன் ப்ரண்ட்ஸெல்லாம் கூப்பிட்டு வைச்சி என்னை நீ எப்படி அசிங்கப்படுத்தின… ” என்றவன் ஆவேசமாய் கேட்க அவள் வெலவெலத்து போனாள்.

அவனிடம் தனியாய் வந்து இப்படி சிக்கி கொண்டிருக்கிறோமே என்றவள் பதட்டமடைந்து சுற்றும் முற்றும் பார்க்க யாருடைய நடமாட்டமும் இல்லாமல் அந்த இடமே வெறிச்சோடியிருந்தது.

அவள் அச்சத்தில் நிற்பதை பார்த்தவன் சிறுநகையோடு, “இப்ப வேணா விசிலடிச்சி காட்டட்டுமா?!” என்றவன் எகத்தாளமாய் கேட்க,

“புரிஞ்சிக்கோயா! அன்னைக்கு நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… அவனுங்கதான் லூசாட்டும் உன்னை அப்படி கலாய்ச்சுவுட்டானுங்க”

“அப்போ உனக்கும் அன்னைக்கு நடந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்று அழுத்தி கேட்டான்.

“சத்தியமா இல்ல.. நான் உன்கிட்ட பேசி புரிய வைக்கதான்யா சொன்னேன்”

“ஏன் ? என்னை காதலிச்சா நீ என்ன குறைஞ்சி போயிடுவியா… அப்படி என்னடி திமிரு உனக்கு?”

அவனிடம் இப்போது எது பேசினாலும் பிரச்சனை என்று உணர்ந்தவள்,

“ப்ளீஸ் மீசையை கொடுத்திருய்யா” அவள் கெஞ்சலாய் கேட்க

“கொடுக்கிறேன்… எதுக்கு இந்த வேஷம்? அதை சொல்லு முதல்ல” என்றவன் கேட்க அவள் நெற்றியை தேய்த்து கொண்டு,

“உனக்கு எப்படியா சொல்லி புரிய வைப்பேன்… நான் டிரைவரா வேலை பார்க்கிறேன்” என்றாள்.

“டிரைவராவா ?!” அதிர்ச்சியவன் அடுத்த நொடியே நக்கலாய் சிரித்து,

“உனக்கு போய் எந்த கூமுட்டைடி டிரைவர் வேலை கொடுத்தான்… அதுவும் ஆம்பிள வேஷத்தில… சரியான லூசு கேணயா இருப்பான் போல”

“அதல்லாம் உனக்கு தேவையில்ல … நீ என் மீசையை கொடு” எனறவள் கோபமாக,

அவளை ஏறஇறங்க பார்வையால் அளவெடுத்தவன், பின் தன் கரத்திலிருந்த மீசையை அவளிடம் நீட்ட அவள் அதை ஆர்வமாய் வாங்க முற்பட்ட சமயம்

எதிர்பாராவிதமாய் அவள் கரத்திலிருந்த  போஃனை அவன் பறித்து கொள்ள, “யோவ்” என்று கத்தினாள்.

அவனிடம் இருந்து அவள் அதனை பறிக்க முற்பட அவனோ அவள் பேசியின் மூலமாய் தன் பேசிக்கு அழைப்பு விடுத்துவிட்டு

அவள் பேசியை திருப்பி தர,

“எதுக்குய்யா என் போஃன்ல இருந்து உன் போஃனுக்கு போட்ட, லூசாய்யா நீ” என்றவள் கேட்டாள்.

“இப்பவும் ஒண்ணும் கெட்டு போயிடல டார்லிங்… ஒரே ஒரு போஃன் பண்ணி… என்னை லவ் பன்றேன் சொல்லு… சுடக்கு போடிற நேரத்தில உன் வாழ்கைய நான் மாத்தி காட்டிறேன்” என்று சொல்லி கொண்டே முன்னேறி நடந்தவன்,

“மறக்காம போஃன் பண்ணு வீராமாக்காளி” என்று காரில் ஏறிய பின்னும் சத்தமாய் சொல்லிவிட்டு அகன்றான்.

“சரியான லூசு பைத்தியம்” என்று  தலையிலடித்து கொண்டவள் கரத்திலிருந்த மீசையை கார் கண்ணாடியை பார்த்து சரிபார்த்து ஒட்டி கொண்டிருக்கும் போதே,

“வீரா” என்று சாரதி அழைக்க அவள் படபடப்போடு திரும்பினாள்.

“காரை எடு கிளம்பனும்”

‘இவன் எப்போ வந்து தொலைச்சான்… அந்த லூசு பேசினதெல்லாம் கேட்டிருப்பானோ?!’ என்று எண்ணி கொண்டே அவள் கார் கதவை திறந்து உள்ளே ஏற,

“ஏன் போஃன் பண்ணா எடுக்கல?” என்றான் சாரதி காரில் அமர்ந்தபடி!

“அது….. சாரி சார்…நீ போஃன் பண்ணும் போது தெரியாம போஃன் கை தவிறி விழுந்திருச்சு” என்றாள்.

“ஆமா! நீ ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க?” என்றவன் கேட்க,

“அப்படி அல்லாம் இல்லையே சார்” என்று சொல்லும் போதே அவளுக்கு உதறலெடுத்து கொண்டிருந்தது.

“சரி, தாம்பரத்தில ஒரு லேண்ட் பார்க்கனும்… நீ ஹைவேஸ்ல போயிடு… சீக்கிரம் போயிடலாம்” என்க,

நேரம் கடந்து செல்ல அவள் பதட்டம் குறைந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள்.

சாரதி தாம்பரத்தில் இடம் பார்ப்பதாக சென்றவன் மதியம் முடிந்து மாலை நேரத்தில்தான் வந்தடைந்தான். அதற்குள் அவள் ஓர் குட்டிதூக்கமே போட்டிருந்தாள்.

அவன் வந்தபின்னே அலறிதுடித்து எழுந்து கொண்டவள், “போலாமா சார்?!” என்று கேட்க,

“போலாம்… ஆனா சாவி கொடு” என்றான்.

“ஏன் சார்?” அவள் அதிர்ச்சியோடு வினவ,

“போற இடம் கொஞ்சம் புதுசு… உனக்கு வழி தெரியாது… நான் டிரைவ் பன்றேன்” என்று சாதாரணமாகவே தெரிவித்துவிட்டு “சாவி” என்று கரத்தை நீட்டினான்.

“நீங்க ரூட் சொல்லுங்க சார்… நான் போறேன்” என்றவள் தயங்க,

“உனக்கு ரூட் சொல்லிட்டிருக்க எல்லாம் எனக்கு பொறுமை இல்ல… சாவி கொடுத்திட்டு போய் உட்காரு” என்றான்.

அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்பது புரிந்து அவள் சாவியை கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்து கொள்ள,

கார் அவனின் இயக்கத்தில் எடுத்து எடுப்பிலேயே கொஞ்சம் அபிரமிதமான வேகத்தில் செல்ல, அவள் இதயதுடிப்பு சரமாரியாய் ஏறிஇறங்கி கொண்டிருந்தன.

நிமிடங்கள் மணிதுளிகளாய் மாற கார் தன் வேகத்தை குறைத்து கொண்டு ஓர்  வீட்டிற்குள் நுழைய, செக்யூரிட்டி வேகவேகமாய் வந்து கதவை திறந்தான்.

அவன் காரை நிறுத்திவிட்டு, “இறங்கு” என்க,

“யார் பங்களா சார் இது?” என்று கேட்டு கொண்டே வண்ணமயமாய் ஒற்றை மாடியோடு இருந்த அந்த மினி  சைஸ் பங்களாவை நோட்டமிட்டாள்.

“சாரதீஸ்” என்றவன் சொல்லி கொண்டே முன்னேறி நடக்க,

அவள் கார் அருகில் அப்படியே நின்று கொண்டாள்.

அவள் தன்னுடன் வராததை கவனித்து, “வீரா வா” என்றவன் அழைக்க,

“எதுக்கு சார்? நான் இங்கேயே நிற்கிறேனே” என்றாள்.

“ம்ச் வா… ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்றவன் அழுத்தமாய் சொல்ல, அவள் மனதிற்கு நடப்பதொன்றும் சரியாய் படவில்லை.

“வீரா ஆல் இஸ் வெல் சொல்லு…ஆல் இஸ் வெல்…ஆல் இஸ் வெல்…” என்று திரும்ப திரும்ப சொல்லி தன்னைதானே தேற்றி கொண்டபடி அவன் பின்னோடு
நடக்க,

“இந்த வீடு எதுக்கு தெரியுமா?!” என்று  திரும்பி அவளை பார்த்தபடி கேட்டான்.

“அதானே! இன்னாத்துக்கு சார்”

“பெரிய பெரிய டீலிங் ப்ரொஜக்ட்ஸெல்லாம் அப்புரூவல் வாங்கனும்னா… கவர்மென்ட் ஆபிஸர்ஸ் மினிஸ்டர்ஸ்னு எல்லோர்க்கும் தேவையானதை கொடுக்கனுமே… அந்த மாதிரி டீலிங்கெல்லாம் இங்கதான்… எல்லோருக்கும் அவங்க அவங்களோட தேவை… சிலருக்கு பணம் சிலருக்கு பொருள் சிலருக்கு பொண்ணுங்க… உன் ஸ்லேங்கில சொல்லனும்னா நல்ல ஷோக்கான பிஃகருங்க” என்று இயல்பாய் சொல்லி கொண்டே அவன் படியேறி செல்ல,

‘அடப்பாவி டேய்!’ என்றெண்ணியவள் விக்கித்து போய் சிலையாய் நின்றுவிட்டாள்.

“என்ன நிக்கிற வா” என்றவன் மேலே ஏறிவிட்டு அவள் நிற்பதை பார்த்து அழைக்க

“ஏதோ வேலைன்னு சொன்னிங்களே சார்… இன்னா வேலை?” என்று சற்று நடுக்கத்தோடே கேட்டாள்.

“இன்னா வேலை கொடுத்தாலும் நீ அசால்ட்டு பண்ணிட மாட்ட… செம தில்லு பார்ட்டியாச்சே” முறுவலித்தான் சாரதி!

‘இவன் பேசிறதில ஏதோ உள்குத்து இருக்க மாறியே இருக்கே… வீரா அலர்ட்டா இருந்துக்கோ’ என்றவற் சொல்லி கொண்டே நடக்க,

அவனோ,

“இதான் என் பெர்ஸ்னல் பெட் ரூம்… நான் மட்டும்தான் யூஸ் பண்ணுவேன்… ரொம்ப ரேரா” என்று சொல்லி அறைக்குள்  நுழைய,

அவள் அறையின் வெளியேவே ஒதுங்கி நின்றாள்.

அவளை கடுப்பாய் பார்த்தவன்..

“ஏன்… அங்க அங்க ஸ்டர்க்காகி நிற்கிற… வா… உன் வேலையே இங்கதான்” என்றவன் சொல்ல,

“இன்னா சார் வேலை… எதாச்சும் சுத்தம் பன்ற மாதிரியா?” என்று வெளியேவே தயங்கி நின்று  கேட்டாள்.

“அதுக்கெல்லாம் இங்க ஆளு இருக்கு… நீ உள்ளே வா சொல்றேன்” என்றதும்

அவள் தவிப்போடு, ‘இவன் கூட படா பேஜாரா போச்சு’ என்று எண்ணியபடி அவள் உள்ளே அடியெடுத்து வைக்க,

சாரதி அந்த அறை கதவை தள்ளிவிட அதுவே சென்று படாரென்று மூடி கொண்டது.

அவள் பதட்டத்தோடு திரும்ப, “அது ஆட்டோமெட்டிக்… அப்படிதான்” என்றான் அவன்.  அவள் தேகமெல்லாம் சில்லிட்டு போனது.

“சார் இப்பவே லேட்டாயிடுச்சு… எப்போ கிளம்பிறது”

“நீ ஒகே சொன்னதும் வேலையை முடிச்சிட்டு உடனே கிளம்பிடலாம்” என்றபடி சோபாவில் அமர்ந்து கொண்டு சிகரெட்டை பற்ற வைத்தான்.

“நான் ஒகே சொல்லுனுமா? இன்னாத்துக்கு சார்?!

“ப்ச்… புரியாத மாறியே கேட்கிறியே” அவன் விஷமமாய் புன்னகையிக்க,

“இன்னா சொல்ல வர்றீங்கன்னு சத்தியமா புரியல சார்” என்றாள் படபடப்போடு!

அவன் சிகரெட்டை இழுத்து கொண்டே,

“ஹ்ம்ம்ம்ம்… வீராமாக்காளிக்கு எப்படி சொன்னா புரியும்னு சொல்லு… அப்படி சொல்றேன்” என்றவன்

சோபாவில் சௌகர்யமாய் அமர்ந்து கொண்டு கல்மிஷமாய் அவளை பார்த்து கண்ணடித்தான்.

அவள் இதயம் வெளியே எம்பி குதித்துவிடும் போல துடிக்க ஆரம்பித்தது.

இல்லை! குதித்தேவிட்டது. அப்படிதான் இருந்தது அதன் துடிப்பின் வேகமும் ஆவேசமும்!

அதே நேரம்  உடலின் அத்தனை புலன்கள் மூளை உட்பட … வேலை செய்ய மறுத்துவிட்டது அல்லது அதிர்ச்சியில் மறந்துவிட்டதோ அவளுக்கு?!

வீரா அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.